வாழ்க்கை விரக்தி.. மனைவியுடன் தொடர் சண்டை.. 250 அடி பள்ளத்தில் மனைவி, குழந்தைகளுடன் காரை கவிழ்த்த கணவன்!!

கலிபோர்னியாவில்..

வாழ்க்கை அத்தனை எளிதில், தன் சுவாரஸ்யங்களை எல்லாம் தீர்த்து விட்டதாக கருதிய கணவன், ஒருவன் மனைவியுடன் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், வாழ்வதற்குப் பிடிக்காமல், மனைவி, குழந்தைகளைக் காரில் அழைத்துக் கொண்டு 250 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் வேண்டுமென்ற கவிழ்த்து விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் தர்மேஷ் பட்டேல், டெவில் ஸ்லைடு என்ற செங்குத்து பாறைகள் நிறைந்த, அதிக ஆபத்தான பகுதிக்கு, தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் டெஸ்லா காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்திய வம்சாவளியான தர்மேஷ் (41) குடும்பத்தோடு பாறைகள் நிறைந்த டெவில் ஸ்லைடு மலை பகுதி வழியே சென்றுள்ளனர்.

திடீரென தறிகெட்டு ஓடிய கார் அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 குழந்தைகளையும் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். ஹெலிகாப்டர் குழு ஒன்று பறந்து சென்று அந்த தம்பதியை மீட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பட்டேல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார் என போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கின்றது. அதற்கு முன் தினம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பழி வாங்கும் விதமாக குடும்பத்தோடு சேர்ந்து இறப்பதற்கு முடிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கலிபோர்னியாவின் வனம் மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த உயரதிகாரி பிரையன் பொடிங்கர் கூறுகையில், இது போன்ற உயரம் நிறைந்த பகுதியில் இருந்து கீழே விழுந்த பின் உயிர் பிழைப்பது கடினம்.

அந்த குழந்தைகளுக்கு லேசான அளவிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் மீட்க சென்ற போது, காரில் உயிர் பிழைத்து இருந்தவர்களை பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தோம். அதன் பின்னரே, எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது என்றார்.

போலீசாரின் அறிக்கையின்படி, பட்டேல் மீது கொலை மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் சான் மேதியோ கவுன்டி சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்றனர்.

ஆம்புலன்சுக்கு கொடுக்க பணம் இல்லை.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்!!

மேற்கு வங்காளத்தில்..

மேற்கு வங்காள மாநிலம், கிராந்தி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் பிரசாத் தெவன். இவருடைய தாயாருக்கு சுவாசப் பிரச்சனை இருந்ததால் சிகிச்சைக்காக 40 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ந்தார். அங்கிருந்து தாயாரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ3000 கேட்கப்பட்டது. அவரிடம் அத்தனை பணம் இல்லாததால் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் சுமந்து கொண்டு நடக்க தொடங்கினார்.

உடலின் மற்றொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்து வந்தார். இக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனை நேரில் கண்ட சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்துதந்தது.

இது குறித்து ராம் பிரசாத் தெவனிடம் கேட்ட போது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ900 வசூலிக்கப்பட்டது. அதே ஆம்புலன்சில் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3000 பணம் கேட்டனர். எங்களிடம் அத்தனை பணம் கிடையாது.

எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி நானும், எனது தந்தையும் தோளில் சுமந்து வந்தோம். குறிப்பிட்ட மருத்துவமனையில் சூப்பிரண்டு கல்யாண் கானிடம் கேட்ட போது ” மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல் நடந்துள்ளது.

மருத்துவமனை வளாகத்திலேயே இது குறித்து கேட்டிருந்தால் எங்களால் பிண ஊர்தி ஏற்பாடு செய்து தந்திருக்க முடியும். பாவம், அவர்களுக்கு இதுகுறித்து தெரியாமல் போய் விட்டது. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி “இது போன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களை மருத்துவமனை அருகே கூட தனியார் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் அனுமதிப்பது இல்லை” என வேதனையுடன் கூறியுள்ளார்.

12 வயதில் 50 ரூபாய் சம்பளம் : 56 வயதில் 10 கோடி வாங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!!

இசைப்புயல்..

“இசை இன்றி அமையாது உலகு” பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் பயணிக்கும் வல்லமை கொண்டது இசை. இசைக்கருவிகளை கொண்டு மட்டும் இசைப்பது இசையல்ல.

