தொழிலில் நஷ்டம்… மனமுடைந்த இளம் பெண் எடுத்த எடுத்த விபரீத முடிவு!!

திருச்சியில்..

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஃபேஷன் டிசைனராக இருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி 36 வயதுடைய பத்மப்ரியா.

இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஃபேஷன் டிசைனரான இவர் திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரிசுகள்,அலங்காரங்கள், பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களில் அத்தியாவசியங்களைப் கிராப் செய்யுங்கள்

இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே மனவேதனையில் இருந்து வந்த பத்மப்ரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பத்மபிரியா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழும் மனைவி!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூர் தாலுகா கொடடா என்ற இடத்தில் தேனிலவு முடிந்து வீடு திரும்பிய புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாவணகெரே மாவட்டம் ஜிக்லியை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் பிரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 28ம் தேதி திருமணம் நடந்தது. தேனிலவுக்கு பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை, ஷிராசி மாரிகாம்பா தேவி கோவிலில் தரிசித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது பைக் டிராக்டர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சஞ்சய் உயிர் இழந்தார். கணவரின் மரணம் குறித்து அறிந்த பிரீத்தி கதறி அழுதார். இந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கணவர் மரணம்… கணவனை மறக்க முடியாமல் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வேலூரில்..

காதலிச்சு, பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்ட பின், சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோடி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கணவர் இறந்த நிலையில், காதல் கணவர் இறந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (30). ஷர்மிளா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் கடந்த மாதம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது காதல் கணவர் திடீரென தற்கொலைச் செய்து கொண்டதால் ஷர்மிளா மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

மகள் பித்து பிடித்தாற்போன்று இருப்பதால், மகளைத் தனியே விடாமல், அலமேலுமங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு குழந்தையுடன் அழைத்து சென்றுள்ளார் ஷர்மிளாவின் தாய்.

கணவரின் மரணத்தால், துக்கம் தாங்காமல் அடிக்கடி ஷர்மிளா மிகவும் மனஉளைச்சலுக்குள்ளாகி தனிமையில் அழுததாகவும், அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி தேற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஷர்மிளாவின் தந்தை சௌந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் கணவர் இறந்த ஒரு மாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நூறு வருடம் சேர்ந்து வாழ ஆசை… ஆனால் : கடிதம் எழுதி வைத்துவிட்டு காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூரில்..

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி தங்களை வாழ விடாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் மாரி (வயது20) , சீதா (16) காதல் தம்பதியினர் இவர்கள் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதால் இவர்கள் காதல் விவகாரம் இவர்களது வீட்டிற்கு தெரிய வந்தது. இதனால் இருவரது உறவினர்களும் இவர்களை பிரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி மதுரையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருப்பூர் வந்து கடுக்கார் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர் .

மேலும் வாழ்வாதாரத்திற்காக அருகில் உள்ள கட்டட வேலைக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் காணவில்லை என சீதாவின் பெற்றோர் மதுரை திருமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் சீதாவின் தொலைபேசியின் மூலம் அவரது உறவினர் அழைத்து மதுரை வர வற்புறுத்தி உள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மீண்டும் தங்களது உறவினர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் நேற்று இரவு இருவரும் விஷம் அருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று காலை வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடப்பது தெரிய வந்தது .

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் இதில் தாங்கள் இருவரும் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்த நிலையில் எங்களின் இந்த முடிவுக்கு சில பேர் காரணம் எனவும்,

100 வருடம் வாழ விருப்பப்பட்டதாகவும் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுத்திருப்பதாக கடிதம் எழுதி வைத்திருந்தனர் இதனையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கனமழை காரணமாக 5 வீடுகள் பாதிப்பு!!

கனமழை..

வவுனியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் இன்று (19.12) அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் 5 வீடுகள் அதிகமாக பாதிப்படைந்துள்ளதுடன்,

மேலும் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீடுகளில் வசித்துவரும் மக்கள், நோயாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் நிலமை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கவனம் செலுத்தியுள்ளது.

நடுவீதியில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்த மாணவர்கள் தாமஸ், ஜோஷ்வா இருவரும் தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அதிவேகம் காரணமாக நிலைத்தடுமாறி, சரேலென நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

இந்த விபத்தில், பின்னால் வந்த லோடு வேன் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கயல் தாமஸ் (18). இவர் தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சமுக பணி படித்து வந்தார்.

அதே கல்லூரியில் அனகாபுத்துரை சேர்ந்த கிளமன் ஜோஷ்வா (17) என்பவரும் இளங்கலை முதலாம் ஆண்டு சமுக பணி படித்து வந்தார். இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள்.

