வவுனியாவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு!! 

தங்க நகைகள் திருட்டு..

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு புகுந்து ஐந்தரைப்பவுண் தங்க நகைகள் திருடிச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா திருநாவற்குளம் முதலாம் ஒழுங்கையில் கடந்த 3ஆம் திகதி தனிப்பட்ட விடயமாக வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றவேளையில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் மூன்று பவுண் இரண்டு தங்கச் சங்கிலி, இரண்டரைப்பவுண் காப்பு என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்.

ஒன்பது இலட்சத்தி எழுபத்தையாயிரம் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயது காதலி மற்றும் முன்று லட்சம் பணத்துடன் சிக்கிய 17 வயது இளைஞர்!!

காலி..

முன்று லட்சம் பணத்துடனும் 14 வயது காதலியுடனும் கொத்து ரொட்டி சாப்பிட வந்த 17 இளைஞர் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது இளைஞன் தந்தையிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடி வந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த இளைஞனும் , பதின்மவயது சிறுமியும் பாதுக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், ரோந்து சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொத்து ரொட்டி சாப்பிடும் ஆசையின் காரணமாக குறித்த நபர் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து காலிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் நேற்று மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் காதலியின் செயலால் ஆத்திரமடைத்து காதலன் எடுத்த அதிரடி முடிவு!!

யாழில்..

இளைஞர் ஒருவரை 7 வருடங்களாக காதலித்து பல இலட்சம் ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வேறு திருமணத்திற்கு இளம் பெண் ஒருவர் தயாராதாக தகவல் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆங்காகே ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் புற நகர் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்க்கு அருகாமையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடைய மகள், கடந்த 7 வருடங்களுக்கு மேல் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

பல வருடங்கள் நீடித்த இவர்களின் காதலுக்கு ஒரு கட்டத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறித்த பெண் காதலனை பிரிய மறுத்து தொடர்ந்தும் காதலித்து வந்துள்ளார்.

அப் பெண்ணை நம்பிய அந்த இளைஞர் காதலிக்காக பல இலட்சங்களை செலவும் செய்ததாக கூறப்படுகின்றது. இதன் பின் காதலனை விட அதிக வசதி படைத்த ஒருவரை அப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க வீட்டார் முடிவு செய்தனர்.

இந்நிலையில் பணத்தின் மீது மோகம் கொண்டதாலும், இந்த திருமணம் நடக்காவிட்டால் தான் இறந்து விடப்போவதாக அப்பெண்ணின் தாய் மிரட்டியதாலும்,

அப் பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததுடன் காதலை மறந்து விடுமாறும் காதலனை வற்புறுத்தியுள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் வெகுண்டெழுந்த இளைஞர் இவ்வாறு சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

விழுப்புரத்தில் ..

விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் மதுபோதைக்கு அடிமையாகி கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள பொன்னங்குப்பத்தை சார்ந்த வினோத்குமார் என்ற இளைஞருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மனைவி சூர்யா வினோத்குமாரை பிரிந்து கடந்த ஒருவருடமாக தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவி பிரிந்ததால் மது போதைக்கு அடிமையாகினார். இந்தநிலையில், வினோத்குமார் பொன்னங்குப்பத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்ட அப்பகுதியினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்.

அதில் மனைவி பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயி.. காரணம் என்ன?

மஹாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் ஜாதவ். விவசாயிகளுக்கு ‘கர்மவீர் தாதாசாஹேப் கெய்க்வாட் சப்லிகரன் ஸ்வாபிமான் திட்டத்தின்’ இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததன் பேரில் இவருக்கும் நிலம் வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

இந்த நிலத்தை பெறுவதற்காக விவசாயியான சுனில் ஜாதவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதற்காக பல்வேறு அரசு அதிகாரிகளை தொடர்ந்து அவர் சந்தித்து வந்தாலும், அவரை அதிகாரிகள் தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை அவர் நிலத்துக்காக முயன்ற நிலையிலும் அவருக்கு நிலம் கிடைக்காத நிலையில் சுனில் ஜாதவ் கடும் விரக்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில், நிலத்துக்காக அவர் கையிலெடுத்துள்ள வித்தியாசமான போராட்டம் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி தனது கிராமத்தில் குழி தோண்டிய அவர் அதில் தனது கழுத்து வரை மண்ணுக்குள் புதையுமாறு நின்று,

குழியை மூடி நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளார். இவரின் இந்த போராட்டம் குறித்த செய்தி பரவியதும் போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

எனினும், தனது நிலம் குறித்த பட்டா தனக்கு வந்தால் மட்டுமே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று விவசாயி சுனில் ஜாதவ் உறுதிப்பட கூறியுள்ளார். இந்த போராட்டத்துக்கு அவரின் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

பெற்ற மகளையே திருமணம் செய்த தந்தை? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

சமூக வலைதளங்களில்..

