ஹோட்டலில் சாப்பிடச் சென்ற இளம் பெண்ணுக்கு காதலன் கண் முன்னே நடந்த விபரீதம்!!

விபத்து..

திருப்பூர், தாராபுரத்தில் ஜோடியாக ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது, காதலன் கண் எதிரிலேயே சாலையைக் கடந்து ஹோட்டலுக்கு வர முயன்ற காதலி, லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மனோஜ்(20) அந்த பகுதியில் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய சகோதரி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.

சகோதரியைப் பார்க்க பனியன் கம்பெனிக்கு மனோஜ் செல்லும் போது, சகோதரியின் தோழி காயத்ரி(19) பழக்கமாகி இருக்கிறார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி காதலன் மனோஜைப் பார்ப்பதற்காக தாராபுரத்திற்கு காயத்ரி சென்றுள்ளார். பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

பைபாஸ் சாலையின் எதிர்புறத்தில் உள்ள ஹோட்டலுக்குச் செல்வதற்காக காயத்ரியை இறக்கி விட்டுவிட்டு ஆச்சியூர் பிரிவு அருகே சென்று வாகனத்தை திருப்பி கொண்டு மனோஜ் ஓட்டல் அருகே வந்துள்ளார்.

இந்நிலையில், எதிர்புறம் நின்றிருந்த காயத்ரியை ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். மனோஜைப் பார்த்த காயத்ரி, சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருப்பதைக் கவனிக்காமல், ஆர்வமாக சாலையை கடந்து சென்றுள்ள நிலையில், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் மனோஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம் திரைப்பட பாணியில் க.ணவரைக் கொ.ன்.று பு.தைத்து கட்டடம் கட்டிய மனைவி!!

டெல்லியில்..

’பாபநாசம்’ பட பாணியில், க.ள்ளக்காதலுக்கு இ.டையூறாக இருப்பதால், தனது கணவருக்கு கு.ளிர்பானத்தில் ம.யக்க ம.ருந்து க.லந்து கொ.டுத்து, கணவரைக் கொ.லை செ.ய்ததுடன், க.ள்ளக்காதலனின் உதவியுடன் அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் பு.தைத்துவிட்டு, மேலே கழிவு நீர்த் தொட்டி கட்டியது டெல்லியை அதிர செய்துள்ளது.

டெல்லி அருகே காஜியாபாத் நகரில் வசித்து வந்த தம்பதியர் நீத்து சதீஷ்பால். இவர்கள் இருவரும் தனியே வசித்து வந்த நிலையில், சதீஷ்பாலில் சகோதரர் சோட்டேலால், கடந்த ஜனவரி 10ம் தேதி, தனது சகோதரர் சதீஷ் பாலை (42) கடந்த ஒரு வார காலமாக கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்திருந்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வி.சாரணையில் இறங்கினார்கள். சதீஷ் பால் கா.ணாமல் போய் ஒரு வாரமாகியும், வேறு பகுதியில் வசிக்கும் சகோதரர் பு.கா.ர் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கணவரைக் கா.ணவில்லை என மனைவி ஏன் புகாரளிக்கவில்லை என்கிற சந்தேகத்துடன் போலீசார் வி.சாரணையில் இறங்கினார்கள். ஆனால் அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இந்நிலையில் நீத்துவையும், கா.ணாமல் போன அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி ஹர்பால் என்பவர் வந்து சந்தித்துச் சென்றது போலீசார் வி.சாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஹர்பாலைப் பிடித்து விசாரித்த போலீசார், உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

சதீஷுக்குப் பழக்கமான ஹர்பால், அடிக்கடி சதீஷ் வீட்டு வந்த நிலையில், நீத்துக்கும் ஹர்பாலுக்கும் இடையே கா.தல் ஏற்பட்டுள்ளது. க.ணவரைக் கொ.ன்.றுவிட்டு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழலாம். தங்களது க.ள்.ளக்காதலுக்கு இ.டையூறு இ.ருக்காது.

