அவர் என் தந்தை கிடையாது… வருங்கால கணவர்.. ஆச்சரியம் கொடுக்கும் அழகிய இளம்பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் தன்னை விட 21 வயது அதிகமானவரை திருமணம் செய்யவுள்ள நிலையில் அது குறித்து மனம் திறந்துள்ளார். கேரல் கே டெரி (28) என்ற இளம்பெண்ணும் மிட்ச் கேர்னே (49) என்பவரும் தீவிரமாக காதலிக்கும் நிலையில் விரைவில் மண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.

இவ்வளவு வயது வித்தியாசத்தில் டெரி ஒருவரை காதலிப்பது இது முறை இல்லையாம். ஆம்! ஏற்கனவே 55 வயதான நபரை காதலித்து அவரை பிரிந்திருக்கிறார். டெரி கூறுகையில், பலரும் என்னையும், கேர்னேவையும் தந்தை, மகளா என கேட்கிறார்கள்.

ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. காதலனையும், காதலியையும் தேர்வு செய்வது அவர்களின் உரிமை. வயது அதிகமானவர்களுடன் நான் பழகுவதை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்கள் மற்றும் மற்றவர்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிவார்கள் என கூறியுள்ளார்.

சொர்க்கத்தில் திருமண முன்மொழிவு.. விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்!!

மும்பையில்..

வருங்கால மனைவி பயணித்த அதே விமானத்தில் டிக்கெட் புக் செய்த நபர் ஒருவர், நடுவானில் திருமண முன்மொழிவை செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நடுவானில் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, திருமண முன்மொழிவை செய்ய அந்த நபர் மண்டியிட்டதைக் கண்டு அவரது வருங்கால மனைவி திகைத்துப் போனார்.

மும்பை சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில், அவர் தனது வருங்கால மனைவிக்கு பணியாளர்களின் உதவியுடன் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டார். அவரது நண்பருக்கு கேபின் குழு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரியும் என்பதால் இது எளிமையாக நடந்தது.

ஏர் இந்தியா அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 2 அன்று அந்த பெண் லண்டனில் இருந்து ஹைதராபாத் வழியாக மும்பைக்கு பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பெண்ணின் வருங்கால கணவன் அவரை ஆச்சரியப்படுத்த விரும்பினார், எனவே அவர் அதே விமானத்தில் தனது டிக்கெட்டை பதிவு செய்தார்.

ஆச்சரியத்தை ஏற்பாடு செய்த அந்த நபர், தனது வருங்கால மனைவி சென்ற அதே விமானத்தில் ஏறி, “நான் எப்போதும் உங்களுடன் ஒரு மைல் நடக்க முடியும். நீங்கள் என்னுடன் நடக்க விரும்புகிறீர்களா?” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய இளஞ்சிவப்பு சுவரொட்டியுடன் பயணிகளுக்கு இடையில் நடந்து சென்று அப்பெனிடம் நின்றார்.

அதனைப் பார்த்து திகைத்துப்போன அப்பெண் முகத்தில் பரந்த புன்னகையுடன் இருக்கையில் இருந்து எழுந்தபோது, ​​​​அந்த நபர் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.

லிங்க்ட்இன் பயனர் ஒருவர் இந்த காதல் முன்மொழிவின் வீடியோவை பதிவிட்டார், அதில் “சொர்க்கத்தில் நடந்த திருமண முன்மொழிவு., லவ் இஸ் இன் தி ஏர்..” என்று எழுதினார். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் இந்த ஜோடியை ஆரவாரம் செய்வதையும் பாராட்டுவதையும் காண முடிந்தது.

இத்தனை வருஷம் கூட இருந்து பாசமா பாத்துக்கிட்டா… மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை அருகேயுள்ள குதிரைபந்திவிளை என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜார்ஜ் (வயது 77). இவர் சித்த வைத்தியராக இருந்துள்ளார். இவர் ஊர் ஊராக சென்று சித்த வைத்தியம் செய்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இவரது மனைவி பெயர் மரிய தங்கம் (72).

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக திடீரென மரிய தங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக, உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்தும் போயுள்ளார்.

