நண்பனை இறக்கிவிடச்சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

பேருவளை..

பேருவளை, பந்தனாகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.12.2022) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பந்தனாகொட பிரதேசத்தில் அருகில் பலா மரத்தில் மோதியுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய கெமுனு மங்கள ஜயரத்ன என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பணி முடிந்து தனது நண்பரை வீட்டில் விட்டு வரச் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அத்துடன், விபத்தில் நண்பரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் இருவர் கைது!!

இருவர் கைது..

வவுனியாவில் நேற்று மாலை இருவேறு பகுதிகளில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின்போது இருவர் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மருதோடை, புளியங்குளம் பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய பொலிசார் 38வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இதே வேளை செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதி வீடு ஒன்றில் கட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் கட்டுத் துப்பாக்கி ஒன்றினையும் 30வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தால் நிகழ்ந்த சோகம் : காதல் மனைவியை அடித்தேக் கொன்ற கணவர்!!

தூத்துக்குடியில்..

ஆசையாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்துக்கொண்ட மனைவியை சந்தேகம் என்னும் கொடிய நோயால் கணவரே கொலை செய்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அடுத்த திருமாஞ்சி நகரில் வசித்து வருபவர் இமானுவேல் அப்துல்லா. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இமானுவேல் அப்துல்லா, தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இமானுவேல் அப்துல்லா, கன்னிதாயை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, இமானுவேல் அப்துல்லா அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், கொலையான கன்னிதாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர். சந்தேகம் எனும் கொடிய நோயால் ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விடிந்தால் திருமணம் … நள்ளிரவில் மாப்பிள்ளை செய்த செயலால் மணமகள் எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானாவில்..

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த மணமகனால், மணமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

திருமணத்திற்கு முந்தைய நாள் (நேற்றைய முன்தினம்) மெகந்தி விழாவில் மணமகளின் தோழிகள் மகிழ்ச்சியாக நடனமாடவே, இவரும் சேர்ந்து நடமாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். மேலும் மணமகளும், மணமகனும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மறுநாள் (நேற்று) காலை மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக அவரது அறை கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் திறக்காத நிலையில் பயந்துபோன உறவினர்கள்,

கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கே ரவளி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட பெண்ணின் உறவினர்கள் பதறியடித்து உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், ரவளி இரவு நேரம் அதுவும் மணி கணக்காக மாப்பிள்ளையிடம் போனில் பேசியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், மாப்பிள்ளை சந்தோஷ் ரவளிக்கு வரதட்சணை கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் நன்றாக படித்து சம்பாதித்து வந்த ரவளி திருமணத்திற்கு பிறகு நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் எனவும்,

அவ்வாறு கிடைக்கும் பணத்தை தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருமணம் முடிந்த கையோடு பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை பிரித்துவிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு அனைத்து விருந்தாளிகளும் வந்த பிறகு திருமணம் நின்று விட்டால், பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் என்று எண்ணிய ரவளி திகைத்து நின்றுள்ளார். இதனால் மணமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணமகன் சந்தோஷ் மீது ரவளியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த மணமகனால், மணமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 658,746 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,450. ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,700. ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கையின் திருமணத்தில் வித்தியாசமாக சீதனம் கொடுத்து அசத்திய அண்ணன் : வியந்துபோன உறவினர்கள்!!

தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை திருமணத்தில் சீதனமாக வழங்கி அசத்திய அண்ணன் பாசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுரேஷ்- செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதில் திருமண வரவேற்பு மணமேடைக்கு அருகில் வந்த விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தானும், தனது தங்கையும் சிறு வயது முதல் ஆசையாக பார்த்து பார்த்து வளர்த்த சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை சீதனமாக ஒன்றின் பின் ஒன்றாக மேடையேற்றினார்.

இதனை பார்த்த மணமகள் விரேஸ்மா மற்றும் உறவினர்கள் அசந்து போயினர். சிலர் இதுபோன்ற சீதனத்தை யாரும் பார்த்ததே இல்லை என்றும் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் திருமணத்தில் அண்ணன் வழங்கிய ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகிய சீதனத்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட மணமகள், பாசமாக வழங்கப்பட்ட சீதனத்திற்கு முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

தங்கையின் திருமணத்தில் அண்ணனின் இத்தகைய சீதனங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர் இப்படி ஒரு திருமண சீதனமா? என்று ஆச்சரியத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

52 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 21 வயது இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

காதல்..