நிஜக் கா.தலாக மாற்றிக் கொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்துள்ளனர். சதீஷைக் கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக் கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 2ம் தேதி வீடு தி.ரும்பிய கணவர் சதீஷுக்கு, நீத்து கு.ளிர்பானத்தில் தூ.க்க மா.த்திரையைக் கலந்து கொடுத்தார். அவர் ஆ.ழ்ந்து உ.றங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து சதீஷின் க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.து.ள்ளனர்.

க.ள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்களாக வேலைப் பார்த்து வருபவர்கள். அதனால், நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக் கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உ.டலைப் புதைக்க இருவரும் தீர்மானித்தனர்.

அதன்படி உ.டலை த.ரதரவென்று இ.ழுத்துச் செ.ன்று அ.ங்கு பு.தைத்தனர். பின்னர் அதன் மீது கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டி விட்டனர். க.ள்.ளக்காதலனின் வாக்கு மூலத்தில் இந்த கொ.லை வெ.ளிச்சத்துக்கு வந்த நிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உ.டைத்தனர்.

பு.தைக்கப்பட்டிருந்த சதீஷின் உ.டல் பா.கங்களை தோ.ண்டியெடுத்து பி.ரேத ப.ரிசோதனைக்கு அ.னுப்பி வை.த்தனர். க.ள்.ளக்காதலனுடன் நீத்துவையும் கை.து செ.ய்த போ.லீசார், த.லை.ம.றைவாகியுள்ள நண்பர் கவுரவை தே.டி வ.ருகின்றனர்.

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி : மருத்துவர் கூறும் முக்கிய தகவல்கள்!!

கொழும்பில்..

திடீர் கோபம் மற்றும் தூண்டுதலால் ஏற்படும் குற்றங்களை தடுக்க சுயகட்டுப்பாடும் சமூக செல்வாக்கும் உருவாக்கப்பட வேண்டும் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறியுள்ளார்.

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தின் பின்னர், அவ்வாறான சம்பவங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூகத்திற்கு தெரிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் முடி அளவு வித்தியாசம் இருப்பதாக ஒரு சமூக நம்பிக்கை உள்ளது, ஆனால் அது ஒரு கட்டுக்கதை. நீங்கள் உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் அன்புக்குரியவருக்கு நீங்கள் குற்றம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அந்த காதல் நேர்மையான நோக்கத்துடன் செய்யப்படுகிறது.

உண்மையாக நேசிப்பவர்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய ஆசைப்படுவதில்லை. ஆனால் சமூகத்தில் அவ்வப்போது இது போன்ற அசம்பாவித சம்பவங்களை நாம் கேள்விப்பட்டு பார்க்கிறோம்.

அது ஏன் நடக்கிறது? இதற்கு முக்கிய காரணம் அந்த நபர்களின் ஆளுமை காரணிகள். காதல் உறவு முறிந்தால், காதலன் காதலி மீது கோபம், தூண்டுதல், வெறுப்பு அல்லது காதலிக்கு காதலன் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அது சாதாரணம்.

ஆனால் அந்த உந்துதலைக் கட்டுப்படுத்தும் வலிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். அங்குதான் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய மக்கள் தூண்டப்படுகிறார்கள்.

அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படும்போது, ​​​​அவள் அல்லது அவன் தங்களுக்கு எதிராக திரும்பியதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த நேரத்தில் காதல் மறந்துவிடும்.

அந்த நேரத்தில் இந்த தூண்டுதலைக் கட்டுப்படுத்த முடிந்தால், இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். இப்படி இழந்த இடத்தில் தான் நாடு, தேசம், மதம் போன்றவற்றுக்கு மதிப்புள்ள உயிர்களை இழக்கிறோம்.

