திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பேறாறு பிரதேசம் மற்றும் கந்தளாய் ராஜாறு பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளன. 3 வயதான சிறுவனும் பிறந்து இரண்டு மாதங்களான ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு மாத குழந்தை இதற்கு முன்னர் நுரையீரல் நோய் பாதிப்பால், திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மரணம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் மாதவ தர்மதாச கூறியுள்ளார்.
அதேவேளை நாட்டில் நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக குழந்தைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவமானது என சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு கனமான ஆடைகளை அணிவித்து, காலுக்கு காலுறைகளை அணிவிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சென்னை அடுத்த உத்தண்டியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்மணி ஒருவர், கொட்டும் மழையிலும், சுழன்றடிக்கும் சூறாவளி காற்றிலும் கண்களில் கவலையும் கண்ணீருமாய் தன் கணவரைத் தேடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.
இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. மாமல்லபுரம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்த ‘மாண்டஸ்’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில் உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்ததால் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. கொட்டும் மழையில் பெண் ஒருவர் பரிதவிப்புடன் தனது கணவரைத் தேடிய படி அந்த பகுதியில் சுற்றியலைந்தார்.
கல்லூரி ஒன்றில் கூலி வேலைக்குச் சென்று விட்டு தற்போது தான் திரும்பியதாகவும், தனது வீட்டிற்குள் நீர் புகுந்த நிலையில் தனது கணவரைக் காணவில்லை என்று தேடிச் செல்வதாக தெரிவித்தார்.
கணவர் கிடைப்பார்… கவலைப்படாதீர்கள் என்று செய்தியாளர் அவரிடம் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்த தண்ணீரில் தவித்தபடியே கணவனை தேடிச் சென்றார்.
அந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இந்த தகவலை செய்தியாளர் தெரிவித்ததும், வேனுடன் குப்பத்துக்குள் சென்ற போலீசார், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் கொண்டு சேர்த்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐயோ என் புருஷன் என்ன ஆனாருனு தெரியலயே… புயலில் கணவரை கண்ணீருடன் தேடிய மனைவி!!
யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (10.12.2022) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ.கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா(26).இவர் கல்லுாரி முடித்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும், மேலஉளூரில் இருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் அகல்யாவை காணவில்லை என்பதால், அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வடசேரி பாசன வாய்க்காலில் இளம் பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் காணாமல் போன அகல்யா என்பது தெரியவந்தது.
உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மேலும் அகல்யாவின் மொபைல் எண்ணை வைத்து, அவருக்கு வந்த அழைப்புகளைச் சோதனை செய்தனர். இதில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்பவர் கடைசியாகத் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நாகராஜைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகராஜ் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்க கூடிய தனியார் பஸ்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
அப்போது மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு வரும் அகல்யாவுடன் கடந்த மூன்று மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
மேலும், அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது நாகராஜ் திருமணமானவர் என அகல்யாவிற்கு தெரியவந்ததுள்ளது. இருப்பினும், தன்னையும் திருமணம் செய்து கொள்ளக் கூறி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி அகல்யாவை காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து,
துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் காரில் அவரது உடலை வைத்துக்கொண்டு அன்றிரவு வடச்சேரி வாய்காலில் வீசிய தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம அமைப்புக்கள், கிராம சேவையாளர் போன்றவர்களும் இச் சிரமதானப் பணியில் பங்கெடுத்திருந்தமையுடன் நகரசபையினரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
வவுனியாவிலுள்ள குளங்களின் நீர் மட்டம் குறைவாகவுள்ளமையினால் வயல்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் வவுனியா பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா ராஜகோபு தெரிவித்தார்.
மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டில் கீழ் 18 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 17 குளங்களுடான நீர்ப்பாசன திட்டமும் ஒன்று அணைக்கட்டினூடான நீர்ப்பாசன திட்டமும் காணப்படுகின்றன.
அவற்றில் மகாகச்சக்கொடியகுளம், வேலன்குளம், அலியாமருதமடுகுளம், நஞ்சடிச்சபழம் அணைக்கட்டு ஆகிய நான்கு குளங்களின் நீர்மட்டம் 5 வீகிதமாகவே காணப்படுகின்றமையினால்,
இக் குளங்களின் கீழுள்ள வயல்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் ஏனைய குளங்களின் நீர்மட்டம் அண்ணளவாக 33 விகிதமாக காணப்படுகின்றது.
