காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் கொடுத்த தண்டனை.. விரக்தியில் மகள் எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தை வந்து பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்துள்ளார். இந்நிலையில், அருண் வேலைக்கு சென்றுவிட்டதால் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பூலாம்பட்டி போலீசார் கௌசல்யாவின் சடலத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தாய். தந்தை பார்க்க வராத விரக்தியின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடுகளுக்குள் புதைந்த அதிசய நகரம்.. 2000 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்த மர்மம்!!

மாயன் நாகரீகத்தில்..

2000 வருடங்களுக்கு முன்னர் அழிந்து போனதாக சொல்லப்படும் மாயன் நாகரீகத்தின் எச்சங்களை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு உலக அளவில் தற்போது கவனம் பெற்று வருகிறது.

மாயன் நாகரீகம் என்றவுடன் பலருக்கும் மாயன் காலண்டர் ஞாபகம் தான் வரும். அந்த நாட்காட்டியின்படி கடந்த 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என தகவல்கள் பரவியது.

உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் இவை வதந்திகளே என ஆய்வாளர்கள் ஆணித்தரமாக கூறிவந்தனர். ஆனாலும், மாயன் நாகரீகம் உண்மையில் இருந்திருக்கின்றது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மத்திய அமெரிக்காவில் வசித்து வந்ததாக சொல்லப்படும் மாயன்கள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதாக கருதப்படும் மாயன்கள் குறித்தும் அவர்களது நாகரீகம் குறித்தும் தற்போது புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

அதாவது, கவுதமாலா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்கு கீழே மாயன் நாகரீகத்தை சேர்ந்த கட்டிடங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள 650 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இப்பகுதி மிராடோர்-கலக்முல் கார்ஸ்ட் பேசின் என அழைக்கப்படுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நகரம், 110 மைல் நீளமுள்ள தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட சுமார் 1,000 குடியிருப்புகளால் ஆனது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

பல அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் பிரான்ஸ் மற்றும் கவுதமாலாவை சேர்ந்த பணியாளர்களால் LiDAR தொழில்நுட்பம் மூலமாக இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

Ancient Mesoamerica எனும் இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் தரவுகள் சமூக-பொருளாதார அமைப்பு மற்றும் மாயன்களின் உள்கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் சில குடியிருப்புகளில் பெரிய தளங்கள் மற்றும் பிரமிடுகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் அவை விளையாட்டு மற்றும் அரசியல் தொடர்பானவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, வறண்ட காலங்களில் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் கால்வாய்கள் வெட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் இங்கே கிடைத்திருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியாவில் இரு பேரூந்துகள் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து!!

விபத்து..

வவுனியா நகரில் இரு பேரூந்துகள் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று (23.01.2023) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பயணத்தினை ஆரம்பித்த வவுனியா – கொழும்பு 15 வழித்தட தனியார் பேரூந்தும் வவுனியா – கொழும்பு 87 வழித்தட தனியார் பேரூந்தும் இருவருடைக்கிடையே போட்டித்தன்மை காரணமாக பயணித்துள்ளார்.

பழைய பேரூந்து நிலையத்தினை இரு பேரூந்துகளும் அண்மித்த சமயத்தில் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக கண்டி பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளோன்று ஏற முற்பட்டமையினையடுத்து வவுனியா – கொழும்பு 15 வழித்தட தனியார் பேரூந்து சாரதி திடீர் பிரேக் பிரயோகித்து பேரூந்தினை நிறுத்தியுள்ளார்.

அதன் பின்புறமாக வந்த வவுனியா – கொழும்பு 87 வழித்தட தனியார் பேரூந்து முன்பாக நின்ற பேரூந்துடன் மோதுண்டதுடன் முன்பாக நின்ற பேரூந்து வீதியினை மாற முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் காயங்களுக்குள்ளாகியிருந்தமையுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் இரு பேரூந்துகளும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

பாண்..

