காதலனை கைவிட்டு மற்றொரு இளைஞனுடன் காதல்… இளம் பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்!!

சத்தீஸ்கரில்..

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் எல்லாம் மலையேறி விட்டது. தற்போதைய காதல் எல்லாம் சொல் பேச்சு கேட்காத காதலனுக்கு விஷம், காதலியை கொடூரக் கொலை என இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் துத்ராம் பன்னா. இவரது மகள் 20வயது நீல்குஷம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பேருந்து நடத்துநரான ஷபாஷ் கானை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து ஷபாஷ் கானும், நீல்குஷமும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு நீல்குஷிடம் பேசி வந்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் காதலனின் செல்போன் அழைப்புகளை ஏற்காமலும், வாட்ஸ்-அப்பில் பிளாக் செய்தும் உள்ளார். அதன் பிறகு அதே ஊரில் மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்திய நீல்குஷ் அந்த இளைஞருடன் பேசி வந்துள்ளார்.நீல்குஷ் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் பேசும்படி நீல்குஷுக்கும், அவளது பெற்றோருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ஷபாஷ் கான் சத்தீஷ்கரின் ராய்ப்பூர் வந்துள்ளார். ராய்ப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலாஸ்பூரில் ஷபாஷ் கான் நீல்குஷ் வீட்டிற்கு சென்றான்.

வீட்டில் நீல்குஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கும்படியும், தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷபாஷ் கான் தான் கொண்டு வந்த ‘ஸ்குரு டிரைவரால்’ நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். நீல்குஷ் கத்தி கூச்சலிடாமல் இருக்க தலையணையால் அவரது முகத்தை அழுத்தி பிடித்தான்.

நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் ‘ஸ்குரு டிரைவரால்’ ஷபாஷ் கான் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நீல்குஷை கொலை செய்த பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

வெளியே சென்ற நீல்குஷின் சகோதரன் நீலீஸ் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது சகோதரி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீல்குஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நீல்குஷின் உடலில் 51 இடங்களில் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டிருப்பதும், மார்பு பகுதியில் மிகப்பெரிய அளவில் கொடூர காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர கொலையை செய்த பின் தப்பியோடிய ஷபாஷ் கானை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபா வருமானம் உழைக்கும் 16 வயது யுவதி!!

இசபெல்லா பாரட்..

இசபெல்லா பாரட் (Isabella Barrett) என்ற பிரபல அமெரிக்க மாடல் அழகி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபா பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். மிக இள வயதிலேயே இசபெல்லா மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார்.

தனது ஆறு வயதிலேயே மில்லியன்களுக்கு அதிபதியான இசபெல்லா தற்பொழுது மாதாந்தம் ஒரு கோடி ரூபா வருமானத்தை ஈட்டி வருகின்றார். மாடல் அழகியாகவும், சில பிரபல பண்டக்குறிகளின் தூதுவராகவும் இசபெல்லா கடமை ஆற்றி வருகின்றார்.

நியூ ஃபேஷன் வீக் போன்ற மாடலிங் நிகழ்வுகளில் இசபெல்லா பங்கேற்று வருகின்றார். சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி இவ்வாறு தாம் வருமானம் ஈட்டியதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் வர்த்தக ரீதியாக பாரிய வெற்றியை கண்டுள்ள இசபெல்லா ஒரு ஆசிரியராக வரவேண்டும் என கனவு காண்கின்றார். இசபெல்லா 55 தடவைகள் அழகு ராணி பட்டம், வென்றுள்ளதுடன் 85 தடவைகள் அழகு ராணி போட்டிகளில் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.

பல்வேறு மிக முக்கியமான பிராண்ட் வகைகளுக்கு இசபெல்லா மாடல் அழகியாக திகழ்கின்றார். இசபெல்லா மிகச் சிறந்த ஓர் முயற்சியான்மையாளராக கருதப்படுகின்றார். சமூக ஊடகங்களில் இசபெல்லாவை ஒன்று தசம் ஆறு மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

ஆடை ஆபரணங்கள் தனக்கு மனதுக்கு பிடித்திருந்தால் அது எவ்வளவு விலை அதிகம் என்றாலும் அவற்றை கொள்வனவு செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளதாக இசபெல்லா கூறுகின்றார்.

கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 7 வயதுச் சிறுமி : தாய் உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரண்டியும், இலங்கை போக்குவரத்து சபை பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியினை சிறுமியின் தாயாரே செலுத்திச் சென்றுள்ளார். கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தும், அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி, முத்துமாலை கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தாயின் இறுதி ஆசையை நிறைவேற்ற வைத்தியசாலை ICUவில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர்!!

பீகாரில்..

பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. இதய நோயாளியான இவருக்கு சாந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார். அண்மையில் சாந்தினிக்கும், சேலம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூனம் குமாரிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,

தந்து மகளிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் இது தான் தனது கடைசி ஆசை என்று வலியுறுத்தியுள்ளார். இதை ஏற்று இரு குடும்பத்தினரும் சாந்தினி மற்றும் சுமித் கவுரவுக்கு தனியார் மருத்துவமனையிலே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர், சாந்தினி தனது கணவருடன் திருமண கோலத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றார். இருவரையும் பார்த்த பூனம் குமாரி மகிழ்ச்சியுடன்,

இருவரையும் ஆசீர்வாதம் செய்து உயிரிழந்துள்ளார். தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் திருமண கோலத்தில் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வவுனியாவில் புதையல் தோண்டும் ஸ்கானர் இயந்திரத்துடன் இளைஞன் கைது!!

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புதையில் தோண்ட பயன்படும் ஸ்கனார் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செடம்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (28.12.2022) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படும் ஸ்கானர் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த இயந்திரம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதனை எடுத்துச் சென்ற 35 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

திருமணமான 2 மாதத்தில் சடலமான புதுப்பெண் : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (22).

இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அருண்குமார், சேலத்தை சேர்ந்த தனது உறவினர் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பெரிய கோமேஸ்வரம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை மிருதுளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று மிருதுளாவின் உடலை மீட்டு,

ஆம்பூர் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத் தகராறு காரணமாக,

மிருதுளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் காதல்… போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கனகராஜ் மகள் முத்து மணிமாலா (23) பிபிஏ முடித்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 24ஆம் தேதி கடையநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து உள்ளனர்.

மேலும் இதன் காரணமாக முத்துமணி மாலாவின் பெற்றோர், மாற்று சமுதாயத்தைச் சார்ந்த ஆண் தமது மகளை திருமணம் செய்து கொண்டனர் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதன் விஷயத்தை அறிந்த காதல் ஜோடி, இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் காதலர்களுக்கு இடையே கடித போக்குவரத்தே அதிகபட்ச தகவல் தொடர்பாக இருந்து வந்தது. பின்னர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் பெருக்கம் காரணமாக, தகவல் தொடர்பு மிகவும் எளிதாகவிட்டது.

இதன் விளைவாக உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய வழி காதல்கள் பெருகி, அவை போலீஸ் தஞ்சம் புகும் அளவுக்கு இந்த போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

இளைஞன் கைது..

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (27.12.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் சென்ற ஒருவர் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரிடம் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மனைவியுடன் சுற்றுலா சென்ற இலங்கைத் தமிழருக்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த சோகம்!!

சென்னையில்..

சென்னையில் இலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர்.

சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் பிரபலம் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

ராய்கரில்..

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன் ஷசீன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சத்தீஸ்கரை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விஹார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி. 22 வயது இளம்பெண்ணான இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக youtube சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பின்தொடர்புபவர்களை கொண்டுள்ளார்.

பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அவ்வப்போது செய்திகளிலும் வருவார். இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்ட குடும்பத்தினர், லீனாவின் உடலை தூக்கிலிருந்து கீழே இறக்கினார். அப்போது அவருக்கு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் கூறுகையில், “இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கெலோ விஹார் காலனியில் வசிக்கும் 22 வயதான லீனா என்பவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​அவர் துப்பட்டாவால் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கினர்.

தற்போது அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். எதுவானாலும் உடற்கூறாய்வு முடிவு வெளியான பிறகே தெரியவரும். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

எனவே அவரது மொபைல் போன் மட்டும் கைப்பற்றியுள்ளோம். தனிப்பட்ட காரணங்களால் லீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை” என்றார்.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்தி சீரியல் தமிழில் டப் செய்து வெளியான ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அஞ்சலியாக நடித்த வைஷாலி தக்கர் என்ற இளம் நடிகையும் தனது முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மணி நேர மின் துண்டிப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களுக்கு எச்சரிக்கை!!

