ஆண் நண்பருடன் பேசியதை கண்டித்த கணவன்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி!!

சென்னையில்..

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் புவனேஷ்வரிக்கு அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர். இதனால் செல்போனில் அடிக்கடி அந்த ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார்.

இது பற்றி அறிந்த கணவன் சுரேஷ், நண்பருடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறி கண்டித்துள்ளார். ஆனால் மனைவி தனது நண்பருடன் பேசிவந்துள்ளார்.

அப்படி நேற்றிரவும் தனது ஆண் நண்பரிடம் புவனேஷ்வரி செல்போனில் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்துக் கடுப்பான கணவன் சுரேஷ் மனைவியை மீண்டும் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே ஆண் நண்பரிடம் பேசியதைக் கணவன் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 வயது இளைஞராக மாற முயற்சிக்கும் 45 வயது தொழிலதிபர் : செலவு செய்யும் பணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் 18 வயது இளைஞர் போல மாற பல மில்லியன்களை செலவிட்டு வருகிறார். லாஸ் ஏஞ்செல்ஸை தளமாக கொண்ட நியூரோடெக்னாலஜி நிறுவனமான Kernel-லின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஜான்சன்.

45 வயதாகும் இவர் 18 வயது இளைஞரைப் போல மாற முயற்சி செய்து வருகிறார். இவர் ‘Project Blueprint’ எனப்படும் தொடர்ச்சியான சோதனைகள் மூலம் தனது உடலை 5.1 ஆண்டுகளாக குறைத்ததாக கூறுகிறார்.

30 மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து, ஜான்சன் தனது ஒவ்வொரு உறுப்புகளின் வயதையும் மாற்றியமைப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தினசரி அடிப்படையில் தனது எடை, உடல் நிறை குறியீட்டெண், குளுக்கோஸ், இதய துடிப்பு மாறுபாடுகள் மற்றும் விழித்திருக்கும் உடல் வெப்பநிலையை Biomarkers மூலம் ஜான்சன் கண்காணிக்கிறார்.

அவர் 18 வயது இளைஞரின் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைநாண்கள், பற்கள், தோல், முடி, சிறுநீர்ப்பை, ஆண்குறி மற்றும் மலக்குடல் ஆகியவற்றை பெற விரும்புகிறார் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால் அவர் தினசரி சில பழக்க வழக்கங்களை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அதாவது காலையில் 5 மணிக்கு எழுவது, ஒரு நாளைக்கு சரியாக 1,977 சைவ கலோரிகளை உட்கொள்வது மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.

மேலும் அவர் கூடுதல் ரத்த பரிசோதனைகள், Ultrasounds, MRIs மற்றும் Colonoscopies ஆகியவற்றின் மூலம் முடிவுகளை மதிப்பீடு செய்கிறார். பிரையன் ஜான்சன் இந்த ஆண்டில் மட்டும் இந்த சோதனைகள் மூலம் சுய தீங்கு மற்றும் சிதைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க சுமார் 2 மில்லியன் டொலர்களை செலவழிக்க உள்ளார். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் அவர் இதே தொகையை செலவழிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வியாழக்கிழமை தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன்கள் இருவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர்.

சஞ்சீவ் மிஸ்ரா என்ற நபர், மரபணு நோயிலிருந்து தனது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாததால், இனி வாழ விரும்பவில்லை என்று தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவர்கள் சஞ்சீவ் மிஸ்ரா (45), அவரது மனைவி நீலம் (42), மற்றும் அவர்களது மகன்கள் அன்மோல் (13) மற்றும் சர்தக் (7) என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது.

இந்த மோசமான சம்பவத்திற்கு சற்று முன்பு, மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “கடவுள் இந்த நோயிலிருந்து எதிரிகளின் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வேண்டும் என வேண்டுகிறேன்… என்னால் குஎன் ழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை, எனக்கு இனி வாழ விரும்பவில்லை” என்று எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பூட்டிய கதவை உடைத்து நான்கு பேரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல், சிகிச்சை பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

குடும்பத்தினரின் உறவினர்கள் காவல்துறையினரிடம், தம்பதியினர் தங்கள் மகன்களுக்கு சிகிச்சை அளிக்க தங்களால் இயன்றவரை முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வந்த்தாகவும் கூறியுள்ளார்.

