கை மட்டுமே 8 கிலோ… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் : பிசாசின் குழந்தை என ஒதுக்கும் மக்கள்!!

இந்தியாவில்..

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். ஊனம், உடல் நலக்குறைப்பாடு, தசை குறைப்பாடு, மூளை வளர்ச்சியின்மை என பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு சிலர் அனுதாபத்தோடு பார்ப்பார்கள், ஒரு சிலர் ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்ப்பார்கள்.

குழந்தைகள் கடவுளின் படைப்பு என்பார்கள். ஒரு குழந்தை எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வது தாய் மட்டும் தான். இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் 16 வயதான சிறுவன் முகமது கலீம். இவர் மேக்ரோடாக்டிலியால் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த சிறுவனின் ஒரு கை எட்டு கிலோ எடையுடனும் ஐந்து விரல்களும் பெரிது, சிறிததாக இருக்கும். இதன்காரணமாக அக்கிராம மக்கள் சிறுவனை “பிசாசின் குழந்தை” என கூறுவார்கள்.

சிறுவனின் தோற்றத்தைக் கண்டு யாரும் நட்பாக பேசுவதில்லையாம், பழகுவதில்லையாம், இவரைக் கண்டு அனைவரும் பயந்து விடுவார்கள் என்று பெற்றோர்கள் சிறுவனை பள்ளிக்கு கூட அனுப்புவதில்லையாம்.

இச்சிறுவனின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். சிறுவனுக்கு 10 வயது இருக்கும் போது அவரது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவனின் உடலில் மாற்றம் எற்பட வில்லை. மேலும் சிகிச்சைக்குப் பின்னரே சிறுவனின் கை விரல்கள் பெரிதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அன்றாட தேவைகளுக்கு கூட மற்றவர்கள் உதவியை நாடவேண்டியுள்ளது. மகனின் இந்த நிலையைக் கண்டு சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் நாட்களைக் கடந்து வருகின்றனர்.

புகையிரத பாதையில் செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

புகையிரத பாதையில்..

புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கனடா ஆசையால் வியட்னாமில் பலியான யாழ் கிரிதரனின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!!

சுந்தரலிங்கம் கிரிதரன்..

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால் வியட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடியால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தங்களது பயண ஆபத்துக்களை அறியாது செல்வதனால் இவ்வாறான இழப்புக்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.

அதேவேளை உயிரிழந்த கிரிதரன் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். வறுமையை போக்க தனது கணவர் வெளிநாடு செல்ல முயன்றதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் குடும்ப கஸ்ரத்தை போக்கவென சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் இனியாவது அது தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவது, அவர்களது குடும்பத்தை நாட்டாற்றில் தவிக்க விடாது காப்பாற்றும்.

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!!

மகாராஷ்டிராவில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து இருக்கிறார். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி. மும்பையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள். என்றேனும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிய நேரிடும் என கருதிய இவர்கள் ஒரே நபரை திருமணம் செய்து கொண்டு பிரியாமல் வாழ்வது என முடிவு எடுத்திருக்கின்றனர்.

அதன்படி இவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான அதுல் அவ்தாதே என்பவரை திருமணம் செய்ய இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றனர். இதற்கு அதுல் மற்றும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது.

சோலாப்பூரில் ஒரே மேடையில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இருவரையும் கரம் பிடித்தார் மாப்பிள்ளை அதுல். இந்த வீடியோ இணைய தளங்களில் படுவைரலாக பரவியது.

இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்த புது மாப்பிள்ளை அதுல் மீது ராகுல் பூலே என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அதன்படி சோலாப்பூர் காவல்துறையினர் ஐ பி சி பிரிவு 494 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சட்டப்படி இந்த பிரிவின்கீழ் ஒருவரை விசாரிக்க நீதிமன்ற அனுமதியை பெறவேண்டும்.

இதனையடுத்து, நீதிமன்றத்தை போலீசார் நாடியுள்ளனர். அப்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 198 ஐ நீதிபதிகள் மேற்கோள் காட்டி, “இந்திய தண்டனைச் சட்டம் (திருமணம் தொடர்பான குற்றங்கள்) அத்தியாயம் 20ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அதனால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் ஒழிய எந்த நீதிமன்றமும் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது” என்றனர்.

