வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி கல்விகொட்டத்தின் கீழ் அமைந்துள்ள புளியங்குளம் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த. (சா.தர)ப் பரீட்சை – 2021 இல் 9A பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக் காலத்தினுள் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன் செல்வன் சுதாகரன் டினோஜன் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 29.11.2022 நடைபெற்றது.
பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாடசாலை சமூகத்தினரால் குறித்த மாணவன் மற்றும் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியில் பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்கள், மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் பாடசாலை சமூகத்தினரால் பகிரப்பட்டது.
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமி குகதாசன்(தபால் அதிபர்-தபால் திணைக்களம் – வெள்ளவத்தை) யாழ்ப்பாணம் நீராவியடியை பிறப்பிடமாகவும் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கந்தசாமி குகதாசன் 26.11.2022 சனிக்கிழமையன்று இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி உமாமகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் ராஜலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும் நளினி அவர்களின் அன்பு கணவரும் கானப்பிரசன்னா (வைத்தியர்-சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை),கோபிதாஸ்(தொழில்நுட்பவியலாளர்-Medi equipment), வைஷ்ணவி(4ஆம் வருட விஞ்ஞானபீட மாணவி கொழும்பு பல்கலைக்கழகம்) அவர்களின் பாசமிகு தந்தையாரும் தாட்சாயினி (வைத்தியர்- யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும் சரவணபவன்,சண்முகதாசன்,குமாரதாஸ்,ஆறுமுகதாஸ் (ஆசிரியர்-வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கனகராஜா,கோகிலதாஸ்,குகதாஸ் ரஜினி,தயாளினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-சிங்கள பிரதேச சபை வவுனியா),கமலதாஸ்,குமரதாஸ்,ஷர்மினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.12. 2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வவுனியா நகர சபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க இன்று (29.11) காலை தனது கடமைகளும் பொறுப்பேற்றுக் கொண்டார். கிளிநொச்சி சென்.தெரேசா மகளிர் மகாவித்தியாலய பழைய மாணவியும் பேராதனை பல்கலைக்கழக கலைமானி பட்டதாரியான இவர்,
கிளிநொச்சி பொது வைத்திய சாலை, வவுனியா வடக்கு கல்வி வலயம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றியுள்ளார்.
வவுனியா நகரசபையில் வெற்றிடமாக காணப்பட்ட செயலாளர் பதவி நிலைக்கு திருமதி விமலவேணி நிசங்க நியமிக்கப்பட்டு தனது கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (29.11.2022) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் தாக்கிய நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையுடன் வவுனியா சாலையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையுடன் பேரூந்துகள் இன்றி பேரூந்து தரிப்பிடங்களில் பல மணிநேரம் காத்திருக்கிற நிலமையும் காணப்பட்டது.
வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 35 வயதுடைய யானையின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நேற்று (28) இடம்பெற்றதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.கிரிதரன் மேற்கொண்டிருந்தார்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் எட்டடி உயரம் கொண்டதாகவும், விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று முன்தினம் (27) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபில் கணவர் காணாமல் போனதாக மனைவி நடமாடியதையடுத்து விசாரிக்கையில், அவரை கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளது தெரியவந்தது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்ற பகுதியை அடுத்துள்ளது பக்ஷிவாலா.
இங்கு வசித்து வருபவர் அம்ரிக் சிங் – ராஜி கவுர் தம்பதியினர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவரை காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரிக்கையில் அதிகாரிகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து மனைவியிடம் விசாரைக்கையில் அவரது வாக்குமூலம் சந்தேகம் ஏற்படும்படியாக இருந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தான் தான், தனது கணவரை கொன்று 25 ஆழ கழிவறை குழியில் புதைத்து விட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில், மனைவி ராஜியும், அதே தெருவில் வசிக்கும் சுர்ஜித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீது கணவருக்கு சந்தேகம் எழவே, உடனே அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 1 மதத்திற்கு முன்பு தனது கணவருக்கு கோழிக்கறி சமைத்து கொடுத்துள்ளார். அதில் மயக்க மாத்திரையும் கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் கணவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் மனைவி மற்றும் காதலன் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்,. மேலும் அதனை உடலை கழிவறைக்காக தோண்டப்பட்ட சுமார் 25 அடி ஆழ குழியில் புதைத்துள்ளனர்.
மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி புதைக்கப்பட்டுள்ள சடலத்தை காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் திருப்பத்தூரில் இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால்.
இவரது இளைய மகள் சரண்யா (23) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரண்யாவை அவரது தாய் அதட்டியுள்ளார்.
இதனால் கடந்த 11ஆம் திகதி சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த சரண்யாவின் உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பதிவு செய்த வீடியோ மூலம் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. புதுப்பேட்டை அனுசாகரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற நபரை சரண்யா மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றி வரும் அருண் கடந்த 15 நாட்களாக சரண்யாவிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பல நாட்களாக சரண்யா மனவிரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் தற்கொலை முடிவுக்கு முன் அவர் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘Sorry மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். நான் இனிமே கண்டிப்பாக திரும்பி வரமாட்டேன். அவ்வளவு தான் நான் போய் சேர்ந்து விடுவேன். நல்லபடியாக சந்தோஷமா இரு மாமா. அம்மாவை பார்த்துக்க.
நான் உன்னை எவ்வளவு Love பண்ணேன் என்பதை உனக்கு புரிய வைத்தேன். உனக்கு புரியாமல் நீ உன் பாட்டுக்கு பேசிட்ட.. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நல்லபடியா சந்தோஷமா இரு.. இனிமேல் நான் உன் வாழ்க்கையில் இல்லை.. அவ்வளவு தான் போய் சேர்ந்து விடுவேன்’ என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை சரண்யா தனது காதலருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில், சரண்யாவின் சகோதரி கார்த்திகா பொலிஸில் அளித்துள்ள புகாரில் , தன் தங்கையின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், அவரது உடலை ஒப்படைக்கும் விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியில், தனது காதலியின் பிறந்த நாளில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் தெரியாமல் பெற்றோர் கதறியழுத நிலையில், போலீசார் செல்போனை ஆய்வு செய்து காதலியிடம் சொன்ன போது தான், காதலன் தற்கொலைச் செய்து கொண்ட விஷயமே காதலிக்கு தெரிய வந்தது. சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (19).
இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒருமுறை தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர், கேக் துண்டுகளை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அப்போது, தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வரும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுமதி (19) என்பவர் கடற்கரைக்கு வந்து இருந்தார். அவருக்கும், மோகன் கேக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, சுமதி மீது மோகனுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து மீண்டும் தோழியுடன் சுமதி கடற்கரைக்கு வந்தபோது, மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அப்போது, இருவரும் பேசி, செல்போன் நம்பரை பரிமாறி கொண்டனர். இவர்களிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில், அந்த நட்பு காதலாக மாறியது. கடந்த ஒன்றரை வருடமாக இவர்கள் காதலித்து வந்தனர்.
கடற்கரை, சினிமா என பல இடங்களில் சுற்றி திரிந்த இந்த காதல் ஜோடி, தங்களிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, நாள்கணக்கில் பேசாமலும் இருந்துள்ளனர். சில நேரங்களில், மாறிமாறி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி சுமதிக்கு பிறந்தநாள் என்பதால், சுமதியை செல்போனில் தொடர்பு கொண்ட மோகன், ”உனக்கு பிறந்தநாள் பரிசு தர ஆசைப்படுகிறேன். என்ன வேண்டும்” என்று கேட்டுள்ளார். அப்போது, இவர்களிடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மோகன், ”நான் தற்கொலை செய்து கொள்ள போகிறன்.” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதைக்கேட்ட சுமதி, வழக்கமாக காதலன் மோகன் கூறுவதுதான் என்று இருந்தார். ஆனால், காதலியிடம் சொன்னபடியே படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு மோகன் தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் போலீசார் மோகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மோகனின் வீட்டில் சோதனையிட்ட போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கடைசியாக வந்த நம்பரை போலீசார் தொடர்பு கொண்டபோது, காதலன்தான் பேசுகிறார் என நினைத்து, போனை எடுத்த சுமதியிடம், நடந்ததை போலீசார் தெரிவித்தனர்.
