இலங்கையில் ஆசிரியர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

நெகிழ்ச்சியான செயல்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில்,

கல்வி பயிலும் மாணவர்களின் பாதணிகளை ஆசிரியரொருவர் தைத்து கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் குறித்த ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பாடசாலை மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ளதுடன், கல்வி பயிலும் மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள்.சில மாணவர்களின் பாதணிகள் கிழிந்து காணப்படுவதினை நான் தினமும் அவதானிப்பேன்.

இவர்கள் புதிய பாதணிகளை வாங்குவதென்றால் 5000 ரூபா வரை செலவாகும்,தைப்பதற்கு 200 ரூபா வரை செல்லும்.இவர்களால் அந்த தொகையை செலவிடுவது கடினம்.

எனவே என்னால் முடிந்த உதவியினை நான் செய்கின்றேன். மாணவர்களுக்கு சித்திரப்பாடத்தினை படித்துக்கொடுத்த பின்னர் கிடைக்கும் நேரத்தில் தைத்துக்கொடுப்பேன்.

தைத்து கொடுக்கும் போது மாணவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்ல இயலாது. பாதணி தைப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு.எனவே என்னால் முடிந்த வரை மாணவர்களுக்கு உதவி செய்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தோல்வியில் முடிந்த 5 நாள் போராட்டம் : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!!

மத்திய பிரதேசத்தில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளார். தற்போது இந்த சிறுவனின் மரணம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் உள்ள போபால் நகரிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெதுல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த எட்டு வயது சிறுவனின் குடும்பத்திற்கு 400,000 இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயதுச் சிறுவனை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், அச்சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில்“பெதுலின் – மாண்ட்வி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அது பயனளிக்காமை மிகவும் கவலையளித்துள்ளது.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன், இந்த துயர நேரத்தில் குடும்பத்தினர் பலம் பெற வேண்டும் என்று நம்புகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் அவர்களுடன் உள்ளதுடன் சிறுவனின் குடும்பத்திற்கு மாநில அரசிடமிருந்து 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

12 வயது சிறுவனுக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்த குடும்பம் : சொன்ன அதிர்ச்சி காரணம்!!

எகிப்தில்..

எகிப்தில் 12 வயது சிறுவனுக்கு 10 வயது உறவினர் சிறுமியை திருமணம் முடிக்க முடிவு செய்த குடும்பத்தினரை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘

குறித்த சிறார்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எகிப்தின் சிறார் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

12 வயது ஜியாத் மற்றும் 10 வயது சாமா ஆகியோருக்கு திரளான குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயதார்த்த விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் புகைப்படங்களை சிறார்களின் பெற்றோர்களே வெளியிட்டு, பெருமையடித்துக் கொண்டுள்ளனர்.

விழாவின் போது சிறுவன் ஜியாத் திருமண மோதிரம் ஒன்றை சிறுமிக்கு அளிக்க, குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர்.

இதனிடையே, விழா தொடர்பில் ஜியாத் தெரிவிக்கையில், தமது சித்தியின் மகளை தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், தமது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இனிமுதல் கடுமையாக உழைக்க இருப்பதாகவும், கல்வியை முடித்து உரிய வயதில் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளான்.

நிச்சயதார்த்த விழா தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மொத்த குடும்பமும் தற்போது அந்த விழாவினை ஆதரித்து பேசியுள்ளது.

குடும்பத்தில் மூத்தவரான, மணமகன் ஜியாதின் தாத்தாவே இப்படியான ஒரு ஆலோசனையை முன்வைத்ததாகவும், சகோதரிகளின் பிள்ளைகள் இருவர் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறிருக்க போகிறது எனவும் அந்த தாத்தா கேள்வி எழுப்பியதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சிறார் உதவி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறார்களுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், ஆபத்தான முன்னுதாரணம் எனவும் குடும்பத்தினருக்கு விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நிச்சயதார்த்தம் முடித்துள்ள சிறார்களுக்கு உரிய வயதாகும் வரையில் குறித்த குடும்பத்தினரை கண்காணிக்க இருப்பதாகவும், திருமணம் நடத்தும் திட்டம் இப்போது இருந்தால் அதை கண்டிப்பாக கைவிட வேண்டும் என கோரியதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், அந்த பெற்றோர் தற்போது சிறார்களின் திருமணம் தொடர்பில் முடிவெடுக்கவில்லை எனவும், இருவரையும் தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை எனவும், அவர்களுக்கு உரிய வயதாகும் போது திருமணம் குறித்து முடிவெடுக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுகிய தக்காளிப்பழம் வீச்சு!!