எனவே திடீர் கோபம் மற்றும் தூண்டுதலால் ஏற்படும் இத்தகைய குற்றங்களை தடுக்க சுயகட்டுப்பாடும் சமூக செல்வாக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே, அத்தகைய நிகழ்வில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வேறொருவருக்கு பிரச்சினை ஏற்படும் போது பேசுவது. இது சம்பந்தமாக, சுகாதார ஆலோசனைகளைப் பெற்று, யாரிடமாவது அச்சுறுத்தல் இருந்தால்,

இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்து அவர்கள் மூலம் பாதுகாப்பைப் பெறுவதன் மூலமும், அறிவு மற்றும் புத்திசாலித்தனமான பெரியவர்களின் உதவியைப் பெறுவதன் மூலமும் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால் வெட்கம் மற்றும் பயம் காரணமாக, சிலர் இத்தகைய செயல்களை செய்ய தூண்டுவதில்லை. அதை உங்கள் இதயத்தில் இறுக்கமாக வைத்திருப்பீர்கள். அதற்கு காலம் தீர்வு காணும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் காலத்தால் தீர்க்கப்படுவதில்லை. எனவே, இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க இரு தரப்பினரும் அதிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் பொறுப்புடன் கூறுகிறேன்” என்றார்.

திருமண வரவேற்பில் பரிதாபமாக உயிரிழந்த மணப்பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளா..

கேரளா மாநிலம் மலப்புரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது 19 வயது மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பதாயிக்கர பகுதியை சேர்ந்த முஸ்தபா, சீனத் என்ற தம்பதியரின் மகள் 19 வயதான பாத்திமா பதூல். இவருக்கும் மூர்க்க நாடு என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புத்தம் புது ஆடையுடன் புதிய வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்துடன் குடும்பத்தாருடன் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார் மணப்பெண் பாத்திமா. அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதை அடுத்து பயந்து போன வீட்டார் உடனடியாக மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகள் நடைபெற்று கொண்டிருந்த போது அவர் மயக்கத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில் சத்தம் இல்லாத நெஞ்சு வலியால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளம் பெண்ணின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெஞ்சுவலிதான் காரணம் என உறுதியாக சொல்ல முடியாது எனவும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போரென்ஸிக் ரிப்போர்ட் வந்ததற்கு பின்தான் மரணத்தின் காரணம் என்ன என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் உயர் மின் அழுத்த கேபிள் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. சென்னை சானிடோரியம் உள்ள ஏற்றுமதி வளாகத்தில் வடமாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த இளம்பெண்கள் பலர் விடுதியில் தங்கியபடி வேலை செய்கின்றனர்.

இந்த விடுதி அமைந்திருக்கிற இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள் செல்கிறது. விடுதியில் கும்கும் குமார் (19) என்ற பெண் தங்கியிருந்தார்.

நேற்று காலை அவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் தனது பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர், உயர் அழுத்த மின்சார கேபிள் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு காயப்போட்டிருந்த துணி கீழே விழுந்திருக்கிறது. அதை ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டு எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது, உயர் அழுத்த மின்சார கேபிளிலிருந்து கும்கும் குமாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அப்போது அந்தக் கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஊர்மிளா குமாரி, பூனம் என்ற இரண்டு பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது.

பலத்த காயம் ஏற்பட்ட கும்கும் குமாரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி..

