அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வரும் ஜெப் ஹாக் (Jeff Hauck ) மற்றும் அவரது மனைவி cambriairene இருவருக்குமான குழந்தையை தான், ஜெப் ஹாக்கின் தாயார் தற்போது பெற்றெடுத்துள்ளார்.
ஆம், ஜெப் ஹாக்கின் மனைவிக்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி இருக்கின்றனர். இதன் காரணமாக குழந்தைப் பேறு அடைய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டதாகவும் இந்த நிலையில்தான், அவரது மாமியார், அதாவது ஜெப் ஹாக்கின் தாயாரான நான்சி ஹாக் ( Nancy Hauck, 56).
ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ஆம், அதுதான் வாடகைத் தாயாக இருந்து மகனுக்கான குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுக்கும் நவீன மருத்துவ மகப்பேறு முறை. அண்மைக் காலங்களில் தமிழகத்தில் இதுகுறித்த தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.
அப்படித்தான், வாடகைத்தாய் மூலம் மகனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க நான்சி ஹாக் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, வாடகைத்தாயாக இருந்த நான்சி ஹாக், தனது மகன், மருமகளுக்காக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் cambriairene உருக்கமாக பகிர்ந்திருக்கிறார்.
அத்துடன் தங்களது இந்த பெண் குழந்தைக்கு ஹன்னா ( Hannah) என்று பெயர் சூட்டிய ஜெப் ஹாக் , வாடகைத்தாயாக இருந்து தங்களது குழந்தையை பெற்று கொடுத்த தமது தாயாரை கௌரவப் படுத்தும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நான்சி ஹாக், வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய மருத்துவர் ரஸ்சல் பவுல்க் இதுகுறித்து கூறுகையில், இது மாறானது தான் என்றும், அதே சமயம் குழந்தை பெற்றுக்கொள்வதை கட்டுப்படுத்தும் காரணியாக வயது இல்லை என்றும், இது தனி நபரின் உடல் ஆரோக்கியம் சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கையில் உள்ள மொபைல் போன்களில் கழிவறையில் உள்ள கிருமிகளை விட 10 மடங்கு அதிகமான கிருமி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
மொபைல் போன்கள் தற்போது உள்ள நவீன காலத்தில் மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது, சொல்லப்போனால் மனிதனின் மூன்றாவது கை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இந்த மொபைல் போன்கள் படிக்க, படம் பார்க்க, உணவு பொருட்களை ஆர்டர் செய்ய, செய்திகளை பகிர என அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி கையை விட்டு எடுக்காமல் பயன்படுத்தும் போன்களில் முழுக்க முழுக்க பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்போன்களை எடுத்துச் செல்கிறோம், பல சந்தர்ப்பங்களில் அவற்றை பொது இடங்களில் ஆங்காங்கே பல மேசைகள், பாக்கெட்டுகள், கைகள், பைகள் என பல இடங்களில் வைக்கிறோம்.
இந்த எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்கள் உள்ளன அவை எல்லாமே போனின் மேற்பரப்பிற்கு பரவுகின்றன. அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு அறிக்கையில் மொபைல் போன்களில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு குறித்து அ.திர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், டாய்லெட் இருக்கைகளை விட 10 சதவிகிதம் அதிகமான பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் உள்ளன, இவை சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆ.ல்.க.ஹா.ல் அடிப்படை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்தி உங்கள் தொலைபேசியை ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் தொலைபேசியில் நேரடியாக திரவத்தை தெளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது அதன் டிஸ்பிளேவை கெடுக்கும்.
