வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் முதலாவது இடத்தினை பெற்ற மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றுள்ளார்.
பாடசாலையில் தரம் 5D வகுப்பில் கல்வி பயின்ற இவ் மாணவி பல துறைகளில் சாதனைகளை நிலைநாட்டி வந்த நிலையில் புலமைப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார்.
மேலும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 94 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
வவுனியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 11 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். சித்தி விகீதம் 100 விகிதமாக காணப்படுகின்றது.
இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன் இம்மாணவர்களை சிறப்பாக வழி நடாத்திய வகுப்பாசிரியை திருமதி சாஜினா ஜாஹிர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் இம்மாணவர்களின் வெற்றிக்கு அனைத்து வகையிலும் உதவிய பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க.பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 100 வீகிதம் சித்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்கள் புலமைப்பரீட்சையில் 100 வீகிதம் சித்தியடைந்துள்ளனர்.
பெறுபேற்றின் அடிப்படையில் ந.டிசாந் 137 புள்ளிகளையும் , உ.கஜீபன் 124 புள்ளிகளையும் , சு. லதுர்சன் 102 புள்ளிகளையும் , சு.கார்த்திகா 93 புள்ளிகளையும் , சி.தேனுப்பிரியன் 79 புள்ளிகளையும் , செ.கிருசிகன் 77 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமையுடன் சித்தி வீகிதம் 100 வீதமாக காணப்படுகின்றது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சையில் 31 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 116 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 136 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர். புலமைப்பரீட்சைக்கு 140 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் சித்தி விகீதம் 97 விகிதமாக காணப்படுகின்றது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 73 மாணவர்கள் சித்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 73 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 73 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 96 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 21 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.
புலமைப்பரீட்சைக்கு 194 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் அவற்றில் 190 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர். சித்தி விகீதம் 98 விகிதமாக காணப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட சகல வடிவங்களிலும் அதிகரிப்பை ஏற்படுத்த பாடுபட்டு உழைத்த வகுப்பாசிரியர்கள் பிரதியதிபர் (ஆரம்பபிரிவு) மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு விசேட வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் சித்தி
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 07 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும் , 70 புள்ளிகளுக்கு மேல் 28 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர். அத்துடன் 70புள்ளிகளுக்கு கீழ் எந்தவொரு மாணவரும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
பெறுபேற்றினை வீகிதம் அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 25வீகிதமும் 100 புள்ளிகளுக்கு மேல் 82 விகீதமும் 70 புள்ளிகளுக்கு மேல் 100 வீகிதமுமாக அமைந்துள்ளது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி செல்வதேவன் புஸ்பவதி அவர்களிற்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.
ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின், வவுனியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (25.01) மாலை ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிவசக்தி ஆனந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த 5 கட்சிகளும் எதற்காக ஒன்றிணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக குத்துவிளக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ 25 கோடி பரிசு விழுந்தது.
வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லொட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார்.
பெரிய பரிசு விழுந்ததால் தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டிற்கு பலர் வருவதால் நிம்மதி போய்விட்டது எனவும் புலம்பியபடி பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் அனூப் திருவனந்தபுரத்தில் கடந்த 20-ம் திகதி லொட்டரி விற்பனை நிலையத்தை தொடங்கினார்.
லொட்டரியால் என் அதிர்ஷ்டம் மாறியது, அதனால், லொட்டரி வியாபாரம் செய்ய முடிவு செய்தேன் என கூறுகிறார் அனூப். தனது மனைவி மாயா-வின் முதல் எழுத்தான ‘எம்’ மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான ‘ஏ’ஆகியவற்றை சேர்த்து எம்.ஏ லக்கி செண்டர் என லொட்டரி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளார்.
அனூப் மனைவி மாயா கூறுகையில், இப்போது உதவி கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளது, கடன் கேட்டு சிலர் தற்போது வந்தாலும் எங்களுக்கு பழகிவிட்டதால் அவர்களை கண்டுகொள்வதில்லை.
லொட்டரியில் கிடைத்த பணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கி புதுப்பித்து அதில் வசித்து வருகிறோம். வேறு தொழில் குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என கூறியுள்ளார்.
வேலூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை, கணவர் வழிமறித்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி புனிதா(36).
