வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (01.01) தெரிவித்தனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளையடுத்து குறித்த இளைஞருக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இசை நிகழ்வு ஒன்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் குழுக்களுக்குள் வாய்தர்க்கம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் அடிதடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. புதுவருட தினமான இன்று (01.01) இடம்பெற்ற இவ் அனர்த்தம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிளசர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இயங்கவில்லை எனத் தெரிவித்து வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றின் முன்பாக குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதனை இயங்க செய்த போது அம் மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது தீப்பிடித்த மோட்டார் சைக்கிளில் இருந்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்கும் தீ பரவிய நிலையில் அங்கு நின்றவர்கள் அதனை கட்டுப்படுத்தியதுடன், தீப்பிடித்த மோட்டார் சைக்கிளை வீதியில் இழுத்துப் போட்டனர்.
அத்துடன் அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்கள் இணைந்து நீர் ஊற்றியும், மண் போட்டும் மோட்டார் சைக்கிள் மீதான தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. இறுதியில் மோட்டார் சைக்கிள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வவுனியாவில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா நகரப் பகுதியில் நேற்று இரவு (31.12) நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று நீதிமன்றத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக அதன் சாரதி கீழே குதித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்கள் மற்றும் அயலில் இருந்தவர்களின் துணையுடன் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் மோட்டர் சைக்கிள் தீயில் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக இன்று (31.12.2022) வவுனியா பொலிசாரினால் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விபத்துக்களை குறைக்கும் முகமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இச்செயற்பாட்டின் போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தன்னுடைய காதலி வேறு ஒருவருடன் பேக் ஐடியில் பேசியதால், சந்தேகத்துடன் வெறிப்பிடித்த காதலன், 17 வயதான கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் வைத்து காதலியின் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் 17 வயது சிறுமியை அவரது காதலனே கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக பாலியல் குற்றங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் காதல் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்து உள்ள வடசேரி கோணத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா(17). கல்லூரி முதலாம் ஆண்டு பிடித்து வரும் இவர், பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு (20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, காதலர்களுக்கு இடையே சமீபத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு கொடூர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
இதற்காக கோபு சமூகவலைதளத்தில் ‘அகில்’ என்ற பெயரில் போலியாக கணக்கு ஒன்றை உருவாகியுள்ளார். பின்னர், கோபு அகில் பெயரில் சங்கீதாவுடன் சமூகவலைதளத்தில் நட்பாக பேசியுள்ளார்.
தனது காதலன் தான் அகில் என்ற பெயரில் தன்னுடன் பேசுகிறார் என்பதை அறியாத சங்கீதா தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலி தான் உருவாக்கிய பேக் ஐடியில் வேறொரு நபருடன் பேசுவதால் ஆத்திரமடைந்த கோபு தனது காதலி சங்கீதா துரோகம் செய்வதாக நினைத்துள்ளார்.
இந்த நிலையில், உன்னை சந்திக்க இன்று இரவு 1.30 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சங்கீதாவிடம் ‘பேக் ஐடி’ அகில் (கோபு) கூறியுள்ளான். இதை நம்பிய சங்கீதா நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டு வாசலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு ஹெல்மெட் அணிந்தவாறு கோபு வந்துள்ளான். தன்னுடன் ஆன்லைனில் பேசிய அகில் தான் வந்துள்ளான் என்று எண்ணிய சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார்.
ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்தது கோபு போல் உள்ளதை அறிந்த சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார். அப்போது, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு கோபு தனது காதலி சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றான். நள்ளிரவில் சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
விழுப்புரம் அருகே மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், கர்ப்பிணியாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செல்வபாண்டியன் எனபரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஈஸ்வரனும் பாரதியும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், எதோ பிரச்சினை காரணமாக ஈஸ்வரன் தனது மனைவி பாரதியை விட்டு பிரிந்து சென்றார். கணவர் விட்டு சென்றதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த பாரதி தனது மகனுடன் வீரங்கிபுரம் பகுதியில் உள்ள தனது அத்தை லட்சுமி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான செல்வபாண்டியன் என்பருடன் பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, செல்வ பாண்டியனும் பாரதியும் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
பாரதி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்த கர்ப்பத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று செல்வபாண்டியன் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால், இந்த தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வ பாண்டியன் கருவை கலைக்க வலியுறுத்தினாலும் பாரதி கருவை கலைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நான் இவ்வளவு சொல்லியும் மனைவி கருவை கலைக்காததால், கோபம் அடைந்த செல்வ பாண்டியன் பாரதியை மனைவி என்றும் பாராமல் கிழே தள்ளி கொடூரமாக தாக்கியிருக்கிறார்.
