ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வாசவானிபலேனியை சேர்ந்த ஜோதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஜோதி தனது காதலன் நுகராஜுடன் சேர்ந்து கண.வனை கொ.ல்.ல தி.ட்.ட.மிட்டுள்ளார்.
க.ணவருக்கு தூ.க்க .மாத்திரை கொ.டுத்துவிட்டு, தூங்கச் சென்ற அவரை கா.தலனுடன் சே.ர்ந்து ச.ர.மா.ரி.யா.க க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.ள்.ளா.ர். பி.ன்னர், ச.டலத்தை எ.ரித்து சா.ம்பலை க.டலில் க.லந்துள்ளனர்.
க.ணவரை கா.ணவில்லை என அவரே போ.லீசில் சென்று பு.கா.ர் செ.ய்துள்ளார். இதுகுறித்து போ.லீஸ் ந.டத்திய வி.சாரணையில் உ.ண்மைகள் வெ.ளிச்சத்துக்கு வ.ந்தன.
பொதுவாகவே காதலர்களிடையே சில சில சண்டைகள் வந்து பிரிந்து செல்வதுண்டு. ஆனால் சோறுக்காக பிரிந்த காதல் கதை ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.
சீனாவில் சிச்சுவான் பகுதியைச் சேர்ந்த காதலன் வீட்டிற்கு முதன்முறையாக சென்றிருக்கிறார். அங்கு அவர் இரண்டு நாட்கள் காதலன் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அங்கே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, காதலன் வீட்டிற்கு அந்த இளம் பெண் சென்ற நிலையில், அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அங்கே நூடூல்ஸ், ஃபிரைட் முட்டைகள் என வழக்கமான உணவு வகைகள் இருந்துள்ளது.
காதலன் வீட்டில் ஸ்பெஷலாக உணவு வகைகளை எதிர்பார்த்திருந்த காதலி, வழக்கமான உணவுகள் இருப்பதை கண்டதால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும், அவர் அந்த வீட்டில் தங்கி இருந்த இரண்டு நாட்களும் இது போன்ற உணவுகளை தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் காதலன் வீட்டில் வழங்கிய உணவு குறித்து அவரிடமே மன வருத்தத்துடன் காதலி கூறியுள்ளார். மேலும், இறுதியில் இந்த வீட்டில் திருமணத்திற்கு பிறகு உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறிக் காதலை அவர் பிரேக் அப் செய்ததாக கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.
எத்தனையோ காரணங்களுக்காக பல காதல்களில் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், காதலன் வீட்டில் உணவு பிடிக்கவில்லை எனக்கூறி காதலை வேண்டாம் என முடிவெடுத்த இந்த பெண் குறித்த செய்தி தற்போது படும் வைரலாகி வருகிறது.
பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவனொருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இவ்வாறு உயிரிழந்த மாணவன் நாவலப்பிட்டி உடஹின்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் என்பதுடன் இவர் நாவலப்பிட்டி அனுருத்தகுமார தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் நேற்று (15) காலை நாவலப்பிட்டி நகரில் நடக்கும் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தனது வீட்டுக்கு அருகில் இறங்க முயற்சித்த போது கீழே விழுந்து அருகில் இருந்த மண்மேட்டில் மோதுண்டு பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு ஏழு மணியளவில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே மாணவன் பஸ்ஸிலிருந்து இறங்க முயற்சித்த போதே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த பிரசாத் (32) என்பவருக்கும் அனிஷா (25) என்ற பெண்ணிற்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
பின்னர் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, குவைத்துக்கு சென்றார். திருமணத்தின் போது 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார்.
மீதி 30 சவரன் நகையை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். திருமணம் ஆகியும் சில மாதங்கள் ஆகியும், கில்பர்ட் சொன்னபடி 30 சவரன் நகையை போடவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே, அனிஷாவின் பெற்றோர் தங்களது மகளை வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரசாத்தின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பிரசாத் சமீபத்தில் ஊருக்கு வந்தார்.
நேற்று முன் தினம் கில்பர்ட் குடும்பத்தாருக்கு வந்த போனில், உங்களது மகள் தூக்குப்போட்டு கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இதனால் பதறியடித்து அனிஷா குடும்பத்தார் மருத்துவமனை சென்ற நிலையில் உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறினர். இதையடுத்து குடும்பத்தாரும், உறவினர்களும் அனிஷாவை பிரசாத் குடும்பத்தார் கொலை செய்துவிட்டனர் எனவும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம், உதவி ஆட்சியர் கவுரவ்குமார் மற்றும் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, திருமணமான நாள் முதல், சஞ்சீவன் மற்றும் ரம்யா ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யாவை காணவில்லை என அவரது கணவர் சஞ்சீவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளும் தாய் இல்லாமல் கதறி துடித்த நிலையில், மறுபக்கம் ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சஞ்சீவன் மீதும் சந்தேகம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில் தகுந்த ஆதாரங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போனதால் சஞ்சீவனை பெரிய அளவில் அப்போது விசாரிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் மாதம், கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் மாநிலம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து இதுகுறித்து தீவிர விசாரணையிலும் இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தான் ரம்யா வழக்கையும் போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கிய நிலையில், இது தொடர்பாக கணவர் சஞ்சீவனிடம் நடந்த விசாரணையின் போது அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மனைவி ரம்யாவை கொலை செய்ததையும் சஞ்சீவன் ஒப்புக் கொண்டுள்ளார்.
விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, மனைவி ரம்யா மீது சஞ்சீவனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும், பல்வேறு நிபந்தனை விதித்து அவரை தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
அப்படி இருக்கையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யா மீது சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் சஞ்சீவன். இதில் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை தாக்க அதில் சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
இதனைத் தொடர்ந்துதான், மனைவி ரம்யாவின் உடலை வீட்டு வாசலிலேயே புதைத்து விட்டு மனைவியை காணவில்லை என்றும் போலீசார்ரிடம் புகார் கொடுத்து சஞ்சீவன் நாடகமாடியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்கடுத்து ரம்யாவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் தோண்டிய போலீசார், அவரது உடலின் எலும்புக்கூடுகளை மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி அரங்கன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பாவனை தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மதுபான பாவனையை விட இன்று மிகவும் மோசமாக வேறு விதமான போதைப் பொருள் பாவனை சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடத்தில் அதிகரித்துச் செல்கின்றது.
வலி நிவாரணி மாத்திரைகள் கூட அதிக விலைக்கு பெற்று போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா நகரப் பகுதியில் கடந்த காலங்களில் அவ்வாறான மாத்திரைகள் மீட்கப்பட்டன.
வவுனியாவின் நெளுக்குளம், கூமாங்குளம், செக்கட்டிப்புலவு உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலும் போதை மாத்திரைகளுடன் சில இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.
ஆனால் பெற்றோர் தமது பிள்ளைகளின் நடத்தைகள், அவர்களின் நண்பர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அளவுக்கு அதிகமாக பிள்ளைகளிடம் பணம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
வீட்டில் சமைத்த உணவுகளை பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுங்கள். போதைப் பொருள் பாவனையை சுகாதாரத் துறையினரும், பொலிசாரும் இணைந்து மட்டும் கட்டுப்படுத்த முடியாது.
பெற்றோருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். எனவே பெற்றோர் மட்டுமன்றி சமூகமட்ட அமைப்புக்கள், பாடசாலைகள் என அனைவரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தேரி கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், சாலபோகம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். ரஜினிகாந்தின் மனைவி லதா. தற்போது புத்தேரியில் வசித்து வரும் ரஜினிகாந்த் -லதா தம்பதிக்கு 3 மகள்கள். முதல் மகள் பூஜா தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
மூன்றாவது மகள் பிரிதிஷா ஆறாம் வகுப்பு தனியார் பள்ளியிலும் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா பிளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று வருவதாகவும், ஆங்கில வகுப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் கண்டித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த தனிஷியா மாலை வீட்டுக்கு வந்தபோது, வகுப்பறையில் நடந்த விவரங்களை கூறாமல் படுக்கை அறையில் சோகமாக இருந்துள்ளார். பின்னர், மாலை ஆறரை மணி அளவில் வீட்டின் படுக்கையறை கதவு உள்ளே மூடப்பட்டு இருந்ததால்,
அவரின் பெற்றோர்கள் அருகில் இருந்த உறவினர்களை கூப்பிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி தனிஷியா மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு தனிஷியா ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் ஆய்வாளர் டேசில்பிரேம் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்துள்ளார்.
பள்ளி மாணவி மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்ததில் அவர் வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது.
ஆங்கிலம் பேச, எழுத சரியாக வராததால் வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையில் ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும், ஆரம்பத்தில் இருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது எனவும்,
இதனால் ஐ நோ ஹேப்பி எனவும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலம் சரிவர எழுத படிக்க வரவில்லை என கடிதம் எழுதி மாணவி ஒருவர் தூக்கிட்டு இறந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். இவரது மகள் அனிஷா. பட்டதாரரியான அனுஷாவிற்கும், தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த குவைத்தில் வேலை செய்யும் பிரசாத் என்பவருக்கும், கடந்த 2022 ஜனவரி மாதம் 20ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்காக பிரசாத் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 100 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டுள்ளனர். இதில் கில்பர்ட் தனது மகளுக்கு 70 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 30 பவுன் நகையை சில மாதங்களில் போடுவதாக கூறியுள்ளார்.
இதை அடுத்து, நகையை முறையாக போடாததால் அனிஷாவை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கொடுமை செய்துள்ளனர். மேலும், அனிஷாவை கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டிற்கு அனுப்பாமலும் இருந்துள்ளனர்.
