வடமாகாணத்தில் முதல் தடவையாக சட்டத்திற்கோர் அறிமுகத்தை உருவாக்கி இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் எதிர்கால சந்ததியினருக்கான வாழ்வியல் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்டு இக் கருத்தமர்வு நடைபெறவுள்ளது.
இக் கருத்தமர்வில் சட்டக்கல்வியின் அவசியம் , மனித உரிமைச் சட்டம் வாழ்வியல் சட்டம் போன்ற இச்சட்டங்களினை கற்பதன் ஊடாக எவ்வாறான நன்மைகளை பெறலாம் என்பதையும், எங்களை எந்தளவிற்கு பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் சட்டக்கல்வியை கற்பதன் ஊடாக தொழில்சார் வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் எமது நாட்டில் சட்டத்தின் தேவை எந்தளவிற்கு அத்தியாவசியமானது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இவ் செயலமர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும். இக் கருத்தமர்வில் கலந்து கொள்ள விரும்பியவர்கள் தொடர்புகளுக்கு 0760970955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் அல்லது IDM Nations Campus International, Regional Campus – North, Legal Studies Department , kurumankadu , Vavuniya என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவுகளை மேற்கொள்ளவும்
விண்ணப்ப இறுதித்திகதி 17.12.2022 மாலை 7.30 மணிக்கு முன்பதாக பதிவுகளை மேற்கொள்ளவும்
பாகிஸ்தானை சேர்ந்த 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத் மெங்கல் (75). இவர் கடந்த 2017ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய சமயத்தில் உலகளவில் வைரலானார்.
இதற்கு காரணம் மஜீத்துக்கு ஆறு மனைவிகள் மூலம் 54 குழந்தைகள் பிறந்தது தான். அப்போது அளித்திருந்த பேட்டியில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாக ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
மஜீத்தின் இரண்டு மனைவிகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது நான்கு மனைவிகள் உயிருடன் உள்ளனர். அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே மஜீத் உயிர் பிரிந்தது, அவரின் 12 குழந்தைகள் ஏற்கனவே பட்டினியால் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பில் மஜீத் முன்னர் அளித்திருந்த பேட்டியில், நான் டிரக் ஓட்டுனராக இருக்கிறேன்.
ஒரு சமயத்தில் என் மூத்த பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க கடுமையாக உழைத்தேன், ஆனால் தற்போது வயதாகிவிட்டதால் எல்லாம் என் கையை மீறி போய்விட்டது என கூறியது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வீதியினை கடக்க முற்பட்ட இளைஞனை பிக்கப் ரக வாகனம் மோதித்தள்ளியதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (16.12.2022) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதசாரிகள் கடவையற்ற பகுதியில் இளைஞர் ஒருவர் வீதியினை கடக்க முயன்றுள்ளார். இதன் போது எதிர்த்திசையில் வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை என பெயர்பலகையுடைய பிக்கப் ரக வாகனம் வீதியினை கடக்க முயன்ற இளைஞனை மோதித்தள்ளியது.
இவ்விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நம் சிறு அலட்சியம் கூட குழந்தைகளுக்கு விபரீதமாக முடிந்து விடும். இதே போல் ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி.
இவர்களுக்கு 7 வயதில் யுகந்திகா என்ற மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். இதில் யுகந்திகா, மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள்.
குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் படுக்கை அறையில் யுகந்திகா கையில் சால்வை துணியை வைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஜன்னல் கம்பியில் சால்வை துணியை கட்டி, தனது கழுத்தில் கோர்த்துக்கொண்டு விளையாடினாள்.
இதில் எதிர்பாராதவிதமாக சால்வை துணி, யுகந்திகாவின் கழுத்தை இறுக்கத் தொடங்கிவிட்டது. அவளால் கத்த கூட முடியவில்லை. அதே இடத்தில் மயங்கி விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவளை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அதற்குள் யுகந்திகா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி திடீரென உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
87 வயதான இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார். கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
இதற்காக, ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்திற்கு வரதா நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.
ஒன்ராறியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மூத்த முதுகலை பட்டதாரி ஆன வரதா சண்முகநாதனின் பட்டம், இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் அமைதிக்கான முயற்சிகளை மையமாகக் கொண்டது.