வவுனியாவில்..

வவுனியாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 1120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்,

அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10.12) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாக்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன்,

தமக்கு நீதி வேண்டும் எனவும், நீதி மறுக்கப்பட்ட நாட்டில் மனிதவுரிமைகள் தினம் எதற்கு’ எனவும் கோசம் எழுப்பியதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இன்றி அரசாங்கத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது எனவும், இது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சி எனவும் தெரிவித்தனர்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன்,

ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தைக்கு செல்லாதீர்கள், இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றாதீர்கள் எனக் கூறி தக்காளிப் பழங்களை வீசித் தாக்கினர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதுடன், இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புகையிரத நடைமேடைக்கு இடையில் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளது மற்றும் அவரது உடலில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா (20). இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார்.

புதன்கிழமை (டிச. 7) விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். மாணவியின் இடுப்பு பகுதி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சிக்கிக்கொண்டது.

இதனை கவனித்த ரயில்வே பொலிஸார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். பின்னர் இரண்டு மணி நேரம் போராடி, பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா பரிதபாமாக உயிரிழந்தார்.

மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகன்.. கூலிப்படையை ஏவி கொலை செய்து உடலை புதைத்த தந்தை!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்த மகனை கூலிப்படை ஏவி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டத்திற்குட்பட்ட தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட்.

இவருக்குப் பல நூறு கோடிகளுக்குச் சொத்துக்கள் உள்ளது. இவரது ஒரே மகன் அகில். இவர் தனது தந்தையின் தொழிலையும், சொத்துக்களையும் பாதுகாக்காமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

மேலும் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அகில் நடவடிக்கையால் பாரத் ஜெயந்தி லாலுக்கு குடும்பத்தினர் மத்தியில் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து அகில் திடீரென மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பிறகு இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலிஸார் விசாரணையிலும் அகில் குறித்துத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அகில் உறவினரின் செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. இதில் மலை உச்சியிலிருந்து அகில் தற்கொலை செய்து கொள்வதுபோன்ற காட்சி இருந்துள்ளது. இது போலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலிஸார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அகில் உடல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலிஸார் அகில் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது தந்தை பாரத் ஜெயந்தி லால் முன்னுக்கு முரணான தகவல்களை கொடுத்துள்ளார்.

மேலும், அவரது தொலைபேசி எண்ணிலிருந்து அண்மையில் பல புதிய நபர்களுக்கு அவர் பேசியதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், மகனை கூலிப்படையை வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

அகில் குடித்துவிட்டு பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்ததால் வீட்டில் தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இவரின் சமுதாயத்தில் மகனால் தனக்கு கெட்ட பெயர் வந்து கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத பாரத் ஜெயந்தி லால் மகனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி கூலிப்படையைச் சேர்ந்த 6 நபர்களுக்கு ரூ. 10 லட்சம் பணத்தைக் கொடுத்து மகனை கொலை செய்ய திட்டம்போட்டுள்ளனர். அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி மகனை கல்கட்டகி பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருந்த கூலிப்படையினர் அகிலை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து போலிஸார் கரும்பு தோட்டத்திற்கு சென்று புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அகில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர். பிறகு அகிலின் தந்தை பாரத் ஜெயந்தில் லால், கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 வருடங்களுக்கு பின்னர் உயிருடன் வந்த காணாமல் போன சிறுமி.. கொலை வழக்கில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

உத்தரபிரதேசத்தில்..

காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில் இளைஞர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் சிறுமி உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சிறுமியை கடைசியாக விஷ்ணு கவுதம் என்பவருடன் பார்த்ததாகவும் கூறினர்.