அடி வயிற்றில் காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பாரதி வலி தாங்காமல் அலறி துடித்து இருக்கிறார். மேலும் பாரதிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பாரதி வலி தாங்காமல் அலறியதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாரதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாரதியின் தந்தை அளித்த புகாரின் போரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வபாண்டியனை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன் தாஸ் மற்றும் சுஜிதா தம்பதி. இவர்கள் இருவரும் அருகில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கின்றனர்.
இருவரும், திருமண மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாதையின் கீழே இருந்த செப்டிக் டேங்க் திடீரென உடைந்திருக்கிறது.
இதனால் மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதா நிலை தடுமாறி உள்ளே விழுந்திருக்கின்றனர். இதனால் அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே, கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் மூலம் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, தீயணைப்பு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து தக்கலை தீயணைப்பு துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் விரைந்து சென்று செப்டிக் டேங்கிற்குள் விழுந்த மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதாவை மீட்டனர். ஆனால், காயம் காரணமாக சுஜிதா சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனால் திருமண வீடே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில், செப்டிக் டேங்கில் விழுந்ததால் படுகாயமடைந்த மோகன் தாஸை அங்கிருந்த அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். மற்றொருபுறம், வாய்க்காலில் விழுந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்களை மீட்புப் படையினர் மீட்டிருக்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண், துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை அருகே மகனுக்கு வாட்சப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (48). இவருக்கும் மகேஸ்வரிக்கும் (40) திருமணமாகி இரு மகன் உள்ளனர்.
மகேஸ்வரி தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில்ல் பாண்டியன் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிராம மக்கள் சிவகங்கை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முதற்கட்டமாக போலீசார் விசாரணை நடத்தியதில், மகேஸ்வரி தனது இறப்பு முன்னதாக தனது மகனுக்கு வாட்சப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியதை கண்டுபிடித்தனர்.
அந்த ஆடியோவில் “தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள், நன்றாக படி, என்னுடைய இறப்பிற்கு காரணம் உன்னுடைய அப்பா தான் என அழுது கொண்டே என்னை மன்னித்துக் கொள்” என்று மகேஸ்வரி உருக்கமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் மகேஸ்வரியின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் மகேஸ்வரியின் கணவர் பாண்டியனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.
10 வருட காலமாக 22 வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும் மதுர்சன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று காதலி திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரின் கணவர் மதுர்சன் என பிரசுரித்திருந்தார்.
மேலும் இறுதிச்சடங்கில் காதலியின் உடலத்திற்கு தாலி கட்டி தனது மனைவியாக்கியிருந்தார். இவர்களின் காதல் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருந்தது.
இந்தியாவில் மாணவர் ஒருவர் இரவில் தேனீர் விற்பனை செய்து, பகலில் கல்வியைத் தொடர்ந்து இரண்டிலும் வெற்றிக்கொடி கட்டியுள்ளார். இரவில் தேனீர் வியாபாரத்தில் உழைக்கும் பணத்தை தனது கல்விச் செலவிற்காக குறித்த இளைஞர் செலவிடுகின்றார்.
இந்த மாணவனின் அர்ப்பணிப்புடனான உழைப்பினை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர், அந்த விடயத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி தற்பொழுது வைரலாகியுள்ளது.
அஜய் என்ற மாணவனின் உழைப்பினை வியந்து பாராட்டி கோவிந்த் குர்ஜர் என்ற ஊடகவியலாளர் கணொளியை வெளியிட்டுள்ளார். பகலில் கல்வியைத் தொடரும் அஜய், இரவில் சைக்கிளில் சென்று தேனீர் விற்பனை செய்கின்றார்.