இலங்கையில், வேலணை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வரதா சண்முகநாதன், தனது நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் தேடுவதைக் கண்டார்.
ஒன்ராறியோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வரதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி சிறப்புரையும் நிகழ்த்தினார். வரதாவின் முதல் முதுகலை பட்டம் இதுவல்ல.
இந்தியாவில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலத்தை கற்பிப்பதற்காக இலங்கை திரும்பினார்.
1990-ஆம் ஆண்டில், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க லண்டனுக்குச் சென்றார், மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மொழியியலில் தனது முதல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
பின்னர், யோர்க் பல்கலைக்கழகத்தின் ஷூலிச் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் MBA பட்டம் பெற்ற தனது மகளுடன் இருக்க வராதா சண்முகநாதன் 2004-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.
யோர்க் பல்கலைக்கழகம் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பயிற்சி வழங்குவதை அறிந்ததும், அரசியல் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க இது தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை உடனடியாக உணர்ந்ததாக வரதா சண்முகநாதன் கூறினார்.
இதன் விளைவாக, தனது மகளின் ஊக்கத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அவர் 2019-ல் தனது படிப்பைத் தொடங்கிய அவர் நவம்பர் 2 அன்று 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி தற்போது அந்த புற்று நோயில் இருந்து மீண்டு, தான் ஒரு மறுபிறவி போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழிலும் பிரபலமான ‘நான் ஈ’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய பல படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி, கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும், அதற்காக அறுவைச் சிகிச்சை மற்றும் பலமுறை கீமோ சிகிச்சையும் பெற்று வந்தார். அந்த சமயத்தில், “உங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஊக்குவிப்புக்காக அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி.
இந்த கடினமான காலங்களில், உங்கள் கட்டுக்கடங்காத அன்பு வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் அளித்தது மற்றும் இந்த போரில் நான் தனியாக இல்லை என்று எனக்கு உறுதியளித்துள்ளது.
எனது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு மூலையிலிருந்தும் இதுகுறித்த கவலைகள் வெளிப்படுவதைக் கண்டு நான் நம்பிக்கைக்கும், அப்பாற்பட்ட பணிவுடன் இருக்கிறேன்.
நான் வலிமையானவள், அனைவரின் வார்த்தைகளும் என்னை மேலும் வலிமையாக்குகிறது. அன்பு, ஹம்சா” என்று ஹம்சா நந்தினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அந்த புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ள நடிகை ஹம்சா நந்தினி, கடந்த வியாழக்கிழமை தனது 38வது பிறந்த தினத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டாடியதுடன் “நான் மீண்டு மீண்டும் வந்துவிட்டேன்.
இப்போது மறுபிறவி எடுத்தது போல உள்ளது. என் அம்மாவின் உயிரை பறித்த அதே புற்றுநோயில் இருந்து நான் மீண்டுள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அன்பு முத்தங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவரது முதல் மனைவி சானு பி சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதை தொடர்ந்து அவர் அஜ்மேரி ஹலிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரிந்து சென்ற முதல் மனைவி சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டார்.இப்போது மோஜிமுக்கு இரண்டாவது மனைவியை பாரமாகிவிட்டார்.இதனால் 2 வது மனைவியை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார்.
இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பாம்பு பிடிப்பவர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பான ரஸ்ஸல் வைப்பருடன் மோஜிமின் வீட்டிற்கு சென்று உள்ளார்.
ஜன்னல் வழியாக பாம்பை விட்டிற்குள் விட்டு உள்ளார். வீட்டில் 2வது மனைவி ஹலிமா மட்டும் இருந்துள்ளார்.அதே இரவில் ஹலிமாவை பாம்பு கடித்துள்ளது.காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்தார். காலையில் ஹலிமா எழுந்ததும், மோஜிம் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் அவரை பிடித்து பாம்பை கடிக்க வைத்தனர்.
