அசைவம் சாப்பிட்டால் விஷப்பாம்பு தேடி வந்து கொல்லும் : கால காலமாக பயத்தில் சைவத்தை மட்டும் உண்ணும் கிராம மக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பல காலமாக இருக்கும் பழக்கங்கள். பாம்பு கடித்து கொன்றுவிடும் என பயந்து ஒரு கிராமத்தை சேர்ந்த மொத்த மக்களும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை பல காலமாக தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கெனல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பழங்கால மூடநம்பிக்கையை இன்று வரையில் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் அசைவ உணவுகளை உண்டால் கொடிய விஷப்பாம்பு கடித்து கொன்றுவிடும் என நம்புகின்றனர்.

அதன்படி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் நடந்த ஒரு சம்பவமே இவர்களின் பயத்திற்கு காரணம். கிராமவாசி கூறுகையில், ஒரு முறை எங்கள் ஊரில் திருவிழாவின் போது சில நபர்கள் ஆற்றில் பிடித்த மீன்களை எடுத்து கொண்டு ஊருக்குள் வந்தார்கள்.

அப்போது வழியிலேயே அவர்களை பாம்புகள் கடித்து கொன்றுவிட்டது. அதிலிருந்து தான் மாமிசம், மீன்கள் போன்ற எந்தவொரு அசைவ உணவுகளையும் நாங்கள் சாப்பிடுவதில்லை.

எந்த ஒரு சுப காரியங்கள் என்றாலும் கூட சைவ உணவுகள் தான் இங்கு சமைக்கப்படும் என கூறியுள்ளார். மாமிசங்களை தெரியாமல் யாராவது சாப்பிட்டால் கூட அவர்களின் கண்பார்வை பறி போய்விடும் மற்றும் பாம்புக்கடியால் இறந்துவிடுவார்கள் என இந்த கிராம மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர்.

கார் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று (05.11.2022) காலை நேர்ந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு- மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போனால் ஏற்பட்ட விபரீதம்…வீடியோ எடுத்து வெளியிட்ட இளம் பெண்!!

தமிழகத்தில்..

செல்போனில் கவனம் செலுத்தி விபத்துக்குள்ளான இளம்பெண் கீழே விழுந்ததையும் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் மோகம் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைத்து வருகிறது.

காலையில் எழும் போதே செல்போனை பார்த்துவிட்டு எழுவதில் தொடங்கி, உறங்க செல்வது வரை உடலில் ஓர் அங்கமாகவே செல்போன் மாறிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் வாகனத்தில் செல்லும்போது வண்டியை நேராக பார்த்து ஓட்டாமல் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே சென்று விபத்தில் சிக்கி சில்லறை வாங்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

அந்த வகையில் கொட்டும் மழையில் தம்பியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தவாறு பேசிக்கொண்டே செல்வதுடன், வண்டியை ஓட்டும் இளைஞரையும் வாகனத்தில் கவனம் செலுத்த விடாமல் செல்போனை பார்க்க சொல்லி கடைசியில் விபத்து ஏற்பட்டு இருவரும் சாலையில் விழுந்து காயமடைந்துள்ளனர்.

ஆனால், அந்த பெண் அதையும் பொருட்படுத்தாமல், விபத்து ஏற்பட்டதையும் கண்டெண்டாக்கி வீடியோ போட்டிருப்பது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை போக்குவரத்து காவல்துறை மேலும் உயர்த்தியுள்ளது. லைசன்ஸ் இல்லாமல் இருந்தால் 5000 ரூபாய், டிராஃபிக் சிக்னலில் நிற்காமல் சென்றால் முதல் முறை 1000 ரூபாயையும், இரண்டாவது முறை சிக்கினால் 10000 ரூபாயும் இனி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் முதல் முறை 1000 ரூபாயும், இரண்டாவது முறை சிக்கினால் 10000 ஆயிரம் ரூபாயையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாயாக இருந்த ஹெல்மெட் அபராதம் இப்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த உட்சபட்ச அபராத விதிப்புக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், எந்த வித விதிகளையும் பின்பற்றாமல் சிலர் இதுபோல விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் மற்றவர்களுக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்.. மருத்துவ உலகை வியக்கவைத்த நிகழ்வு!!

ஜார்கண்ட்டில்..

பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருப்பது குறித்து தெரிய வந்த விஷயம், தற்போது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வப்போது நாம் அதிகம் கேள்விப்படாத விஷயங்கள் குறித்து புதிதாக தெரிய வரும் செய்திகள் நிச்சயம் நம்மை ஒருவித பிரம்மிப்பில் தான் ஆழ்த்தும்.

