திட்டமிட்டு ப.திவுசெய்யப்பட்ட ஆ.பா.ச வீ.டியோ : இ.ளம் பெ.ண்ணிடம் ஏ.மாந்த மடாதிபதி எடுத்த வி.பரீத முடிவு!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பழமையான காஞ்சுக்கல் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமிகள் (வயது 45) இருந்து வந்தார்.

இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வருகிறார். இதனால் இவருக்கு அந்த பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்துள்ளது. இவர் கடந்த தீபாவளி தினத்தன்று எப்போதும் வெளியே வரும் நேரத்தில் வெளிவராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரின் சிஷ்யர்கள் அவரின் அறைக்கு சென்றுபார்த்தபோது ஜன்னலில் உள்ள கிரீல் கம்பியில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டது தெரியவந்தது.

இதனைக் கண்டு அ.திர்ச்சியடைந்த அவரின் சிஷ்யர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸார் மடாதிபதியின் அறையில் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு கடிதம் இருந்துள்ளது.

அந்த கடிதத்தில் மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் த.வறான செ.ய்திகளை பரப்ப நினைக்கின்றனர்.

இதுதொடர்பாக என்னை மி.ரட்டியதால் நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதாக கூறியிருந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் கடும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலிஸார் நடத்திய வி.சாரணையில் 22 வயதான நீலாம்பிகா என்னும் கல்லூரி மாணவி ஒருவர் சிக்கினார்.

அவரிடம் நடத்திய வி.சாரணையில், கண்ணூர் மடாதிபதியின் தூண்டுதலில்படி பசவலிங்க சுவாமிகளிடம் அந்த மாணவி நெருக்கமாகியுள்ளார். பின்னர் அடிக்கடி செல்போனில் இருவரும் பேசிய நிலையில், தொடர்ந்து வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் நி.ர்.வா.ண.மா.க வீ.டியோ கால் மூலம் பேசிவந்த நிலையில் அதனை அந்த பெண் ஸ்கீரின் ரெக்கார்ட் மூலம் பதிவு செய்து வைத்துள்ளார்.

இவ்வாறு 4 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை வைத்து பசவலிங்க சுவாமிகளை இவர்கள் மி.ர.ட்.டி வ.ந்துள்ளனர். இதனால் அ.ஞ்சிய மடாதிபதி த.ற்.கொ.லை செ.ய்து.கொண்டுள்ளார்.

ஹனிடிராப் என்று அழைக்கப்படும் இதேபோன்று செயலால் ஒடிசாவில் பாஜக தலைவர்கள் ஒரு பெண்ணிடம் சி.க்கிய நிலையில், தற்போது கர்நாடகாவில் ஹனிடிராப்பில் சிக்கி மடாதிபதி த.ற்.கொ.லை செ.ய்து கொண்டது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு!!

நெடுங்கேணியில்..

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில்,

வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுங்கேணி பொலிசார், விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் குறித்த கைக்குண்டை மீட்டெடுத்ததுடன், அதனை செயலிழக்கச் செய்துள்ளனர். குறித்த கைக்குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஜே.ஆர் வகைக்குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை!!

விசேட சோதனை..

போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா, நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று (04.11) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன்,

வீதியால் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள் என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனை மேற்கொண்டனர்.

காதல் இல்லை, தப்பியோடவில்லை… 4 பள்ளி மாணவிகள் மாயம்.. சிக்கிய கடிதம்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் நான்கு பள்ளி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் ஒன்றாக காணாமல் போயுள்ளனர்.

குறித்த 4 மாணவிகளும் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதில், ‘எங்கள் நன்மைக்காக நாங்கள் செல்கிறோம். எந்த காதல் வலையிலும் சிக்கவில்லை, தப்பியோடவும் இல்லை. நீங்கள் எப்போதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்’ என தெரிவித்திருந்தனர்.

மேலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே குறித்த மாணவிகளின் எண்ணம் என்றும், ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன் வீடு திரும்புவோம் எனவும் ஒரு மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி விசாரித்துள்ளனர். ஆனால் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் உடனடியாக புகாரின் பேரில் தனிப்படைகள் அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர்.

ராணி மாதிரி இருக்கின்ற மனைவி.. மகாராணி போல் பார்த்துக்கொள்ளும் கணவன்.. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை!!

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வீரபத்திர மணி. இவர் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தாத்தா – பாட்டி அரவணைப்பிலும் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை படிப்பில் சிறந்து விளங்கிய வீரபத்திரமணி, பாட்டியின் இறப்புக்கு பிறகு பொருளாதார சூழ்நிலை காரணமாக அதன் பின்னர் படிப்பை தொடர முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், அருகேயுள்ள மைக் செட் கடையில் ஆபரேட்டராகவும் வீரபத்திரமணியும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கிடைத்த வருவாய் மூலம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் பயிற்சியையும் அவர் முடித்துள்ளார்.

