இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் அஷ்ரப் நவாஸ் கான் (30) இவர் டெல்லி ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஆவார். இந்த நிலையில் லண்டனில் வேலைக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார் அஷ்ரப்.
ஏனெனில் தந்தையை சமீபத்தில் இழந்த அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்த சூழலில் தான் இந்த பெரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த மகிழ்ச்சியை கொண்டாட நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு 11.15 மணிக்கு அஷ்ரப் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு தனது இருப்பிடத்துக்கு திரும்பினார். அப்போது அஷ்ரப்புடன் அவர் நண்பர் அங்கூர் ஷுக்லாவும் இருந்தார். இருவரும் சாலையை கடந்த போது மிகவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது.
படுகாயமடைந்த அஷ்ரப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அங்கூர் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த அஷ்ரப்பின் உறவினர் கூறுகையில், டெல்லியில் என்ன நடக்கிறது? இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது ஏன்?
இதுபோன்ற விஷயங்களை அரசு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்திருக்க வேண்டும் என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அவிஹண்ட் ஷேராவத் (31) என்பவரை கைது செய்துள்ளனர்.
தனது முதல் விமான பயணத்திற்கு முன்னர் தனது தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார் பெண் விமானி ஒருவர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எத்தனை பெரிய தடைகளையும் எதிர்கொள்ள தயங்குவது இல்லை. தங்களது வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எதையும் தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ள கூடாது என்பதே அவர்களது முதன்மை ஆசையாக இருக்கும்.
அரும்பாடுபட்டு வளர்த்த தங்களது குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்லும்போது அதனை கண்டு பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அப்படியான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேப்டன் க்ருடாட்னியா ஹேல் எனும் பெண் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். விமானி பயிற்சியை முடித்த கேப்டன் க்ருடாட்னியா ஹேல் தனது முதல் பயணத்துக்கு முன்பு தனது தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
விமானியாக ஆன பின்னர் மகிழ்ச்சியுடன் பயணியாக வந்திருக்கும் தனது தந்தையை அணைத்துக்கொள்கிறார் கேப்டன் க்ருடாட்னியா ஹேல். இதனை கண்ட சக பயணிகள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இதுவரையில் 8.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
விமானி கேமராவை பார்த்து கையசைப்பதில் துவங்கும் இந்த வீடியோவில், பின்னர் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் தனது தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் பெறும் காட்சிகள் பார்ப்போரை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறது.
மேலும், அந்த வீடியோவில் ஹேல்,”எப்போதும் என் பெற்றோரின் ஆசீர்வாதமின்றி என் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. பயிற்சி காலத்தில் சில சமயங்களில் நான் அதிகாலை 3-4 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவேன். என் பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர்.
அப்போதும் அவர்களது கால்களைத் தொடாமல் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. அப்படி செய்யாவிட்டால் நாள் முழுமையடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுன இன்று (20.01.2023) காலை 9.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.காதர் மஸ்தான் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை , வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியாவில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளடங்களாக நேற்று( 19.01) மாலை வரை 78 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை அடையும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளடங்களாக 78 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என 5 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் சில உள்ளுராட்சி மன்றங்களில் மட்டும் போட்டியிடுவதற்கும் சில கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் முழுமையாக 78 கட்டுப்பணங்கள் கிடைக்கப்ப பெற்றுள்ளதுடன், ஒரு கட்சி வேட்புமனுத் தாக்கலையும் இதுவரை செய்துள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியா மாநகர சபையில் போட்டியிடுவதற்கே அதிகளவிலான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் இரண்டு மாதத்திற்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்தாவிட்டால் ஒரு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை உத்தியோகத்தர்கள் இன்று (19.01.2023) நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருமன்காடு, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மின்சார நிலுவைகள் காணப்படும் வீடுகளுக்கு சென்ற மின்சார சபை உத்தியோகத்தர்கள் இரண்டு மாதத்திற்கு மேல் தொடர்ந்து மின்சாரப்பட்டியல் நிலுவை செலுத்தாத,
மின் பாவனையாளர்களிடம் மின்சார நிலுவைகளை ஒரு மணித்தியாலய கால அவகாசத்தில் செலுத்திக்கொள்ளுமாறும் அவ்வாறு செலுத்தத்தவறியவர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து மின்பாவனையாளர்கள் தமது மின்சார நிலுவை கட்டணங்களும் செலுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது மாலை மற்றும் இரவு வேளைகளில் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் மின்சாரத்துண்டிப்பு நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிராம்டனில் வசிப்பவர் சிரக் பருச்சா (33). லொட்டரியில் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்து அறிவிப்பு வெளியானால் அதில் தவறாமல் கலந்து கொள்வார். இந்த நிலையில் தான் லொட்டோ மேக்ஸில் சிரக்குக்கு $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.2,75,43,490.96) பரிசு விழுந்துள்ளது.
அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் மற்றும் பணம் குறித்து என் மனைவியிடம் சொன்ன போது, இது உண்மை கிடையாது, நான் நம்ப மாட்டேன் என தொடர்ந்து சொல்லி வந்தார்.
பின்னர் தான் ஒருவழியாக நம்பினார், அதே போல என் தாயாரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார். இந்த பெரிய வெற்றியை தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாவட்ட செயலகங்களுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுப்பணம் செலுத்தாத கட்சிகளுக்கு நாளை 20 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வேட்புமனு தாக்கல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குடிப்பழக்கத்தை கைவிட கூறி கணவனுடன் ஏற்பட்ட தகராறு மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து மனைவியின் வீட்டை கணவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் கேயிச்சியால் (22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அவர்கள் பெண் வீட்டின் அருகிலேயே அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இப்படி இருக்க விக்னேஷ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் குடிபோதையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அவர் தன் மனைவியிடம் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை அதனால் உனக்கு சேர வேண்டிய சொத்தை வாங்கி வா என மனைவியிடம் கூறி தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வழக்கம் போல மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அவரது மனைவி, குடிப்பழக்கத்தை கைவிட கூறி பலமுறை சொல்லியும் கேட்காததாலும் அடிக்கடி குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டிலேயே தூக்கி தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தங்கி இருந்த வீட்டை விக்னேஷ் பெட்ரோல் ஊற்றி வீட்டை எரித்து விட்டு சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக வீடு எரியும்போது உறவினர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாமல் அருகில் இருந்த வீட்டின் தங்கி இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் விக்னேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனால் விருதாச்சலம் காவல் துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையாகவே பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் நட்சித்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை, மப்பேடு பகுதியில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜ், இவர், பொங்கல் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக குடும்பத்துடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள புராதன சின்னங்களை குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர். ஓரைக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அப்போது, அவரது மகள் ஜோஸ்னா (அவருக்கு 8 வயது) திடீரென அறையின் கதவை திறந்து வெளியே சென்று, அங்குள்ள தனியார் நீச்சல் குளம் அருகே ஜாலியாக விளையாடி கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்து, மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சிலர் நீச்சல் குளத்தில் குதித்து சிறுமியை மீட்டனர்.
பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது சிறுமி இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு பல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நபர் அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மாணவியுடன் கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துவிட்டு மாணவியின் கண்ணை கட்டி குதிரைப்பந்தய திடலில் கொலை செய்தேன் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குகையில், சூட்டி நான் மனநோயாளி என எப்போதும் என்னை ஏசுவார். இது என்னை வேதனையில் ஆழ்த்தியது. சில அவசரமான விடயங்கள் கதைக்கவேண்டும் வா என தெரிவித்து அவரை கொழும்பு குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன்.
ஒருமாதகாலமாக நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் அவர் இன்னொருவரை காதலிப்பதை விரும்பாததால் இவ்வாறு செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 முதல் நான் உளநலபாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளேன், 2020லேயே நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன். நான் கிசிச்சைபெறுவதை நான் அவருக்கு தெரிவிக்கவில்லை. நான்கைந்து மாதங்களிற்கு முன்னர் அவருக்கு அது தெரியவந்ததை அடுத்து அவர் என்னுடனான உறவை நிறுத்த விரும்பினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் முற்றாக மாறிவிட்டார் என்னை பைத்தியம் என அழைத்தார் அவர் வேறு ஒரு உறவினால் அவ்வாறு மாறிவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். ஆனால் அவருக்கு அவ்வாறான உறவு இருக்கவில்லை. நான் அவரை சந்தேகித்தேன் அவர் என்னை பைத்தியம் என அழைத்ததால் எனக்கு கடும் வேதனையேற்பட்டது.
