யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்!!

யாழில்..

யாழ்.பருத்தித்துறை பகுதியில், மூ.ன்று வ.யது பெ.ண் கு.ழந்தையை பா.லி.ய.ல் வ.ன்.பு.ணர்விற்கு உட்படுத்திய கு.ற்றச்சாட்டில் கு.ழந்தையின் த.ந்தை கை.தாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.

ம.து போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த தந்தை கு.ழந்தையை வ.ன்.பு.ணர்ந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய கு.ழந்தை உடனடியாக மீ.ட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையின் போது, கு.ழந்தை வ.ன்.பு.ணர்விற்கு உ.ட்.ப.டுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த நபர் கை.து செ.ய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் க.ஞ்.சா ம.ற்றும் க.சிப்பு போன்ற போ.தை.ப்பொருளுக்கு அ.டி.மையானவர் என்றும் பணத்திற்காக தனது மனைவியை பிறருடன் த.கா.த உ.ற.வி.ல் ஈ.டுபடுமாறும் க.ட்.டாயப்படுத்தி வந்துள்ளார் என்றும்,

முதற்கட்ட வி.சாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக வி.சாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருமணமான ஒரே மாதத்தில் புதுப் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : சுயரூபத்தைக் காட்டிய மணமகன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வசுமதி (23) பொறியாளரான இவருக்கும் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ஆம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி வசுமதி தனது பெற்றோருக்கு போன் செய்து கணவர், மாமனார், மாமியோர் ஆகியோர் திருமணமாகி வந்த நாளில் இருந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், தன்னால் இங்கு வாழ முடியாது எனவும் கூறி அழுதார்.

இதையடுத்து வசுமதி தந்தை அத்தியப்பன் தனது மகள் வசுமதியை அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு வந்த நிலையில் மன வேதனையில் இருந்த அவர் கடந்த 30ஆம் திகதி தற்கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வினோத் மற்றும் அவர் பெற்றோர், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்த போதிலும் கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ள அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

இதனால் கோபமடைந்த வசுமதி குடும்பத்தார், உறவினர்கள் 4 பேரையும் கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் வசுமதி சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

உற்சாகத்தில் உடல் நடுங்கியது : கனடா லொட்டரியில் மாபெரும் பரிசை அள்ளிய தமிழ்ப் பெண் : பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

கனடாவில்..

கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் (47).

மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் சீலாவதிக்கு இரண்டாம் பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) விழுந்துள்ளது. இது தான் அவருடைய முதல் பெரிய வெற்றியாகும்.

சீலாவதி கூறுகையில், வழக்கம் போல நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என store-க்கு சென்று பார்த்தேன். அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் ‘பிக் வின்னர்’ என பார்த்தபோது, ​​மிகவும் உற்சாகமடைந்தேன், இதையடுத்து என் உடலே நடுங்கியது.

உடனடியாக காரில் உட்கார்ந்திருந்த என் மகனிடம் இந்த மகிழ்ச்சி தகவலை சொன்னேன். எங்கள் இருவராலும் இதை நம்ப முடியவில்லை என்றார்.

OLG பரிசு மையத்தில் பரிசுக்கான காசோலையை பெறும்போது சீலாவதி கூறுகையில், பரிசு பணத்தை வைத்து உடனடி திட்டங்கள் எதுவும் போடவில்லை, இருப்பினும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

பல நடிகைகளுடன் காதல் தோல்வி… சிம்புவின் திருமணம் குறித்த செய்தியை கூறிய தந்தை!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. தந்தை டி ராஜேந்தரால் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

இடையில் நடிகை நயன் தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் மற்றும் நடித்த சக நடிகைகளுடன் நெருக்கம் என்று பல காதல் தோல்வி சர்ச்சைகளிலும் சிக்கினார். மேலும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தன்னுடைய மார்க்கெட்டையும் இழந்தார்.

40 வயதுக்கும் மேல் ஆகியுள்ள சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அப்படி சமீபத்தில் சிம்புவுடன் நடித்த நித்தி அகர்வாலை திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து அவரது தந்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், என் மகனுக்கு பிடித்த மணப்பெண்ணை தேர்வு செய்ய என்னைவிட என் மனைவியைவிட சிம்புவுக்கு தான் பெண்ணை பிடிக்க வேண்டும்.

