சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கும் கீர்த்தி சுரேஷ் : மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்கள்!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார்.

இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

அவர் நடித்த பாதிப்படங்களுக்கும் மேல் தோல்வியை சந்தித்து ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் எடுத்த. கடந்த 3 ஆண்டுகளாக மகாநதி படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் தமிழில் வாய்ப்புகளையும் இழந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிப்புக்கு டாட்டா கூறிவிட்டு திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பெற்றோர்கள் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதால் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பில் ஈடுபடவும் இருக்கிறாராம்.

கைபேசியால் வந்த வினை : பெண் எடுத்த விபரீத முடிவு : வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் தொலைபேசியில் சண்டையிட்டு விட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

கட்டடத்தொழிலாளியான அய்யனார் திருமணம் முடிந்து சிறிது காலத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் தான் உரையாடிக் கொள்வார்கள்.

சம்பவத் தினத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குறித்த பெண் வீட்லுள்ள அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்நது குறித்த பெண்ணின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீஸார் இவரின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறிய பின்னர் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகித்துள்ளனர்.

பெற்ற குழந்தையை கால்களை தூக்கி அடித்தே கொலை செய்த கொடூர தந்தை!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று வயது மகன் நிகில்.

நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை,

குழந்தை நிக்கில் காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த காளஹஸ்தி போலீசார் முனி ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையால் தரையில் அடித்து கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

கண் பார்வையற்ற மாணவி தராதர சாதாரண தரப்பரீட்சையில் படைத்த நம்பமுடியாத சாதனை!!

ஹிமாஷா காவிந்தியா..

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹிமாஷா காவிந்தியா என்ற இந்த மாணவி பிறப்பிலேயே கண் பார்வையிழந்தவர். அனுராதபுரத்தில் பிறந்த இந்த மாணவி சிறுவயதிலேயே எதனையும் புரிந்துக்கொள்ளும் திறமை பெற்றவராக இருந்தார் எனவும்,

திறமையாக சவாலை வெற்றிக்கொள்வார் என உணர்ந்து அவரது பெற்றோர், அவரை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் குருணாகல் சந்தகட விசேட பாடசாலையில் பயின்று வந்த காவிந்தியா, 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன் 173 புள்ளிகளை பெற்றார்.

இதனையடுத்து பெற்றோர் அவரை குருணாகல் மகிந்த கல்லூரியில் சேர்த்துள்ளனர். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவிந்தயாவின் தாய் கீதானி,

“எனது மகள் சாதாரண தரத்தில் படிக்க மிகவும் ஆர்வம் காட்டினார். அது மாத்திரமல்ல பாடசாலையில் சங்கீதமும் கற்றாள். பாடுவதில் அவர் திறமையானவள். பல சான்றிதழ்களை பெற்றுள்ளாள்” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி காவிந்தியா 9 ஏ சித்திகளை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். காவிந்தியாவின் தந்தை அனுர ஹேரத், அவருக்கு பிரவீன் ஹேரத் என்ற சகோதரரும் இருக்கின்றார்.

சங்கீதத்தில் திறமை கொண்டுள்ள கவிந்தியா 2017 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக சாதாரண பிள்ளைகள் மத்தியில் காவிந்தியா பிரபலமானார்.

தொடர்ந்து காவிந்தியா பற்றி கூறிய அவரது தாய் கீதானி, “எனது மகள் திறமை இருப்பதால் பெருமை கொண்டு மகிழ்ச்சியடையவில்லை.

எப்போதும் யாருக்காவது உதவ நினைப்பாள். எவராவது துயரத்தில் இருந்தால்,அவளும் துக்கப்படுவாள். மகளின் திறமையை கண்டு நாங்கள் இன்றும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” எனக்கூறியுள்ளார்.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் : மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

மாவீரர் நாள்..

வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் இடம்பெற்றதுடன், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் அதன் அருகே உள்ள நிலத்தில் நினைவு தின ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் துயிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

போரால் மரணித்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட நூற்றுக்கணக்கானோர் தீபம் ஏற்றி அழுது புலம்பி கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். பிரதான சுடர் இரண்டு மாவீரர்களின் தாய் ஒருவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,

மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவாக ஒவ்வொரு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த 51 வயதுப் பெண்ணுக்கு கடற்கரையில் நடந்த விபரீதம்!!

மெக்சிகோவில்..

