வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை கோரிய போதே அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்ட பகுதிகளில் வசிக்கும் 348 கர்ப்பிணித் தாய்மாரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 213 கர்ப்பிணித் தாய்மாருமாக 561 பேர் பாதிப்படைந்துள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் புத்தெழுச்சி மையங்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் காணிக்கப்பட்டு வருவதானால் பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிப் தாய்மாருக்கு நிலையான பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரின் உதவியால் ஒரு ஏழைக் குடும்பம் ரூ.55 லட்சம் நன்கொடையாகப் பெற்றது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சுபத்ரா (55) என்ற பெண்ணின் கணவர் ஆகஸ்ட் மாதம் இறந்தார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததால், குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுபத்ரா தனது மகனின் வகுப்பு ஆசிரியரிடம் ரூ.500 உதவி கேட்டார்.
இதனால் ஆசிரியர் சுபத்ராவிடம் ரூ.1000 கொடுத்தார். அதுமட்டுமின்றி, சுபத்ராவின் குடும்பத்தின் நிலையை விளக்கி முகநூலில் ஒரு போஸ்ட் போட்டார் ஆசிரியர். வங்கி விவரங்களை குறிப்பிட்டு உதவுமாறு கூறப்பட்டது.
இந்த பதிவு வைரலானதால், சுபத்ராவின் குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தப் பணத்தில் தனது குடும்பப் பிரச்னைகள் தீரும் என்று சுபத்ரா கூறினார்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மணி. மேலும் சூரியபாபு – மணி தம்பதியினருக்கு துர்கா பவானி என்ற மகளும் உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின் தொற்று பரவல் குறைந்ததையடுத்து சூரியபாபு வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றது.
ஆனால் சூரிய பாபுவின் மனைவி மணி மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த காரியத்திற்கும் பங்கேற்காமலும் அதனை தவிர்த்து வந்துள்ளனர்.
அதே போல, சமீப காலமாக மணி மற்றும் துர்கா ஆகியோரின் நடவடிக்கையில் மாற்றம் உருவாகி உள்ளது. மனிதர்கள் யாரைக் கண்டாலும் போர்வைக்குள் இருவரும் சென்று ஒளிந்து விடுவதாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயும் முடங்கி கிடந்ததாகவும், மணி மற்றும் துர்கா ஆகிய இருவருக்கும் உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இது பற்றி காக்கிநாடா அரசு மருத்துவமனை மற்றும் போலீசாருக்கு சூரியபாபு தகவல் தெரிவிக்க, அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். போலீசார், செவிலியர்கள் உள்ளிட்டோர் வந்ததும் தங்களை கொல்ல ஆட்கள் வருவதாக பயத்தில் போர்வைக்குள் மணி மற்றும் துர்கா ஆகியோர் ஒளிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களை மெல்ல மெல்ல பேசி ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து சென்று அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். மணி மற்றும் துர்கா ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்களை பார்ப்பதும் பேசுவதும் இல்லை என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணமாகி வந்த நாள் முதல் மாந்த்ரீகம் குறித்து மணி அதிகம் பேசி வந்ததாகவும், அதனை அவரது மகள் துர்காவிற்கும் சொல்லி வளர்த்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியதுடன் மக்களை பார்ப்பது கூட இல்லாமல், அறையிலேயே முடங்கி கிடக்கும் தாய் மற்றும் மகள் குறித்த விஷயம், அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
மும்பையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஆர்வத்துடன் தந்தை பார்த்துக் கொண்டிருந்த போது தவறுதலாக 3 வயது சிறுவன் 5வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கார்வாரே என்ற கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் வான்கடே ஸ்டேடியத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. இந்நிலையில் இந்த கிளப்பில் கடந்த ஞாயிறு அன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதிப்போட்டியைக் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கிளப்பின் மேல்தளத்தில் இறுதிப்போட்டியைப் பலரும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு போட்டியைப் பார்ப்பதற்காக வினோஷ் ரத்தோட் என்பவர் தனது 3 வயது மகனுடன் வந்துள்ளார்.