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் பொலிஸாரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று காதலனால் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகும். இவர்கள் தற்போது கிரிவத்துடுவ சந்தியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட சத்துரி ஹன்சிகா குடும்பத்தின் மூத்த மகள் எனவும் அவருக்கு இன்னொரு மகள் இருப்பதாகவும் அவர் இன்னும் பாடசாலை செல்லும் மாணவி எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சதுரி ஹன்சிகா உயர்தரத்தில் உயர் சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இந்த மாணவி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்துகிறார் எனவும் அது ஒரு கல்விச் சேனல் எனவும் அவரது பல்கலைக்கழக நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவரது கழுத்தை அறுத்து கொன்ற காதலனும் அவருடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டியவில் வசிக்கும் அவரது பெயர் பசிந்து சதுரங்க என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, கிரிபத்கொட போன்ற பகுதிகளில் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியதன் மூலம் இந்த மாணவன் பிரபலமடைந்தவராகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன், “எனக்கு அவர் வேண்டும். அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடன் நேசித்தேன். அவர் வேறொருவரிடம் செல்ல முயன்றார்” என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலியான இந்த மாணவி வேறு இளைஞர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வார் என்று பயந்ததாகவும் அதன் காரணமாக அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்ற மாணவர்களுடனும் ஆண்களுடனும் பேசுவதற்கும் இந்த இளைஞன் அவருக்கு தடை விதித்திருந்தார். “நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதனால் எனக்கு வேறும் எதுவும் செய்வதற்கு எனக்கு வேறு வழி எதுவும் இல்லை” என அந்த மாணவன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் கழுத்தை அறுத்த கத்தியை கடையொன்றில் இருந்து கொள்வனவு செய்து, முன்கூட்டியே கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“கத்தியை பையில் வைத்துக்கொண்டு நேற்று மதியம் 12.30 மணியளவில் அவருடன் ரேஸ்கோர்ஸ் வந்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இனி என்னும் பேசவும் பழகவும் முடியாது எனவும் காதலி குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபமடைந்து கொலை செய்துவிட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குதிரைப் பந்தய மைதானத்தின் புள்ளியிடும் பட்டியலுக்கு அருகாமையில் படிக்கட்டில் அமர்ந்திருந்த வேளையில் மதியம் 1.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதலியைக் கொன்றுவிட்டு, இந்த மாணவன் இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் இரத்தக் கறை படிந்த பையை கையில் ஏந்தியவாறு ரேஸ்கோர்ஸில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகம் நோக்கி ஓடியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பல பாதுகாப்பு கமராக்களில் சந்தேகத்திற்குரிய மாணவர் பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடுவது பதிவாகியுள்ளது. பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவன் பின்னர் வெல்லம்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கையடக்கத் தொலைபேசி மற்றும் அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் களனி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் அவர் வீடு திரும்பியதும், பொலிஸ் குழுவொன்று பாதுகாப்பு கமரா காட்சிகளில் இருந்து இந்த மாணவனின் அடையாளத்தை அடையாளம் கண்டு, வெல்லம்பிட்டிய வீட்டிற்கு வந்தது.

பொலிஸ் குழு வெல்லம்பிட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தபோது சந்தேகத்திற்குரிய மாணவன் வீட்டிலேயே இருந்துள்ளார். அத்துடன் வீட்டில் மாணவியை கொல்ல பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது, அதற்கமைய, சத்துரி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த பின்னர், பசிது மதுசங்க என்ற இளைஞனுடன் நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு காதல் உறவாக வளர அதிக நேரம் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு காதலர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், மாணவன் மன அழுத்தத்தால் அவதிப்பட்டமை இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நண்பர்களுக்கும் இந்த விடயங்கள் இரகசியமாக இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இப்படி சச்சரவுகளுக்கு மத்தியில் பேணப்பட்டு வந்த காதல் கொலையில் முடிவதற்கு சத்துரியின் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பதிவுகளே காரணம் என பல்கலைக்கழக தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

காதலனுக்கு பிடிக்காத நண்பர்களுடன் பழகுவதும், அவர்களுடன் பேசுவதும் அவரது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலியிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியும், வேறு உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியும், அவருக்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளார்.

காதலி வேறொரு இளைஞனுடன் தொடர்பு வைத்து தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற பயம் அவருக்கு தீவிரமடைந்து, அது கொலை வரை சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திருமணம் முடித்து 3 மாதங்கள்… தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திருமணம் முடித்து 3 மாதங்களேயான நிலையில், இளம் பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்களே சடலத்தை முதலில் பார்த்துள்ளனர். இந்த நிலையில், பெண்ணின் கணவன் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் பெயர் Anggy Diaz எனவும் 21 வயதான அவரை தலையை துண்டித்து கணவன் கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மதியத்திற்கு மேல் 4.18 மணிக்கு பொலிசருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவரை மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் Anggy Diaz எனவும் திருமணம் முடித்து மூன்று மாதங்களே ஆனது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், பெண்ணின் கணவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காதலியுடன் நேரத்தை செலவிட நாடகமாடிய காதலன்… இறுதியில் நடந்த பரிதாபம்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடி காதலியுடன் நேரத்தை செலவிட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர். காதலுக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள்.

காதலர்கள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட எந்த எல்லைக்கும் செல்லும் நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். வகுப்பை கட் அடிப்பது முதல் பெற்றோரிடம் பொய் சொல்வது வரை, பெரும்பாலோர் அனைத்தையும் செய்வார்கள்.

