வவுனியா மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக செட்டிக்குளம் – பூவரசங்குளம் பிரதான வீதியின் குறுக்கே மரம் வீழ்ந்தமையினால் அப்பாதையூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
பூவரங்குளம் தட்டாங்குளம் பகுதியிலேயே இம் மரம் முறிந்து வீழ்ந்திருந்தமையுடன் பல மணிநேரமாக இவ்வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்தமையுடன்,
பிரதேச சபையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வீதியில் வீழ்ந்திருந்த மரம் அகற்றப்பட்டமையுடன் அப்பகுதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.
மேலும் வவுனியா நகரிலுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாகவிருந்த மரமொன்றும் வீழ்ந்தமையினால் மரத்தின் கீழ் நின்ற மோட்டார் சைக்கிலொன்றும் பகுதியளவில் சேதமடைந்திருந்தது.
வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன்,
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்திலே 2.5 ஏக்கருக்கு குறைவான அளவில் நெற் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் 5326 விவசாயிகளிற்கு இலவசமாக உரம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயிகள் தங்களிற்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்ததுடன், தனியார்துறையினரிடம் இருந்து அதிக விலை கொடுத்து உரத்தினை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில் யுஸ்எய்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் நாடு பூராகவும் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களின் ஊடாக இலவசமாக உரம் வழங்கி வைக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலே கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 09 கமநல சேவை நிலையங்களில் இலவசமாக உரம் வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில்,
இன்றையதினம் கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், 535 விவசாயிகளிற்கு இலவசமாக உரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கோவில்குளம் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்திர் திருமதி ரெ.காஞ்சனா, விவசாய ஆராச்சி உற்பத்தி உதவியாளர் பதூர்தீன் ஹஸ்புல்லா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு,
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (09.12.2022) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 1,990 ரூபாயாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று ஆரஞ்சுகள் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சுகள் ஏற்றுமதி செய்யப்படுவதால்,
இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன. இதனால் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்கு ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
காரைக்குடியில் லாரி ஓட்டுநர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மனைவி தனது கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அடக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொடுங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் ஜெய பிரபு (36) காரைக்குடி சொந்தமாக லாரி ஒன்றை வைத்து போட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. தற்போது அவர்களுக்கு ஏழு வயது மகன் ஒருவர் உள்ளார். அவர் தனது மனைவி மகனுடன் காரைக்குடி பாண்டியன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இப்படி இருக்க அவரது மனைவி தீபா அடிக்கடி செல்போனை வைத்துக்கொண்டு அதில் அதிக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பல ஆண் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஜெயபிரபு தனது மனைவியை அடிக்கடி கண்டித்துள்ளார். ஆனால் அவரது மனைவி தீபா கணவரின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் எப்போதும் போல அவர் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்துள்ளார்.
அதனால் மன உளைச்சலில் ஜெயபிரபு கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பாண்டியன் நகரில் உள்ள அவர் வசிக்கும் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜெய பிரபுவின் மனைவி தீபா யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை கீழே இறக்கி தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறி அவரது சடலத்தை அவரின் சொந்த ஊரான கொடுங்காவையில் கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஜெயபிரபுவின் தந்தை ஆசீர்வாதம் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்த ஐந்தாவது நாள் ஜெயப்பிரகுவின் 7 வயது மகன் தனது தாத்தாவிடம் தனது தந்தை வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகவும் அவரை தனது தாய் சில நண்பர்களின் உதவியுடன் சேர்ந்து கீழே இறக்கி கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பேரன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசீர்வாதம் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலினிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை எடுத்து விசாரணை மேற்கொண்டதில் ஜெய பிரபுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் சூழல் உருவானது. தொடர்ந்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை சிறப்பு நிபுணரும் உதவி பேராசிரியருமான டாக்டர் செந்தில்குமார் தலைமையில்,
வட்டாட்சியர் செல்வராணி காரைக்குடி எஸ்ஐ பூரண சந்திர பாரதி, ஜெய பிரபுவின் தந்தை ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலையில் நடக்கும் செய்யப்பட்ட இடத்தில் ஜெயப்பிரபுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஜெய பிரபுவின் தந்தை ஆசீர்வாதம் கூறுகையில், தனது மகன் காரைக்குடியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை தனது மருமகள் மறைத்து கணவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாகவும்,
பின்னால் கொடுங்காவயல் கொண்டு வந்து அடக்கம் செய்து விட்டதாகவும் அதன் பின்பு தனது ஏழு வயது பேரன் சம்பவம் குறித்து தெரிவித்து தனது தாயும் அவரது நண்பர்களும் சேர்ந்து உடலை கீழே இறக்கி ஊருக்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சிவகங்கை முழுவதும் காட்டுத்தை போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன் விபரீத முடிவை எடுத்து பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், இத்தனை நாட்கள் கழித்து தெரிய வந்த உண்மை கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே நேமம் என்னும் பகுதியை சேர்ந்தவர் அஸ்வதி. இவரது தாய் இறந்து போன நிலையில், தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், ரதீஷ் என்ற நபரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார் அஸ்வதி. திருமணத்திற்கு பின்னர், கணவர் ரதீஷூடன் தனது பாட்டி வீட்டிலேயே வசித்தும் வந்துள்ளார் அஸ்வதி.
