கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு நடந்த பயங்கரம் : காதலனின் வெறிச்செயல்!!

கர்நாடகாவில்..

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் என்று இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனி அதை கதைகளில் மட்டுமே காணமுடியும் . இப்போதெல்லாம் சொல்பேச்சு கேட்கலன்னா அவளை வெட்டு, குத்து ,ரயிலில் தள்ளி கொலை செய், விஷம் வைச்சிடு, வெட்டி கூறு போட்டு நாய்க்கு போடு என பயங்கரமாக மாறி வருகிறது.

அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா முல்பாகல் காஜிபுரா கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது லயசிதா . இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் , கல்லூரிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார்.

நேற்று காலையில் அவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்த லயசிதாவை பார்க்க வேறு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வரும் பவன் கல்யாண், பார்க்க வந்திருந்தார்.

இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த பவன் கல்யாண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லயசிதாவை பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

அதே கத்தியால் பவன் கல்யாணும் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். கல்லூரியில் இருந்த சகமாணவர்கள், ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லயசிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பவன் கல்யாணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். காதல் விவகாரத்தில் லயசிதாவை கொலை செய்து விட்டு, பவன் கல்யாண் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 பேரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பவன் கல்யாண் நிருபதுங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விடுத்த செய்திக்குறிப்பில் பவன் கல்யாண் எங்கள் கல்லூரியில் படித்தாலும் முதலாம் ஆண்டு என்பதால் அவரை பற்றிய மற்ற தகவல்கள் தெரியவில்லை.

இதில் லயசிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அந்த கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணும், லயசிதா இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறுகின்றனர். லயசிதாவின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் 2 சகோதரிகள் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கரைய வைத்தது.

வவுனியாவில் சிறைச்சாலை கைதி மரணம்!!

சிறைச்சாலை கைதி..

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் இன்று மாலை மரணமடைந்துள்ளார். இவ் விடயம் பற்றி அறியவருவதாவது,

முல்லைத்தீவில் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ரயோக குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த மாவில்வத்தை கண்டியை சேர்ந்த 62 வயதுடைய இ.சேகர் என்ற நபர் இன்று (04.01.2023) பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததன் பின்னர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.

கனடாவில் தமிழ் தம்பதிக்கு புத்தாண்டில் கிடைத்த பெரும் மகிழ்ச்சி!!

கனடாவில்..

கனடா நாட்டின் ரொறன்ரோவில் உள்ள புகழ்பெற்ற North York பொது வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தையை வரவேற்றுள்ளது. அதன்படி தமிழரான மதியழகன் மற்றும் அவர் மனைவிக்கு, சஞ்சித் என்ற குழந்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு ரொறன்ரோவில் பிறந்ததுள்ள நிலையில், அக்குழந்தையே 2023 இல் பிரசவிக்கப்படும் நகரத்தின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும்.

North York பொது வைத்தியசாலையில் தமிழரான மதியழகன் மற்றும் அவர் மனைவிக்கு தான் சஞ்சித் பிறந்துள்ளான். North York பொது மருத்துவமனை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட செய்தி வெளியீட்டில் மதியழகன் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

2023 விடிந்ததும், கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் உள்ள மருத்துவமனைகள் புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்றன. மிசிசாகாவின் கிரெடிட் வேலி மருத்துவமனையில், நகரின் முதல் குழந்தை – ஒரு சிறுமி – நள்ளிரவில் மணிகள் ஒலித்த 38 வினாடிகளுக்குப் பிறகு பிறந்தது.

“புத்தாண்டு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் தொடங்குவதற்கு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்!” நகரில் மருத்துவமனைகளை நடத்தும் டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

டொராண்டோவில் உள்ள நார்த் யார்க் பொது மருத்துவமனையில், குழந்தை சஞ்சித் சில நொடிகள் கழித்து 12:01 மணிக்கு பிறந்தது, இது மருத்துவமனையின் புத்தாண்டின் முதல் பிறப்பு ஆகும்.

Mackenzie Health’s Cortellucci Vaughan மருத்துவமனை தனது புத்தாண்டின் முதல் குழந்தையை அதிகாலை 1:53 மணிக்கு வரவேற்றது. குழந்தை ஆறு பவுண்டுகள் மற்றும் 15 அவுன்ஸ் எடை கொண்டது மற்றும் பிராம்ப்டனில் இருந்து பெற்றோர்களான சாரா மற்றும் எஸ்மத்துல்லா ஆகியோருக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையாகும்.