ஆனால் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர், இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்றுள்ளார் என்று சொல்லலாம். அவர் தனது துணைக்கு பதிலாக தனது காதலியுடன் நேரத்தை செலவிட தனது சொந்த கடத்தலை போலியாக உருவாக்க யோசனை செய்தார்.

இதனால் அவர் மட்டும் நேரத்தை செல்வியோடவில்லை, காவல் துறையும் அதிக நேரத்தை வீணாக செலவழிக்கச் செய்துள்ளார். பால் ஐரா எனும் 35 வயது நபர், கடந்த வியாழன் அன்று ஒரு தவறான குற்றச்சாட்டு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இவரது கடத்தல் நடனத்தால் விசாரணை செயத்தற்காக அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் 25,000 அவுஸ்திரேலிய டொலர் பணமும், சுமார் 100-200 மணிநேர நேரமும் வீணானது.

ஐரா புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது, அவர் தனது கூட்டாளரிடம் டாப்டோவில் ஒரு நித்தியாளரை சந்திக்கப் போவதாக கூறினார்.

பின்னர் ஒரு பாலியல் தொழிலாளியிடமிருந்து அவரது கூட்டாளிக்கு நள்ளிரவு குறுஞ்செய்தி வந்தது. கடத்தல்காரர்கள் ஐராவை கடத்திவைத்துள்ளதாகவும் அவரை விடுவிக்க அவரது பைக்கை தருமாறும், அப்படி கொத்தால் காலையில் ஐரா விடுவிக்கப்படுவார் என்று அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐராவின் கூட்டாளி, அவர் கடத்தப்பட்டதாகவும், அவரது 7,000 டொலர் மதிப்புள்ள டர்ட் பைக்கிற்காக அவர் பணயம் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாலியல் தொழிலாளியிடமிருந்து குறுஞ்செய்தியைப் பெற்ற பின்னர் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.

பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கி, பல மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சாட்சிகளை ஆய்வு செய்தனர். இருப்பினும், விசாரணையின் போது, குறுஞ்செய்திகளை அனுப்பிய நேரங்களுக்கிடையில் ​​ஐரா தனது காதலியின் வீட்டிற்குள் பையுடன் நுழைவதை சிசிடிவி கட்சிகளில் தெரிந்தது.

இதையடுத்து, ஐரா தனது சொந்த கடத்தல் கதையை இட்டுக்கட்டியதாக காவல்துறை உறுதிப்படுத்தியது. கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அடுத்த நாள், ஐரா தனது தந்தையை அழைத்து, அவரைக் கடத்தியவர்களால் காரில் விட்டுச் செல்வதாகக் கூறியது நீதிமன்றத்தில் தெரியவந்தது.

மேலதிக விசாரணையில், ஐரா கடத்தப்பட்டதாகக் கூறும் வொல்லொங்கொங்கிலிருந்து அல்ல, டாப்டோவிலிருந்து அழைப்புகள் வந்தன என்பது தெரியவந்தது.

அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ​​பால் ஐராவின் தாய், சகோதரி மற்றும் பங்குதாரர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த வழக்கு “மிகவும் வினோதமானது” என்று மாஜிஸ்திரேட்டால் விவரிக்கப்பட்டது மற்றும் ஐராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த மாத இறுதியில் அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்… கனடா எல்லையில் உ.யி.ரி.ழ.ந்.த கு.டும்பத்தின் உறவினர்கள் க.ண்ணீர்!!

கனடாவில்..

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நு.ழையும் மு.யற்சியில், கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று ப.னியில் உ.றைந்து உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்பவம் மூன்று நாடுகளிலும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியது.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish Baldevbhai Patel, 39), அவரது மனைவி வைஷாலி (Vaishaliben Jagdishkumar Patel, 37) பிள்ளைகள் விஹாங்கி (Vihangi Jagdishkumar Patel, 13) மற்றும் தார்மிக் (Dharmik Jagdishkumar Patel, 3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நு.ழையும் மு.ய.ற்.சி.யி.ன்.போ.து, கனடா அமெரிக்க எ.ல்லையில் ப.னி.யி.ல் உ.றை.ந்.து ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கி.ன.ர்.