அப்படி ஒரு செய்தி தான், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி பலரையும் ஏதாவது ஒரு வகையில் மிரளவும் வைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி, பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனிடையே பிறந்த அந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயற்றில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். இதனை கவனித்ததும் பரபரப்பான மருத்துவர்கள், உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து அதனை குழந்தையின் பெற்றோர்களிடமும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது பார்ப்பதற்கு நீர்க்கட்டி போல இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அதனை பரிசோதித்து பார்த்த போது மருத்துவர்கள் கடும் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். குழந்தையின் வயற்றில் இருந்த கட்டிக்குள் 8 கருக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ. மீ வரை இருந்ததும் அறிய வந்தது. மிகவும் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை இருந்து விட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி இருப்பதே நம்ப முடியாத ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், அதற்குள் எட்டு கருக்கள் இருந்தது மருத்துவ உலகில் மிகப்பெரிய அரிதான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்ற அரிய நிகழ்வு நடக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. மேலும் இப்படி தோன்றுவதன் பெயர் கருவுக்குள் கரு உருவாதல் (fetus in fetu) ஆகும்.

அதே வேளையில் ஒரு குழந்தையின் உடலுக்குள் ஒரு கரு தான் இதுவரை இருந்தது என்பது அதிகம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 கருக்கள் ஒரே குழந்தையின் வயிற்றில் இருந்தது இது தான் முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாக இது பார்க்கப்படும் நிலையில், பல மருத்துவ நிபுணர்களும் இதுகுறித்து வியப்புடன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வவுனியா – மதவாச்சிக்கு இடையே யாழ். தேவி தடம் புரண்டு விபத்து : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

யாழ். தேவி..

யாழ். காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ். தேவி விரைவு தொடருந்து தடம் புரண்டு விபத்துக்கு இலக்காகியுள்ளது.

இவ் விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேர்ந்துள்ளது.
வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையிலே யாழ். தேவி விரைவு தொடருந்து தடம் புரண்டுள்ளது.

இதன்போது தொடருந்தின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தைக்கு எமனான தாய்ப்பால் : நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

தாய்ப்பால் தொண்டையில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!
திருச்சூர் அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கி 4 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

கேரளாவின் திருச்சூர் அருகே மாணி பரம்பில் எபி மற்றும் ஷெல்கா என்ற தம்பதிகளின் பெண் குழந்தை உயிரிழந்தது. வியாழக்கிழமை காலை குழந்தையை உறக்கத்தில் இருந்து எழுப்பியபோதும், அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் பதறிப்போன பெற்றோர் சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரிழந்தது.

தாய்ப்பால் தொண்டைக்குழியில் சிக்கியிருந்ததே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் குறைந்துவரும் தங்கத்தின் தேவை : விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களில் பாரிய வீழ்ச்சியுடன் பதிவான ஆபரண தங்கத்தின் விலை தற்போது பதிவாகி வருவதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இலங்கை தங்க சந்தையில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 156,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 169,000 ரூபாவாகவும் தற்போது பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பல நகைக்கடைகளை மூடும் போக்கு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஊரப்பாக்கத்தில்..

ஊரப்பாக்கத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த, வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவருக்கு தாம்பரம் பகுதியில் திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா ( 63) அவரது தங்கை ராதா (55) , அவரது தம்பி ராம்குமார் (47) , ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த 2ம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன், அப்பார்ட்மெண்டில் உள்ள முதல் மாடியில் , தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது மூச்சு திணறி கிரிஜா, ராதா , ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்நாத் கூறுகையில், முதற்கட்டமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த வீடு பூட்டி இருந்துள்ளது. இதன் காரணமாக மின்சார சாதனங்கள் ஆகியவை பழுதடைந்து இருக்கலாம், அதை பயன்படுத்திய காரணத்தினாலேயே, இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், மாவட்டத்தில் இருக்கும் பொது மக்கள் யாரும் பழுதடைந்த மின்சார பொருட்களை பயன்படுத்த வேண்டாம், அதேபோல் சிறிது காலம் பயன்படுத்தாமல் இருக்கும் மின்சார பொருட்களை, டெக்னீசியன் அறிவுறுத்தலின்படி பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

வவுனியா இடம்பெற்ற கோர விபத்து : யாழ். பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட மூவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து..

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் யெர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் தீவில சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய – பெனித்து முல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என தெரியவருகிறது.

அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விபத்துக்குளான அதி சொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இன்று (05.11.2022) காலை இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததுடன்,

இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விபத்துக்குளான வாகனத்தை அகற்றும் பணியில் இராணுவம் : ஏ9 வீதி போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிப்பு!!

ஏ9 வீதி..

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலப் பகுதியில் விபத்துக்குளான அதி சொகுசு பேரூந்தை மீட்கும் பணியில் இன்று (05.11) காலை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் ஏ9 வீதி போக்குவரத்து 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 12.15 அளவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த பேரூந்தை தொடர்ந்து வந்த மற்றுமொரு சொகுசு பேரூந்து வீதியை விட்டு விலகிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பேரூந்து சாரதி மற்றும் பெண் ஒருவர் உட்பட 3 பேர் மரணமடைந்ததுடன்,

16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துக்குள்ளான அதி சொகுசு பேரூந்தினை மீட்கும் பணி பாரிய பாரந்தூக்கியின் துணையுடன் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஏ9 வீதி போக்குவரத்துக்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பாதிப்படைந்துள்ளதுடன், ஏ9 வீதியில் பாலத்தின் இரண்டு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் காத்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.

