திருமணமான 7 மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

காஞ்சிபுரத்தில்..

திருமணமாகி ஏழு மாதங்களில் கர்ப்பிணி, திடீரென உ.யிரிழந்த ச.ம்பவத்தில் ச.ந்தேகம் இருப்பதாக பெண்ணின் அம்மா பு.காரளித்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம, சோழிங்நல்லூர், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராணி.

இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் பெயர் தேவசகாயம். எங்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

என்னுடைய மகள் பிரதீபா (24) என்பவரை ஜேம்ஸ் என்பவருக்கு கடந்த 17.5.2022-ம் தேதி திருமணம் செய்து கொடுத்தோம். இவர்களின் திருமணம் திண்டிவனத்தில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு பிரதீபாவும் ஜேம்ஸும் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எஃப் காலனியில் குடியிருந்து வந்தனர்.

திருமணமான நாளிலிருந்து சீர் செய்முறையில் எங்களுக்குள் பி.ரச்னை இருந்து வந்தது. அதனால் நாங்கள் என் மகளின் வீட்டுக்கு நேரில் செல்லாமல் இருந்து வந்தோம்.

தற்போது என்னுடைய மகள் பிரதீபா, நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தாள். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பிரதீபா, எங்களைப் பார்க்க வீட்டுக்கு வந்து சில தினங்கள் தங்கியிருந்தாள். கடந்த 21.12.2022-ம் தேதி மருமகன் ஜேம்ஸ், என்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) மருமகன் ஜேம்ஸ் எங்களுக்கு போன் செய்து பிரதீபா, வீட்டின் பாத்ரூமில் வழுக்கி வி.ழுந்துவிட்டாள்.

அதனால் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று கூறினார். உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது பிரதீபா இ.ற.ந்துவிட்டதாகக் கூறினர்.

அதைக்கேட்டு அ.தி.ர்ச்சியடைந்தோம். பிரதீபாவுக்கு என்ன நடந்தது என்று மருமகன் ஜேம்ஸிடம் விசாரித்தபோது அவர், பிரதீபா காலை 9:30 மணியளவில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் மூ.ச்.சுத்திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

மருமகன் ஜேம்ஸ் சொல்லும் காரணத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. மேலும் எனது மகள் பிரதீபாவின் ம.ரணத்தில் ச.ந்தேகமாக உள்ளது. எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருவள்ளூவர், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து வி.சாரணை நடத்திவருகிறார்.

இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், “கர்ப்பிணி பிரதீபா உ.யிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரின் கணவர் குடும்பத்தினரிடம் வி.சாரணை நடத்தி வருகிறோம்.

பிரதீபாவுக்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ வி.சாரணைக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஆர்.டி.ஓ அறிக்கை, பிரேத ப.ரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய போக்குவரத்து முறைமை!!

புதிய போக்குவரத்து முறைமை..

சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் மூழ்கிய பள்ளி 2 மாணவர்களுக்கு நேர்ந்த கதி : தொடரும் சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் முழு ஆட்டம் போட்டு வருகின்றனர். தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

நீர்நிலைகளில் குழந்தைகள், பிள்ளைகளை தனியாக விளையாடவோ, குளிக்கவோ தனியாக அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கைப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழுப்புரம் பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் 13 வயது உதயா .இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்பிரமணி (14). இவர், பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று விடுமுறை தினமானதால் நண்பர்கள் உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம் அருகே அய்யன்கோவில்பட்டு பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் அவர்கள் 6 பேரும் இறங்கி குளிக்கத் தொடங்கினர்.

இதில் 3பேர் மட்டும் சிறிது நேரம் கழித்து கரையேறிய நிலையில் மீதமுள்ள 3 பேரும் சுழலில் சிக்கி மாயமாகினர். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…. என கத்தி கூச்சலிட்டனர். இதில் ராம்குமார் மகன் சங்கர் (13) என்பவரை மட்டும் மீட்டனர்.

அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஆற்றில் மூழ்கிய உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் இருவரையும் வெகுநேரம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதன் பிறகு வந்து சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறை பாதுகாப்பு உபகரணங்களுடன் தடுப்பணையில் இறங்கி மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு முதலில் பாலசுப்பிரமணியின் உடலையும், அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து உதயாவின் உடலையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அவர்களின் இருவரின் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நண்பர்களுடன் குளிக்க சென்றவர்கள் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவிமீது தாக்குதல் : போலீஸ் தேடியதால் இளைஞர் விபரீத முடிவு!!

வேலூரில்..

தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை ஓடும் பேருந்திலேயே தாக்கிவிட்டு தப்பிஓடிய இளைஞர், போலீஸ் விசாரணைக்குப் பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் 20 வயது மகன் மணிகண்டன், டிராக்டர் ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த இளைஞர், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்துவரும் 15 வயதே ஆகும் சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.

அந்தச் சிறுமி தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்றுத் திரும்புவது வழக்கம். காலை, மாலை நேரங்களில் மாணவிச் செல்லும் பேருந்திலேயே பயணித்து, தன்னை காதலிக்குமாறுக் கூறி மிரட்டவும் செய்தாராம் மணிகண்டன். நேற்று காலையிலும் மாணவி பள்ளிக்குப் பேருந்தில் சென்றபோது, அருகில் நின்று பேச முயன்ற மணிகண்டனை மாணவி ‘ஏதோ’ திட்டியிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஓடும் பேருந்திலேயே மாணவியை தாக்கிவிட்டு, பேருந்தில் இருந்து கீழே குதித்திருக்கிறார். இதில், இளைஞரின் தலையிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடமும் சிக்காமல் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்திருக்கிறார். விரைந்து வந்த பெற்றோர், மாணவியை அழைத்துக்கொண்டு வேப்பங்குப்பம் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், மணிகண்டனை விசாரணைக்கு அழைத்து வருவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், அவரது பெற்றோரை காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

நண்பர்கள் மூலம் இந்தத் தகவலை தெரிந்துக்கொண்ட மணிகண்டன், பள்ளிகொண்டா அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு பாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, அந்த ஊரிலுள்ள அரசுப் பள்ளியின் பின்புறம் சென்ற மணிகண்டன் போலீஸ் விசாரணைக்குப் பயந்து, அங்குள்ள வேப்பமரத்தில் கயிற்றைக் கட்டி அதில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துகொண்டிருக்கிறார்.

தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்த மணிகண்டனின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பள்ளிகொண்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டபோது, அங்குத் திரண்ட மணிகண்டனின் உறவினர்கள் சடலத்தை தர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸாரின் சமசர பேச்சுவார்த்தையை ஏற்று அவர்கள் சடலத்தை ஒப்படைத்தனர்.

பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம் : 2023ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்கும் : பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!!

ஐரோப்பாவில் ..

உலகில் பல தீர்க்கதரசிகள் இருந்துள்ளார்கள். அவர்களுள் பலரது கணிப்புகள் ஆரம்பத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும், இறுதியில் அந்த கணிப்புகள் நிறைவேறி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட பிரபலமான ஓர் தீர்க்கத்தரசி தான் பாபா வங்கா.

யார் இந்த பாபா வங்கா? பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் தனது 12-வயதில் பெரும் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரால் பார்வை இழந்த நிலையில் மீட்கப்பட்டார். தனது பார்வையை இழந்த பிறகு எதிர்காலம் குறித்து இவர் கணிக்கத் தொடங்கினார். அவருக்கு இலட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர்.

குறிப்பாக ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வைரலாக பரவிவருகின்றன.

இவர் கடந்த 1996- ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் இறந்து விட்டார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். அதுவும் இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது.

இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவரது பெரும்பாலான கணிப்புகள் பலித்து விட்டதாக சொல்லப்படுவதே இந்த பரபரப்புக்கு காரணம்.

உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என குறிப்பிடுகிறார்கள்.

உலகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கணித்து இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உலகம் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணித்து இருந்தார். அவர் கூறியது போலவே கோவிட் பெருந்தொற்றால் உலகம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், 5079- ஆம் ஆண்டு வரை எதிர்காலம் பற்றி கணித்து வைத்திருப்பதாகவும் பாபா வங்காவின் கருத்துப்படி, அதுதான் இந்த உலகத்தின் கடைசியாக இருக்கும் என்பதாகவும் உள்ளது.

அந்த வகையில் தற்போது நாம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் நடக்கப்போவதை பாபா வங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பாபா வங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சரி பாபா வங்காவின் கணிப்புபடி 2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று கணித்திருக்கின்றார் என்று நாம் பார்க்கலாம்.

பாபா வங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை கண்டிராத அளவில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும். அதாவது சூரிய சுனாமி என்பது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் வெடிப்புகள் ஆகும்.

இவை பில்லியன் கணக்கான அணுகுண்டுகளைப் போல சக்தி வாய்ந்தவை. இது பூமியின் காந்த கவசத்தைப் பாதிக்கும். இதனால் பூமியின் வேகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாற்றம் பேரழிவை உண்டாக்கும் என கண்டித்துள்ளார்.

பாபா வங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் ஒரு பெரிய நாடு மக்கள் மீது பயோ ஆயுத ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இந்த சோதனையால் நூறாயிரக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை இதை திறம்பட செய்தாலும், சில நாடுகள் ரகசியமாக பயோ ஆயுதங்களை இயக்கும் என்று தனது குறிப்புகளில் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார். பாபா வங்காவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். பூமியை ஏலியன்கள் ஆக்கிரமித்து வருவார்கள். அப்போது லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்றும் கணித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் அணு வெடிப்பு ஏற்படலாம் என்றும் அணுமின் நிலையத்தில் ஏற்படும் வெடிப்பால் மேகங்களில் நச்சுக்கள் கலந்து ஆசியா கண்டம் நச்சு மேகங்களால் மூழ்கிவிடக்கூடும். இதனால் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் நோய்கள் ஏற்படக்கூடும் என்றும் கணித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் இருந்து இயற்கையான பிறப்புகள் தடைசெய்யப்பட்டு, மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இப்படி ஆய்வகங்களில் பிறக்கும் மனிதர்களின் குணாதியம் மற்றும் தோலின் நிறம் போன்றவற்றை பெற்றோர்களே தீர்மானிக்க முடியும்.

இது நிச்சயம் பாபா வாங்காவின் மிகவும் திகிலூட்டும் கணிப்புக்களில் ஒன்றாகும். பாபா வங்காவின் 2023 கணிப்புகளில் முக்கிய அதிர்ச்சிதறக்கூடிய கணிப்பாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது பூமி ஒரு நல்ல சமநிலையில் உள்ளது. சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது காலநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2023-ல் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். அதிலும் பூமி சூரியனுக்கு அருகில் நகர்ந்தால், அதிக வெப்ப கதிர்வீச்சை சந்திக்க நேரிடும்.

மறுபுறம், மேலும் பூமி நகர்ந்தால், உலகம் பனியுகத்திற்குள் மூழ்கி, இருள் பல மணிநேரம் நீடிக்கும். 2023 ஆம் ஆண்டில் பாபா வங்காவின் இந்த கணிப்புகளில் எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல்ஹாசன் பாணியில் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் : நூதன முயற்சியில் இறங்கிய இரு பெண்கள்!!

பெங்களூருவில்…

அதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்’ என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் பலரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22) என்ற இவர்கள் சர்ச் தெருவில், கைகளில் ‘ப்ரீ ஹக்ஸ்’ என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று வருகின்றனர்.

ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

”சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டோம். அதில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக, மன அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

அதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்’ என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் பலரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விசித்திர கேக்!!

விசித்திர கேக்..