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் இசை இணைந்திருக்கிறது. இந்த இசையை இன்னும் மேம்படுத்தி செவிக்கு இனிமையாக்கிய இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய பதிவுதான் இது.

இன்று போல் ஒருநாளில் 1967ஆம் ஆண்டு பிறந்தார் ஒஸ்கார் நாயகன். பிறக்கும் போதே இசையை அழுகையாய் அழைத்து வந்துவிட்டார் போல. அன்று தொடங்கி இன்று வரை உலக சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இசையாய்.

தமிழ்நாட்டில் கஸ்தூரிக்கும் ஆர். கே. சேகருக்கும் மகனாக பிறந்தவர் தான் அருணாச்சலம் சேகர் திலீப் குமார். இவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம். திலீப்குமாரின் தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்காலத்தில் ஒரு சிறந்த பாடகர். அதன் மரபணுதான் இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இவருக்கு நான்கு வயதிலேயே இசையின் மேல் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் திலீப்பை பிரபலமான பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் சேர்த்தனர்.

அவருக்கு புத்தக படிப்பை விட, இசை படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. தனது 9 வயதில் தந்தையை இழந்து வறுமையில் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற பெரிய சுமை திலீப்குமார் கையில் சென்றது.

தனது தந்தையின் இசைக்கருவிகளை அடகு வைத்து இசைக்கருவிகளை வாசிக்கக்கற்றுக் கொண்டார். திலீப்குமார் தனது 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்து பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி வந்தார்.

நாளடைவில் திலீப்பிற்கு, புதிய புதிய மேல் நாட்டு பாணி இசைக் குழுவினரோடு இசையமைப்பு பணியில் தீவிரமாய் செயல்பட்டார். ராக், டாப் போன்ற இசைக்குழுக்களில் பணியாற்றினார்.

நாட்கள் நகர நகர திலீப்குமாரின் வளர்ச்சியும் இசையும் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டது. இசைக்கருவிகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த திலீப்குமார் ஏராளமான விளம்பரப்படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். அது அப்படியே செல்ல செல்ல திரைப்படங்களுக்கு இசையமைக்க காரணமாகியிருந்தது.

1988ஆம் ஆண்டு திலீப்குமாரின் சகோதரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எல்லா வைத்தியங்களும் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. அதனால் தனது முஸ்லிம் நண்பர்கள் பிர்காதர் என்பவரை சந்திக்கச் சொல்ல அவரும் அவர்களை சந்தித்து பிர்காதாரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசிகளால் அவர் உயிர்ப்பிழைக்க தங்களின் குடும்பமே பிர்காதிரை பின்பற்றி முழு முஸ்லிமாக மாறினார்கள்.

அன்றிலிருந்து தான் திலீப்குமார் அல்லா ரக்கா ரகுமானாக மாற்றம் பெற்றார். பெயர் மாற்றம் பெற்ற நேரத்திலிருந்து ரகுமானுக்கு கிடைத்த அதிஷ்டம் மணிரத்தினத்தின் வாய்ப்பு தான். இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநனராக இருந்த மணிரத்தினம் ஏ.ஆர்.ரகுமானின் இசையை பாராட்டி தனது படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார்.

வித்தியாசமான முறையில் படப்பிடிப்பு நடத்தும் மணிரத்னம். அவருக்குக்கேற்றால் போல் எல்லாவற்றையும் மறந்து உருவாக்கினார் ரோஜா படப் பாடல்களை இரவும் பகலும் எல்லாவற்றையும் மறந்து கடுமையான உழைப்பால் உருவாக்கிய படைப்புதான் ரோஜா.

முதல் படமே பட்டித் தொட்டியெல்லாம் பெரிய அளவில் உச்சம் பெற்றது. ஒரு படத்தில் வந்த அனைத்துப்பாடல்களும் அனைவரின் மந்திரமாக மாறத் தொடங்கியது.

முதல் வெற்றிக்குப்பின் ரகுமானுக்கு வாய்ப்பு வரிசைக் கட்டத்தொடங்கியது. திருடா திருடா, ஜெண்டில்மேன், பம்பாய், என அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்தியாவில் 50ஆவது சுததந்தின நாளில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. பின் ஒவ்வொரு படத்திலும் புதுமையான, துள்ளலான, மெலொடியான இசையால் பல மேடைகள் காண வழிவகுத்தது.