மரிய தங்கம் இழப்பு, கணவர் செல்வ ஜார்ஜ் மற்றும் குடும்பத்தினரை கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளாக தன்னுடன் இணைந்து வாழ்ந்து வந்த மனைவி மரிய தங்கத்தின் இழப்பை கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் செல்வ ஜார்ஜ் அவதிப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

இனி மேல் தனது வாழ்க்கையில் மனைவி இல்லை என்பதை அவரால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் தெரிகிறது. இதனிடையே, மரிய தங்கத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்று கொண்டிருந்த போது, தனது குடும்பத்தினரிடம் இன்னொரு குழியையும் தோண்டி தயாராக வைத்திருங்கள் என செல்வ ஜார்ஜ் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் மன வேதனை காரணமாக அப்படி கூறுவதாக கருதி உள்ளனர். ஆனால், சில நேரம் கழித்து தான் செல்வ ஜார்ஜ் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, திடீரென மயங்கி விழுந்த செல்வ ஜார்ஜை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வ ஜார்ஜ் உயிரிழந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்த மனைவி, திடீரென உயிரிழந்ததால் கடும் வேதனையில் இருந்த கணவரும் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விஷயம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மோசடி : 7 வருடங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்!!

யாழில்..

தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து, தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர். 7 வருடங்களின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதனை கண்டறிந்துள்ளனர்.

அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை யாழில். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்துக்களின் திருமணங்களின் போது , தாலி மற்றும் கொடி என்பவை திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் “பொன் உருக்கு” என நிகழ்வு ஏற்பாடு செய்து, தாலிக்கொடி செய்து கொள்வார்கள். அத்துடன் தாலிக்கொடி வணக்கத்திற்கு உரியதாகவும், மரியாதைக்கு உரியதாகவும் பார்க்கின்ற வழக்கமும் உண்டு.

அதனால் அவற்றை தங்கம் தானா ? என சோதனை செய்து பார்க்கும் வழக்கம் இருப்பதில்லை. பொருளாதார நெருக்கடிகளால் அடகு வைப்பதற்காகவோ அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவோ வங்கிகளுக்கு கொண்டு செல்லும் போதே அங்கு தாலி மற்றும் கொடியின் தரம் சோதிக்கும் போதே, அவற்றில் மோசடிகள் இடம்பெற்று இருந்தால் தெரியவரும் சூழல் காணப்படும்.

வவுனியாவில் ‘போதையை ஒழிப்போம் – தலைமுறை காப்போம்’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

விழிப்புணர்வு ஊர்வலம்..

‘போதையை ஒழிப்போம் – தலைமுறை காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் வவுனியாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று (13.01) இடம்பெற்றது.

பள்ளிவாசல்கள், உலமாக்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முகைதீன் ஜீம்மா பள்ளி முன்றலில் ஆரம்பமான ஊர்வலமானது, மன்னார் வீதி வழியாக சென்று வவுனியா, குருமன்காடு சந்தியில் நிறைவடைந்து விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ‘மதுவை ஒழிப்போம் மகிழ்வுடன் வாழ்வோம், குடியால் நீ கெட விடியாது உன்வாழ்வு, போதை மரணத்தின் பாதை, போதை அது சாவின் பாதை, போதை மேல் போதை கொள் அழிவே கூடும்,

போதைப் பொருள் பாவனையை உடன் அறிவிப்பதற்கு 1984′ என எழுதப்பட்ட பல வகையான போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டதுடன், போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.

இதில் பள்ளி வாசல்களின் நிர்வாகத்தினர், பொலிசார், உலமாக்கள், சுகாதாரப் துறையினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தூக்கத்தில் உயிரிழந்த பெண் : நள்ளிரவில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

லண்டனில்..

லண்டனை சேர்ந்த இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் Trinidad and Tobagoல் திருமணம் நடக்கவிருந்தது.

இந்த நிலையில் திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது, இது அவர் அருகே இருந்த டிவோனை அதிர்ச்சியடைய வைத்தது.

அதன்படி அவர் கடந்த மாதம் 7ஆம் திகதி மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என தற்போது தெரியவந்துள்ளது. இதோடு நடியாவுக்கு கல்லீரல் நோய் இருந்தது அவரின் வருங்கால கணவர் டிவோனுக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது.

மேலும் நடியாவுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளான், முதல் கணவர் மூலம் அவர் அவன் பிறந்தான் என தெரிகிறது. டிவோன் கூறுகையில், நடியாவின் திடீர் மரணம் என் மனதை சுக்குநூறாக்கிவிட்டது.

அவர் மிகவும் அன்பான, அக்கறையுள்ளவராக இருந்தார். அன்றைய தினம் நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு முழிப்பு வந்த போது அருகில் இருந்த நடியா கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். ஆனால், அவள் அசைவற்ற நிலையில் கிடந்தாள் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

“பணம் இல்லாம தவிச்சேன்” வீட்டு வேலை செய்து வந்த பெண்ணுக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்!!

