மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்.. உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!!

மேற்குவங்கத்தில்..

மேற்குவங்கத்தில் மனைவியைத் துண்டு துண்டாக வெட்டி உடலை ஆற்றில் வீசிய கணவனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்திற்குட்பட்ட சிலிகுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல்.

இவருக்குக் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் ரேணுகா காத்தூன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதியில் இருந்து ரேணுகா காத்தூனை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கணவர் முகமது அன்சாருல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரேணுகா அழகு நிலைய பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இதனால் அவர் சில ஆண்களுடன் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்த அவரது கணவர் முகமது அன்சாருல் மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி மனைவியை மகாநத்தா நதி கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலைப் பல துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி நதியில் வீசிய சத்தமே இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதையடுத்து நதியில் இறங்கி போலிஸார் பல மணி நேரம் உடலை தேடி பார்த்ததில் சில உடல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.ஆனால் ரேணுகா காத்தூன் தலை கிடைக்கவில்லை.

இதனால் போலிஸார் இன்னும் நிதியில் தேடிவருகின்றனர். டெல்லியில் இளம் பெண் ஒருவர் 25 துண்டாக வெட்டப்பட்ட சம்பவத்தைப் போன்றே தொடர்ந்து இதேமாதிரி கொலைகள் நடந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணமகனின் செயலால் வெறுப்பாகி மணமேடையில் வேறு நபரை மணந்த மணமகள்… மறுநாள் நடந்த ஆச்சரியம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமண நிகழ்வில் ஆர்வம் காட்டாமல் மணிக்கணக்கில் மணமகன் நடனம் ஆடியதால் கோபமடைந்த மணப்பெண் அதே இடத்தில் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மல்காபூர் பங்கரா கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. தகவல்களின்படி, மணமகன் சரியான நேரத்தில் மணமகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

திருமண ஊர்வலம் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் மணப்பெண் வீட்டார் அதிருப்தியில் இருந்தனர். பிறகு வந்த மணமகன் திருமண சடங்குகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் மது போதையில் நண்பர்கள், குடும்பத்தாருடன் மணிக்கணக்கில் ஆட்டம் போட்டபடி இருந்தார்.

பல மணி நேரம் காத்திருந்த பிறகு, மணப்பெண்ணின் தந்தை நடனத்தை நிறுத்திவிட்டு திருமணத்திற்கு வருமாறு கூறியபோது, ​​குடிபோதையில் இருந்த அங்கிருந்த நபர்கள் அவரையும் மணமகளின் குடும்பத்தினரையும் தாக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியதையடுத்து மணமகன் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். அவதூறு ஏற்படாமல் இருக்க, மணப்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி மணமகளின் நண்பரையே சம்மதிக்க வைத்து இருவருக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது. இருப்பினும், வினோதமான நிகழ்வுகளின் தொடர் அங்கு முடிவடையவில்லை.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் அவருக்கும் திருமணத்தை நிச்சயித்து வேறு பெண்ணை அவர் மணந்து கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், இரண்டாவது திருமணத்தின் போது, ​​மணமகன் தரப்பில் இருந்து யாரும் ஒரு சொட்டு மது கூட அருந்தவில்லை.

உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

காஞ்சிபுரத்தில்..

இன்றைய அவசர யுகத்தில் எதற்காகவோ எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். உட்கார்ந்த இடத்திலேயே உடல் உழைப்பு எதுவும் இல்லாமலேயே ஏசிரூமில் வேலை பார்த்து குண்டர்களாகி விடுகிறோம். பின்னர் உடல் எடையை குறைக்க ட்ரட்மில்லை வீட்டில் வாங்கி வைத்து ஓடத்தொடங்குகிறோம்.

இது தான் பலரின் வாழ்க்கை முறையாக உள்ளது. அதிலும் சிலர் வீட்டிற்குள் வீட்டிற்குள் ஓடுவதிலும் சோம்பேறித்தனப்பட்டு மருந்து மாத்திரைகளை உடல் மெலிவதற்காக சாப்பிடுகின்றனர். அத்துடன் அந்த டயட், இந்த டயட் என பலதையும் பின் தொடர்ந்து உடலையும் பாழாக்கி கொள்கின்றனர்.

