இலங்கையை உலுக்கிய கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்!!

கோர விபத்து…

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

சுற்றுலாவுக்கு கொழும்பு டேஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 46 பேரை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்றும் மேலும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியது.

இந்த கோர விபத்து சம்பவம் நேற்று (20) மாலை 7 மணியலவில் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் டீ சென்டருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் விபரம், இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேரில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

01:- அப்துல் ரஹீம் (55)

02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13)

04:- நபீஹா (08)

05:- ரஹீம் (14)

06:- நேசராஜ்பிள்ளை (வேன் சாரதி) (25)

07:- சன்முகராஜ் (25) ( நானுஓயா பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி) என்பவரும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு டேஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வேனுடனும், வேன் முச்சக்கர வண்டியுடனும் மோதியதில் வேன் பாரிய பள்ளத்தில் உருண்டு நசுங்கிய நிலையில் அதில் பயணித்தோரில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுதாகவும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் சுற்றுலா வந்த பஸ் சுமார் 150 அடி தூரம் தேயிலை மாலைக்குள் கட்டுப்பாட்டை இழந்து இழுத்து செல்லப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் 42 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் வெளியாகின!!

வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு உள்ளுராட்சி மன்றத்தின் வேட்பு மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,

வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ஒருவர் மாத்திரம் போட்டியிட முடியாது என்பதுடன் குறித்த கட்சியின் ஏனைய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் ஏனைய அனைத்து கட்சிகள் , சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகியவற்றின் வேட்பு மனுக்களின் இறுதி முடிவுகள் காத்திருப்பில் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனாவால் சிதைந்த கனவு… யூடியூப் மூலம் சம்பாதித்து 50 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் காரை வாங்கிய இளைஞன்!!

பீகாரில்..

இந்திய மாநிலம் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், யூடியூப் சேனல் மூலம் 50 லட்சம் மதிப்புள்ள Audi காரை வாங்கியுள்ளார். பீகாரைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் ஹர்ஷ் ராஜ்புத். சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த ஹர்ஷிற்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டது.

ஆனாலும் தளர்ந்துவிடாத அவர் ஊரடங்கு காலக்கட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் சினிமா மற்றும் பல்வேறு விடயங்களைப் பற்றிய நகைச்சுவை வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பார்வையாளர்களை பெற்றது. இதன்மூலம் ஹர்ஷ் ராஜ்புத் குறுகிய கால இடைவெளியில் பிரபலமானார். 33 லட்சம் பேர் அவருடைய சேனலை பின்தொடரும் நிலையில், மாதந்தோறும் ஹர்ஷ் 5 முதல் 8 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்.

அவர் கடந்த சூன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை கூகுள் விளம்பரப் பிரிவில் கிடைத்த தொகை சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாகவும கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹர்ஷ் ராஜ்புத் ரூ.50 லட்சம் மதிப்புள்ள Audi (A4) சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது சேனல் Brand Promotions மூலம் அவர் தனியே வருவாய் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

50 வருடங்களாக எந்த உணவும் உண்ணாமல் வெறும் ஹார்லிக்ஸ் குடித்து உயிர் வாழும் அதிசய மூதாட்டி!!

மேற்கு வங்கத்தில்..

உலகில் விநோதமாக சம்பவங்கள் பல இடங்களில் நடந்துக் கொண்டிருக்கதான் செய்கிறது. அவ்வாறுதான் 50 ஆண்டுகளாக எந்த உணவும் இல்லாமல் வெறும் ஹார்லிக்ஸ், டீ மாத்திரம் குடித்து ஒரு பாட்டி உயிர்வாழ்ந்து வருகின்றார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பெல்டிஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் அனிமா சக்ரவர்த்தி என்ற 76 வயது மூதாட்டி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளமை பருவத்தில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி கொடுத்திருக்கிறார்.

