விஷம் வைத்து கணவனைக் கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மும்பையில்..

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாண்டா குரூஸ் மேற்கு பகுதியில் வசித்து வந்த கல்காந்த் ஷா (45) என்பவர் இரண்டரை மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். அவரது மனைவி காஜல் ஷா மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடத்திய குற்றப்பிரிவு, ஷா சிகிச்சை பெற்ற பம்பாய் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையில், அவரது உடலில் விஷம் இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மனைவி மற்றும் காதலனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டில் காஜல் மற்றும் ஹிதேஷ் கைது செய்யப்பட்டனர். ஆடை வியாபாரியாக இருந்த கமல்காந்த் ஷா, 2002ல் காஜலை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகள் மற்றும் 17 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஜல் மற்றும் ஹித்தேஷ் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காஜலுக்கும், ஷாவுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ஷாவை விட்டு ஹிதேஷை திருமணம் செய்து ஷாவின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டார்.

கமல்காந்த் ஷாவின் தாயார் ஜூன் மாதம் இறந்தார். இதையடுத்து ஷாவை கொல்ல காஜல் திட்டமிட்டார். அன்று முதல் காஜல் ஷாவின் உணவில் விஷம் கலக்க ஆரம்பித்தார்.

பலமுறை விஷம் குடித்த பிறகு ஷாவின் உடல்நிலை மோசமடைந்தது. ஷா முதலில் ஆகஸ்ட் 27 அன்று அந்தேரியில் உள்ள கிரிட்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் செப்டம்பர் 3 ஆம் தேதி பம்பாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் செப்டம்பர் 19 அன்று இறந்தார்.

ஷாவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் சாண்டா குரூஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. பின்னர் போலீசார் ஷாவின் சகோதரியை அழைத்து தகவல் கேட்டனர். ஷாவின் சகோதரி கவிதா லால்வானியும் தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் அடைந்தார்.

பின்னர், இந்த வழக்கு குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டது. அக்டோபரில் விசாரணையை மேற்கொண்ட குற்றப்பிரிவு, ஷாவின் மனைவி காஜல், ஹிதேஷ் ஜெய் மற்றும் பிற உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தியது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காஜல், ஜெய் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 8ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டனர்.

நேருக்கு நேர் வந்து நின்ற ஏழு அடி உயர ஆவி… பிரித்தானிய குடும்பத்தை திணறடித்த பேய் வீடு!!

பிரித்தானியாவில்..

புதிய வாழ்வைத் துவங்கலாம் என ஆயிரம் கனவுகளுடன் பண்ணை வீட்டுக்கு குடிபுகுந்த ஒரு பிரித்தானியக் குடும்பம், அந்த குடும்பத்தில் இருந்த ஆவிகள் தொல்லையால் துவம்சம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரித்தானியாவில், Brecon Beacons என்ற இடத்தில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்கு தங்கள் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்தனர் Liz Rich, Bill தம்பதியர். அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்தே பல அமானுஷ்யங்களை உணர்ந்திருக்கிறது அந்தக் குடும்பம்.

திடீரென காரணமே இல்லாமல் கரண்ட் பில் அதிகரிப்பது முதல், திடீர் திடீரென பண்ணை விலங்குகள் உயிரிழப்பது வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருந்திருக்கிறது.

பிள்ளைகள் விளையாடச் செல்லும்போது ஒரு வயது முதிர்ந்த பெண் அவர்களை முறைத்துக்கொண்டே இருப்பது, திடீரென முகம் இல்லாத ஒரு பயங்கர மனித உருவம் ஏழடி உயரத்தில் வழிமறித்துக்கொண்டு நிற்பது என தினமும் தொல்லைகள் ஆகிவிட, தினம் தினம் ஒரே போராட்டமாகியிருக்கிறது வாழ்வு.

இப்படி தினமும் ஏதவாது ஒரு அமானுஷ்யம் நடந்துகொண்டே இருந்ததால், தேவாலயத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள் தம்பதியர். பாதிரியார்கள் வந்து பேய்களை ஓட்ட, கொஞ்ச நாட்கள் வீடு அமைதியாகும். பின்னர் மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கும்.