சில நேரங்களில் இவை மிகப்பெரிய விபரீதங்களில் கொண்டு முடிந்து விடுகிறது. இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 20 வயது இளைஞர் சூரியா. இவர் அதே பகுதிய்ல் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது உடல் சற்று பருமனாக இருப்பதால் சில அசௌகர்யங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நண்பர்களின் கேலி கிண்டல்களாலும் உடனே எடையை குறைத்து விட வேண்டும் என பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதன் ஒரு பகுதியாக சூர்யா உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை நாடினார். அந்நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக அந்த மருந்துகளை சாப்பிட்டு வந்தார்.

இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்து வந்தது. இதனை கண்ட சூரியா மிகுந்த உற்சாகம் அடைந்துவிட்டார். ஆனால் திடீரென ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் இரவு சூர்யாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருந்தை சாப்பிட்ட இளைஞர் சூர்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் : புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு!!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்..

வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தேவை கருதிய திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக சானக விக்கிரமசிங்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சுபத் கலகமகே கொழும்பு நாரம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு (வாகனப் பகுதி) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெற்றிடத்திற்கு குண்டகசாலையில் அமைந்திருந்த பொலிஸ் பயிற்சிப் பிரிவில் பொறுப்பதிகாரியாக செயல்பட்ட சானக விக்கிரமசிங்க வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுப வேளையில் மத ஆசிர்வாதத்துடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது, மதகுருமார், அவரது குடும்பத்தினர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

வவுனியாவில் வட கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் என கோரி போராட்டம்!!

போராட்டம்..

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (06.01.2023) காலை 11 மணியளவில் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வயலுக்கு மேச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவு : சந்தேக நபர் கைது!!

கல்மடு..

பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவடைந்துள்ளது. இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்ற உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முப்பது கிலோ உரம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பசுமாடு கடத்திய இருவர் கைது!!

பசுமாடு கடத்திய இருவர் கைது..

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியிலிருந்து பம்பைமடுவிற்கு பசுமாடு கடத்தி சென்ற இரு சந்தேக நபர்களை ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு இலட்சத்தி பதின்நான்காயிரம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை கடத்தி பம்பைமடுவிற்கு நடாத்திக்கூட்டிக்கொண்டு சென்றபோது அப்பிரதேச மக்களினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது,

அங்கு சென்ற பொலிசார் மறவன்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

அதிக உடல் பருமன்…எடையை குறைக்க முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

காஞ்சிபுரத்தில்..

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (20). இவர் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி, 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதன் காரணத்தால் உறவினர்கள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றன.

இது குறித்து இளைஞர் சூர்யாவின் உறவினர்கள் சிலர் கூறுகையில், உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்டு வந்த சூர்யா உயிரிழந்திருப்பதால் இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்

இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, உறவினர்கள் மற்றும் பெற்றோர் இளைஞர் உயிரிழப்பு காரணம் உடல் பருமன் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்து தான் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் உயிரிழப்புக்கு அது தான் காரணமா என்று சொல்லிவிட முடியாது எனவே இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.

மனைவியின் மரணத்துக்குப் பின் கணவன் வெளியிட்டுள்ள புகைப்படம்.. இந்த புகைப்படத்தில் ஏதாவது அசாதாரணமாக தோன்றுகிறதா?

இந்தியாவில்..

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் வாழும் ஒருவர் தன் மனைவியின் புகைப்படங்கள் மற்றும் தானும் தன் மனைவியும் சேர்ந்து அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது பெயர் Tapas Sandilya (65).

உண்மை என்னவென்றால், அந்த புகைப்படங்களில் இருப்பது சாண்டில்யாவின் மனைவி இந்திராணி அல்ல! ஆம், இந்திராணி 2021ஆம் ஆண்டு, மே மாதம் கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தின்போது உயிரிழந்துவிட்டார்.