அதே வேளையில், மைக் செட் கடையில் வீரபத்திரமணி போடும் பாடல்களுக்கு அப்பகுதியில் நிறைய பேர் ரசிகர்களாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது..

அப்படி சுமதி என்ற பெண்ணுடன் வீரபத்திரமணிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது காதலையும் சுமதியிடம் வீரபத்திரமணி வெளிப்படுத்த, ஒரு மாத கால அவகாசத்திற்கு பின்னர் அவர் சம்மதமும் சொல்லி உள்ளார். இது பற்றி பேசும் சுமதி, “எனது வீட்டில் விஷயம் தெரிந்ததும் எனது தந்தை பிரச்சனை செய்து விட்டார்.

இது பற்றி இவரிடம் நான் தெரிவித்தேன். அவரது தாத்தா இறந்து மூன்று நாள் கழித்து என்னை அழைத்து சென்றார். அதன் பின்னர், நண்பர்கள் சிலர் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்தோம். இப்போது கடை வைத்து நன்றாக தான் என்னை பார்த்து கொள்கிறார்” என்றார்.

காரைக்குடியில் அமராவதி புதூர் என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வீரபத்திரமணி மற்றும் சுமதி ஆகியோர் தங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மொபைல் சர்வீஸ் கடை ஒன்றை வீரபத்திரமணி நடத்தி வரும் நிலையில், அவரது நிலையை கருத்தில் கொண்டு மூன்று சக்கர வண்டி ஒன்றையும் தவணை முறையில் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார்.

இதனிடையே, அந்த நபரும் இறந்து போக தவணை பணத்தையும் கட்ட தொடங்கி உள்ளார் வீரபத்திரமணி. 3 ஆண்டுகளாக எந்தவித நிதியுதவியும் இல்லாமல் மனைவியை பார்த்து வரும் வீரபத்திரமணி, அரசு உதவி கிடைத்தால் ராணி மாதிரி இருக்கும் எனது மனைவியை மகாராணி மாதிரி பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பாம்பை கடித்தே கொன்ற வினோத சிறுவன்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஜாஷ்பூர் மலைவாழ் பகுதி.இங்கு பழங்குடியின மக்கள் தான் அதிக அளவி வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் மிகமிக அதிகம். இப்பகுதிக்கு நாகலோகம் என்ற பெயருமுண்டு. இந்த மாவட்டத்தில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் இந்த மக்களிடையே அதிகம்.

சத்தீஸ்கரில் காணப்படும் 80 சதவீத பாம்பு இனங்கள் ஜாஷ்பூரில் தான் வசிக்கின்றன. ஜாஷ்பூரில் அதிகமாக காணப்படும் 26 வகையான பாம்புகளில் 6 இனங்கள் மட்டுமே மிகுந்த விஷம் கொண்டவை.

மீதமுள்ள 20 இனங்கள் விஷமற்றவை. ஜாஷ்பூரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 35 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். 2017ல் 16 பேரும், 2018ல் 6 பேரும், 2019ல் 12 பேரும் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் ஜாஷ்பூர் மாவட்டம் பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 12 வயது சிறுவன் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நாகப்பாம்பு ஒன்று சிறுவனை கடித்தது. உடனே அந்த சிறுவன் தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை வளைத்துப் பிடித்து தனது கையில் சுற்றிக் கொண்டு அந்த பாம்பை கடித்துள்ளான்.

அந்த நாகப்பாம்பு துடிதுடித்து உயிரிழந்து விட்டது. அதே நேரத்தில் அந்த சிறுவனுக்கு பாம்பு கடித்து எதுவும் ஆகவில்லை என்பதே ஆச்சர்யம். அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை கேட்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் ஒரு நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். அவன் உடல் ஆரோக்கியமாக இயங்குவதை உறுதி செய்த பிறகு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில், “பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன். இதனால் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு இரண்டு முறை கடித்தேன். எல்லாமே ஒரே நொடியில் நடந்து முடிந்து விட்டது, “எனக் கூறியுள்ளார்.

