வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (05.12.2022) காலை 10.30 மணியளவில் ஓமானில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகப்பட்ட எமது பெண்களை காப்பாற்று என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை சமகி வனிதா பலவேகய அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இலங்கை பெண்கள் பாலியல் அடிமைகளா?, அனைத்தையும் விற்று ஏப்பமிட்டு இப்போது எமது பெண்களின் மானத்தையும் விற்கும் மானம்கெட்ட அரசு,
ஓமானில் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாகபட்டுள்ள எமது பெண்களை காப்பாற்று போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஜக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் பெண்கள், பொதுமக்கள் என பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன்,
இலுப்பையடி சந்தியிலிருந்து நடைபயணமாக சென்ற போராட்டகாரர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வவுனியா காரியாலயத்தினை முற்றுகையிட்டதுடன் பணியகத்தின் பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளித்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த 17 வயதான மாணவர் விபத்தில் உயிரிழந்தது அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜிவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தானது கடந்த வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி பகல் 11.20 மணிக்கு நடந்துள்ளது. அப்போது கல்வின் தனது இரு நண்பர்களுடன் பள்ளியில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் 90 வயதான மூதாட்டி ஓட்டி வந்த கார் மூவர் மீதும் மோதியது, அதில் கல்வின் வேனின் மீது தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மற்றொரு மாணவருக்கும் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது மாணவர் காயமின்றி தப்பினார். கல்வின் குடும்பத்தார் கடந்த 2008ல் கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
கல்வின் விபத்தில் சிக்கிய போது அவரின் சகோதரி ஒவிண்டி சிங்கப்பூரில் இருந்துள்ளார். தகவல் கேட்டு பதறிய அவர் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த போது கல்வினை சடலமாக பார்த்து துடித்து போயுள்ளார்.
ஒவிண்டி கூறுகையில், நான் சிங்கப்பூரில் இருந்து சிட்னியில் உள்ள வெஸ்ட் மீட் மருத்துவமனைக்கு போன் செய்து என் சகோதரர் உடல் நிலை குறித்து கேட்ட போது கல்வின் விஜிவீர என்ற பெயரில் யாரும் இங்கு என கூறினார்கள், இதை கேட்டு குழப்பமடைந்தேன்.
இது குறித்து என் பெற்றோரிடன் கேட்ட போது, இதை நான் உன்னிடம் சொல்ல யாரும் விரும்பவில்லை, ஆனால் அவன் இறந்துவிட்டான் என கூறினார்கள்.
அவனை தவிர எனக்கு வேறு உடன்பிறப்புகள் இல்லை, நான் கல்வினை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனெனில் இனி அவனுடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவன் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பான் என கூறியுள்ளார்.
திருமண வீட்டில் அழையா விருந்தாளியாக நுழைந்து மாணவர் சாப்பிட்ட நிலையில் மணமகன் அன்போடு வரவேற்ற வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ், தனது பசியை போக்க அங்கு நடைபெற்ற திருமண விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்தார். பந்தியில் அமர்ந்து வயிறார சாப்பிட்டார்.
அதோடு மணமக்களையும் மனதார வாழ்த்த மேடையேறினார். நான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறேன். அதிக பசியாக இருந்தது. அழையா விருந்தாளியாக இங்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டேன். மனச்சாட்சி உறுத்தியதால் உங்களிடம் உண்மையை கூறுகிறேன்.
உங்களது திருமணத்துக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். கல்லூரி மாணவர் அலோக் யாதவ் கூறியதை இன்முகத்தோடு கேட்டு ரசித்த மணமகன் அதுல் ராஜக், உங்கள் விடுதிக்கும் உணவை எடுத்துச் செல்லுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டார். மணமகனின் அன்பான உபசரிப்பால் மாணவர் இன்ப அதிர்ச்சி அடைந்து நெகிழ்ந்து போனார்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் பசியை போக்க திருமண வீட்டில் நுழைந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மணமக்களின் உறவினர்கள், அந்த மாணவரை பிடித்தனர்.
“உன்னை யார் அழைத்தார்கள். எப்படி இலவசமாக சாப்பிடலாம் என்று வசைபாடி அந்த மாணவரை பாத்திரங்களை கழுவ செய்து தண்டனை கொடுத்தனர். அப்படி ஒரு மனிதநேயமில்லாத சம்பவம் நடந்த சில நாட்களில் பீகாரில் இப்படியொரு மனித நேயத்தை போற்றும் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பவர் அகில் அகமது- உஸ்னா கவுசர் (வயது 30). இந்த தம்பதிக்கு ஹரீஸ் (வயது 7),அலிஷா (வயது 4),அனம் பாத்திமா (வயது 2) என மூன்று குழந்தைகள் இருக்கின்றன.