எஜமானரை சுட்டுக் கொன்ற செல்ல நாய் : தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலோர் தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பது வழக்கம். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அமெரிக்க அரசு இதனை அனுமதித்துள்ளது.

இதனாலேயே பல நேரங்களில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தொடங்கி எதற்கெடுத்தாலும் துப்பாக்கிகளை தூக்கி சுடும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கனாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜோசப் ஸ்மித். இவர் அமெரிக்காவில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. எனவே, கடந்த சனிக்கிழமை ஜனவரி 21ம் தேதி ஜோசப் தான் ஆசையாய் வளர்த்த நாயுடன் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.

காரின் முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் சென்ற நிலையில், பின்னிருக்கையில் வளர்ப்பு நாய் இருந்துள்ளது. வேட்டைக்கான துப்பாக்கியும் நாய்க்கு அருகே பின் இருக்கையில் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறி குதித்துள்ளது. அப்போது துப்பாக்கி சுட்டு குண்டு வெளியேறி முன் இருக்கையில் இருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது. இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். இது தெரியாமல் அந்த வளர்ப்பு நாய் அவரை சுற்றி, சுற்றி வந்துள்ளது.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கன்சாஸ் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.2022-ம் ஆண்டில் மட்டும் 648 துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. துப்பாக்கிச்சூடு காரணமாக 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்.. இந்த செய்தியை உடனே நிறுத்துங்கள் என கதறும் பிரபல பாடகி!!

மங்க்லி..

ப்ளீஸ்.. என்னை யாரும் அடிக்கலை.. என் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படலை. இந்த செய்தியை உடனே நிறுத்துங்க என்று கதறிக் கொண்டிருக்கிறார் ‘ஓ.. சொல்றீயா.. பாடலைப் பாடிய பின்னணி பாடகி மங்க்லி. தெலுங்கு சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் மங்க்லி.

இவர் தனது வசீகர குரலால் பாடிய பெரும்பாலான பாடல் ஹிட் அடித்துள்ளன. இவரது பாடலுக்கு தனி ரசிர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற, ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் தெலுங்குப் பதிப்பைப் பாடியிருந்தார்.

இப்பாடல் தெலுங்கில் மட்டுமல்லாமல் மொழி புரியலைன்னாலும் இந்தியா முழுவதுமே ஒரு பெரிய ரவுண்ட் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில், பாடகி மங்க்லி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ‘பெல்லாரி உற்சவம்’ இசை நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, அவர் மேக்கப் அறைக்குள் ரசிகர்கள் நுழைந்ததாகவும் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாடகி மங்க்லி கார் கல்வீசித் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இதனால் பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த செய்திக்கு பாடகி மங்க்லி மறுப்பு தெரிவித்துள்ளார். தாக்குதல் எதுவும் நடக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிவித்து உள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், பல்லாரி நிகழ்வு வெற்றியடைந்தது. நான் செய்த சிறந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. மக்கள் என் மீது அபரிமிதமான அன்பு காட்டுகிறார்கள். நிகழ்ச்சியில் நான் நன்றாக நடத்தப்பட்டேன். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறேன், என ட்வீட் செய்து உள்ளார்.

மேலும், கர்நாடக ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். என் பெயரையும் புகழையும் கெடுக்க, என் கார் மீது கல்வீசி தாக்கினார்கள் என்பது உட்பட பல பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீ விபத்தில் பலி : சந்தோஷத்தால் ஏற்பட்ட பெரும் சோகம்!!

அநுராதபுரம்..

அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்ததுடன், பிள்ளைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் 10 வயது மகள் மற்றும் 5 வருயதுடைய மகன் உயிரிழந்துள்னர். இந்த விபத்தில் உயிரிழந்த தாய் 30 வயதுடையவர் எனவும் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் கணவர் 37 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி இம்முறை புலமைபரிசில் பரீட்சை எழுதியுள்ளார். 80 புள்ளிகளை பெற்ற போதிலும் அதனால் மகிழ்ச்சியடைந்த தாயார் நேற்று இரவு மகளுக்காக பலகாரம் செய்துள்ளதுள்ளார்.

இரவு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடன் மகளின் புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகளை அந்த குடும்பத்தினர் கொண்டாடியதாக அயல் வீட்டு பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகன் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் அந்த கொண்டாட்டத்தையும் அவர்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு கொண்டாட்டத்தின் பின்னர் வழமை போன்று இந்த குடும்பத்தினர் உறங்க சென்றுள்ளனர்.

இதன் போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்தை அவதானித்த அயல் வீட்டவர்கள் உடனடியாக அயலவர்களை அழைத்த போதிலும் தீ முழுமையாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமணமான சில மாதங்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்தர். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆன சில நாட்களிலேயே ராகவேந்தரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்து மூன்று மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அபிராமி அவரது தந்தை வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல வேலைக்குச் சென்ற அபிராமி உடல் நலம் சரியில்லாததாக கூறி வீட்டிற்கு வந்த நிலையில் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அபிராமி குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிராமி குடும்பத்தினர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது சடலத்தை கண்டு கதறி அழுந்துள்ளனர்.

இதனை அடுத்து ராகவேந்தர் குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சலின் காரணமாகவே அபிராமி தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அபிராமியின் தந்தை மற்றும் சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை இருப்பதாக காவல் துறையினர் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது இறப்பிற்கு கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் என கூறி வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா நேரில் சென்று ஆய்வு செய்து மருத்துவமனையில் இரு தரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அபிராமி பேசிய வீடியோ பதிவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து அபிராமியில் உறவினர்கள் அவரது சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்யக்கூடாது எனக் கூறி பிரேத அறையில் புகுந்து ரகலையில் ஈடுபட்டனர். திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தனது தற்கொலைக்கு,

கணவரின் குடும்பத்தார் காரணம் எனக்கூறி வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இளம் பெண்ணின் குடும்பத்தினர் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

யாழில் குடும்பஸ்தர் கொலையில் சிக்கிய மனைவி உள்ளிட்ட 11 பேர் : வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிடும் தகவல்கள்!!

யாழில்..

யாழ்ப்பாணம் கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலைசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொலைக்கான பின்னனி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பமே சேர்ந்து கொலை கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தி பகுதியில் 30 வயதுடைய (ரவீந்திரன்) அஜித் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் வாள்வெட்டு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது இல்லை என்றும், முழு குடும்பமே திட்டமிட்டு மருமகனை கொலை செய்துள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திரம் அஜித் இவர் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்தி வருகின்றார். மாமனார் மற்றும் மைத்துனர்களுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் சீதனப் பிரச்சனை ஒன்று இடம் பெற்று வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அஜித் மனைவியின் தந்தையுடன் சண்டையிட்டு வந்ததையடுத்து மாமனார் மருமகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். தான் ஒரு மாதத்துக்குள் வீட்டை விட்டு வெளியேறுவதாக மருமகன் அஜித் கூறியுள்ளார்.

இதனையடுத்து 21 ஆம் திகதி இரவு மருமகன் வீட்டுக்கு சாப்பாடு எடுக்க வரும்பொழுது, தோட்டத்து வெளியில் வைத்து மருமகனை அடியாட்கள் மூலம் தாக்கியுள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளை அடித்துடைத்துள்ளனர்.