ஏ.ஆர்.ரகுமான் தனது 12 வயதில்50 ரூபாயை முதல் சம்பளமாக வாங்கிய நிலையில், தற்போது தனது 56 வயதில் 8 முதல் 10 கோடி சம்பளமாக பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இசைப்பயணம் சொந்த தாயகத்தோடு நின்று விடாமல் சர்வதேச அளவில் பேசப்பட வேண்டும் என டானி பாயில் என்ற ஹொலிவூட் இயக்குனரின் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கிலப் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அந்த ஆண்டிற்கான ஒஸ்கார் விருது கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு ஒன்றல்ல இரண்டு ஒஸ்கார் விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்நிகழ்ச்சியிலும் எல்லாப்புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி மாபெரும் இரசிகர் கூட்டத்தை அள்ளிக் கொண்டார்.

இன்றும் புதிய இசை தற்போது வரலாற்றுத்திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய வசூலைப் பெற ரஹ்மானின் இசையும் ஒரு காரணம். வாள் வீச்சையும் சண்டைக் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் போது கண்முன் நடப்பது போல தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.மேலும் தற்போதும் புதிய புதிய திரைப்படங்களில் புதிய புதிய இசை மழையில் இன்னும் நாம் நனையலாம் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.. சுவாரஸ்ய சம்பவம்!!

அமெரிக்காவில்..

தாயொருவர் இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் பெற்றெடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த காளி ஜோ ஸ்காட் என்ற பெண் கருவுற்று இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி பிரசவ வலி ஏற்பட உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவிலேயே அவருக்கு குழந்தை பிறந்துவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான குழந்தையை டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார்.

சற்று நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட சரியாக 6 நிமிட இடைவெளிக்கு பிறகு மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் அந்த பெண் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, 2022ம் ஆண்டு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு அன்னி ஜோ எனவும், 2023ம் ஆண்டு பிறந்த மற்றொரு பெண் குழந்தைக்கு எஃபி ரோஸ் எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். காளி ஜோ வெளியிட்டுள்ள அந்த பதிவில், குழந்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்!

அவர்கள் இருவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 5.5 பவுண்டுகள் எடையுடன் வெளியே வந்தனர். இதனால் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்ற கூறியுள்ளார்.

தந்தை ஸ்காட் எனது பிள்ளைகள் தனித்துவத்துடன் முன்னோக்கிச் செல்லும் அம்சத்தை எனக்கு பிடித்துள்ளது என, பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த தம்பதிக்கும், இரட்டையர்களுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரியாணி சாப்பிட்ட அடுத்த நிமிடமே இளம்பெண் மரணம்.. தொடர்ந்து அரங்கேறும் துயரம்!!

கேரளாவில்..

கேரளாவில் ரேஷ்மி என்ற செவிலியர் நேற்று பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததையடுத்து இன்றும் 20 வயது பெண் ஒருவர் இறந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

கேரளாவில் சமீப நாட்களாக உணவே விஷமாகி அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருகின்றது. ஆம் ஆன்லைன் மூலமாக பிரியாணி உணவான குழிமந்தி வாங்கி சாப்பிட்ட பெண் பலியாகியுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த மாதம் 31ம் தேதி ஆன்லைன் மூலம் ரோமன்சியா என்ற உணவகத்தில் குழி மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பிரியாணி சாப்பிட்ட பின்பு உடல்நிலை சரியில்லாமல் ஆன நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், பின்பு மேல் சிகிச்சைக்காக கர்நாடாக மாநிலம் மங்களூரில் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பெற்றோர்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

கெட்டுப்போன உணவினை வழங்கியதாக குற்றம் சாட்டப்படும் ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் ரேஷ்மி என்ற செவிலியர் மந்தி பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததையடுத்து குறித்த உணவகம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் இல்லை… ஆனாலும் பிரசவ வலியை அனுபவித்த இளம்பெண்.. திகைக்க வைத்த காரணம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான பெண் தான் ஹோலி ஸ்மால்வுட். இந்த பெண் சமீபத்தில் மோசமான நிலைக்கும் தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதற்கான காரணம் தான் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, மகப்பேறு மருத்துவரிடம் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சென்ற ஸ்மால்வுட்டிற்கு காப்பர் IUD பொருத்தப்படுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.  வலி அதிகமாக இருக்கும் என சொல்லியே சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றும் மருத்துவரிடம் ஸ்மால்வுட் கூறி உள்ளார்.