அகில் அகமது சில வருடங்களாக சென்னப்பட்டணா என்னும் இடத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருக்கும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படத்தை அகில் அகமது தனது மொபைலில் எடுத்துவைத்துள்ளார்.
விடுமுறைக்காக அகில் அகமது தனது வீட்டுக்கு வந்திருந்தபோது அவரது மனைவி உஸ்னா கவுசர் கணவரின் மொபைலை எடுத்து பார்த்தபோது அதில் கணவர் மற்றோர் பெண்ணோடு இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போதுதான் கணவருக்கு மற்றொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் மனைவி உஸ்னா கவுசர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும், கணவர் -மனைவி இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இறுகுடும்பத்தாருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் -மனைவி இடையே மீண்டும் சண்டை வெடித்த நிலையில், உஸ்னா கவுசர், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி தனது குழந்தைகளுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்தவர், அதன்பின்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு நெடு நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்தபோது இந்த கொடிய சம்பவம் தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்த நால்வரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில் கணவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த இளைஞரை, காதலி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (30). இவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரித்துக் கொடுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் சுவேதா என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சூர்யா கொடைக்கானலில் காட்டேஜ் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இசை தயாரித்து வந்த நிலையில், காதலி சுவேதா அவரை பார்ப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளனர்.
அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தநிலையில், சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சுவேதா காதலை முறித்துக்கொண்டு சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மூன்று மாதங்களுக்கு மேலாக சூர்யா கொடைக்கானலில் தங்கி வேலை செய்துள்ளார். இதனிடையே மீண்டும் கொடைக்கானல் வந்த சுவேதாவுக்கு காதல் ஏற்பட்டு சூர்யாவுடன் மீண்டும் பழகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி சூர்யாவுக்கு அடிபட்டுவிட்டதாக சுவேதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியுள்ளனர். சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளனர்.
போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூர்யாவின் காதலியை விசாரித்ததில், சம்பவத்தன்று இருவரும் டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது சூர்யாவுக்கும், சுவேதாவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுவேதா தனது ஆண் நண்பர்களான மும்பையைச் சேர்ந்த கெளதம், திருநெல்வேலியைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கொடைக்கானல் ஆனந்தகிரி பரந்தாகசோழன், அகில்அகமது ஆகியோரை ஏற்கனவே கொடைக்கானல் வரவழைத்து சூர்யாவிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சுவேதாவின் நண்பர்கள் அருகில் இருந்த கட்டையை எடுத்து சூர்யாவை பலமாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுழந்த சூர்யா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் சுவேத உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு காதலனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் நண்பரோடு சேர்ந்து கணவரை Slow Poison கொடுத்து கொலைசெய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் கமல்காத்.
இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
பின்னர் இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசிய நிலையில், குழந்தைக்காக சேர்ந்து வாழ இருவரும் ஒப்புக்கொண்டு சேர்ந்து வாழ்ந்து வைத்துள்ளனர். அப்போது கமல்காத்துக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால்,அவரின் வலி குணமாகாத நிலையில், உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவரின் ரத்தத்தில் அளவுக்கதிகமாக ஆர்செனிக் மற்றும் தாலியம் இருப்பது கண்டறியப்பட்டது.
சாதாரண மனித உடலில் இதுபோன்று அதிகளவில் ஆர்செனிக் மற்றும் தாலியம் இருப்பது மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலிஸாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மரணமாக கருதப்பட்ட இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மனைவி கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கணவர் கமல்காத்தின் நண்பர் ஹிடேஷ் என்பவருடன் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதும்,
இருவரும் சேர்ந்து கமல்காத்தை கொலை செய்ய திட்டமிட்டு உணவில் மெதுவாக கொல்லும் விஷத்தை கொடுத்து கமல்காத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (05.12.2022) காலை 4.45 மணியளவில்,
கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனம், இராஜேந்திர குளம் கிராமத்தில், வவுனியா பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பகவான் பாபாவின் அருளால் 05 மில்லியன் செலவில்,
நன்னீர் குழாய் கிணறு, மின்சாரம் உட்பட சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு பார்வையற்ற தம்பதிகளான திரு திருமதி எஸ்.சஞ்சீவன் அவர்களிடம் நேற்று (04.12.2022) கையளிக்கப்பட்டது.