காதலுக்கு கண் இல்லை என் சொல்லுவார்கள். ஆனால் வயது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள ஒரு சம்பவம் உங்களை ஆச்ச்ர்யத்தில் ஆழ்த்தும். காதல் வயப்பட்டால், அவர் வயது மற்றும் சாதியைப் பார்க்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

காதல் துணையிடம் தனது இதயத்தை தனது துணையிடம் ஒப்படைத்து அதன் மூலம் மகிழ்ச்சியை அடைகிறார். காதலர்களின் வயதில் பெரிய வித்தியாசம் இருந்தாலும், அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வயதானவர்கள் மிகவும் இளம் பெண்னை மணக்கும் சம்பவம் பல கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், இந்த செய்தியை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு இளைஞன் தன்னை விட 31 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவன் காதலுக்கு வயது இல்லை என்று அடித்துக் கூறுகிறான்.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், திருமண மேடையில் 21 வயது வாலிபர் ஒருவர் நிற்பதையும், அவருக்குப் பின்னால் ஒரு நாற்காலி இருப்பதையும் காணலாம். பொதுவாக திருமணங்களில் மட்டுமே காணப்படும் அலங்கார நாற்காலிகள் இருக்கின்றன.

இருவரும் கழுத்தில் மாலை அணிவித்துள்ளனர். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்று ஒருவர் பையனிடம் கேட்கையில், அப்போது சிறுவன் ஆம் என்று பதிலளித்தான்.

அப்போது வீடியோ பதிவை செய்துள்ள நபர் அந்த வாலிபரிடம் வயது கேட்க, அவருக்கு 21 வயது என்றும், தான் திருமணம் செய்த பெண்ணுக்கு 52 வயது என்றும் கூறியுள்ளார்.

அப்போது எதிரில் நின்றவர்கள் அண்ணா, நீங்கள் செய்தது சரியா என்று கேட்கையில், அதற்கு சிறுவன், ‘காதலுக்கு வயதில்லை; வயது பார்த்து காதல் வருவதில்லை’ என்று பதிலளித்தான். காதல் உணர்வு என்பது எப்போது வேண்டுமானாலும், யாரை பார்த்தாலும் எழலாம் எனக் கூறினார்.

இந்த திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று வீடியோ பதிவு செய்த நபர் கேட்க, அதற்கு அந்த பெண் ஆம், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நான் என்னை விட அவரை அதிகமாக நம்புகிறேன். ஏனென்றால் நான் இவனுடன் மூன்று வருடங்கள் பழகி வருகிறேன் என்றார். இது குறித்து சிறுவன் மேலும் கூறுகையில்,

‘காதலுக்கு வயது இல்லை, இதயம் தான் தெரியும். ஒருவன் நல்லவனாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியானவுடன், அது மிகவும் அதிகமாக வைரலானது. இந்த வீடியோவை அமித் சதுர்வேதி என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவைப் பகிரும் போது, ​​’அவருக்கு மாலை அணிவித்தவுடன் கலியுகத்தின் கடைசிக் கட்டம் தொடங்கியது’ என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை பகிர்த்துள்ளார்.

இந்த வீடியோ இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்று இந்த வீடியோவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

கர்ப்பிணி நடிகையை கொ.டு.மைப்படுத்திய கணவன்? பிறந்தநாளில் நெகிழ்ச்சி செயல்!!

சின்னத்திரையில்..

சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர், கர்ப்பிணி என்றுகூட பாராமல் தன்னை தன் கணவர் அ.டி.த்.து து.ன்.பு.றுத்துவதாக கூறி பரபரப்பை கி.ளப்பினார். கேளடி கண்மனி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர், அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சகநடிகரான அர்னவ் மீது காதலில் வி.ழுந்தார்.

இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த சிலையில் சில வாரங்களுக்கு முன் அர்னவ் அ.டி.த்.து து.ன்.பு.றுத்துவதாக புகார் அளித்தார் திவ்யா. வயிற்றில் உள்ள க.ரு க.லையும் அளவுக்கு தன்னை அ.டி.த்.து கொ.டு.மை.ப்படுத்துவதாகவும், வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அடுக்கடுக்கான கு.ற்.றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுதொடர்பான வழக்கில் அர்னவ் கை.து செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். இப்போதும் கூட அதே நடிகையுடன் ஒன்றாக தங்கியிருப்பதாகவும், ஒருதடவை கூட தனக்கு போன் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார் திவ்யா.

மேலும் தான் தங்கியுள்ள வீட்டின் EMIயை கூட கட்ட மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு சீரியல் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், சொகுசு கார் ஒன்றையும் வாங்கி அசத்தினார் திவ்யா. இதற்கிடையே தன்னுடைய பிறந்தநாளை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் கொண்டாடியுள்ளார், இதுதான் உண்மையான சொர்க்கம் என்ற கேப்ஷனுடன் திவ்யா வெளியிட்ட வீடியோவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகி்ன்றனர்.

பசியுடன் 300 கிமீ நடந்து போன நபர்.. கலங்க வைத்த பின்னணி!!

கேரளாவில்..

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த நபர் ஒருவர் திண்டுக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்று இருக்கிறார். இதற்கான காரணம் தான் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

கேரள மாநிலம், பத்தினம் திட்டாவை சேர்ந்தவர் அனில். இவரிடம் செல்போன் கிடையாது. அதேபோல இவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என யாருடைய போன் நம்பரும் தெரியாது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் தனது மருமகளை சேர்த்து விட குடும்பத்துடன் சென்று இருக்கிறார் அனில்.

மருமகளை கல்லூரியில் சேர்த்து விட்டு குடும்பத்தினருடன் அவர் வீடு திரும்பியிருக்கிறார். ஆந்திராவில் இருந்து திருப்பதி வழியாக காட்பாடி, சேலம், திண்டுக்கல் வரை வரும் ரயிலில் பயணித்திருக்கிறது அனிலின் குடும்பம்.

அப்போது பசி எடுக்கவே ரயிலில் இருந்து இறங்கி சாப்பிட சென்று இருக்கிறார் அனில். யாரிடமும் சொல்லாமல் இறங்கி அவர் சென்றது உறவினர்களுக்கு தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டு, அவர் திரும்பி வருவதற்குள் ரயில் புறப்பட்டு சென்று விட்டது.

இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ரயில் நிலையத்தில் நெடுநேரம் அமர்ந்திருக்கிறார் அனில். அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தும் போது நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து அனிலுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த போலீசார் ரயில்வே நிலையத்திலிருந்து வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக தேனி வரை அனில் வந்து சேர்ந்துள்ளார்.

அதன் பிறகு கம்பம், கூடலுர் என கேரள எல்லையான குமுழிக்கு நடந்தே சென்று இருக்கிறார். கையில் இருந்த பணமும் காலியாகிவிட்டதால் பசியுடன் நடந்து சென்ற அணில் யாரிடமும் காசு கேட்க கூச்சப்பட்டு கொண்டு நடந்திருக்கிறார்.

மற்றொருபுறம் கேரளாவின் செங்கனூர் சென்று சேர்ந்த பிறகு அனிலின் குடும்பத்தினருக்கு அவர் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

இதனிடையே கோவில்களில் வழங்கும் அன்னதானங்களை சாப்பிட்டுக் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து ரயில்வே நிலையங்களில் உறங்கியும் தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார் அனில். ஒரு வழியாக அவர் கோட்டையம் சென்று சேர்ந்து இருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து நடந்து வந்ததால் அவரால் மேற்கொண்டு தனது பயணத்தை தொடர முடியாமல் போயிருக்கிறது. அப்போது அங்கிருந்த சிலர் அவரை கவனித்து விசாரித்து இருக்கின்றனர். அவர்களில் அனிலின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரும் இருந்திருக்கிறார்.