புகார் அளித்தவர் இந்த தம்பதிக்கு எந்த விதத்திலும் தொடர்புடையவர் இல்லை என்பதால் அவர் இந்த திருமணத்தால் எப்படி பாதிக்கப்பட்டார்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இந்த திருமணத்தால் பாதிக்கபட்ட நபர்கள் புகார் அளித்தால் மட்டுமே இந்த பிரிவின்படி அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடியும் என நீதிபதிகள் கூறி காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றனர்.

வவுனியாவில் 7 பேருக்கு டெங்கு தொற்று : விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!

டெங்கு தொற்று..

வவுனியாவில் 7 பேருக்கு டெங்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் மீண்டும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் 7 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில், வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் நகர உள்வட்ட வீதி என்பவற்றில் வசிக்கும் இருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு குறித்த பகுதியிலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தவிர உக்குளாங்குளம் பகுதியில் இருவருக்கும், நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், மறவன்குளம் பகுதியில் ஒருவருக்கும் என மேலும் 5 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

அவர்களுக்கு டெங்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்புளின் பெருக்கம் அதிகரித்து டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் தமது வாழிடங்களையும், அயல் பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

திருவள்ளூரில்..

செல்ஃபி எடுக்கும் போது கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கண்டலம் தடுப்பணை பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது நவீன்குமார் தனது செல்போனில் அங்கிருந்த அழகிய காட்சிகளைப் படம் எடுத்துள்ளார். மேலும் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென நவீன்குமார் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் விழுந்த நவீன்குமார் அடித்துச் செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

பின்னர் 10 பேர் கொண்ட மீட்புக்குழு ஆற்றில் இறங்கி டிரோன் கேமரா உதவியுடன் நவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவீன்குமார் நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் ஆங்கிலம் படித்து பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

உத்திர பிரதேசத்தில்..

இரண்டு நபர்கள் காதலிப்பதற்கு ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, மொழி, இனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் தடையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.

இவை அனைத்தையும் தாண்டி உன்னதமாக நிலைத்து நிற்கும் பல காதல்கள் ஜெயித்து சிறந்த முறையில் அவர்கள் வலம் வருவது தொடர்பான செய்தியை கூட நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில் ஒரு காதல் கதை குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தை சேர்ந்தவர் சன்வர் அலி.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த சமயத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த மிஃப்தாவுல் ஜன்னா என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் சன்வர் அலிக்கு அறிமுகமானதாக சொல்லப்படுகிறது.

அப்போது, தான் கற்ற ஆங்கிலம் மூலம் ஜன்னாவிடம் பேச தொடங்கி உள்ளார் சன்வர். இந்தோனேஷியாவில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வரும் மிஃப்தாவுல் ஜன்னா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்பகுதியில் புயல் வந்ததை அறிந்த மிஃப்தாவுல் ஜன்னா, சன்வர் அலி மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டு அறிந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமானதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தன்னுடைய காதலை முதன் முதலில் சன்வர் அலி மிஃப்தாவுல் ஜன்னாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொண்ட மிஃப்தாவுல் ஜன்னா, சுமார் ஆறு மாத காலம் கழித்து சன்வர் அலியின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு சென்ற சன்வர் அலி, மிஃப்தாவுல் ஜன்னா மற்றும் அவரது குடும்பத்தினரை முதன் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவர்கள் திருமணத்திற்கும் சம்மதம் சொல்லியுள்ளனர். இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியா சென்ற சன்வர் அலிக்கும், மிஃப்தாவுல் ஜன்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளுக்கு திட்டம் போட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. இதனால், திருமண வேலைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சன்வர் – ஜன்னா திருமணம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், உத்தர பிரதேச மாநிலம், தியோரா மாவட்டத்தில் வைத்து அவர்களின் திருமண வரவேற்பும் நடந்துள்ளது. ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆங்கிலத்தின் உதவியுடன் இந்தோனேஷியா பெண்ணுடன் காதலித்து அவரை இந்திய இளைஞர் திருமணமும் செய்து கொண்ட செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பாணின் விலை குறைப்பு : சற்றுமுன் வெளியான தகவல்!!

பாணின் விலை குறைப்பு..

இலங்கையில் பாணின் விலை குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கோதுமை மாவின் விலை குறைப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடி விபத்து : உயிர்தப்பிய பயணிகள்!!

விபத்து..

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று (17.12.2022) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகளும்,

குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிக்கு சென்றுள்ளன. இதன் போது குறித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

சிரமதானப்பணி..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பின்பகுதியான சுற்றுவட்ட வீதியினை துப்பரவு செய்யும் நடவடிக்கை இன்று (16.12.2022) காலை தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரினால் இந்த நடவடிக்கை இடம்பெற்றிருந்ததுடன் வடிகாண்கள், பற்றைகள் என்பன துப்பரவு மேற்கொள்ளப்பட்டதுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டிருந்தன.

