நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள் : பொலிஸார் மீது இளம்பெண் குற்றச்சாட்டு!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்ததை தொடர்ந்து, காவல் துறை அதிகாரி மீது அந்த இளம்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விமான நிலைய உணவகம் ஒன்றில் 28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமி என்ற இளம் பெண் உணவு சாப்பிட்டு விட்டு, அதற்கான பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தப்பி ஓடிய பெண்ணை கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது அந்த இளம் பெண் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்றில் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். இறுதியில் ஹெந்த் புஸ்தாமி-யை சுற்றி வளைத்த பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர், ஆனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத புஸ்தாமி பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ஒரு வழியாக புஸ்தாமியை கைது செய்த பொலிஸார், கைது நடவடிக்கையின் போது புஸ்தாமி பொலிஸாரிடம் சண்டை போட்டதாகவும், தன்னை கைது செய்த காவல்துறையினர் மீது எச்சில் துப்புவேன் என்று மிரட்டியதாகவும் வழக்கில் பதிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த புஸ்தாமி, “என்னை விட அழகான பெண்களை பொலிஸார் இதுவரை பார்த்தது இல்லை என்பதால், அவர்கள் என்னை கைது செய்து துன்புறுத்தினார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரம் காவல்துறையினர் மோசமான பா.லியல் குணம் படைத்தவர்கள் என்றும், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமியிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட போது லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் அவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

யாழில் பச்சிளம் குழந்தையை நாய்கள் உண்ட கொடூரம் : பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் சிசுவின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக கிடந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸாருக்கு திங்கட்கிழமை(02.01.2023) மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் , 34 வயதான பெண்ணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணிபொலிஸார் பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குழந்தையை பிரசவித்த பெண்ணுக்கு திருமணமாகி, கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வசிக்கிறார். அத்துடன் அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில் தவறான தொடர்பின் மூலம் தற்போது குழந்தை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டு தினமான 1ஆம் திகதி குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்ததாக குறித்த பெண் பொலிசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து பருத்தித்துறை நீதிவான் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தை பிரசவித்த பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு!!

எரிபொருள் விலை குறைப்பு..

இன்று (02.01.2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி சடலமாக மீட்பு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

கோவையில்..

கோவை ஈஷா மையத்தில் இருந்து தலைதெறிக்க சாலையில் விறுவிறுவென ஓடிச் சென்ற பெண், அதன் பின்னர் காணாமல் போன நிலையில், 20 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக சென்றிருக்கிறார் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி சுபஸ்ரீ (34). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஒருவார யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11-ம் தேதி காலை 6 மணிக்கு சென்றுள்ளார். பயிற்சி முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18-ம் தேதி அவரை அழைத்துச்செல்ல அவரது கணவர் பழனிக்குமார் காலை 7 மணிக்குச் சென்றுள்ளார்.

11 மணியாகியும் அவர் வராததால், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பழனிக்குமார் ஆய்வு செய்த போது, சுபஶ்ரீ காலை 9.30 மணிக்கு மற்றொருவாசல் வழியாக வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறி சென்றது பதிவாகி இருந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கேயும் அவர் வரவில்லை. அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் சுபஸ்ரீயை கண்டுபிடித்து தரவேண்டும் என்று 20-ம் தேதி ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரி

டிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்துள்ள நிலையில், அதே செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் தகவல் கிடைத்தது.

அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. இதன் பிண்ணனி என்ன என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு உலகில் நடக்கவிருக்கும் அபாயங்கள்.. தீர்க்கதரிசி பாபா வாங்காவின் எச்சரிக்கை!!

பாபா வாங்கா..

ஒவ்வொரு வருடமும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய பல ஞானிகளின் கணிப்புகள் சிலது உண்மையாக நடந்திருக்கிறது. இவர்களின் கணிப்புக்களை பார்த்து சிலர் ஏளனம் செய்வார்கள். ஆனால் தக்க சமயத்தில் இது உண்மையாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அப்படியான ஞானிகளின் ஒருவர் தான் பாபா வாங்கா. இவர் ஒரு தீர்க்கதரசிதன வித்தவான் என்றே கூற வேண்டும் அந்நதளவு எதிர்காலத்தை நுனுக்கமாக கணிக்கக்கூடியவர். அந்தவகையில் இவர் நாம் காலடி எடுத்து வைத்திருக்கும் புத்தாண்டில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

1.சூரியப்புயல்

இந்த புயல் இந்த வருடம் பூமியை தாக்குகிறது. இது சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் உருவாகவுள்ளது. மேலும் பூமி சூரியனை விட்டு துரத்தில் இருப்பதால் கடுமையாக குளிர் மற்றும் கடுமையான இருள் சூழவுள்ளது.