உடனடியாக இதுகுறித்து குடும்பத்தினருக்கு அவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக அனில் தனது குடும்பத்தாரை மீண்டும் சந்தித்திருக்கிறார். கையில் பணம் இல்லாமல் யாருடைய போன் நம்பரும் தெரியாமல் சுமார் 300 கிலோ மீட்டர் நடந்தே சென்ற அனிலின் கதை பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி!!

அமெரிக்காவில்..

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்ணன் என்ற தமிழ் இளைஞரை மணமுடிக்க உள்ளதாக கடந்த 2019ல் தெரிவித்த நிலையில் அதே ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது.

சமந்தா கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பட்டு சேலையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாணவி போல வேடமிட்டு சென்ற பெண் போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்!!

மத்திய பிரதேசத்தில்..

கல்லூரியில் நடைபெறும் ரேகிங்கை தடுக்க 24 வயது பெண் போலீஸ் ஒருவர் மருத்துவ கல்லூரி மாணவி போல சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மாகத்மா காந்தி மெமோரியல் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரியில் ரேகிங் நடைபெறுவதாக புகார் அளித்தார்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அவற்றை தடுக்க முடியாத நிலையில், இரண்டு பெண் போலீஸ்கள் மாணவிகள் போலவும், ஒருவர் நர்ஸை போலவும், மேலும் 2 பேர் கேண்டீனில் பணியாற்றுபவர்கள் போலவும் மாறு வேடத்தில் சென்றனர்.

மாணவர்கள் இவர்களிடம் ரேகிங் செய்யவே, அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதில் 11 மாணவர்கள் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வவுனியா பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா 2022!!

பாரதி முன்பள்ளி..

வவுனியா பாரதி முன்பள்ளி மாணவர்களின் பாரதி கலைவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் இடம்பெற்றது.

மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர் தர்மலிங்கம் ஸ்ரீகாந்தன்,

வவுனியா தெற்கு ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் செ.விஜயகாந்தன் , வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் வளவாளர் எஸ்.மனோகரன் , முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீரவாகு பரஞ்சோதி அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் க.விஜயகுமார் , மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயகெனடி அவர்களும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் கடல்.. மறுபக்கம் உறைந்துபோன பனி : இயற்கை அன்னையின் ஆச்சரியம் : எங்கு தெரியுமா?

ஜப்பானில்..

இயற்கை அன்னையின் ஆச்சரியங்களுக்கு எல்லை இல்லை நாங்கள் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை இயற்கை அன்னை எளிதில் இந்த பூமிப் பந்தில் வழங்கிச் செல்கின்றாள்.

அந்த வகையில் இயற்கை அன்னையின் ஓர் கொடையாக ஜப்பானில் அமைந்துள்ள ஓர் கடற்கரையாக ஜப்பானின் கடற்கரையை நாம் குறிப்பிடலாம். பொதுவாக கடற்கரை என்றாலே மணல் பரப்பும் கடல் அலைகளுமே எமக்கு நினைவில் வரும் எனினும் சற்றே வித்தியாசமாக ஜப்பானின் ஒரு கடற்கரை இரண்டு விதமான அனுபவங்களை வழங்குகின்றது.

கடல் அலைகளும் பனிப்படலம் என இருவேறு பூகோள தரைத்தோற்ற மாற்றங்களை இந்த கடற்கரை ஒரே நேரத்தில் கொண்டுள்ளது. இந்த கடற்கரைக்குச் செல்லும் நபர்கள் கடற்கரையில் இருந்து ஒரு புறத்தில் நீரால் சூழப்பட்டு, கடல் அலைகளையும் மறுபுறத்தில் வெள்ளை நிறப் பனி படலத்தையும் கண்டு ரசிக்க முடியும்.

இஷா என்ற புகைப்படக் கலைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஓர் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. ஒரே இடத்தில் கடற்கரையின் ஒரு முனையில் கடலும் மறுமுனையில் பனிப்பாறையும் காணப்படும் அற்புதமான ஒரு காட்சியை தத்ரூபமாக படமெடுத்து பதிவிட்டுள்ளார்.