கையளிக்கும் நிகழ்வில் இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் தலைவர் திரு வி. மனோகரன், வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் திரு.என்.கமலதாசன் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை – மாம்பே ஜய மாவத்தையில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அப்போது சிறுவனின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் யாருமின்றி தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்ததை அறிந்த சிறுவனின் நண்பர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது தந்தைக்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிற்கு விரைந்து சென்று சோதனையிட்ட போது, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்தில் தனது மகன் சிக்கியிருந்ததைக் கண்டுள்ளார்.
குழந்தையை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸை குற்றப்பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பிலியந்தலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியிலிருந்து விலக பல தடவைகள் விண்ணப்பித்தும் நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தனது அம்மா சுகயீனமாக இருப்பதாகவும் அவரை பார்த்துக் கொள்வதற்கு நேரம் கேட்டு பல முறை அலுவலகத்திற்கு இந்த இளைஞன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். எனினும் நிறுவனம் அதனை கண்டுக் கொள்ளவில்லை.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும் மின்சாரம் தடைப்பட்ட நேரங்களில் உட்பட பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நேரம் வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அவரது மின்னஞசல்களுக்கு நிறுவனம் சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் பணி அழுதத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அந்த நிறுவனத்தின் மீது பலரும் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றர்.
இலக்க தகடு இன்றி சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, இரண்டு தோட்டக்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரெஸ்ஸ, கல்வல பிரதேசத்தில் இலக்க தகடு இல்லாத ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் அதனை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கல்கட்டாஸ் ரக துப்பாக்கி, ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் இரண்டு தோட்டக்களை கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 16 மற்றும் 25 வயதான சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இமதுவ, அங்குலுகஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி மாலை அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றுக்குள் சென்று , அதன் முகாமையாளரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி 8 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலிகள் அடங்கிய பெட்டியை கொள்ளையிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற தவராசா தர்ஷினி (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மரணத்துக்குத் தானே காரணம் என்றும் பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் தனது தங்கைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அத்துடன் அக் கடிதத்தில் தொலைபேசி பாவனை தொடர்பிலும் தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர்,
தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியதாகவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது பகிடிவதை காரணமாக மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒன்றரை வருடத்திற்கு முன் இவருக்குப் பதிவுத் திருமணம் நடந்தது என்றும், தற்போது பெற்றோருடன் வசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னைப் போன்ற முக அமைப்பைக் கொண்ட பெண்ணை கொலை செய்துவிட்டு, தான் உயிரிழந்தது போல நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், நொய்டா பெருநகரத்தில் வசித்து வருபவர் பாயல் பாட்டி (22). பாயலின் பெற்றோர் தங்கள் உறவினரான சுனில் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடனை திருப்பி தரும்படி பாய்லின் குடும்பத்தினரை சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி பாயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பாயலின் குடும்பத்தினரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் கடன் தொல்லை காரணமாக பாயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் பாயல் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து பாயல் தனது காதலனான அஜய் தாக்கூரை கூட்டு சேர்த்து உள்ளார். அஜய் தாகூருடன் நொய்டாவில் உள்ள மாலுக்கு சென்றபோது, அங்கு தன்னை போன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்துவரும் ஹேமா சவுதிரி எனும் 28 வயது பெண்ணை பார்த்துள்ளார்.
அப்போது ஹேமாவை கொன்று தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க பயல் திட்டமிட்டுள்ளார். காதலன் அஜய் தாக்கூரை ஹேமாவிடம் பழகுமாறு கூறியுள்ளார். இதை கேட்டு அஜய் தாக்கூரும் அவருடன் நட்பாக பழகினார்.
நவம்பர் 12-ஆம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த பயல் மற்றும் அவரது காதலன் அஜய், ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி ஹேமாவின் முகத்தை சிதைத்துள்ளனர். பின்பு, உயிரிழந்த ஹேமாவின் உடலில் பாயலின் உடையை அணிவித்துள்ளனர்.
கொதிக்கும் எண்ணெய் முகத்தில் பட்டதால், தனது அழகு போய்விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக பாயல் தன் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகே போட்டு விட்டு காதலனுடன் தலைமறைவானார்.
ஆனால் ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தியதில், ஹேமா கடைசியாக அஜய் தக்கூருடன் பைக்கில் சென்னறது தெரியவந்தது.
இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாயல் மற்றும் காதலன் அஜய் ஹேமாவை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
விருதுநகரில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிதம்பரம் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேய ராஜ் (41). இவர் தனது மனைவி அருணாமகாஸ்ரீ (37) என்பவருடன் வசித்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேய ராஜ் அதே பகுதியில் பெயிண்ட் வியாபாரக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று கார்த்திகேயராஜ் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் அருகில் உள்ளவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் வந்து வீட்டின் கதவை தட்டியும், கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மேற்கு காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து கணவன், மனைவி இருவர்களின் உடல்களை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்டமாக மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திகேய ராஜ் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கடன் பிரச்சினை தொழில் நஷ்டத்தால் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.
அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை நீலாங்கரையில் ஆசிரியர் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.
நெல்லை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் தவறான சிகிச்சையால் உயிரிந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மகாராணி (25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அலெக்சின் மனைவி மகாராணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக நெல்லை டவுணில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு மகாராணிக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த மகாராணி எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சை காரணமாகவே மகாராணி உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டினர். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகாராணியின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி நெல்லை டவுன் கீழ ரத வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மகாராணி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் காதலியை கொன்ற அஃப்தாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஷ்ரத்தா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இதே பாணியில் புதிய சம்பவம் பெங்களூரில் நடந்திருப்பது தென் இந்தியா முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த நேபாளத்தை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ் தமணி. இவருடன் 23 வயதான இவரது கேர்ள் பிரண்ட் கிருஷ்ணகுமாரி லிவிங் டுகெதரில் இருந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.
இந்த இருவரும் ஆளுக்கு ஒரு பியூட்டி பார்லர்களில் பணியாற்றி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து இருக்கிறது.
இதனால் கோபம் அடைந்த சந்தோஷ், கிருஷ்ணகுமாரியை தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அவரது தோழி அங்கு வரவே, சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தெரிகிறது
அதன் பின்னர் தம்முடைய தோழி கிருஷ்ணகுமாரியை தேடி வந்திருக்கிறார் இன்னொரு பெண். வந்தவர் தன்னுடைய தோழி மயக்கமடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமாரி உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு கிருஷ்ணகுமாரியின் தோழி போலீசாருக்கு கொடுத்த புகாரியில்தான் இன்னும் பல விஷயங்கள் வெளியே தெரிய வந்து அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது.
அதன்படி, பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீசார் சந்தோஷ் தமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகுமாரியின் தோழியும் தனது தரப்பில் நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
அதன்படி சந்தோஷ் தமணி கிருஷ்ணகுமாரியுடன் லிவிங் டுகெதரில் இருக்கும் போதே பல பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பதையும், பழகிக் கொண்டிருப்பதையும் வழக்கமாக செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தனது கேர்ள் பிரண்ட் கிருஷ்ணகுமாரி உடைய தோழிக்கும் சந்தோஷ் தமணி போன் பண்ணுவது, வீடியோ கால் பண்ணுவது உள்ளிட்ட தகாத முறையில் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
அதன்பிறகு கிருஷ்ணகுமாரியின் தோழி, சந்தோஷ் தமணி தமக்கு வீடியோ கால் பண்ணி தொல்லை கொடுப்பதாக தோழியிடம் கூற அதை கேட்ட கிருஷ்ணகுமாரி தம்முடைய காதலர் சந்தோஷ் தமணியை நேருக்கு நேராய் சென்று கேள்வி கேட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்தமணி கிருஷ்ணகுமாரியை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொல்ல முயற்சித்ததுடன் கிருஷ்ணகுமாரியிடம் இந்த விவகாரத்தைச் சொன்ன அந்த அந்த தோழிக்கும் வீடியோ கால் பண்ணிய சந்தோஷ் தமணி, வீடியோ கால் நேரலையில் கிருஷ்ணகுமாரியை தோழியின் கண் முன்னே அடித்துள்ளார்.
இதை பார்த்த கிருஷ்ணகுமாரியின் தோழியோ தமது தோழி அடி வாங்குவதை வீடியோ காலில் பார்த்து பதறி இருக்கிறார். உடனடியாக தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டு, தோழியை மீட்க செல்வதற்குள்,
அங்கிருந்து சந்தோஷ் தமணி தப்பி சென்றுவிட, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த தம்முடைய தோழி கிருஷ்ணகுமாரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விடவே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரியின் தோழி கொடுத்த வாக்குமூலத்தை கொண்டு சந்தோஷ் தமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் தன்னுடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்த காதலி ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்றதுடன் 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தும்,
பல்வேறு இடங்களில் வீசியும் கொடூரமான சம்பவங்கள் செய்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த வரிசையில் பெங்களூரில் இந்த லிவிங் டுகெதர் உறவில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.