தான் யாரால் தாக்கப்பட்டது என அறிந்த அஜித் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு மனைவியை கூப்பிட்டு கதறியவாறு நொண்டி நொண்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்றவர் அழுது புலம்பி எனக்கு அடித்தவர்கள் யார் என்று தெரியும் என கூறியுள்ளார். இந்நிலையில் மருமகன் எல்லோரையும் பொலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவான் என நினைத்த குடும்பம், கதவினை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையினால் தாக்கியுள்ளனர்.

இளைய மச்சான் மண்வெட்டி பிடியால் அடித்துள்ளான் அத்துடன் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றினால் தலையில் தூக்கி போட்டு குடும்பமாக சேர்ந்து கொலை செய்துள்ளனர். அத்துடன் தாங்களாகவே ஆம்புலன்ஸ்க்கு அறிவித்து வீட்டிற்கு வந்த வாள்வெட்டு குழு ஒன்று வந்து தாக்குதல் நடத்தி மருமகனை வெட்டி விட்டு சென்றதாக பொலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் கொலை இடம் பெற்ற தடயங்களை தெரியாதவாறு அவர்கள் தாங்களாகவே வீட்டு கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சம்பவத்தினை திசை திருப்ப முற்பட்டுள்ளனர்.

அத்துடன் எங்களை வாள்வெட்டு குழு அச்சுறுத்தியதாகவும், நாங்கள் பக்கத்து வேலித் தகரத்தினைபிரித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றதகவும் அதை காட்டுவதற்காக பக்கத்து தகரத்னையும் தாங்களாகவே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்து அனைத்து நபர்களையும் தனித்தனியாக விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

உயிரிழந்தவரை திட்டம் போட்டு கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் குடும்பஸ்தரை தாக்க பயன்படுத்திய மொட்டையான தடி, இரும்பு கம்பி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின், ஆலோசனைகள் ஊடாக யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் மற்றும் சிரேஷ்ர பொலிஸ் அதிகாரி அவர்களின் நேரடி கண்காணிப்பில்,

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் யாழில் குடும்பமே திட்டமிட்டு ஒருவரை கொலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

57 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞனுக்கு நிஜ வாழ்க்கையில் வந்த பிரச்சனை!!

57 குழந்தைகளுக்கு தந்தை..

தமிழில் வெளிவந்த ‘தாராள பிரபு’ திரைப்படத்தைப் போல, நிஜ வாழ்க்கையில் விந்தணு தானம் செய்து, 57 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நபர் ஒருவர், தன்னுடன் நீண்டகால உறவில் இருக்க ஆர்வமுள்ள ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடிவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

விந்தணு தானம் பொதுவாக அநாமதேயமானது மற்றும் நன்கொடையாளர்கள் பொதுவாக தங்களின் தான விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்ட குழந்தையின் சட்ட அல்லது உயிரியல் தந்தைகளாக கருதப்பட மாட்டார்கள்.

விந்தணு தானம் செய்தவர்கள் பொதுவாக மரபணு மற்றும் உடல்நிலை பற்றி அறிய பரிசோதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களது விரிவான தனிப்பட்ட மற்றும் மருத்துவ தகவல்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்கள் குழந்தை அல்லது குழந்தையின் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

இருப்பினும், சில விந்தணு வங்கிகள் அறியப்பட்ட நன்கொடையாளர்களை அனுமதிக்கின்றன. இதில் நன்கொடையாளர் யார் என்பது பெறுநருக்குத் தெரியும் மற்றும் அந்தக் குழந்தையின் வாழ்க்கையில் சில அளவிலான ஈடுபாட்டை அவர் கொண்டிருக்க முடியும்.

அப்படி ஒருவர் தான் கைல் கோர்டி (Kyle Gordy), இவர் ஒரு தொழில்முறை விந்தணு தானம் செய்பவர். இதுவரை 57 குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறார், மேலும் அவர் தனது குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறார்.