அப்படி ஒரு சூழலில், மனைவி அஸ்வதியின் பாட்டி வீடு மற்றும் 3 சென்ட் நிலத்தை தனது பெயரில் மாற்றி எழுதி வைக்க வேண்டும் என்றும் ரதீஷ் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், ரதீஷ் மது பழக்கம் உடையவராக இருந்ததால், அதற்கு அஸ்வதியின் பாட்டி மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பெயரில், வீட்டிற்குள் அடிக்கடி வாக்குவாதம் அரங்கேறி வந்ததால் அங்கிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டிற்கும் சென்று தங்க தொடங்கி உள்ளார் அஸ்வதியின் பாட்டி.
இதன் பின்னர், ரதீஷ் மற்றும் அஸ்வதி ஆகியோர் தனியாக வாழ்ந்து வர, அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்துள்ளனர். இதற்கு மத்தியில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறின் பெயரில் மனைவி அஸ்வதி தீக்குளித்து விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக ரதீஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அஸ்வதி தற்கொலை செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதி மக்கள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், 9 ஆண்டுகள் கழித்து குற்றப்பிரிவு போலீசார் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மீதமுள்ள வழக்குகளை விசாரிக்க தொடங்கிய போது அஸ்வதியின் மரணம் குறித்தும் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
அஸ்வதி உயிரிழந்த போது ரதீஷ் கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மனைவியை காப்பாற்ற முயன்ற போது ஏற்பட்டதாக போலீசாரிடம் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனால், அஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீக்காயங்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அஸ்வதி கையில் தீக்காயங்கள் இல்லாத போது, ரதீஷ் கையில் காயங்கள் இருந்தது சந்தேகத்தை கிளப்பியது.
ஒரு நபர் தீக்குளித்து இறக்கும் போது அவர்களின் கைகள் தான் முதலில் எரியும் என்ற சூழலில், இது தொடர்பாக ரதீஷிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 9 ஆண்டுகள் கழித்து மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்ட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்துள்ள சம்பவம் தொடர்பான செய்தி, தென் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் தபஸ்வி என்ற மாணவி ஒருவர் பிடிஎஸ் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சமூக ஊடகம் மூலமாக ஞானேஸ்வர் என்ற இளைஞருடனும் தபஸ்விக்கு நட்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த தபஸ்வி மற்றும் ஞானேஸ்வர் ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் தான் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக ஞானேஸ்வருடன் பேசுவதையும், பழகுவதையும் தபஸ்வி நிறுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தபஸ்வி ஒதுங்கி சென்றாலும் அவருக்கு ஞானேஸ்வர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் காவல் நிலையத்தில், ஞானேஸ்வர் மீது புகார் ஒன்றையும் தபஸ்வி அளித்திருந்தார். இதன் பின்னர் இளைஞரை அழைத்து போலீசார் எச்சரித்தும் அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர், குண்டூர் அருகே உள்ள தக்கெல்லப்பட்டு என்ற இடத்தில தனது தோழியுடன் தபஸ்வி கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தங்கி வந்துள்ளார். அவர் இருக்கும் இடத்தை அறிந்த ஞானேஸ்வர், அங்கே சென்று தபஸ்வியிடம் பேசவும் முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி தபஸ்வியை ஞானேஸ்வர் கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், ஞானேஸ்வரை தாக்க முயன்ற நிலையில், தனது கையையும் அவர் அறுத்துள்ளார். மறுபக்கம் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி தபஸ்வியை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காதலை கைவிட்டதன் பெயரில் கல்லூரி மாணவியை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவி உள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த திங்கள் கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன்,
சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு மனைவிக்கு பேய் போல் மேக்கப் போட்டு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவர செய்திருக்கிறார் விடுதி காப்பாளர். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அமைந்துள்ளது அரசு பள்ளி. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி விடுதியில் தங்கி படித்து வருகின்றார்.
செருப்பு மாலை அணிவித்து, பேய் போல் மேக்கப் போட்டு விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்ததாக விடுதி காப்பாளர் மீது புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை.
விடுதியில் தங்கி இருந்த மாணவிகளில் ஒருவரின் 400 ரூபாய் பணத்தை அந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி எடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதனால் விடுதியின் பெண் காப்பாளர், அந்த மாணவியின் முகத்தில் கருப்பு நிற மை பூசி பேய் போல் மேக்கப் போட்டுவிட்டு, செருப்பு மாலை அணிவித்து, விடுதி வளாகத்தை சுற்றிவர செய்திருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து மகளை சந்திப்பதற்காக தந்தை சென்று இருக்கிறார். அப்போது நடந்த கொடூரத்தை பார்த்து அவர் போலீசில் புகார் அளிக்கவும், கல்வி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு விடுதி காப்பாளரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விரிவான விசாரணையும் நடந்து வருகிறது.
