114 கி.மீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை அடுத்த தரமணி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இளைஞரான இவர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.

இவர் வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி நண்பர்கள் இருவரும் இரு தரமணி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.

வாகனத்தை பிரவீன் ஓட்டியுள்ளார். பின்னால் ஹரிகிருஷ்ணன் இருந்துள்ளார். அப்போது ஹரிகிருஷ்ணன் செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

அந்தநேரம் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியிலிருந்து வந்த லோடு வேன் ஒன்று யூடர்ன் செய்துள்ளது. இதனால், வேனில் இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இருக்க வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளனர்.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து சிகிச்சையில் இருந்த பிரவீன் இன்றைய இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அடுத்தநாள் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் குணசேகரனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TTF வாசன் போன்றவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதைப்பார்க்கும் இளைஞர்களும் தாங்களும் இதேபோன்று வாகனத்தை ஓட்டவேண்டும் என நினைக்கின்றனர்.

இதனால் இளைஞர்கள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிப்பார்க்கும்போது இப்படி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே TTF வாசன் போன்றவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி செல்லும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை தவிர்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைக்கணத்தில் சம்பளத்தை பல கோடிக்கு உயர்த்தி கேட்ட தனுஷ் : நெஞ்சுவலியால் துடித்த தயாரிப்பாளர்!!

தனுஷ்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஹாலிவுட் வரை சென்ற தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்திற்கு பிறகு வாத்தி, கேப்டம் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் எப்போதும் தனுஷ் பெரிய படம் என்றாலே 30 கோடிக்கு மேல் சம்பளத்தை கேட்கமாட்டார். ஆனால் இயக்குனர் எலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

அப்படத்திற்காக தனுஷ் சுமார் 40 கோடி அளவில் சம்பளத்தை உயர்த்தி கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். இதற்கு காரணம் நடிகர் சிம்பு தானாம். மாநாடு படத்தின் 100 கோடி வசூலுக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் எகிறியது. அதனால் வரும் படங்களில் தனுஷ் 40 கோடி சம்பளம் வரை உயர்த்தி கேட்டு நடித்தும் வருகிறார்.

இதனால் தனுஷ் எலன் இயக்கத்தில் உருவாகவுள்ள தயாரிப்பாளரிடம் 40 கோடியை கேட்டுள்ளார். இதனை கேட்ட பிரடொக்ஷன் டீமே ஆடிப்போய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் அதை கேட்டு நெஞ்சுவலியே வந்திரும் போலிருக்கிறது என்று புலம்பி தவித்துள்ளாராம்.

முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தாலே போது அடுத்த படத்திற்கு பல கோடியில் சம்பளத்தை உயர்த்துவது சகஜம் தானே. அப்படி உயர்த்தும் நடிகர்களை தானே நீங்கள் வேண்டும் என்று கேட்கிறீர்கள் என விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

எவ்வளவோ சொல்லியும் கேட்காத கணவனை 22 துண்டுகளாக்கி வீசியெறிந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

டெல்லியில்..

எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.. பலமுறை இது குறித்து இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வெடித்திருக்கிறது. இருந்தாலும் தனது கள்ளத்தொடர்பை அவர் விட தயாராக இல்லை. எனக்கும் வேற வழி தெரியலை… என அதிர வைத்திருக்கிறார் பூனம். அப்படி என்ன செய்தார்?

தனது கணவனைக் கொன்று, 22 துண்டுகளாக கூறு போட்டிருக்கிறார். அதன் பிறகு பாகங்களை ப்ரிட்ஜில் அடுக்கி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வீசி எறிந்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தாவை அவளது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த அதிர்ச்சி சுவடு கூட இன்னும் மறையலை. அதற்குள் அடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உத்தரப்பிரதேசத்தில், தனது காதலியை 5 துண்டுகளாக்கி வெவ்வேறு இடங்களில் காதலன் வீசி எறிந்த சம்பவமும் நடந்தேறியது.

இந்நிலையில், அதே பாணியில் தலைநகரில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை தனது மகனுடன் சேர்ந்து மனைவி, கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பாண்டவ நகர் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுடைய மகன் தீபக் . இதில் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனை அவரது மனைவி பூனம் பலமுறை சொல்லியும்,கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

இதனால் பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார். கடந்த ஜூன் மாதத்தில் கணவரை கொலை செய்து மகன் உதவியுடன் அவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார்.

வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து தினமும் டெல்லியை சுற்றி பிரித்து வீசியுள்ளார். வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.

அவருடன் அவரது தாயாரும் செல்வது அதில் தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை சிதைந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டவைகளில் சில தாசின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு து பூனம், தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாழில் பிறந்து 10 நாட்களில் தந்தையை பறிகொடுத்த குழந்தை!!

யாழில்..

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் பிறந்து 10 நாட்களான குழந்தையின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

நேற்று (01.12.2022) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

 

விபத்தில் இறந்தால் 2 கோடி… மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்!!

ராஜஸ்தானில்..

மனைவி இறந்த 1 மணி நேரத்தில் Insurance அலுவலகம் சென்று ரூ.2 கோடி வாங்கி வந்த கணவரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்திரா – ஷாலு தேவி தம்பதி.

இவர்களுக்கு கடந்த 2015-ல் திருமணமாகி தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஏனெனில், ஷாலு வீட்டில் தருவதாக கூறிய வரதட்சணையை அவர்கள் கொடுக்கவில்லை.

இதனால் இவர்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதால், தனது மனைவியை கொலை செய்ய எண்ணியுள்ளார். ஆனால் அவரை கொலை செய்தால் தனக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த மகேஷ், இன்சூரன்ஸ் பற்றி கேள்விப்பட்டார்.

அதன்பேரில், தனது மனைவி பெயரில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி இன்சூரன்ஸ் போட்டுள்ளார். ஆனால் யார் பெயரில் இன்சூரன்ஸ் இருக்கிறதோ, அவர்கள் இயற்கையான முறையில் இறந்தால் ரூ.1 கோடியும், விபத்தில் இறந்தால் ரூ.1.90 கோடியும் அவரது குடும்பத்தாருக்கு போகும்.

ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகே அப்படி செய்யமுடியும் என்பதால், ஒரு வருட காலமாக கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதத்துடன் 1 வருடம் முடிந்த நிலையில், தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படை வைத்து ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி தனது மனைவியின் இறப்பை ஒரு விபத்து போல் காட்ட எண்ணியுள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று தனது மனைவியை அவரது சகோதரருடன் பைக்கில் அனுப்பி வைத்துள்ளார்,

பின்னர் தான் ஏற்பாடு செய்த்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்களும் ஷாலுவின் பின்னால் சென்று அவர்களை காரால் மோதினர். இந்த விபத்தில் ஷாலு மற்றும் அவரது சகோதரர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஷாலுவின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தபோது, மகேஷ் அழுது நாடகமாடியுள்ளார். இதையடுத்து இதனை அதிகாரிகள் விபத்தாக கருதினர். பின்னர் அவரது சடலத்தை வீட்டில் வைக்கப்பட்டிருக்கும்போதே திடீரென்று மகேஷ் காணாமல் போனார். திரும்பி வந்த பிறகு அவரிடம் அதிகாரிகள் விசாரிக்கையில், இன்சூரன்ஸ் அலுவலக சென்று வந்தது தெரியவந்தது

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் பதிலளித்துள்ளார். ஆனால் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே இருந்த சிசிடிவியை ஆய்வு செய்ததில் மனைவி ஷாலு பைக்கில் சென்ற பிறகு, மகேஷ் தான் அமைத்த கூலிப்படைக்கு தகவல் கூறியிருந்தது பதிவாகியிருந்தது.

இதையடுத்து மகேஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான், தனது மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரையும், கூலிப்படையினர் உட்பட 5 பேரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.2 கோடி Insurance பணத்திற்காக மனைவியை கொலை செய்து விபத்துபோல் ஏற்பாடு செய்த கணவரின் செயல் ராஜஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் மழையின்மையால் உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு!!

உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு..

வவுனியாவில் கடந்த 20 நாட்களாக மழை இன்மையால் உழுந்து செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 5500 கெக்டெயருக்கும் அதிகமாக உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மழையின்மை விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த காலங்களில் 4000 ரூபாவுக்கு உழவு பணம் கொடுத்து 400 முதல் 500 ரூபாவுக்கு விதை உழுந்து பெறக்கூடிய நிலை காணப்பட்ட போதிலும் தற்போது,

15000 ரூபா உழவுப்பணமாகவும் 1100 முதல் 1200 வரை விதை உழுந்து கொள்வனவு செய்தே செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!! 

சேமமடுவில்..

வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேரை நினைவுகூறும் நிகழ்வு இன்று (02.12.2022) சேமமடுவில் இடம்பெற்றது.

இதன்போது புலம் பெயர்ந்து வாழும் கிராமத்தவர்களின் நிதிப் பங்களிப்பில் சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கிராமத்தில் 1000 மரக்கன்று நாட்டும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இதைவேளை கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆதிவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்த 9 வயதுச் சிறுவன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில், வீட்டில் நுழைந்த சாரைப்பாம்பை 9 வயது சிறுவன் பிடித்து அதை டப்பாவில் அடைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ‘இளம் கன்று பயமறியாது’ என்று ஒரு பழமொழி உண்டு.

இந்த பழமொழிக்கு ஏற்றார்போல் 9 வயது சிறுவன் செய்த ஒரு சம்பவம் பெரியவர்கள் உட்பட அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குணிகல் நகரைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் மகந்தேஸ்.

இவரது மகன் சம்ரட். 9 வயதாகும் சிறுவனுக்கு அவரது தந்தை மகந்தேஸ் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பது பற்றி அவ்வப்போது கற்றுக்கொடுத்து வந்துள்ளார். மேலும் சில நேரங்களில் பயிற்சியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சம்ரட் தெருவில் உள்ள வீட்டு ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. இது குறித்து சிறுவனுக்குத் தகவல் வந்துள்ளது. அப்போது அவரது தந்தை வீட்டில் இல்லாததால் சிறுவன் பயம் இன்றி பாம்மை பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்குச் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் புகுந்தது சாரைப் பாம்பு என்று தெரிந்தது. பிறகு இது பற்றி தந்தையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது தந்தையும் அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து சாரைப்பாம்பு என்பதால் பயமின்றி மகனைப் பிடிக்கும் படி கூறியுள்ளார். பிறகு சிறுவனும் உற்சாகத்துடன் எவ்விதமான பயமும் இன்றி சாரை பாம்பைப் பிடித்துத் தகரப் பெட்டியில் அடைத்துள்ளார்.

சிறுவனின் அச்சமில்லாத இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இளைஞனை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூரர்கள் : காதலால் வந்த வினை!!

சிவகங்கையில்..

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் தலையை வெட்டி எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு.

27 வயதான இவர் நேற்று மாலை முதல் மாயமாகியுள்ளார். அக்கம், பக்கத்தில் அவரை தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை அருகில் உள்ள கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது தலையை வெட்டி எடுத்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட ராமு மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூரில் சிறு சிறு சண்டைகள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். இவ்வளவு கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு பகை ஏதும் இருந்ததாக தெரியவில்லை.

ராமநாதபுர சரக டிஐஜி மயில்வாகனன். சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். ராமுவின் டூவீலர் , அலைபேசி உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின் ராமுவின் தலையை அருகில் உள்ள கண்மாயில் பாழடைந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். கொலை செய்யப்பட்ட ராமுவின் அத்தை மகளை அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் காதலித்து வந்துள்ளார்.

இதனை ராமு தட்டி கேட்டதுடன் கண்டித்துள்ளார். நேற்று இரவு பிரபாகரன், அவரது நண்பர் பாலமுருகன் ஆகியோர் ராமுவிடம் சமாதானம் பேசலாம் என அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். மானாமதுரை போலீசார் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

மீண்டும் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 654,007 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றையதினம் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது.

அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது. இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இலங்கையில் தங்க நிலவரத்தின் படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியிருந்தது. அத்தோடு, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி இரண்டு இலட்சம் ரூபா வரை சென்றிருந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்து வருகின்றது. தற்போது 24 கரட் தங்கப் பவுண் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்த விலையில் காணப்படுகின்றது.

தாய் கண் முன்னே சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் மோதியதில் கிருத்திகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த கிருத்திகாவிற்கு அங்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் இல்லாததால், உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய, மினி வேன் ஓட்டுநர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இந்த சாலையானது படப்பை வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு செல்லும் மிக முக்கியமான சாலை இந்த சாலையில், முறையான சிக்னல் எச்சரிக்கை பலகைகள் என எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லை எனவும்,

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சாலையோரங்களில், நிறுத்தி விடுவதாலும், இந்த மாதிரியான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், கிருத்திகா உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, வேன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அருகில் ஏதாவது சிசிடிவி காட்சிகள் இருக்கிறதா ? வண்டியை முந்தும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

பணம், ஆடம்பரம் வேண்டாம்… அனைத்தையும் துறந்த 22 வயதான பணக்காரப் பெண்ணின் கதை!!