இவர்களுக்கு நிவேதா(9) என்ற மகளும், நீதிஷ்(7) என்ற மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
ஜெய்சங்கருக்கு மது அருந்து பழக்கம் உள்ளது. மேலும், அவர் மனைவியின் நடத்தையில் சந்தேப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று புனிதா வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் பேருந்து மூலம் சொந்த ஊரான அழிஞ்சிகுப்பத்திற்கு வந்துள்ளார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரது கணவர் ஜெய்சங்கர், புனிதாவை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல முறை குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, புனிதாவை, அவரது கணவர் ஜெய்சங்கர் கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நபரது வாழ்க்கையில் எந்த சமயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரிவிக்க முடியாது. வாழ்கையில் நிறைய கஷ்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடந்து மொத்த வாழ்க்கையையும் அப்படியே புரட்டிப் போடும்.
இந்த நிலையில், கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு செம அதிர்ஷ்டம் நடைபெற்றுள்ளது. கனடா, அமெரிக்காவின் சில மாகாணங்கள், கேரள மாநிலம், துபாய் உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்டப் பூர்வமாக இயங்கி வருகிறது.
வழக்கமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் நபர்கள் பலரின் வாழ்க்கை, லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அப்படியே தலைகீழாக மாறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி தான் தற்போது கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் கமிலியா. மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வரும் கமிலியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து வாங்கிய லாட்டரிக்கு பரிசு ஏதும் கிடைத்து விட்டதா என்பதை பார்க்காமலே கமிலியா விட்டு விட்டதாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் கேஸ் ஸ்டேஷனுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றிருந்த கமிலியா, எதேச்சையாக தான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்ததா என்பதையும் பரிசோதித்து பார்த்துள்ளார்.
அப்படி இருக்கையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்து உற்சாகத்தில் திளைத்து போய் உள்ளார் கமிலியா. அது மட்டுமல்லாமல் சுமார் 60 மில்லியன் கனேடியன் டாலர்களை இதில் பரிசாக வென்றுள்ளார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 375 கோடி ரூபாய் ஆகும்.
இவ்வளவு பெரிய பரிசு தொகை தனக்கு லாட்டரி மூலம் கிடைத்துள்ளதால் தான் பார்த்து வரும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கி பல பேருக்கு வேலை கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பயன்படும் வகையிலும் பணத்தை செலவழிக்க போவதாகவும் அவர் உற்சாகத்தில் தெரிவித்துள்ளார்.
சிலருக்கு வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டம் நிகழும் என காத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒருவர் தனக்கு அதிர்ஷ்டம் அடித்தது தெரியாமல் இரண்டு மாதங்களாக இருந்த விஷயமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள்.
நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால் ஒரு குடும்பமே துன்பத்தில் உழல்கிறது. குடும்ப தகராறில் நொடி நேர பைத்தியக்காரத்தனத்தினால், தனது இரண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
இதில், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்து உள்ள செந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கௌரி (26).
இவருக்கும் கெட்டூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜீவன்( 4) என்ற மகனும் பாவனா ஸ்ரீ(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் கடந்த ஒரு மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் முத்துராஜ்க்கும் கௌரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட தகராறில் முத்துராஜிடம் கோபித்த கொண்ட கௌரி செந்தாரப்பள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
கடந்த ஒரு வாரகாலமாக குடும்ப பிரச்னையால் மனமடைந்த நிலையில் காணப்பட்ட கௌரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்துள்ளார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கௌரின் குழந்தைகள் ஜீவன் மற்றும் பாவனா ஸ்ரீ இருவரும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கௌரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே குடும்ப பிரச்னையில் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். தானத்தில் சிறந்த தானம், ‘அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு தானம் என்பதையும் கடந்து தற்போது ‘தாய்ப்பால் தானம்’ என்று உருமாறி வருகிறது.
தாய்ப்பால் தானம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலமுடன் வாழ வழிவகை செய்ய முடிகிறது. எனவே பெண்கள் தங்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பிற குழந்தைகளும் நலம் பெற வேண்டும் என்று எண்ணி அதனை சிலர் தானமாக செய்து வருகின்றனர்.