இலங்கையில் கேக் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் கற்ற பெண் ஒருவர் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கொழும்பை சேர்ந்த பெண்ணான ஷெஹ்னி கோஷிலா, கண்டிய மணப்பெண் வடிவில் பாரிய கேக்கினை முழுமையான நிர்மாணித்து சாதித்துள்ளார். இது தொடர்பில் ஷெஹ்னி கோஷிலா கருத்து வெளியிடுகையில்,

“கேக் கலை துறைக்கு வந்த பிறகு 3 வருடமாக இவ்வாறான கேக் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எனது கனவாகும். கண்டிய மணப்பெண்கள் நம் நாட்டில் மட்டுமே வடிவமைப்பு ​​செய்யப்படுவார்கள், இதை இப்படியாவது உலகுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

இதுவரை இந்த வடிவில் கேக் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் படித்த படிப்பின் முடிவில் எனது வடிவமைப்பை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இது ஒரு மாதிரி மட்டுமே, உணவுக்காக அல்ல என்பதால் இப்படி வடிவமைப்பு செய்ய நினைத்தேன். எல்லாவற்றையும் முடிந்தவரை யதார்த்தமாக உருவாக்க விரும்பினேன்.

15 நாட்கள் கடின உழைப்பில் முகம், கண், வாய், நகை முடி எப்படி இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது.. இது ஒரு நவீன கண்டிய மணமகள், அவருக்காக நான் ஒரு பாரம்பரிய புடவையை வடிவமைத்தேன்.

இந்த நகைகள் பாரம்பரிய மற்றும் நவீன இரண்டின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் புடவை ஒரு மார்பளவு தெரியும் வகையில் மூடப்பட்டிருக்கும்.

முழுமையாக வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன். எனக்கும் எனக்கு கற்பித்தவரும் இந்த செயற்பாடு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!!

விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை..

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (26.12.2022) காலை 8.15 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்ம சாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கேரத்நாயக்க,

மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் நத்தார் தினத்தில் ஏற்பட்ட சோகம் : 4 மணித்தியால போராட்டம் தோல்வி!!

கண்டி..

கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் நேற்று காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய சித்தும் சாரங்க விதாரண ஆகிய இரு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது வீட்டில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். காயமடைந்த தாய், தந்தை மற்றும் 12 வயது சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டு முயற்சியின் பின்னர் மண்ணில் சிக்கிய சிறுவர்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டெடுக்கும் போது இரண்டு பேரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“பிரதேச மக்கள் அனைவரும் சேர்ந்து மண்ணை வெளியே எடுத்தோம். மூன்று பேரும் மண்ணில் புதைந்த நிலையிலேயே இருந்தனர். முதலில் ஒருவர் வெளியே எடுக்கப்பட்டார். அவரே மூன்றாவது மகளாகும்.

அவர் சுயநினைவுடன் இருந்தார், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பினோம், ஏனைய இருவரை வெளியே எடுக்கும்போது, உயிரிழந்து காணப்பட்டனர். ஒரு பிள்ளையை வெளியே எடுக்க 4 மணித்தியாலங்களானது” என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

12 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவா : விவாகரத்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா – பிரசன்னா!!

சினேகா – பிரசன்னா..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இரு குழந்தைகளை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சினேகா – பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய் என்று பிரச்சனா பதிலளித்திருந்தார்.

இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்காத சினேகா, தற்போது கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைத்து விவாகரத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இனியும் தாங்க முடியாது : புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஹாவேரியை சேர்ந்தவர் விருபாக்ஷப்பா.

இவரது மனைவி பாரதி (40). இந்த தம்பதியின் மகன்கள் கிரண் (22), அருண் (21). கிரணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுஜன்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருந்தது.

அருணும், புட்டண்ணஷெட்டி என்பவரின் மகளும் காதலித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு புட்டண்ணஷெட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5 நாட்களுக்கு முன்பு அருணும், அவரது காதலியும் வீட்டில் இருந்து வெளியேறி கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் புட்டண்ணஷெட்டியும் அவரது உறவினர்களும் சேர்ந்து தங்களது மகளை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூறி பாரதியின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த துன்புறுத்தலை தாங்கமுடியாமல் பாரதியும், அவரது குடும்பத்தினரும் மனம் உடைந்தனர். இதையடுத்து பாரதி, கிரண், சவுஜன்யா ஆகிய 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!!