நாடளாவிய ரீதியில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை குறைப்பது குறித்து அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பாண் விற்பனை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமையினால் விலை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது பாண் ஒரு இறாத்தல் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாண் கொள்வனவை குறைத்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இளைஞரின் சந்தேக புத்தியால் நடந்த விபரீதம் : பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!!

ஈரோடில்..

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் சந்தோஷ் (32), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் பணி செய்து வருகிறார்.

இவருக்கு, பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்,தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

பழக்கம் நெருக்கமாக மாறி அந்த பெண்ணும், சந்தோசும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சந்தோஷ் காதலித்த பெண் வேறு ஒருவரையும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த சந்தோஷ் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பர் காந்தனுடன், காதலி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து செல்போனில் பேசிய சந்தோஷ், அவரை வெளியே வரச்சொல்லியுள்ளார். வெளியே வந்த அந்த பெண்ணுக்கும், சந்தோசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கன்னம், வலது தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என பல இடங்களில் சரமாரியாக சந்தோஷ் குத்தினார்.

அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்தோசையும், காந்தனையும் கைது செய்தனர். பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

மத்திய பிரதேசத்தில்..

நாளுக்கு நாள் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது என மக்கள் அனைவரும் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், சில மாநிலங்களில் இருக்கும் மக்கள் மனநிலை பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

பெண் சிசு கொலையை தடுக்க பலரும் போராடி தடுத்திருக்கும் நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்தால் குழந்தையை தானே கொல்லக்கூடாது, தற்கொலை செய்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நபர் ஒருவர் முடிவெடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. மார்பில் ட்ரெடிங் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமா ஆனது. 6 மற்றும் 4 வயதில் பெண் குழந்தை இருக்கும் இந்த தம்பதியினர், ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுள்ளனர்.

எனவே இவரது மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். வாசுதேவ் பாட்லேவுடன் பிறந்தவர்கள் 4 பேர்; அதில் இவர் மட்டுமே ஆண் பிள்ளை. எனவே இவருக்கு ஒரு குழந்தையாவது ஆண் பிள்ளையாக இருக்கவேண்டும் என்று மிகுந்த ஆசையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இவரது மனைவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆகியுள்ளது. அப்போது இவருக்கு பெண் குழந்தை, அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்ட இவருக்கு, அது நிராசையாய் போயுள்ளது.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன அவர், மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்றைய முன்தினம் மாலை சுமார் 7 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து சில கி.மீ., தள்ளியுள்ள வனிகங்கா என்ற ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த அருகிலிருந்த நபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வாசுதேவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வாசுதேவ் என்றும், அவர் ஒரு தொழிலதிபர் என்றும் தெரியவந்தது.

மேலும் சுமார் 15-20 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இவருக்கு, அண்மையில் இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மனைவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் மனம் நொந்துபோன கணவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் மூழ்கிய ஹட்டன் : ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!!

சோகத்தில் மூழ்கிய ஹட்டன்..

நானுஓயா – ரதெல்ல குறு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஹட்டன் டிக்ஓயாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று அதிகாலை ஹட்டன் டிக்ஓயாவில் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

தந்தையான 54 வயதான அப்துல் ரஹீம், தாயான 42 வயதான ஏ.ஆயிஷா, பிள்ளைகளான 11 வயது மரியம், 8 வயதான நபீஹா விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். 14 வயதான முகமது சைம் உறவினராகும்.

டிக்ஓயாவில் பள்ளிவாசலில் விசேட தொழுகையின் பின்னர் உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பிரதேச முஸ்லிம்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் ரஹீம் மற்றும் அவரது உறவினர் முகமது ஆகியோர் தனித்தனி கல்லறைகளிலும், தாய் மற்றும் மகள்கள் ஒரு கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டனர்.

வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் நினைவாக ஹட்டன் திக் ஓயா நகரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு வெள்ளைக் கொடிகளால் பறக்கவிடப்பட்டிருந்தன.

