மகளுக்கு எமனாக மாறிய தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சிவகங்கையில்..

அரசினம்பட்டியில் உடல்நலம் பாதித்த 5 வயது மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலையை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வாழ்ந்து வருபவர் ஜெயராஜ். இவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 5 வயது மகளும் இருந்தனர்.

ஜெயராஜின் குழந்தை ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறந்ததின் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் உடல் நலம் பார்த்து பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சங்கீதா திடீரென இரவில் தனது மக்களை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு சேலையால் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பின்னர் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த ஜெயராஜ் தனது மனைவியும் மகளும் இறந்து கிடந்ததை கண்டு சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தாயும் மகளும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். இந்த இரட்டை மரணத்தால் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மகளின் துயரத்தை பார்க்க முடியாமல் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறேதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பளையில் கோர விபத்து : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு : பலர் படுகாயம்!!

கோர விபத்து..

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இன்று(21.12.2022) மாலை 6.15 அளவில் கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.

பிரபல நகைச்சுவை நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

ஆயிஷா..

மலையாள திரையுலகின் இளம் காமெடி நடிகரான உல்லாஸ் பந்தலம் மனைவி ஆயிஷா தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் இளம் காமெடி நடிகர்களில் ஒருவனான உல்லாஸ் பந்தலம்.

இவரது மனைவி ஆயிஷா(38) என்பவரைக் காணவில்லை என்று உல்லாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில் முதல் கட்டமாக தூக்கில் தொங்கியபடி சடலமாக ஆயிஷா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவரை தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா? அல்லது தானாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறித்த நடிகரிடம் விசாரணை மேற்கொண்ட போது இவர் வீட்டில் இருக்கும் போது தான், ஆயிஷா வீட்டின் முதல் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்வதற்கு முன்பு ஆயிஷா முதல்தளத்தில் தூங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மனைவியை மாடியில் கூட தேடி பார்க்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்த குறித்த நடிகர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம் மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆயிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிசோதனை ரிப்போர்ட் வந்த பின்பே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

கைபேசியால் பரிதாபமாக பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்!!

சென்னையில்..

தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி, செல்போனை கல்லூரிக்கு கொண்டு செல்லக் கூடாது என கண்டித்ததால், மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகள் ஸ்ரீமதி (18). ஸ்ரீமதி, குரோம்பேட்டையில் உள்ள னியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், முரளிதரன், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு மனைவி மற்றும் மகனுடன் சென்று நிலையில், கல்லூரியில் தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவி ஸ்ரீமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி, தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். தேர்வறைக்கு செல்போன் கொண்டு வந்திருந்ததால், ஸ்ரீமதியை கல்லூரி நிர்வாகம் கண்டித்துள்ளது.

அதன் பின்னர் ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு ‘இனி மேல் கல்லூரி தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று உங்கள் மகளை கண்டிக்கு ம்படி’ தெரிவித்துள்ளனர்.

இதனால் ஊரில் இருந்தபடியே மகளிடம் பேசிய முரளிதரன், ஸ்ரீமதியிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கூறிய விஷயத்தைத் தெரிவித்து, ‘இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லக் கூடாது. வீட்டிலும் செல்போனை அதிகம் பயன்படுத்தக் கூடாது’ என மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் கண்டித்ததால் ஸ்ரீமதி மிகவும் மனவேதனை அடைந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்ரீமதி செல்போனை எடுக்கவில்லை.

நேற்று காலை மீண்டும் ஸ்ரீமதியை அவரது பெற்றோர் செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்கும் படி கூறினர்.

அதன்படி அவர்கள் முரளிதரன் வீட்டுக்கு சென்று பார்த் தபோது, அங்கு வீட்டின் உள்ளே மாணவி ஸ்ரீமதி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

வவுனியா புளியங்குளம் – நெடுங்கேணி பகுதியில் வீதிக்கு வந்த யானை : பயணிகள் அசௌகரியம்!! 

யானை..

வவுனியா, புளியங்குளம், நெடுங்கேணி பகுதியில் யானைகள் பல கூட்டமாக வீதிக்கு வந்தமையால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது.

நான்கு யானைகள் குட்டிகளுடன் வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர்.

சிலர் தூர விலகி நின்றனர். யானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்திருந்தனர்.

அண்மைக்காலமாக நெடுங்கேணி பகுதியில் அவ்வப்போது மாலை வேளைகளில் வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளங்கன்று பயமறியாது எனக் காட்டும் சகோதர, சகோதரி : விஷப்பாம்புகளை பிடித்து மகிழும் குடும்பம்!!

கேரளாவில்..

கேரளாவில் பாம்பு பிடிப்பதை பொழுது போக்காக கொண்ட நபரின் மகளும், மகனும் பயமின்றி அவருடன் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயத்தை சேர்ந்தவர் சுபாஷ்.