இந்நிலையில், ஜகதீஷின் தந்தையான பல்தேவ் பட்டேல் தனது மகனுடன் தான் கடைசியாக என்ன பேசினேன் என்பதுகூட தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். நி.னைவுகள் ம.றைகின்றன, ஆனால், வே.த.னை ம.றையவில்லை என்கிறார் அவர்.

பல வேலைகளைச் செய்த ஜகதீஷ், அவை எதிலும் சரியான பலன் கிடைக்காததால் அமெரிக்க செல்ல முடிவு செய்தார் என்கிறார் அவருடைய தந்தையான பல்தேவ்.

பிள்ளைகளின் கடைசி தருணத்தில் என்ன ந.டந்தது என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை என ஜகதீஷின் குடும்பம் வ.ரு.ந்து.ம் நி.லையில், தன் மகன் அமெரிக்கா செல்வான், தங்களுக்கு உதவி செய்வான் என தாங்கள் நம்பியிருந்ததாகவும்,

ஆனால், இப்போது வே.த.னை ம.ட்டுமே மீதமிருப்பதாகவும் கூறுகிறார் பல்தேவ். பி.ழை.ப்புக்காக மீண்டும் விவசாயம் பக்கம் ஜகதீஷின் உறவினர்கள் தி.ரும்பியிருப்பதாக தெரிவிக்கிறார் பட்டேலின் குடும்ப நண்பரான Jayesh Chaudhary.

கொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி : பல்கலைக்கழக மாணவன் கைது!!

கொழும்பில்..

கொழும்பில் பல்கலைக்கழக மாணவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் இருந்து 24 வயது யுவதியொருவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 3ஆம் ஆண்டில் பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய மகன்… பேரணியில் கலந்து கொண்ட தாய் செய்த செயல்!!

டெல்லியில்..

டெல்லியை சேர்ந்தவர் யாஷ். 24 வயதாகும் இவருக்கு தன்பாலின ஈர்ப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி யாஷ் உணர்ந்த நிலையில், பெற்றோரிடம் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உறவினர் ஒருவர் மூலம் யாஷின் பெற்றோருக்கு இந்த விவரம் தெரிய வர, ஒரு நிமிடம் மகனை நினைத்து அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில், மகனின் விருப்பத்தை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிராகவும் ஆரம்பத்தில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

யாஷின் தாயாரான மீனாட்சி மகனின் நிலையை நினைத்து அடிக்கடி கண்ணீர் வடிக்கவும் செய்துள்ளார். மேலும் தான் செய்த பாவத்தினால் தான் மகன் இப்படி மாறியதாகவும் கருதி வருந்தி வந்துள்ளார். அப்படி ஒரு சூழலில் மெல்ல மெல்ல மகன் யாஷ் குறித்தும் அறிய முற்பட்டுள்ளனர் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர்.

இதனைத் தொடர்ந்து, தனது உணர்வு குறித்து திரைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் அவரது பெற்றோருக்கு யாஷ் உணர வைத்ததாகவும் அவர்களும் மெல்ல மெல்ல மகனின் நிலையை அறிந்து கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் வைத்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி நடைபெற்றிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்திருந்த நிலையில், யாஷும் அதில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது தாயார் மீனாட்சியும் கலந்து கொண்டிருந்தார்.

இது அங்கே கலந்து கொண்டிருந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதுவும் தனது மகனுக்கு ஆதரவான வாசங்களையும் மீனாட்சி கொண்டு வந்து பேரணியில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

இது பற்றி பேசும் மீனாட்சி, அவர்களின் வேதனையை உணர முடிவதாகவும், வெளியே சிரித்துக் கொண்டே இருந்தாலும் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் அவர்கள் உள்ளே வருந்தி கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார்.

அதே போல, பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை வரும் என்றும் குறிப்பிட்ட யாஷின் தாயார் மீனாட்சி, தங்களின் பிள்ளைகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் : திரும்பிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!!

கனடாவில்..