விபத்தில் உயிரிழந்த வேன் சாரதி ஹட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஆர்.என்.பி.தினேஷ் என்பவரின் சடலம் ஹட்டன் குடாகமவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய 62 வயதுடைய பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் நானுஓயா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

93வது வயதில் 30 வயது காதலியுடன் 4வது திருமணம் செய்த நிலாவில் 2வதாக கால் பதித்த வீரர்!!

கலிபோர்னியாவில்..

நிலாவில் இரண்டாவது நபராக கால்பதித்த விண்வெளியாளர் பஸ் ஆல்ட்ரின் தனது 93வது வயதில், நீண்ட நாள் காதலியான ஆன்காஃபார்(30) என்ற பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கல பயணத்தில் சந்திரனில் கால் பதித்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான Buzz Aldrin தனது 93 வது பிறந்த நாளில் நீண்ட கால காதலியை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய அளவில் நடத்தப்பட்ட திருமண விழாவில் 30 வயதுடைய தனது காதலி டாக்டர் ஆன்காஃபாரை திருமணம் செய்து கொண்டதாக சனிக்கிழமையன்று ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு பஸ் ஆல்ட்ரின் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் “எனது 93வது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷனால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்ட கால காதலரான டாக்டர் ஆன்காஃபாரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பஸ் ஆல்ட்ரின் பதிவுக்கு 22,000க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர், மேலும் இந்த பதிவு 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.

இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், “வாழ்த்துக்கள் இளைஞனே! மீண்டும் சந்திரனுக்கு மேல்!!” நீங்கள் என்று குறும்பாக பதிவிட்டுள்ளார். தனது 93 வயதில் 30 வயதுடைய இளம் பெண்ணை பஸ் ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள நிலையில், இது இவருக்கு நான்காவது திருமணமாகும்.

அப்பல்லோ 11 மிஷனின் மூன்று பேர் கொண்ட குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் பஸ் ஆல்ட்ரின் மட்டுமே. நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரர், அவரை பின் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து பஸ் ஆல்ட்ரின் நிலாவில் கால் பதித்த இரண்டாவது விண்வெளி வீரர் ஆனார்.

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!!

மஞ்சளில்..

பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது.

பாலில் மஞ்சள் சேர்ப்பது தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வலிகளுக்கு குறிப்பாக முதுகுவலிக்கு மஞ்சள் பால் சிறந்த தீர்வாகும். இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும்.

கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் நன்மை பயக்கும். மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும்.

இதை தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும். `உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்தார்’ என்பார்கள்.

ஒரு கிளாஸ் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாகக் குடித்தால், மேலே உள்ள பலன்களைப் பெறலாம்.

40 ஆண்டுகளாக லொட்டரி வாங்கியும் எதுவும் கிடைக்கவில்லை என ஏங்கியவருக்கு பொங்கலுக்கு அடித்த பேரதிஷ்டம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 40 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு தற்போது ரூ 5 கோடி பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஹந்த் துவாரகா தாஸ் (88).

இந்த முதியவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வந்திருக்கிறார். அவருக்கு சொல்லி கொள்ளும் வகையில் பரிசுகள் எதுவும் இதுவரையில் கிடைக்காத நிலையில் தற்போது பொங்கல் குலுக்கலில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ளது.

முதியவர் தாஸ் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 வருடங்களாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வருகிறேன். வெற்றி பரிசு தொகையை எனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பேன் என்றார்.

தாஸ் மகன் நரேந்தர் குமார் கூறுகையில், என் தந்தை அவரிடம் பேரனிடம் பணம் கொடுத்து லொட்டரி டிக்கெட் வாங்க சொன்னார், அதற்கு பரிசு விழுந்துள்ளது. நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளோம் என கூறியுள்ளார்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் குறைந்த விலையில் அழகிய வீடு விற்பனைக்கு – 0777570161

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் குறைந்த விலையில் அழகிய வீடு விற்பனைக்கு – 0777570161


வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புதிதாக அமைப்பட்ட TILESகளுடன் 4 அறைகள் , 2 வரவேற்பறை , சமயலறை , வாகன தரிப்பிடம் , வீட்டுடன் கூடிய attach bathroom , வெளிப்புற bathroom , கிணறு , அழகிய வெளிப்பற அமைப்புக்களுடன் மேலும் நான்கு பக்கங்களும் மதில் கட்டப்பட்ட வீடு விற்பனைக்குள்ளது.