கண் பா.ர்வையிழந்த நிலையிலும் தளராத மன உறுதியுடன் கல்வி பயிலும் யாழ் வாழ்வக மாணவன் தங்கம் பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தின பேச்சுப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கல்வி பயிலும் வாழ்வக மாணவன் சந்திரகுமார் அமலஅசாம் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவருக்கும் , மாணவனின் வெற்றிக்கு துணை நின்ற ஆசிரியர்களுக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
பள்ளி சீருடை அணிந்து மாணவி ஒருவர் கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி வினுஷா. 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளி முடிந்த பிறகு அதன் அருகில் அமைந்துள்ள பகுதியில் தள்ளுவண்டி ஒன்றில் கடலை வியாபாரமும் செய்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொழிலை தனது தாயாரின் உதவிக்காக வினுஷா செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த சில தினங்களாக வினுஷாவின் தாயார் உடல்நிலை சரியாக இல்லாததால் இவரும் இதனை கவனித்து வருகிறார்.
இது பற்றி பேசும் பள்ளி மாணவி வினுஷா, “வாடகை வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். சகோதரியின் திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு கடன் ஏறிவிட்டதால் நெருக்கடி உருவானது.
இதனால் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக இந்த பணியை செய்து வருகிறேன். தினம் தோறும் 500 ரூபாய் வரை கிடைக்கும். அதில் கடலை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான பணம் சென்றால் மீதம் ஒரு 150 ரூபாய் கையில் இருக்கும்.
கடலை வியாபாரம் செய்வதை நினைத்து வெட்கப்பட எதுவுமில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக இதை செய்கிறேன். இதில் நான் வெட்கப்பட எதுவுமே இல்லை. சின்ன வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை.
ஆனால் காமர்ஸ் குரூப் எடுத்துள்ளதால் எம்பிபிஎஸ் படிக்க முடியாது. இதனால் மருத்துவம் சார்ந்த வேறு துறையை தேர்ந்தெடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவி வினுஷா பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வந்த நிலையில், ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவுக்கும் இந்த தகவல் போய் சேர்ந்துள்ளது.
மேலும் வேலையில் இனிமேல் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணவி வினுஷாவுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
அதே போல, மாணவியின் படிப்பு செலவுக்காக உதவிகள் செய்து கொடுப்பதாகவும் ஆட்சியர் கிருஷ்ண தேஜா உறுதி அளித்துள்ளார். பள்ளி மாணவியாக இருந்த போதிலும், சிறு வயதிலேயே இப்படி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு வரும் மாணவியின் செயல், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
திருமணம் முடிந்த கையுடன் கணவரின் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் அலுத்து புரண்ட மணப்பெண்ணை உறவினர்கள் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தாலிக்கட்டியதும் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண் செல்வது வழக்கம். ஆனால் இந்த மணப்பெண் பெற்றோரை பிரிய முடியாமல் கதறி கதறி அழுகின்றார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அழுதுகொண்டே இருந்த மணமகளை அவரின் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த தூக்கி செல்லும் வீடியோ நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இணையவாசிகள் வைலாக்கி வருகின்றனர்.
பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த மாணவி லாவண்யா, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஈரோடு, ஆலாம்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில், மிக நன்றாக படிக்க கூடிய மாணவி லாவண்யா என்கிறார்கள்.
சமீப காலங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக இப்படியான தற்கொலைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பெயரளவுக்கு இல்லாமல் நிஜமாகவே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி.
இவருடைய கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மதியரசு கோபியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
லாவண்யா பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் தாமதமாக சேர்ந்துள்ளார். செல்வி அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் முதலாம் ஆண்டு தேர்வு தொடங்கியதால் லாவண்யா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே லாவண்யா கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் வழக்கம் போல் செல்வி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
மதியரசு கல்லூரிக்கு சென்றிருந்தார். தனியாக இருந்த லாவண்யா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மதியரசு தங்கை லாவண்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாய் கடித்து விட்டால் உடனே தடுப்பூசி போட வேண்டும் இல்லையெனில் நாய் போல் வெறி பிடித்து ஊளையிட்டு உயிரை விடுவர் எனக் கூறுவர். உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உதய்பூர் பகுதியில் வசித்து வருபவர் 25 வயதான ராஜேஸ் பியூரா . கூலித் தொழிலாளியான இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது. அதற்கு அவர் தடுப்பூசி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென ராஜேஸ் பியூரா, நவம்பர் 1ம் தேதி முதல் நாய் போல ஊளையிட ஆரம்பித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சில நாட்களில் இது சரியாகி விடும் என்று நினைத்துள்ளனர்.