இருப்பினும் IUD பொருத்தியும் ஒரு வித்தியாசமான வலியை உணர்வதாக மருத்துவமரிடம் கூறி இருக்கிறார் ஸ்மால்வுட். நேரம் ஆக ஆக, அவரால் வலியை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது.

அது மட்டுமில்லாமல் மயக்கம் அடைந்த ஸ்மால்வுட் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அப்போது அவரது கை, கால் உள்ளிட்ட உறுப்புகள் உணர்ச்சிகளை இழந்துள்ள சூழலில் அதீத வியர்வையும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், உடல் தசைகள் இழுக்க ஆரம்பித்துள்ள சூழலில், IUD சிகிச்சையில் தவறு நடந்துள்ளதை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக பொருத்தப்பட்ட காப்பர் IUD-ஐ வெளியேற்ற வேண்டும் என்றும் அப்போது தான் ஸ்மால்வுட் பிழைக்க முடியும் என்றும் கூறிவிட்டனர்.

அதாவது நரம்பின் மீது IUD பொருத்தப்பட்டுள்ளதால் அதனை வெளியேற்ற பிரசவத்திற்கு கொடுக்க வேண்டிய முயற்சியை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டனர். ஒரு வழியாக IUD-ஐ வெளியேற்ற ஸ்மால்வுட் மீண்டும் பிரசவ வலியை அனுபவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பதிலாக செய்யப்படும் மற்றொரு சிகிச்சை தான் IUD. அதாவது கருப்பை கருத்தடை சாதனம் ஒன்று பிறப்புறுப்பின் வழியாக கர்ப்பப்பை உள்ளே பொருத்தப்படும். இது காப்பர் வடிவில் அல்லது ஹார்மோனல் வடிவிலோ இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பே.சு.ம்.போ.து தி.டீ.ரெ.ன வெ.டி.த்.த செ.ல்.போ.ன்.. து.ண்.டா.ன கை வி.ர.ல் : எ.ச்.ச.ரி.க்.கை செ.ய்.தி!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் ஹிசாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.16 ஆயிரம் கொடுத்து Realme 8 செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ப.ய.ங்கர ச.த்தத்துடன் செல்போன் வெ.டி.த்துள்ளது. இதில் அவரது வி.ரலில் சி.றி.ய தீ.க்..கா.ய.ம் ஏ.ற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீ.ட்.டு ம.ருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சி.கிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ‘என் வி.ரல்களில் சி.றிய தீ.க்.கா.ய.ங்களுடன் உ.யி.ர் பி.ழை.த்தேன்’ எ.ன ஹிமான்ஷி தெரிவித்துள்ளார். அதோடு வெ.டித்த செ.ல்போனையும், அதன் பில்லையும் இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது செ.ல்போன் வெ.டித்ததில் ப.ள்ளி சி.றுவன் கா.ய.மடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது,

வாங்கிய புதிய செ.ல்போன் வெ.டி.த்ததில் 28 வயது வா.லி.பர் ஒருவர் கா.ய.ம.டைந்தார். இப்படி தொடர்ச்சியாகவே இந்தியாவில் செல்போன் வெ.டி.க்கும் ச.ம்பவங்கள் அ.திகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டபின் கதறி அழுத நபர் : வைரலான வீடியோ!!

டெல்லியில்..

இந்திய தலைநகர் டெல்லியில் பேருந்து ஒன்றில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு பின் அழுத நபரின் வீடியோ வைரலாகியுள்ளது. டெல்லியின் ரோகிணி பகுதியில் மாநகர பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம், நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

ஜாகிர் என்ற அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை இளம்பெண்ணிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்த மார்ஷலிடம் முறையிட்டார். உடனடியாக ஜாகிரை அவர் கையும் களவுமாக பிடித்தார்.

பின்னர் ஜாகிர் அந்த பெண்ணிடம் தன்னை மன்னித்து விடுமாறு கதறி அழும் வீடியோவை பதிவு செய்துள்ளனர். அதில் தனக்கு நேர்ந்த துயரத்தை அப்பெண் விவரிக்கிறார்.