2பரப்பு அமைவிடம் கொண்ட  குறித்த வீட்டிலிருந்து வைத்தியசாலை , பாடசாலை , நகரம் , பொலிஸ் நிலையம் , மாவட்ட செயலகம் என அனைத்து அரச நிறுவனங்களும் அண்மையிலேயே அமைந்துள்ளது சிறப்பம்சமாகும் என்பதுடன் 100மீற்றர் தூரத்திலிலேயே வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அமைந்துள்ளது.

விலை பேசி தீர்மாணிக்கப்படும் என்பதுடன் தொடர்புகளுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும் வாட்சப் இணைப்பும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வீட்டின் புகைப்படங்கள் கீழேயுள்ளது.

தொடர்புகளுக்கு
0763262077
0777570161

3 அடி குழந்தையின் உடலுக்குள் சிக்கிய இளம்பெண் : காதலில் வீழ்ந்த சுவாரஸ்யம்!!

அமெரிக்கவில்..

வெறும் மூன்று அடி 10 அங்குலம்தான் இருக்கிறாரே, சின்னப்பிள்ளையாக இருப்பாரோ என்று அருகில் சென்று பேசினால், ஹேய், எனக்கு வயது 23 என்கிறாராம் அவர்.

குழந்தையாக இருந்தபோது தாக்கிய புற்றுநோய் அமெரிக்கவில் வாழும் Shauna Rae சிறுபிள்ளையாக இருந்தபோது அவரை மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. சிகிச்சை மூலம் அவர் புற்றுநோயை வென்றுவிட்டார்.

ஆனால், சிகிச்சையின் ஒரு கடுமையான பக்க விளைவு அவரது உடலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு சராசரி 8 வயது சிறுமியின் அளவுக்கே அவரது உடல் வளர்ச்சி அடைந்தது.

தனது உயரம் குறித்து முதலில் வருந்தினாலும், பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் துவங்கினார் Shauna. அவர் நடத்தும் I Am Shauna Rae என்னும் அந்த தொடரில் இப்போது தனக்கு காதல் வந்திருப்பதைக் குறித்து பேசியுள்ளார் Shauna.

வேல்ஸ் நாட்டவரான Dan (26) என்பவருக்கும் Shaunaவுக்கும் காதல் மலர்ந்திருக்கிறதாம். Danக்கு உலகம் சுற்றுவது மிகவும் பிடிக்குமாம். எனவே ஒன்றில் ஓரிடத்தில் செட்டில் ஆகவேண்டும், அல்லது Danஉடன் உலகம் சுற்றவேண்டும் என முடிவு செய்துள்ளாராம் Shauna.

தங்கள் மகளின் நிலைமை குறித்து வருந்திவந்த Shaunaவின் பெற்றோருக்கும் Danஐ மிகவும் பிடித்துப்போக, அவருடன் உலகம் சுற்றத்துவங்கிவிட்டார் Shauna. Shaunaவின் பெற்றோரின் அனுமதியுடன் காதல் ஜோடி மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

வவுனியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் வேட்புமனு தாக்கல் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன், சில கட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டதுடன்,

வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபையில் வேட்புமனுக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் இரு கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் வவுனியா மாநகரசபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக்குழுக்களும் நிராகரிகப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆன்லைன் கேம் மோகத்தால் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

திருச்சியில்..

