கணவர் வீட்டுக்கு தாமதமாக வந்ததால் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

மங்களூருவில்..

மங்களூருவில் கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மங்களூருவில் கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதல் திருமணம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த திவ்யா (வயது 26) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திவ்யா அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் ஆட்டோ டிரைவர் ஆவார்.

திருமணம் முடிந்த புதிதில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தற்கொலை இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் தனது மனைவி திவ்யாவுடன் பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

நிகழ்ச்சி முடித்துவிட்டு திவ்யா வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் ஹரீஷ் செல்லவில்லை. நீண்ட நேரமாகியும் ஹரீஷ் வீட்டுக்கு வரவில்லை. போன் செய்தாலும் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஹரீஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது திவ்யா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூரத்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை பின்னர் போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திவ்யாவின் பெற்றோர் சூரத்கல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல யூடிபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த நபர்.. வீட்டை சுற்றிக் காட்டி வீடியோ வெளியிட்டதால் வந்த வினை!!

குனியமுத்தூரில்..

பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல். இவர் வேறு யாருமில்லை. பிரபல யூடியூப் சேனல்களான சைபர் தமிழா மற்றும் சுஹைல் விலாகர் சேனல்களின் உரிமையாளர்.

இவர் மனைவி பெயர் பாபினா. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் ஹோம் டூர் வீடியோ தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வீடு கட்டியது எப்படி ? முதல் எவ்வாறு கட்டியுள்ளோம் ? என பல்வேறு தகவல்களை அதில் கூறியிருந்தார்.

கோவை அருகே உள்ள பிச்சனூர் பகுதியில் வீடு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்த இவரின் சப்ஸ்க்ரைபர் ஒருவர் தனது வேலையை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் 25 வயதான அனுராமன். வீட்டின் கதவை திறந்த சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

அவர் கையில் வைத்துள்ள மொபைல் போனை பறித்து கொண்டு தப்பித்து செல்ல முயற்சி செய்தபோது சுஹைல், அனுராமனை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் வைரம், அனுராமன் மீது வழக்கு பதிவு செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சம்பளம்… புதிய முறை குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

அரச ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனையொன்றை வழங்கியுள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை.

சம்பளம் வழங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள். வாரச் சம்பளம் வாங்கும் போது அந்த வார செலவுகள் தான் இருக்கும்.

இந்த முறையை பின்பற்றுவதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பெரிய தொகையைக் கண்டுபிடிக்க அரசாங்கமோ, தனியாரோ சிக்கத் தேவையும் இல்லை. சம்பளம் வழங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள்.

வாரம் வாரம் சம்பளம் கொடுப்பது ஒரு நிம்மதி. மேலும், உலகின் பல நாடுகளில், வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் செலுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அண்மைக்காலமாக பல சர்ச்சைக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலனோடு சேர்த்து வைக்கிறோம் என பெண்ணை ஏமாற்றி கும்பல் செய்த மோசமான செயல்!!

சென்னையில்..

சென்னை பெண்ணிடம் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்த பஞ்சாப் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலனோ காதலியோ விட்டு சென்றால் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்கு HOW TO GET YOUR EX BACK என்ற செயலி உள்ளது; இதே போல் பெயர் கொண்ட ‘ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்’ (HOW TO BRING YOUR EX BACK) போலி இணையதளமும் உள்ளது.

இதன்மூலம் நூதன முறையில் சிலர் ஏமாற்று வேலை செய்து வருகின்றனர். அதில் தற்போது சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலில் தோல்வி அடைந்துள்ளார். எனவே HOW TO BRING YOUR EX BACK என்ற ஒரு இணையதளம் மூலம் தனது காதலனுடன் திரும்ப சேர வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

எனவே அந்த செயலியில் தன்னை குறித்தும், தனது காதலன் குறித்தும் விவரங்களை பதிவேற்றினார். இதையடுத்து அவர்களை இணையதளம் வாயிலாக மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் பேசிய அவர், அந்த பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைப்பதாகவும், ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் சற்று யோசித்த அந்த இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்தால் போதும் என்று எண்ணி, அவர்களுக்கு பணம் கொடுக்க சம்மதித்துள்ளார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மர்ம நபர்களை சென்னை விமான நிலையம் வரவழைத்தது தன்னிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