இப்போது, கைல் ஒரு உண்மையான மற்றும் நீண்டகாலம் நீடித்து இருக்கும் ஒரு உறவுக்கு பெண்ணைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது என்று கூறியுள்ளார். விந்தணு தானம் பற்றி பேசும்போது, ​​தமிழில் வெளியான ‘தாராள பிரபு’ திரைப்படம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

விந்தணு கொடுத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களுக்கு உதவிய ஒரு இளைஞனின் கதையை இப்படம் கூறுகிறது. கைல் கோர்டி ஒரு தொழில்முறை விந்தணு தானம் செய்பவர்.

அவர் தனது விந்தணு தானம் செய்யும் பயணத்தைப் பற்றிப் பேசுகையில், “இரண்டு வருடங்கள் தானம் செய்த பிறகு நான் அதிக கவனம் பெற்றேன், அப்போதுதான் நான் தீவிரமாக தானம் செய்தேன்.

என்னால் சில வெற்றிகரமான கர்ப்பங்கள் ஏற்பட்டன, அதனால் எனது இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் தொடர்பு கண்டனர், இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.” என்றார்.

30 வயதான கோர்டி, தீவிரமான உறவைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருவதாக ஒப்புக்கொண்டார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அவர், தான் பல பெண்களைப் பார்ப்பதாகக் கூறினார்.

ஆனால் அவர்களில் யாரும் அவருடன் நீண்ட கால உறவில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, பெரும்பாலான பெண்களிடமிருந்து அவர் பெறும் கவனமானது அவரது விந்தணுவைப் பயன்படுத்தி அம்மாவாக மாறுவது மட்டுமே அவர்களது விருப்பமாக இருந்தது.

நன்கொடையாளர் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு உயிரியல் தந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், பல பெண்கள் அவரை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். இருப்பினும், ஏற்கனவே 57 குழந்தைகளைப் பெற்ற அவரால் இனி பிறக்கும் குழந்தைகளில் ஆர்வம் காட்டவில்லை.

தனது வாழக்கையில் பின்னோக்கிப் பார்த்தால் கோர்டிக்கு எந்த வருத்தமும் இல்லை. இருப்பினும், தனக்கென பிடித்தமான ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது சவாலான முயற்சியாக இருக்கும் என்பதை அவர் உணரத் தொடங்கியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து நன்கொடை அளிப்பது போல் டேட்டிங் என்பது இனி இருக்காது .

ஒரே ஆணுடன் ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சிக்கும் இரட்டைச் சகோதரிகள்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில், ஒரே மாதிரியான ஆடைகளை அணிவது முதல் ஒரே நேரத்தில் குளியலறைக்குச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகச் செய்வதாக அறியப்படும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே மாதிரி தோற்றத்தைக் கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள், ஒரே ஆணை திருமணம் செய்து, ஒரே நேரத்தில் கர்ப்பமாக திட்டமிட்டுள்ளனர்.

பெர்த் நகரத்தைச் சேர்ந்த 37 வயதாகும் அன்னா டெசின்கே (Anna) மற்றும் லூசி டெசின்கே (Lucy Decinque), 2021-ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க முயன்றதற்காக பிரபலமாக அறியப்பட்டனர். இருவரும் பென் பைர்ன் (Ben Byrne) எனும் நபரை வருங்கால கணவனாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த இரட்டை உடன்பிறப்புகள் பிறந்ததில் இருந்தே தங்கள் பெற்றோரால் ஒரே மாதிரியான உடையணிந்தது மட்டுமின்றி பெரும்பாலான விடயங்களை ஒரே மாதிரி ஒரே நேரத்தில் செய்வதைப் பழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த அளவிற்கு என்றால், ஒருவர் கழிப்பறைக்குச் செல்லும்போது, ​​மற்றோருவரும் அவருடன் செல்வார், ஒருவர் குளிக்கும்போது, ​​மற்றோருவரும் அவருடன் குளிப்பார் என்று அன்னா கூறுகிறார்.

“நாங்கள் ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் செயல்பட முடியும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நங்கள் பிரிந்துவிடுவோமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

“நாங்கள் இப்போது குழந்தைகள் வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்,” இன்று இருவரும் கூறினர். “எங்கள் கனவு ஒரே நேரத்தில் ஒன்றாக கர்ப்பமாக இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் பரிதாபமாக பலி!!