இன் நடவடிக்கையில் ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினர் 20க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் நிறுத்தம் : தவிசாளர் ஆர்.நவரட்ணம்!!

விசேட மத்தியஸ்த சபை

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறவிருந்த காணி விசேட மத்தியஸ்த சபையின் இரு அமர்வுகள் இடைநிறுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஆர்.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18.12.2022 மற்றும் 25.12.2022 ஆகிய திகதிகளில் இடம்பெறவிருந்த காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் இடம்பெறாது எனவும் அதன் பின்னரான அமர்வு 01.01.2023 அன்று வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாலியல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி : துண்டுப்பிரசுரம், ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு!!

துண்டுப்பிரசுரம், ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு..

வவுனியாவில் பாதுகாப்பான பயணத்திற்கு எனும் தொனிப்பொருளில் பாலியல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைத்தல் எனும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தேசிய பெண்கள் குழு என்பன இணைந்து முன்னெடுத்த இச் செயற்றிட்டம் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (16.12.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த ஸ்டிக்கரில் பாதுகாப்பான பயணத்திற்கு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், உங்களுக்கு வன்முறை இடம்பெற்றால் அமைதியாக இருக்க வேண்டாம் எதிர்த்து போராடுங்கள்,

வன்முறையை பார்க்கும் போது அதனை தடுக்க முன்வாருங்கள், இது சட்டரீதியான தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவசர தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன் பேரூந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டன.

ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பாகி ஓடிய அஜித்குமார் : படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!!

அஜித்குமார்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜித். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் 2013ல் வெளியான படம் ஆரம்பம். இப்படத்தில் கதை எழுத்தாளர்களாக பணியாற்றிய சுபா என்று அழைக்கப்படும் சுரேஷ் மற்றும் பால கிருஷ்ணன் அவர்கள் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆரம்பம் படத்தின் போது மும்பையில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது நயன் தாரா, ஆர்யா ஷூட் நடக்கும் போது அஜித் வந்து சும்மா உட்கார்ந்து பார்த்து வந்தார். அதன்பின் பெங்களூருவில் ஷூட்டிங் நடந்த போது, நாங்கள் அஜித், விஷ்ணுவர்தன் ஒரு ஓட்டலில் தங்கிருந்தோம்.

அங்கு அஜித்தை பார்க்க அவர்களது ரசிகர்கள் ஓட்டலின் பிளாட்பாரத்தில் காத்திருந்துள்ளனர். அப்படி ஒரு முறை, படத்திற்காக பெரிய ஆடம்பர வீட்டில் படப்பிடிப்பு நடக்கும்.

ஒரு ரசிகர் மதில்சுவர் மீது ஏறிய போது ஒரு காரின் மீது மோதி முன்பக்கத்தினை உடைத்துவிட்டான் ஒரு ரசிகர். இதையறிந்து என்ன இவங்க இப்படி பண்றாங்க எதாவது ஆகிவிட்டதே என்று கூறியதுடன் காருக்கான செலவினை கொடுத்தார். பின் ஷூட்டிங்கில் போலிஸ் பாதுகாப்பு வைத்தார்கள்.

அதேபோல் இன்னொருமுறை அஜித் சார் காரில் சென்றிந்த போது ஒரு ரசிகர் அவரின் காரில் பால்-ஐ ஊற்றி அபிஷேகம் செய்தார். இதனால் கடுமையான கோபத்தில் இறங்கி வெளியில் வந்து என்னப்பா இது என்று கண்டபடி திட்டினார்.

பின் ரசிகர்கள் தண்ணீர் ஊற்றி கழுவிட்டு சாரி தல என்று கூறிவிட்டு போனார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அஜித் காரை பாலோ செய்த ஒரு நபர் எதற்ச்சியாக பைக்கில் இருந்து விழுந்து விட்டான்.

இதனால் அப்செட்டாகிய அஜித், யாருக்காவது எதாது ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று ஷூட்டிங்கை இங்க வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு விமானநிலையத்துக்கு சென்றுவிட்டார் அஜித். பின் திரும்பி வந்த அஜித் என்னால் இங்கு ஷூட்டிங் செய்ய முடியாது என்று கூறியதால் அங்கிருந்து ஸ்பாட்டை காலிசெய்தோம் என்று கூறியுள்ளனர்.

எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களிடம் அத்துமீறினால் அவ்ளோதான்.. பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் காலணி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவையே உலுக்கிய சம்பவம் நிர்பயா கொலை வழக்கு.

அதில் இருந்து பெண்களை பாதுகாக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு வகைகளில் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேபோல, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவ, மாணவியர்களை தொடர்ந்து ஊக்குவித்தும் வருகின்றன அரசுகள்.

சில தனியார் நல அமைப்புகளும் இந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பெண்கள் பாதுகாப்புக்கான பிரத்யேக காலணிகளை உருவாக்கி இருக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி விஜயலட்சுமி.

இவர் மின் இணைப்பு கொண்ட காலணி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதில் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், யாரேனும் தொந்தரவு கொடுக்க முயன்றால் அவர்களை எட்டி மிதிக்கலாம் எனவும் அப்போது அவர்களது உடலில் சில வினாடிகளுக்கு மின்சாரம் பாயும் எனவும் கூறுகிறார் விஜயலக்ஷ்மி.

தாக்க வரும் நபர் மீது மின்சாரம் தாக்குவதால் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளலாம் எனவும் அதே நேரத்தில், காலணியில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார் மாணவி விஜயலக்ஷ்மி.

ஜிபிஎஸ் கருவி மூலமாக ஆபத்தில் உள்ள பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் செல்லும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பை விஜயலக்ஷ்மி பயின்று வரும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருமே பாராட்டி இருக்கின்றனர்.

அதனுடன் இந்த கண்டுபிடிப்பை கோவாவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறார் இந்த மாணவி. இந்த பாதுகாப்பு காலணி பரிசையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மாணவி கண்டுபிடித்துள்ள இந்த காலணி பலரையும் ஈர்த்துள்ள நிலையில், அந்த மாணவியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

புறப்பட தயாரான விமானத்தில் துயர சம்பவம்… சக பயணிகள் கண்முன்னே பெண் எடுத்த விபரீத முடிவு!!

துருக்கியில்..

துருக்கி விமான நிலையத்தில், புறப்பட தயாரான விமானம் ஒன்றின் படிக்கட்டில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து துருக்கியின் Adnan Menderes விமான நிலையத்திலேயே திங்களன்று குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான Beyza Taskiran என்பவர் சக பயணிகளின் முன்னிலையில், 50 அடி படிக்கட்டில் இருந்து குதித்துள்ளார்.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ள Beyza Taskiran, விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து தரையில் மோதி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் தமது அலைபேசியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவரது அலைபேசியை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர் யாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதை அறிந்துகொள்ள விசாரணை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளதுடன், உடற்கூராய்வுக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மனைவியை சூட்கேசில் அடைத்து 400 கி.மீ கொண்டு சென்று எரித்த கணவர்!!

உத்தரபிரதேசத்தில்..

நாட்டில் நாளுக்கு நாள் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காதலியை கொன்று பிரிட்ஜுல் வைப்பது, கணவனை கொன்று பல துண்டுகளாக துக்கி எரிவது, கணவன் மனைவிக்கு விஷம் கொடுப்பது என என்னற்ற குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.

அதுவும் குடும்பத்திற்குள் நடக்கு கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரை சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக்.

இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (28). அபிஷேக் ஒரு ஆயுர்வேத டாக்டராவார். சீதாபூர் சாலையில் சொந்தமாகவே மருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வருகின்றனர் அபிஷேக்.

நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தன் மனைவியை காணவில்லை என்று டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன், விலை உயர்ந்த சில பொருட்களை, வீட்டில் இருந்து மனைவி எடுத்து சென்றுவிட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போதுதான், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்து போயுள்ளது தெரியவந்தது. அதனால், அபிஷேக் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது.

எனவே, அபிஷேகிற்கு தெரியாமல் அவரது நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணித்த ஆரம்பித்துள்ளனர். சந்தேகம் வலுக்கவே, தங்கள் பாணியில் விசாரிக்க, அப்போதுதான் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டிருகிறார் அபிஷேக்.

சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் வழக்கம்போல் தகராறு வந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த அபிஷேக், மனைவியை அடித்துள்ளார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அபிஷேக், சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை சுமார் 400 கிமீ தொலைவிற்கு கொண்டு சென்று, யாருமற்ற பகுதியில் போட்டு தீ வைத்து எரித்துள்ளார்.

இந்த கொலைக்கு அவரது அப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.