மேலும் மார்ஷல் காவல்துறையை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பெண்ணிடம் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கிடையில் குறித்த பெண் இதுதொடர்பாக புகார் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023ம் ஆண்டுக்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 23 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,

தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன். வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை ஆகும். பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது mis.dtet.gov.lk எனும் இணைய வழி ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்

இணைய வழி ஊடாக விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்..

இணைய வழி ஊடாக விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்க அல்லது கீழுள்ள QR Code ஐ ஸ்கான் செய்க.. 

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

வவுனியாவில் தமிழ்க் கட்சிகளை ஓரணியில் இணையக் கோரி போராட்டம்!! 

செட்டிக்குளத்தில்..

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா செட்டிக்குளத்தில் 3ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இன்று (07.01.2023) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரிஸ்தவகுளம் கிராம பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!!

தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம்..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (07.01) மாலை செலுத்தப்பட்டது.

வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னனியின் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சந்திரலிங்கம் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் புதிதாக தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னனி முதல் முறையாக வவுனியா நகரசபையில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளோம். மக்கள் வருகின்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மக்களது அபிவிருத்தி, ஊழலற்ற ஆட்சி என்பவற்றுக்காக மக்களது பொருளாதார நிலமைகளை கருத்தில் கொண்டு நாம் போட்டியிடுகின்றோம். இதன் மூலம் மக்களுக்கு வடிவு கிடைக்க வேண்டும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சந்திரலிங்கம் தெரிவித்தார்.

இறுதி சடங்கின்போது கண்விழித்த மூதாட்டி .. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!!

உத்தர பிரதேசத்தில்..

இறந்துபோனதாக பாட்டிக்கு இறுதி சடங்கு நடத்தியபோது திடீரென உயிரோடு வந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ளது ஜஸ்ரானா என்ற இடம்.

இதன் அருகே இருக்கும் பிலாஸ்பூர் என்ற பகுதியில் 81 வயது மதிக்கத்தக்க ஹரிபேஜி என்ற மூதாட்டி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு வயது முதிர்வால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகிலிருந்த ஒரு மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அவர் மூளை சாவு அடைந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து அவருக்கு பாட்டியின் குடும்பத்தார் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் அவரை சுடுகாட்டுக்கு அழைத்து செல்லும்போது, திடீரென மூதாட்டி கண் விழித்துள்ளார்.

இதனை கண்ட பாட்டியின் மகனும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். தேநீரும் அருந்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் உடல் நிலை மோசமாகவே காணப்பட்டதால், நேற்றைய முன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் சுக்ரீவ் சிங் அவருக்கு இறுதி சடங்கு நடத்தினார்.

இறந்துபோனதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், இறுதி சடங்கின்போது கண்விழித்த பாட்டி, மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்ப்பட்டு அருகே காணாமல் போன தாயார், இரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக எண்ணிய மகன் அவருக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் பல பகுதிகளில் போஸ்டரும் அடித்து ஒட்டியுள்ளார். ஆனால் தாயோ திடீரென உயிருடன் வந்து குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 பிள்ளைகள் இருந்தும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லை… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

நாமக்கல்லில்..

இன்றைய வாழ்வியலில் தனிக்குடித்தனங்கள் அதிகரித்து விட்டதால் பெற்றோர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். நாம் வந்த வேலை முடிந்து விட்டது.

பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து சம்பாதிக்க வேலை தேடிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்த பிறகு பெற்றோர்களை மறந்தே விடுகிறோம். இதனால் வயதானவர்கள் கவனிக்க ஆளின்றி பலர் முதியோர் இல்லங்களில் தாமாகவே சேர்ந்து கொள்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் வசித்து வரும் தம்பதிகள் முருகேசன், பாப்பா . இதில் முருகேசனுக்கு 65ம், பாப்பாவுக்கு 60 வயதும் ஆகிறது. இவர்களுக்கு லதா, சுமதி என்ற 2 மகள்கள் .

இருவருக்கும் திருமணமாகி விட்டதால் முருகேசன் – பாப்பா தனியே வசித்து வந்தனர். முருகேசன், அப்பள நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். வயதானதால் வேலை பார்க்க முடியவில்லை. வருமானம் மிகவும் குறைந்ததால் குடும்பத்தை நடத்த தம்பதியினர் சிரமப்பட்டனர்.