கொழும்பில்..

பிலியந்தலை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்திற்கான பிரேக் உடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் முன்பக்க வலது சக்கரத்தில் இளைஞன் சிக்கியுள்ளதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

திடீரென கட்டுக்கட்டாக கொட்டிய பணமழை : பணத்தை குதூகலத்துடன் அள்ளி சென்ற மக்கள்!!

பெங்களூரில்..

பெங்களூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் திடீரென பணமழை பெய்துள்ள சம்பவம் இப்போது வைரலாகி வருகின்றது. பணம் மழை மழையாக கொட்டும் என கேள்விப்பட்டிருப்போம் அப்படியில்லையென்றால் கனவிலும், சினிமாவிலும் தான் பார்த்திருப்போம்.

ஆனால் இந்தியாவில் ஒரு இடத்தில் பண மழை மழையாக கொட்ட அதில் மக்கள் நனைந்திருக்கின்றனர். பெங்களூரில் நகரின் டவுன்ஹால் பகுதியிலுள்ள கே.ஆர் மார்க்கெட்டின் மேம்பாலத்தில் தனது வானகத்தை நிறுத்தி கழுத்தில் பெரிய சுவர் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு கையில் பணக்கட்டுடன் நடந்துவருகிறார் ஒருவர்.

பின்னர் மேம்பாலத்திலிருந்து தனது சூட்கேஸிலிருந்து கீழே பணத்தை அள்ளி வீசுகிறார். அந்த நபர் பணத்தை கீழே பறக்கவிட்டுவிட்டு தானும் அங்கிருந்து பறந்துவிட்டார்.

காற்றில் பறந்த பணத்தை எடுக்க மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் மார்க்கெட் பகுதியில் கொஞ்ச நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

38 வருடங்கள் கழித்து பெற்ற தாயை முதல் முறையாக பார்த்த பெண்… நெஞ்சை நெகிழச்செய்த பின்னணி!!

நெதர்லாந்தில்…

இணையத்தில அவ்வப்போது நிறைய உருக்கமான பின்னணி கொண்ட சம்பவங்கள் வைரலாகி, கேள்விப்படும் பலரையும் ஒரு நிமிடம் அப்படியே மனம் நொறுங்க வைக்கும்.

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவத்தை பற்றிய செய்தி தான், இணையத்தில் வெளியாகி பலரையும் மனம் உருக வைத்துள்ளது. இலங்கை நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

ஆனால் அந்த தம்பதியருக்கு கடும் பொருளாதார நெருக்கடி மிக்க சூழலும் நிலவி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி சில காரணங்கள் இருக்கவே, பெண் குழந்தையை அவர்களால் வளர்க்க முடியாத ஒரு இக்கட்டான சூழலும் உருவாகி உள்ளது.

இதனால் அந்த பெண் குழந்தை நன்றாக வளர வேண்டும் என மனதில் நினைத்து ஒரு நெதர்லாந்து தம்பதியருக்கு குழந்தையை தத்துக் கொடுக்கவும் அவர்கள் செய்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நெதர்லாந்தில் வளர்ந்து வந்த அந்த பெண், தனது உண்மையான தாய் மற்றும் தந்தையை நேரில் காண வேண்டும் என்றும் விருப்பம் கொண்டுள்ளார். இதற்காக பல்வேறு கடின முயற்சிகளையும் அந்த பெண் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதாவது, பெற்றோரை காணும் முயற்சியில் இறங்கிய அந்த பெண், இலங்கைக்கு வரும் போதெல்லாம் தாயின் விபரங்களை திரட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, தொடர்ந்து மேற்கொண்ட இந்த முயற்சியில் தாயின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட சில விவரங்களை வைத்து அவர் பிறந்த வைத்தியசாலையை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, இறுதியில் தன்னை 38 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்த தாயையும் அவர் கண்டுள்ளார்.

