இளம் பெண் மருத்துவர் படுக்கையறையில் சடலமாக மீட்பு
இளம் பெண் மருத்துவர் ஒருவர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் கிளினிக் உரிமையாளர் டாக்டர். அரவிந்தனின் மகள் டாக்டர் அர்பிதா அரவிந்த் (30) தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
நேற்று இரவு, அகஸ்தியகோட்டில் உள்ள வீட்டின் படுக்கையறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அர்பிதா, அரவிந்த், தேவிகா தம்பதியின் ஒரே மகள் ஆவார். எம்.பி.பி.எஸ் படிப்புக்குப் பிறகு பிஜியும் முடித்தார். இது குறித்து, அஞ்சல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஃபிட்டூர், பார் பார் தேகோ, கஹானி 2, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துனிஷா சர்மா(20).
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான இவர், அலிபாபா தாஸ்தென் – இ – கபுல் என்ற இணைய தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில், துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தனது காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்தவுடன் தனது அறைக்கு சென்றுள்ளார்.
அறையின் கதவு வெகுநேரமாக மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த கதாநாயகன் ஷஷென் முகமது கான், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது துனிஷா சர்மா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷஷென் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு துனிஷா சர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் 4ஆம் திகதி தனது 21வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்துகொடுக்கப்பட்ட இலங்கையில் பிறந்த ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலங்கையில் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் ரோசி இரண்டு முறை இலங்கைக்கு வந்து தனது தாயை கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.
ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் பிறந்துள்ளார். எனினும் இரண்டு தாய்மாரின் பெயர்கள் அப்போதைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் தாயை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.
கொழும்பு பீட்டர் ஹேவகே பிரியந்தி ரோணுகா மற்றும் வந்துரம்ப திலகாவதி ஆகியோரின் பெயர்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது தாயார் தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் 0772114794 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் (விவசாய பண்ணைக்கு அருகே) நேற்றிரவு (24.12.2022) வெட்டுக்காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்று கொண்டிருந்த சமயத்தில் வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்.
அத்துடன் மேலும் ஒருவரும் குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும் அவர்களின் வயது 50, 53 எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த மிதிவண்டியை பழுதுபார்க்கும் சிறிய கடை வைத்திருக்கும் நபரின் மகளை அவுஸ்திரேலிய குடிமகன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாதிக் ஹுசைன்.
இவர் பேருந்து நிறுத்தத்தின் அருகே சிறிய மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். சாதிக்கின் மகள் பெயர் தபாசும் ஹுசைன். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்று கடந்த 2017ல் கல்வி பயின்றார்.
அவர் படித்த கல்லூரியில் ஆஷ் ஆன்சைல்ட் என்ற மாணவரும் படித்தார். அப்போது தபாசும், ஆஷும் நண்பர்களாகி பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இது குறித்து குடும்பத்தாரிமும் கூறி சம்மதம் பெற்றனர்.
தபாசும் திருமணம் செய்து கொள்வே மாட்டார் என அவர் தாயார் ஜுலுகா நினைத்திருந்த நிலையில் ஆஷ் குறித்து அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்து திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இருவருக்கும் கடந்த ஆகஸ்டில் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. பின்னர் ஆஷ் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்திய கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் விருந்தோம்பல் என அனைத்தும் அவரை கவர்ந்தது.
இதையடுத்து பாரம்பரிய முறைப்படி மீண்டும் ஆஷ் – தபாசும் திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்காக ஆஷின் தாயார் ஜெனிபர் பெர்ரி உள்ளிட்ட உறவினர்களும் இந்தியா வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டில், உயர் கல்விக்காக தபாசுக்கு ரூ. 45 லட்சம் மானியத்தை இந்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் மருத்துவ சத்யநாராயணா.
இவர் மனைவி யசோதா (70) தம்பதிக்கு அபர்னா, சுமன் (41) என்ற மகள்களும், நரேஷ் (36) என்ற மகனும் இருந்தனர். சத்யநாராயணா இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அபர்னாவுக்கு திருமணமாகி வேறு பகுதியில் கணவருடன் வசிக்கிறார். மற்ற மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யசோதா, சுமன், நரேஷ் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிசார் கூறுகையில், சுமனுக்கு மாப்பிள்ளை தேடியும் கிடைக்காமல் இருந்து வந்தது, அவருக்கு திருமணம் நடந்தால் நரேஷுக்கும் திருமணம் நடக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் போன் செய்தால் வீட்டில் யாருமே எடுக்கவில்லை என அபர்னா தாயார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டிற்குள் யசோதா, சுமன், நரேஷ் ஆகிய மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலின் பேரில் நாங்கள் அங்கு சென்று சடலங்களை கைப்பற்றினோம், இது தவிர ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம்.
இதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமல்ல என்று எழுதப்பட்டுள்ளது. மூவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னர்தான் கொலையைா? தற்கொலையா என்கிற முடிவுக்கு வர முடியும். இவர்கள் உடல்களின் அருகில் மாத்திரைகள் சில கிடந்துள்ளன.
