பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு : வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் பெற்றோர்!!

கேரளாவில்..

கேரளாவில் இளம்பெண் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி.

வெறும் 20 வயதே ஆகும் இவர், அந்த பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் இவர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு (டிசம்பர் 31) பிரியாணி சாப்பிட எண்ணியுள்ளார்.

அதன்படி ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணியையும், சிக்கன் 65-யும் ஆர்டர் செய்துள்ளார். இதனை இவருடன் சேர்ந்து இவரது தங்கை மற்றும் உறவினர்கள் என அனைவரும் உண்டுள்ளனர்.

ஆனால் இதனை சாப்பிட்ட பிறகு அஞ்சுவுக்கு ஒரே வாந்தியாக வந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்சு, கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைத்தனர்.

அதோடு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். தரமற்ற உணவால் கல்லூரி மாணவி உயிரிழந்தது தெரியவந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

தொடர்ந்து உணவகத்தில் செய்யப்பட்ட ரெய்டில் ஓட்டலில் எந்தவொரு பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இவர் உணவு வாங்கிய அன்றே சுமார் 120 பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மாணவி, சாப்பிட்டால் இறக்கவில்லை என்றும் அவருக்கு இருந்த மஞ்சள் காமாலை நோயால் அவரது உள் உறுப்புகள் சில பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக கல்லீரல் பதிப்படைந்ததால் அவர் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக கேரளாவிலுள்ள கோட்டயத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டு, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தாயின் கண்ணெதிரே சோகம் : ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒலப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பீகாரில் வசித்து வரும் பஞ்சாரம், அவரின் மனைவி மனிஷா தேவி குடும்பமாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தை ஒன்றரை வயது தீஷ்குமார். நேற்று மனிஷா தனது குழந்தையை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென குழந்தை தாயின் மடியிலிருந்தவாறே ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டை பிடித்துவிட்டது. இதனால் மிஷினுக்குள் குழந்தை இழுத்து செல்லப்பட்டது. தாயின் கண்ணெதிரே மிஷினில் சிக்கி அரைக்கப்பட்டது .

உடனடியாக மிஷினை நிறுத்திவிட்டு குழந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரு குழந்தை இருந்தும் தொல்லை கொடுத்த நபர்கள்.. பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை நீலிமா ராணி!!

நீலிமா ராணி..

சின்னத்திரையில் தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை நீலிமா ராணி. முன்னணி சீரியல்களில் நடித்து வந்த நீலிமா, வெள்ளித்திரை படங்களில் நடித்தும் இருக்கிறார்.

துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமா தன்னைவிட 12 வயது மூத்தவரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன் 2 ஆம் குழந்தை பெற்றார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி, தனக்கு ஆ.பா.ச.மா.க.வு.ம் கே.வ.லமாகவும் இத்தனை பேர் டா.ர்.ச்.ச.ர் செ.ய்.ததாகவும் அவர்களை பிளாக் செய்துள்ளதை வீடியோவாக ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.

நடு வீதியில் தந்தையின் கண்முன்னே இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

திருநெல்வேலியில்..

நொடி பொழுதில் நடைப்பெறுகிற சில சம்பவங்கள் வாழ்நாளுக்குமான சோகத்தையும், துயரத்தையும் தேக்கி வைத்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் தனது தங்கையைப் பார்க்க ஆசையாசையாக சென்ற அக்காள், பேருந்து சக்கரத்தில், தந்தையின் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, நிலைதடுமாறி, மகராசி மீது மோதி, இழுத்து சென்றதில் பேருந்தின் ஓட்டுநர் ஸ்டீயரிங் மீது மயக்கமடைந்து விழுந்து கிடந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். அந்த பகுதியில் கூலி வேலைச் செய்து வரும் ஜெயபாலுக்கு மகராசி(22), செல்வி என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

பெரிய மகள் மகராசி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து முடித்த நிலையில், 2வது மகள் செல்வி தற்போது அதே கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் செல்வியைப் பார்த்து விட்டு வருவதற்காக நேற்று ஜெயபாலும், மகராசியும் பைக்கில் நாகர்கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர்.