சமூக வலைதளத்தில் அறிமுகமான காதலனை சந்திப்பதற்காக சுமார் 5000 கி மீ பயணம் செய்த மெக்சிகோ-வை சேர்ந்த பெண் ஒருவர் ஹுவாச்சோ கடற்கரையில் உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த 51 வயதான பிளாங்கா அரேலானோ தனக்கு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே(Juan Pablo Jesus Villafuerte) என்ற ஆண் நண்பரை சந்திப்பதற்காக சுமார் 5000 கி.மீ பயணம் செய்து மெக்சிகோவில் இருந்து பெரு நாட்டிற்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் காதலனை பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்த மெக்சிகோ பெண், பெரு நாட்டில் உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு ஹுவாச்சோ (Huacho) கடற்கரையில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் நவம்பர் 9 ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பிளாங்கா அரேலானோ தான் ஆன்லைனில் சந்தித்த ஜுவான் பாப்லோ என்ற நபரை பற்றியும், அவரை விரைவில் நேரில் பார்ப்பதற்காக பெரு-விற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கடந்த ஜூலை மாத இறுதியில் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 37 வயதுடைய தனது ஆன்லைன் காதலனை பெரு நாட்டின் ஹுவாச்சோ கடற்கரையில் சந்திக்க போவதாகவும், இறுதியாக பிளாங்கா அரேலானோவிடம் நவம்பர் 7ம் திகதி இறுதியாக பேசியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 7 திகதி பிறகு பிளாங்கா-விடம் இருந்து எந்த தகவல்களும் இல்லாத நிலையில், மருமகள் கார்லா அரேலானோ ட்விட்டரில் தனது அத்தை பிளாங்கா அரேலானோ இருப்பிடம் குறித்து தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில் பிளாங்கா உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகீர் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் நாட்டு பெண்.. 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்தபோது மலர்ந்த சுவாரஸ்ய காதல்!!

இந்தியாவில்..

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தோடு இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனந்தராஜ் என்பவர் இவர்களுக்கு வழிகாட்டியாக அறிமுகமானார்.

அப்போது இவர் கர்நாடகா முழுவதும் சுற்றி காட்டியுள்ளார். இது கெமிலின் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு புரியும்படி எளிதாக கூறி, சுற்றிக்காட்டியுள்ளார் அனந்தராஜ்.

மேலும் அவரிடம் உள்ள பழக்கங்கள் பிடித்து போகவே, கெமிலும், அனந்தராஜூம் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து தனது தாயகத்துக்கு திரும்பிய கெமில், அனந்தராஜிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து போனிலே பேசி தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இவர்கள் காதல் சுமார் 4 ஆண்டுகளை கடந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர்.

அதன்படி இருவரும் அவர்களது வீட்டில் பேச, பின்னர் குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிச்சயம் நடந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று (நவம்பர் 25) இவர்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷபா கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி இந்தியாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து இந்தியாவில் வந்து திருமணம் செய்துகொண்டுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரது காதல் திருமணத்துக்கும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்

காதலனுக்கு காதலை உணர்த்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் வீடியோ பதிவு!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார்.

இளைய மகள் சரண்யா (வயது 23 ) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தது தாயார் கண்டித்ததால் சரண்யா கடந்த 11 ம் தேதி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறித்து சரண்யாவை சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து சரண்யா சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரண்யா புதுப்பேட்டை அருகே உள்ள அன்சாகரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களாக இவர்கள் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருண் சரண்யாவிடம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11 ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை செல்போன் மூலம் தனது சகோதரி கார்த்திகாவுக்கு தெரிவித்துள்ளார். கார்த்திகா அளித்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் வீடியோவில் ”சாரி மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் நினைக்கிறேன், நான் கண்டிப்பா வரமாட்டேன் அவ்வளவுதான் போய் சேர்ந்துவிடுவேன். நல்லபடியா சந்தோஷமாக இரு மாமா என் அம்மாவை பார்த்துக்கோ.

நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பது உனக்கு புரிய வைத்தேன் உனக்கு புரியாமல் உன் பாட்டுக்கு பேசிட்ட. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நல்லபடியா சந்தோஷமாக இரு நான் இனிமேல் உன் லைப் கிடையாது அவ்வளவு தான் நான் போய் சேர்ந்துவிடுவேன்.”

எனப் பேசி அந்த வீடியோவை காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லாத மாணவனை தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியை!!