இவர் சில வீடுகளில் வேலை பார்க்கும் போது வீட்டில் இருக்கும் உணவைக் கொடுப்பார்கள். ஆனால் அவர் தேநீர் மற்றும் சத்தான திரவ பானங்கள் மட்டுமே சாப்பிட்டார். இதற்குப் பழகிய அனிமா உணவு உண்பதை நிறுத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமமே ஆச்சரியமடைந்துள்ளனர்.

அனிமாவின் மகன் இளமையில் தனது தாய் சந்தித்த வறுமையே தனது தனித்துவமான வாழ்க்கைக்குக் காரணம் என்று கூறுகிறார். இந்த பாட்டியின் உடல் செயல்பாடு குறித்து மருத்துவர் கூறுகையில்,

“எங்கள் உடலுக்கு ஆற்றல், கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உணவு போன்ற உணவில் இருந்து மட்டுமின்றி திரவ உணவிலும் தேவைப்படுகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது அல்ல, அதில் தேவையான சத்துக்கள் உள்ளதா என்பதுதான்.

திரவ உணவில் கிடைத்தால் ஒருவர் நன்றாக வாழலாம். கோமா அல்லது ஐசியுவில் உள்ள அனைத்து நோயாளிகளும் கடுமையான சூழலில் திரவ உணவை உட்கொள்கின்றனர்.

எனவே, வயதான பெண்ணின் உடல்நிலையைப் பார்த்து அறிவியல் ரீதியாக ஆச்சரியப்படத் தேவையில்லை” என்கிறார். இந்த விடயம் பல மக்களை ஆச்சரமடைய வைத்துள்ளது.

லவ் டுடே திரைப்பட பாணியில் செல்போனை மாற்றியதால் சி.க்.கி.ய கா.தலன்… நின்றுபோன திருமணம்!!

சேலத்தில்..

லவ் டுடே திரைப்படத்தைப் போன்று செல்போன்களை மாற்றிக்கொண்ட காதலர்களின் திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்.

24 வயதுடைய இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அரவிந்தும் அவரது காதலியான செவிலியரும் சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தை போன்று ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றிக்கொண்டனர்.

இந்நிலையில், தனது காதலன் அரவிந்த் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரது காதலிக்கு அ.திர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் செல்போனில் இருந்தன.

குறிப்பாக ப.த்தாம் வ.குப்பு ப.டிக்கும் மா.ண.வி ஒ.ருவரிடம் அரவிந்த் கா.தலிக்கும் நோ.க்கில் பே.சி ஆ.சை வா.ர்த்தை கூறி வீடியோ காலில் மா.ண.வி.யை அ.ரை நி.ர்.வா.ண.மா.க நி.ற்.க சொ.ல்லி அ.தனை செ.ல்போனில் ப.திவு செ.ய்து இ.ருந்தது தெ.ரியவந்தது.

இதனைக் கண்ட காதலி மிகவும் அ.திர்ச்சி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து பெற்றோர் மூலமாக வாழப்பாடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரினை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அரவிந்தை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட காதலி தனது திருமணத்தை நிறுத்திட கோரி பெற்றோரிடம் வலியுறுத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை போன்று செல்போனை மாற்றிக் கொண்டதன் காரணமாக மாணவி ஒருவரிடம் த.கா.த மு.றையில் காதலன் நடந்து கொண்ட சம்பவம் தெரிய வந்ததால் காதல் திருமணமே நின்று போனது மட்டுமல்லாமல் வாலிபர் போக்சோவில் கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் புதிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இன்றைய சினிமாக்கள் பெரும்பாலும் இளைஞர்களை த.வறான பாதைக்கு அழைத்து செல்வதாக குற்றசாட்டுகள் உள்ள நிலையில் லவ் டுடே என்ற படத்தால் ஒரு பெ.ண்ணின் வாழ்க்கை காப்பாற்றுபட்டும், மற்றொரு சிறுமிக்கு நீதியும் கிடைத்துள்ளது.