இவர்களது இருசக்கர வாகனம், காவல் கிணறு – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய் மொழி பகுதியில் வந்த போது, அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர், வாகனத்தை எடுக்க இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து வேகமாக ஓட்டுநரின் கட்டைப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் மகராசி உயிரிழந்தார்.

மேலும் ஜெயபால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்ஐ ராஜமணி, ஏட்டு உதயா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மகராசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பைக்கோடு இழுத்து செல்லப்பட்ட ஜெயபாலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடு வீதியில் தாய்க்கும் 2 வயதுக் குழந்தைக்கும் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கர்நாடகாவில்…

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெங்களூரு நாகவரா பகுதியில் இன்று (ஜனவரி 10) காலை பதிவாகியுள்ளது. தம்பதியரும் அவர்களது இரட்டை குழந்தைகளும் (ஒரு மகள் மற்றும் ஒரு மகன்) பைக்கில் சென்றபோது இரும்புத் தூண் அவர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தாய் தேஜஸ்வானி மற்றும் அவரது மகன் விஹான் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தேஜஸ்வானியின் கணவர் லோஹித் மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லோஹித் பைக்கை ஓட்டி வந்ததாகவும், தேஜஸ்வினி பின்னால் அமர்ந்திருந்ததாகவும், இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உலோக கம்பிகளால் ஆன தூண் சுமார் 40 அடி நீளம் இருந்தது. இந்த சம்பவத்தையடுத்து இரண்டு நாட்களாக வெளிவட்டச் சாலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் அதிரடியாக கைது!!

இளைஞன் கைது..

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11.01.2023) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞனிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கண்டித்த தந்தையை கண்ணீர் விட வைத்த 9ம் வகுப்பு மாணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

புதுச்சேரியில்..

தாய் தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்ததாலும், தந்தை தன்னைக் கண்டித்ததாலும் புதுவையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் மின் விசிறி கொக்கில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் சக்திமுருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இவர்களது 2வது மகன் பாலமுருகன் (14). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

பாலமுருகன் புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான். தினமும் காலை 5 மணிக்கு பாலமுருகனை அவரது தந்தை டியூசனுக்கு அழைத்து சென்று பின் 7 மணிக்கு திரும்பி வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

ஆனால் நேற்று முன்தினம் டியூசனுக்கு பாலமுருகன் செல்லவில்லை. இதனை தசரதன் கண்டித்ததால், கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பாலமுருகன் மட்டும் வீட்டில் இருந்தான்.

இந் நிலையில் மாலையில் வேலையை முடித்து விட்டு தசரதன் வீட்டிற்கு வந்தார். அப்போது பாலமுருகன் வீட்டின் 2வது மாடியில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் தனது வீட்டிற்கு தானே தீ வைத்த நபர் : இப்படியும் ஓர் சம்பவம்!!

யாழில்..

மனைவியுடன் முரண்பட்டு குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தி சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டு, அவர்களை வீட்டின் வெளியே துரத்திய பின்னர் , வீட்டினை பூட்டி, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். வீட்டில் தீ பரவியதை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி பலத்த சிரமத்தின் மத்தியில் தீயினை அணைத்த போதிலும் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.

500 மில்லியனில் ஒருவருக்குத்தான் இப்படி நடக்கும்.. மருத்துவ உலகையே ஆச்சர்யப்படுத்திய கர்ப்பிணிப் பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்கு இதய வடிவிலான கருப்பை இருந்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இது மிக மிக அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய். 25 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். இதனை அறிந்து ட்ராய் மிகுந்த சந்தோஷமடைந்திருக்கிறார்.

இதனையடுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ட்ராய் ஸ்கேன் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிந்திருக்கிறது. சொல்லப்போனால் இரண்டு அதிர்ச்சி தகவல்கள்.