இந்தியாவில்..

புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வரும் 4ம் திகதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர் மகாராஜ் முன்னிலையில், சலோனி துறவறத்திற்கான தீட்சை பெற உள்ளார்.

இந்நிலையில் சலோனி துறவறம் செல்வதை கொண்டாடும் வகையில், மேள தாளங்கள் முழங்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில், ஜெயின் சமூகத்தினர் அவரை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சலோனி கூறுகையில், டான்ஸ் கோரியோகிராபர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. சமீபத்தில், நான் 50 நாட்கள் நடந்த சாது ஜீவன் முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, சாமியார் எப்படி வாழ்வார்களோ அந்த வாழ்வை மேற்கொண்டேன்.

அதிலிருந்து, ஆத்ம நிலையை அடைய முடிவு செய்து, எந்தவித ஆசைகளுக்கும் இடமின்றி, துறவறம் மேற்கொண்டு, இறைவனின் ஆசியை பெற தீர்மானித்தேன் என கூறியுள்ளார்.

காதல் கணவனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கோவையில்..

கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் கா.தலித்து தி.ருமணம் செ.ய்து கொ.ண்டனர். இ.வர்களுக்கு ஒரு கு.ழந்தை உ.ள்ளது.

ர.ங்கனுக்கு கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் இ.ருந்தது. இ.தனால் க.ணவன் – ம.னைவிக்கு இ.டையே அ.டிக்கடி த.கராறு ஏ.ற்பட்டு வ.ந்தது. மே.லும், ர.ங்கன் கு.டித்து வி.ட்டு தனது ம.னைவி ம.ற்றும் கு.ழந்தைகளை அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க கூ.றப்படுகிறது. இ.ந்நிலையில் ச.ம்பவத்தன்று ரங்கன் கு.டி.த்.து.வி.ட்.டு கோகுல ஈஸ்வரியுடன் த.கராறில் ஈ.டுபட்டார்.

இ.தில் ஆ.த்திரம் அ.டைந்த கோகுல ஈஸ்வரி, ரங்கனின் த.லை.யி.ல் கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை தூ.க்.கி.ப்.போ.ட்.டு கொ.லை செ.ய்.தா.ர். இ.து கு.றித்து போத்தனூர் போ.லீசார் வ.ழக்கு ப.திவு செ.ய்து அ.வரை கை.து செ.ய்தனர்.

 

இ.ந்நிலையில் கா.தல் க.ணவரின் த.லையில் க.ல்லை போ.ட்டு கொ.லை செ.ய்தது ஏன்? எ.ன்பது கு.றித்து கோகுல ஈஸ்வரி ப.ரபரப்பு வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.

அதில் அவர் கூ.றியுள்ளதாவது, நானும் ர.ங்கனும் கா.தலித்து தி.ருமணம் செ.ய்து கொ.ண்டோம். நா.ன் த.னியார் நி.றுவனத்தில் ப.ணிபுரிந்து வ.ருகிறேன்.

 

இந்நிலையில் ரங்கன் தினமும் கு.டி.த்.து விட்டு வந்து எ.ன்னை எனது கு.ழந்தையையும் அ.டி.த்.து உ.தை.த்.து கொ.டு.மை.ப் ப.டு.த்.தி.னா.ர். இ.தனால் எ.ங்கள் இ.ருவருக்கும் இ.டையே அ.டிக்கடி த.கராறு ஏ.ற்பட்டது.

எ.ன்றாவது ஒ.ருநாள் அ.வர் தி.ருந்தி வி.டுவார் என்று எ.திர்பார்த்தேன். ஆ.னால் அவரின் கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் தா.ன் அ.திகரித்தது. வீட்டு செலவிற்கு பணம் எதுவும் கொ.டுக்க மாட்டார்.

 

மேலும் எ.ன்னிடம் கு.டி.க்.க ப.ண.ம் கே.ட்டு த.கராறு செய்தார். இ.தனால் நா.ன் மிகுந்த ம.ன உ.ளைச்சலில் இருந்து வ.ந்தேன். எ.னது க.ணவருடன் வாழ பி.டிக்காமல் கடந்த சில மா.தங்களுக்கு முன்பு வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள மு.ய.ன்றேன்.