இதனிடையே இது போன்ற சம்பவங்களை தடுத்திட மாணவ மாணவிகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இதேபோன்று பள்ளிகளில் செல்போன் மூலமாக சில வீட்டு பாடங்களை கொடுப்பதையும் ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,

மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய வாழப்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி செல்போன்களை அதிகளவில் பயன்படுத்துவதால் இது போன்ற தேவையில்லாத விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடைபெறுவதால் பெற்றோர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரே வீட்டில் சடலமாக கிடந்த 3 சகோதரிகள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தும்கூரில் பெற்றோருடன் வசித்து வந்த பிந்து, ரஞ்சிதா மற்றும் சந்தனா ஆகிய மூன்று சகோதரிகளும் தங்களுடைய 10 வயதில் பெற்றோர்களை இழந்துள்ளனர் இந்த சகோதரிகளை அவர்களது பாட்டி தான் வளர்த்து வந்துள்ளார்.

இதில் இரண்டு சகோதரிகளுக்கு பாட்டி எப்படியோ திருமணமும் செய்து வைத்து இருக்கின்றார். இந்த நிலையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பாக அவர்களை வளர்த்து வந்த பாட்டி உயிரிழந்துள்ளார். இதனால், சகோதரிகள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

தங்களுக்கென்று இருந்து வந்த கடைசி உறவும் போய்விட்டது என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இனி, நமக்கு யாரும் இல்லை பாட்டி அனாதையாக விட்டுச் சென்று விட்டார் என்று நினைத்த சகோதரிகள் அவர்கள் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வீடு நீண்ட நாட்களாக மூடியே இருந்துள்ளது. மூடி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மூன்று சகோதரிகளும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்கள் இறந்து 9 நாட்களுக்குப் பின் இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்!!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று (21.01.2023) காலை 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.மேழிக்குமரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முகவர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

வவுனியா மாநகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனு தாக்கல்!!

தமிழர் விடுதலைக் கூட்டணி..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாநகரசபையில் போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (20.01.2023) வேட்புமனுவை தாக்கல் செய்தது.

கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி கணேசநாதன் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்திருந்தனர்.

இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து : 7 பேர் பரிதாபமாக பலி!!

விபத்து..

நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20.01.2023) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை,

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்றும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடியால் 931 குழந்தைகள் பாதிப்பு!!

செட்டிகுளம்..

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 931 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவுக்கு பதில் வழங்கிய போதே அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் 931 குழந்தைகளும், 213 கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

17 வயதுச் சிறுவனுடன் காதல்… வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஓசூரில்..

ஓசூர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தி வந்த பெண்ணை உறவினர்கள் மீட்டனர். ஓசூர் அருகே உள்ள பெரிய மேனகரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எல்லப்பா.

இவரால் வாய் பேச முடியாது. இவரது மகன் கார்த்தி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த சிறுவனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி என்பவரது மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்ட அர்ச்சனா கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு, சிறுவனோடு பெங்களூர் சென்றுள்ளார். அங்குள்ள போதனஹள்ளி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

அர்ச்சனாவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அவரது கணவர் ராமகிருஷ்ணரெட்டி கடும் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மனைவி அர்ச்சனாவை பல இடங்களில் தேடியுள்ளார்.

இறுதியில் அவர் பெங்களூரு போதனஹள்ளி பகுதியில் இருப்பதை அறிந்த ராமகிருஷ்ண ரெட்டி உறவினர்களோடு சென்று அங்கு மனைவியை மீட்டுள்ளார். அப்போது அவருடன் இருந்த சிறுவன் கார்த்தியை அவரது உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் இன்று அவனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு முதுகு மற்றும் கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உட்பட்ட சிறுவனும் அந்த பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவனுக்கு 17 வயது என்பதால் அர்ச்சனா மீது போக்சோ வழக்கு பதியப்படலாம்.

வயது வித்தியாசம் பார்க்காமல் வேலைக்கு செல்லும் சில இளைஞர்கள் பள்ளி சிறுமியை காதலித்து போக்சோவில் சிறைக்கு செல்லும் நிலையில், 17 வயது சிறுவனை ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் பெற்ற பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டதுமின்றி, வீட்டைவிட்டு வெளியேறி வீடு எடுத்து வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!!