மின் துண்டிப்பு..

தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும். அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 5, 9 மற்றும் 13ஆம் திகதிகளில் 3 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன. இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளை பெற்ற பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானில் இலங்கை பெண் உயிரிழந்த சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!!

ஜப்பானில்..

ஜப்பானில் 2021 இல் இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு தவறியமை நியாயமற்ற நடவடிக்கை என சுயாதீன விசாரணை குழுவொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த லியனே சந்தமாலி என்பவர் நகோயா என்ற இடத்தில் உள்ள குடிவரவு முகாமில் 2021 இல் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்தமை தொடர்பிலேயே சுயாதீன நீதி விசாரணை குழுவொன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

2020 இல் விசா காலத்தை மீறி ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்த சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு தொடர்பில் குடிவரவு முகாம் அதிகாரிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதற்கு தவறியமை நியாயமற்ற செயல் என சுயாதீன நீதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகோயா பிராந்திய புனர்வாழ்;வு நிலையத்தின் இயக்குநர் உட்பட உத்தியோகத்தர்களின் கவலையீனம் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என குற்றச்சாட்டுகளை சுமத்தலாமா என நீதித்துறையினர் ஆராயவேண்டும் என சுயாதீன விசாரணை குழு கேள்வி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை பெண் 33 வயதில் உயிரிழப்பதற்கு அதிகாரிகளின் கவலையீனம் காரணமாகயிருக்கலாம் என விசாரணை குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது உடல்நிலையை அதிகாரிகள் சோதனையிட்டிருந்தால் அவருக்கு சிகிச்சை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,

எனினும் இலங்கை பெண்ணை அதிகாரிகள் திட்டமிட்டு கொலை செய்யவில்லை வேண்டுமென்றே அவரை புறக்கணிக்கவில்லை என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மாப்பிள்ளை.. உள்ளே வந்து குரங்கு பாத்த வேலை!!

இணையத்தில்..

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம். ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.

யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருமண மேடையில் நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும். இப்படி விதவிதமாக யோசித்து நாம் செய்யும் அதே சமயத்தில், சில எதிர்பாராத சம்பவங்கள் கூட நம்மை சுற்றி அரங்கேறும்.

இந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. பொதுவாக, திருமணத்திற்கு முன்பும், பின்பும் வித விதமாக யோசித்து போட்டோஷூட் எடுப்பார்கள்.

இதற்காக பல்வேறு இடங்களையும் தேர்ந்தெடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பார்கள். அப்படி ஒரு ஜோடி, சமீபத்தில் ஒரு பகுதியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், மணப்பெண்ணை தூக்கிய படி மாப்பிள்ளை போஸ் கொடுத்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கே ஒரு தாய் குரங்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறது.

அத்துடன் மட்டுமில்லாமல், மாப்பிள்ளை மீது ஏறிய படி சிறிது நேரம் நிற்கவும் செய்கிறது. இது அங்கிருந்தவர்களை வேடிக்கையில் ஆழ்த்த அதன் பின்னர் அங்கிருந்து விலகியும் செல்கிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், தற்போது அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

இட்சத்தில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம் : இப்படியும் ஓர் குடும்பம் : இன்ப அதிர்ச்சியில் பெற்றோர்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் தம்பதிக்கும் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கும் உள்ள ஒற்றுமை தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஹன்ட்ஸ்வில்லே என்னும் பகுதியை சேர்ந்தவர் Cassidy.

இவரது கணவரின் பெயர் Dylan Scott. கணவன் மற்றும் மனைவியான் இவர்கள் இருவரும் ஒரே தேதியில் (நவம்பர் 18) பிறந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சூழலில் தான் தற்போது மற்றொரு வியப்பான சம்பவமும் நடைபெற்றுள்ளது.