ஒரு கட்டத்தில் Liz உடலுக்குள் ஆவி ஒன்று புகுந்துகொள்ள, அவர் சினிமாவில் வருவதுபோல திடீரென பயங்கரமான குரலில் பேசத்துவங்கியிருக்கிறார். இப்படியே ஏழு ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள் தம்பதியர். Liz பாதிக்கப்பட்டாலும் அவர் ஓரளவு சமாளித்துக்கொள்ள, Bill முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னைத்தான் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கத் துவங்கிய Bill, குடித்துக் குடித்து முழுமையாக குடிகாரராகியிருக்கிறார். பின்னர் Lizஐப் பிரிந்ததுடன், இறந்தும் போய்விட்டார் Bill.

தற்போது, Lizக்கு 63 வயதாகிறது. நான் சொல்வது பலருக்கு கதை போலத் தெரியலாம், ஆனால், அனைத்தும் உண்மை, எதுவும் கதையில்லை என்கிறார் அவர். அவரது அனுபவங்களை சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் Liz பகிர்ந்துகொள்ள, அதைக் கேட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கே பயம் வந்துவிட்டதாம்!

பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு : ஆசிரியர் கைது!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனிடையே மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்.

மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் இவருக்கு கவின்குமார், தர்ஷன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கவின்குமார் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கவினை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக, வழக்கு பதிவுசெய்த நீலாங்கரை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த வாரம் தர்ஷன் வகுப்பறையில் தூங்கியதாகவும் இதனை ஆசிரியர் ஒருவர் கண்டித்திருக்கிறார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், மாணவனின் தந்தை மகேஷ் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் இருவரும் கவினிடம் பள்ளி கழிவறையில் ஹான்ஸ், கூல் லிப் வைத்திருந்தது நீதானே என்று கேட்டு அடித்துள்ளனர் . மேலும், சிறுவனிடம் புகையிலை பொருளை பயன்படுத்தியதாக கடிதம் எழுதித்தரச் சொல்லி வற்புறுத்தியது தெரியவந்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நீலாங்கரை பகுதி போலீஸார், முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவர் படித்த பள்ளியின் முதல்வர், 2 ஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

சேலத்தில்..

சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இவர் கடந்த 1 வாரமாகவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.

இதனால் பதறிப்போன சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக சீமாஷ்ரூபனை மீட்ட மாணவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே சீமாஷ்ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒருதலை காதலில் மாணவன் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மனவேதனையில் பேசி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.

அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் ஆசிரியர் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். விருதுநகரில் மர்மமான முறையில் நேற்று கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.

வவுனியாவில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!! 

மெனிக்பாம் பகுதியில்..

வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் புகையிரதத்தில் மோதுண்டு இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இன்று (04.12.2022) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது,

குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட நிலையில் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்திருந்தார்.

காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் தங்கப் பதக்கம்.. மறுபுறம் தந்தை இறப்பு செய்தி : காமன்வெல்த் அரங்கில் கதறி அழுத தமிழக வீராங்கனை!!

லோகப்பிரியா..

காமன்வெல்த் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கப் பதக்கம் வென்ற போது அவரது தந்தை உயிரிழந்த செய்தி கேட்டு வீராங்கனை கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

நியூசிலாந்து ஆக்லாண்டில் நவம்பர் 28ம் தேதியில் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டு சேர்ந்த 11 வீரங்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லோகப்பிரியா.

இவர் காமன்வெல்த் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கித் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியை அவர் சக வீரர்களுடன் 5 நிமிடம் கூட கொண்டாடமுடியவில்லை.

அதற்குள் அவரது பயிற்சியாளர் சொன்ன ஒரு செய்தி அவரை அப்படியே கதறி அழவைத்துவிட்டது. தங்கம் பதக்கம் வாங்கிய அதே நேரில் ஊரில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை லோகப்பிரியாவின் பயிற்சியாளருக்கு அவரது உறவினர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். பின்னர் போட்டிகள் முடிந்து பதக்கம் வாங்கிய பிறகுதான் அவரது பயிற்சியாளர் இந்த செய்தியைக் கூறியுள்ளார்.

இதைகேட்டு அப்படியே உடைந்த லோகப்பிரியா, “தங்கம் வாங்கனும்,சாதிக்கனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போ தங்கம் வாங்கும் போது அதைப் பார்க்க தந்தை இல்லையே” என கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

லோகப்பிரியாவின் தந்தைப் பெயர் செல்லமுத்து. இவர் தனது குடும்ப வருமையிலும் மகளை எப்படியாது விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என லோகப்பிரியாவிற்கு பக்கபலமாக இருந்து ஊக்கம் கொடுத்து வந்துள்ளார்.