ஹலிமா சத்தம் போட்டு உள்ளார் உடனடியாக அக்கம்பக்கத்தினரை விரைந்து வந்து ஹலிமாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவர், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால், அவரது உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கில் கணவர், பாம்பு பிடிப்பவர் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு முறை இவ்வளவு கொடூர விஷப்பாம்பு கடித்தும் ஹலிமாவின் உயிர் பிழைத்தது எப்படி? அப்படியானால் சில சமயங்களில் இதுபோன்ற பாம்புகள் பொய் கடியும் கடிக்கின்றன, அந்த கடியின் போது விஷம் அதன் உடலை விட்டு வெளியேறாது என கூறப்படுகிறது.
சொந்த மகளையே ம.து போ.தையில் பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு பு.ரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (15.12.2022) 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
மகளையே பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு கு.ற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த கு.ற்றவாளிக்குக் க.டும் த.ண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சி.று.மிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பா.தி.க்கப்பட்ட சி.று.மி 11 வ.யதுடைய பா.டசாலை மா.ண.வி என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு வி.சாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பாதிக்கப்பட்ட சி.று.மி, தாயார் வீட்டில் இல்லாதபோது ம.து.போ.தை.யி.ல் வந்து தன்னைப் பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு பு.ரிந்ததாக தனது தந்தை மீது கு.ற்றம் சாட்டி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
வவுனியா நீதவானின் உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலமாக சிறுவர் இல்லமொன்றில் வசித்து வருவதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
பா.தி.க்கப்பட்ட சி.று.மி.யை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி கன்னிச்சவ்வு சிதைவடைந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சி.று.மி 11 வயதுடையவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவரது பிறப்பத்தாட்சிப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சி.று.மியின் சாட்சியத்தை சட்ட வைத்திய அறிக்கை ஒப்புறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதி இளங்செழியன் எதிரியைக் கு.ற்றவாளி எனக் குறிப்பிட்டு 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கியதுடன், சிறுமிக்கு 3 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் 15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறும் பட்சத்தில் 9 மாதக் கடூழியச் சிறையும், தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 3 மாத கால சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் தரப்பில் அரச சட்டவாதி செஸான் மஃப் வழக்கை நெறிப்படுத்தினார்.
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆ.சசிந்திரன் உயிரிழந்தார்.
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று பகல் ஒரு மணியளவில் தனியாக காரை செலுத்தி வந்துள்ள நிலையில் நிந்தவூர் மாட்டுபாளையம் வீதி வளைவில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து ஓட்டுனரான 50 வயது நபர் மீது 24 வயது பெண் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது, பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
அவர் வெளியிட்ட காணொளியில் 50 வயது ஓட்டுனர் மீது 24 வயது பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், பேருந்து ஓட்டுநராக இருப்பவர் சாதிக்.
அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சேஷாதி. பேருந்து ஓட்டுனராக இருக்கும் சாதிக்கின் பேருந்தில் சேஷாதி அடிக்கடி பயணித்து வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலும் மலர்ந்துள்ளது.
சாதிக்கிற்கு 50 வயதாகும் நிலையில், சேஷாதிக்கு 24 வயது ஆவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 26 வயது இடைவெளியை அவர்கள் பெரிய அளவில் பொருட்படுத்தாமல், ஒருவருக்கு ஒருவர் காதலித்ததுடன் திருமணமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
சாதிக் பேருந்தில் போடும் பழைய பாடல்கள் மற்றும், அவர் பேருந்து ஓட்டும் அழகு, அவர் பேசும் ஸ்டைல் இவற்றினால் அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் கூறியுள்ளார்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதலை சாதிக்கிடம் சேஷாதி தான் வெளிப்படுத்தியுள்ளாராம். தற்போது இந்த காதல் ஜோடி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் திருட்டுக்களும், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எத்தனையோ எச்சரிக்கைகள் விடுத்த பின்னும் இன்றைய இளம் தலைமுறையினர் அதை அலட்சியமாகவே பார்த்து விட்டு அவர்களின் இஷ்டப்படி நடக்கின்றனர். பல நேரங்களில் இதனால் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
இதே போல் ஒரு சம்பவம் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஆஆந்திராவில் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் மாணவி ஒருவர் .இவர் தனது அப்பாவுக்கு தெரியாமல் அவரது வங்கிக் கணக்கில் ரூ80000 வரை பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்.