மும்பையில்..

மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பையை அடுத்த தாம்னி என்ற கிராமத்தில் ஓடும் காதி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

நவிமும்பை குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலைசெய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதையடுத்து போலீஸார் நவிமும்பையில் காணாமல்போன பெண்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்தனர். ஆனால், அதில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உதவி இன்ஸ்பெக்டர் பிரவின் தலைமையிலான குழு இது குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைத்தது.

கொலைசெய்யப்பட்ட பெண் காலில் செருப்பு அணிந்திருந்தார். அந்த செருப்பில் கடை ஒன்றின் பெயர் இருந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி பிரவின் பேசுகையில், “கொலைசெய்யப்பட்ட பெண் அணிந்திருந்த செருப்பில் குறிப்பிடப்பட்ட செருப்பு கடையின் அனைத்து கிளைகளுக்கும் சென்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காட்டி விசாரித்தோம்.

வாஷியில் ஒரு கடையில் அந்தப் பெண் செருப்பு வாங்க வந்ததாக சேல்ஸ்மேன் ஒருவர் தெரிவித்தார். உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது அந்தப் பெண்ணுடன் உடல் திடகாத்தமான ஒருவரும் வந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்தப் பெண்ணின் பெயர் ஊர்வசி (27) என்று அடையாளம் கண்டுபிடித்தோம். அவர் வேலை செய்த இடத்துக்குச் சென்று அவர் குறித்து விசாரித்தபோது ஊர்வசி வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அவர் பீர் பார் ஒன்றில் வேலை செய்துவந்தார்.

அவருடன் இருந்த நபர் ரியாஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டது. தேவ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அதோடு அவருக்கு ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கின்றனர்.

புதிதாக பீர் பார் வந்தபோது ரியாஸ் கானுக்கு, ஊர்வசியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது. ஊர்வசி தன்னைத் திருமணம் செய்யும்படி ரியாஸை கட்டாயப்படுத்தினார்.

ஆனால் ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில், மீண்டும் திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ரியாஸ். இதனால் ஊர்வசி, `வீட்டில் வந்து பிரச்னை செய்துவிடுவேன்.

போலீஸில் புகார் செய்வேன்’ என்று மிரட்டியிருக்கிறார். உடனே ஊர்வசியைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினார் ரியாஸ் கான். இதற்காக, தன் நண்பன் இம்ரான் ஷேக் உதவியை நாடினார். இம்ரான் ஷேக், ரியாஸ் கானுக்கு பணம் கொடுத்திருந்தார்.

அந்தப் பணம் வேண்டுமானால் பெண் ஒருவரைக் கொலைசெய்ய தனக்கு உதவ வேண்டும் என்று ரியாஸ் கான், இம்ரான் ஷேக்கிடம் கேட்டுக்கொண்டார். இம்ரானும் அதற்கு ஒப்புக்கொண்டார். உடனே ரியாஸ் ஷேக் ஊர்வசியை கடந்த 13-ம் தேதி தன் காரில் அழைத்துக்கொண்டு ஷில்பாடா நோக்கிச் சென்றார்.

ஏற்கெனவே ஊர்வசியைக் கொலைசெய்ய தயார் செய்து வைத்திருந்த இம்ரான் ஷேக்கை செல்லும் வழியில், காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காரில் செல்லும் வழியிலேயே ஊர்வசியைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர்.

பின்னர் உடலை ஆற்றில் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்றார். மிகவும் சிக்கலான வழக்கைக் கண்டுபிடிக்க செருப்பு உதவியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அந்த இருவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!!

சுனாமி நினைவுதினம்..

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2022) இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவுத் தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியாகவும் விளங்குகின்றது.

நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்கே, மதகுருமார்கள், ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை, தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்,

நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர்,
பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் நத்தார் தினத்தை முன்னிட்டு 6 கைதிகள் விடுதலை!!