தற்போது அவரது ஆசைப்படி மகள் தங்கப் பதக்கம் வென்றபோது செல்லமுத்து உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது கல்லுக்காரன்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

காணாமல் போன இளம்பெண் சடலமாக கிடந்த பரிதாபம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி!!

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்னும் பகுதியை சேர்ந்த தனு குர்ரே (வயது 26). இவர் ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த மாதம் 21 ஆம் தேதி தனு குர்ரேவை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வந்த சமயத்தில் சில அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளது.

தனு குர்ரே காணாமல் போன தினத்தில், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சச்சின் அகர்வால் என்ற வாலிபருடன் பலங்கிர் என்னும் பகுதிக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில், தனு குர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக பலங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக இளம்பெண்ணின் உடல் கிடப்பது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில், அது தனு குர்ரே தான் என்பதை அவரின் பெற்றோர்கள் மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனு குர்ரே இறந்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முதலில் துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தனுகுர்ரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வால் என்ற வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரணை வந்துள்ளனர்.

அவர் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ராய்ப்பூர் பகுதிக்கு வந்திருப்பது தெரிய வந்த நிலையில், அதன் பின்னர் தனு குர்ரேவுடன் மாலில் சினிமா பார்க்கவும் சச்சின் அகர்வால் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், படம் பார்த்து விட்டு திரும்பி கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவரிடம் இருந்து தனுகுர்ரேவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் பெயரில், அவரிடம் தகராறில் ஈடுபடவும் சச்சின் அகர்வால் ஆரம்பித்துள்ளார். இருவருக்கும் இடையே மிகப் பெரிய அளவில் பிரச்சனை உருவாகி உள்ளது.

தொடர்ந்து, தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாக தனு குர்ரேவை கொண்டு போன சச்சின், வழியிலேயே அவரை கொலை செய்து விட்டு பின்னர் பலங்கிர் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வேறு ஏதேனும் காரணத்திற்காக சச்சின் அகர்வால் தனு குர்ரேவை கொலை செய்தாரா அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

கல்வின் விஜயவீர..

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தை சேர்ந்த 17 மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வின் விஜயவீர என்ற கொழும்பில் பிறந்த மாணவரே வியாழனன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த கல்வின்விஜயவீர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வான் ஒன்றுடன் மற்றுமொரு வாகனம் மோதிய விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் 90 வயது பெண்ணொருவர் செலுத்திய மிட்சுபி லான்சர் செடான் வாகனம் இன்னுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாணவர் காருக்கு அடியில் சிக்குண்ட நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு அவசர சேவையினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் 40 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞன்!!

விஜயப்பூரில்..

கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டம், சிந்தகி தாலுகாவில் உள்ள பாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஏமார்ந்ததை போல யாரும் யாரும் ஏமார்த்திருக்க முடியாது.

ஹைதராபாத்தில் நடந்து வரும் கட்டட பிராஜக்ட் ஒன்றில் சூப்பர்வைசராக பரசுராமன் பணியாற்றி வருகிறார். அவருக்கு மாதம் 30,000 சம்பளம். இந்த நிலையில் முகநூலில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபி- யாக வைத்திருந்த பெண் ஒருவர் பரசுராமுக்கு பிரண்ட் ரெக்கியூஸ்ட் அனுப்பியுள்ளார்.

கீர்த்தி சுரேஷை யாரென்றே தெரியாத பரசுராம் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்து போனார். பின்னர் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பேசி வந்துள்ளார்.

அந்த பெண் கல்லூரியில் படிப்பதாக கூறி, படிப்பு செலவுக்காக அவ்வப்போது பரசுராமனிடம் பண உதவி கேட்டு பெற்றுள்ளார். இவ்வாறு சுமார் 40 லட்சம் வரை அந்த பெண்ணுக்கு பரசுராம் செலவழித்துள்ளார்.

ஒருநாள் பரசுராமனிடம் வீடியோ காலில் பேசலாம் என அழைத்த பெண் அவரது முகத்தை காட்டாமல் பரசுராமனை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

பரசுராமனும் குளிக்கும்போது வீடியோ கால் செய்துள்ளார். அதை தனது செல்போனில் ரெக்கார்டு செய்துகொண்ட அந்த பெண் பரசுமானை மிரட்ட தொடங்கினார். பல லட்ச ரூபாய் வரை கொடுத்த பிறகும் பெண்ணின் மிரட்டல் ஓயவில்லை.