ஆனால் உ.றவினர்கள் எ.ன்னை ம.ருத்துவமனையில் சேர்த்து கா.ப்.பாற்றி வி.ட்டனர். நான் க.டந்த சில ஆ.ண்டுகளாக எ.னது க.ணவரால் க.டு.ம் சி.த்.தி.ர.வ.தை.க்.கு ஆ.ளாகினேன். இ.து கு.றித்து கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அ.ளித்தாலும் ஒரு சில நாட்கள் ம.ட்டும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.யா.ம.ல் இ.ருப்பார். பி.ன்னர் மீ.ண்டும் ஆ.ரம்பித்துவிடுவார்.

ச.ம்பவத்தன்று வ.ழக்கம் போ.ல் கு.டி.த்.துவிட்டு எ.ன்னிடம் த.கராறு செ.ய்தார். மே.லும் கு.டி.போ.தை.யி.ல் எ.ன்னையும், கு.ழந்தையும் தா.க்.கி.னா.ர். பி.ன்னர் ந.ன்கு தூ.ங்கிவிட்டார். இ.தை அ.டுத்து அவர் மீது க.டும் கோ.பத்தில் இருந்த நான். இ.ரவில் வீ.ட்டில் இருந்த கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை எ.டுத்து அ.வரது த.லை.யி.ல் தூ.க்.கி போ.ட்.டே.ன்.

இ.தில் அ.வர் ப.லத்த கா.யமடைந்து ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மி.தந்த அ.வர், ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ல்லும் வ.ழியில் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இ.வ்வாறு போ.லீசாரிடம் அ.ளித்த வா.க்குமூலத்தில் கோகுல ஈஸ்வரி தெ.ரிவித்துள்ளார். பி.ன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

ஆனால் உறவினர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். நான் கடந்த சில ஆண்டுகளாக எனது கணவரால் கடும் சித்திரவதைக்கு ஆளாகினேன்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் சித்திரவதை செய்யாமல் இருப்பார். பின்னர் மீண்டும் தனது சித்திரவதை ஆரம்பித்துவிடுவார். சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு என்னிடம் தகராறு செய்தார்.

மேலும் குடிபோதையில் என்னையும், குழந்தையும் தாக்கினார். பின்னர் நன்கு தூங்கிவிட்டார். இதை அடுத்து அவர் மீது கடும் கோபத்தில் இருந்த நான். இரவில் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து அவரது தலையில் தூக்கி போட்டேன்.

இ.தில் அ.வர் ப.லத்த கா.யமடைந்து ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மி.தந்த அ.வர், ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ல்லும் வ.ழியில் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இ.வ்வாறு போ.லீசாரிடம் அ.ளித்த வா.க்குமூலத்தில் கோகுல ஈஸ்வரி தெ.ரிவித்துள்ளார். பி.ன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

மனைவியுடன் நடனமாடும் போது நடந்த சோகம்.. திருமண நிகழ்ச்சியில் காத்திருந்த எமன்!!

இந்தியாவில்..

அவ்வப்போது நாம் சமூக வலைத்தளத்தில் வலம் வரும்போது நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய அதிர்ச்சிகரமான செய்திகளை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் பதற்றத்தில் ஆற்றியுள்ளது.

பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடம் எந்த காரியம் நடக்கும் என்பதை நிச்சயமாக யோகிக்கவே முடியாது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அதே வேளையில், மோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது நல்ல ஒரு விஷயம் எதிர்பாராத வகையில் நம்மைத் தேடி வரும். இப்படி ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பார்ப்பில்லாமல் எந்த விஷயம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமான ஒரு செய்தி தொடர்பான வீடியோ தான் தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியை சேர்ந்த மனோஜ் விஸ்வகர்மா என்ற 40 வயது நபர் ஒருவர், பிப்லானி கத்ரா என்னும் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் கலந்து கொள்வதுடன் மட்டுமில்லாமல் திருமண நிகழ்வில் வந்த சிலருடன் சேர்ந்து மனோஜ் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது.

மிக உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த மனோஜ் விஸ்வகர்மா திடீரென மயங்கி நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடனமாடிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீப காலமாகவே, திருமண விழாக்களில் அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போது பலரின் உயிர் பிரிவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி வருவது தொடர்ந்து மக்கள் பலரையும் பீதியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

9 பெண்களை திருமணம் செய்த பிரபலம் : 10 ஆவது திருமணத்திற்கு காத்திருக்கும் வினோதம்!!