மாவட்டத்தில் இனிவரும் இரு வாரங்களுக்கு மழை வீழ்ச்சி குறைவாக காணப்படுமாயின் மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களின் நீர்மட்டமும் குறைவடைந்து அதன் கீழுள்ள வயல்களும் பாதிப்படையும் நிலமை உருவாகியுள்ளது.
வழமையான இம்மாதமாளவில் குளங்களின் நீர்மட்டம் 75 வீதமாக காணப்படும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவாக காணப்பட்டமையினாலேயே குளங்களின் நீர் மட்டம் குறைவாக காணப்படுகின்றது.
மாவட்டத்திலுள்ள 18 குளங்களின் கீழ் 6035 ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுவதுடன் 1945 பயனாளிகள் காணப்படுகின்றனர். அழிவடையும் நிலையில் காணப்படும் நான்கு குளங்களில் கீழ் 285 பயனாளிகள் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடி, லாரி மோதியதில் சக்கரத்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பாபிலோனா (வயது 23). சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார்.
அதே போல், ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் பிரசாத் (32). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்து, திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதித்தனர். இரு வீட்டு பெரியவர்களின் முன்னிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டது, திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் இருந்த காதலி பாபிலோனாவை, தனது மோட்டார் சைக்கிளில் பிரசாத் அழைத்து கொண்டு, அவரது அறையில் விடுவதற்காக கிண்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவர்களது மோட்டார் சைக்கிள் அரும்பாக்கம், மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்ற போது, கோயம்பேட்டில் இருந்து வடபழனி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த டிரெய்லர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
திடீரென எதிர்பாராத இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த காதல் ஜோடி இருவருமே நிலைக்குலைந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் காதல் ஜோடியான பிரசாத்-பாபிலோனா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான டிரெய்லர் லாரி ஓட்டுநர் பொன்னன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விரைவில் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில், காதல் ஜோடி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் இன்று(11.12.2022) காலை நகரசபை ஊழியர்கள், பொலிசார் இணைந்து பிடித்து நகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரியவர்கள் கால்நடைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால் நடைகளினால் அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது,
வீதி விபத்துக்களில் அதிகமான விபத்துக்கள் கைவிடப்பட்ட கால்நடைகளினால் ஏற்படுகின்றது. எனவே இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் நகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் சென்ற நகரசபை ஊழியர்கள் பொலிசாருடன் இணைந்து மூன்றுமுறிப்பு, மன்னார் வீதி, பூந்தோட்டம், ஹொறவப்பொத்தான ஆகிய நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில்,
கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் காணப்பட்ட சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி கால்நடைகள் கைப்பற்றப்பட்டு நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றின் அடையாளங்களை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவும். அவ்வாறு பெற்றுக்கொள்ளத் தவறினால் அவற்றை ஏல விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இச்சம்பவம் புதன்கிழமை காலை நடந்துள்ளது. கீழே விழுந்த அனுஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதிக்கவில்லை. இத்துடன் அனுஜின் இறுதிச் சடங்குகள் முடிந்தன. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அனுஜ் ஓட முயன்றபோது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சில் வலி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் தரையில் விழுந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியோன்று இடம்பெற்றது.
வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று (10.12.2022) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டமானது பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை சென்றடைந்து ஏ9 வீதியூடாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு, மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம், மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு,
தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே மறுக்காதே , கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே எங்கே போன்ற பல்வேறு கோசகங்களை எழுப்பியவாறும் யுத்தகால மனித உரிமை மீறல்கள் புகைப்படங்கள், கறுப்புக்கொடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றினை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மலையாள சினிமாவில் பாடகியாக இருந்து தமிழில் குக்கூ படத்தில் கொடையில் மழைப்போல என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து சொப்பன சுந்தரி நான் தானே உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தார்.
கடந்த 2016ல் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயம் வரை சென்று மணமகன் ஏராளமான நிபந்தனைகள் வைத்ததால் திருமணம் வேண்டாம் என்று நிறுத்தியிருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி. அதன்பின் 2018ல் அனூப் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதன்பின் தான் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு பெற்று பாடகியாக ஜொலித்து வருகிறார்.
சமீபத்தில் தனியார் ஊடகத்தில் நடந்த ஒரு நேரலையில் நடிகை கெளதமி பேட்டி கண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், என்னை திருமணம் செய்தவர் ஒரு சேடிஸ்ட் என்பது தெரியவந்தது. எதற்கெடுத்தாலும் குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுவதே வேலையாக வைத்திருந்தார். என்னை மட்டும் நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதன்பின் நான் பாடல் பாடுவதில் பல நிபந்தனைகளை வைத்தார்.