இதன் மூலம் ஈட்டப்படும் பணத்தைக் கொண்டு உணவு, தங்குமிடம் மற்றும் வகுப்பு கட்டண செலவுகளை அஜய் ஈடு செய்து கொள்கின்றார். இந்த மாணவனின் செயற்பாடு குறித்து இணையத்தில் வெளியான காணொளியை பார்வையிட்ட பலரும் அவரை பாராட்டி மகிழ்வதடுன் அவரை ஊக்கப்படுத்தும் வகையிலான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் உத்கிரைச் சேர்ந்தவர் மோகன். சக்ரா நகர் தண்டாவைச் சேர்ந்தவர் அருணா. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகனும், அர்னெல்லா என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே த.கராறு ஏ.ற்பட்டதால் அருணா கோ.பித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் வ.ற்புறுத்தியதையடுத்து, பிறந்த இடத்தை விட்டு கணவர் வீட்டுக்கு வந்த அருணா, செல்லும் வழியில் இரண்டு கு.ழ.ந்தைகளையும் ஆ.ற்றில் தூ.க்.கி வீ.சியுள்ளார். ஆ.ற்றில் கு.ழந்தைகள் கி.டப்பதை பா.ர்த்த அ.க்கம் ப.க்கத்தினர் அ.வர்களை மீ.ட்.டு ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ன்றனர்.
ஆனால், அவர்கள் ப.ரிசோதித்த ம.ருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அருணாவிடம் வி.சாரணை மேற்கொண்ட போது, ஆட்டோவில் வரும்போது டி.ரைவர் த.ன்.னை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய மு.யன்று கு.ழந்.தை.க.ளை ஆ.ற்.றில் வீ.சிவிட்டு ஓ.டிவிட்டதாக அருணா கூ.றியுள்ளார்.
ஆனால் அ.ங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போ.லீசார் அப்பகுதியில் ஆட்டோ ஏதும் வராததால் ச.ந்தேகம் அ.டைந்து அருணா மீது வழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டதில் அவரே க.ணவர் மீ.துள்ள கோ.பத்தில் கு.ழ.ந்தைகளை ஆ.ற்றில் வீ.சி கொ.ன்.ற.து தெ.ரி.யவந்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய தம்பதி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49).
இவரது மனைவி ஹரிதா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயணா தனது மனைவி ஹரிதா 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
நாராயணாவுடன் சேர்த்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்திருந்தது. அப்போது குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயணா, ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் ஆகிய 3 பேரும் உறைந்த ஆற்றின் மேல் நடந்து சென்றுள்ளனர்.
புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 பேரும் உறைந்த ஆற்றின் மீது நடந்த போது திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர்.
பின்னர் தண்ணீரில் மூழ்கி உறைந்த பனியால் உடனடியாக உயிரிழந்தனர். பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று உடல்களும் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமண தம்பதியர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஏஎம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்க முனியசாமி. 26 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தங்க முனியசாமியும் துவரந்தை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி எனும் இளம் பெண்ணும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தங்க முனியசாமி மற்றும் சீதாலட்சுமி வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர்.
இதனிடையே இருவருக்குமிடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று இந்த தம்பதி குடியிருந்த வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் தம்பதியின் வீட்டு கதவை தட்ட, எவ்வித பதிலும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போதுதான், தங்க முனியசாமி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி தங்களது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து தருவை குளம் பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி சப்- கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமண தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் நேற்றைய தினம் (29.12.2022) இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய பேசாலை காவல் நிலைய வாகன சாரதியை மன்னார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பேசாலை காவல் நிலைய வாகன சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த காவல்துறை டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உந்துருளியும் மோதி விபத்துக்கு உள்ளாகின.
குறித்த விபத்தின் போது உந்துருளியில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு நோயாளர் காவு வாகனம் மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30.12.2022) இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்ச குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம்,
நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்நுறுத் தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுதின்றோம்.
நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம்.
அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.