திருமணம் நடந்து 13 ஆண்டுகள்… விரக்தியில் விபரீத முடிவெடுத்த தம்பதி!!

சென்னையில்..

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி துலுக்கானம். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்குக் குழந்தை இல்லை.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குழந்தை இல்லாததால் தம்பதிகள் மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி குழந்தை தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தம்பதியின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டியே இருந்துள்ளது. இவர்களின் ஆள்நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

பிறகு போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது, தம்பதியின் வீடு உட்புறமாகத் தாழ் இடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை போலிஸார் கண்டனர்.

பிறகு இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத விரகத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் சக்திவேல் மனைவி துலுக்கானத்தை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துலுக்கானம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தெரிய வரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தனின் பேரூந்தில் கைவரிசையை காட்டிய மூன்று பெண்கள் நையப்புடைப்பு!!

பேரூந்தில் கைவரிசையை..

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் இன்று (30.12.2022) மதியம் 2.30 மணியளவில் பேரூந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி தனியார் பேரூந்து பயணித்துள்ளது இதன் போது இயக்கச்சி பகுதியினை பேரூந்து அண்மித்த சமயத்தில் பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபா பணம் மற்றும் வலைகாப்பு ஒன்றும் களவாடப்பட்டிருந்தது.

பேரூந்து பரந்தன் சந்தியினை அண்மித்த போது சந்தேகத்திக்கிடமாக நின்ற பெண்கள் மூவரை நடத்துனர் விசாரித்த போது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளமையுடன் பொதுமக்களினால் குறித்த மூன்று பெண்களும் நையப்புடைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் வசமிருந்த பணம் மற்றும் நகை மீட்கப்பட்டதுடன் பரந்தன் சந்தியில் நின்ற பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

காதல் கை கூடததால் விபரீத முடிவை எடுக்க துணிந்த இளம்பெண்.. பின்னர் தலைகீழாக மாறிய வாழ்க்கை!!

திருச்சியில்..

திருச்சி, மாவட்டம் மணப்பாளையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகளான ரஞ்சினி, கல்லூரியில் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் தான், ரஞ்சினியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்ற நபரும் சமீப காலமாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ரஞ்சினி மற்றும் செம்பருத்தி ஆகியோரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தனது காதலுக்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவிக்காததால், ரஞ்சினி விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அதன் படி, மன உளைச்சலில் இருந்த அவர், விஷம் குடித்து விபரீத முடிவை எடுக்க முயன்றுள்ளார். மகளின் நிலையை கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், அங்கிருந்து ரஞ்சினி திடீரென காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அவரை பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், உண்மைக் காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கு மத்தியில், ரஞ்சினி தனது காதலனான செம்பருத்தியை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திலும் சென்று தஞ்சம் அடைந்துள்ளது பற்றி தகவல் கிடைத்துள்ளது.

இதன் பின்னர், இரு தரப்பு பெற்றோரையும் அழைத்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து, பின்னர் காதலன் செம்பருத்தியுடன் ரஞ்சினியை அனுப்பி வைத்துள்ளனர்.

விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள இளம் பெண் ஒருவர் முடிவு எடுத்திருந்த நிலையில், அதன் பின்னர் போலீசார் உதவியுடன் காதலருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

வவுனியாவில் சீனாவால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 158900 கிலோ அரிசி : மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!!

சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 58900 கிலோ அரிசி வவுனியாவில் நீண்ட நாளாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை விநியோகிக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பாடசாலை செல்லும் தரம் 5 இற்கு உட்பட்ட மாணவர்களின் பசியை போக்கும் முகமாக சீன அரசாங்கத்தால் ஒரு மாணவருக்கு 10 கிலோ வீதம் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசியானது வடமாகாணத்தில் வடமாகான கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 4 இலட்சத்து 15450 கிலோ அரிசியும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு இலசத்து 13720 கிலோ அரிசியும்,