கிழக்கில், ஸ்காபரோ ஹெல்த் நெட்வொர்க்கின் பொது மருத்துவமனை புத்தாண்டு தினத்தன்று 12:15 மணிக்கு முதல் பிறப்பைக் கண்டது. ஒரு ட்வீட்டில், மருத்துவமனை தனது முதல் குழந்தை பெண் என்று கூறியது.

டர்ஹாம் பிராந்தியத்தில், முதல் குழந்தை – அந்தோனி பவல் – அஜாக்ஸ் பிக்கரிங் மருத்துவமனையில் அதிகாலை 2:46 மணிக்கு நான்கு பவுண்டுகள் மற்றும் ஆறு அவுன்ஸ் எடையுடன் பிறந்தது. இந்நிலையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளுக்கு கனேடிய மருத்துவமனைகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளன.

யாழில் அரசாங்க உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த துயரம்!!

யாழில்..

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேம்படி உடுத்துறையை பிறப்பிடமாகவும் கொடுக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட லதன் என்று அழைக்கப்படும் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்,

சம்பவத்தில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஆழியவளையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசிரியையான தனது மனைவியை வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்தபோது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர்.

ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04.01.2023) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாத்தளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதியில் சென்ற கார் மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோவிலுக்கு சமீபமாக வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதியது.

இதன் போது முச்சக்கரவண்டியில் அமர்ந்திருந்த மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த சிங்காரவேல் சண்முகதாசன் வயது 58 என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து ஏற்படுத்திய காரின் சாரதி, சேதமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

23 வயது இலங்கைப் பெண்ணுக்கு சென்னையில் நடந்த விபரீதம்!!

ஷோபனா..

சென்னையில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

அவர்களது மகள் ஷோபனா (23) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் சகோதரான ஹரீஸ் தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது.

இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்துள்ளார். அப்போது , பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

திருமண பத்திரிக்கையுடன் வீடு திரும்பிய இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

பொலிஸ் அதிகாரி..

கட்டுவன – ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும்,மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் தந்தை மற்றும் மகன் சிகிச்சைக்காக கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழந்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மகன் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வெகண்டாவல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தையும், 28 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்த மகன் டிக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியாவார்.

திருமண சுபகாரியங்களை வழங்கிவிட்டு மணமகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதேவேளை, மகனின் 28வது பிறந்தநாளும் அன்றைய தினம் என மேலும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா உக்குளாங்குளத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரும் அடையாளம் : தொற்றாளர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

டெங்கு..

வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் ஏற்கனவே கடந்த மாதம் 7 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டனர். மேலும் ஒருவர் இம்மாதம் முதலாம் வாரத்திலேயே டெங்கு நோயாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 3 பேர் உக்குளாங்குளம் கிராமத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இதுவரை குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்று சுகாதார பரிசோதகர்கள் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என்பது தொடர்பில் அவதானிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!!

துப்பாக்கியுடன்..

வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை பகுதியில் நேற்று இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (03.01.2023) காலை 10 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடையவர் இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 9486 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித் தொகை வைப்பு!!

ஒரு ஹெக்ரெயருக்கு உட்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யும் 9486 விவசாயிகளுக்கு உதவித் தொகை வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் இன்று (03.01) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 2022ஃ23 பெரும்போகத்தில் 21,864 விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 23 ஆயிரத்து 369 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக விவசாயிகளுக்கான உதவித் தொகையாக ஒரு ஹெக்ரெயருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட இருக்கின்றது. இதன்படி 9486 விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை திங்கள் கிழமை முதல் வங்கியில் வைப்பு செய்யப்படுகிறது.

அடுத்த கட்டமாக ஒரு ஹெக்ரெயருக்கு மேல் விவசாயம் செய்த விவசாயிக்கு உதவித்தொகை வழங்கடும். இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அவை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

வவுனியா ஊடான வடக்கிற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் நாளைமுதல் இடை நிறுத்தம்!!

புகையிரத சேவைகள்..

கொழும்புக்கும் யாழ்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவை (ஜன 05) முதல் எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. பயணிகள் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மேலதிகமாக 33 அரச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

புகையிரத பாதை மீள்புனரைமைப்பின் முதல் கட்டமாக ஐந்து மாத காலத்திற்கு கொழும்புக்கும்,யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது. அதேவேளை புகையிரத சேவையாளர்கள் 500 பேர் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதால் புகையிரத சேவை தற்போது ஆளணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அண்ணிக்கு கல்லூரி மாணவனால் நடந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருவள்ளூரில்..