மாணவனை தாக்கிய ஆசிரியை…

வவுனியா நகரை அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள பிரபல அரச பாடசாலையில் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லாத மாணவனை தும்புத்தடியால் ஆசிரியை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தரம் 5இல் குறித்த மாணவன் கல்வி பயின்று வருவதுடன் எதிர்வரும் புலமைப்பரிசையிலும் தோற்றவுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை தனது பிரத்தியோக வகுப்பிற்கு வருமாறு ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவன் அவரின் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லவில்லை இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மாணவன் மீது தும்புத்தடியால் ஆசிரியை தாக்கியுள்ளதாகவும் இதன் காரணமாக மாணவனின் உடல்களில் தழும்புகள் உள்ளதாகவும்,

மாணவனின் எதிர்கால கல்வி பாதிப்புக்குள்ளாகும் என்பதினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவில்லை என மாணவனின் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.

எதிர்வரும் சில வாரங்களில் புலமைப்பரீட்சையில் மாணவன் தோற்றவுள்ள நிலையில் மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கபடும் சம்பவமாக இச் சம்பவம் பதிவாகியுள்ளது.

 

மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்த கணவன் : வாய்பிளந்த ஊர் மக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவியை அவரின் காதலனுக்கு கணவரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் விஸ்வஜீத் பகத்.

ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் ஆர்த்தி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழலில் அவர்களுக்கு இடையில் அபிராஜ் என்ற இளைஞர் வந்தார். அபிராஜும், ஆர்த்தியும் ஒரு சமயத்தில் காதலித்து பின்னர் பிரிந்திருக்கின்றனர், இதையடுத்து பகத்தை ஆர்த்தி மணந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் ஆர்த்தியும் அபிராஜும் சேர்ந்து பேசியதை ஊரார் பார்த்துள்ளனர். பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இது குறித்து பேசியதையடுத்து ஆர்த்தி, அபிராஜை மணக்க விரும்பினார்.

இது ஊர் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பகத்தே, தனது மனைவி ஆர்த்தியை அபிராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இப்போது இந்த திருமணம் தான் ஊர் முழுக்க பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

வவுனியாவில் மாவீரர் நாள் நினைவேந்தலில் புகுந்த பொலிஸார் : மாவீரர் அடையாள உருவப்படத்தையும் எடுத்துச் சென்றனர்!!.

மாவீரர் நாள் நினைவேந்தலில்..

வவுனியாவில் மாவீரர் நாள் நினைவேந்தலில் புகுந்த பொலிஸார்: மாவீரர் அடையாள உருவப்படத்தையும் எடுத்து சென்றனர் வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் மாவீரரின் பெற்றோர் பொலிஸாருடன் முரண்பட்ட போதிலும் பொலிஸார் உருவப்படத்தை எடுத்து சென்றதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். எனினும் குறித்த உருவப்படத்தினை ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் வங்கியின் தன்னியக்க வங்கி சேவை அலகு திறந்துவைப்பு!!

பல்கலைக்கழக வளாகத்தில்..

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் வங்கியின் தன்னியக்க வங்கி சேவை அலகு திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றிருந்தது.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மற்றும் மக்கள் வங்கியின் உதவி பொது முகாமையாளர் ஆர்.ரவிகரன் ஆகியோர் இணைந்து தன்னியக்க வங்கி சேவை அலகு நிலையத்தினை திறந்து வைத்திருந்தனர்.

துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தன்னியக்க வங்கி சேவையில் பணத்தினை வைப்பிலிட்டு அதன் சேவையினை ஆரம்பித்து வைத்திருந்தார். இந் நிகழ்வில் வங்கி ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நண்பர்களுக்கு குரல் செய்தி அனுப்பிவிட்டு குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (45). இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பொய்யாபிள்ளைசாவடி என்ற இடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார்.

இந்த கடைக்கு அருகிலேயே உள்ள தாயம்மாள் நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணேஷ் உரம் பூச்சி மருந்து கடை வைத்ததில் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கணேஷ் வீட்டிற்கு திராட்சை பழச்சாறு வாங்கி வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் அதில் எலி பேஸ்டை கலந்துள்ளார். பின்னர் அந்த பழச்சாறை தனது மனைவி கல்பனா (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண்(9) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் விஷம் கலந்த பழச்சாறை தானும் குடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கணேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்க்க முடியாத கணேஷ், தனது சொந்த ஊரான வாண்டையாம்பள்ளம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தின் முந்திரி தோப்புக்கு சென்றுள்ளார்.