அப்படி என் குடும்பத்திற்காக குலமகளை, அந்த கலைமகளை, என் இல்லத்திற்கு ஏற்ற திருமகளை தேர்வு செய்ய இறைவன் கையில் தான் இருக்கிறது. என்னை பலர் கேட்கிறார்கள் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்று. அது இறைவன் அருளால் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டில் முடி இருந்ததால் ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த மோ.சமான செ.யல்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறினார். அப்போது தட்டில் முடி இருந்ததை பார்த்து கோ.ப.மடைந்த கணவர் சீமாதேவியின் த.லை.யை மொ.ட்.டையடித்துள்ளார்.

இந்த கொ.டூ.ர ச.ம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்ததை தொடர்ந்து, ஜாஹிருதீனை காவல்துறையினர் கை.து செ.ய்தனர். மேலும் சீமாதேவி திருமணமானதில் இருந்து, வரதட்சணை கேட்டு, மாமியார் து.ன்.பு.று.த்துவதாகவும் கு.ற்.ற.ம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் மூன்று வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற நபர் தற்கொலை!!

இலங்கையில்…

மூன்றரை வயது ஆண் குழந்தையை தாக்கி, உறங்கும் போது கழுத்தை நெறித்து கொலை செய்த சந்தேக நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக மீகஹாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் இந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தையின் தாய், கணவனை பிரிந்து, தற்கொலை செய்துக்கொண்ட நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த பெண் இன்று காலை தனது 10 வயதான மகனை பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குழந்தை மற்றும் தற்கொலை செய்துக்கொண்ட நபர் ஆகியோரது உடல்கள் மீகஹாதென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

வீதியில் தவறி விழுந்த தாலிக்கொடி : முல்லைத்தீவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது.
இந்நிலையைில் குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு, பேக்கரி உரிமையாளர் தெரிவித்துள்ளார். தாலிக்கொடியின் உரிமையாளர் அதனை தேடி வரும் வரையில் மிகவும் பத்திரமாக அதனை வைத்திருக்குமாறு உரிமையாளரிடம் நவநீதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாலிக்கொடியினை தவற விட்டவர்கள் உரிய பேக்கரிக்கு வந்து நிலைமை தெளிவுபடுத்தியுள்ளனர். இதனையடுத்து உரியவர்களிடம் தாலிக்கொடி கையளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொகை ரூபா பெறுமதியான தாலிக்கொடி தமக்கு மீட்டும் கிடைத்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

விஷம் கொடுத்து கணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் : மனைவி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

மும்பையில்..

மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்த மனைவி, முன்னதாக தனது மாமியாருக்கு அதை கொடுத்து வேலை செய்கிறதா என்று சோதனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கமல்காந்த் ஷா (44). தொழிலதிபரான இவருக்கும் கவிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்குள் வழக்கமான தம்பதிகள் போல் சிறுசிறு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக கமல்காந்திற்கு உடல்நிலை மோசமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனின்றி 17 நாளில் உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இவரது உடலை உடற்கூறாய்வு செய்தனர். அப்போது கமல்காந்தின் இரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் போன்ற தாதுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற தாதுக்கள் இரத்தத்தில் போதுமான அளவு காணப்பட்டு வருகிறது. ஆனால் இது அளவுக்கு அதிகமானால் விஷத்தன்மையை உருவாக்கி உயிரை கொள்ளும்.

இதையடுத்து இதனால் தான் அவர் உயிரிழந்தார் என்பதை அறிந்த போலீஸ், இது குறித்து கமல்காந்தின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவியின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. மேலும் கமல்காந்தின் டயட் உணவு முறையையும் கேட்டறிந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில் கமல்காந்தின் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கமல்காந்த் – கவிதா வாழ்க்கையில் அண்மை காலமாக சண்டை, சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. அதோடு கவிதாவுக்கு ஹிதேஷ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் உள்ளார்.

இதனால் தனது கணவனை கொலை செய்ய எண்ணிய அவர், தனது ஆண் நண்பருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த தாதுக்கள் கலந்த மருந்தை அவரது உணவு, மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்துள்ளார். இப்படி தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை கவிதா வாக்குமூலமாக அளித்த பிறகு, அவரது ஆண் நண்பர் ஹிதேஷையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கமல்காந்தின் தாயாரும் இதே முறையில் இறந்ததால், அதுவும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய வாக்குமூலத்தை அளித்தார்.