மன்னார் மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 7160 கிலோ அரிசியும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு இலசத்து 5370 கிலோ அரிசியும், வவுனியா மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 62570 கிலோ அரியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த அரிசி அந்தந்த மாவட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மாணவர்களுக்கு விநியோகிப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தில் குறித்த அரிசி இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஓமந்தையில் உள்ள களஞ்சியசாலையில் குறித்த அரிசியில் ஒரு இலட்சத்து 58900 கிலோ கொண்டு வரப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு ஒரு மாதம் நெருக்கும் நிலையில் அவ் அரிசி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

புது வருடத்திற்கு கூட குறித்த அரிசி கிடைக்கவில்லை எனவும், அவை களஞ்சியப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தால் பழுதடைந்து விடும் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர் கோரியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் சு.ஜெகசோதிநாதனிடம் கேட்ட போது, மாணவர்களுக்கான அரிசி விநியோகம் வடமாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

எமது மாவட்டத்தில் அதனை வழங்குமாறு எம்மிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்கான அரிசி எமது சங்கத்தின் ஓமந்தை களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அரிசி விநியோகத்திற்கான மாணவர்களது பெயர் பட்டியில் வடமாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் இருந்து பாடசாலை விடுமுறை விடுவதற்கு முதல் நாளே எமக்கு கிடைத்தமையால் எம்மால் வழங்க முடியவில்லை. பாடசாலை ஆரம்பித்ததும் அதனை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் இ.அ.ஆனந்தராஜா விடம் கேட்ட போது,
வடக்கில் கொண்டு வரப்பட்ட அரிசியில் ஏனைய மாவட்டங்களில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இதுவரை விநியோகிக்கவில்லை. எமக்கு பெயர்ப் பட்டியல் முன்னரே கிடைத்திருந்தது. ஆனாலும் சீரற்ற காலநிலை காரணமாகவும், போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் பாடசாலை ரீதியாக கொண்டு சென்று உடனடியாக வழங்க முடியவில்லை.

அதற்கான ஏற்பாடுகளை சீர்செய்த போது பாடசாலை விடுமுறை விட்டுள்ளது. அதனால் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் வவுனியாவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக பாடசாலை ரீதியாக விநியோகம் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் : கருகிய கார்.. நடந்த விபரீதம்!!

ரிஷப் பண்ட்..

உத்தரகாண்ட அருகே சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட். தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திருப்பினார். இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.

இதையடுத்து ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த தடுப்பில் மோதியது. இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டுள்ளனர்.

பிறகு அவரை அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதாலேயே ரிஷப் பண்ட் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் அவருக்குத் தலை மற்றும் காலில் பலத்த தாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்ததும், தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

வவுனியாவில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

விசேட கலந்துரையாடல்..

வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் எண்ணக்கருவில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள்,

மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

வவுனியா – மன்னார் வீதியில் வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைத்தல், ஏ9 வீதியிலுள்ள பாலங்களின் பாதுகாப்புக் கட்டு அமைத்தல், பொலிஸ் விசேட பரிசோதனை நடவடிக்கை,

வீதி செப்பனிடும் பணி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

102 குழந்தைகள் பெற்ற பின்னர் நபர் எடுத்த திடீர் முடிவு..12 மனைவிகளுக்கு வைத்த வேண்டுகோள்!!

உகாண்டாவில்..

உகாண்டாவின் முசா ஹசாஹ்யா(67) என்ற நபர் 102 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு தனது 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உகாண்டாவின் புகிசாவில் மூசா ஹசாஹ்யா(67) என்ற நபர் தனது 12 மனைவிகளுடன் இணைந்து 102 குழந்தைகளை பெற்று எடுத்துள்ளார். இவருக்கு மொத்தம் 568 பேரக் குழந்தைகளும் தற்போது உள்ளனர்.

இந்நிலையில் தனது பெரிய குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதால் மூசா ஹசாஹ்யா தன்னுடைய 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் குழந்தை பிறக்கும் வயதில் உள்ள தன்னுடைய மனைவிகள் அனைவரையும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மூசா ஹசாஹ்யா பேசிய போது, குறைந்த வளங்கள் மட்டுமே என்னிடம் இப்போது இருப்பதால் குழந்தைகள் பெற்றெடுப்பதை என்னால் இனி பொறுத்துக் கொள்ள முடியாது.