பின்னர் வேறு ஒருவரையும் அவர் காதலிப்பதை விரும்பாததால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் வெல்லம்பிட்டி சந்தியில் வைத்து கத்தியை வாங்கினேன். கத்தியை மறைத்து வைத்தவாறு நான் வீட்டிலிருந்து சென்றேன்.
முதலாவது விரிவுரைக்கு பின்னர் விசேடமாக ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதால் நான் சூட்டியை குதிரைபந்தய திடலிற்கு அழைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் மறுத்தார் பின்பு நான் வற்புறுத்தியதால் அவர் இணங்கினார்.
நாங்கள் அங்கு சென்று அங்குள்ள தடாகத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம், அப்போது நான் அவருடன் கடும் கோபத்திலிருந்தேன் உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு குதிரை பந்தய திடல் ஸ்கோர்போர்ட்டிற்கு அருகில் அவரை கொண்டு சென்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது கண்மூடினேன் அவர் என்ன ஆச்சரியம் என கேட்டார். நான் பின்னர் அவரின் கழுத்தை வெட்டினேன், அவர் கதறினார் நான் தனது கழுத்தை மூடியிருந்த ஸ்கார்வை கழற்றிவிட்டு காப்பாற்றுமாறு கதறினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.
நான் அவரை மீண்டும் குத்தினேன். அங்கு சில யுவதிகள் காணப்பட்டார்கள். அவர்கள் அந்த இடத்திற்கு வரக்கூடும் என அஞ்சி நான் அங்கிருந்து தப்பியோடி பின்னர் பேருந்தில் ஏறி வெல்லம்பிட்டிக்கு சென்றேன்.
அங்கு புகையிரத்தின் முன்னால் பாய்வதற்கு திட்டமிட்டேன் ஆனால் புகையிரதம் வரவில்லை பின்னர் வீட்டிற்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு வந்து இரண்டு தடவைகள் களனி ஆற்றில் குதித்தேன்.
தற்கொலை செய்ய நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்த சந்தேக நபர் இதன் பின்னரே நான் கைதுசெய்யப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலை மாணவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விசாரணையில் சந்தேக நபர் வெளியிட்ட தகவ்லகள் மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு சிலை வைத்து, மாலை அணிவித்து திருமண நிகழ்வு நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் தாபியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் தற்கொலை முடிவை எடுத்த காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது. அவர்கள் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில்,
காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு தாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் மனம் வருந்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கணேஷ்-ரஞ்சனாவுக்கு சிலை வைத்த குடும்பத்தினர், அவற்றுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதனை செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக, கணேஷ் தங்கள் தூரத்து உறவினர் தான் என்றும், அவர் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ரஞ்சனாவின் தாத்தா கூறினார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34). என்ஜினீயரான இவர் கார் கம்பெனியில் வாகன வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிந்தூரா ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். தம்பதியின் மகள் ஆதியா (4) பிரதாப்பின் தாய் ராஜாத்தி.
சிந்தூரா பணியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி பெயர்ந்தனர். அங்கு சிந்தூரா அவரது குழந்தை ஆதியா மற்றும் பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் தங்கி இருந்தனர். பிரதாப் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக பிரதாப் ஐதராபாத் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் பிரதாப் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு அறையிலும், சிந்துரா, ஆதியா, ராஜாத்தி ஆகியோர் மற்ற அறைகளிலும் இறந்து கிடந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நான்கு சடலங்களையும் கைப்பற்றினார்கள். முதற்கட்ட விசாரணையில் பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியதால் இருவருக்கும் இடையில் தகராறு இருந்தது தெரிந்தது.
மேலும் பணப்பிரச்சனையிலும் குடும்பத்தார் தவித்து வந்தனர். இதையடுத்து நான்கு பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து பேசிய சிந்துரா தாயார் கூறுகையில், மூவரையும் கொலை செய்துவிட்டு பிரதாப் தற்கொலை செய்திருக்கிறார் என்றார்.
இந்தநிலையில் பிரதாப் தனது மனைவி, மகளை முதலில் கொன்றுவிட்டு, பின்னர் தனது தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்து பிறகு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று, விபத்தில் சிக்கி உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு எடுத்த லைவ் வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் பீதியில் உறைய வைத்திருந்தது.