செல்போனில் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போனை லாக் செய்துள்ளனர். அனிஷாவிற்கு பிரசாத்தின் குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் அனிஷாவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
குவைத்தில் வேலை பார்க்கும் பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி வந்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் மீண்டும் நகை பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அணிஷாவின் தந்தை கில்பர்ட்டிருக்கு பிரசாத் போன் மூலம் உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். இதைஅடுத்து மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கே உங்களது மகள் இறந்து விட்டாள் என பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மகளை இழந்த கில்பர்ட் தனது மகளை வரதட்சணை கொடுமை காரணமாக, பிரசாத் மற்றும் அவரது தந்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைஅடுத்து, தென்பாகம் காவல்துறையினர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளதால் தூத்துக்குடி ஆர்டிஓ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் கீழ்பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கி உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கு ரஞ்சிதம் (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இனியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.
அவர்களது மகன் இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் இனியனின் தாய் ரஞ்சிதம் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரஞ்சிதம் அவரது குழந்தை இனியனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் அன்றைய தினம் வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
அவரை அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் ரஞ்சிதம் மற்றும் குழந்தை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக ஈஸ்வரமூர்த்தி குன்னத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவி மற்றும் குழந்தை குறித்து காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தையையும் மனைவியையும் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த குருமந்தூர் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ரஞ்சிதத்தின் துணிகள் மற்றும் செருப்பு கிடந்துள்ளது. அதனைக் கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கீழ்பவானி வாய்க்காலில் ரஞ்சிதம் மற்றும் இனிய உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குழந்தை இனியனின் உடல் மிதந்து வந்துள்ளது.
அது பற்றிய தகவல் வெள்ளோடு காவல்துறையினருக்கு கிடைக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இனியனின் உடலை நீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது ஒரு புறம் இருக்க கோபிசெட்டிபாளையம் அடுத்த சின்னகுளம் கீழ்ப்பவானி வாய்க்காலில் தாய் ரஞ்சிதத்தின் உடல் மிதந்து வந்துள்ளது. அதனைக் கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரஞ்சிதத்தின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் ரஞ்சிதம் தனது குழந்தையுடன் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து ரஞ்சிதம் மற்றும் இனியனின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரஞ்சிதம் மற்றும் ஈஸ்வரமூர்த்திக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கோபிசெட்டிபாளையம் ஆர் டி ஓ பிரியதர்ஷினி தலைமையில் இன்று விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் கிஷோர் ஜாதவ் (40). ஒப்பந்ததாரராக இருக்கிறார்.
இவருக்கு சீதா (35) என்ற மனைவியும், காஞ்சன் (15), புர்வா (8), அன்னு (10), அபய் (12) என்ற பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்தனர்.
இதன் காரணமாக பெரும் கடனில் சிக்கி தவித்தனர், வறுமையும் வாட்ட துவங்கியதால் இனியும் உயிர் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்ள கிஷோர் முடிவு செய்தார், அதன்படி பாலில் விஷல் கலந்து அவரும், சீதாவும் குடித்ததோடு நான்கு குழந்தைகளுக்கு கொடுத்தனர்.
பின்னர் ஆறு பேரும் சுயநினைவை இழந்து கீழே சரிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் புர்வா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க மற்ற 3 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கிஷோர் மற்றும் சீதா இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுவாக இரட்டையர்களிடையே சில குணங்களும் ஒற்றுமையாக இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் இரட்டையர்கள் 25 வயது சுமேர் சிங் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே இணைபிரியாமல் ஒற்றுமையுடன் இருந்து வந்தனர்.
எங்கே சென்றாலும் ஒரே மாதிரி உடையணிந்து ஒன்றாகவே செல்வர். இவர்கள் சகோதரர்கள் என்பதை தாண்டி நண்பர்கள் போலவே பழகி வந்தனர். இதில் சுமேர் சிங்குக்கு சரியாக படிப்பு ஏறவில்லை .
இவர் ப்ளஸ் 2 முடித்துவிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சோஹன் சிங் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜெய்ப்பூரில் தங்கி படித்துக் கொண்டிருந்தார்.
சோஹன் சிங்கின் படிப்பு செலவுக்கு சுமேர் சிங் பணிபுரிந்து பணம் அனுப்பி வந்துள்ளார். சோஹன் சிங்கை எப்படியாவது ஆசிரியராக ஆக்கிவிட வேண்டும் என்பதே சுமேர் சிங்கின் ஆசையாக இருந்துள்ளது. இவ்வாறு இருவரும் 900 கி.மீ. இடைவெளியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சுகேர் சிங் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், தான் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடி திண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அதே நேரத்தில் சோஹன் சிங் வீட்டுக்கு தண்ணீர் எடுப்பதற்காக வெகு தொலைவில் அமைந்திருக்கும் தண்ணீர் தொட்டிக்கு சென்றார். தண்ணீர் எடுக்கும் போது அவரும் நிலைத்தடுமாறி தொட்டிக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், சுமேரின் நண்பர்கள் மாடியில் இருந்து சுமேர் விழுந்து இறந்ததை தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அவரது பெற்றோரும், சகோதரர்களும் கதறி அழுதனர்.இந்த சோக செய்தியை தெரிவிக்க அவரை தேடிய போது தான் சோஹனும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர்.