முதலாவது, ட்ராய்க்கு இதய வடிவில் கருப்பை இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அதில் இரட்டை கரு வளர்வதாக மருத்துவர்கள் சொல்லியபோது ட்ராய் சற்றே அதிர்ந்து தான் போனார்.

ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதய வடிவ கருப்பை இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் 500 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த இதய வடிவ கருப்பையில் இரட்டை குழந்தைகள் உருவாகும் அரிய நிகழ்வு நடைபெறும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இதய வடிவில் கருப்பை இருந்தது கூட கவலை அளிக்கவில்லை என்றும், இரட்டை குழந்தைகள் என்பதால் இருவரும் நலமாக இருக்கிறார்களா? எனது பற்றியே சிந்தித்ததாகவும் ட்ராய் சொல்லியிருக்கிறார்.

முதல் 34 வாரங்கள் அவர் நலமாகவே இருந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு pre-eclampsia எனும் உயர் ரத்த அழுத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலமாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இரட்டை குழந்தைகளை வெளியே எடுத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த குழந்தைகளுக்கு ரேயான் மற்றும் ரேலின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.பிறந்தது முதல் 27 நாட்களுக்கு இரு குழந்தைகளும் NICU-வில் வைத்து பராமரிக்கப்பட்டிருக்கின்றனர்.

முதன் முதலில் தனது குழந்தைகளை பார்த்ததும் அவை மிகவும் ஒல்லியாக இருந்ததால் அச்சப்பட்டதாகவும் அதன் பின்னர் சகஜ நிலைக்கு திரும்பியதாகவும் சொல்லியிருக்கிறார் ட்ராய். தற்போது ரேயான் மற்றும் ரேலின் இருவருக்கும் 16 மாதங்கள் வயது ஆவதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் ட்ராய் தெரிவித்திருக்கிறார்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்த தங்கம் : இலங்கையில் இன்று பதிவான மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 680,742 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

எனக்காக இனிமேல் செலவு செய்ய வேண்டாம்.. பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திவ்யா (வயது 16). இவர் சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.

கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த பெற்றோர்களால் மூத்த மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற திவ்யா பாதியிலே 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வேலைக்கு சென்ற சிறுமியின் தாய் மைதிலி மதியம் உணவு அருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகள் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது சிறுமி தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக இருந்துள்ளார். மகளை பார்த்து அவரது தாய் கதறி அழுத்துள்ளார். மைதிலியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிறுமியை இறக்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரும்பியதை படிக்க முடியவில்லை.. நினைத்தபடி வாழ முடியவில்லை… 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

உங்களுக்கு பிடிச்சதை என்னால் படிக்க முடியலை. நான் விரும்புறதைப் படிக்க முடியலை. நெனைச்சப்படி வாழவும் முடியலை. என் தங்கச்சியாவது சந்தோஷமா வாழட்டும்’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்து உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் விஜயன் (47). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி.

இந்த தம்பதிக்கு பாலாஜி (17) என்ற மகனும், ஹரிணி (14) என்ற மகளும் உள்ளனர். இதில், பாலாஜி ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் ஹரிணி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விஜயனும், அவருடைய மனைவி ஜெயலட்சுமியும் பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி எடுக்க ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றிருந்தனர். வீட்டில் பாலாஜி மற்றும் அவரது தங்கை ஹரிணி இருவர் மட்டும் இருந்தனர்.

இந்நிலையில் பாலாஜி, படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அண்ணன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹரிணி, கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.

அப்போது பாலாஜி, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலாஜியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பாலாஜி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர், “நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. என் இஷ்டத்துக்கு நீங்கள் வாழ விடுவதில்லை.