வவுனியா பேருந்து விபத்து : யாழ். பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!!

பேருந்து விபத்து..

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் யெர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் தீவில சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய – பெனித்து முல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என தெரியவருகிறது.

அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்துக்குளான அதி சொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இன்று (05.11.2022) காலை இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததுடன் இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரு சொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளான நிலையில் மேலும் ஒர் அதிசொகுசு பேரூந்து விபத்து!!

விபத்து..

வவுனியா ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் அதிசொகுசு பேரூந்து இன்று (05.11.2022) நள்ளிரவு 12.20 மணியளவில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (05.11.2022) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்ததுடன் பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன்,

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்தை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தியிருந்தமையுடன் பேரூந்து சிறு சேதங்களுக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில் ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியில் தரித்து நின்ற பேரூந்தினை முந்திச்செல்ல முற்பட்ட மற்றோரு அதிசொகுசு வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருந்தமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

வவுனியாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 3 அதிசொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து : மூவர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு புரண்டுள்ளது.

இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர். இதேவேளை குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு!!

தொழில் வழிகாட்டல் செயலமர்வு..

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஒன்று இன்று (04.11) இடம்பெற்றது.

வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்,

நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி தொழில் வழிகாட்டல் ஆலோகர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் குறித்த செயலமர்வு இடம்பெற்றது.

க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலை இடை விலகிய பின்னர் தொழில் வாய்ப்புக்களை பெற முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாடசாலை கல்வியின் பின் முன்னெடுக்கக் கூடிய கற்கைகள்,

வருமானம் ஈட்டும் தொழில் நுட்ப கற்கைகள் தொடர்பிலும், மாணவர்களின் எதிர்காலம் நோக்கிய வளமான வாழ்க்கை தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 96 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (04.11.2022) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் கிராமத்தில் இடம்பெற்றது.

குறித்த 100 நாள் செயல் முனைவின் 96 ம் நாள் போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ ‘ நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ‘,

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ‘ ‘ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு எங்கள் சுதந்திரம்,

எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பல நாட்கள் ஏக்கம்.. பெண் தேடி போலீஸ் நிலையம் வரை கோரிக்கை விடுத்த இளைஞர் : கடைசியில் சிறப்பாக நடந்த திருமணம்!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி. இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தனது பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாக அசீம் மன்சூரி பிறந்துள்ள நிலையில், இவரது உயரம் 2.3 அடி மட்டுமே உள்ளது.

இந்த உயரத்தின் காரணமாக இளம் வயதில் இருந்தே ஏராளமான கேலி, கிண்டலுக்கும் அசீம் ஆளாகி உள்ளதாக தெரிகிறது. முன்னதாக பள்ளி பருவத்தில் தனக்கு நேர்ந்த கேலியின் காரணமாக பள்ளி படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, சகோதரர்கள் நடத்திய அழகு நிறுவன கடையில் அசீம் மன்சூரி பணிபுரிந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தொடர்ந்து தனியாக கடை ஒன்றையும் நடத்தி தொழில் செய்து வருகிறார்.

மேலும் தனது தொழிலிலும் அசீம் சிறந்து விளங்கி வந்துள்ளார். ஆனால், கை நிறைய பணம் சம்பாதித்தாலும் ஒரே ஒரு ஏக்கம் மட்டும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

நன்கு பணம் சம்பாதித்த பிறகும் தான் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லையே என ஏங்கி வந்துள்ளார் மன்சூரி. இதற்காக பல இடங்களிலும் அவர் பெண் தேடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் பார்த்து தாருங்கள் என போலீஸ் நிலையத்திலும் கோரிக்கை ஒன்றை அசீம் மன்சூர் அளித்திருந்த போது அவர் குறித்த செய்தி, அதிகம் வைரலாகி இருந்தது. இது தவிர, முதலமைச்சர்களுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார் மன்சூரி.

இந்த நிலையில், நீண்ட நாள் ஏக்கத்திற்கு பின்னர் அசீம் மன்சூருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. அசீம் ஊருக்கு அருகே உள்ள ஹபூர் எனும் பகுதியை சேர்ந்தவர் புஷாரா.

இவர் சுமார் 2.5 அடிக்கு மேல் உயரமுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த ஆண்டு அசீம் மற்றும் புஷாரா ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமண நிச்சயதார்ததமும் கடந்த ஆண்டு நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

அதே வேளையில், புஷாரா பட்டப்படிப்பு படித்து வந்ததால் ஓராண்டு கழித்து திருமணத்தை நடத்தி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அசீம் மன்சூரி – புஷாரா திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

திருமண கோலத்தில் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வரும் நிலையில் அப்பகுதியில் அசீம் மன்சூரிக்கு திருமணம் நடந்ததை பெரிய அளவில் கொண்டாடி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.