சமூக வலைதளங்களில் வைரலாக்கவும், பாலோயர்களை அதிகப்படுத்தவும் மக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் சில நூதனமான வீடியோக்களும் அடங்கும். அதன்படி இந்த வீடியோவில் முதியவரும், இளம் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதாக அமைந்துள்ளது. டிசம்பர் 17ம் தேதி இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட இதே வீடியோ டிசம்பர் 25ல் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.

இப்படி திருமணம் குறித்த நிறைய வீடியோக்கள் இதில் பதிவிடப்பட்டுள்ளன. இதே பெண் மற்றொரு வீடியோவிலும் இருக்கிறார். இதனால் ஒரு வேளை ஏமாற்று வேலையாக அல்லது அதிக பாலோயர்களை பெறவும் பதிவிடப்பட்டிருக்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

இது வீடியோக்களை வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்களாக இருக்கலாம். மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டிருக்கலாம்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதெல்லாம் ஒரு பொழப்பா? ஏமாத்து வேலை, நல்லா கிளப்பறீங்கப்பா பீதிய.. என பல்வேறு விதமான கருத்துக்கள். இதனால் இதே போல் ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.

என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பரிசு.. 9 வருடம் கழித்து கிடைத்த மனைவி : ஆனந்தக் கண்ணீரில் கணவன்!!

உத்தரபிரதேசத்தில்..

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கேஹர் சிங். இவரது மனைவி பெயர் தர்ஷினி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக கேஹர் சிங் மற்றும் தர்ஷினியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பெயரில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தர்ஷினியை போலீசார் தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனாலும் தர்ஷினி கண்டறியப்படாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் கூட மீண்டும் கிடைப்பார்கள் என நம்பிக்கை இல்லாமலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து கேஹர் சிங் மற்றும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி நிறைந்த தகவல் ஒன்று வந்து சேர்ந்துள்ளது.

அதன்படி கர்நாடக மாநிலம் கொடுகு என்னும் பகுதியில் ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தில் தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அங்கு தான் அவர் கடந்த நான்கு வருடங்களாக இருந்து வந்தது தெரிய வந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவரை குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர்.

இத்தனை வருடங்களாக தர்ஷினி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அவருக்கு தன் சொந்த ஊர் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அந்த ஆதரவு இல்லத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல தற்போது உரிய சிகிச்சைக்கு பின்னர் அவரது குடும்பம் குறித்த விவரம் தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போன தர்ஷினி, 2018 ஆம் ஆண்டில் தான் அந்த இல்லத்திற்கு சென்றிருப்பதாக தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தின் சார்பில் தெளிக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் தர்ஷினியை அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தர்ஷினியின் மனநிலைக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் கொஞ்சம் முன்னேற தொடங்கியதாகவும் அப்போது சொந்த ஊர் பற்றி விவரங்கள் தெரிவித்து அதைப்பற்றி ஹரியானா போலீசாரிடம் பேசி பின்னர் குடும்பத்தினரை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மனைவி கிடைத்தது பற்றி ஆனந்த கண்ணீரில் கலங்கி போன கேஹர் சிங், அந்த தன்னார்வ அமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தது தான் தன் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்ற மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

அப்பாவை நல்லா பார்த்துக்கோ.. செல்போனில் வீடியோ பதிவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெண்ணொருவர் செல்போனில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி செல்வம் (50) – சிவகாமி (45).

இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனாவுக்கு திருணமாகி திருச்செங்கோட்டில் வேறு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கீர்த்தனா தாயார் சிவகாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்காததால் தந்தை செல்வத்திற்கு போன் செய்தார்.

இதையடுத்து செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவகாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்த அவர் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த போது சிவகாமியின் செல்போனில் சுமார் 9 நிமிடம் பேசும் வீடியோ பதிவு இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சிவகாமி நகையை வைத்து பணம் வாங்கியதாகவும், அதற்கு பெரும்பகுதி பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் மீதி பணத்தை கேட்டு அந்த பெண் அடிக்கடி நெருக்கடி கொடுத்ததாக இருந்தது.

மேலும் தனது மகனிடம் அப்பாவை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் வீடியோவில் இருந்தது. இதையடுத்து வீடியோவில் கூறிய பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படித்து கைநிறைய சம்பாதித்த மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியையான தனது மனைவியை வெட்டி கொலை செய்த கணவன், தானாக முன்வந்து போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த தூசூர் ஊராட்சி சம்பா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா – பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். கணவன் ராஜா கூலி வேலை செய்த நிலையில், மனைவி பிரமிளா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் ராஜா, தனது மனைவியை வீட்டிலிருந்த அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற ராஜா, தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், பிரமிளா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் கண் திறக்காத மனைவி.. கழுத்தில் முறிந்திருந்த எலும்பு : நடந்த விபரீதம்!!