அப்போது சிறுவன் ரித்யாஷ் மற்றும் 10 வயது சிறுவன் ஒருவனும் மாடியிலிருந்து கீழே வந்து வாஷ் ரூமுக்கு சென்று விட்டு மீண்டும் மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுவன் தவறி 5வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த, உடன் வந்த சிறுவன் உடனே மேலே சென்று அவனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது மகன் இல்லாததை கண்டு கீழ்த்தளத்திற்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிறுவன் 5 மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்தான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு அங்கு சென்று பார்த்துள்ளார். பல மணி நேரம் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்கட்டுகளின் இடைவெளியில் வலைவு அமைக்காததாலே தனதுமகன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கிளப் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு இளைஞன் பெரிய வேலையையும் கோடிகளில் சம்பளத்தையும் துறந்து துறவறம் செய்யத் தயாராகிறான். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரான் சுக், பொறியியல் முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
ஒன்றரை வருடங்கள் படித்துவிட்டு, தரவு விஞ்ஞானியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அங்கு பிரான் சுக்கின் சம்பளம் ரூ. 1.25 கோடி. ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
எனவே அவர் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். ஜெயின் துறவியாக வேண்டும் என்று தீர்மானித்த பிரான் சுக், ஜனவரி 2021 இல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்தார்.
இம்மாதம் 26ம் தேதி முனி ஜினேந்திரரிடம் ஜைன சன்யாச தீட்சை எடுக்கிறார். அவரது பெற்றோர்களும் தங்கள் மகன் சமண துறவியாகப் போகிறான் என்று மகிழ்ச்சியடைந்தனர்.
112 மூட்டைகளில் ஒரு ரூபா நாணயத்தினைக் கொடுத்து தனது கனவு ஸ்போர்ட்ஸ் பைக்கை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
ஒரு கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தைரியம், நேரம் மற்றும் அரப்பணிப்பு ஆகியன எவ்வளவு அவசியம் என்பதனை படிப்பினையாக கூறும் ஒரு சம்பவமாக இந்த சம்பவம் கருதப்படுகின்றது.
சுமார் 112 மூட்டைகளில் ஒரு ரூபாய் நாணயங்களை சேமித்து அந்த பணத்தை கொடுத்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளார். சுமார் ரெண்டு லட்சத்து 85 ஆயிரம் பணம் இந்த நாணயங்கள் மூடைகளில் காணப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ராமகிருஷ்ணப்பூர் தரகரமா காலணியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு வித்தியாசமான முறையில் பைக்கை கொள்வனவு செய்துள்ளார்.
தெலுங்கானா கல்லூரி ஒன்றில் பாலிடெக்னிக் பயின்று வரும் மாணவர் வெங்கடேஷ் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். பைக் விற்பனை காட்சியறையில் முதலில் இந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய நிலையில், பின்பு இளைஞரின் அர்ப்பணிப்பை மதிக்கும் வகையில் அந்த நாணயங்களை எண்ணி பைக்கை விற்பனை செய்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தம்பதியர் குறித்து தம்பதியினரின் உறவினர்கள் பொது அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
கனடாவில் பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் பேரி ஷெர்மன் (வயது 75) மற்றும் ஹனி (வயது 70) ஆகிய இருவரும் கடந்த 201 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி நாற்காலியில் கட்டி போடப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
இவர்களின் மரணம் குறித்து இதுவரையிலும் எவ்வித விபரமும் தெரியவரவில்லை. இதனையடுத்து பேரி ஷெர்மன் – ஹனி தம்பதியர் மர்மமான முறையில் இறந்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர்களின் 5 ஆண்டு நினைவு நாளில் பேரி ஷெர்மன் – ஹனி தம்பதியரின் மகன் மற்றும் குடும்பத்தினர், பொது அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து தகவல் கொடுத்தால் 35 மில்லயன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் பேரி ஷெர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
வவுனியா கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையுடன் கூடிய வானிலை நிலவி வருவதுடன் காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகின்றது.