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்னும் இளைஞர் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழக்க,

வேலி ஒன்றை இடித்துத்தள்ளிவிட்டு மரம் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளது அவரது கார். இந்த பயங்கர சம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்தான் Tarenஇன் தாய் Sarabjeet Nanara-Lal அவரிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

மகனிடம் பேசியபின், அவர் குளிக்கச் சென்றுவிட்டிருக்கிறார். அவர் குளித்துவிட்டுத் திரும்பிவந்தபோது விபத்து குறித்த தகவல் கிடைக்க, சற்று முன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த தன் மகன் உயிருடன் இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

தன் மகன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மழை பெய்துகொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ள Tarenஇன் தாய், அது தவிர்த்து விபத்துக்கு வேறு காரணங்கள் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தொலைபேசியால் பறிபோன இளம் பெண்ணின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாலினி இவர் டிகிரி முடித்து விட்டு ஆவடி அருகே ப்யூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து விம்கோநகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து தனது செல்போன் மூலம் யாரிடமோ பேசி கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வந்த விரைவு ரயில் ஷாலினி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரயில் தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ஷாலினி வீட்டிற்கு வராத காரணத்தால்,

ஷாலினியின் குடும்பத்தினர் விம்கோ ரயில் நிலையம் அருகே தேடி பார்த்த போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஷாலினியை கொண்டு சென்ற நிலையில், ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை தினத்தில் இளம்பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்..

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17.01.2023) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு,

மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.

குப்பை சேகரிக்கும் தந்தை, துப்புரவாளர் தாய்… உலக அளவில் கவனத்தை ஈர்த்த பிரபஞ்ச அழகி!!

தாய்லாந்தில்..

பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றுள்ள தாய்லாந்து மொடலின் உடை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 71வது பிரபஞ்ச அழகிப் போட்டி வரும் 14ஆம் திகதி நியூ ஆர்லியன்ஸில் நடக்கிறது.

இதில் பல நாடுகளைச் சேர்ந்த மொடல்கள் கலந்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை போட்டியாளர்கள் பல சுற்றுகளில் அணிந்து வருவார்கள்.

அந்த வகையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது மொடலான அன்னா சுயங்கம், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதற்கும் மேலாக அவர் கூறிய காரணம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அன்னா தனது பெற்றோர் குறித்து கூறும்போது குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், துப்புரவாளரான தாய்க்கும் பிறந்தவள் நான் என்றார்.

மேலும், குப்பை அழகு ராணி என்று தான் அழைக்கப்பட்டாலும் அது நான் ஒரு விலைமதிப்பற்ற ரத்தினமாக பிரகாசிப்பதை ஒருபோதும் தடுக்கவில்லை என கூறினார். கடந்த ஆண்டு தாய்லாந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை அன்னா வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணவத்தில் நண்பர்களை ஒதுக்கி அவமானப்படுத்திய வடிவேலு : சீண்டிய சிங்கமுத்து!!

வடிவேலு..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. சில வருடங்களுக்கு முன் அவர் செய்த சில தவறால் சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

அதனை 4 வருடங்களுக்கு பின் உடைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தின் தோல்விக்கு காரணம் வடிவேலுவுடன் சேர்ந்த இந்த கால காமெடி நடிகர்கள் தான் என்று பலர் விமர்சித்தனர். வடிவேலுவின் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அவருடன் பல காமெடி நடிகர்கள் நடித்து வந்தனர்.

சிங்கமுத்து, முத்துக்காளை உள்ளிட்ட பல நடிகர்கள் வடிவேலு காம்போவில் நடித்து வடிவேலுவுக்காகவே நடித்து கொடுத்தனர். தற்போது அவர்களை ஒதுக்கி அவமானப்படுத்திவிட்டு,

தற்போது சின்ன நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தது தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் தோல்விக்கு காரணம் என்று முத்துக்காளை உண்மையை உடைத்துள்ளார். நாங்கள் எல்லோரும் வடிவேலுவுக்கா நடித்தோம்.

ஆனால் இப்போது அவருடன் நடிக்கும் நடிகர்கள் தாம் வளரவேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வடிவேலுவாக இருந்தாலும் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் இருக்கின்றனர் என்று முத்துக்காளை கூறியுள்ளார்.