 

ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைய தலைமுறை சீரழிந்து வருகிறது. இதனை தட்டி கேட்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் 18 வயது பாலகுமார் . இவர் திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பொங்கலுக்கு கல்லூரியில் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பாலகுமார் வீட்டிற்கு வந்தார். எந்த நேரமும் ஓய்வின்றி ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ‘பிரீ பயர்’ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிக் கொண்டே இருந்தார்.

அவரது தாய் அம்பிகா பாலகுமாரை வன்மையாக கண்டித்துள்ளார். மனம் உடைந்த பாலகுமார் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையை கட்டி தூக்கு போட்டுக் கொண்டார்.

இதனைக் கண்ட பாலகுமாரின் தாத்தா வெள்ளையன் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஆன்லைனில் கேம் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப்போட்டுக் கொண்ட பாலகுமார் தற்கொலை முயற்சி செய்தார். அப்போது உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவீதியில் கல்லூரி மாணவி க.ழு.த்.த.று.த்.து கொ.லை… காதலனின் வெ.றிச்செயல்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரொட்டில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 19 வயது மாணவியைக் க.ழுத்தை அ.றுத்துக் கா.தலன் கொ.ன்.ற ச.ம்பவம் பெ.ரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொ.லை செ.ய்யப்பட்ட நி.லையில், மீ.ண்டும் ஒ.ரு அ.தி.ர்ச்சி ச.ம்பவம் ந.டைபெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான கு.ற்றங்களும், வ.ன்முறை செயல்களும் சமீபமாக நாடு முழுவதுமே அதிகரித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி துவங்கி, பரங்கிமலை ரயில் நிலையில், சிதம்பரம் கல்லூரி வாசல் என்று இளம்பெண்கள் ஒருதலைக் காதலால் உ.யிரை இழக்கிறார்கள்.

பெங்களூரு அடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பேருந்தில் திப்பூர் வந்து இறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த க.த்.தி.யை எ.டுத்து ராஷியின் க.ழு.த்.தை அ.று.த்.து, ரத்த வெ.ள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் த.ப்பிச் செ.ன்றனர்.

இதில், ர.த்.த.வெ.ள்ளத்தில் து.டி.து.டித்துக் கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீ.ட்பதற்குள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ.யிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஷியின் உ.டலை கை.ப்.ப.ற்றி பி.ரேத ப.ரி.சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொ.லை ச.ம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

கொ.லையின் பி.ன்னணியில் காதல் வி.வகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கல்லுாரி மாணவி கொ.லை செ.ய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொ.லை ந.டந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.

அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, த.ப்.பியோடிய கு.ற்.ற.வாளிகளைத் தே.டிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம்” என்றனர்.

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி : உதவி கோரி அழைப்பு!!

பிரித்தானியாவில்..

நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், தற்போது ஆவிகளுடன் பேசுவோரின் உதவியை நாடியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde, நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.

லண்டனில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு, பிரபல நடிகை மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், தங்கள் திருமண வாழ்வில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Brocarde. அவரது கணவரான Edwardo ஒரு ஆவியாக இருப்பதால், நினைத்த நேரமெல்லாம் வந்துவந்து போகிறாராம். அதாவது நிரந்தரமாக வீட்டில் தங்கமாட்டேன்கிறாராம்.

அவர் இனி சுதந்திரமாக அலையும் ஆவி எல்ல, அவர் என் கணவர் என்பதை புரிந்துகொள்ளமாட்டேன்கிறார் என்கிறார் Brocarde.

அத்துடன், பூனை ஒன்றை வாங்கவேண்டுமென Edwardo விரும்புகிறாராம். ஆனால், Brocardeக்கோ நாய்தான் பிடிக்குமாம்.

இப்படி அவருடைய நாடகங்களையெல்லாம் இனி என்னால் பொருத்துக்கொள்ள முடியாது என்று கூறும் Brocarde, ஆகவே, எங்கள் திருமண வாழ்வு நீடிக்கவேண்டுமானால் ஆவிகளுடன் பேசும் திருமண ஆலோசகர் ஒருவரின் உதவி எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.