வேட்புமனு தாக்கல்..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று (20.01.2023) மதியம் 2.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

பல கோடி சொத்துக்களை வேண்டாம் எனக்கூறி துறவியான 9 வயதுச் சிறுமி!!

குஜராத்தில்..

இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் தனேஷ் சங்வி.

இவருக்கு 9 வயதில் தேவன்ஷி சங்வி என்ற மகளும், 4 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தேவன்ஷி குறைந்த வயதிலேயே துறவறத்தில் ஈடுபாடு கொண்டதால், அவரது பெற்றோர் துறவியாக சம்மதம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நூறு பேர் முன்னிலையில் தீட்சை எடுத்துக் கொண்டார். தேவன்ஷி தீட்சை எடுப்பதற்கு ஒருநாள் முன்பு நகரத்தில் ஒட்டகங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் பெரும் ஆரவாரத்துடன் ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சிறுமி தீட்சைக்கு முன்பாக துறவிகளுடன் 600 கிலோ மீற்றர்கள் நடந்து சென்று கடினமான துறவியின் வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதே போல் தேவன்ஷி சிறுவயது முதலே ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பிரார்த்தனை செய்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் தொலைக்காட்சி, திரைப்படம் பார்த்ததில்லை என்றும், திருமணங்களில் கூட கலந்துகொள்ளாத நிலையில், 367 தீட்சை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக சங்விசின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்த காதலனே எமனான சோகம் : இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கடலூரில்..

கடலூரில் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் தெருவில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்து உள்னனர் விக்னேஷ் – கெசியாள்.

விக்னேஷ் படிப்பு முடித்து விட்டு உள்ளூரில் வேலைகளை பார்த்து வந்துள்ளார். கெட்சியாள் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். எதிர் எதிர் வீட்டில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் இவர்கள் காதலில் விழுந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

கெசியாளின் தாயார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் கெசியாள் திருமணத்திற்கு அவரின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இதை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

இதையடுத்து தன் வீட்டின் எதிர்ப்பை மீறி கெசியாள் விக்னேஷை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இந்த திருமணத்திற்கு கெசியாள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால் திருமணம் நடந்த பின் அடிக்கடி கெசியாள் மீது கோபம் அடைந்து சண்டை போட்டு இருக்கிறார் விக்னேஷ். கெசியாள் தொடர்ந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரியில் ஆண் நண்பர்களுடன் பேசுவதை பார்த்து கோபம் அடைந்த விக்னேஷ் கெசியாள் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

கெசியாள் நடத்தை மீது கடுமையாக சந்தேகப்பட்டு உள்ளார். தினமும் கெசியாளிடம் கேள்வி கேட்டு அவரை அடித்து தொல்லை செய்துள்ளார். அதோடு விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளார்.

சந்தேகப்பட்டு வந்து குடித்துவிட்டு அடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதோடு கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கும் விக்னேஷ் அடிமையாகி இருக்கிறார். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் கெசியாள் தனது தங்கையிடம்தான் போய் விஷயத்தை சொல்லி உள்ளார்.

அம்மா வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வந்ததால் அவரிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை. இதையடுத்து சில நாட்கள் கெசியாள் தனது தங்கையின் வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கும் வந்த விக்னேஷ் தங்கையின் கணவன், மாமனாரை அடித்து போட்டுவிட்டு அங்கிருந்து கெசியாளை அழைத்து சென்றுள்ளார்.

இதன்பின் ஒருநாள் நைட்டியோடு இருந்த கெசியாளை ரூட்டில் இழுத்து போட்டு விக்னேஷ் சரமாரியாக அடித்து உள்ளார். ஊரில் இருக்கும் எல்லோரும் பார்க்கும் விதமாக குடித்துவிட்டு வந்து மிக மோசமாக தாக்கி இருக்கிறார். இதில் நைட்டி கிழிந்து சாலையிலேயே அரை நிர்வாணமாக கெசியாள் கிடந்துள்ளார்.