அதன்பின்னர் சிறிது நாட்களுக்கு பின்னர் அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை போலிஸார் கண்டுபிடித்தனர். அந்த சிறுமியின் உடல் தங்கள் மகளின் உடல்தான் என காணாமல்போன சிறுமியின் பெற்றோர் கூறியதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மேலும், சிறுமியின் உறவினர்கள் புகாரின்பேரில் விஷ்ணு கவுதம் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டு அவர்தான் கொலைசெய்தார் என ஆதாரம் திரட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடவே அந்த இளைஞர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் தாயாருக்கு காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி திருமணம் செய்து, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஆக்ராவில் வசித்து வந்தது தெரியவந்தது.

பின்னர் சில அமைப்பினரின் உதவியோடு சிறுமியை இளைஞரின் பெற்றோர் கண்டுபிடித்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வரும் காணாமல் போன அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். அவருக்கு மரபணு சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை… வைரலாகும் திருமண புகைப்படம்!!

சீரியலில்..

பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா பண்டேகர் தனது 37 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ஸ்வேதா கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில், அஜித்திற்கு தங்கையாக அறிமுகமானார்.

பின்பு சில படங்களில் நடித்த இவர், சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவிலிருந்து விலகி சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். இவர் 8 ஆண்டுகளாக ஓடி சமீபத்தில் முடிவடைந்த சந்திரலேகா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீரியலில் இவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. 8 ஆண்டுகள் நடித்த சீரியல் முடிவுபெற்ற சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஸ்வேதா.

இவர் பிரபல தொகுப்பாளரான மால் முருகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

மேலும் நயன்தாராவைப் போன்றே இவரும் 37 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

காதலன் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

திருமண ஆசைகாட்டி கர்ப்பம் ஆக்கிவிட்டு வா.லிபர் ஏ.மாற்றியதால் ம.னமு.டை.ந்.த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நர்சிங் மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

இ.ளம்பெண்ணை ஏ.மாற்றிய வா.லிபரை கை.து செ.ய்யக் கோ.ரி அ.வரது உ.ட.லை வாங்க மறுத்து உறவினர்கள் போ.ரா.ட்.டத்தில் ஈ.டுபட்டனர். தூத்துக்குடி லேபர் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். கூலித் தொழிலாளியான இவரது மகள் ஹரிணி(20).

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஹரிணிக்கும், அவரது வீட்டு அருகே உள்ள வாலிபர் ராகுல் காந்தி என்ற ராபிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது

தனது அக்காள் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்த ராபி, நர்சிங் மாணவி ஹரிணியுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமண ஆசைகாட்டி இருமுறை க.ர்ப்பம் ஆ.க்கியுள்ளார்.

இந்த க.ர்ப்பத்தை ஹரிணி மா.த்.தி.ரையை ப.யன்படுத்தி க.லைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரிணியும், ராபியும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஹரிணி உடன் ஏற்பட்ட பழக்கம் ராபியின் அக்கா சுதாவிற்கு தெரிய வர, சுதா ஹரிணியின் வீட்டுக்கு போய் ச.ண்.டை போ.ட்.டுள்ளார்.

இதை தொடர்ந்து ராபி ஹரிணியுடன் உள்ள ப.ழக்கத்தை து.ண்டித்துள்ளார். இதன் கா.ரணமாக மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி ஹரிணி நேற்று இரவு த.லைக்கு சா.ய.ம் அ.டி.க்.க ப.ய.ன்படும் சூ.ப்பர் வாஸ்மால் எனும் தி.ரவத்தை கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ளார்.

மேலும் ஹரிணி த.ற்போது க.ர்ப்பமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிணியின் உ.ட.லை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பி.ரே.த ப.ரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் ஹரிணியை க.ர்.ப்பமாக்கி விட்டு தி.ருமணம் செ.ய்யாமல் ஏ.மா.ற்.றி த.ற்.கொ.லை செ.ய்.ய தூ.ண்டிய வழக்கில் வாலிபர் ராபியை உடனடியாக கை.து செ.ய்ய வே.ண்டும்.

மேலும் எஸ்சி எஸ்டி பிரிவு சட்டப்படி கு.ற்.றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள், ஹரிணியின் உ.ட.லை வா.ங்க ம.றுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பி.ண.வறை மு.ன்பு போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி வி.ஷ.ம் அ.ருந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ர.பரப்பு ஏ.ற்படுத்தியுள்ளது.

கிணற்றில் இறந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீட்பு : போலீசார் தீவிர விசாரணை!!