மாவட்டத்தில் நேற்று (21.12.2022) மாலை காற்றுடன் கூடிய மழை காரணமாக தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வீதியோரமாக நின்ற மரமொன்று சரிந்து பாடசாலை கட்டிடம் மேல் வீழ்ந்ததில் கட்டிடத்தின் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மரத்தினை அகற்றும் பணியினை பொதுமக்களின் உதவியுடன் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் இன்று (22.12.2022) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றும் வானும் வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியும் பட்டாணிச்சூர் பாடசாலைக்கு அருகே மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளாகிய இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (26.12) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில்,
பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் (25.12) ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்,
அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (26.12.2022) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் திங்கட்கிழமை அரச, வங்கி விடுமுறை தினமாகும்.
90 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர், இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 100 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
சீதாவும் நடிகர் பார்த்திபனும் 1990 -ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதாவை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளார்.
அதில் ” என் முன்னாள் மனைவி சீதாவின் அதிக எதிர்பார்ப்பால் தான் எங்களுக்கு விவாகரத்து ஆனது.மேலும் முதலில் என்னிடம் காதலை சொல்லியது சீதா தான்” என்றார்.
அதற்கு பதில் அளித்த சீதா “கணவரிடம் அதிக எதிர்பார்ப்பு இருப்பதில் என தவறு இருக்கிறது. பார்த்திபன் சொல்லுவது பொய் அவர் தான் எனக்கு போன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல்லச் சொல்வார். எனக்கும் அவரை பிடித்திருந்தால் நானும் காதலை சொல்லி விட்டேன்” என கூறினார்.
திருமண நிகழ்வில் மணப்பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டிய மாப்பிள்ளை தர்மஅடி வாங்கியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கின்றது.
இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து பத்திரமாக வைப்பதை அனைவரும் வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு கனவுகளுடன் மணமேடையில் நின்ற தம்பதிகள், கீழே இறங்கும் முன்பே அடிதடி சண்டையிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமேடையில் நின்ற மணமகளுக்கு மாப்பிள்ளை வலுக்கட்டாயமாக இனிப்பை ஊட்டியுள்ளார். இதனால் வெறுப்படைந்த மணப்பெண் பளார் என அடித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே பெரிய கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் மகன் ஒருவர் தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணகுமார் என்ற நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றில் தாயையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வருகின்றார்.
இந்த தாயும் மகனும், இதுவரையில் 61,527 கிலோமீட்டர்கள் வரையில் தூரம் பயணம் செய்துள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் அவர் இவ்வாறு ஸ்கூட்டரில் இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகின்றார்.
10 பேரைக் கொண்ட தமது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த தாய் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என கிருஷ்ணகுமார் தெரிவிக்கின்றார்.
ஒரு தடவை அருகாமையில் இருக்கின்ற பெரிய கோயில்களை கூட தரிசித்தது கிடையாது என மகனிடம், தாய் சுடாராத்னா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என தாம் மனதில் உறுதி பூண்ட கிருஷ்ணகுமார் ஸ்கூட்டரிலேயே தாயை பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில் திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில் என அனைத்து கோயில்களுக்கும் இவர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வரும் கிருஷ்ணகுமார் தனது தாயார் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர் எனவும் முழு நாளும் வீட்டை சுத்தம் செய்வது சமைப்பது என அவர் சேவைகளை செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தடவை தான் தாயை பெங்களூருக்கு அழைத்து சென்ற போது பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது திருவண்ணாமலை, திருவரங்கம், திருப்பதி போன்ற கோவில்களுக்கு சென்று உள்ளீர்களா? என தாயிடம் தான் கேட்டதாகவும் அதற்கு பதில் அளித்த தாய் அருகாமையில் உள்ள பெரிய கோயில்களுக்கு கூட நான் சென்றதில்லை என வருத்தமாக பதில் அளித்தார் எனவும் கூறுகின்றார்.