அதாவது, Cassidy மற்றும் Dylan ஆகியோருக்கு பிறந்த குழந்தையும் டிசம்பர் 18 ஆம் தேதியன்று பிறந்துள்ளது என்பது தான். அது மட்டுமில்லாமல், புதிதாக பிறந்த இந்த குழந்தை, பெற்றோர் இருவரும் பிறந்த அதே தேதியில் பிறந்ததுடன் மட்டுமில்லாமல், 1,33, 000 பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வில் இணைந்துள்ளதாகவும் அலபாமா மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதன் காரணமாக, தற்போது தாய், தந்தை மற்றும் குழந்தை என மூன்று பேரும் ஒரே பிறந்தநாள் தேதியை பகிர்ந்து கொண்டுள்ளனர். முன்னதாக, டிசம்பர் 27 ஆம் தேதியன்று குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இது குறித்து பேசும் குழந்தையின் தாய் Cassidy, தங்களின் குழந்தைக்கு தனியாக ஒரு பிறந்தநாள் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதே வேளையில் கணவர் ஸ்காட், தங்களது பிறந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் தங்களது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், Cassidy- க்கு பிரசவ வலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்து அங்கே அவருக்கு பிரசவம் பார்க்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் தான், தற்போது அவர்கள் பிறந்தநாளில் தங்களின் குழந்தையும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் முடிந்த சாகசம்.. விமானிக்கு நேர்ந்த பரிதாபம்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் 30 வயது சூரஜ் ஷா. இவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்து கொண்டார்.

பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ் உட்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் அதிகாரி குருதேவ் விடுத்த செய்திக்குறிப்பில் , விபத்தில் ஒரு சுற்றுலா பயணி பலியானார்.

பலியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள். பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரஜ் சஞ்சய் ஷா உயிரிழந்த இமாச்சல பிரதேசத்தில், டேன்டெம் பாராகிளைடிங்கின் போது பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாகச விளையாட்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஜனவரியில் மாநில உயர்நீதிமன்றம் தடை செய்யப்பட்டன.

பெங்களுருவில் 12 வயது சிறுவன் பிர் பில்லிங் பாராகிளைடிங் தளம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

பசியால் வாடும் 8 குழந்தைகள் : நண்பருக்கு உதவச் சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

வெனிசுலாவில்..

வெனிசுலாவில் நண்பர் ஒருவருக்கு உதவ முயன்று தனது நான்கு கை கால்களையும் இழந்த தந்தை எல்விஸ் சனாப்ரியா, தனது 8 குழந்தைகளும் இப்போது உணவு வழங்க முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் வெனிசுலா நகரில் வசித்து வரும் எல்விஸ் சனாப்ரியா(48) என்ற தந்தை, தனது எட்டுக் குழந்தைகளும் பசியால் வாடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

எல்விஸ், நாட்டின் உயரமான கட்டிடங்கள் பலவற்றில் கண்ணாடி முகப்புகளை நிறுவும் பணியை எல்விஸ் சனாப்ரியா செய்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் வெனிசுலாவின் மிகவும் தண்ணீர் வளம் குறைவான பகுதியில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக கிணறு ஒன்றை தோண்ட வேண்டும் என்று நண்பரான பக்கத்து வீட்டுக்காரர் உதவி கேட்ட போது, அதை செய்ய எல்விஸும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் உயர் அழுத்த விபத்தில் எல்விஸ் தனது நான்கு கை கால்களையும் உடலில் இருந்து அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், அத்துடன் அவரது அண்டை வீட்டுக்காரரின் உதவிக்கு வந்த மற்றொரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நண்பருக்கு உதவ முன்வந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், தனது நான்கு கை கால்களையும் இழந்ததால் என்னால் வேலை செய்ய முடியவில்லை, இதனால் போதிய வருமானம் இல்லாமல் தன்னுடைய 8 குழந்தைகளும் அடிக்கடி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

என்னுடைய பாரிய குடும்பத்திற்கு உதவுவதற்காக என் மனைவி மற்ற வீடுகளில் சுத்தம் செய்யவும் கழுவவும் செல்கிறார், இதன் மூலம் கொஞ்சம் பணம் பெறுகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் 8 குழந்தைகளின் தந்தையான எல்விஸ் சனாப்ரியா, GOFUNDME மூலம் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் கிடைக்கும் உதவி தொகையின் மூலம் செயற்கை கை கால்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதனை கொண்டு தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.