இந்நிலையில் தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் மெப்ஸ் சிக்னலிலிருந்து புறப்பட்டு வேகமாக சென்றுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி இருவரும் சாலையில் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது பின்னால் வந்த ஈச்சர் வேன் கீழே விழுந்த இருவர் மீதும் ஏறி இறங்கியதில் தலை மற்றும், தோள்பட்டை நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் நேற்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே தங்களது நண்பர்கள் சாலை விபத்தில் இறந்த தகவல் அறிந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மொத்தமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக ஒருமுறை முகத்தை காட்டுங்கள் : பிரித்தானியாவில் இறந்த இந்திய பெண்.. பணமில்லை என தந்தை கண்ணீர்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான போதிய பணமில்லை தங்களிடம் இல்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் கடந்த வியாழன் அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

பொலிசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு ஆடை முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட அஞ்சுவின் கணவரான சாஜுவை (52) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அஞ்சு உடலுக்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையில் அஞ்சு மற்றும் அவரின் குழந்தைகளின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் நிதி சிக்கல் இருப்பதாக குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.

அஞ்சுவின் தந்தை அசோக் கூறுகையில், சடலங்களை ஊருக்கு கொண்டு வர ரூ 30 லட்சம் வரை செலவாகும். இவ்வளவு பணத்தை என்னால் தயார் செய்ய முடியாது, கடைசியாக ஒருமுறை மகளின் முகத்தை பார்க்க வேண்டும்.

கடந்த 2018 வெள்ளத்தில் அனைத்தையும் இழந்துவிட்டேன், சிறிய நிலமும் வீடும் மட்டுமே இருக்கிறது. எனக்கு மக்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். உதவக்கூடிய எவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.

வவுனியாவில் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்களுக்கு கௌரவிப்பு!!

தூய தமிழில் பெயர்..

‘தனயன் வழியில் வழியில் தமிழ்மொழி காப்போம்’ என்னும் தொனிப் பொருளில் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்களுக்கு பணப் பரிசில் வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இந்நிகழ்வு இன்று (19.10) இடம்பெற்றிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணியால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் முதல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மாவட்டமாக வவுனியாவில் தூய தமிழில் பெயர் வைத்த 22 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பணம் பரிசாக வைப்பு செய்யப்பட்டு வங்கிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீபிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் இளைஞரணிச் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசன் வடமாகாண ஓட்டப் போட்டியில் முதலாவது இடத்தினை பெற்று சாதனை!!

சசிகுமார் டனுசன்..

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாவது இடத்தினையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தினையும் மாணவன் சசிகுமார் டனுசன் பெற்றுள்ளார்.

வட மாகாண விளையாட்டு விழா 2022 யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று (18.12.2022) காலை இடம்பெற்ற நிலையில் 1500மீற்றர் ஓட்டப்போட்டியில் 4 நிமிடங்கள் 37.00 செக்கன்களில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் முதலாவது இடத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் வடமாகாண விளையாட்டு விழாவில் நேற்று (17.12) இடம்பெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் 2 நிமிடங்கள் 09.9 செக்கன்களில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்றிருந்தமையுடன் பல தடவைகள் அகில இலங்கை ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் இவ் மாணவன் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு!!

மாமடு..

வவுனியா மாமடு பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (18.12.2022) மீட்கப்பட்டுள்ளது. மாமடு மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியினை,

துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாமடு பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை மாமடு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் காதலித்த பெண்ணின் அந்தரங்க படங்களை காட்டி மிரட்டி பணம் பெற்ற இளைஞன்!!

வவுனியாவில்..

வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் இளம் யுவதியை மணம் முடிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை காட்டியதுடன், இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்றதாகவும்,

தொடர்ந்து குறித்த காணொளிகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை நிலையங்களில் 2933 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்!!

புலமைப்பரிசில் பரீட்சை..

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18.12.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை மத்திய நிலையங்களில் 2933 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 14 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.

முல்லைத்தீவில் வறுமையினால் வேலைக்குச் சென்ற 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் தேவன் கபிலன் (வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குடும்ப வறுமை காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். தொழில் கருவிக்கு கடந்த 14.12.2022 காலை மின் இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து சிறுவனின் உடலம் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா ஊடான வடக்கிற்கான புகையிரத சேவை விரைவில் நிறுத்தப்படுகின்றது!!

புகையிரத சேவை..

வடக்கு தொடருந்துப் பாதையில், மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் (2023) ஜனவரி 5ஆம் திகதி முதல் வடக்கு தொடருந்துச் சேவையை அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தவும் தொடருந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மஹவ மற்றும் வவுனியாவிற்கு இடையிலான தொடருந்து பாதையை இரண்டு கட்டங்களாக புனரமைப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலும் இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளதாகவும் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர தெரிவித்துள்ளார்.

மஹவ சந்திக்கும் வவுனியாவிற்கும் இடையிலான வடக்கு தொடருந்து பாதையின் குறித்த பகுதி சுமார் நூறு வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை.