அதிக சத்தமாக பட்டாசு வெடிக்காதீர்கள் என்று கூறியதால் 20 வயது இளைஞர் ஒருவர், ஒரு குடும்பத்தையே இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சக்திவேல். இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன் 20 வயதான விஷால், தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துவருகின்றார்.

விஷால் புத்தாண்டு அன்று இரவு தனது தெருவில் நண்பர்களுடன் கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் மதுபோதையில் இளைஞர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விஷாலின் பெரியப்பா மகன் முருகன் மற்றும் அவரது மனைவி ரம்யா மற்றும் பெரியம்மா செல்வி ஆகியோர் விஷாலை கண்டித்துள்ளனர். ஏற்கனவே இருகுடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் மது போதையின் உச்சத்தில் இருந்த விஷால் தட்டிக்கேட்டவர்களிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மது போதை வெறியில் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முருகன், ரம்யா மற்றும் தனது பெரியம்மா செல்வி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் விஷால். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலையே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஷால் உடனே அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் முருகனும் செல்வியும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கதினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைபற்றி தப்பியோடிய விஷாலை தேடிவருகின்றனர்

மனைவிக்கு பங்களா, காதலிக்குப் பண்ணை வீடு… ஜோடியாக சிக்கிய பரிதாபம்!!

திருநெல்வேலியில்..

கொள்ளையடித்த பணத்தில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் சொந்தமாகக் கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். அங்கு ஒரு பண்ணை வீடு கட்டி காதலியான நூர்ஜகானைத் தங்கவைத்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள புதூரில் கடந்த ஜனவரி மாதம் புதிதாகக் கட்டப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட புனித லூசியாள் தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்ததுடன் மாதா சிலையில் அணிவித்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றிருக்கிறார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தேவாலயங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் நபரைப் பிடிக்க எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த தேவாலயங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது பர்தா அணிந்த பெண்ணும், ஹெல்மெட் அணிந்த ஆணும் தேவாலயத்துக்குள் சென்று உண்டியலை உடைத்து பணத்தையும் நகைகளையும் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும், தேவாலய சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிசிடிவி-யில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். பகல் நேரத்தில் பைக்கில் ஹெல்மட் அணிந்த ஆணுடன், பர்தா அணிந்த பெண்ணும் ஜோடியாக தேவாலயங்களை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

கேமராவில் பதிவான பைக்கின் பதிவு எண்ணைவைத்து போலீஸார் ஆய்வுசெய்தபோது அது கருங்கல் அருகேயுள்ள கப்பியறைப் பகுதியை சேர்ந்த ஷாபுமோன் என்பவரின் பெயரில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

ஷாபுமோனை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அவர் தனது பைக்கில் பர்தா அணிந்த ஒரு பெண்ணுடன் குளச்சல் வெட்டுமடைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களை முறைப்படி விசாரித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன.

ஷாபுமோன் எம்.பி.ஏ படித்துவிட்டு, வேலை கிடைக்காததால் தேவாலய உண்டியல்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “ஷாபுமோன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தேவாலயங்களில் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவருக்கும் அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த நூர்ஜகான் என்ற பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் சேர்ந்து பகலில் தேவாலயங்களை நோட்டமிடுவதும், இரவில் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் குளச்சல், புதூர், திங்கள்சந்தை, தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 17 தேவாலயங்களில் உண்டியலை உடைத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாகத் தெரியவந்திருக்கிறது.

ஷாபுமோன், நூர்ஜகான் இருவரும் கைதுசெய்யப்படுள்ளனர். அவர்களிடமிருந்து 50 பவுன் நகைகள், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றனர். ஷாபுமோன் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, கடந்த ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்.

அவருக்கு காவல்கிணறு பகுதியில் தனியாக பங்களா வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். அங்கு ஒரு பண்ணை வீடுகட்டி, காதலியான நூர்ஜகானைத் தங்கவைத்திருக்கிறார்.