2. உயிரியல் போர்

உலகில் மிகப் பெரிய நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக உயிரியல் போரை ஆரம்பிக்கும். இதனால் மில்லியன் கணக்கான உயிர்களை மண்ணில் சாயவுள்ளது. இதனை கேட்ட பல நாடுக்கள் தங்களின் முன் எச்சரிக்கை செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகிறது.

3. செயற்கை முறையிலான குழந்தை உருவாக்கம்

மனித இனத்தின் அடையாளமாக ஈரக்கும் குழந்தை பெறுதல் வீதம் குறைவாக இருக்கும் என இவர் கூறியுள்ளார். நாம் விருப்பத்தின்படி வாங்கோவின் கணிப்பின் பிரகாரம் குழந்தைகள் வடிவமைக்கப்பட்டு பூமியில் உருவாக்கப்படவுள்ளனர்.

இந்த செயன்முறை தற்போது பிரபல நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வாங்காவின் கணிப்புக்களையும் 2023 ஆம் எதிர் கொள்ளப்போகும் அபாயங்கள் பற்றி கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் வீடு உடைத்து திருட்டு!! 

வைரவப்புளியங்குளம் பகுதியில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01.01.2022) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீடான வைரவப்புளியங்குளம் வீட்டில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனிப்பட்ட தேவையின் நிமித்தம் வீட்டிலுள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்த சமயத்தில் நேற்றிரவு வீட்டின் பின்பக்கமாக சென்ற திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து பணம் மற்றும் நகை ஆகியவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டினை திறந்து போது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையடுத்து வீட்டின் உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த திருட்டுச் சம்பவத்தின் போது 6 1/2 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசையாக புத்தாண்டு கொண்டாட வந்த இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்த மகேஷா என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட எண்ணியுள்ளார்.

அதன்படி இவரும் இவரது நன்பர்கள் உட்பட 7 பேர் நேற்று புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கோட்டக் குப்பம் பகுதி அருகே தனியார் விடுதி எடுத்து தங்கி கொண்டாட்டத்தை தொடங்கினர்.

எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்து மகிழ்ந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக எழும்பிய ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது. இதனை கண்ட அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சலிட்டு சுத்தம் போட்டனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மகேஷாவை மீட்க முயன்றனர். அதோடு அவரை கடலில் சென்று தேடினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது நண்பர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்த நிலீயல் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொலை செய்வது எப்படி” கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன்!!

உத்தரப் பிரதேசதில்..

“கொலை செய்வது எப்படி” என்று கூகுளில் தேடிய பிறகு, தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி சோனியாவிடம் யாரோ வழிப்பறி செய்வதாக கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாஸைக் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விகாஸின் செல்போனைத் சோதனையிட்டதில், “கொலை செய்வது எப்படி” என்பது உள்ளிட்ட பல கிரிமினல் தனமான இணையத் தேடல்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவர் ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷத்தை வாங்க முயன்றதும் மற்றும் துப்பாக்கியை எங்கிருந்து வாங்கலாம் என்று கூகிளில் தேடியதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.

திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாஸின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக்க கூறப்படுகிறது. இறுதியில் அவர் வெள்ளிக்கிழமை சோனியாவை திட்டமிட்டு கொல்ல செய்துள்ளார்.

விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது காதலியையும் விரைவில் கைது செய்வோம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை வெளிப்படுத்திய பொலிஸ் குழுவினருக்கு ₹25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2½ வயது குழந்தைக்கு இளைஞனால் நடந்த விபரீதம் : கதறும் தாய்!!

ராசிபுரத்தில்..

ராசிபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 2½ வயது ஆண் குழந்தையை இளைஞர் ஒருவர், மிதித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24).

இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கபில்வாசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி ராஜாமணி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் குழந்தை தருண் தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபில்வாசனின் உறவினரான வாலிபர் ஒருவர் இரவு அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் ராஜாமணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.

இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருணை தூக்கி வாலிபர் கையால் அடித்தும் காலால் உதைத்தும் நெஞ்சில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராஜாமணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு குழந்தையை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர்களும் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தை தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல்(23) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாலிபர்தான் குழந்தையை அடித்துக்கொன்றாரா? குழந்தையை கொல்ல காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

300 வருடங்களாக வற்றாத தண்ணீர் : காலணி அணியாமல் தண்ணீர் எடுக்கும் மக்கள் : வியக்க வைக்கும் அதிசய கிணறு!!