இந்திராணி, தான் தன் கணவருக்கு முன் மரணமடைந்துவிட்டால், தனக்கு ஒரு சிலை செய்யவேண்டும் என்று சாண்டில்யாவிடம் கூறுவாராம். அதேபோல, மனைவி இறந்ததும்,

அப்படியே தத்ரூபமாக தன் மனைவியைப் போலவே காணப்படும் ஒரு சிலையை செய்து தன் வீட்டில் வைத்திருக்கிறார் சாண்டில்யா. இந்திராணிக்கு பிடித்த நகைகள் மற்றும் புடவையுடன் காணப்படும் அந்த சிலையைப் பார்த்தால், அதை சிலை என்றே கூறமுடியவில்லை.

சாண்டில்யா அந்த சிலையுடன் இருக்கும் புகைப்படங்கள்தான் இங்கு வெளியாகியுள்ளன. Subimal Das எனும் சிற்பி வடிவமைத்த, அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் அந்த சிலையை வடிவமைக்க ஆறு மாதங்கள் பிடித்ததாம்.

இலங்கையில் தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 674,813 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 190,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றையதினம் 174,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளுராட்சி வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தி..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 இல் வவுனியா மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி சபைகளைப் பிரநிதித்துவப்படுத்தி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள், பெண்கள் உள்ளடங்கலான வேட்பாளர்களை,

இன்றைய தினம் (06.01.2023) வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் சந்தித்தனர்.

விஜயத்தின் ஆரம்பத்தில் கண்டி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதி தக்சிணாராமய விகாரை மற்றும் குட்சைட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன்,

கண்டி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சாந்திகுமார் நிரோஸ்குமாரின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்புடன் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் சந்திப்பு இடம்பெற்றமையுடன்,

வவுனியா நகரில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட பிரதான தொகுதி அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினியின் அலுவலகத்திலும் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் சந்திப்பு என்பன இடம்பெற்றிருந்தன.

எதிர்வரும் இரு தினங்களில் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மக்கள் சந்திப்பு, வேட்பாளர்களுடான கலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளன.

ஊசலாடும் கர்ப்பிணிப் பெண்ணின் உயிர்… இறந்தே பிறந்த குழந்தை : நடந்த விபரீதம்!!

திருச்சியில்..

தனியார் மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தாலும், கால தாமதமாக வந்து சேர்ந்ததாலும் கர்ப்பிணியின் உயிர் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கதம்பூரை சேர்ந்தவர் சுபா (25). இவருக்கும் துறையூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தை சேர்ந்த கர்ணன் வாலிபருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது சுபா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் சுபாவிற்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள நிர்மல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சுபாவிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மருத்துவர்கள் காலதாமதமாக வந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சுபாவின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததாக தெரிகிறது. சுபாவின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சுபா அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் அலட்சியத்தினால் தான் குழந்தை இறந்தது என்று புகார் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும்,

சுபாவின் உயிருக்கு துறையூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் உத்திரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் குழந்தை இறந்து பிறந்ததும்,

கர்ப்பிணியாக இருந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியை உயிருடன் எரித்து கொலை… காதலன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

திருப்பூரில்..

காதலில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் கா.தலியை எ.ரித்து கொ.லை , வெ.ட்டி நா.ய்களுக்கு போடுவது, ஆசிட் ஊற்றுவது என கொ.டூ.ரங்கள் தொ.டர்கதையாகி வருகின்றன.

இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையத்தில் வசித்து வருபவர் 19 வயது பூஜா.

இவர் அதே பகுதியில் வசித்து வரும் லோகேசை காதலித்து வந்தார். லோகேஷ் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமணம் செய்ய சொல்லி வ.ற்.புறுத்தியுள்ளார். இதனால் ஆ.த்.திரமடைந்த லோகேஷ் பூஜாவை க.ல்.லா.ல் அ.டி.க்கத் தொ.டங்கினார். த.லை.யி.ல் ப.ல.த்த கா.ய.த்.துட.ன் ம.ய.க்கமடைந்த பூஜா மீது பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ற்சி செ.ய்.துள்ளார்.