அங்கு இருந்த சிலர் இதை வீடியோவும் எடுத்து உள்ளனர். இந்த வீடியோவை கெசியாள் தனது தங்கைக்கும் அனுப்பி உள்ளார். ஆனால் அப்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கெசியாளுக்கு வரவில்லை.

இந்த நிலையில்தான் காணும் பொங்கல் அன்று இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. காணும் பொங்கல் விழாவிற்கு அழைத்து செல்லவில்லை என்று இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து உள்ளது.

இதில் நடந்த மோதலில் கெசியாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவன் தன்னை மோசமாக தாக்கியதால் சோகத்தில் கெசியாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கெசியாள் உறவினர்களோ.. இதைவிட மோசமான சண்டை நடந்த போதெல்லாம் கெசியாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

அவள் திடமாக இருக்க கூடியவர். அப்படி இருக்கும் போது அவர் இப்போது தற்கொலை செய்து கொண்டு இருக்க வாய்ப்பே இல்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட சம்பவம் என்று கெசியாளின் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த தொடர்பாக விக்னேஷிடம் கெசியாளின் அத்தை கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த விக்னேஷ் குடித்துவிட்டு, கெசியாளின் அத்தை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல்!!

வேட்புமனுத் தாக்கல்..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசு கட்சி இன்று (20.01.2023) மதியம் 2.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக கட்சியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

படித்தது MA .. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை.. அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண்.. நெகிழ வைக்கும் காரணம்!!

டெல்லியில்..

அவ்வப்போது இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய செய்திகள் பெரிய அளவில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில் சில தனிப்பட்ட நபர்கள் தங்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பது குறித்தும், விதவிதமாக விஷயங்களை செய்து பெரிய அளவில் யோசிப்பதை குறித்தும் நிறைய இன்ஸ்பயரிங் ஸ்டோரிகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.

அந்த வகையில் தான் டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் குறித்த நிஜ கதையும் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் ஷர்மிஸ்தா கோஷ்.

இவர் எம்ஏ ஆங்கிலம் படித்துவிட்டு பிரிட்டிஷ் கவுன்சிலில் லைப்ரரியனாக பணிபுரிந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில் சிறந்த ஒரு வேலையை விட்டுவிட்டு தற்போது டீக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கியுள்ளார் ஷர்மிஸ்தா.

டீக்கடையை தொடங்கியுள்ள ஷர்மிஸ்தா, இதுகுறித்து தெரிவிக்கும் காரணம் தான் தற்போது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. முன்னதாக நபர் ஒருவர் அங்கே டீ குடிக்க சென்ற போது சிறிய டீக்கடையில் நடத்தும் பெண் ஒருவர், சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறிந்து அவரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்போதுதான் ஷர்மிஸ்தா கோஷ் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியனாக பணிபுரிந்து வந்ததும் அந்த வேலையை விட்டு விட்டு தற்போது டீக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

வேலையை உதறிவிட்டு டீக்கடை நடத்தி வருவதற்கான காரணம் பற்றி பேசும் ஷர்மிஸ்தா கோஷ், தனது சிறிய கடை மூலம் இந்தியாவின் பல இடங்களில் தனது டீக்கடையின் கிளைகளை ஆரம்பித்து பெரிய தொழிலதிபராக மாற வேண்டும் என்ற கனவை அடைவதற்காக தான் என்றும் கூறியுள்ளார்.

சிறந்த வேலை ஒன்று இருந்த போதும் தனது கனவை அடைய வேண்டும் என்பதற்காக சொந்தமாக டீக்கடையை தொடங்கி பெரிய தொழிலபதிராக ஆசைப்பட்டு செயல்படும் பெண் குறித்த செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நிச்சயம் அந்த பெண் தான் நினைத்தது போலவே இந்தியாவின் பல இடங்களில் தனது டீக்கடையின் கிளைகளைத் திறந்து பெரிய ஆளாக வருவார் என குறிப்பிட்டு தங்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.