அத்துடன் மகள்கள் வீட்டிற்கும் செல்ல முடியாது. அவர்களிடமும் பணம் எதுவும் கேட்க முடியாது என்ற மன விரக்தியும் சேர்ந்து கொண்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முருகேசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதனையடுத்து நேற்று முன் தினம் டிசம்பர் 4ம் தேதி புதன்கிழமை இரவு இருவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயதானவர்கள் கவனிக்க ஆளில்லாததால் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியின் பிரிவை தாங்க முடியாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் ஜனகம மாவட்டம், வெங்கிரியாலாவைச் சேர்ந்த அரவிந்தின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். இதன் மூலம் அனாதையாக வாழ்ந்து வரும் அரவிந்த், காவேரி என்ற இளம் பெண்ணை ஒருநாள் திடீரென சந்தித்தார்.

இந்த அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. ஆனால் அவர்களது காதலை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காததால் காவேரி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அரவிந்த் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். மேலும் அரவிந்த் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அரவிந்த், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மோட்டார் சைக்கிலால் வந்த வினை… செல்ஃபி வீடியோ வெளியிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மிக சமீபமாக தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டியதாலோ, செல்போன் தராததாலோ, வண்டி வாங்கி தர மறுத்ததாலோ என காரணங்களற்ற மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் பிரச்சனைகள் குறித்து மனம் விட்டு பேசுங்கள். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.

தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் நந்தகுமார் (22), 8ம் வகுப்பு வரை மட்டும் படித்து முடித்து விட்டு அலுமினிய தொழிற்சாலை பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் இவர் கேடிஎம் பைக் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். மேலும் அதற்கான ‘கோடேசன்’ வாங்கியுள்ளார். ஆனால் பைக்கின் விலை 1.5 லட்சத்துக்கு மேல் உள்ளதால், அன்றாட கூலி வேலை செய்யும் தந்தையால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாததால், பைக் வாங்கி தருகிறேன் என காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் பைக் வாங்கித்தர தாமதமானதால், விரக்தி அடைந்த நந்தகுமார் கடந்த 27-ம் தேதி கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க் ஷேக்கில் கலந்து குடித்துள்ளார். மேலும் அதனை செல்ஃபியாக வீடியோவிலும் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நந்தகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழை பெற்றோர்களால் பைக் வாங்கி தாராத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்துக் கொண்டே செல்லும் அதிசய மனிதர்.. வெளிவரும் விநோத பிண்ணனி!!

வடக்கு கானாவில்..

உயர்ந்த மனிதனை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை. வழமையான உயரத்தை விட அதிக உயரத்துடன் இருக்கும் சுலேமனா அப்துல் சமேட்டின் பற்றிய ஆச்சரிய பதிவு!

வடக்கு கானாவின் குக்கிராமத்தை சேர்ந்த 29 வயதான சுலேமனா அப்துல் சமேட் என்ற வணிக உரிமையாளர் தான் உலகின் மிக உயரமான மனிதர் என்று கூறப்படுகிறது. அவுச்சே என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகின்றார் சமேட்,

அவருக்கு 22 வயதாக இருந்தபோது ராட்சதத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. வடக்கு கானாவில் உள்ள அவரது உள்ளூர் மருத்துவமனையில் அவரது மாதாந்திர பரிசோதனையின் போது அவர் 9 அடி 6 அங்குலத்தில் அளவிடப்பட்டார்.

இருப்பினும், அவரது மருத்துவமனை அவர்களின் அளவீடு துல்லியமானது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. சுலேமனா தனது 22வது வயதில் அபரிமிதமான உயரத்தை கவனிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறார். இது அவருக்கு உடல்ரீதியாக பல சிக்கலுக்கு தள்ளியது.

தலைநகர் அக்ராவில் தனது சகோதாரருடன் வசித்து வந்தபோது முதுகுத் தண்டு வளைவு பிரச்னை ஏற்படவே, உடல்ரீதியாக பெரும் அவதியுறத் தொடங்கினார். அன்று முதல் அவர் வளைந்த முதுகுத்தண்டுடன் தான் காணப்படுகிறார். உடலின் இணைப்பு திசுக்களை பாதிக்கும் ஒருவகை மரபணு கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இது மிகவும் தீவிரமான சிக்கலாக இதய குறைபாடுகள் வரை உண்டாக்கக்கூடும் என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த அறுவை சிகிச்சை அதிக செலவு ஏற்படும் என்பதால் அவர் இப்படி இருந்து விட்டார்.