நூர்ஜகான் குறித்து மனைவி கேட்டால் அவர் கோழிப்பண்ணையில் வேலைக்கு இருக்கிறார் என ஷாபுமோன் சொல்லியிருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் மனைவி, காதலி நூர்ஜகானுடன் ஜாலியாக வாழ்ந்துவந்தார். இப்போது ஷாபுமோனும், அவரின் காதலி நூர்ஜகானும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லவ் டுடே திரைப்பட பாணியில் மனைவியின் கைபேசியை பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் நஜீனா பர்வீன் பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசில் ஏமாந்த கணவன் புகார் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் முத்துராம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி இருக்கிறார். கமெண்டில் இருவரும் பேசி வந்த நிலையில் ஒருநாள் நஜீனா தானாக சென்று முத்துராமிடம் மெசேஜ் செய்துள்ளார்.

இருவரும் அதன்பின் பேஸ்புக்கில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இவர்கள் நெருக்கமாக பேச பேச ஒருநாள் முத்துராம் நஜீனாவிடம் தனது காதலை சொல்லி இருக்கிறார். நஜீனாவும் யோசிக்காமல்.. உன்னைதான் இவ்வளவு நாள் தேடிகிட்டு இருந்தேன் என்று கூறாமல்.. உடனே காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் அதன்பின் 8 மாதங்கள் பேஸ்புக்கிலேயே காதலித்து உள்ளனர். அவ்வப்போது வீடியோ காலிலும் பேசி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020 வருடம் நஜீனா முத்துராமை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதை முத்துராமிடம் சொல்ல அவரும் வீட்டில் பேசி இருக்கிறார்.

ஆனால் வீட்டில் பேஸ்புக்கில் பார்த்த பெண்ணுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி தர முடியாது என்று கூறி உள்ளனர். அதோடு அந்த பெண் முஸ்லீம். மதம் மாற தயாரா என்றும் கேட்டுள்ளனர்.

ஆனால் சேலத்தை சேர்ந்த நஜீனாவோ.. முத்துராமை..நாம் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம். நான் பல் மருத்துவராக இருக்கிறேன். ராமநாதபுரத்திலேயே ஒரு கிளினிக் தொடங்கி சந்தோசமாக வாழலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து ராமநாதபுரத்திலேயே குடி பெயர்ந்து உள்ளார் முத்துராம்.

ராமநாதபுரத்திற்கு வந்த நஜீனா அங்கேயே முத்துராமை திருமணம் செய்துள்ளார். நஜீனா கொடுத்த அழுத்தத்தால் முத்துராம் மதம் மாறி இஸ்லாம் மதத்தை பின்பற்றி உள்ளார். அதோடு தன்னுடைய பெயரை ஜவஹர் என்றும் மாற்றி உள்ளார். எங்கள் மார்க்கத்தில் வரதட்சணை ஆண்தான் கொடுக்க வேண்டும்.

அதனால் எனக்கு ஹூண்டாய் கார், 40 சவரன் நகை, 3 லட்சம் பணம் என்று கேட்டுள்ளார் நஜீனா. முத்துராமும் இதை எல்லாம் கொடுத்து நஜீனாவை திருமனம் செய்து கொண்டார். 2022ல் இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தனை நாட்கள் இவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்துராம் போன் தண்ணீரில் விழுந்து ஈரமாக, தன்னுடைய மனைவியின் போனை எடுத்து பயன்படுத்தி உள்ளார். நஜீனா போனை பார்த்தவருக்கு அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

லவ் டுடே படம் போல மனைவியின் போனை பார்த்தால் அதில் முழுக்க முழுக்க ஆண்களின் காண்டாக்ட் இருந்துள்ளது. பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பல ஆண்களுடன் ரொமான்டிக் சாட்ஸ் செய்துள்ளார். 50 காண்டாக்ட்ஸ் இப்படி பேஸ்புக்கில் இருந்து வந்த நட்புகள்.

இவர்கள் எல்லோரிடம் வெட் சாட் செய்து.. பல ரொமான்டிக் மெசேஜ் அனுப்பி உள்ளார். பல ஆண்களை திருமணம் செய்ய போவதாவும் உருட்டி உள்ளார். இதில் அவ்வப்போது சேலம் செல்கிறேன் என்று கூறி, இந்த ஆண்களை சென்று பார்த்து அவர்களுடன் போட்டோக்களையும் எடுத்துள்ளார்.

இவர்களுடன் இருக்கும் நெருக்கமான போட்டோஸ் அனைத்தையும் அன்றுதான் முத்துராம் பார்த்துள்ளார். பல ஆண்களுக்கு நஜீனா லவ் யூ மெசேஜ்கள் அனுப்பி உள்ளார். அதில் இருந்த ஐடி கார்டை பார்த்த போதுதான் நஜீனா 28 வயது இல்லை அவர் 33 வயது நிரம்பியவர் என்பதையும் கண்டுபிடித்து உள்ளார்.