அதாவது தனது கணவரை எவ்வாறு கொலை செய்வது என்று கூகிளில் தேடி பார்க்கையில், இராக்கின் சதாம் உசேன் தன் எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலை செய்தது, டெல்லியைச் சேர்ந்த வருண் அரோரா, தன் மாமியாருக்கும் மைத்துனிக்கும் சிறுகச் சிறுக உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்தது போன்ற க்ரைம் செய்திகளை படித்துள்ளனர்.

பின்னர் அதனை வைத்தே கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி முதலில் இதனை மாமியாருக்கு கொடுத்துள்ளனர். அவருக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு, தண்ணீரில் விஷத்தைக் கலந்துகொடுத்துள்ளார். அதோடு தினமும் 6-8 முறை தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் போன்றவற்றில் தொடர்ந்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வந்துள்ளார்.

மாமியாருக்கு அது வேலை செய்யவும், அதே பாணியில் கணவருக்கும் கொடுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மனைவி கவிதா, மற்றும் அவரது காதலன் ஹிதேஷிடம் அதிகரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் நடந்த கோர விபத்து : சந்தேக நபர் துபாய் நாட்டுக்கு தப்பியோட்டம்!!

கொள்ளுப்பிட்டியில்..

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கோர விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் போது ஆடம்பர காரை ஓட்டுச் சென்ற நபர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இந்த சந்தேக நபர் வர்த்தகர் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்தேக நபர் துபாய் நாட்டில் வசித்து வந்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டியில் தனியார் வங்கி ஒன்று எதிரில் உள்ள வீதியில் பம்பலப்பிட்டியில் இருந்து காலிமுகத் திடல் நோக்கி சென்ற கார், எதிரில் வந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டுச் சென்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். விபத்து நடந்து குறுகிய காலத்திற்குள் சந்தேக நபர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் காரில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 29 மற்றும் 31 வயதான பெண்கள் விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த புதுமண ஜோடி.. திடீரென பின்னால் நின்ற யானை செய்த செயல்!!

கேரளாவில்..

அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது, நம்மை சுற்றி வைரலாகி வரும் வீடியோக்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இவற்றுள் அதிர்ச்சி கலந்த, வினோதமான, வேடிக்கை நிறைந்த வகையில் என நிறைய விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

அதே போல, கல்யாணத்தை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட அடிக்கடி நிறைய வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். மேலும் இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றியுள்ள விஷயங்களான திருமண போட்டோஷூட், பத்திரிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள், பெரிய அளவில் புதுமை கலந்து இருக்கும் பட்சத்தில் அவை நெட்டிசன்கள் மத்தியில் கூட அதிக கவனம் பெறும்.

இன்னொரு பக்கம், திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் எடுக்கும் சமயத்தில் நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் கூட இணையத்தில் அவ்வப்போது வைரலாகி, பலரது லைக்குகளை அள்ளவும் செய்யும். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான், பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் பலரது மத்தியில் பரபரப்பையும் கிளப்பி உள்ளது.

கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஒரு புதுமண ஜோடி யானையின் முன்பு நின்று கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில், பின்னால் தொழுவம் ஒன்றில் யானை நிற்க அதன் முன்பு நிற்கும் ஜோடி, பல விதமான போஸ்களையும் கொடுத்து கொண்டிருந்தனர்.

அந்த ஒரு சமயத்தில் தான், யாரும் எதிர்பாராத விதமான ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. புதுமண ஜோடிகளின் பின்னால் நின்ற யானை, திடீரென தேங்காய் மட்டை ஒன்றை எடுத்து நேராக புது ஜோடியை நோக்கி வீசியதாக தெரிகிறது.

நேராக வேகத்தில் வந்த அந்த மட்டை, மாப்பிள்ளையின் முதுகில் லேசாக உரசி, அவருக்கும் மணப்பெண்ணுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் வேறு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.

தேங்காய் மட்டை பறந்து வந்ததை அறிந்து கொண்டதும் மணமக்கள் கடும் அதிர்ச்சி அடையவும் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் சோஷியல் மீடியாவில் வலம் வரும் நிலையில், பலரும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

42 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 20 வயது மாணவி… இப்படியும் ஓர் காதலா?

பீகாரில்..

பொதுவாக இரு நபர்களுக்கு இடையே உருவாகும் காதல் என்பது பணம், ஜாதி, மதம், வயது, அந்தஸ்து உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதில் தான் உருவாகும் என பலரும் கூறுவார்கள்.