பிரேசில்..

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ளதோடு கூடிய விரைவில் இன்னும் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்தர் ஓ உர்சோ என்ற அந்த பிரபலம் பலதாரமண (Polygamous Relationship) உறவில் இருந்து வருகிறார். முதல் மனைவி லுவானா கசாகி என்பவருக்கு பிறகு, தொடர்ந்து 8 இணையர்களை அவர் மணமுடித்துள்ளார்.

சுதந்திரமான காதலை கொண்டாடுவதற்குதான் இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்ததாக உர்சோ தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அதில் விரிசல் விழுந்துள்ளது.

விரைவில், அவரின் மனைவிகளுள் ஒருவரான அகதா என்பவரை விவாகரத்து செய்ய உள்ளதாக ஆர்தர் முடிவெடுத்துள்ளார். அகதா தன்னை ஒருதார மண உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அகதா உடன் மட்டும் மண உறவில் இருக்க கூறியதாகவும் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே இரண்டு ஆண்டுகளாக மண உறவில் இருந்த அகதாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். விவாகரத்து குறித்து ஆர்தர் கூறுகையில் ,”அகதா என்னை முழுவதுமாக சொந்தம் கொண்டாட விரும்பினாள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் பகிர்ந்துதான் வாழ வேண்டும் என கூறுகிறேன்.

நான் அகதாவை பிரிவதைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் அகதா கூறிய சாக்குப்போக்கால் ஆச்சரியப்பட்டேன். அகதாவின் தேவைகள் அவரது மற்ற மனைவிகளுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தியது. எனது மற்ற மனைவிகள் அகதாவின் அணுகுமுறை தவறானது என்று நினைக்கிறார்கள்.

மேலும் அவர் ஒருவித சாகசதிற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்றும் உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்றும் மற்ற மனைவிகள் நினைக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அனைவருடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்தர் தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார்.

“எனக்கு ஒரு கற்பனை உண்டு; எப்பவுமே பத்து திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தைதான் உள்ளது. இருந்தாலும் எல்லா மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அனைவரின் மீது ஒரே அளவான அன்புதான் வைத்துள்ளேன். அதனால், ஓரீருவருடன் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அநீதியானதாக தோன்றுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஜோடி : கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரினச் சேர்க்கை, ஒருபால் திருமணம் போன்ற விடயங்கள் இன்று அளவிலும் தீண்டத்தகாத விடயங்களாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில் கேரளாவை சேர்ந்த இரண்டு தோழிகள் உயர் நீதிமன்றின் உதவியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

அதிலா நாசாரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரண்டு தோழிகளும் போட்டோ ஷுட் உள்ளிட்ட நவீன திருமண படிமுறைகளையும் கலாச்சார அடிப்படையில் மாலை மாற்றியும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

எனினும் இந்தியாவில் ஒரு பால் திருமணம் தடை செய்யப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஏனைய திருமணங்களைப் போன்று மாலை மாற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

குடும்ப உறவினர்கள் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் குடும்ப பெயரை பயன்படுத்துவதை விரும்பவில்லை எனவும் நாசாரின் தெரிவித்துள்ளார். எனினும் பணியிடம் மற்றும் வேறு இடங்களில் தன்னுடைய தந்தையின் பெயரை பயன்படுத்தி வருவதாக நாசாரின் தெரிவிக்கின்றார்.

அண்மையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது தந்தையின் பெயரை கூற நேரிட்டதாகவும் அது கவலை அழிப்பதாகவும் நாசாரின் தெரிவித்தார். இருவருக்கும் இடையிலான உறவு குறித்து அறிந்து கொண்ட பெற்றோர் உடனடியாக இந்த தொடர்பினை துண்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பெற்றோரின் அழுத்தம் காரணமாக கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள மாற்று பாலின உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஓர் நிறுவனத்தில் இந்த இருவரும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதாக கூறி இந்த இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் இருவரையும் சந்திக்க விடாமல் பிரித்து விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பாத்திமாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதாக கூறிய போதிலும் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு அவரை தடுத்து வைத்துள்ளனர்.

இந்த காதல் ஜோடியை பிரித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இருவரும் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த கேரள உயர் நீதிமன்றம் இருவரையும் சேர்த்து வைத்து தீர்ப்பளித்துள்ளது.