அதனை பெற்று கொண்ட அவர்கள் குறிப்பிட்ட தேதியில் அவரையும், அவரது காதலனையும் சேர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் குறிப்பிட்ட நாளில் சேர்த்து வைப்பதாக கூறிய அவர்கள், அந்த பெண்ணை சிறிது நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டு மேலும் 5 லட்சம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பணம் தரவில்லை என்றால், உன்னை பற்றி இணையதளத்தில் தப்பு தப்பாக செய்திகள் பரப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் எழுதிக் கொடுத்தார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இணையப்பக்கத்தை ஆய்வு செய்து அதன் முகவரியை கண்டறிந்தனர். அது பஞ்சாப் மாநிலத்தை காட்டியது.

எனவே அவர்களை கையும் களவுமாக பிடிக்க காவல்துறையினர் ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி பாதிக்கப்பட்ட பெண், மர்ம நபர்களை தொடர்புகொண்டு பணத்தை தர ஒப்புக்கொண்டு சென்னை விமான நிலையம் வரவழைத்துள்ளார்.

இதனை நம்பிய அவர்கள், உடனே அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு சக பயணிகள் போல் மாறுவேடத்தில் இருந்த காவல் அதிகாரிகள் அந்த மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இருவர் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களின் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே இதைப்போல் போலியான இணையதளம் வாயிலாக பல இளம்பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த பெண்… பெற்றோர் பார்க்க வராத விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் மற்றும் தந்தை பார்க்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தை வந்து பார்க்காததால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருண் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுத நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, குழந்தை தொட்டிலிலும் தூங்கிக் கொண்டிருந்தபோது கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் எடுத்து வீட்டுக்கு வந்த அருண், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பூலாம்பட்டி காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் மற்றும் தந்தை பார்க்காத விரக்தியின் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

யாழில் பட்டப்பகலில் சினிமா பாணியில் இடம்பெற்ற விபரீத சம்பவம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய பின்னர் கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாகம் பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் மீது பட்டா ரக வாகனத்தில் பயணித்த பிறிதொரு குழுவினர் மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து அவர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அசத்தும் வெளிநாட்டு பெண்ப் : பலரும் வியப்பு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விவசாயம் செய்துவருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் SK விவசாயப் பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்று விஜயம் மேற்கொண்டார்.

ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை, நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கை செயற்பாடுகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதோடு மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் அறிந்துகொண்டார்.

அதோடு விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளை இயர்கையாகவே மண்வளமும் , நீர்வளமும் கொண்ட பூமி யாழ்ப்பாண பூமியாகும், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் பலரும் இன்றளவும் விவசாயத்தையும் செய்து வருகின்றனர்.

பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே தமக்கு உணவளித்த விவசாயத்தை என்னதான் பெரும் பதவியில் இருந்தாலும் அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12 மணிநேர மின்வெட்டு : மின் கட்டணமும் உயரும் : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

மின்வெட்டு..

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பணம் கிடைக்காவிட்டால் மீண்டும் பத்து அல்லது 12 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் நிர்க்கதிக்கு ஆளாக நேரிடும் என்றும், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி மாதத்தில் மின்சார உற்பத்திக்காக 38 பில்லியன் நிலக்கரி செலவழிக்கப்பட்டதாகவும், இனி அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் பணம் இல்லை, கடன் பெற முடியாது என்பதால் மின் கட்டண உயர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பெண் கைக்குழந்தையுடன் 3 நாட்களாக பேரூந்து நிலையத்தில் தவித்த சோகம்!!