கும்மிடிப்பூண்டில்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூலாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட குருவராஜா கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய கோபி சந்த் என்ற மாணவனும்,

புது ராஜா கண்டிகை அரசு தொடக்க பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் 12 வயதுடைய நகுல் என்ற மாணவனும் காணாமல் போயுள்ளனர். பெற்றோர்கள் இருவரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள திடீர் நகரில் தொல்லியல் துறைக்காக ஒதுக்கப்பட்ட 94 ஏக்கர் நிலத்தில் தரை கிணற்றில், சிறுவன் ஒருவன் சடலமாக கிடந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலி கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை போலீசார் தேர்வாய் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டனர். மேலும் கிணற்றில் இருந்து மற்றொரு மாணவனின் சடலமும் மீட்கப்பட்டது.

தொடர்ந்து தரை கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இரண்டு பள்ளி மாணவர்களும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுத்தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் காணாமல் போன கோபி சந்த், நகுல் என்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த கவரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 9 குடும்பங்களை சேர்ந்த 29 அங்கத்தவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குபட்ட இராசேந்திரம் பகுதியில் மூன்று குடும்பங்களை நேர்ந்த பத்து அங்கத்தவர்களும்,

ஆசிகுளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், மருதமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் , கல்மடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும்,

என வவுனியா பிரதேச செயலக பிரிவில் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆறு குடும்பங்களை சேர்ந்த இருபது அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச பிரிவுக்குட்பட்ட பிரபமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும்,

அவசலபிட்டிய பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தவரும் , அலகல்ல பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும்,

என வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று குடும்பங்களை சேர்ந்த ஒன்பது அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலையுடன் கூடிய காலநிலமை காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எதேனும் அனர்த்தம் இடம்பெற்றால்,

அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் நிலையம், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

காதல் மனைவி மீது கணவனுக்கு வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே செய்த கொடூரம்!!

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். 28 வயதான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா இன்னும் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் ரஞ்சித். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கௌசல்யா கடந்த சில மாதங்களாக செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கௌசல்யா மற்றும் ரஞ்சித் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு ரஞ்சித் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அண்மையில் உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஞ்சித் – கௌசல்யா இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அனக்காவூர் காவல் நிலையத்தில் கௌசல்யா கணவர் மீது புகார் அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் ரஞ்சித் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று கௌசல்யா ரஞ்சித் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது ரஞ்சித் தனது மனைவி கௌசல்யாவை கடுமையாக தாக்கியதாகவும் கௌசல்யாவின் தாலி கயிறை வைத்தே அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கௌசல்யாவின் தாய் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.

வவுனியாவில் மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக பப்பாசி செய்கை அழிவு!! 

புயலின் தாக்கம்..

மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக வவுனியாவில் 800க்கும் மேற்பட்ட பப்பாசிகள் அழிவடைந்துள்ளன.  இவ் அனர்த்தம் காரணமாக வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம்,

நெடுங்கேணி போன்ற பகுதிகளிலேயே பயிரிடப்பட்டு அறுவடை நிலையில் காணப்பட்ட 800க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களே முறிந்து வீழ்ந்துள்ளதுடன்,

பலத்த காற்றின் காரணமாக வாழை மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் மரமுந்திரகை மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை வவுனியாவில் மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக 07 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,

09 குடும்பங்களை சேர்ந்த 29 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எச்சரிக்கையாக இருங்கள் : காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

காற்றின் தரம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நேற்று(08.12.2022) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது.

பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவது படிப்படியாக குறைவடைந்து வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 95 ஐ விட குறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 80 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 51 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

குருணாகலையில் 71 ஆகவும்,வவுனியாவில் 63 ஆகவும், கண்டியில் 94 ஆகவும், கேகாலையில் 83 ஆகவும், காலியில் 43 ஆகவும், இரத்தினபுரியில் 71 ஆகவும், களுத்துறையில் 71 ஆகவும் மற்றும் அம்பாந்தோட்டையில் 83 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல எனவும் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம் எனவும் அதனை தொடர்ந்து கடைபிடிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞனுக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்.. ஒரே இரவில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!!

ஷார்ஜாவில் ..

வெளிநாட்டில் வசிக்கும் தமிழக இளைஞருக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை கிடைத்துள்ள விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு சிறந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பலரும் கடினமாக உழைத்து கொண்டே இருப்பார்கள்.