அதோடு தன்னிடம் மட்டுமின்றி பல ஆண்களிடம் ஏமாற்றி காசு வாங்கி இருக்கிறார். கூகுள் பேவை பார்த்த போதுதான் அதில் பல ஆண்கள் பணம் அனுப்பி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஆண்களிடம் ஏமாற்றி வாங்கிய காசில் பல் மருத்துவமனை ஒன்றையும் இவர் கட்டி நடத்தி வந்ததை நஜீனா கண்டுபிடித்துள்ளார்.

இதை பற்றி கணவன் முத்துராம் கேட்டதற்கு.. உன்னோடெல்லாம் வாழ முடியாது என்று கூறிவிட்டு நஜீனா சேலத்திற்கு எஸ்கேப் ஆகியுள்ளார். இது தொடர்பாக போலீசில் ஏமாந்த கணவன் புகார் அளித்துள்ளார்.

திருமணத்திற்காக பண உதவி கேட்டு வந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : சுவாரஸ்ய சம்பவம்!!

மதுரையில்..

மதுரையை சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் சித்ரா தேவி. இவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி கேரள மாநிலம் கொச்சி அருகே சென்றதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த தம்பதிக்கு நர்மதா மற்றும் பவித்ரா என இரு மகள்கள் உள்ளனர். இதில் நர்மதாவுக்கு மூன்று வயது இருக்கும் போது அவரது தந்தை பாஸ்கர் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு அதிர்ச்சியும் நர்மதா மற்றும் அவரது சகோதரிக்கு காத்திருந்துள்ளது. அவரது தாயும் மின்சாரம் தாக்கி உயரிழிந்த காரணத்தினால் சிறு வயதிலேயே பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளாக தவித்துள்ளனர்.

இதற்கடுத்து, சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவரும் பெரிதாக வளர்ந்த நிலையில், இதில் பவித்ராவிற்கு கடந்த 4 மாதங்கள் முன்பு திருமணம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மறுபக்கம் நர்மதாவுக்கு தாய் மாமனான கண்ணன் வரன் தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. மேலும் மருமகளின் திருமணத்திற்காக நிதி உதவி திரட்டியும் வந்துள்ள கண்ணன், ஆலுவா பகுதியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் வீட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

அங்கே ரவீந்திரனிடம் தனது மருமகள் நிலை குறித்து எடுத்துக் கூறி நிதி உதவியும் கேட்டுள்ளார் கண்ணன். ஆனால், நிதி உதவி செய்வதற்கு பதிலாக, இளம் பெண் நர்மதாவின் நிலை பற்றியும் சிந்தித்துள்ளார் ரவீந்திரன்.

தனக்கு திருமணமாகாமல் ராகுல் என்ற மகன் இருப்பதால் அவருக்கு நர்மதாவை திருமணம் செய்து வைத்தால் என்ன என்றும் ரவீந்திரன் யோசித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க, மகன் ராகுல் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அதன்படி, புத்தாண்டு தினத்தில் ராகுல் மற்றும் நர்மதா ஆகியோரின் திருமணமும் நடந்து முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மருமகளின் திருமணத்திற்காக நிதி உதவி கேட்ட இடத்தில், அந்த பெண்ணையே சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மருமகளாக ஏற்றுக் கொண்டுள்ள விஷயம் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

யோகா பயிற்சி பெற்று திரும்பிய போது மாயமான பெண் சடலமாக மீட்பு : வெளியான CCTV காணொளி!!

திருப்பூரில்..

புகழ்பெற்ற ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று திரும்பிய போது மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பழனிக்குமார்-சுபஸ்ரீ இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் குழந்தை உள்ளது.

சுபஸ்ரீக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலென்ஸ் என்ற யோகா பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த அவர், 7 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் 18 ஆம் திகதி அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் பழனிகுமார் வந்தபோது சுபஸ்ரீ காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் காலை 9 மணிக்கே மையத்தை விட்டு வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில் செம்மேடு அருகே சுபஸ்ரீ ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை பொலிசார் வழக்குப் பதிவு செய்து சுபஸ்ரீயை தேடி வந்தனர்.

இந்நிலையில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பொலிசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான சுபஸ்ரீயின் சடலம் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சுபஸ்ரீ உயிரிழந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், நுரையீரல் நீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடலில் எந்த வித காயங்களும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சுபஸ்ரீ மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலைய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.