காதலுக்கு கண் இல்லை, சாதி மதம் மொழி கிடையாது என்ற வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் சூர்யா. வேன் ஓட்டுனர். தென்னம்பட்டியை சேர்ந்தவர் வினோதினி.
இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வினோதினியை கண்டித்துள்ளனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது,
உடன்பாடு ஏற்படவில்லை. மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.
காதலை முறித்துக் கொண்டதால் மருத்துவ மாணவியை, காதலன் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பிடிஎஸ் படிப்பு பயின்று வருபவர் தபஸ்வி. வயது 20. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியரான ஞானேஸ்வர் என்ற இளைஞருடன் சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக காதலர்கள் தபஸ்வி – ஞானேஸ்வர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது காதலன் ஞானேஸ்வர் மீது தபஸ்வி விஜயவாடா போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தபஸ்வியை விட்டு விலகும்படியும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஞானேஸ்வருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஞானேஸ்வருடனான காதலை தபஸ்வி முறித்துக்கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானேஸ்வர் தபஸ்வியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஸ்வர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியை கொண்டு தபஸ்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் தபஸ்வி சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த தபஸ்வியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தபஸ்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கழுத்தறுத்து கொன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் ஞானேஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை முறித்துக் கொண்டதால் காதலி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கூறியுள்ள தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவரும் நிலையில், வரும் 2023ம் ஆண்டில் என்ன நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்தவர் பாபா வங்கா. இவரது உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா கஷ்டெரோவா… இவர் தனது 12 வயதில் கடுமையான புயலில் சிக்கி கண்களை இழந்தார்.
கண்களை இழந்த பின்பு இவர் தான் தீர்க்க தரிசனம் பெற்றதாக கூறியது மட்டுமின்றி, 1996ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு பல தீர்க்க தரிசனங்களைக் கூறி சென்றார்.
இவர் 5079ம் ஆண்டு வரை தனது கணிப்பினை கூறிச் சென்றுள்ள நிலையில், தற்போது ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் தனது கணிப்பில் 2022ம் ஆண்டில் சைபீரியாவில் இருந்து ஒரு புதிய வைரஸ் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றின் விளைவுகளால், 48,000 ஆண்டுகளுக்கு முன் பனியில் சிக்கிய குறித்த வைரஸ் சைபீரியா பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தால், பனிமூட்டத்தில் சிக்கியுள்ள பல வகையான வைரஸ்கள் மீண்டும் உயிர்ப்பித்து உலகை அழிவுக்கு கொண்டு செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா கடுமையான வெள்ளத்தில் பாதிக்கும் என்றும், உலகின் முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை இருக்கும் என்று கூறிய இவர் கூறிய கணிப்பு பலித்துள்ளது.
2023ம் ஆண்டில் பாரிய தாக்கம் ஏற்படும். சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படுவதுடன் பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு மக்களைத் தாக்கும் என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 2023ம் ஆண்டில் இருளில் மூழ்குவதோடு, வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும், பல மில்லியன் மக்கள் இறக்க நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டில் ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்குவதுடன், மனிதர்களின் விருப்பப்படி தோற்றம் நிறத்தினையும் மாற்ற முடியும் என்றும், அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு அதன் நச்சு ஆசிய கண்டத்தை மூடும், இதன் விளைவாக கொடிய நோய் பாதிக்கும் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னையே லூடோ சூதாட்டத்தில் பணயமாக வைத்து விளையாடி தோற்ற சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பெண்ணொருவர் ஒன்லைன் விளையாட்டான லூடோவில் சூதாட்டம் செய்துள்ளார்.
பணத்தை வைத்து விளையாடி அவர் அனைத்திலும் தோற்றுள்ளார். ஆனாலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அப்பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார். அதாவது, தன்னையே அவர் பணயமாக வைத்து விளையாடியுள்ளார். அதிலும் அவர் தோல்வியுற்றுள்ளார்.