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு காதல் தொடர்பான செய்தி தான், தற்போது இணையத்தில் வெளியாகி பலரது மத்தியில் வைரல் ஆகியும் வருகிறது.

பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இங்கே ஆசிரியராக சங்கீத் குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக இவரது மனைவியும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ஸ்வேதா குமாரி (வயது 20) என்ற மாணவியும் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கே சங்கீத் மற்றும் ஸ்வேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் உருவானதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழலில், அவர்கள் இருவருக்கும் இடையே காதலும் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்ளவும் சங்கீத் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே சுமார் 22 வயது வரை வித்தியாசம் இருந்ததையும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்ததன் படி, ஒரு சில தினங்கள் முன்பு கோவில் ஒன்றில் வைத்து சங்கீத் குமார் மற்றும் ஸ்வேதா குமாரி ஆகிய இருவரும் திருமணமும் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துகளையும் இந்த திருமணம் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

அம்மா ஞாபகமாவே இருக்கு… 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய நெஞ்சை உலுக்கும் கடிதம்!!

தர்மபுரியில்..

தனது தாயார் இறந்த நிலையில், 6 வருடங்கள் கழித்து, அம்மா ஞாபகமாவே இருக்கு என்று மன அழுத்தத்தில் இருந்து வந்த 10ம் வகுப்பு மாணவர் குருபிரசாத், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலைச் செய் து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15), மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்நிலையில் அவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார். மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும் அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

குருபிரகாஷ், தனது தாயார் இறந்தது முதல் அவரது நினைவாகவே இருந்து வந்துள்ளார். மேலும் வார விடுமுறை நாட்களில் அத்திமூட்லு கிராமத்திற்கு சென்று வந்தார்.

கடந்த 10 நாட்களாக விடுமுறையில் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குருபிரகாஷ் பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்து வந்தார். அவருடன் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர் எதற்காக பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருக்கிறாய் என கேட்டார்.

இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர். அந்த நேரம் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள்.

நேற்று காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது அங்கு இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பால் தூக்குப் போட்டு மாணவர் குருபிரகாஷ் தற்கொலை செய்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், இது குறித்து விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் செய்தனர்.

புகாரின் பேரில் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கனகராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மாணவர் தங்கி இருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றினார்கள். மாணவர் தற்கொலை தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் தொழிற்சங்க நடவடிக்கையினை மீறி மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ள உப அஞ்சல் அலுவலகம்!!

நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம்..

வவுனியாவில் தொழிற்சங்க நடவடிக்கையினை மீறி மக்கள் சேவைக்காக நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு வழங்கும் முகமாக வவுனியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டள்ளது.

இதன் காரணமாக கடிதங்கள், பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் என பலரும் ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

எனினும் பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகக் கூடாது மற்றும் முதியோர் கொடுப்பனவு பெற வருகை தருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கபடுகின்றமை மக்களிடையே வரவேற்பினை பெற்றள்ளது.

வவுனியாவில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 11.12.2022 மாலை தொடக்கம் 12.12.2022 நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அஞ்சல் பரிவரத்தனை நிலையம், தபால் காரியாலயங்கள் மற்றும் நிர்வாக காரியாலயங்களில் எந்த விதமான கண்காணிப்புமின்றி மேலதிக கொடுப்பனவுக் குறைப்பு,

தபால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் இடமாற்ற சபையின் மேல்முறையிட்டு சபையில் நடவடிக்கையிலிருந்து தொழிற்சங்கத்தினை நீக்கியமை,

தபால் கட்டணம் மறு சீரமைப்பு தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி தபால் திணைக்களத்தின் வியாபார நடலடிக்கைகள் வீழ்ச்சியடைவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை,

போன்ற பல விடயங்களுக்கு எவ்வித தீர்வும் எட்டாப்படாமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா பிரதான தபால் நிலையம் முடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடிதங்கள் , பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் என பலரும் ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

16 வயதில் திருமணம்.. 24ல் விதவை : சேலையுடன் இந்தியாவின் முதல் பெண் விமானி!!

இந்தியாவில்..