இதற்காக பல கஷ்டங்களை தாண்டி வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் அதே சூழலில், ஒட்டுமொத்தமாக நமது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவங்கள் கூட நிகழ வாய்ப்பு உள்ளது.

அப்படி தான் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழக இளைஞருக்கு கனவில் கூட நினைக்காத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் காதர் ஹுசைன்.

இவருக்கு தற்போது 27 வயதாகும் நிலையில், ஷார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 33,000 ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாகவும் தெரிகிறது.

தனது நிறுவனத்தில் தனக்கு கிடைக்கும் டிப்ஸை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்துள்ளார் காதர் ஹுசைன். அவரது நண்பரான தேவராஜ் என்பவரும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வைத்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிக் டிக்கெட் டிராவில் இருவரும் சேர்ந்து லாட்டரி டிக்கெட் எடுத்து விளையாடி உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் லாட்டரி குலுக்கல் நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கும் காதர் வந்துள்ளார்.

இந்த நிலையில், லாட்டரியில் அவருக்கு சுமார் 30 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 67 கோடி ரூபாய் வரை ஆகும். இது தொடர்பாக பிக் டிக்கெட் நிர்வாகத்தினருக்கும் காதரை தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது.

ஆனால் லைவாக குலுக்கலை காதர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு பெரிய பரிசு விழுந்ததையும் அறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அங்கே சென்று பணத்தை பரிசாக பெற்றுள்ள காதர் ஹுசைன், தனது பிறந்தநாளுக்கு சில தினங்கள் முன்பாக இந்த வெற்றி பரிசுக்கான டிக்கெட்டை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தனை பெரிய தொகை கிடைத்ததால் திக்குமுக்காடிப் போன காதர் ஹுசைன், தனது பரிசு பணத்தை நண்பர் தேவராஜுடன் பங்கிட்டு கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால பிக் டிக்கெட் போட்டியின் வரலாற்றில் மிகப்பெரிய பரிசு தொகையாக காதர் பெற்றது பார்க்கப்படும் நிலையில், ஒரே இரவில் தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தியாவில் உள்ள குடும்பத்தை இங்கே அழைத்து வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் பெற்றோருக்கு வீடு கட்டித் தருவேன் என்று கூறியுள்ள காதர் ஹுசைன், பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் எடுத்த லாட்டரி டிக்கெட் மூலம் சுமார் 67 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ள சம்பவம் தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இரட்டை சகோதரிகள்.. இரட்டை சகோதரர்களுடன் கோலாகலமாக நடந்த திருமணம்!!

மேற்கு வங்காளத்தில்..

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்த்தவர் கவுர் சந்திரா சான்ட்ரா.

இவரது மகள்களான அர்பிதா – பராமிதா இரட்டை சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரியில் பட்டம் பெறுவது வரை ஒன்றாகவே இருந்துள்ளனர்.

சிறுவயது முதல் ஒன்றாகவே படித்து வளர்ந்ததால், சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதனை தங்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். கவுர் சந்திராவும் அவர்களின் விருப்பத்தை மதித்து மணமகன்களை தேடியுள்ளார்.

அப்போது லவ் பாக்ரே மற்றும் குஷ் பாக்ரே என்ற இரட்டை சகோதரர்கள் குறித்து கவுர் சந்திரா அறிந்துள்ளார். உடனடியாக அவர்களின் குடும்பத்தை தொடர்புகொண்ட அவர் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

லவ் – குஷ் சகோதரர்களுக்கும் திருமண வரன் தேடப்பட்டு வந்ததால் அவர்களின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரட்டை சகோதரிகளை மணக்க வேண்டும் என்று நினைத்த லவ் – குஷ் சகோதரர்களுக்கும், அர்பிதா-பராமிதாவுக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது.

திருமணத்தின் போது மணமகன்களும், மணமகள்களும் ஒரே வண்ண உடைகளை அணிந்திருந்தனர். அதுமட்டுமன்றி நகைகளின் வடிவமைப்பு, உடையலங்காரம் என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரட்டை சகோதரர்களை இரட்டை சகோதரரிகள் மணந்த அரிய திருமண நிகழ்வை ஆச்சரியத்துடன் பலரும் கண்டு களித்தனர்.