இந்த மாத்திரைகளை உட்கொண்டு கூட அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். நரேஷ் நண்பர்கள் சிலர் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என அபர்னா புகாரில் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மன அழுத்தத்தள் அதிகரித்து வருகின்றன. இதனை களைய பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்க மற்றும் போதனை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
இருந்த போதிலும் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் 37 வயதான முருகன்.இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 32 வயது புனிதா .
இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் சர்மி என்ற மகளும், 6வயதில் கமலேஷ் என்ற மகனும் உள்ளனர். சர்மி 8ம் வகுப்பும், கமலேஷ் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த சர்மி, தனது தந்தைக்கு போன் செய்து, ‘தம்பி சரியாக படிக்கவில்லை.
அவனை நான் அடித்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். பணிமுடிந்து இரவு முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மகள் சர்மி புடவையால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சர்மியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்மி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சர்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தனது தம்பியை அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதல் கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயார் அடிப்பாரோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே விளவூர்க்கல் பகுதியில் வீட்டில் உள்ள மின் சுவிட்ச்போர்டில் இருந்த மொபைல் சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி எஸ்.எஸ்.ஷிஜின் (23) என்பவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை மதியம், தந்தை ஷாஜியுடன் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில், ஈரமான கைகளுடன் சார்ஜரை எடுக்கும்போது ஷிஜின் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஷாஜி ஓடி வந்து ஷிஜியை கட்டையால் தாக்க, ஷாஜியும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
ஷாஜியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை துண்டித்து தந்தையையும் மகனையும் தொழுவத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். ஷிஜியும், ஷாஜியும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் ஷிஜியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
எலி பேஸ்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், கூலி தொழிலாளியான இவருக்கு திவ்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால் எலி பேஸ்ட் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த திவ்யா சாக்லேட் என்று நினைத்து எலிபேஸ்ட் சாப்பிட்டாள்.
இதனையடுத்து பெற்றோர்கள் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் துஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞனின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் இளைஞர் உயிரிழந்த தொடர்ப்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த தியர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் அண்மை நாட்களாக சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர், யுவதிகள் என தவறான முடிவெடுத்துத் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்த்துவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார்.
பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார். இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத கண்ணீருக்கும் யார் பதிலளிப்பது?
இதே விபத்தில் பத்து வயது மாணவி ஒருவரின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமைய போகிறது.
எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படியான அதிவேக போக்குவரத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகின்றதோ.
வவுனியா மாவட்ட அழகு கலை நிபுனர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மணப்பெண் அலங்கார காட்சி நிகழ்வு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், மணப்பெண் அலங்கார காட்சி, கௌரவிப்பு, விருந்தினர் உரை என பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
நிகழ்வில் மணப்பெண் அலங்கார காட்சி நிகழ்ச்சியில் பல பெண்கள் ஆடை, அழகு சாதனங்கள் மூலம் தம்மை அழகுபடுத்தி நடை காட்சியில் ஈடுப்பட்டிருந்தனர்.
மேலும் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் அழகு நிலையம் வைத்திருக்கும் அழகுக் கலை நிபுனர்கள், வெளி மாவட்டங்களை சேரந்த அழகுக் கலை நிபுனர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் மடிச்சுக் கட்டி நோய் தாக்கம் காரணமாக 782 ஏக்கர் நெற் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் நெல் மற்றும் பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் கு.கஐரூபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று (22.12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெற் செய்கை மாவட்டங்களில் வவுனியா மாவட்டமும் முன்னிலை வகிக்கின்றது. இம்முறை கால போகத்தில் 23 ஆயிரத்து 186 ஹெக்ரெயர் நெற் செய்கை எதிர்பார்க்கப்பட்ட போதும் ஆரம்பத்தில் போதியளவு மழை கிடைக்காமையால் 21 ஆயிரத்து 832 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவான மழை வீழச்சி கிடைத்ததுடன், தற்போது அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. வானிலை மாற்றத்தினால் குறைந்தளவிலான பகற்காலமான, இருளான அதிக ஈரப்பதன் காலநிலை நிலவி வருவதால் நெற் செய்கை பயிர்களுக்கு இலை மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக விசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், பாவற்குளம், பம்பைமடு, மடுகந்தை, மகாகச்சகொடி, நெடுங்கேணி, கனகராயன்குளம், ஓமந்தை உள்ளிட்ட பகுதிகளில் 782 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 25 – 30 வீதமான தாக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பொருத்தமான கிருமி நாசினிகளை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அதிகரித்த உழவு கூலி, களை நாசினி மற்றும் கிருமிநாசினி என்பவற்றின் அதிகரித்த விலை என பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது மடிச்சுக்கட்டி நோய் தாக்கத்தால் தாம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை கோரிய போதே அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்ட பகுதிகளில் வசிக்கும் 348 கர்ப்பிணித் தாய்மாரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 213 கர்ப்பிணித் தாய்மாருமாக 561 பேர் பாதிப்படைந்துள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் புத்தெழுச்சி மையங்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் காணிக்கப்பட்டு வருவதானால் பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிப் தாய்மாருக்கு நிலையான பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.