பாம்பு கடித்தபோது விஷம் சிறுவனின் உடலில் பரவததால் விரைவாக குணமடைந்தார், ஆனால் விஷம் இதுவரை வெளியேறவில்லை. இத்தகைய பாம்புக்கடிகள் வலிமிகுந்தவை என பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த காதலன் : காதலி எடுத்த துணிச்சல் முடிவு!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. அதே ஊரில் வசித்து வருபவர் காளிமுத்து மகன் பாலமுருகன். இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் 6 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துள்ளது. பலமுறை எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் உறுதியளித்ததாக எபிலாதேவி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலமுருகன் தற்பொழுது எபிலாதேவியை திருமணம் செய்ய மறுத்த பாலமுருகன் நவம்பர் 7ம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்யமால் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் எபிலாதேவி, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் உறவினர் ஒருவர் காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய காதலன் பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி எபிலாதேவி கயத்தார் தாலூகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எபிலாதேவியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பனிடம் வழங்கினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காதலித்தவரை மணக்க இளம்பெண் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அந்த பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாக இருந்தது.

பெற்றோருக்கு போன் செய்து கண்டித்த ஆசிரியை : பயத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

நாகையில்..

நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஸ்ரீநிதி இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி ஆங்கில தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நேற்று ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார்.

மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாணவியின் தேர்வுத் தாளை வாங்கி பார்த்த ஆசிரியர் மதிப்பெண் திருத்திருப்பதை பார்த்து கண்டித்து மாணவியின் பெற்றோர்களுக்கு போன் செய்து சொல்லி உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி பள்ளி முடிந்து வந்தவர் வீட்டின் அருகே உள்ள குளத்தின் அருகே ஸ்கூல் பேக்கை வைத்து விட்டு குளத்தில் குதித்து உள்ளார். தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை களையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வகுப்புக்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பெருமழை கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மகள் 18 வயது இந்துஜா.

இவர், வேதாரண்யம் அருகே கடிநெல்வயல் பகுதியில் உள்ள நவஜீவன் கமிட்டி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்துஜா வீட்டின் ஏழ்மை காரணமாக பயிற்சி கல்லூரியில் உள்ள கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் பிற்பகல் உணவு அருந்திய பிறகு கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரை தேடியதில் இந்துஜா கழிவறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் ‘அப்பா… நீங்கள் மதுகுடிக்க வேண்டாம். அம்மாவை அடிக்காதீர்கள். இந்தப் படிப்பும், தனிமையில் இருப்பதும் பிடிக்கவில்லை.

என்னென்னவோ செய்யவேண்டும் என நினைத்தேன். அதையெல்லாம் அண்ணன் செய்வான். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமான கடிதம் ஒன்றை தனது தந்தைக்கு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் சாவில் சதேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மருத்துவர்கள் மூலம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்ட பிறகு ணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரிக்கு படிக்க சென்ற மாணவி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் மஸ்தான்!!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

அரசாங்கத்தால் பல மில்லியன் ருபாய்கள் செலவு செய்து பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அந்த மாவட்ட மக்களோ அல்லது ஏனைய மக்களோ பயன்படுத்தாது சேதமடைந்து வருகிறது.

எமது அமைச்சுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. மக்கள் பாவனைக்கு விடுவதற்காக நேரடியாக சென்று அப் பொருளாதார மத்திய நிலையங்களில் என்ன பிரச்சனை என ஆய்வு செய்து வருகின்றேன்.

இதன்பின் அரச அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

ஏனைய மாவட்ட பிரச்சனை வேறு. இங்கு வேறு பிரச்சனை. பொருளாதார மத்திய நிலையத்திற்குரிய கடைகளை இன்னும் வழங்கவில்லை. விவசாயிகள், மரக்கறி விபாபாரிகள் ஆகியோருக்கு இதனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது என்றே கொன்றேன்… இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்!!

கேரளாவில்..

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 14 ஆம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25 ஆம் தேதி அவர் உயிர் இழந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அதில், நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது.

கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் என்று கூறுகிறார். அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்கிறார்.

ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை.

அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். பிறகு போலீஸ் விசாரணையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன்ராஜின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து கிரீஸ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் அவரது வீடு சேதமானது. கிரீஸ்மா கிருமிநாசினியை குடிக்கும்போது பணியில் இருந்தஇரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீஸ்மாவின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது.

காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷாரோன் குடித்துள்ளார். கசாயத்தில் களைக்கொல்லி மருந்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார்.

இரண்டாவது தாரமே தங்கும் என்று சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது.

இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிட்டுவிடுவார் என்ற பயம் இருந்துள்ளது.இதுதான் முக்கிய காரணம் ஆகும். ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றுள்ளார்.

அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கிரீஸ்மா வின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

குற்றம் நடைபெற்ற சம்பவ இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இடம் என்பதால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்… ஊசி போட்டு கொன்று விட்டார்கள்.. கதறிய சிறுமியின் தாய்!!

சென்னையில்..

சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – வசந்தி தம்பதியின் மகள் நந்தினி (15). பள்ளி மாணவியான இவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குடற்புண் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி நந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு சிறுமிக்கு செவிலியர்கள் ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தனது மகள் உயிரிழந்துவிட்ட செய்தியை கேட்ட சிறுமியை தாய் கதறி அழுதுள்ளார். ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகளை ஊசி போட்டு கொன்று விட்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், சிறுமியின் உடல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுமியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப்..