அந்த பதில் தமக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அதனை தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்து வந்த கிருஷ்ணகுமார், 2018 ஜனவரி மாதம் 14ஆம் தேதி பணியில் இருந்து விலகிக் கொண்டு தாயை அழைத்துக் கொண்டு பல்வேறு கோயில்களுக்கு சென்று வருகிறார் மாத்ரு சேவா சங்கல்ப யாத்ரா என இந்த யாத்திரைக்கு பெயர் இடப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்த பெற்றோருடன் பிள்ளைகள் நேரத்தை கழிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் சேமித்து வைத்த பணத்தை கொண்டு தற்பொழுது செலவுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவிக்கின்றார். யாரிடமும் பணம் பெற்றுக் கொண்டு இந்த பயணத்தை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையின் அரைவாசி பகுதியை நான்கு சுவற்றுக்குள்ளேயே கழித்து விட்டதாகவும் தற்பொழுது இந்த தேசத்தின் அதிசயங்களை பார்ப்பதற்கும் பார்த்து ரசிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும்,
தனது கனவு நிறைவேறி உள்ளதாகவும் கிருஷ்ணகுமாரின் தாய் தெரிவிக்கின்றார். இவ்வாறான ஒரு மகனை பெற்றெடுத்தமைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சுபஸ்ரீ யோகா உடையில் சாலையில் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளதுகோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர், பழனிக்குமார்.
பனியன் நிறுவனத்தில் தரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஶ்ரீ (34), இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ ஈஷா யோகா மையத்தில், சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் ஒருவார பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி காலை 6 மணிக்கு கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார். பயிற்சி முடிவடைந்த 18ஆம் தேதி அவரை அழைத்துச்செல்ல காலை 7 மணிக்குச் சென்று காத்திருந்தேன், 11 மணியாகியும் அவர் வரவில்லை’ என அவரது கணவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் பழனிக்குமார் மாலை 3 மணிக்கு உள்ளே சென்று பார்த்தபோது வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவரது கணவர் ஆய்வு செய்த போது, சுபஶ்ரீ காலை 9.30 மணிக்கு சர்பவாசல் வழியாக வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறி சென்றது பதிவாகி இருந்துள்ளது.
இந்நிலையில் பழனிக்குமாரின் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மிஸ்டு கால் பார்த்து அவர் அந்த எண்ணிற்கு திரும்ப அழைத்த போது, ”எனது கணவருக்கு பேச வேண்டும் என ஒரு பெண்மணி என்னிடம் போன் வாங்கிப் பேசினார்.
போன் எடுக்காததால் திரும்ப என்னிடமே கொடுத்துவிட்டார்” எனக்கூறியுள்ளார்.ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி மாயம்; கணவர் போலீசில் புகார்ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி மாயம்; கணவர் போலீசில் புகார்மேலும் சுபஸ்ரீ கால் டாக்ஸில் லிஃப்ட் கேட்டு ஏறி சென்று செம்மேடு, முட்டத்துவயல் பகுதியில் இறங்கியதாக கால் டாக்சி டிரைவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாக பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மனைவி எங்கு சென்றார் எனத் தெரியவில்லை, அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. காணமல் போன தனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்து தரவேண்டும் என பழனிக்குமார் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்.
எம்.பி.ஏ., பட்டதாரியான இளம் பெண் தொழிலதிபர் தான்யா பதிஜா (32) அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் லாங் ஐலேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.
இந்திய வம்சாவளியினரான தான்யா, சமீபத்தில் ‘டன்கின் டோனட்’ என்கிற பெயரில் விற்பனை நிலையத்தை அந்த பகுதியில் திறந்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை கோபிந்த் பதிஜா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார்.
தான்யாவின் பெற்றோர்கள் தனியே வசித்து வருகிறார்கள். தான்யா பதிஜாவின் வீடும் அவர்களது வீட்டின் அருகிலேயே சற்று தள்ளி அமைந்திருந்தது. எப்போதும் தனது செல்லப்பிராணியான நாயுடனே தான்யா காணப்படுவார்.
இந்நிலையில் கடந்த வாரம் இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கியுள்ளார். உடன் அவர் வளர்த்த செல்லப்பிராணி நாயும் இருந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் தான்யாவின் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தான்யா பதிஜா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் தீப்பற்றியது குறித்து அவருக்கு தெரியவில்லை. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில், உறங்கிக் கொண்டிருந்த தான்யா பதிஜாவும், அவரது செல்லப்பிராணி நாயும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை தான்யா பதிஜாவின் தந்தை நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த போது தான், தனது மகள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து உள்ளனர்.
ஆனால், தீயில் சிக்கிய தான்யா பதிஜா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்தும், தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.