6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த காதலன் : காதலி எடுத்த துணிச்சல் முடிவு!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. அதே ஊரில் வசித்து வருபவர் காளிமுத்து மகன் பாலமுருகன். இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் 6 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துள்ளது. பலமுறை எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் உறுதியளித்ததாக எபிலாதேவி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலமுருகன் தற்பொழுது எபிலாதேவியை திருமணம் செய்ய மறுத்த பாலமுருகன் நவம்பர் 7ம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்யமால் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் எபிலாதேவி, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் உறவினர் ஒருவர் காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய காதலன் பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி எபிலாதேவி கயத்தார் தாலூகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எபிலாதேவியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பனிடம் வழங்கினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காதலித்தவரை மணக்க இளம்பெண் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அந்த பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாக இருந்தது.

பெற்றோருக்கு போன் செய்து கண்டித்த ஆசிரியை : பயத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

நாகையில்..

நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஸ்ரீநிதி இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி ஆங்கில தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நேற்று ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார்.

மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாணவியின் தேர்வுத் தாளை வாங்கி பார்த்த ஆசிரியர் மதிப்பெண் திருத்திருப்பதை பார்த்து கண்டித்து மாணவியின் பெற்றோர்களுக்கு போன் செய்து சொல்லி உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி பள்ளி முடிந்து வந்தவர் வீட்டின் அருகே உள்ள குளத்தின் அருகே ஸ்கூல் பேக்கை வைத்து விட்டு குளத்தில் குதித்து உள்ளார். தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை களையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வகுப்புக்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பெருமழை கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மகள் 18 வயது இந்துஜா.

இவர், வேதாரண்யம் அருகே கடிநெல்வயல் பகுதியில் உள்ள நவஜீவன் கமிட்டி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்துஜா வீட்டின் ஏழ்மை காரணமாக பயிற்சி கல்லூரியில் உள்ள கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் பிற்பகல் உணவு அருந்திய பிறகு கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரை தேடியதில் இந்துஜா கழிவறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் ‘அப்பா… நீங்கள் மதுகுடிக்க வேண்டாம். அம்மாவை அடிக்காதீர்கள். இந்தப் படிப்பும், தனிமையில் இருப்பதும் பிடிக்கவில்லை.

என்னென்னவோ செய்யவேண்டும் என நினைத்தேன். அதையெல்லாம் அண்ணன் செய்வான். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமான கடிதம் ஒன்றை தனது தந்தைக்கு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் சாவில் சதேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மருத்துவர்கள் மூலம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்ட பிறகு ணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரிக்கு படிக்க சென்ற மாணவி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் மஸ்தான்!!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

அரசாங்கத்தால் பல மில்லியன் ருபாய்கள் செலவு செய்து பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அந்த மாவட்ட மக்களோ அல்லது ஏனைய மக்களோ பயன்படுத்தாது சேதமடைந்து வருகிறது.

எமது அமைச்சுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. மக்கள் பாவனைக்கு விடுவதற்காக நேரடியாக சென்று அப் பொருளாதார மத்திய நிலையங்களில் என்ன பிரச்சனை என ஆய்வு செய்து வருகின்றேன்.

இதன்பின் அரச அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

ஏனைய மாவட்ட பிரச்சனை வேறு. இங்கு வேறு பிரச்சனை. பொருளாதார மத்திய நிலையத்திற்குரிய கடைகளை இன்னும் வழங்கவில்லை. விவசாயிகள், மரக்கறி விபாபாரிகள் ஆகியோருக்கு இதனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது என்றே கொன்றேன்… இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்!!

கேரளாவில்..

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 14 ஆம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25 ஆம் தேதி அவர் உயிர் இழந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அதில், நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது.

கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் என்று கூறுகிறார். அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்கிறார்.

ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை.

அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். பிறகு போலீஸ் விசாரணையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன்ராஜின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து கிரீஸ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் அவரது வீடு சேதமானது. கிரீஸ்மா கிருமிநாசினியை குடிக்கும்போது பணியில் இருந்தஇரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீஸ்மாவின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது.

காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷாரோன் குடித்துள்ளார். கசாயத்தில் களைக்கொல்லி மருந்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார்.

இரண்டாவது தாரமே தங்கும் என்று சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது.

இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிட்டுவிடுவார் என்ற பயம் இருந்துள்ளது.இதுதான் முக்கிய காரணம் ஆகும். ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றுள்ளார்.

அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கிரீஸ்மா வின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

குற்றம் நடைபெற்ற சம்பவ இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இடம் என்பதால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்… ஊசி போட்டு கொன்று விட்டார்கள்.. கதறிய சிறுமியின் தாய்!!

சென்னையில்..

சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – வசந்தி தம்பதியின் மகள் நந்தினி (15). பள்ளி மாணவியான இவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குடற்புண் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி நந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு சிறுமிக்கு செவிலியர்கள் ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தனது மகள் உயிரிழந்துவிட்ட செய்தியை கேட்ட சிறுமியை தாய் கதறி அழுதுள்ளார். ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகளை ஊசி போட்டு கொன்று விட்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், சிறுமியின் உடல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுமியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப்..

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

தகவல்களை சேமிக்க உதவும் இந்த வசதியை, விரைவில் அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய புதுப்பித்தல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீதியோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம்.. பரபரப்பான மக்கள்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்.

துவக்கத்தில் இருவரும் நண்பர்களாக பேசிவந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.

தினேஷ் – கார்த்திகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் வீட்டினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, தினேஷ் தனது வீட்டாரிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்போது தினேஷின் தாய் திருமணத்திற்க்கு சம்மதித்திருக்கிறார். இதனையடுத்து மணமகள் வீட்டாருக்கு தெரியாமலேயே திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் தினேஷ் – கார்த்திகா எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். ரோஜா மாலையுடன் அங்கு வந்த ஜோடி, மாலையை மாற்றிக்கொண்டது.

அப்போது தினேஷ் தனது காதலிக்கு தாலி கட்டினார். அதனை தொடர்ந்து இருவரும் மாலையும் கழுத்துமாக அங்கிருந்த வேப்பமரத்தை சுற்றி வந்தனர். பின்னர் தினேஷின் தாயாரிடத்தில் இருவரும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடியின் பிராதன சாலையில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலில் அவசர அவசரமாக நடைபெற்ற இந்த திருமணத்தை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் பரபரப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில், இந்த திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் மீது 5 லீட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்!!

அரியானாவில்..

அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25 வயதுடைய இளைஞரான இவருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தினால் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கத்தால் அஞ்சலி, ஷியாம் சிங்கை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக்கொள்வது, வெளியே செல்வது என்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதனால் காதலிக்க தொடங்கிய அஞ்சலி, தனது தாயுடன் ஷியாம் அத்தையிடம் மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து ஷ்யாமிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு சிறிது காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார் பிறகு அஞ்சலி குறித்து விசாரிக்கையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானதும், அவரது கணவரை பிரிந்து வாழ்வதும் ஷ்யாம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

எனவே அஞ்சலியிடம் திருமணத்திற்கு ஷியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஷ்யாமின் அத்தையும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த அஞ்சலி, ஷ்யாமிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளர்.

அப்படி சம்பவத்தன்று பால் வாங்க கடைக்கு சென்ற ஷியாம் சிங்கை மடக்கிய அஞ்சலி, அவரிடம் தகராறு செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் ஷ்யாமோ தொடர்ந்து மறுத்துள்ளார். அப்போது தனது கையில் 5 லிட்டர் கேனில் வைத்திருந்த ஆசிட்டை ஷியாம் மீது ஊற்றியுள்ளர்.

இதை துடிதுடித்து அலறிய ஷ்யாமின் கை, கால், உடல் என அனைத்து இடத்திலும் தீக்காயம் பட்டு கதறியுள்ளார். பின்னர் அவரை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்தனர். மேலும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது ஷ்யாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளியான அஞ்சலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் ஒருவர் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி களத்தடுப்பு செய்த விராட் கோலி மீது கடும் குற்றச்சாட்டு!!

விராட் கோலி..

20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் நூருல் ஹசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

20க்கு 20 கிரிக்கெட் உலககிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் மோதின. பரப்பரப்பான இந்த ஆட்டத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 185 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக துடுப்பெடுத்து ஆடினார்.