ஆனால், தொடர்ந்து ராஜேஸ் பியூரா நாயைப் போல ஊளையிடவும், பயந்து போன அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைபடி, கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “நாய் கடித்த பிறகு சிகிச்சைக்கு செல்லாத ஒருவருக்கு ஹைட்ரோஃபோபியா அல்லது தண்ணீர் பயம் இருக்கும். அதன் அறிகுறிகளில் லாரிங்கோஸ்பாஸ்சும் ஒன்று. அதனால் தான் ராஜேஸ் பியூரா நாய் போல ஊளையிடுகிறார்” என்றனர்.
கேரளாவில் இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ்.
இவருக்கும் அனகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரயில் மோதியதில் அனகா உயிரிழந்தார்.
இது குறித்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் உடல் அளவிலும், மனதளவிலும் அனகாவை துன்புறுத்தி வந்ததும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
அதன்படி அனகா கர்ப்பமானதையும், இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததையும் கூட அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் கூறவிடாமல் ஸ்ரீஜீஷ் மற்றும் குடும்பத்தார் தடுத்துள்ளனர்.
மேலும் அனகாவின் குடும்பத்தாரின் செல்போன் நம்பர்கள் அனைத்தையும் ப்ளாக் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து இப்படி துன்புறுத்தியதால் தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
இதையடுத்து அனகாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுவரெலியா, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ‘கெமில்டன்’ கால்வாயைக் கடக்க முயன்ற போது, நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார். வெதமுல்ல, கெமில்டன் பகுதியைச் சேர்ந்த தரம் 5 இல் கல்வி கற்கும் யோகராஜா அனுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் நேற்று மாலை பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறினர்.
வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்ஸில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை.
விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பஸ்ஸின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர்.
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது – 23), பஸ் சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர்.
உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார். இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விபத்துத் தொடர்பில் காயமடைந்த வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது, “இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பஸ் புறப்பட்டது.
தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பஸ்ஸில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள். சுமார் 20 நிமிடத்தில் பஸ் வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பஸ் கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது.
அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும்போதே மோதியது. அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பஸ்ஸின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன் பஸ்ஸின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பஸ் சரிந்து விழுந்தது.
பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பஸ் சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர். சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள். மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பஸ் சரிந்து வீழ்ந்தது.
பின்னால் இன்னொரு அதிசொகுசு பஸ்ஸும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது. வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.
அந்த பஸ்ஸில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பஸ்ஸில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பஸ்ஸின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பஸ்ஸில் பணியாற்றினார்.
அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார். சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்” – என்றார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பஸ்ஸை மீட்கும் பணியில் நேற்றுக் காலை இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ – 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.
வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொகை 23 ஆக அதிகரித்துள்ளதுடன்இ இருவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நேற்று (05.11) அதிகாலை வவுனியாஇ நொச்சிமோட்டைப் பாலத்தில் மோதி தடப்புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக 16 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னரும் விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்து சிறிய காயங்களுக்கு உள்ளான மற்றும் உடல்நிலை பாதிப்படைந்த மேலும் 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் மதியம் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்தோர் தொகை 23 ஆக அதிகரித்துன்ளது.
அதில் இருவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை அதிகாலை நொச்சிமோட்டைப் பகுதியில் அதிசொகுசு பேரூந்து ஒன்று பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளான போது அதன் பின் யாழில் இருந்து வந்த அதிசொகுசு பேரூந்து குறித்த பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்காக சாரதி செயற்பட்டமையால் பாலத்தின் மறுபக்கம் பாதையை விட்டு விலகி கால்வாய்க்குள் சென்றுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன்பாகவும் யாழில் இருந்து வந்த பிறிதொரு அதி சொகுசு பேரூந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்களானது.