மேலும் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், இத்தகைய விஷயம் சரியில்லாததால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் ஊக்கப்படுத்துகிறேன் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

568 பேரக்குழந்தைகளை கொண்ட மூசா, உகாண்டாவின் புகிசாவில் 12 படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறார். மூசா தனது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் பிரித்துச் சொல்ல முடியும் என்றாலும், அவர்கள் அனைவரையும் தனக்கு பெயரால் தெரியாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மூசா ஹசாஹ்யா 1971ம் ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு ஹனிஃபா என்ற பெண்ணை தனது முதல் மனைவியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிராமத்தலைவராகவும், தொழிலதிபராகவும் இருந்த அவர், பணமும் நிலமும் தன்னிடம் இருந்ததால் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்போது என்னால் சம்பாதிக்க முடிந்ததால், அதிக பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மூசா தனது முதல் மனைவி ஹனிபாவை திருமணம் செய்து கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகளைப் பெற்றெடுத்தபோது அவர் முதல் முறையாக அப்பாவானார்.

பாண் வாங்க சென்ற நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்!!

தம்புள்ளை..

சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் தம்புள்ளை கண்டளம கெப்பல பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காயமடைந்த குழந்தையை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து வைத்தியசாலை வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கண்டளம பகுதியில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் குழந்தை தங்கியிருந்த போது, ​​வீதியில் சூன் பான் முச்சக்கர வண்டி சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து தனது தாத்தாவிடம் பாண் வாங்க பணம் வாங்கி குழந்தை வீதிக்கு அருகில் ஓடி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடிபோதையில் இருந்த ஒருவர் இந்த குழந்தையை திட்டிவிட்டு சூன் பான் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டு கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

புத்தாடை அணிந்து மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இரண்டு மகள்களை காவிரி ஆற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ் – பான்விழி தம்பதியினருக்கு 7 வயதில் நிதிக்ஷா என்ற மகளும், 5 வயதில் அக்சரா என்ற மகளும் இருந்தனர்.

நிதிஷாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி அக்ஷராவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாகவே யுவராஜ் தம்பதியினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி தவித்து வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் நீரிழிவி நோயால் சிரமப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல்,

கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள்களுக்கு புத்தாடை அணிவித்து வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ் தம்பதியினர், தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காவிரி ஆற்றில் 2 மகள்களையும் தூக்கி வீசி கொலை செய்ததோடு, தாங்களும் குதித்து விபரீதமாக உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

ஆற்றில் 2 பெரியவர்கள் மற்றும் 2 சிறுமிகள் என 4 பேரது சடலங்கள் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதனிடையில் நீரிழிவு நோய் எந்த வயதினருக்கு வந்தாலும் பயப்படாமல் முறையாக மருந்துகள் எடுத்துக்கொண்டால் பல ஆண்டுகள் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வவுனியாவில் சந்தேகநபரை கண்டறிய பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்!!

பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்..

வவுனியா குருமன்காடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கில் தப்பிச்சென்றுள்ளது.

படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071-8591343 , 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து பொலிஸாரிக்கு தகவலை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்து : குடும்பஸ்தரின் உயிரை பறித்த பொலிஸ் வாகனம்!!

கோர விபத்து..

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றுகாலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வரவழைக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் இறந்த அடுத்த நாளே மனைவியும் உயிரிழப்பு.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் டேனியல் பாலகிருஷ்ணன் – வெண்ணிலா தம்பதியர். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேனியல் பாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து டேனியல் பாலகிருஷ்ணன் உடல் நேற்று மெரட்டூர் கிராமத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெண்ணிலா வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலும் கணவன் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் பிரபல நடிகை சுட்டுக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ரியா குமாரி..