மகளை அவர் கண்டதும் ஆனந்த கண்ணீரில் தாய் உடைந்து போனதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அவர்கள் இருவரும் அங்கே சில நேரம் பகிர்ந்து கொண்டு, பல்வேறு உருக்கமான தருணங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. 38 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்ட விஷயம், தற்போது நெட்டிசன்கள் பலரையும் கூட மனம் உடைய வைத்துள்ளது.

காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்.. வேறு ஆணுடன் ஓடிய தோழி!!

உத்தரபிரதேசத்தில்..

காதலிக்காக ஆணாக மாறிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். இவர் அங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அவரது வீட்டுக்கு சனா என்பவர் வாடகைக்கு வந்தார். அவர் அதே வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தார்.சோனலும், சனாவுக்கும் நட்பு ஏற்பட்டு நல்ல தோழிகளாக மாறினர். பின்னர் நெருக்கமாக பழகுவதை அறிந்த சோனாலின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் விரும்புவதை ஏற்காததால், சனாவை வெளியே செல்லுமாறு கூறினர்.

இதனால் சனா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சனாவுடன் தான் வாழ்வேன் என்று கூறிவிட்டு சோனாலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் இருவரும் காலம் முழுவதும் கணவன், மனைவிபோல் வாழ்வது என முடிவு செய்தனர்.

இதன்காரணமாக, சனா பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜூன் 22, 2020 அன்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆணாக மாறிய அவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஹோகைல் கான் என மாற்றிக் கொண்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, சோஹைல் கானின் மனைவியாக அனைத்து மருத்துவ ஆவணங்களிலும் சோனால் கையெழுத்திட்டார். சனா ஏற்கனவே ஒரு அரசாங்க வேலையில் இருந்ததால் சோனலும் ஒரு அரசு வேலையை விரும்பினார்.

2022 இல், சோனல் யதர்த் மருத்துவமனையில் வேலை பெற்றார். இருப்பினும், சோனாலின் நடத்தையில் சனா ஒரு மாற்றத்தை கண்டார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்த கியான் என்பவருடன் சோனாலுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சோனால், சனா இடையே ஒரு நாள் சண்டை ஏற்பட்டது. இதனால் சோனால், தனக்காக ஆணாக மாறிய சனாவை விட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் கியானுடன் வாழ விரும்புவதாக சனாவிடம் சோனால் கூறியுள்ளார்.

மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் அளித்த புகாரில், சனா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதேநேரம் சனா தனக்கு நடந்த கொடுமைகளை போலீசாரிடம் விவரித்தார். இந்த நிலையில், சோனாலை கடந்த ஜனவரி 18ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். எனினும் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

வவுனியாவில் நியாமற்ற வரிச் சட்டத்திற்கெதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் நியாமற்ற வரிச் சட்டத்திற்கெதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

நியாமற்ற வரிச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (26.01.2023) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்கள் நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை , வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுநர்கள் நடு வீதிக்கு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறும் தொழில் வல்லுநர்களை சுரண்டித் திண்ணும் வரி யோசனையை மீளப்பெறு , அரசியல்வாதி களவெடுத்த காசை எடுத்து நாட்டை திருத்து , வங்கி திருடன்கள் பெரும் பதவிகளில் , நியாயமான வரி வேண்டும் மக்களுக்கு சலுகை வேண்டும் , எல்லா புறமும் ஊழல் மோசடி இன்னும் அவர்கள் மாடங்களில் போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 30 நிமிடங்களில் நிறைவுற்றிருந்தமையுடன் வவுனியாவிலுள்ள பெருன்பான்மையான வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் சித்தி

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் சித்தி

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 94 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 94 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 141 புள்ளி ஒரு மாணவரும் , 70 – 100 புள்ளிகளிக்கிடையே 11 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 3 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.

புலமைப்பரீட்சைக்கு 186 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் 50.5 சதவீதமாகவும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுபேற்றினை பெற்றமை 98.35 சதவீகிதமாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.