மர வேலை செய்யும் இவருக்கு சிறுவயதில் இருந்தே விஷப்பாம்புகளை பிடிப்பது தான் பொழுதுபோக்கு. அதே நேரம் பாம்புகளை சுபாஷ் கொல்ல மாட்டார், மற்றவர்கள் கொல்லவும் விடமாட்டார், பாம்புகளை பிடித்து காட்டு பகுதியில் விட்டு விடுவார்.

கடந்த 35 ஆண்டில் இதுவரை 1000க்கும் அதிகமான பாம்புகளை அவர் பிடித்துள்ளார். சுபாஷின் மகள் மற்றும் மகனான ஆர்யாவும் அனந்துவும் தங்கள் தந்தையின் பாம்பு பிடிக்கும் உற்சாகத்தை பார்த்து அவர்களுக்கும் அந்த ஆசை வந்தது.

சுபாஷிடம் தங்கள் விருப்பத்தை சொன்ன போது அவரும் உற்சாகமடைந்தார். சுபாஷ் வனத்துறையின் ஏற்பாட்டில் பாம்பு பிடிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மீட்கப்பட்ட பாம்புகளைக் காட்சிப்படுத்தவோ, பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெறவோ அவர் ஆர்வம் காட்டவில்லை.

பாம்பை பிடித்தவுடன் அங்கிருந்து சென்று விடுவது தான் சுபாஷின் வழக்கம். ப்ளஸ் டூ முடித்த அனந்துவும், பிளஸ் ஒன் மாணவி ஆர்யாவும் தற்போது வனத்துறையிடம் பயிற்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

என் மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை.. 2 வருடம் காத்திருந்து மருமகனை பழி தீர்த்த மாமனார்!!

கர்நாடகாவில்..

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பாக்யஸ்ரீ, புஜபாலியை பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெலகாவி மாவட்டத்தில் 2 பேரும் வீடு வாடகை எடுத்து 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் தந்தை மருமகன் என்று கூட பாராமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொடூரமாக ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியை சேர்ந்தவர் தம்மனகவுடா. இவரது மகள் பாக்யஸ்ரீ என்பவர் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த புஜபாலி கர்ஜகியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இருவீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பாக்யஸ்ரீ, புஜபாலியை பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெலகாவி மாவட்டத்தில் 2 பேரும் வீடு வாடகை எடுத்து 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி அங்கு தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த புஜபாலாவை பெண்ணின் தந்தை தம்மனகவுடா வழிமறித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மருமகன் என்றும் பாராமல் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த புஜபாலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் இது ஆணவ கொலை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தையை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

இலங்கையில் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

மின்வெட்டு..

போதிய நிலக்கரி இன்மையால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவையான அளவு நிலக்கரி கிடைக்காவிட்டால் ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று (20.12.2022) தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு குறைந்ததாலும், நீர்மின் நிலையங்கள் தொடர்பான பகுதிகளில் மழையின்மையினாலும், அனல் மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் தேசிய தேவைகளில் கிட்டத்தட்ட பாதியளவு மின்சாரத்தை நுரைச்சோலை அனல் மின்நிலையம் உற்பத்தி செய்வதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்றபோதும் ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவில் விபரீத முடிவெடுத்த 17 வயதுச் சிறுமி!!

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று (20.12.2022) மீட்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

த.மதுசாலினி என்ற 17 வயதுச் என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி இரவு வீட்டாருடன் படுக்கைக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் அதிகாலை அருகிலிருந்த அறையில்,

தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் கேட்ட ஒரு கேள்வியால் விபரீத முடிவெடுத்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை அருகே அதிகமாக செல்போன் பயன்படுத்துவதாகத் தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர் குரோம்பேட்டை பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

பின்னர் மயிலாடுதுறையிலிருந்த அவரின் பெற்றோரும், மகளின் உதவிக்காகச் சென்னைக்கே வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது மாணவி ஸ்ரீமதி செல்போன் எடுத்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த ஆசிரியர் அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு அவரது தாய்க்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அவரது பெற்றோர்கள் மகளைக் கண்டித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஊரிலிருந்த வீட்டினை காலி செய்வதற்காக பெற்றோர்கள் மயிலாடுதுறைக்குச் சென்றுள்ளனர். பிறகு மகள் ஸ்ரீமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் எடுக்கவில்லை.

பிறகு , அழைப்பு வந்ததைப் பார்த்துப் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளார் ஸ்ரீமதி. அப்போது அவரின் தாய், எப்பொழுதும் செல்போனை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றாய். ஆனா நாங்க கால் பண்ணும்போது மட்டும் உன்னால் எடுக்க முடியவில்லையா என திட்டியுள்ளனர். பின்னர் மீண்டும் மகளுக்கு போன் செய்தனர்.

அப்போதும் மகள் எடுக்கவில்லை. பல முறை முயற்சி செய்தும் மகளை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள நபருக்கு போன் செய்து மகளிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.

பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஸ்ரீமதி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய பெண்ணை பாரம்பரிய முறையில் மணந்த இந்திய இளைஞர் : சுவாரஸ்ய காதல் கதை!!

தெலங்கானாவில்..

இந்திய இளைஞருக்கும், கனேடிய பெண்ணிற்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானது இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. தெலங்கானாவின் வாரங்கலை சேர்ந்த சகீத்.

இவர் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அந்நாட்டை சேர்ந்த டிராசி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பானது ஒருகட்டத்தில் காதலாக மாறியது.

இதையடுத்து சகீத் – டிராசி ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இது குறித்து இரு குடும்பத்தாரிடமும் சொல்லி சம்மதமும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து தெலங்கானாவில் சகீத் – டிராசி திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

நண்பிகளுடன் சுற்றுலா சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் முடிந்த சுற்றுலா!!

சென்னையில்..

நண்பர்களுடன் காரில் சென்ற கோவை ஐடி பெண் ஊழியர் ஒருவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (24). இன்ஜினியரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள விடுதியில் தங்கி, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவரும், இவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அபிஷா (26), கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (29), பங்கஜ் (18) உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் சென்னையை சுற்றி பார்க்க இவர்கள் அனைவரும் நேற்று காலையிலேயே காரில் சென்றனர்.

அப்போது இவர்களது கார் துரைப்பாக்கத்தில் இருந்து ரேடியல் சாலை வழியே பல்லாவரம் நோக்கி சென்றது. அந்த காரை ஸ்ரீதர் என்ற இளைஞர் தான் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் பங்கஜும், பின் இருக்கையில் கிருத்திகா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர்.

அந்த சமயத்தில் பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே சென்றபோது திடீரென இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்த கார் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் பின் கதவு திறந்ததால் அதன் அருகே அமர்ந்திருந்த கிருத்திகா உருண்டு விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மற்ற 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.இந்த கோர சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் அடிபட்டு கிடந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கிருத்திகா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீதி இருந்த மூன்று பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் காரில் சென்ற ஐ.டி பெண் ஊழியர் ஒருவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!! 

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்..

வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சியொன்றை வழங்கி எதிர்கால் சமுகமட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு,

இத்திட்டத்திற்கான ஒப்பந்தமொன்றில் இன்று( 19.12.2022) கைச்சாத்திடப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஜே.யூட் வோல்டன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுக்கொண்டனர்.

மனைவியின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து கணவன் உயிரிழப்பு .. இறப்பிலும் இணைபிரியா தம்பதி!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கூலித் தொழிலாளியான கலியபெருமாள். இவரது மனைவி சின்னம்மாள். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி சின்னம்மாள் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரின் இறுதிச் சடங்குகளை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவர் கலியபெருமாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பிறகு அவரை உறவினர்கள் எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் கடைசி வரை எழுந்திருக்கவில்லை. பின்னர்தான் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரின் சடலத்தையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதனையடுத்து கணவன் , மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : தலையை தேடும் போலீஸ்!!

ஜார்கண்டில்..

இரண்டாவது மனைவியை கொன்று, பல துண்டுகளாக வெட்டி கொலையை மறைக்க முயன்ற நபர் பொலிஸாரால் கையது செய்யப்பட்டார். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், சனிக்கிழமை (டிசம்பர் 17) மாலை 6 மணியளவில், சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீடொன்றில் 22 வயது பழங்குடியின பெண்ணின் உடல் 12 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம் போல இந்த கொலையும் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தில்தார் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, உடலின் சில பாகங்கள் இன்னும் காணவில்லை. மீதமுள்ள உடல் உறுப்புகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை அழைத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ரூபிகா பஹாடின், அவரது கணவர் தில்தார் அன்சாரியால் கொலை செய்யப்பட்டார். ரூபிகா தில்தாரின் இரண்டாவது மனைவி என்றும், இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் குடும்பத்தினர் காணாமல் போன புகாரை பதிவு செய்ய காவல்துறையை அணுகியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, விசாரணையில், ரூபிகாவின் சிதைந்த உடலை போலீசார் மீட்டனர்.

மின்சாரம் கட்டர் போன்ற கூர்மையான பொருளைப் பயன்படுத்தி பெண்ணின் உடலை பல துண்டுகளாக வெட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிலில் நஷ்டம்… மனமுடைந்த இளம் பெண் எடுத்த எடுத்த விபரீத முடிவு!!

திருச்சியில்..

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஃபேஷன் டிசைனராக இருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி 36 வயதுடைய பத்மப்ரியா.

இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஃபேஷன் டிசைனரான இவர் திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரிசுகள்,அலங்காரங்கள், பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களில் அத்தியாவசியங்களைப் கிராப் செய்யுங்கள்

இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே மனவேதனையில் இருந்து வந்த பத்மப்ரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பத்மபிரியா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.