இதைக்கேட்டதும், அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின்னர், அவரது பெற்றோர் மூலம் சுமதியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தீர்த்தகிரி. இவருடைய மகன் 24 வயது அருண்குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று பிற்பகல் அருண்குமார் தனது அறையில் ஹோட்டலில் வாங்கிநண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.
தொடர்ந்து மூச்சு தி.ணறல் ஏற்பட்டு நெ.ஞ்சு வ.லி ஏற்பட்டது.உடனடியாக நண்பர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, அதில் அருண்குமாரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சி.கிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் உ.யிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸில் செல்லும்போதே அருண்குமார் உ.யிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர வி.சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி எடுத்ததால், இது ஃபுட் பாய்சனா என்ற கோணத்திலும் போலீசார் வி.சாரணை நடைபெற்று வருகிறது.
பிரியாணி சாப்பிட்டதும் இளைஞர் உ.யிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் ப.ர.ப.ரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகாயத்தில் ஏர் பலூனில் பறந்தபடி மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏர் பலூனில் 70 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவித்துள்ளனர்.
துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் பகுதி 7-ல் நடந்த இந்த தனித்துவமான திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
மகளின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பியதாக மணப்பெண்ணின் தந்தை, ராஜஸ்தானில் இருந்து ஏர் பலூனை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த ஏர் பலூனில் பறந்தபடி மணமகள் ப்ரீத்தியும், மணமகள் ரவியும் 70 அடி உயரத்தில் ஒருவரையொருவர் மாலை அணிவித்தனர்.
இந்த பலூன் மிகவும் பெரியதாக இருந்தது, அதற்கு ஒரு பெரிய மைதானம் தேவைப்பட்டது. இதற்காக செக்டார்-7 தசரா மைதானத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பலூனில் அனல் காற்று நிரப்பப்பட்டு 7 பேர் கொண்ட குழுவினர் கயிற்றின் உதவியுடன் பலூனை பறக்கவிட்டனர். அந்த பலூனில் மணமகன், மணமகன் மற்றும் ஏர் பலூன் விமானி மட்டும் இருந்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
தெலுங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி லைனில் வசித்து வரும் கன் கஹான் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் இரண்டாவது மகன் சந்தீப் (8).
அப்பகுதியில் உள்ள சாரதா தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, தாய் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டிருந்த சந்தீப், பள்ளியின் முதல் மாடிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக பள்ளி ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சாக்லேட் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக சந்தீப் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அஜய்குமார் மண்டல் ( 26). இவரும் ஒரிசா மாநிலம் இந்தபூர் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பந்தனாமாஜியும் (22) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.
அஜய்குமாரின் மனைவி அவ்வப்போது ரம்மி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்து வந்துள்ளார். இதற்கு கணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டை கைவிடும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அடிக்கடி இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மனைவியின் வீட்டிற்கும் போன் மூலம் மனைவியை கண்டிக்கும்படி கூறியுள்ளார். இதுவரை அஜய்குமாரின் மனைவி பந்தனாமாஜி ஆன்லைன் ரம்மியால் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைமுடைந்த பந்தனாமாஜி வீட்டில் கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து கணவன் பார்க்கும் போது உயிரிழந்த மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று வயது மகன் நிகில். நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை குழந்தை நிக்கில் காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த காளஹஸ்தி போலீசார் முனி ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையால் தரையில் அடித்து கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிகளின் திருமணத்திற்கு ஒரு கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலக்காட்டை சேர்ந்தவர்கள் நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா.
திருநங்கை, திருநம்பியான இவர்கள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அங்குள்ள கச்சம்குருஷி கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக பத்திரிக்கைகள் அச்சடித்து பலருக்கும் வழங்கினர்.