30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா? நான் உயிருடன் இருந்து என்ன பண்ணப் போகிறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்” என உருக்கமாக கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ப்ளஸ்-2 படித்து வந்த பாலாஜி, ஜேஇஇ தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதி : இருவரும் சகோதரன், சகோதரி என தெரிந்ததால் அதிர்ச்சி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் நிலையில் இருவரும் உண்மையில் சகோதர, சகோதரிகள் என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்படி ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் தான் இருவரும் ரத்த சொந்தம் கொண்டவர்கள் எனவும் சகோதரி, சகோதரி எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து அப்பெண் கூறுகையில், நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது.

நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால் இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி மண வாழ்வில் இணைந்தோம். ஆனால் தற்போது சகோதரி, சகோதரி என தெரியவந்தது என கூறினார்.

அதன்படி இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

என் மனைவி அப்பாவி தான்.. ஆனால்… தற்கொலைக்கு முன் சமையல்காரர் சொன்ன வார்த்தைகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் சமையல்காரராக பணிபுரியும் நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனது மரணத்திற்கு காரணம் மனைவியின் குடும்பத்தார் தான் என இறப்பதற்கு முன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் டாங்க். சமையல்காரராக உள்ளார். இவரும் ரூபம் என்ற இளம்பெண்ணும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ரூபம் சார்ட்டட் அக்கவுண்டண்டாக இருக்கிறார். தம்பதிக்கு பண விடயத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வசதியாக இருந்தனர். இந்த நிலையில் ரூபம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோர் வீட்டிற்கு திடீரென சென்ற நிலையில் முகேஷ் பல முறை அழைத்தும் திரும்பி வரவில்லை.

இதனால் மனமுடைந்த முகேஷ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் இரண்டு வீடியோவை பதிவிட்டதோடு ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதில், என் மனைவி அப்பாவி!

ஆனால் அவரின் குடும்பத்தார் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள், அவர்கள் தான் தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ரூபம் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் இ.போ.ச பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் : சாரதி காயம்!!

இ.போ.ச பேருந்து..

யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது இன்று (10.01.2023) பிற்பகல் 1.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்து மீது வவுனியா சாந்தசோலை சந்திக்கு அண்மித்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் பேருந்தின் கண்ணாடி துவல்கள் சாரதிக்கு உடம்பில் கீறி கிழித்து காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மணிபுரத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!! 

கவனயீர்ப்பு போராட்டம்…

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவில் பால் மா விநியோகத்தில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இன்று (10.01.2023) அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

மரக்காரம்பளை கிராம சேவகர் அலுவலகம் அமைந்துள்ள மணிபுரம் கிராமத்தில் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்,  அண்மையில் கிராம சேவகரால் பால்மா பைக்கற்றுகள் வழங்கப்பட்டிருந்தது. இவை பக்கச்சார்பான முறையில் வழங்கப்பட்டதுடன் தகுதியற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பல குழந்தைகள் போசாக்கின்றியுள்ள நிலையில் கிராம சேவையாளர் பால் மாடுகளும், வாகனங்களும் வைத்துள்ளவர்களுக்கு பால்மா பைக்கற்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம சேவகரிடம் கேட்டால் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுகின்றார் என தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 36000 குடும்பங்கள் உள்ளது. இதில் 6000 குடும்பங்கள் மிக வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களாக உள்ளனர்.

இந் நிலையில் எமக்கு 1730 குடும்பங்களுக்கு வழங்குவதற்குத்தான் பால்மா பொதி கிடைத்தது. இதில் வறுமையான குடும்பங்களுக்கு வழங்குமாறு கிராம சேவையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

இதில் முறைப்பாடு தெரிவிப்பவர்கள் உண்மையிலேயே வறுமையானவர்களாயின் அதைப்பற்றி தற்போது கூற முடியாது. அவர்கள் என்னிடம் முறைப்பாட்டை தந்தால்,

அவர்கள் தகுதியானவர்களாக இருந்தும் கிடைக்காவிட்டாலும் தகுதியற்றவர்களுக்கு கிடைத்தாலும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.