கேரளாவில்..

அவ்வப்போது நம்மை சுற்றி உள்ள ஆச்சரியத்தை உண்டு பண்ணும் இடங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி ஒரு இடத்தை பற்றி நாம் கேட்கும் போது நிச்சயம் ஒருவித பிரம்மிப்பை தான் நமக்குள் கடத்தி செல்லும். அந்த வகையில், ஒரு பழமை வாய்ந்த இடம் குறித்த செய்தி தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்துள்ளது பாக்கம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் அதிசய கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்ட சமயத்தில் கூட இந்த கிணறு கொஞ்சம் கூட நீர் வற்றாமல் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்றியதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த வற்றாத கிணற்றின் பெயர் பாக்கம் திருமுகம் கேணி என தெரிகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிணறு இருக்கும் பகுதி அருகே குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இந்த கிணறு மாறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

ஒரு சமயத்தில் இந்த ஊரில் திருமணம் செய்து வரும் பெண்கள், இந்த கிணற்றில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, கிணற்றில் நீர் எடுக்க சொல்லும் அப்பகுதி மக்கள் இதனை தெய்வீக சக்தி வாய்ந்ததாக பார்க்கின்றனர். இதற்கு உதாரணம் இந்த கிணற்றிற்கு அருகே தண்ணீர் எடுக்கச் செல்லும் நபர்கள், செருப்பை கழற்றி வைத்து விட்டு கிணறு அருகே செல்வது தான்.

எத்தனை முறை தண்ணீர் எடுத்துக் கொண்டே இருந்தாலும் அந்த கிணற்றில் நீர் வற்றாமல் அதே நிலையில் இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை நீர் நிச்சயம் வற்றவே கூடாது என ஒரு சில சடங்கு முறைகளையும் அப்பகுதி மக்கள் இந்த கிணற்றிற்கு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வறட்சிகள் பல கடந்த போதிலும் அந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தெய்வீக உணர்வுடன் கூடிய பழமையான கிணறாக விளங்குவதால் இது தொடர்பான செய்தியை பலரும் வியப்புடன் கவனித்து வருகின்றனர்.

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி… ஃபேஸ்புக் நேரலையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

அசாமில்..

திருமணம் செய்து கொள்ள காதலி மறுப்பு தெரிவித்த காரணத்தால் இளைஞர் ஃபேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ளது கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ள நகரம் சில்ஷர். இந்த நகரத்தில் வசித்து வந்தவர் ஜெய்தீப்ராய். மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு 27 வயதாகிறது.

இவரது குடும்பத்தினர் கலைன் பகுதியில் வசித்து வருகின்றனர். ஜெய்தீப்ராய் வாடகைக்கு அறை எடுத்து சில்ஷரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததுள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஜெய்தீப் ராய் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரபரப்புக்கு வந்துள்ளார். அப்போது, தனது நேரலையில் பார்த்துக் கொண்டவர்களிடம், “ நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன்.

ஆனால், அந்த பெண் அனைவருக்கும் முன்பாக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அவரது மாமா என்னிடம் வந்து காதலை கைவிடாவிட்டால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார். என்னால் அந்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வர வேண்டாம். நான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.

அம்மா. மாமா, அத்தை. அக்கா, அண்ணா உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால், என் காதலியை நான் அதிகம் நேசிக்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது.” என்று கூறிவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் நிகழ்ந்த உடனே இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ஜெய்தீப் ராய் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் அண்ணன் ரூபம் கூறியதாவது, “என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் நாங்கள் புகார் அளிக்காமல் இருந்தோம். அந்த பெண்ணின் குடும்பத்தால் எனது தம்பிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனது தம்பிதான் எங்களது குடும்பத்தை கவனித்து வந்தான். எனது தம்பி நன்றாகவே சம்பாதித்து வந்தான். அதனால், அந்த பெண் குடும்பத்தினர் ஏன் எனது தம்பியை ஏற்கவில்லை என்றும் புரியவில்லை” என்றார்.

காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தால் காதலன் ஃபேஸ்புக்கில் நேரலையில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12,500 பவுண்டுகள் செலவு செய்து நாயாக மாறிய மனிதர் : அவருக்கு ஒரே ஒரு கவலை தானாம்!!

ஜப்பானில்..