இதனால், தொடருந்துகள் அடிக்கடி தண்டவாளத்தை விட்டு தடம் புரள்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தொடருந்துகளை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், பயணிகளுக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அநுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இப் பாதை புனரமைப்பு பணிகளுக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி மீது சந்தேகத்தால் நடந்த விபரீதம் : பயந்து போன கணவர் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

மனைவியை வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிய எபினேசர், போலீஸுக்குப் பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங். மின் வாரிய ஊழியரான இவரின் மூத்த மகள் ஜெபபிரின்ஸா (32).

இவர் 14 வருடங்களுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் எபினேசர் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

ஆனால், எபினேசர் குடித்துவிட்டு ஊர்சுற்றியதால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சொகுசாக வாழ்ந்த தன்னுடைய மகள் காதலனை நம்பிச்சென்று இப்படி ஆகிவிட்டாரே என மனம் நொந்த தந்தை ஜெபசிங் மகளுக்கு உதவிச்செய்ய தொடங்கியுள்ளார்.

தன் மகள் ஜெபபிரின்ஸாவை பியூட்டிசியன் படிக்க வைத்தார் ஜெபசிங். பியூட்டிசியன் படித்துவந்ததுடன் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பணியாற்றியும் வந்துள்ளார் ஜெபபிரின்ஸா.ப

யூட்டி பார்லருக்கு வேலைக்குச் செல்லும் ஜெபபிரின்ஸா பணி நிமித்தமாக மேக்கப் தரித்து, நாகரிக ஆடைகளை அணிந்து சென்றுள்ளார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சில சமயங்களில் பணி முடிந்து இரவு தாமதமாக வீட்டிற்கு வரும் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த எபினேசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி ஜெபபிரின்ஸாவை அடித்துள்ளார். இதனால் கோபித்து கொண்ட அவர் தன் இரு குழந்தைகளுடன் மூலச்சல் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை இரவு குடிபோதையில் ஜெபபிரின்ஸா வீட்டிற்குச் சென்ற எபினேசர், அவரிடம் சமாதானம் பேசி இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் புது வீடு கட்டுவதற்கு தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கி தந்தால் போதும் என பாசமாகப் பேசியுள்ளார்.

பின்னர் ஜெபபிரின்ஸாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக்கூறி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். முலச்சல் ஆற்றங்கரையில் இருட்டான பகுதியில் சென்றபோது பைக்கை நிறுத்திய எபினேசர் மனைவி ஜெபபிரின்ஸாவை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெபபிரின்ஸாவை சரமாரியாக வெட்டியுள்ளார் எபினேசர். இதில் நிலைகுலைந்து சாலையில் விழுந்த ஜெபபிரின்ஸா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

ஜெபபிரின்ஸாவின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் அங்கு கூடியதும் எபினேசர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார். தகவலின்பேரில் அங்கு சென்ற தக்கலை போலீஸார் ஜெபபிரின்ஸாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தப்பி ஓடிய எபினேசரை தேடினர். போலீஸுக்கு பயந்து எபினேசர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறக்கும் விமானத்தில் வயிறு வலி.. கழிவறை சென்ற பெண் குழந்தையோடு வந்த அதிசயம்!!

தென்னமெரிக்காவில்..

தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு KLM நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் பல்வேறு பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர்.

அப்போது அதில் பயணம் செய்த தமரா என்ற பெண் பயணி ஒருவர் வயிறு வலிக்கிறது என்று கூறி கழிவறை சென்றுள்ளார். அந்த சமயத்தில் விமானம் நெதர்லாந்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது கழிவறைக்கு சென்று பெண், அங்கேயே வயிறு வலியுடன் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்ததை கண்டு அந்த பெண் கடும் அதிர்ச்சியானார். ஏனெனில் தான் கர்ப்பமாக இருப்பதே அந்த பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இப்படி இருக்கையில் தனக்கு எப்படி குழந்தை பிறந்திருக்கும் என்று கடும் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்.

இதையடுத்து பயணி ஒருவர் கழிவறையில் குழந்தை பெற்றுள்ளது தெரிந்த விமான ஊழியர்கள் ஆச்சர்யமடைந்ததோடு, அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தனர். அதோடு அந்த விமானத்தில் ஆஸ்திரிாயவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவருக்கு முதல் உதவிகளை செய்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து நெதர்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு தாய் மற்றும் குழந்தையை விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தாயும், சேயுக்கும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பறக்கும் விமானத்தில் எதிர்ப்பாராத நேரத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால், அதற்கு maximiliano (மேக்சிமிலியானோ) எனப் பெயர் வைத்துள்ளார் அந்த பெண். தற்போது புதிதாக விமானத்தில் பிறந்த மேக்சிமிலியானோவிற்கு குடியுரிமை தெடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத இந்த பெண்ணுக்கு ஹார்மோன் குறைபாட்டால் வரும் Cryptic Pregnancy இருப்பதால், அவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்திருக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதே போல், வெளிநாட்டில் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டிலுள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.