6 கைதிகள் விடுதலை..

நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் இன்று (25.12) விடுதலை செய்யப்பட்டனர்.

கிறிஸ்தவர்களின் புனித தினங்களில் ஒன்றான நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றன காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி, கைலாகு கொடுத்து அவர்களை விடுவித்து வழிஅனுப்பி வைத்தனர்.

காதலியை குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன் : உடலை குதறி தின்ற நாய், நரி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ராமநாதபுரத்தில்..

காதலி கர்ப்பமடைந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலரிடம் தொந்தரவு செய்ய, காதலனோ குளத்து நீரில் காதலியை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார். நாய், நரிகள் அந்தப் பெண்ணின் உடலை குதறி தின்றுருக்கின்றன.

மண்டையோடு மற்றும் உடல் எலும்புகளை போலீசார் மீட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் .

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். மாதவன் ஆட்டுக்கடை போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். வாசுகி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் .

தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் சொந்தமான ஆடுகளை போடும் பணி செய்து வந்திருக்கிறார் மாதவன். அவ்வப்போது ஊருக்கு வரும்போது வாசுகி உடன் சந்தித்து பேசுவது வழக்கம்.

இதில் வாசுகி கர்ப்பமடைந்திருக்கிறார். அதனால் செங்கிப்பட்டிக்கு மாதவனை தேடிச்சென்று தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 20ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் அவர் வெளியேறியிருக்கிறார். இதனால் மகளை காணவில்லை என்று அவரது தந்தை உடையார் கீழ தூவல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில் மாதவனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதால் மாதவன் தனக்கு தொந்தரவாக கருதி அவரது அண்ணனுடன் சேர்ந்து செங்கிப்பட்டி சானிடோரியத்தில் இருந்து அயோத்தி பட்டைக்கு செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளத்தில் வாசுகியை அழுத்தி கொலை செய்துவிட்டு சடலத்தை அப்படியே விட்டுவிட்டு வழக்கம்போல் கிடைபோடும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

போலீசார் தீவிரமாக தேடி வந்ததில், மாதவனை காதலித்தது தெரியவந்திருக்கிறது. இதனால் மாதவனை தேடி வந்தபோதுதான், வாசுகி எலும்புகள் கிடைத்துள்ளன. சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த குளக்கரையில் மண்டை ஓடுகள் எலும்புகள் கிடந்துள்ளன.

போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. அந்த எலும்புகளை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் நாய், நரிகள் சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம். எலும்புகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன என்பதை தெரியவந்ததை அடுத்து தடையவில்லை நிபுணர்கள் அந்த எலும்புகளை சேகரித்து உள்ளனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது காணாமல் போன வாசுகி என்பதும் மாதவன், திருக்கண்ணன் இருவரும் கொலையாளிகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

காருக்குள் அமர்ந்து சிலிண்டரில் உள்ள வாயுவை சுவாசித்த பொறியியலாளருக்கு நடந்த விபரீதம்!!

கர்நாடகாவில்..

நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இன்ஜினியர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் (51).

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

ஆனால் அது பெரிதும் பலனளிக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக பல்வேறு வழிகளில் முயன்றும் அது சரிவர வேலை செய்யவில்லை என்பதால் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று கடைக்கு சென்று நைட்ரஜன் சிலிண்டரை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரை ஒரு ஷீட் வைத்து மூடி, பின்னர் காருக்குள் சிலிண்டருடன் சென்றுள்ளார்.

பிறகு காரின் கதவை அடைத்து விட்டு, தனது முகத்தில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை வைத்து சூட்டிக்கொண்டார். தொடர்ந்து தான் கொண்டு வந்த சிலிண்டரை திறந்து அந்த கவருக்குள் வாயுவை திறந்து விட்டார்.

அந்த வாயு அவரது வாய்க்குள் சென்று மூச்சு முட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வை எதேர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் விரைந்த அவர்கள், விஜயகுமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொளவதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இன்ஜினியர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.