விபத்து நடக்க போகிறது தெரியாது என்ற சூழலில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்த படி, வெளியே கேமராவில் காட்டும் காட்சிகள் தெரிய, அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில், எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானியாக செயல்பட்ட பெண் குறித்தும் சில உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாள விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் துணை விமானியாக செயல்பட்டவர் அஞ்சு கதீவாடா. இவர் அந்த விமானம் தரையிறங்கி இருந்தால் அவருக்கு தலைமை விமானி என்ற உரிமம் வழங்கப்பட இருந்தது.
இதனால், அஞ்சு துணை விமானியாக செயல்படும் கடைசி பயணமாகவும் இது இருந்துள்ளது. துணை விமானியாக கடைசி விமான பயணத்தை அஞ்சு மேற்கொண்ட போது தான் அந்த விமானம் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
துணை விமானியாக நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் வெற்றிகரமாக அஞ்சு தரை இறங்கியுள்ளார். இன்னொரு பக்கம், அஞ்சுவுக்கு நேர்ந்த துயரம் போலவே அவரது கணவரும் விமான விபத்து ஒன்றில் சிக்கி தான் உயிரிழந்துள்ளார். துணை விமானியாக இருந்த அஞ்சுவின் கணவர், கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது.
அஞ்சுவின் கணவர் இருந்த விமானத்தில் 6 பயணிகள் மற்றும் இரு விமானிகள் உட்பட நான்கு ஊழியர்களும் உயிரிழந்தனர். அந்த விமானமும் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தான் விபத்தில் சிக்கி உள்ளது.
அப்படி இருக்கையில், சுமார் 16 ஆண்டுகள் கழித்து அஞ்சுவும் விமானியாகும் கனவு நிறைவேறும் தருணத்தில் அதே போல விபத்தில் சிக்கி உயிரிழந்த விஷயம், பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.
கனடாவில் சமீபத்தில் திருமணம் ஆன இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள பட்டோ ஹிரா சிங் கிராமத்தை சேர்ந்தவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான அம்ரி அந்த விளையாட்டில் பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் தனது திருமணத்திற்காக அம்ரி கனடாவுக்கு சென்றார். கனடாவில் சரேவில் அவர் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அம்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருமணமான சில வாரத்தில் அவர் மரணமடைந்தது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அம்ரியின் உடல் தகனம் செய்வதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17.01.2023) மாலை இடம்பெற்ற குறித்த முற்றுகை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கற்பகபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக வவுனியா மது ஒழிப்பு பொலிசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ , கசிப்பு உற்பத்தி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியனவும் கைப்பெற்றப்பட்டதுடன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும், மீட்கப்பட்ட உபகரணங்களும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போதெல்லாம் ஒரே தாய் 5 அல்லது 6 பிள்ளைகளை அசால்ட்டாக வளர்த்தாள். ஆனால் இன்றைய பிள்ளைகளை வளர்க்க அம்மா, அம்மம்மா, அவருடைய அக்கா, பெரியம்மா என 4 அல்லது 5 பேர் தேவைப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பெரிய சவால் தான். எப்படி தான் கண்ணும், கருத்துமாக பார்த்தாலும் அசந்த நேரத்தில் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி விடுகின்றனர். சில நேரங்களில் அலட்சியம் ஆபத்திலும் முடிந்து விடுகிறது.
சென்னை விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலணியில் வசித்து வருபவர் அருண்குமார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும், அடுத்ததாக ஒரு வயதில் இளமாறன் என்ற மற்றொரு குழந்தையும் இருந்தது. அருண்குமார், விபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர்.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் விடுமுறை நாள். இதனால் அன்றைய தினம் வீட்டில் அனைவரும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேவகி சமையல் அறையில் இருந்தார். ஒரு வயது இளமாறன் வீட்டின் கழிவறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் விளையாடிக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சமையல் அறையில் இருந்த தேவகி சத்தம் கேட்காததால் இளமாறனை தேடியபோது தண்ணீர் வாளிக்குள் நீரில் மூழ்கியபடி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு பதறி துடித்து உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தை தண்ணீரில் மூழ்கியதால் மூச்சு திணறி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அடுத்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாடிய 2 நாளிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.