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

தகவல்களை சேமிக்க உதவும் இந்த வசதியை, விரைவில் அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய புதுப்பித்தல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீதியோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம்.. பரபரப்பான மக்கள்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்.

துவக்கத்தில் இருவரும் நண்பர்களாக பேசிவந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.

தினேஷ் – கார்த்திகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் வீட்டினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, தினேஷ் தனது வீட்டாரிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்போது தினேஷின் தாய் திருமணத்திற்க்கு சம்மதித்திருக்கிறார். இதனையடுத்து மணமகள் வீட்டாருக்கு தெரியாமலேயே திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் தினேஷ் – கார்த்திகா எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். ரோஜா மாலையுடன் அங்கு வந்த ஜோடி, மாலையை மாற்றிக்கொண்டது.

அப்போது தினேஷ் தனது காதலிக்கு தாலி கட்டினார். அதனை தொடர்ந்து இருவரும் மாலையும் கழுத்துமாக அங்கிருந்த வேப்பமரத்தை சுற்றி வந்தனர். பின்னர் தினேஷின் தாயாரிடத்தில் இருவரும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடியின் பிராதன சாலையில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலில் அவசர அவசரமாக நடைபெற்ற இந்த திருமணத்தை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் பரபரப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில், இந்த திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் மீது 5 லீட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்!!

அரியானாவில்..

அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25 வயதுடைய இளைஞரான இவருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தினால் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கத்தால் அஞ்சலி, ஷியாம் சிங்கை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக்கொள்வது, வெளியே செல்வது என்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதனால் காதலிக்க தொடங்கிய அஞ்சலி, தனது தாயுடன் ஷியாம் அத்தையிடம் மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து ஷ்யாமிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு சிறிது காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார் பிறகு அஞ்சலி குறித்து விசாரிக்கையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானதும், அவரது கணவரை பிரிந்து வாழ்வதும் ஷ்யாம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

எனவே அஞ்சலியிடம் திருமணத்திற்கு ஷியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஷ்யாமின் அத்தையும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த அஞ்சலி, ஷ்யாமிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளர்.

அப்படி சம்பவத்தன்று பால் வாங்க கடைக்கு சென்ற ஷியாம் சிங்கை மடக்கிய அஞ்சலி, அவரிடம் தகராறு செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் ஷ்யாமோ தொடர்ந்து மறுத்துள்ளார். அப்போது தனது கையில் 5 லிட்டர் கேனில் வைத்திருந்த ஆசிட்டை ஷியாம் மீது ஊற்றியுள்ளர்.

இதை துடிதுடித்து அலறிய ஷ்யாமின் கை, கால், உடல் என அனைத்து இடத்திலும் தீக்காயம் பட்டு கதறியுள்ளார். பின்னர் அவரை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்தனர். மேலும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது ஷ்யாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளியான அஞ்சலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் ஒருவர் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி களத்தடுப்பு செய்த விராட் கோலி மீது கடும் குற்றச்சாட்டு!!

விராட் கோலி..

20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் நூருல் ஹசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

20க்கு 20 கிரிக்கெட் உலககிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் மோதின. பரப்பரப்பான இந்த ஆட்டத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 185 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக துடுப்பெடுத்து ஆடினார்.

அவர் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பு இன்றி 66 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

எனினும் சீரற்ற வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதுடன் மழை நின்ற பின்னர் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது இந்திய அணி சிறப்பாக பந்து வீச இறுதியில் 5 ஓட்டங்களால் வெற்றியை பெற்றது. இந்நிலையிலே விராட் கோலிக்கு எதிராக போலியான களத்தடுப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் இந்த நடவடிக்கை சர்வதேச கிரிகெட் பேரவையின் விதிகளுக்கு முரணாணது எனவும் அதற்காக பெனால்ட்டி முறையில் 5 ஓட்டங்கள் வழங்கியிருக்க வேண்டும் எனவும் நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.

போட்டியின் போது ஏழாவது ஓவரை இந்திய அணியின் அக்சார் பட்டேல் வீசியிருந்தார். இந்த ஓவரின் 3-வது பந்தை லிட்டன் தாஸ் மிட் விக்கெட் ஆஃப் திசையில் அடித்தார்.

பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் காப்பாளரிடம் வீசினார். எனினும் இதன்போது விராட் கோலி பந்தை பிடித்து வீசுவது போல் சைகை செய்தார். இது போலியான களத்தடுப்பு ஆகும்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் பார்த்தால் பெனால்டியாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.