டோக்கோ (Toco) என்னும் அந்த ஜப்பானியருக்கு சிறுவயதிலிருந்தே நாயாக மாறவேண்டும் என்று ஆசையாம். ஆகவே, 12,500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போல் தோற்றமளிப்பதற்காக சிறப்பு உடை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் டோக்கோ.

டோக்கோ நாய் போல் செய்யும் சேட்டைகளை எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட, அவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள். ஆனால், டோக்கோவுக்கு ஒரே ஒரு கவலை. தான் நாய் போல இன்னொரு வாழ்க்கை வாழ்வதை அறிந்தால் தன் நண்பர்கள் தன்னை மோசமாக நினைப்பார்களே என்பதுதான் அந்தக் கவலை.

தான் ஒரு விலங்காக மாறிவிட்டதை அறிந்த குடும்ப உறுப்பினர்களும், சில நண்பர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டதாக தெரிவிக்கும் டோக்கோ, ஆகவேதான் தான் நாய் போல் வாழ்வதைக் குறித்து அதிகம் மற்றவர்களிடம் கூறுவதில்லை என்கிறார்.

வவுனியா நகர மத்தியில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு சிலை!!

கட்சித் தலைவர்களுக்கு சிலை..

வவுனியா நகர மத்தியில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இரவோடு இரவாக அமைக்கப்பட்ட குறித்த கட்டுமானப்பணி தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம் கேட்டபோது,

ஈ பி ஆர் எல் எப் கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு சிலை வைப்பதற்காக குறித்த இடத்தில் கட்டுமானமொன்று அமைக்கப்படுவதாக தெரிவித்ததுடன்,

அதற்கான அனுமதி வட மாகாண ஆளுனரிடம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேவேளை அவ்விடத்தில் செல்வாவின் சிலை அனுமதி பெறப்பட்டா கட்டப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

இதைவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது, பத்மநாபாவின் சிலை குறித்த இடத்தில் வைக்கப்படவுள்ளது தெரிவித்ததுடன் அதற்கான நகரசபை அனுமதி 5 மாதங்களுக்கு முன்பே பெறப்பட்டதாகவும்,

வட மாகாண ஆளுனர் உள்ளுராட்சி மன்ற அனுமதி மாத்திரம் போதுமானது என தெரிவித்ததாகவும் கூறினார். எனினும் இவ்விடயம் தொடர்பாக பல நகரசபை உறுப்பினர்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளனர்.

வவுனியாவில் அரச ஊழியர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றனர்!!

அரச ஊழியர்கள்..

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2023 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2023) காலை 9 மணிக்கு,

மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர். தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், இராணுவ தளபதி , கடற்படை தளபதி, அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மதுபோதையில் ரவுடிக்குழு அட்டகாசம் : வர்த்தக நிலையத்திற்குள் பட்டாசு கொழுத்தியதால் பரபரப்பு!!

ஹொரவப்பொத்தானை வீதியில்..

வவுனியாவில் புதுவருட கொண்டாட்டங்கள்  இடம்பெற்று வரும் நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்த மதுபோதையில் இருந்த இளைஞர்களை உள்ளடக்கிய ரவுடிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை வர்த்தக நிலையத்தினுள் வெடிக்கச் செய்துள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர் வாடிக்கையாளர்கள் நிற்பதால் எதனையும் செய்துவிடாதீர்கள் என கும்பிட்ட போதிலும், அவர்கள் பட்டாசுகளை கொழுத்தியதால் மக்கள் நாலா திசைக்கும் பதறி ஓடியுள்ளனர். பட்டாசு வெடித்தமையால் கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முன் பகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா ஒமந்தை அரச குடியிருப்பு பகுதியில் சிரமதானப் பணி முன்னெடுப்பு!!

சிரமதானப் பணி..

வவுனியா ஒமந்தை அரச குடியிருப்பு பகுதியில் வீதி விபத்தினை குறைக்கும் நோக்குடன் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஓமந்தை அரச குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கினை சூழவுள்ள பற்றைகளினால் வீதி தெளிவின்மையினால் வீதி விபத்துக்கள் எற்படுவதினை தடுக்கும் நோக்கில்,

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் ஓமந்தை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

ஜெ.சி.பி வாகனத்தின் உதவியுடன் பற்றைகள் அகற்றப்பட்டதுடன் குப்பைகளும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டன. இச் செயற்பாடு அப்பகுதி மக்களிடம் பாரிய வரவேற்பினை பெற்றிருந்ததுடன் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.