இந்த நிலையில் வெளியூரில் வேலை பார்த்திருந்த குறித்த பெண்ணின் கணவர், வீட்டிற்கு திரும்பியதும் தன் மனைவியை தேடியுள்ளார். அதன் பின்னர் தனது மனைவி லூடோ விளையாட்டில் தன்னையே பணயமாக வைத்து விளையாடி தோற்றதும், அதனால் வீட்டின் உரிமையாளருடன் சென்றுவிட்டதாகவும் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவரது வீட்டின் உரிமையாளரே இதனை அவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் பொலிசாரிடம் புகார் அளித்தும் பலனளிக்காததால், மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதாப்கரில் உள்ள வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் வசித்து வந்தோம். இதற்கிடையில் நான் செங்கல் சூளை வேலைக்காக ராஜஸ்தான் சென்று ஆறு மாதங்கள் பணிபுரிந்தேன். அதில் கிடைத்தை வருமானத்தை மனைவிக்கு அனுப்பி வைத்தேன்.
இன்று (நேற்று) நான் வீடு திரும்பியபோது மனைவி வீட்டில் இல்லை. நான் அனுப்பிய பணத்தை வைத்து மனைவி லூடோ விளையாட்டில் செலவழித்துள்ளார் என உரிமையாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் கணவன், மனைவியை கழுத்தை நெருங்கி கொலை கணவன் கை குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார். செய்யாறு அடுத்த அனப்பத்தூர் கிராமத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவன் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு கைக்குழந்தையுடன் தப்பி ஓடி விட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்யாறு அடுத்த அனப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 28 இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா 23 என்பவருடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் எட்டு மாதமாக கௌசல்யா செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில் கௌசல்யாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரஞ்சித்துக்கும் கௌசல்யாக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் இன்று கௌசல்யாவும் ரஞ்சித்தும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அப்போது கோபமடைந்த ரஞ்சித் கௌசல்யாவின் தாலி கயிறாலும் மற்றும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் பின்னர் ரஞ்சித்தின் கை குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதை அடுத்து தகவல் அறிந்த அனக்காவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌசல்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கௌசல்யாவின் தாய் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவன் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா மருத்துவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று (07.12.2022) காலை ஆரம்பித்த விழிப்புணர்வு நடை பயணம் கண்டி வீதி ஊடாக வவுனியா நகரை அடைந்து,
இரண்டாம் குறுக்குத்தெரு, கந்தசாமி கோவில் வீதி, பசார் வீதி, மில் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றினுடாக மீண்டும் வவுனியா வைத்தியசாலையை வந்தடைந்தது.
தொற்றா நோயாகிய நீரிழிவு நோயானது தற்போது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. வவுனியாவிலும் இந் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மக்களது வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்க வழக்கமுமே இந்த நோய் ஏற்படுவதற்கு முககிய காரணம் எனவும் இது தொடர்பில் ஆரம்பத்திலேயே விழிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த விழிப்புணர்வு நடைபயணம் இடம்பெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பிரிவினர், பொலிசார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வர்த்த சமூகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா நகரசபையால் இருவேறு கட்டட தொகுதிகள் இன்றைய (06.12.2022) தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் கீழ் பூங்காவினுள் பொது நிகழ்வுகளுக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய திறந்த மேடை மற்றும் வவுனியா நகரிலே இறைச்சிக்கடைக்கான 06 கடைகளினை உள்ளடக்கிய கட்டட தொகுதி ஆகியவை வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் சுஜன், மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இரு கட்டட தொகுதிகளும் 16 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவு அலுவலகம் முன்பாக இன்று (06.12.2022) காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின் போது சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டும், அவர் பக்கச்சார்ப்பாக செயற்படுகின்றார்,
கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிப்பதில்லை, சமூர்த்தி முத்திரைகளை சரியான காரணமின்றி வெட்டுகின்றார் போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
தாம் கடமைகளை சரிவர மேற்கொள்வதாகவும் சிலர் தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தம் மீது தேவையற்ற குற்றச்சாட்டினை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியாவில் இலங்கை அரசே! அத்தியாவசிய மருந்து வகைகளும் ம.ருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்க என தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.வனயீர்ப்பு போ.ரா.ட்டமொன்று இ.டம்பெற்றது.