மேற்கு வங்கத்தில்..

பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே சொல்ல முடியாது. திடீரென வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் என சென்று கொண்டிருக்கும் போது அப்படியே மொத்த வாழ்க்கையையே திருப்பி போடுவது போல ஏதேனும் சம்பவங்கள் அரங்கேறலாம், அதனை கொஞ்சம் கூட அந்த நபர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது பெண் ஒருவருக்கு அரங்கேறி அவரை உச்சகட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் புதுல் ஹரி. நடுத்தர வயது பெண்ணான இவரது கணவர் கூலி வேலைக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பெரிய அளவில் அவருக்கு வருமானமும் இல்லாத காரணத்தினால், குடும்ப சூழல் வறுமை நிறைந்தும் இருந்ததாக தெரிகிறது. இதற்கு மத்தியில் புதுலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற சூழலில், மருத்துவ செலவுக்கும் பணமில்லாமல் தவித்து வந்துள்ளார்.

மறுபக்கம், மகளின் திருமண செலவுக்கும் பணம் இல்லாத நிலை இருக்க, கடுமையாக அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, நிறைய இடங்களில் புதுல் ஹரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடன் வாங்கி இருந்தததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக சில வீடுகளிலும் புதுல் ஹரி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், தங்களின் குடும்ப நிலையை மாற்றும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் அரசு லாட்டரி டிக்கெட் ஒன்றை 30 ரூபாய் கொடுத்து புதுல் ஹரி வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு சுமார் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக தெரிகிறது.

இதனிடையே, இவ்வளவு பணம் வென்றதால் என்ன செய்வதென தெரியாமல் பயத்தில் போலீசையும் புதுல் அணுகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி பேசும் புதுல், லாட்டரியில் வென்ற பணத்தைக் கொண்டு கடனை அடைப்பதன் மூலம் நிம்மதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மகனின் மருத்துவ செலவு அளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஒரு வீட்டை கட்டவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் தனது வேலையை விட மாட்டேன் என்றும் புதுல் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மொத்த குடும்பமும் தற்கொலை : சிக்கிய கடிதத்தால் வெளிவந்த உண்மை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மொத்த பேரும் ரயில் முனால் தலை வைத்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மூவரும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா – புஷ்பலதா தம்பதி மற்றும் அவர்களின் மகள் தாக்‌ஷாயினி என தெரியவந்துள்ளது.

இதில் மைலராப்பா கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இறப்பதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், ரேஷன் அரிசியில் எங்களுக்கு ப்ளாஸ்டிக் அரி தான் வழங்கப்பட்டது.

எங்கள் மீது எந்த தவறுமில்லை, எங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் இருந்த வார்த்தைகள் குழப்பதை ஏற்படுத்தி இருப்பதால் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது சிலருடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களம் இறங்கவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி இன்று (13.01.2023) அதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது.

கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபனின் தலைமையில் சென்ற வேட்பாளர்கள் மற்றும், கட்சியின் உறுப்பினர்களால் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

புதிய ஜனநாயாக மாக்சிச லெனினிச கட்சியானது வவுனியா மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை தமது வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது.

யாழில் திருமணமாகி சில மாதங்களில் இளம் பெண் துாக்கில் தொங்கி மரணம்!!

யாழில்..

யாழ் கல்வியங்காடுப் பகுதியில் நேற்று முன்தினம் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். ரஜீவன் பிரியவதனா எனும் 26 வயதான குடும்பப் பெண்ணே பலியாகியதாக தெரியவருகின்றது.

யாழ் இந்து மகளீர் கல்லுாரி பழைய மாணவியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்துள்ளார். இவ்வாறான நிலையில் அவர் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானதாக,

கணவர் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த முரண்பாடே இவரது தற்கொலைக்கு காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் பாய்ந்த பேருந்து!!

விபத்து..

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து , சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

இதன் போது சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற பேருந்துகளை மோதித் தள்ளியுள்ளது.

இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞனின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி : 15 லட்சம் பணத்தை இழந்த நிலையில் எடுத்த விபரீத முடிவு!!

நெல்லையில்..

நெல்லை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 15ம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

மேலும் இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த விளையாட்டில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ. 15 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும் இவரது தந்தை பாஸ்கரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தப்பா மகனின் மனைவி நகைகளை அடகுவைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.

மேலும் உறவினரின் நகைகை அடகுவைத்துத் தோற்றுவிட்டோ எப்படி அதை மீட்பது என்று தெரியாமல் கவலையடைந்து விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் விதமாக தி.மு.க அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை நிறை ஆளுநருக்கு அனுப்பியது.

ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருவதால் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் மரணங்கள் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்!!

ரத்தன் டாடா..

கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சாதாரணமாக 2-BHK வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர். கோடீஸ்வர தொழிலதிபர் ரத்தன் டாடா,

செவ்வாயன்று (ஜனவரி 10) தனது இளைய சகோதரர் ஜிம்மி டாடாவுடனான தனது பிணைப்பைக் கொண்டாடும் வகையில் 1945-ல் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்பதிவில், “அது மகிழ்ச்சியான நாட்கள். எங்களுக்கு நடுவில் எதுவும் வந்ததில்லை. (1945 என் அண்ணன் ஜிம்மியுடன்),” என்று டாடா பதிவிட்டிருந்தார். 82 வயதான ஜிம்மி Tata Sons மற்றும் பிற டாடா குழும நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். அப்படியானால் அவர் பல கோடிகளுக்கு அதிபராவார், ஆனால் அவர் அண்ணனைவிட எளிமையாக வாழ விரும்புகிறார்.

ஜிம்மி இன்னும் மும்பையில் சாதாரணமாக ஓர் 2-BHK பிளாட்டில் வசிக்கிறார் என்பதும் அவருக்கு சொந்தமாக மொபைல் போன் கூட இல்லை என்பதும் ஆச்சரியமாக உள்ளது.

ஜிம்மி டாடா Tata Sons, TCS, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் டாடா பவர் ஆகியவற்றில் பங்குதாரர். ஜிம்மி டாடாவும் ரத்தன் டாடாவை போலவே திருமணமாகாதவர் மற்றும் அவர் தனது பெரும்பாலான நேரத்தை தனது வீட்டில் செலவிட விரும்புகிறார்.

ஜிம்மி Sir Ratan Tata Trust அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார். ஜிம்மியை அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒரு பார்சி குடும்பத்திலிருந்து சர் ரத்தன்ஜி டாடாவின் மனைவி நவாபாயால் தத்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்தேன் : கணவர் பிரிந்துவிட்டதால் தனிமை.. நடிகை சுதா கண்ணீர்!!

நடிகை..

ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா கூறியுள்ளார். தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுதா.

இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேசினார்.

சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நான் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்தேன். ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது. தந்தைக்கு புற்று நோய் இருப்பது பற்றித் தெரிந்த பிறகு அனைத்து சொத்துகளும் விற்கபட்டன.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை விற்று எங்களுக்கு உணவளித்தார். சினிமாவில் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.

நடிப்புக்கு பிறகும் ஆனால் மீண்டும், நான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. டெல்லியில் ஒரு ஹொட்டலை திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன்.

ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறேன். எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்றதோடு என்னுடன் பேசவில்லை. கணவரும் என்னை பிரிந்துவிட்டதால் தனிமையில் இருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

3 மனைவிகள், 60 குழந்தைகள்…நான்காவது திருமணத்திற்கு தயாராகும் 50 வயது நபர்!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கு 3 மனைவிகள் மற்றும் 60 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) குவெட்டா மாகாணத்தில் தனது மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் ஜானின் மூன்று மனைவிகளில் ஒருவருக்கு இந்த வாரம் குஷால் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மூன்று மனைவிகள் மற்றும் 60 குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக மருத்துவராக இருக்கும் 50 வயதுடைய சர்தார், தனக்கு இருக்கும் குழந்தைகளின் அளவை குறித்து தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருகிறார். மேலும் தனக்கு இன்னும் அதிகமான குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இன்னொரு மனைவி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதாக புகார் கூறிய சர்தார், தனது முழு குடும்பத்தையும் வெளியூருக்கு அழைத்துச் செல்ல இலவச பேருந்து வழங்குமாறு உள்ளூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்தார் ஜான் ஷம்ஷாத் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “வணிகம் ஸ்தம்பித்துள்ளது, “மாவு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.”

“கடந்த மூன்று ஆண்டுகளாக, நான் உட்பட உலகம் முழுவதும் அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பலதார திருமண முறைக்கு அனுமதி இருக்கும் நிலையில் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போதைப் பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர் மரணம் : நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!!

குடும்பஸ்தர் மரணம்..

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரியால் அவரது சடலத்தை ஊடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது,

அதிகரித்த ஐஸ் போதைப் பொருள் உட்கொண்டமையால் நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணமேற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தாக பொலிசார் தெரிவித்தனர். சடலம் அவரது குடும்பஸ்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.