புகைப்படத்தின் வலது பக்கத்தில் பணி படலமும் இடது பக்கத்தில் கடல் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும் இந்த புகைப்படம் பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படம் பிரபல்யம் அடைந்தாலும் உலகில் இவ்வாறான கடற்கரைகள் வேறு இடங்களிலும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா, மிச்சிகன், ச்செத்தம் போன்ற இடங்களிலும் இவ்வாறான காட்சிகளைக் கொண்ட கடற்பரைகளை நாம் காண முடியும்.

இந்த புகைப்படத்தை பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு சென்று இந்த கடற்கரையை பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்.. போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட யூடியூப் பிரபலம்.!!

ஹைதராபாத்தில்..

ஹைதராபாத்தைச் சேர்ந்த அர்மான் மாலிக் என்பவர் தன் கர்ப்பிணி மனைவிகளுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.

அர்மான் மாலிக் ஒரு Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினந்தோறும் தம்முடைய யூடியூபில் கண்டென்டுகளாக பதிவிடக்கூடிய அர்மான் மாலிக் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்திருக்கிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிராயு மாலிக் என்கிற மகன் உள்ள நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவரை அர்மான் மாலிக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து இரண்டு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரக்கூடிய அர்மான் மாலிக் அண்மையில் தம்முடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் தன்னுடைய இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானதாக அறிவித்திருந்த அவர் இரண்டு பேருடனும் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானத்துடன், ஒரே நேரத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்டை அர்மான் மாலிக் பதிவிட்டிருக்கக் கூடிய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து பலரும் இந்த மகிழ்ச்சியான குடும்பத்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

விடிந்தால் திருமணம்… நள்ளிரவில் மணப்பெண் எடுத்த வி.பரீத முடிவு!!

தெலுங்கானாவில்..

ஆந்திர மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் தி.ருமணத்திற்கு முன்தினம் தனது உ.யி.ரை மா.ய்.த்துக்கொண்ட ச.ம்பவம் அம்மாநிலம் முழுவதும் ப.ர.ப.ரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நிஜாம் பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் பிரபாகர். இவருடைய மகள் ரவளி. இவருக்கும் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் என்பவருக்கும் சமீபத்தில் தி.ருமணம் நி.ச்சயிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து தி.ருமண ஏ.ற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன. நவிபேட் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது தி.ருமணம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற இருந்தது.

இந்நிலையில், தி.ருமணத்திற்கு முன்தினம் ரவளி மற்றும் சந்தோஷ் போனில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் ம.ணப்பெண் ரவளியின் அறைக்கு எதேச்சையாக உ.றவினர்கள் செல்லும்போது, அ.றை பூ.ட்டியிருந்தது தெரிய வந்திருக்கிறது.

இ.தனால் ச.ந்தேகமடைந்த உறவினர்கள் க.த.வை த.ட்டியும் தி.றக்காததால், அ.தி.ர்ச்சியடைந்த உ.றவினர்கள் க.தவை உ.டை.த்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் ரவளி த.ன.து உ.யி.ரை மா.ய்.த்.து.க்கொண்டது தெரிய வந்திருக்கிறது.

இதனால் தி.ருமண வீடே அ.திர்ச்சியில் ஆழ்ந்தது. இ.தனையடுத்து. இதுகுறித்து நிஜாம் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரவளியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து., இது குறித்து க.ல்யாண மாப்பிள்ளை சந்தோஷிடம் காவல்துறையினர் வி.சாரணை ந.டத்தினர் அப்போது, தனக்கும் ரவளிக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் தி.ருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே சி.று வி.ரிசல் கூட ஏற்பட்டதில்லை எனவும் சந்தோஷ் கூறியதாக சொல்லப்படுகிறது.

வி.டிந்தால் தி.ருமணம் என்ற நிலையில், ம.ணப்பெண் த.ன.து உ.யி.ரை மா.ய்.த்துக்கொண்ட ச.ம்பவம் அப்பகுதி மக்களை சோ.கத்தில் ஆ.ழ்த்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் தீவிர வி.சாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டையில் கணவன் இறந்த செய்தியைக் கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினிதா.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு வந்த மனைவி வினிதா கணவன் உடலைப் பார்த்து ஓடிவந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வினிதா ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளது. இதைக்கேட்டு உறவினர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் திருநாவுக்கரசு உடல் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து மனைவி வனிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்தடுத்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.