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக குடியாத்தம் சென்றிருந்தார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பிரசாந்தின் தாய், தந்தை வரதட்சணை கேட்டு கீதாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதை தாங்க முடியாத கீதா 2 வருடங்களுக்கு முன்பு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், மாமியாரின் கொடுமை இரு மடங்காகி வரதட்சணையுடன் வா என கைக்குழந்தையுடன் கீதாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுது காலம் சென்ற பிறகு மீண்டும் பிரசாந்த் கீதா தம்பதியினர் பேசி முடிவு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் தற்போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், கீதாவின் மாமியார் மீண்டும் வரதட்சணை கேட்டு டார்ச்சரை தொடங்கியுள்ளார். மேலும், வரதட்சணை கொடுத்தால் மட்டுமே உனது கணவருடன் வாழ முடியும் என சொல்லி பிஞ்சு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மனம் நொந்த கீதா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கீதா பிஞ்சு குழந்தையுடன் பேருந்து நிலையத்திலேயே 3 நாட்களாக நிற்கதியாக தங்கியுள்ளார்.

பசியால் இரு குழந்தைகளும் வாடி வந்த கோலத்தை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அந்த பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் உணவு கொடுத்து உதவினர்.

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கீதா மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டு சென்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இதுபோன்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்காது என அந்த பெண் வேதனையுடன் தெரிவித்தார்.

மாமியார் வீட்டுக்கு போன மனைவி திரும்ப வராததால் தன் பிறப்புறுப்பையே வெட்டிக்கொண்ட கணவன்!!

பீகாரில்..

வீட்டிற்கு வரமறுத்த மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன், தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் பீகாரில், மாதேபுரா அருகே உள்ள ரஜினிநாயநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 25).

6 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்பவருடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் என 4 குழந்தைகள் இருக்கின்றனர். வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் கிருஷ்ணா, 2 மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தை சந்திக்க வீட்டுக்கு வருவார். இதனால் அனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் கிருஷ்ணா தனது குடும்பத்தை காண வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் வீட்டிற்கு சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இதனால் அனிதாவை கணவர் கிருஷ்ணா வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை, அனிதா வர மறுத்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து அவரை அழைத்த கிருஷ்ணாவை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் மனைவி அனிதா. கிருஷ்ணாவின் குடும்பத்தாரும் அனிதாவை அழைத்துள்ளனர். இருந்தும் அனிதா அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு கூறியும் வராத மனைவி மீது கிருஷ்ணா ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அந்த கோபத்தை தன் மீதே காட்டிக்கொண்டார். வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். பின்னர், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கிருஷ்ணாவை கண்ட உறவினர்கள், இரத்த வெள்ளத்தில் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவர் இப்படி நடந்துகொண்டது குறித்து சரியான விளக்கம் தெரியவரவில்லை.

பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வரமறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி எடுத்த முடிவு : கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் அருகே கணவன் வரதட்சணை கொடுமை செய்ததால் மனமுடைந்த மனைவி, பிறந்து 50 நாட்களேயான பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவிக்கு தற்கொலைக்கு காரணமான கணவனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி கள்ள அழுகை அழுதால் மட்டும் ஊர் உலகம் நம்பாது..

நடையை கட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு என்பதுபோல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இவர்தான் பச்சிளம் குழதந்தையோடு மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமான அப்துல்லா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கடக்கால்தோப்பு பகுதியை சேர்ந்த பிர்தோஸ் என்ற 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஹயானா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது தாய் வீட்டில் இருந்த பிர்தோஸ், அருகே உள்ள விவசாய கிணற்றில் குழந்தையுடன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பிர்தோஸ் மற்றும் குழந்தை ஹயானாவை சடலமாக மீட்டு, பிரதே பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிர்தோஸின் தாய் ஜன்மா, வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தின்போது பிர்தோஸ்-க்கு 10 பவுன் நகை போடுவதாக இருவீட்டாரும் பேசி உள்ளனர். முதலில் 7 பவுன் நகை போட்ட பெண் வீட்டார், மீதமுள்ள 3 பவுன் நகையை திருமணத்திற்கு பிறகு போடுவதாக உறுதி அளித்தனர்.