சென்னையில்..

குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன், தற்கொலை என நாடக மாறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற பெண்னை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண்குழந்தையும் 7வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி பப்பிதாவின் சகோதரர் மகளுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மணலி தனது தந்தை வீட்டில் சென்று உள்ளார. பின்னர் மறுநாள் புத்தாண்டு அன்று மாலை தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் 31 ஆம் தேதி நண்பர்களுடன் குடிப்பதற்கான காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகில் சென்று குடித்து விட்டு பின்னர் 1தேதி அன்று தனது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தி புத்தாண்டு கொண்டாடி உள்ளார்.

தந்தை வீட்டுக்கு சென்ற பபிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது பபிதா வீடு வீடாக இல்லாமல் இருந்ததை கண்டு, பபிதா கணவரிடம் கோபப்பட்டு சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று பபிதா தற்கொலைக்கு முயற்சி செய்ய முயன்றுள்ளார்.

அதனை சாதகமாக பயன்படுத்தி நீ என்ன சாவுரது என்று மனைவியை புடவையால் கழுத்தை நெரித்து மெத்தை மீது தள்ளி விட்டு போதையில் கணவர் உறங்க சென்றுள்ளார்.

பின்னர் குழந்தைகள் இருவரும் தாயை எழுப்பியும் எழாததால் தந்தையிடம் குழந்தைகள் கூறவே தந்தை மூச்சற்ற நிலையில் இருந்த பபிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனை அடுத்து மனைவி மயக்கம் போட்டு விழுந்ததாக பபிதாவின் உறவினர்களுக்கு நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

பதறி அடித்து ஓடி வந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் போது அவர் இறந்து விட்டதாக தெரிந்தது. மேலும் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் காயங்களும் இருப்பதை கண்டு மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த ஆர்கே நகர் போலிசார் நந்தகுமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பபிதாவுக்கு லோ பிபி இருந்ததாகவும் மயக்கம் போட்டு வீட்டில் இருந்ததால் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து நத்தகுமார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்தனர்.  பின்னர் பிரேத ப‌ரிசோதனை‌யில் பபிதா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் குடித்து விட்டு வீட்டில் இருந்த போது மனைவி என்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று கூறி படுக்கை அறையில் தூக்கிட்டு போவதை பார்த்து அந்த துணியால் கழுத்து நெரித்து பின்னர் மெத்தை மீது தள்ளியதாகவும் தெரிவித்தார். பின்னர் மனைவி கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கொலை வழக்கு பதிவு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியாணி சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்..

உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே கிளிரூரைச் சேர்ந்தவர் ரேஷ்மி (33). கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.

சமீபத்தில், கோட்டயத்தில் உள்ள ‘மலப்புரம் மந்தி’ என்ற ஹோட்டலில் அல்பாம் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு உணவு ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

உடனே அவர் டிசம்பர் 31 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரேஷ்மி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணத்தை அறிய முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த ஹோட்டலில் இருந்து உணவு அருந்திய 15க்கும் மேற்பட்டோர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி விடுதியை மூடினர்.

குப்பை மேட்டில் கிடந்த பெண்ணின் சடலம்…நெஞ்சை உறையவைத்த கொடூர சம்பவம்!!

திருப்பூரில்..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூரில் சாலை ஓரத்தில் இருந்த குப்பை மேட்டில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்குதகவல் வந்தது. இதனையடுத்து அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை மேட்டின் ஓரத்தில் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தெக்கலூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பாகுல் என்பவரின் மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது. சுகன்யாவின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் பாகுல் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பாகுலை விட்டு பிரிந்து சென்றார். இரண்டாவது கணவரை பிரிந்து சென்ற சுகன்யா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக அவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சரவணக்குமார் குடிபோதையில் பாகுலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உனது மனைவி விஷம் குடித்து விட்டால் உனது மனைவியை யாரோ கொன்று விட்டார்கள், அவளின் உடல் தெக்கலூர் பக்கத்தில் ஒரு குப்பை மேட்டில் இருக்கிறது போய் எடுத்துக் கொள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பாகுல் அவிநாசி காவல்துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரவணக்குமாரை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பாலான கருவியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

தென்காசியில்..