அதன்படி அத்வைகா பெற்றோர் உள்ளிட்ட 150 விருந்தினர்கள் திருமணத்திற்கு வந்தனர். ஆனால் திடீரென கோவில் நிர்வாகம், நீலன்கிருஷ்ணா – அத்வைகா திருமணத்தை நடத்த அனுமதி கொடுக்கவில்லை.
இதையடுத்து, கொல்லங்கோடு பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் தாலிகட்டுதல் உள்ளிட்ட திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.
தம்பதி கூறுகையில், எல்லா சமூகத்தினரையும் போல திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ எங்களுக்கு உரிமை உண்டு. கோவிலில் தாலி கட்ட அனுமதிக்க மாட்டோம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க அனுமதி மறுத்ததாக எங்களிடம் தெரிவித்தனர் என கூறியுள்ளனர். நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
நாய் குரைத்ததால் ஆஸ்திரேலிய பெண் படுகொலை 2018ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் விசாரணை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கைது வடக்கு ஆஸ்திரேலிய நகரான கெய்ர்ன்ஸ் பகுதியில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரையில், கடந்த 2018ம் ஆண்டு 24 வயதான பெண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது.
விசாரணையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோயா கோர்டிங்லே என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாராணை மேற்கொண்ட போது, மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால் கொலை வழக்கு கடந்த 4 வருடங்களாக விசாரணையில் நீடித்தது. குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து கொலையாளியை கண்டுபிடித்து தருவோருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வெகுமதி வழங்கப்படும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதேபோல் இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் சார்பில் ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் டெல்லி போலீஸார் 38 வயதான ரஜ்விந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘‘ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் ரஜ்விந்தர் சிங்.
சம்பவத்தன்று மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு கையில் பழங்கள் மற்றும் காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியுடன் குயின்ஸ்லேண்ட் கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது டோயா கோர்டிங்லே என்ற இளம்பெண் தனது நாயுடன் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோர்டிங்லே நாய் இவரைப் பார்த்து விடாமல் குரைத்துள்ளது. இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவ பணியாளாரான ரஜ்விந்தர் சிங், காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியால் ஆஸ்திரேலிய பெண்ணை சரமாரி குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் நாயை ஒரு மரத்தி கட்டி போட்டு விட்டு, சடலத்தை கடற்கரை மணலில் புதைத்துள்ளார். கொலை நடந்த இரண்டாவது நாளில், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு ரஜ்விந்தர் சிங், ஆஸ்திரேலியாவை விட்டு புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து பஞ்சாப்பில் தலைமறைவாகியுள்ளார்’’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்த டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரஜ்விந்தர் சிங்குக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், குயின்ஸ்லேண்ட் போலீஸ், சர்வதேச போலீஸ் மற்றும் இந்திய போலீஸ் ஆகியோர் கூட்டு முயற்சியாள் ரஜ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதான திருமலை. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வருகிறார். அவர் நேற்று மாலை அதே ஊரில் வசித்து வரும் மற்ற சில நண்பர்களுடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.
நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென முதலை வரும் சத்தம் கேட்டது. உடனே நண்பர்கள் கூச்சலிட்டுக்கொண்டே கரையேறினர். குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றில் விழுந்துவிட்டது.
இதனை எடுக்க திருமலை ஆற்றில் இறங்கினான். அப்போது ஆற்றுக்குள் இருந்த முதலை திருமலையின் காலை பிடித்து இழுத்துச் சென்றது. அவருடைய நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து முதலையை துரத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனாலும் முதலை திருமலையை விடாமல் ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. உடனடியாக தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உடனடியாக வந்து தேடத்தொடங்கிய நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் ஒரு புதரில் இருந்தது.
திருமலையின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட உதவி கலெக்டர், காவல் உதவி கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு நடத்தினர்.
இப்பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் ஆற்றில் குளிக்கும் போது முதலை தாக்குதலால் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன் மாலையில் குளிக்க சென்ற மாணவன் சற்று நேரத்தில் முதலையால் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.