பிரபல நடிகை ரியா குமாரி, நடுரோட்டில் வழிமறித்த கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கணவர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

‘வா சல்சித்ரா’ என்ற ஜார்கண்ட் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா குமாரி. இவர் பிரபலமான யூ ட்யூபராகவும் வலம் வந்தார். இந்நிலையில், நடிகை ரியாவும், அவரது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாரும் அவர்களது இரண்டு வயது மகளும் காரில் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே இன்று காலை 6 மணியளவில் நீண்ட நேர பயணத்தால், சற்று ஓய்வெடுத்துக்கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக பிரகாஷ் குமார் காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது, திடீரென மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றது. கணவனை மீட்க நடிகை ரியா குமாரி முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் நடிகையை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சுமார் 3 கி.மீ. குல்காச்சியா – பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் உதவிக் கேட்டு கெஞ்சியுள்ளார். அப்போது அங்கு தென்பட்ட சில உள்ளூர் மக்களிடம் நடந்ததை பிரகாஷ் குமார் விளக்கிய நிலையில், ரியா குமாரியை உலுபெரியாவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி வருவதாகவும், கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

“நாங்கள் நடிகையின் கணவரிடம் பேசினோம், மகள் வயதில் மிகச் சிறியவராக இருப்பதால், அவருக்கும் மேலும் தொந்தரவு கொடுக்க விரும்பாததால் அவரிடம் பின்னர் பேசலாம் என முடிவெடுத்துள்ளோம்.

உதவிக்காக அந்த நபர் அணுகிய உள்ளூர்வாசிகளிடமும் விசாரணை நடத்த உள்ளோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். அவர்களின் கார் தடயவியல் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

கிறிஸ்துமஸ் நாளில் கணவன், மனைவி ஓட ஓட விரட்டிக் கொலை : சகோதரனின் வெறிச்செயல்!!

தூத்துக்குடியில்..

ஊரெல்லாம் நட்சத்திரம் கட்டி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியிருந்தது. இந்நிலையில், சொத்துக்காக ஏற்பட்ட தகராறில் சொந்த தங்கையையும், தங்கையின் கணவரையும் அண்ணனே ஓட ஓட விரட்டிச் சென்று கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராம்குமார் (42), லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் ராம்குமாரின் மனைவி மாரியம்மாள் (39). அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ராம்குமாரின் மனைவி மாரியம்மாள், வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தார்.

இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், மாரியம்மாளின் சொந்த அண்ணன் முருகேசன் (50) என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்துக்கள் அனைத்தும் மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் (வயது 20) இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர். இருவரும் சேர்ந்து ராம்குமாரையும், அவரது மனைவி மாரியம்மாளையும் கொலைச் செய்ய திட்டமிட்டனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 7 மணியளவில் ராம்குமார் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகர் 6வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த முருகேசனும், அவரது மகன் மகேஷூம் சேர்ந்து மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினார்கள்.

இதில் ராம்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் இருவரும் சேர்ந்து சரமாரியாக ராம்குமாரை முகம் கழுத்து மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலைச் செய்து விட்டு மாரியம்மாள் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த மாரியம்மாள் மீதும் மிளகாய்ப் பொடியை தூவி அவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் மாரியம்மாள் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவகுமார் மற்றும் போலீசார், இரண்டு பேர் உடலையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டார்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரையும் தேடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமையகம் திறந்து வைப்பு!!

சமத்துவக் கட்சி..

சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம் வவுனியா கந்தசுவாமி வீதியில் இன்று (28.12.2022) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது அலுவலகத்தின் பெயர்ப்பலகையினை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரன் திறந்து வைத்தமையுடன்,

அலுவலகத்தினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் நடா வெட்டி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் , விருந்தினர் உரைகள் என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா மற்றும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முகநூலில் மாணவி ஒருவரின் மோசடி : நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!!

மாணவி ஒருவரின் மோசடி..

முகநூலில் விளம்பரம் செய்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த மாணவியை கிருலப்பணை பொலிஸார் கைது செய்துள்ளனர். சொக்லேட் விளம்பரம் செய்து இவ்வாறு ஐந்து இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் கிரம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவுகள் அதே பாடசாலையின் தலைமை மாணவர் தலைவராக இருந்த 22 வயது இளைஞர் ஒருவரின் கணக்கு எண்ணில் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இருவரையும் பொலிசார் வரவழைத்து விசாரித்தபோது, ​​மாணவியின் காதலன் எனக் கூறி 22 வயது வாலிபர் பணம் தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது.

தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.ஐ.கினிகே விசாரணைகளை மேற்கொண்டு இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.