குறித்த இரு விபத்துக்களிலும் எவருக்கும் காயஙகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் மூன்று விபத்துக்கள் தொடர்பாகவும் ஓமந்தை மற்றும் வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா – நொச்சிமோட்டையில் நேற்று (05.11) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.
பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வெளிநாட்டு பயண ஏற்பாட்டுக்காக குறித்த அதி சொகுசு பேரூந்தில்,
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் இவ் இளைஞன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சிட்னி நகரில் பெரமாடா நீதிமன்றம் குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் நாளை தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4360 ரூபாவாகும்.
மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயுவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1750 ரூபாவாகும். அதேவேளை,
2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 815 ரூபாவாகும். இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் மரியானா வரேலா (Mariana Varela). முன்னாள் அர்ஜென்டினா அழகியான இவர், பிற நாடுகளில் நடைபெறும் அழகி போட்டிகளிலும் பங்கேற்று வந்ததாக தெரிகிறது.
மரியானாவை போலவே, பியூர்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்தவர் ஃபாபியோலா வேலண்டினா. இவரும் மிஸ் பியூர்டோ ரிகோ பட்டம் வென்றுள்ள நிலையில், அழகி போட்டிகளில் கலந்து கொண்டும் வந்துள்ளார்.
அப்படி இருக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில், அர்ஜென்டினா நாட்டின் சார்பாக மரியானா வரேலாவும், பியூர்டோ ரிக்கோ நாட்டின் சார்பாக வேலண்டினா ஆகியோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் ஒருவரை ஒருவர் அறிமுகமாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாகவும் மாறி உள்ளார்கள். நாட்கள் செல்ல செல்ல, இவர்கள் இடையே இன்னும் அதிக அன்பும் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் அதிகம் விரும்ப தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரியானா மற்றும் ஃபாபியோலா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர்கள் ஒன்றாக பல இடங்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் மற்றும் சமீபத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இரு நாட்டு அழகிகள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை தற்போது அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளனர். முன்னதாக, இவர்கள் தங்கள் உறவு பற்றிய செய்தியை ரகசியமாக வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் அழகிகள் இரண்டு பேரும் தங்களின் புது வாழ்வை தொடங்கி உள்ளதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயதான நபர் 88வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார். இதன்மூலம் மேற்கு ஜாவாவிலுள்ள மஜலெங்காவை சேர்ந்த கான் என்பவர் ’ப்ளே பாய் கிங்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 88வது முறை திருமணம் நடைபெறவிருக்கிறது.
முதன்முதலில் இவருக்கு திருமணம் ஆகும்போது இவருடைய வயது 14. அப்போது அவரைவிட 2 வயது பெரிய பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டு வருடம் ஒன்றாக வாழ்ந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை கசந்துபோகவே விவாகரத்து கேட்டுள்ளார் முதல் மனைவி.
அங்கிருந்து தொடங்கியிருக்கிறது கானின் திருமண பட்டியல். கான் கூறுகையில், முதல் மனைவியிடம் எனது மோசமான அணுகுமுறையால் அவர் இரண்டே வருடத்தில் என்னிடமிருந்து விவாகரத்து கேட்டார்.
பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை நான் செய்ய விரும்பவில்லை. நான் அவர்களின் உணர்வுகளுடன் விளையாட மறுக்கிறேன். ஆனால் ஒழுக்கமற்று நடந்துகொள்வதைவிட திருமணம் செய்வது சிறந்தது.
இப்போது நான் மீண்டும் திருமணம் செய்யவுள்ள பெண் எனது 86வது மனைவி. நாங்கள் வெறும் இரண்டே மாதங்கள் ஒன்றாக இருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே பிரிந்துவிட்டாலும், அவர் மீண்டும் என்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தலைகீழாக நிற்கிறார் என்கிறார்.
மேலும் தனக்கு ஏற்படும் கோபத்தில் இருந்து மீண்டு பல பெண்களுக்கு தன்மீது ஈர்ப்புவர ஆன்மிகத்தின் உதவியை நாடியதாகவும் கூறுகிறார் கான். கானுக்கு 87 திருமணங்களில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.