குடும்பத் தகராறு காரணமாக தாய் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன். டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரும், மீனா என்பவரும் காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு தியா மூமினா (6) முகிஷா மூமினா (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

முருகனுக்கும் மீனாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய முருகன் மனைவி மீனாவிடம் குழந்தைகளுக்கு ஏன் சாப்பாடு கொடுக்காமல் இருக்கிறாய் என கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தகராறு முற்றியதால் முருகன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் நீண்ட நேரம் கழித்து முருகன் வீட்டிற்கு வந்தபோது மனைவி, குழந்தைகளை காணவில்லை. உடனே அவர் மனைவி, குழந்தைகளை தேடியபோது, அருகில் உள்ள கிணற்றில் தியா மூமினாவின் உடல் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு… மனைவி பற்றி தெரிய வந்த ரகசியம் : கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் அருகே பல்வேறு ஆண்களை காதலிப்பதை போல நடித்து பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்த பெண்ணின் செய்தி வைரலாகி வருகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் செல்போனில் பல ஆண்களின் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன கணவன் முகநூலில் பழகிய காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து ஒரு மாதங்கள் கூட சேர்ந்து வாழாத நிலையில் சொகுசுக்கார், நகை உள்ளிட்ட பல லட்சங்களை இழந்து ஏமார்ந்து நிற்கும் வனச்சரகர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வனச்சரகர் முத்துராம் என்ற ஜவகர், இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வனச்சரக அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் ஏமாந்ததை போல தமிழகத்தில் பல பேர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். முத்துராம் ஏமார்ந்தது எப்படி என்று பார்க்கலாம்.

ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராம் ஒரு இந்து. வனச்சரக அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தபோது முகநூல் மூலமாக சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த நசீனா ஷீபா பர்வீன் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். நசீனா ஷீபாவுக்கு ‘ஹாய்’ மெசேஜை தட்டிவிட்டதும் உடனே நசீனாவிடம் இருந்து ரிப்ளை வந்துள்ளது.

தொடர்ந்து இருவரும் முகநூலில் பழகி வந்துள்ளனர். ரொம்ப நாளாக செல்போனிலே பேசிக்கொண்டிருந்தால் முத்துராமுக்கு நசீனாவை நேரில் பார்க்க ஆசை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இருவரும் பேசி நேரில் சந்திக்க முடிவெடுத்து பின்னர் ஒரு கட்டத்தில் முத்துராம் சின்ன திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று நசீனாவை பார்த்துள்ளார் பின்னர் இருவருக்கும் பிடித்து போக இருவரும் திருமணம் செய்வதென முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், முத்துராமிடம் நசீனா தனக்கு கார் ஒன்று வேண்டும் என கூறியுள்ளார். நசீனா மீது வெறித்தனமாக ஆசை கொண்டிருந்த முத்துராம் உடனடியாக அவர் பெயரிலேயே கடனாக சொகுசுக் கார் ஒன்றை புக் செய்து வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.

பின்னர் காதலிக்காக தன் வீட்டு எதிர்ப்பையும் மீறி இந்து மதத்திலிருந்து காதலியின் மதத்திற்கு முறைப்படி மாறியுள்ளார். மதம் மாறியவுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் சேலத்தில் உள்ள பள்ளிவாசலில் வைத்து இஸ்லாம் முறைப்படி திருமணம் நடந்தேறி இருக்கிறது.

ஒரு மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வனச்சரகர் முத்துராமிற்கு நசீனா மீது சந்தேகங்கள் எழுந்துள்ளது. பிறகு அவருடைய செல்போனிற்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ் வாயிலாக பல ஆண் நண்பர்கள் தொடர்பு கொண்டதை பார்த்திருக்கிறார்.

மேலும், நசீனாவின் செல்போனை ஆராய்ந்தபோது, தன்னை போலவே பல ஆண்களுடன் நசீனா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போனார்.

இதனை அடுத்து இவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு முத்துராம் உடனே அங்கிருந்து பிரிந்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் தான் வழங்கிய ஹுண்டாய் கார் மற்றும் பிசினஸ் செய்வதாக கூறி பத்து லட்சம் கொடுத்ததாகவும்,

37 சவரன் நகையை அவருக்கு இவர் அணிவித்து இருந்ததாகவும் அதை திருப்பித் தருமாறு பலமுறை கூறியுள்ளார், ஆனால் திருப்பிப் தராத நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் அவர் மீது புகார் மனு அளித்து தன்னிடம் ஏமாற்றி பறித்த கார் மற்றும் பணம் நகை உள்ளிட்டவகளை பெற்றுத் தருமாறு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் என்ற பெயரில் வனச்சரகரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணின் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நசீனா இதுபோன்று எத்தனை ஆண்களை ஏமாற்றியுள்ளார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பட்டாசு சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரை விட்ட பள்ளி மாணவன்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தோப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவபெருமாள். இவரது மனைவி செல்வக்குமாரி. இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 10 வயதில் 5ம் வகுப்பு படித்து வரும் அஜய்குமார் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறான்.

அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது.சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவனை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சைக்காக சேர்த்த சிறிது நேரத்திலேயே அஜய்குமார் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை : நாளுக்கு நாள் உயரும் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 671,411. ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 189,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,850 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.