என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சமாளிக்க முடியாமல் விவாகரத்து செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய முக்கியம் சந்தோஷமும் சங்கீதமும் தான். அதை சமாளித்து வாழ வேண்டியத்தேவையில்லை.
வலிக்கொடுக்கும் ஒரு பல் போகப்போக அதிகமாகிவிட்டால், அதை பிடிங்கி எடுப்போம் இல்லையா. அதுபோலத்தான் அவரை தூக்கிப்போட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த பதிலால் நடிகை கெளதமி மிரண்டு போய் வைக்கம் விஜயலட்சுமியை பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சதிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவர் ப.ட்டியல் சா.தியினை சார்ந்தவர். இ.வரது ம.களான 20 வ.ய.து பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இ.ரண்டாம் ஆ.ண்டு ப.யின்று வ.ந்தார். இவருக்கும் ப.க்கத்துவீட்டை சா.ர்ந்த ராகுல் காந்தி என்ற ராபிக்கும் கா.தல் ஏ.ற்பட்டு இ.ரண்டு ஆ.ண்டுகளாக கா.தலித்து வ.ந்துள்ளனர்.
தி.ருமண ஆ.சை வார்த்தை கூறி பிரியாவை பல்வேறு இடங்களுக்கு அ.ழைத்து செ.ன்று ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர். மே.லும் ப்ரியா இ.ருமுறை க.ர்.ப்பமாகி க.ரு.க்கலைப்பும் செ.ய்துள்ளார். த.ற்போது பிரியா மூ.ன்று மா.த.ம் க.ர்.ப்பமாக உள்ளார்.
அமிதாப் பச்சன் சர்க்கார், ரங்கீலா போன்ற வெற்றி படங்களை கொடுத்த ராம் கோபால் வர்மா இப்பொது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான “ரத்த சரித்திரம்” படத்தை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.
இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். சமீபகாலமாக ராம் கோபால் செக்ஸ் அண்ட் ட்ருத், நக்கெட் போன்ற கிளாமர் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லெஸ்பியன் படமான “டேஞ்சரஸ்” டிசம்பர் 9. 2022 அன்று வெளியாக உள்ளது.இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி படத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கு பிக் பாஸ் நட்சத்திரமான அஷு ரெட்டியின் காலை ராம் கோபால் தடவிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரல் ஆனது. மேலும் அந்த வீடியோவில் நடிகை காலை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கேரளாவில் திருமணத்திற்கு முந்தைய நாள் செல்ஃபி எடுக்கும்போது புதிய தம்பதிகள் கல்குவாரியில் தவறி விழுந்ததால் நடக்க இருந்த திருமணம் நின்றுள்ளது. கேரள மாநிலம், பரவூர் குணாவைச் சேர்ந்தவர் வினுகிருஷ்ணன்.
இவருக்கு ஸ்ரீராமபுரம் அரபுரவீட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சம் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் இன்று பெரியவர்கள் முன்னிலையில் நடக்க இருந்தது.
இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இவர்கள் நேற்று பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர். பிறகு வேலமனூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு கல்குவாரியின் மேலே இருந்து இருவரும் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது தவறுதலாக சாண்ட்ரா குவாரியில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வினுகிருஷ்ணன் உடனே குவாரியில் குதித்து சாண்ட்ராவை மீட்டு அங்கிருந்த ஒரு பாறை மீது அமரவைத்துள்ளார்.
இதைப்பார்த்த அந்த வழியாக வந்த இளைஞர் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். கல்குவாரியில் விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. மேலும் வேறு தேதியில் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
காதல் ஜோடிகள் பொதுவாக பார்க், பீச், போன்ற இடங்களில் அருகில் உள்ளவர்களையும் தங்களையும் மறந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி தங்களையே மறந்து ரயில் தண்டவாளத்தில் பேசிக்கொண்டு சென்ற காதல் ஜோடி ஒன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து தங்களையும் மறந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென்று வந்த ரயில் நொடி பொழுதில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கார் டிரைவர்
மன அழுத்ததால் தற்கொலை செய்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் ஒரு சிலர் தனது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் தான் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் தாய், மகனை கொலை செய்துவிட்டு கார் ஓட்டுனர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் என்ற 8 வயது மகன் இருந்தார்.
இந்நிலையில் இங்கு வருமானம் போதவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார். அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று காலை அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டு பின்னர் மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மாமியார் வசந்தா, மகன் சாமிநாதன், கணவர் கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்.
எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன்.
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.