பூஜா உ.ட.ல் முழுவதும் தீ.யால் எ.ரி.ந்த நிலையில் கா.ப்.பாற்றுங்கள் என அ.ல.றி கொ.ண்டே காட்டு பகுதியிலிருந்து ஓ.டி வ.ந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அ.வரை மீ.ட்.டு சி.கிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வ.ழக்கு ப.திவு செ.ய்து தீவிர வி.சாரணை மேற்கொண்டு வ.ருகின்றனர்.

இதனையடுத்து போலீசார் லோகேஷை தே.டி வ.ந்த நிலையில் தனக்கு உ.டல்நிலை சரியில்லை எனவும் ம.யக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சி.கிச்சைக்காக சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உ.டலில் தீ.க்.கா.ய.ங்களுடன் சி.கிச்சை பெற்று வந்த இ.ளம்பெண் சி.கிச்சை ப.லனின்றி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்தார். காவல்துறையினர் லோகேஷை கை.து செ.ய்து தீ.விர வி.சாரணை மே.ற்கொண்டு வருகின்றனர்.

முள் படுக்கையில் ஆக்ரோஷ அருள் வாக்கு.. பரபரப்பை ஏற்படுத்தும் பெண் சாமியார்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக எம்மில் சிலருக்கு மட்டுமே சாமி ஆடி அருள்வாக்கு சொல்லக்கூடிய சக்தி இருக்கும்.

அந்தவகையில் இந்தியாவில் முள்படுக்கையில் சாமி ஆடும் பெண் சாமியாரை காண ஏராளமான மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவதுண்டு. இக்கோயிலில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் இருக்கிறார்.

இவர் 48 நாட்கள் விரதம் இருந்து விரதத்தின் இறுதி நாளன்று முள் படுக்கை மீது நின்று கொண்டு, ஆடியபடியும், முள் படுக்கையில் படுத்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.

விரத இறுதிநாளன்று கோவிலின் முன்புறம் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் போன்றவற்றை வைத்து 7 அடி உயரத்திற்குமுள் படுக்கை அமைக்கப்பட்டு முள்படுக்கைக்கு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனைகள் செய்து அருள்வாக்கு கேட்பது வழக்கம்.

பின்னர் அங்கு இருக்கும் பெண்கள் அருள் வந்து சாமி ஆடி முள் படுக்கையில் இருந்து கீழே இறங்கி வந்த நாகராணி அம்மையாருக்கு அபிஷேகம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பூஜைக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை… 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ்ப்பெண்!!

சென்னையில்..

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கான அனைத்து பணிகளையும் ஷோபனா செய்து வந்துள்ளார்.

தினமும் தன் தம்பியை பள்ளியில் விட்டு விட்டு, வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை தன் இருசக்கர வாகனத்தில் தம்பியை ஷோபனா பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயில் அருகே சென்ற போது, எதிரே வந்த வேன், இருசக்கர வாகன கைப்பிடி மீது உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில், ஷோபனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த பகுதியின் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பொலிசார், விபத்து ஏற்படுத்திய வேன் மற்றும் லொறி ஓட்டுனர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த சாலை முறையாக பராமரிப்பு இன்றி உள்ளதால், நெடுஞ்சாலைத்துறையினர் சேதம் அடைந்து கிடக்கும் இந்த சர்வீஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சென்னை மதுரவாயல் அருகே குண்டும் குழியுமான சாலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நமது மோசமான சாலையால் ஷோபனாவை அவரது குடும்பமும் Zoho நிறுவனமும் இழந்துவிட்டது என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடப்பதற்கு காரணமாக இருந்ததோடு தங்கள் பணிகளில் மெத்தனமாக செயல்பட்ட அலுவலகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் நகரசபை வாகனம் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இன்று (06.01.2023) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிலுடன் நகரசபை வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில்,

அதே பாதையில் பயணித்த நகரசபை வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.