இரட்டையர்கள் ஒரே நாளில் ஒரு சில மணிநேர இடைவெளியில் வினோதமான சூழலில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களையும் ஒரே விறகு அடுக்கில் அருகருகே கிடத்தி சிதைமூட்டியது காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
பொலிஸ் சி.ஐ.டி என தன்னை அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (14.01) தெரிவித்தனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நபரொருவர் குறித்த வீட்டில் உள்ள மகன் தொடர்பாக மகனின் தயாரிடம் தெரியப்படுத்தி தன்னை சி.ஐ.டி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசி மகனை வைத்து பணம் பெற்றுள்ளதுடன், பொலிசில் இருந்து தனக்கு கிடைத்த யூரியா பசளை தருவதாகவும் கூறி பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பசளையும் வழங்காது தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் பாதிக்கப்பட்டவர் தெரியப்படுத்தியிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் பணம் பெற்ற குறித்த நபர் சி.ஐ.டி இல்லை என்தை உறுதிப்படுத்தியதுடன், அவரை கைது செய்துள்ளனர்.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்படவராவார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சீரடிக்கு தனியார் பேருந்தில் சென்றுபோது விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் உள்ளது நாசிக்.
இங்கு உள்ள சின்னார் தாலுகாவில் உள்ள பதரே ஷிவார் அருகே இன்று தனியார் சொகுசு பேருந்தும் – டிரக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 40 பேர் படு காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு மட்டுமின்றி, விபத்தில் சிக்கியவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காலை சுமார் 7 மணி அளவில் நடைபெற்ற இந்த கோரவிபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
தொடர்ந்து படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததையடுத்து அம்மாநில முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain) எனும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை, அடர்ந்த வனப்பகுதியில் போலீஸாரால் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை ராஜஸ்ரீயின் பயிற்சியாளர், அவர் காணாமல் போய்விட்டதாக கட்டாக்கிலுள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்த நிலையில், குருதிஜாதியா வனப்பகுதியில் அவரின் ஸ்கூட்டர் தனியாக கிடந்திருப்பதை போலீஸார் இன்று கண்டுபிடித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து போலீஸார் வனப்பகுதியை ஆராய்ந்ததில் ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதனைக் கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார்.
இருப்பினும் மரணத்துக்கான காரணம் என்னவென்று போலீஸார் தரப்பிலிருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரின் பெற்றோர் இதனைக் கொலை எனக் குற்றம்சாட்டிவருகின்றனர். அதைத் தொடர்ந்து போலீஸாரும், இந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்ரீயின் பெற்றோர், “புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் (OCA) ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ ஸ்வைன் உட்பட சுமார் 25 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். பின்னர் ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் இறுதிப் பட்டியலில் ராஜஸ்ரீயால் இடம்பெறமுடியவில்லை.
அடுத்தநாள் வீராங்கனைகள் அனைவரும் அவர்கள் அருகிலிருந்த கிரிக்கெட் மைதானத்துக்குப் பயிற்சிக்கு சென்றனர். ஆனால் ராஜஸ்ரீ, தன் தந்தையைச் சந்திக்க பூரிக்கு செல்வதாக தன்னுடைய பயிற்சியாளரிடம் தெரிவித்திருக்கிறார்” என போலீஸார் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த இந்தியரான தந்தை மீது மூன்று கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது பிள்ளைகள் இருவரையும் அந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், அவரது மனைவி மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நார்தாம்ப்டன்ஷயர் பகுதியில் உள்ள கெட்டரிங்கில் குடியிருப்பு ஒன்றில் டிசம்பர் 15ம் திகதி ஜீவா சஜு(6), ஜான்வி சஜு(4) ஆகியோருடன் இவர்களின் தாயாரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னர் வெளியான அறிக்கையில், குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் அஞ்சு அசோக் மூச்சுத்திணறலால் இறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள சஜு மீது சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் நார்தாம்ப்டன்ஷயர் பகுதி பொலிசார் மூன்று கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
இதனிடையே, நார்தாம்ப்டன்ஷயர் பகுதி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில், மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதால் வழக்கை எதிர்வரும் ஜூலை 6ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, கைதாகியுள்ள சஜு மார்ச் 24ம் திகதி வரையில் விசாரணைக் கைதியாக சிரையில் இருப்பார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.