இதனை அவரது தந்தை கண்டுபிடிப்பதற்குள் எப்படியாவது சம்பாதித்து வங்கி கணக்கில் செலுத்திவிட வேண்டும் என திட்டமிட்டு ஆன்லைனில் வேலை தேடிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் சிறுநீரகம் நன்கொடை அளித்தால் பணம் தருவதாக வந்த லிங்க்கை பார்த்து அதனை க்ளிக் செய்தார். இதில் கேட்ட அனைத்து தகவல்களையும் பதிவிட்டு தனது சிறுநீரகத்தை நன்கொடை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மர்மநபர்கள் சிலர் ஆன்லைனில் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சைக்கு முன்பு 3 கோடி ரூபாயும் சிகிச்சைக்கு பின்னர் 3 கோடி ரூபாயும் தருவதாக கூறினர். இதனை கல்லூரி மாணவி உண்மை என நம்பினார். இதன் அடிப்படையில் அவர்களே சிட்டி பேங்க்கில் கல்லூரி மாணவி பெயரில் போலிக் கணக்கை தொடங்கி அதில் 3 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதாக கூறினர்.
இந்த போலி வங்கி கணக்கு எண்ணை கல்லூரி மாணவியின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பினர். அதே நேரத்தில் இந்த பணத்தை உபயோகப்படுத்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் மற்றும் வரி செலுத்த வேண்டும் எனக் கூறினர்.
இதனை நம்பி கல்லூரி மாணவி தனது தந்தை வீடுவாங்க வைத்திருந்த ரூ20 லட்சம் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம்.மில் தந்தைக்கு தெரியாமல் எடுத்து ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் ரூ16 லட்சம் வரை செலுத்தி உள்ளார்.
ஒரு நாள் மாணவியின் தந்தை வங்கியில் பணம் எடுக்க சென்ற போது வங்கி கணக்கில் ரூ 4 லட்சம் மட்டும் இருப்பதாகவும் மற்ற பணத்தை பயன்படுத்தி விட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மாணவியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறினார். உண்மை தெரிந்துவிடுமோ எனப் பயந்து போன மாணவி தனது தோழி வீட்டிற்கு சென்று விட்டார்.
அதே வேகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்களுக்கு போன் செய்து மாணவி தான் சிறுநீரகம் விற்கவில்லை எனவும் உடனே தனது பணத்தை திருப்பித் தரும்படியும் கேட்டார்.
டெல்லிக்கு நேரில் வந்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி அவர்கள் சொன்ன முகவரிக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை கல்லூரி மாணவி உணர்ந்தார். இதற்கிடையில் மகளை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் மாணவியின் தந்தை.
இதன் அடிப்படையில் மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து மாணவி இருக்கும் இடத்தை அறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விபரங்களை கேட்டறிந்த பிறகு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தந்தைக்கு தெரியாமல் செலவு செய்த ரூ80000 ஐ சம்பாதிக்க ரூ16லட்சத்தை கோட்டை விட்ட மகளைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என தந்தைக்கு தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வவுனியா திருநாவறக்குளம் முதலாம் ஒழுங்கையின் 970 மீற்றர் தூரத்தினை செப்பனிட்டு தருமாறு கோரி பொதுமக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (15.12.2022) மதியம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மோசம் மோசம் வீதியோ படு மோசம், வேண்டும் வேண்டும் வீதி வேண்டும், ஐரோட் 5 வருடங்கள் வீதியோ கேள்விக்குறி, கவனி கவனி ஆர்.டீ.ஏ எம்மை கவனி,
கிராமத்தின் வளர்ச்சி வீதியின் அபிவிருத்தி போன்ற கோசகங்களை எழுப்பியவாறும் விவசாய உற்பத்திகளை நகரம் தாண்டி நரகம் அனுப்பு ஐரோட் , ஆர் டீ ஏ ஒப்பந்த நிறுவனத்தை வலியுறுத்து,
மோசம் மோசம் எமது வீதி படுமோசம் போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 25க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா, குடாகச்சக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (14.12) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குடாகச்சக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
குடாகச்சகொடிய மேதாமாவத்தையை சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கிற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பம் என்றால் சண்டைகள் சச்சரவுகள் பல இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்துக் கொள்வது, கொலை செய்வது போன்ற விபரீத முடிவுகளை பலர் எடுத்து வருகின்றனர்.