இதனால் பரசுராமன் சிந்தகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். உடனே சைபர் க்ரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வந்தனர்.

விசாரணையில் அந்த பெண் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

கல்லூரி மாணவி என்று தன்னிடம் மோசடி செய்ததோடு நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் தன்னுடையதுதான் என்று சொல்லி காதல் வலையில் வீழ்த்தியது பரசுராமனுக்கு பேரிடியாக இருந்தது.

பின்னர் மஞ்சுளாவை கைது செய்த போலீசார் பரசுராமனை மிரட்டி வாங்கியிருந்த லட்ச கணக்கான பணம், ஒரு ஹூண்டாய் கார், பைக், 100 சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமனை மிரட்டி வாங்கிய பணத்தில், மஞ்சுளா புதிய வீட்டையும் கட்டி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், மஞ்சுளாவை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த கணவனையும் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஏமார்ந்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுத்து வந்த நபரின் அறியாமல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன 20 வயது இளைஞன் : காணாமல் தவிக்கும் தாய்!!

விதுஷிகா நவஞ்சன பண்டார..

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆராச்சியின் விதுஷிகா நவஞ்சன பண்டார என்ற ஐந்தடி ஏழு அங்குல உயரமான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த ஜூன் மாதம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவற வாழ்வுக்குச் சென்றுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர் விகாரைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடைசியாக குறித்த இளைஞன் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்டு தான் கேகாலையில் இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

 

காணாமல் போன இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தாய் இறந்த சோகத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறவினர்கள்!!

கோவையில்..

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ் குமார். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு பிடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லை என நண்பர்களிடம் கூறிவிட்டு கல்லூரி விடுதியிலேயே இருந்துள்ளார். பின்னர் நண்பர்கள் வந்து பார்த்தபோது அவரது அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

பிறகு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது பென்னிஸ் குமார் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாய் இறந்த துக்கத்தில் பென்னிஸ் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பென்னிஸ் குமார் தாய் மல்லிகா உயிரிழந்துள்ளார். இதனால் பென்னிஸ் குமார் கடந்த ஒரு வருடமாகவே யாருடனும் சரியாகப் பேசாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் இறந்த சோகத்தில் பாசமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை பழிவாங்க 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட ஹோலே பீடியில் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்னா கவுசர். இவருக்கு 7 வயதில் ஹாரிஸ் என்ற மகனும், 4 வயதில் அலிசா, 2 வயதில் பாத்திமா என இரண்டு மகள்களும் இருந்தனர்.

இவர் மத்தூர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உஸ்னா கவுசருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவர் கடும் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அடுத்தநாள் காலையில்தான் 4 பேரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து அங்கு வந்து 4 பேரில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதின்ம வயதில் வந்த காதல் : 10வருடங்கள் காத்திருப்பு : இலங்கை பிரபலத்தின் சுவாரஸ்ய காதல் கதை!!

சுவாரஸ்ய காதல் கதை..

அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதலின் சுவாரஸ்ய சம்பவம் இணையங்களில் வைரலாகிவருகின்றது. அதாவது கடந்த 2012 சரித் அசலங்கவுக்கு 15 வயது கவிந்திக்கு 14 வயது.

காலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தில் இவர்கள் காதல் ஆரம்பிக்கின்றது. இருவரும் காதலை சொன்ன தினம் 28ம் திகதி நவம்பர் மாதம் 2012. நாம் இருவரும் இளவயதினர் தான்.

ஆனால் வாழ்வில் நாம் எடுத்துக்கொண்ட துறையில் ஜெயித்து பின் திருமணம் செய்து கொள்வோம் என அந்தவயதில் அவர்கள் தமக்குள் உறுதி பூண்கின்றனர்.

விரைவாக 10 வருடங்கள் கடக்க இன்று 2022 இல் அந்த அதே சிறுவன் இன்று இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவனாகியுள்ளார். முதிர்ச்சியும் கிரிக்கட் திறமையும் இளவயதிலேயே கைவரப் பெற்ற சரித் அசலங்க இலங்கை கிரிகெட்டில் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.