மேலும் இதற்காக தாய்ப்பால் தானம் குழுக்களும் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் இதற்கென தனி வங்கியே செயல்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் தாய்ப்பால் தானம் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை தானமாக கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கி வருகிறார். கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அவருக்கு சுரக்கும் தாய்ப்பாலை தனது குழந்தைக்குப்போக மீதம் இருப்பதை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் தொடர்ந்து 7 மாதங்களாக சுமார் 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக ஸ்ரீவித்யா வழங்கியுள்ளார். தொடர்ந்து தாய்ப்பாலை தானமாக வழங்கி வரும் இவர், தற்போது வரை 127 லிட்டர் வரை தானமாக வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீவித்யா தற்போது ‘ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெற்றுள்ளார். ஸ்ரீவித்யாவின் தாய்ப்பாலை தானத்தால் இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீவித்யாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மேலும் அதிகமான பிரசவித்த பெண்கள் தங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்க முனைப்பு காட்டுவர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதே கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்த சிந்து மோனிகா (29) என்ற இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்து 100-வது நாட்களில் இருந்து தொடர்ந்து 19 மாதங்களாக சுமார் 55,000 மி.லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.
இதன்மூலம் 1,500 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இவரது இந்த செயலை சாதனையை அங்கீகரிக்கும் விதமாக ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவரை கெளரவித்தது என்பது குறிப்பித்தக்கது.
திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயி கத்தியால் குத்தி படுகொலை . பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த உலகம்பட்டியார் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (62). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் உறவினரான செபஸ்தியான் மனைவி நிர்மலா பாத்திமா ராணி (39) என்பவர் வசித்து வருகிறார்.
இவரது மகன்கள் டேனியல் (21), வின்சென்ட் ஆரோக்கியதாஸ் (23). இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அவர்கள் வீட்டை கடந்து செல்பவர்களை பார்த்து அந்த நாய் குரைத்தும், கடிக்க வருவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நாயை கட்டிப்போட்டு வளர்க்கும்படி ராயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அப்போது அதனை நாய் என அழைக்ககூடாது என்று நிர்மலா பாத்திமா ராணி மற்றும் அவரது மகன்கள் ராயப்பனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் 2 குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், சமீபத்தில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டேனியல் கத்தியால் ராயப்பனை குத்தி கொலை செய்தார். இதையடுத்து நிர்மலா பாத்திமா ராணி, டேனியல், வின்சென்ட் ஆரோக்கியதாஸ் ஆகிய 3 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தாடிக்கொம்பை அடுத்த காப்புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த டேனியல் உள்பட 3 பேரை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தியாவில் தாய்க்கு மகன் மறுமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே (23).
இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா (45) சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் வேதனை அடைந்தார்.
குறிப்பாக சுபநிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை. இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், தாய்க்கு வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டார்.
அவர் தனது தீவிர முயற்சிக்கு பிறகு தாயை சமாதானம் செய்து அவரை மாருதி கன்வத் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார். ரத்னா கூறுகையில், ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை. எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை.
ஆனால் பல விஷயங்கள் குறித்து பேசிய பிறகு சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா என எனக்குள் நானே கேட்டு கொண்டேன். இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன் என கூறியுள்ளார்.
வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று (25.01.2023) மாலை இடம்பெற்ற இவ்விபத்துசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கன்ரர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியைசேர்ந்த நந்தன கிருசாந்த (வயது 41) என்ற நபரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அங்கே அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது.
இந்த பள்ளியில், 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரை அங்கே உள்ள சூழலில், ஒரு மாணவர் மட்டும் தான் படித்து.வருகிறார். நான்கு வகுப்புகள் இருந்த போதும் ஒரே ஒரு மாணவர் மட்டும் பள்ளிக்கு வருவது சற்று அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும் அதே வேளையில் இதை சுற்றி நடைபெறும் சில சம்பவங்கள் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
கார்த்திக் ஷெகோக்கர் என்ற மாணவன் அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மட்டும் தினமும் பள்ளிக்கு வரும் சூழலில் அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் ஒருவர் தினமும் சுமார் 12 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கார்த்திக் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் தினந்தோறும் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் பாடிவிட்டு பின்னர் வகுப்புகள் நடத்துவதை பின்பற்றி வருகின்றனர்.
இது பற்றி பேசும் ஆசிரியர் கிஷோர் மங்கார், இரண்டு ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருவதாகவும் பள்ளியில் தான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து பாடங்களையும் மாணவர் கார்த்திக்கிற்கு தனி ஆளாக தான் கற்றுக் கொடுத்து வருவதாகவும் அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் ஆசிரியர் கிஷோர்.
ஒரே ஒரு மாணவன் மட்டுமே பள்ளிக்கு வந்த போதிலும் தினந்தோறும் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து அந்த மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல் இருக்க, வருகை தரும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் மறுபக்கம் ஒரு மாணவனுக்காக இயங்கி வரும் பள்ளி நிர்வாகம் குறித்த செய்தியும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.