16 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து 24 வயதில் இரண்டு பிள்ளைகளுடன் கணவனை இழந்த சார்லா தாக்ரால் (Sarla Thakral) பற்றிய சுவாரசியமான தகவல்களையே நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

இந்தியாவில் விமானம் செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட முதல் பெண்மணியாக சார்லா கருதப்படுகின்றார். 1914 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சார்லா 1936 ஆம் ஆண்டு தனது 21 ஆம் வயதில் விமானி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டார். அந்தக் காலப்பகுதியானது விமானத்தில் பயணம் செய்வது ஆச்சரியத்திற்குரியகாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லா முதல் தடவையாக விமானத்தில் பயணித்த போது திருமணம் முடித்து இருந்தார் என்பது மட்டுமல்லாமல் நான்கு வயதான சிறுமிக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தடவையாக விமானத்தில் விமானியாக பயணித்த போது சேலை அணிந்து சார்லா கடமையில் ஈடுபட்டிருந்தார். விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் அந்தக் காலப்பகுதியில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னணியிலும் பெண் ஒருவர் இருக்கின்றார் என்பது போன்று சார்லாவின் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர். அவரின் கணவர் மற்றும் கணவரின் தந்தை ஆகியோர் அவரது வெற்றியின் பின்னணியில் இருந்தவர்கள் ஆவர்.

சார்லாவின் கணவர் ஷர்மாவின் குடும்பத்தில் ஒன்பது பேர் விமானிகள் அவரது இந்த குடும்பப் பின்னணி சார்லா விமானி ஆவதற்கு அல்லது விமானியாகும் கனவை பூர்த்தி செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.

சர்லாவின் கணவர் ஷர்மாவும் ஒரு வெற்றிகரமான விமானி ஆவார், ஷர்மா எயார் மேல் விமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்ட முதலாவது இந்தியர் என்பதுடன் கராச்சி – லாகூர் நகரங்களுக்கிடையில் அவர் விமானத்தை செலுத்தி இருந்தார்.

எனினும் ஒவ்வொரு வெற்றி கதையின் பின்னாலும் காணப்படும் சவால்கள் சர்லாவின் வாழ்க்கையிலும் காணப்பட்டது. 1939 ஆம் ஆண்டு இடம் பெற்ற திடீர் விமான விபத்தில் தனது கணவரை இழந்தார் மிக இள வயதில் அதாவது 24 ஆம் வயதிலேயே சார்லா கணவனை இழந்துவிட்டார்.

ஆயிரம் மணித்தியாலங்கள் வானில் பறந்து A தர சான்றிதழை பெற்றுக் கொண்ட சரளா B தர சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சி எடுத்து வந்தார்.இந்த B தர சான்றிதழ் இருந்தால் மட்டுமே வர்த்தக விமானங்களை செலுத்த முடியும்.

எனினும் இந்த கனவை நினைவாக்கிக் கொள்வதில் சவால்கள் ஏற்பட்டன குறிப்பாக இரண்டாம் உலகப்போர் காரணமாக சரளா காத்திருக்க நேரிட்டது போர் ஆரம்பித்த காரணத்தினால் சார்லா, லாகூருக்கு திரும்பி மாயோ கலைக்கல்லூரியின் டிப்ளமோ கற்கை நெறி ஒன்றை பூர்த்தி செய்தார்.

ஆர்ய சமூகத்தை பின்பற்றிய சார்லா இரண்டாம் திருமணம் முடித்துக் கொண்டார். பீ.பீ. தாக்ரால் என்பவரை அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஆபரண உற்பத்தி,சேலை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் கற்று தேர்ந்து பல வெற்றிகளை படைத்துள்ளார். பெண்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த சார்லா 2009ம் ஆண்டு மார்ச் மாதம் இறைவனடி சேர்ந்தார்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்..தாய், மகனைக் கொன்று விட்டு விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!!

திருச்சியில்..

மனைவியை அவளது இஷ்டம் போல வாழ விடுங்க. நல்லா படிச்சிருக்கா… நல்ல வேலையில் இருக்கா.. கஷ்டப்படக் கூடாது என தாயையும், மகனையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயையும், மகனையும் கொன்று விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்ட கார் டிரைவரால் ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் என்ற 8 வயது மகன் இருந்தார்.

இந்நிலையில் வருமானம் போதவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார். அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். காலையில் அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டு பின்னர் மாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மாமியார் வசந்தா, மகன் சாமிநாதன், கணவர் கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் ஆய்வு நடத்திய போது, வீட்டு அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்.

எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்து விட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.