குறித்த க.வனயீர்ப்பு போ.ராட்டம் வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (05.12.2022) காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போ.ரா.ட்டத்தில் ஈ.டுபட்டிருந்தவர்கள் பெண்களின் சுகாதார உ.ரிமையினை உறுதி செய்தல், சுகாதார உ.ரிமைகள் ம.னித உ.ரிமைகள், நமது வாழ்க்கை நமது உ.ரிமைகள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
30 நிமிடங்கள் வரை முன்னெடுக்கப்பட்ட இப் போ.ராட்டத்தில் 60க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (02-12-2022) லக்னோ அருகே உள்ள மலிஹாபாத்தில் உள்ள பாத்வனா கிராமத்தில் நடந்திருக்கிறது. ராஜ்பால் என்பவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா என்ற 21 வயதுடைய அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்திருக்கிறது.
இதற்கான பார்ட்டி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருமணத்துக்கான வரமாலை சடங்குக்காக மணமேடைக்கு ஷிவாங்கி சென்றிருக்கிறார். சடங்கு முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
அப்போது திடீரென மணப்பெண் ஷிவாங்கி மயங்கி விழவே திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இதனையடுத்து ஷிவாங்கியை உடனடியாக அருகே இருந்த சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்திருக்கிறார்.
மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது அவர் திடீர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். இறந்த ஷிவாங்கி கடந்த 15-20 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். காய்ச்சல் இருந்ததோடு அவருடைய ரத்த அழுத்தமும் குறைவாக இருந்திருக்கிறது.
இருப்பினும் ஒரு வாரத்தில் குணமடைந்திருக்கிறார். இந்த நிலையில், திருமணம் நெருங்கும் வேளையில் மீண்டும் ஷிவாங்கியின் ரத்தஅழுத்தம் குறைந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் திருமணத்தின் போது அந்த பெண் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்காமல் நேற்று (03-12-2022) ஷிவாங்கியின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் முடித்திருக்கிறார்.
ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் மலிஹாபாத் காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தெரியவரவே சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
தீவிரமான உடற்பயிற்சி செய்பவர் முதல் பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் வேளையில், உடல்நலனில் ஏதேனும் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை பெற்றுக்கொள்வதே வருமுன் காத்தலுக்கு சான்றாக இருக்கும்.
இந்தியாவில் ஒரே நபரை இரட்டையர் சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி.
இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் மும்பையில் பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட பிரிந்ததே இல்லை.
ரிங்கி, பிங்கி தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தாய்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால் டாக்சியை அழைத்தார்கள்.
இருவரும் தாயை காரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மூவருமே பெண்கள் என்பதால் தாயை உட்கார வைப்பது பிடித்து தூக்குவது, உள்ளிட்ட விஷயங்களில் ரிங்கி மற்றும் பிங்கிக்கு டாக்சி ஓட்டுனரான அதுல் உதவியுள்ளார்.
அதுலின் நல்ல மனதும் உதவும் குணமும் பிங்கி ரிங்கிக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டால் பிரிவு என்பது நிச்சயம் ஏற்படும். தாயின் கருவறையிலிருந்து ஒன்றாக பயணிக்கும் நாம் திருமணத்தில் பிரியக் கூடாது என முடிவெடுத்தனர்.
இதையடுத்து இருவரும் தங்களது காதலை போய் அதுலிடம் கூறி அவரின் சம்மதத்தை பெற்றனர். இரட்டை சகோதரிகளின் தாயும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள கோலாகலமாக திருமணம் நடந்தது.
அதுலுக்கு மாலை போடும் போது இருவரும் ஒரே மாலையை எடுத்து மணமகன் கழுத்தில் போட்டனர். இது போன்ற பல பல சுவாரசியங்கள் திருமணத்தில் அரங்கேறியது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21) தனது 2வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமானார்.
டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் நேற்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேஹா நவம்பர் 24ம் திகதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் மாரடைப்பு அல்லது கார் விபத்தில் மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வாகனம் மோதியதில் இலங்கை சிறுவன் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமான 90 வயது பெண் மீது இதுவரையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவர் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.
கல்வின் மரணம் அவர் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. அதிலும் சிங்கப்பூரில் இருந்த போதே கல்வின் சகோதரி ஓவிடிக்கு சகோதரரின் மரண செய்தி சொல்லப்பட்டது. இதையடுத்து விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அவர் தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். மீண்டும் கூறுகையில், சிறப்பான வாழ்க்கைக்காக 2008 இல் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம். என் சகோதரர் கல்வினுக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
நான் வீட்டிற்கு வந்து கதவு அருகே நின்ற போது என் அம்மாவும் அப்பாவும் கதறி அழுது கொண்டிருந்தார்கள் என வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையில் 90 வயது மூதாட்டி எப்படி கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அவர் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் இன்னும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. Superintendent அதிகாரி ராபர்ட் ரொண்டன் கூறுகையில், இது ஒரு சோகமான சம்பவம். விபத்து விசாரணைப் பிரிவு என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறது என கூறியுள்ளார்.
சைவப்புலவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 143ஆவது நினைவுதினம் இன்று (5.12.2022) வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்றது.
அன்னாரின் நினைவு சிறப்பு சொற்பொழிவை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் (05.12.2022) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்றையதினம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்த நிலையிலே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கடவையில் நான்கு, ஐந்து விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், குறித்த கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை தாம் மேற்கொண்டு வருவதாகவும்,
அத்தோடு புகையிரதம் சீரான நேரத்தில் வருகை தராததால் எந்த நேரத்தில் புகையிரதம் வரும் என்று தெரியாத நிலையிலே குறித்த பாதையினூடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புகையிரத கடவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7500 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்படுவதால் யாரும் குறித்த பணிக்கு செல்ல விரும்புவதில்லை என குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி குறித்த கடவையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மூவர் விண்ணப்பித்துள்ளாதாகவும்,
அதற்குரிய நடவடிக்கையை மிக விரைவில் எடுப்பதாகவும், சமிக்ஞை விளக்கினை பொருத்துவதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தாம் சிபார்சு செய்வதாகவும்,
மக்களையும் எழுத்து மூலமான கோரிக்கை கடிதத்தை புகையிரத திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தார். குறித்த போராட்டமானது சுமார் ஒரு மணித்தியாலயமாக இடம்பெற்றிருந்தது.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இடம் பெற்றுள்ளது.
தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீட்டில் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக சந்தேகப்பட்ட ராஜ் துப்பாக்கியுடன் வீட்டின் வாசல் பகுதிக்கு வந்த நிலையில் திடீரென சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரியொருவர்,
ராஜின் கையில் இருந்த துப்பாக்கியை கீழே இறக்குமாறு உத்தரவிட்டு உடனே துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக ராஜின் உறவினர்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆயுதத்தை நிலத்தில் போடுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு முன்னர் ராஜ் முனசிங்க மீது உடனடியாக பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டமை தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
குறித்த பகுதியில் சமீப காலமாக தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் இடம்பெற்றமையினால் ராஜ் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், சகோதரர் கூறியுள்ளார்.
இதேவேளை, 911 என்ற எண்ணிற்கு ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி துப்பாக்கியுடன் ஒருவர் தெருவில் நடந்துச்செல்வதாக வழங்கிய தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும்,
பொலிஸார் முன்னிலையிலேயே ராஜ் தனது வீட்டுக்குள்ளேயே துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதன்போதே ராஜ் முனசிங்க மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஒஸ்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தனது சகோதரர் ஒஸ்டின் பொலிஸ் அதிகாரியினால் “கொலை செய்யப்பட்டார்” எனவும் ராஜ் முனசிங்கவின் சகோதரர் ஜோஹான் முனசிங்க தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.