ஆனால் குழந்தை பிறந்தும்கூட 3 பவுன் நகை போடவில்லை என தெரிகிறது. மேலும் போட்ட 7 பவுன் நகையையும் பிர்தோஸ் தாய் வீட்டிலேயே வைத்ததாக கூறப்படுகிறது.

பேசிய நகையையும் போடாமல், போட்ட நகையையும் தாய் வீட்டிலேயே வைத்தால் என்ன அர்த்தம் என மனைவியுடன் தினமும் அப்துல்லா சண்டை போட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பிர்தோஸ் பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை கொடுமை செய்த அப்துல்லாவை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

24 வருஷமா அம்மா ஒரே தட்டில் சாப்பிட்டாங்க… மறைந்த தாயை நினைத்து உருகிய மகன்!!

தமிழகத்தில்..

என் அம்மா 24 ஆண்டுகளாக ஒரே தட்டில் சாப்பிட்டு வந்ததாக ஒரு நபர் பதிவிட்டு மறைந்த தனது தாயாரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் விக்ரம் புத்தநேசன். இவரின் தாய் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் தாயாரை நினைவுகூர்ந்து விக்ரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது அம்மாவின் தட்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில்தான் சாப்பிட்டுவந்தார். இது ஒரு சிறிய தட்டு. இந்தத் தட்டை நானும், என் அண்ணன் பொண்ணும் மட்டுமே பயன்படுத்த அம்மா அனுமதிப்பார்.

எங்களைத் தவிர வேறு யாரையும் இந்தத் தட்டைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். இந்த தட்டு நான் 7-ம் வகுப்பு படித்தபோது அதாவது 1999-ம் ஆண்டு நான் வாங்கிய பரிசு. அதை நான் இப்போதுதான் என் சகோதரி மூலம் அறிந்துகொண்டேன்.

என் அம்மா இந்த 24 வருடங்களும் நான் பரிசாக வாங்கிய இந்தத் தட்டில்தான் உணவு சாப்பிட்டிருக்கிறார். ஆனால் இதை என்னிடம் அவர் சொன்னதே இல்லை. மிஸ் யூ மா எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

10 நாட்களில் திருமணம்… தாய் சொன்ன ஒரு வார்த்தையால் 19 வயது பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் சமையல் கற்றுக்கொள் என்று தாய் கூறியதால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் கீழகோடன் குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ்.

இவரது மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் 1ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

புதுப்பெண் கிறிஸ்டில்லா எப்போதும் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவரது தாய், உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள் என்று தனது மகளை கண்டித்துள்ளார்.

இது கிறிஸ்டில்லா மேரிக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிறிஸ்டில்லா மேரி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் கிறிஸ்டில்லா மேரி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கிறிஸ்டில்லா மேரி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணத்திற்கு 10 நாட்களே உள்ள நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது.-+96320அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

திருநங்கையாக மாறிய மகன் கொலை : பெற்றோரை முற்றுகையிட்ட சக திருநங்கைகள்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி தெய்வானை தம்பதியினரின் மகனான சந்துரு என்ற சந்திரிகா (19), ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

இந்நிலையில், திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்நிலையில், தெய்வானையின் சகோதரியான முனீஸ்வரி என்பவரது வீடு குருசிலாப்பட்டு பகுதியில் உள்ளது. தொடர்ந்து பண்டிகையை காண அவரது வீட்டிற்கு சந்திரிகா சென்றுள்ளார். ஆனால் திடீரென அவர் மாயமானார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல்போன சந்திரிகா இன்று மர்மமான முறையில் குரிசிலாபட்டு பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சந்திரிகாவின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

இந்நிலையில், இந்த தகவல் அறிந்த திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சந்திரிகாவின் உறவினர்களை முற்றுகையிட்டு, “சந்திரிகாவின் இறப்பிற்கு நீங்கள் தான் காரணம். உங்க வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார்” என கேள்வி கேட்டனர்.

மேலும், சந்திரிகாவின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குரிசிலாப்பட்டு போலீசார் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கின்றது!!

எரிவாயுவின் விலை..

அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையின் தற்போதைய,

விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எப்போது அதிகரிக்கப்படும் என்ற தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.