மாண்டஸ் சூறாவளி தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை காலை அதிதீவிர சூறாவளியாகவே மாண்டஸ் கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் சூறாவளியானது,சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)எச்சரித்துள்ளது.
பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் வலுவடையும் காலநிலை மாற்றத்தால் இலங்கையின் வட,கிழக்கு பகுதியில் பெரும் சீரற்ற காலநிலை நிலவுவதுடன் சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இலங்கையின் மலையக பகுதியில் மினி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுணுகல பிரதேச வைத்தியசாலை கட்டடம் ஒன்றில் இந்த மினி சூறாவளியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றின் தாக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் சின்னத்திரை நடிகையை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்தனர். பின்னர் நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக இருவரும் சென்றுள்ளனா்.
அப்போது, கோவையில் உள்ள ஒரு ஹொட்டலில் அப்பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராகுல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் அப்பெண்ணிடம், 8 லட்சம் ரூபாய், 1.75 சவரன் நகையையும் அவர் பெற்றார்.
ஆனால், பணம், நகையை திருப்பி தராததுடன், அப்பெண்ணை திருமணமும் செய்யாமல் ஏமாற்றினார். இது தொடா்பாக ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த பொலிசார் , ராகுலை கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் அவ்விடத்தில் 30 நிமிடங்களும்கு மேலாக பதற்றநிலை காணப்பட்டது.
குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஓர் சில மாணவர்கள் தமக்கு கற்பித்தல் நடவடிக்கை தெளிவில்லை எனவே பிரிதொரு ஆசிரியரை நியமிக்கவும் அல்லது கட்டணத்தினை திருப்பித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு தனியார் கல்வி நிறுவனம் மறுப்பு தெரிவித்த நிலையிலையே பதற்றநிலை உருவாகியிருந்தமையுடன் அவ்விடத்தில் ஒன்று கூடிய சிலர் அங்கு பணிபுரியும் மற்றுமொரு ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் குறித்த தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி தலைமறைவாகியதுடன் குறித்த நிலைமை தொடர்பில் கேட்கச்சென்ற ஊடகவியாளர்களையும் சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
விரைவில் இவற்றிற்கு தீர்வு பெற்றுத்தருவதாக தனியார் கல்வி நிலையத்தின் பெண் ஊழியர் வாக்குறுதியளித்தமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா என்பவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 19). பேரணாம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவருடைய மகன் ஸ்ரீதர் (20).
ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீதர் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் பெற்றோர்கள் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீதர் இருவரும் ஸ்ரீதரன் வீட்டார் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய முன் தினம் இரவு மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு, இதில் ஸ்ரீதர் ராஜேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி ஸ்ரீதரின் தாயாரிடம் சென்று கூறி அவர்களின் வீட்டிலே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
காலையில் எழுந்து பார்த்த போது ராஜேஸ்வரி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் தேடி, பின்னர் ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் எங்களுடைய மகள் இங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் இருந்து ராஜேஸ்வரி உடலை மீட்கும் போது ராஜேஸ்வரி கை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் தந்தை ராஜா மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதரின் குடும்பத்தாரிடம் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் ஆர்டிஓ வெங்கட்ராமன் இருவரின் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட மூன்றே மாதத்தில் பெண் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கதறி அழுத தம்பியும் அதிர்ச்சியில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் தினேஷ்குமார். 30 வயதான இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது. தினேஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தினேஷ் குமாருக்கும் அவர் காதலித்துவந்ததாக சொல்லப்படும் இளம்பெண்ணிற்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தேர்வு சரியாக எழுதாததால் கவலையில் தினேஷ் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் காவல்நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டதை அறிந்து ஓடிவந்த உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அங்கு வந்த தினேஷ் குமாரின் சித்தப்பா மகன் வெங்கடேஷ் கதறி அழுதிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் வெங்கடேஷ் மயக்கமடைந்து கீழே விழ, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து வெங்கடேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், நெஞ்சுவலி காரணமாக வெங்கடேஷ் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அண்ணனின் மறைவு செய்தியை கேட்டு, கதறி அழுத தம்பியும் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காதலிச்சு, மனசுக்குப் பிடிச்சவனையே திருமணம் செய்த மாலினி, நாலே மாசத்துல காதலித்தவனின் சுய ரூபம் தெரிந்து தூக்குல தொங்கிட்டாளே என மாலினியின் மரணத்துக்கு திரண்டிருந்த மொத்த கூட்டமும் கதறியழுதது.
திருத்தணி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டார் மாலினி. இந்நிலையில், திருமணமான 4 மாதத்திற்குள் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவருக்கும் செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த மாலினி (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மாலினியின் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அகூர் கிராமத்திலேயே இருவரும் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த மாலினி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார், மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாலினியின் தந்தை தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்து 4 மாதங்களுக்குள் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால், வட்டாட்சியர் தலைமையிலான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.