பின்னர் தனது செல்போன் மூலம் பு.முட்லூர் கிராமத்தில் உரக்கடை வைத்துள்ள தனது நண்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த மெசேஜில் தனக்கு கடன் அதிகமாகி விட்டதாகவும் அதனால் கடனை சமாளிக்க முடியாமல் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதால் அவர்கள் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடிந்தால் அவர்களை காப்பாற்றும்படியும், எனது கடனை அவர்களிடம் கேட்டு யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் மெசேஜ் அனுப்பி இருந்தார். மேலும் அந்த மெசேஜில், என்னிடம் கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் யார் என்பது குறித்த விவரத்தையும் தெரிவித்து விட்டு, எனது சாவுக்கு காரணமானவர்களை சும்மா விடாதீர்கள் என தெரிவித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மெசேஜை பார்த்த கணேஷின் நண்பர் இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷின் உறவினர்கள் சிதம்பரம் தாயம்மாள் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கல்பனா, அவரது மகள் சங்கமித்ரா, மகன் குரு சரண் ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணேஷின் உடலை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய கணேஷின் உறவினர்கள், கணேசிடம் ஏராளமானோர் கடன் வாங்கிக் கொண்டு அவரிடம் பணத்தை திருப்பி தராததால் அவர் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி கடன் தர வேண்டியவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும்.

அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட கணேஷ் கடைசியாக இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தனக்கு யார் யார் பணம் தர வேண்டும் என்ற விபரங்களை எழுதியதோடு, தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களையும் எழுதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : வீட்டுக்கு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சென்னையில்..

சென்னையில் இளம் ஜோடிகள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் உத்திரமேரூரை சேர்ந்தவர் ஜெயராமன். 29 வயதான இவர் எம்.காம் முடித்துவிட்டு சென்னையில் குடியேறியுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இவர் கல்லூரியில் படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த யுவராணி என்பவருடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

பி.டெக் பட்டதாரியான யுவராணியும் ஜெயராமனும் கடந்த ஆறு வருடங்களாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பீர்க்கன்கரணையில் உள்ள ஜெயராமனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் யுவராணி.

அப்போது, ஜெயராமனின் தாய் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்றுவிட்டதால் அவர் மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற ஜெயராமனின் தாய் மாலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது, தனது மகனும் யுவராணியும் உயிரை மாய்த்துக்கொண்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனால் அவர் கதறி அழ, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்திருக்கின்றனர்.

பின்னர் இதுதுகுறித்து பீர்க்கன்கரணை பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயராமன் மற்றும் யுவராணியின் உடலை மீட்டு,

குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது… உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம்!!

வோரியா கஃபூரி..

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரர், பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஈரானின் பிரபல கால்பந்து நட்சத்திரம் 35 வயதான வோரியா கஃபூரி. இவரையே உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார். 2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

வெள்ளிக்கிழமை வேல்ஸ் அணியுடனான போட்டியில் ஈரான் அணி மீண்டும் தேசிய கீதத்தை பாட மறுத்தால், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரனிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,

தற்போது நட்சத்திர வீரர் கஃபூரி கைதாகியுள்ளார். தேசிய கீதத்தை பாட மறுப்பதும் நாட்டை அவமதிப்பதும் ஒன்று என ஈரான் அரசியல் தலைவர்கல் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FIFA உலகக்கோப்பையில் அந்தரத்தில் பறந்து கோல் அடித்த வீரர்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டல்..!!

லுஸைலில்..

லுஸைல் நகரில் நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. கத்தாரின் லுஸைல் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 முறையை சாம்பியனான பிரேசில் அணியும், செர்பியா அணியும் மோதின.

முதல் பாதியில் செர்பியா அணி சிறப்பாக தடுப்பாட்டம் செய்ததால் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பிரேசில் ஆட்டத்தில் அனல் பறந்தது.

ரசிகர்களின் கவனம் நெய்மார் மீது இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரிச்சர்லிசன் 62வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் 73வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை மேலே எழுப்பி, அந்தரத்தில் பறந்து அசத்தலாக இரண்டாவது கோலையும் ரிச்சர்லிசன் அடித்தார்.

இந்த கோலைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். செர்பியா அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரிச்சர்லிசன் அடித்த இரண்டாவது கோல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.