அப்படி ஒரு கொடூர சம்பவம் தான் திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் மனைவி, மூன்று மகள்கள், மகனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி , இவர்களுக்கு த்ரிஷா என்ற 15 வயது மகளும், மோனிஷா என்ற 14 வயது மகளும் சிவசக்தி என்ற 6 வயது மகளும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பழனி தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் மவுசுமி. இவரது மகள் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி. இவர் 2 வயது இருக்கும் போது இவரின் அப்பா உயிரிழந்துவிட்டார். இதனால் தாய் மவுசுமி மறுமணம் செய்து கொள்ளாமல் மகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.
அப்போது மவுசுமிக்கு 25 வயதுதான் என்பதால், மறு திருமணம் செய்து கொள்ளும்படி உறவினர்கள் பலரும் கூறியுள்ளனர். அப்போது எல்லாம் ‘எனக்கு ஒரு கணவன் கிடைத்து விடுவார். ஆனால் மகளுக்குத் தந்தை கிடைக்கமாட்டார்’ என கூறி மறுத்தே வந்துள்ளார்.
இந்நிலையில் 50 வயதாகும் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என மகள் ரியா சக்ரவர்த்தி நினைத்துள்ளார். இதற்கிடையில் ரியா சக்ரவர்த்தியின் அத்தை, ‘உன் அம்மாவை ஒருவர் விரும்புகிறார்’ என கூறியுள்ளார். இதைக்கேட்டு மகள் உற்சாகம் அடைந்துள்ளார்.
பின்னர், இதுபற்றி தாயிடம் தெரிவித்து அவரது ஒப்புதல் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் மவுசுமி-யின் திருமணம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைத் தனது இன்ஸ்டாகிராம் மூலம் மகள் ரியா சக்ரவர்த்தி அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ரியா சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவில், “அப்பாவின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டோம். அப்போது எனக்கு 2 வயது. அம்மாவிற்கு 25 வயது. அப்போது எல்லோரும் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி கூறினர்.
ஆனால் அவர் எனக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அம்மாவுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கும் ஒரு அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டேன். தற்போது அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தாய், மகள் இருவருக்கும் இணைய வாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபர், கணவருடன் வாழ்ந்து வரும் காதலியை அடையாளம் காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ரசீத்பூரைச் சேர்ந்தவர் சோனு சைனி. இவர் கடந்த 2015ஆம் தனது காதலி ஆரத்தியை கொலை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணின் பெற்றோர் சோனு தங்கள் மகளை திருமணம் செய்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் ஆகியோர் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இந்த நிலையில், சோனு சைனி மற்றும் கோபால் சிங் இருவரும் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தனர்.
ஆரத்தி உயிருடன் தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க இருவரும் அவரை தேடத் தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தின் விஷாலா கிராமத்தில் ஆரத்தி வசிப்பதாக தகவல் அறிந்த சோனு, அங்கு சென்று அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மெகந்திப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் வேண்டும் என்று சோனு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உதவ மறுத்துவிட்டதால், இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்கு சோனு அடையாள அட்டையை கைப்பற்றியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் விசாரணையில் இறங்கியதாக சோனு கூறியுள்ளார்.
மெகந்திப்பூர் பொலிஸார் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தர பிரதேச பொலிஸார் ஆரத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில், அப்பெண் தனது கணவர் பகவான் சிங் ரேபாரி என்பவருடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
மேலும், ஆரத்தியின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, கொலை வழக்கு போலியாக பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக தனது பெற்றோருடன் ஆரத்தி தொடர்பில் இருந்துள்ளார். அத்துடன் சோனு, கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதை ஆரத்தி அறிந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஆரத்தி மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சோனு கைது செய்யப்பட்டதால் அவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவர் இந்த வழக்கிற்காக 20 லட்சம் வரை செலவிட்டு, கடனாளியானதாக வேதனை தெரிவித்துள்ளார்.