அதே 28ம் திகதி நவம்பர் மாதம் தான் திருமணம் இடம்பெறவேண்டும் என்று விடாப்பிடியாக தமது திருமணத்தை இருவரும் நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் குணதிலக்கக்கள் உருவாகின்ற சமூகங்களிலிருந்து தான் அசலங்கக்களும் உருவாகின்றார்கள். குணத்திலக்ககளும் அசலங்ககளும் கூடவே வாழ்பவர்களாகவும் ஏன் நண்பர்களாகவும் கூட இருப்பார்கள்.

இருவரையும் வேறுபடுத்துவது திறமையோ, கடின உழைப்போ இல்லை. கொஞ்சம் ஒழுக்கம், நிறைய இலட்சியம் அவ்வளவு தான் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்.. 32 சிம்கார்டுகள்… தங்க நகைகளுடன் ஓட்டம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட ஆண்களை திருமண ஆசை காட்டி நகை, பணத்தை சுருட்டிய மோசடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (25), ஒன்லைனில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த இவர், அபிநயா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகத்து மாதம் நடராஜன்-அபிநயாவின் திருமணம், நடராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் நடந்தது. இருவரும் வெவ்வேறு நகை கடைகளில் வேலைக்கு சேர்ந்தனர். ஒருநாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா, அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அபிநயா மாயமானார். அவரது இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்த 17 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப்புடவைகள் காணாமல் போயிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனடியாக பொலிஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய பொலிஸார் அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றினர்.

அதில் மதுரை முகவரி இருந்தது. இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

விடுதிக்கு விரைந்த பொலிஸார் அங்கு தங்கியிருந்த அபிநயாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் மகன் உள்ள நிலையில், மேலும் 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் 10 நாட்களிலேயே அவரைப் பிரிந்த அபிநயா, மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார்-அபிநயாவுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பின்னர் சென்னை கேளம்பாக்கத்தில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்த பின் 10 நாட்களில் அவரையும் விட்டு விலகியுள்ளார். அதன் பின்னர் தான் நடராஜனை ஏமாற்றியுள்ளார். அவரிடம் சுருட்டிய நகை, பணத்தை இரண்டாவது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து செலவு செய்துள்ளார்.

எனவே அவரையும் கைது செய்த பொலிஸார் அபிநயா பெயரில் வாங்கி வைத்திருந்த 32 சிம்கார்டுகளை கைப்பற்றினர். மேலும் சமூக வலைத்தளங்களில் பலருடன் நெருங்கி பழகிய அபிநயா, சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை பெற்றுள்ளார்.

தற்போது நடராஜன் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் அபிநயாவினால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் இலங்கை பெண்ணின் புகைப்படம்!!

நிமாலி நிலுஷிகா..

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பெண்ணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குருநாகல், மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

அந்த பெண் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய வந்துள்ளார். அவரது கணவர் பல மாதங்களாக பிள்ளைகளை கைவிட்டுச் சென்றமையால் இடிந்து விழும் நிலையில் இருந்த சிறிய மண் வீடொன்றில் அவரது மகள்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானவுடன் உடனடி கவனம் செலுத்திய குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான அமைப்பும் நிமாலி நிலுஷிகா என்ற அந்த பெண்ணை நாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஐந்து நாட்களுக்குள் விமான டிக்கெட்டுகள் அனுப்பி அவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். தாய் நாடு திரும்புவதனை அறியாத பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியவர்கள் தாயை கண்டு கதறி அழும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெற்ற குழந்தைக்கு பால் தர முடியாததால் மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆஷா ( 24) . இவரது கணவர் அமீன் பாஷா (30) . இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆகி ஆஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது கடந்த செப்டம்பர் மாதம் அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

தற்போது குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகிறது. ஆஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது குழந்தையும் ஆஷாவும் கொடுங்கையூரில் உள்ள ஆஷாவின் அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு தூங்கிய போது திடீரென்று சத்தம் கேட்டு ஆஷாவின் அம்மா அஸ்மத் பீவி என்பவர் மதியம் மூன்று மணி அளவில் எழுந்து பார்த்தார்.

அப்போது ஆஷா இல்லாததால் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த இரும்பு கம்பியால் புடவையால் ஆஷா தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆன நிலையில் குழந்தைக்கு சரிவர பால் கொடுக்க முடியாத காரணத்தினால் ஆஷா மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.