அவர் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பு இன்றி 66 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

எனினும் சீரற்ற வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதுடன் மழை நின்ற பின்னர் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது இந்திய அணி சிறப்பாக பந்து வீச இறுதியில் 5 ஓட்டங்களால் வெற்றியை பெற்றது. இந்நிலையிலே விராட் கோலிக்கு எதிராக போலியான களத்தடுப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் இந்த நடவடிக்கை சர்வதேச கிரிகெட் பேரவையின் விதிகளுக்கு முரணாணது எனவும் அதற்காக பெனால்ட்டி முறையில் 5 ஓட்டங்கள் வழங்கியிருக்க வேண்டும் எனவும் நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.

போட்டியின் போது ஏழாவது ஓவரை இந்திய அணியின் அக்சார் பட்டேல் வீசியிருந்தார். இந்த ஓவரின் 3-வது பந்தை லிட்டன் தாஸ் மிட் விக்கெட் ஆஃப் திசையில் அடித்தார்.

பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் காப்பாளரிடம் வீசினார். எனினும் இதன்போது விராட் கோலி பந்தை பிடித்து வீசுவது போல் சைகை செய்தார். இது போலியான களத்தடுப்பு ஆகும்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் பார்த்தால் பெனால்டியாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனம் மோதியதில் 10 வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி!!

நாகர்கோவிலில்..

சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் விபத்துக்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவர்களின் மன அழுத்தமே காரணம் என மனவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை களையும் வகையில் பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் மாணவர்கள் அலட்சியத்தால் அசம்பாவிதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அதே போல் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி குமார் ராஜ். தையல்காரரான இவருக்கு ஜெர்வின் ஸ்டார் (15) என்ற மகன் உள்ளார்.

இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் ஜெர்வின் ஸ்டார் தனது தாயாரை பழவிளை அருகே புல்லுவிளையில் உள்ள தொழிற்சாலைக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.

அங்கு தாயாரை இறக்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த ஜெர்வின், பருத்திவிளையில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது பருத்திவிளையில் இருந்து எறும்புகாடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் ஜெர்வின் ஸ்டார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலையில் ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேம்பனூர் புளியடி காலனியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20), பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஆகாஷ் (16) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும், குபேந்திரகிருஷ்ணன் (12). ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது.

அதனால் விரக்தியுற்ற தனலட்சுமி நேற்று இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அய்யனார் கதவை தட்டிய போது யாரும் திறக்காதால் சந்தேகம் அடைந்தவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், அய்யனார் மீதம் இருந்த விஷத்தை தானுமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8ஆம் திகதி சந்திர கிரகணம் : இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!!

சந்திர கிரகணம்..

சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், எதிர்வரும் 8ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும். இருப்பினும், சந்திரக் கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும்.

இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும். மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திர சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி: உதவச் சென்றவருக்கு நடந்த சோகம்!!

மன்னார்குடியில்..

ஓடிக் கொண்டிருந்த டிராக்டரில் இருந்து தவறி, கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவன், சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியான சம்பவம் மன்னார்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின், இரண்டாவது மகன் சுவேதன்(14) திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் கீழ நிம்மேலி கிராம மக்கள். பள்ளி முடிந்த பின்னர், கீழநெம்மேலி வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்த சுவேதன், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(50) என்பவர், டிராக்டரில் நெல் ஏற்றிக் கொண்டு காய வைப்பதற்காக அந்த பகுதியைக் கடந்து செல்வதைப் பார்தான்.

சுவேதனைக் கடந்து சென்ற சிறிது தூரத்தில், டிராக்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு டிராக்டரில் இருந்து கீழே இறங்கி பாண்டியன் சென்றார். பாண்டியன் நகர்ந்து சென்றதும், திடீரென டிராக்டர் தானாக நகர்ந்து செல்ல துவங்கியது.

இதனை கண்ட மாணவன் சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக ஓடிச் சென்று டிராக்டர் மீது ஏறி பிரேக்கை அழுத்த முயன்றான். அப்போது நிலைதடுமாறி சுவேதன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான்.

அவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நேரத்தில் டிராக்டர் நகர்ந்து, டிராக்டரின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடுவூர் போலீசார் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை.. சோகம் தாங்காமல் மகன் எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் வருணின் தாய் குடும்ப பிரச்சனை காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மகன் வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று வீட்டில் தனியாக இருந்த வருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை சொக்கலிங்கம் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த போலிஸார் வருண் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் தாய் இறந்த துக்கத்தில் வருண் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் வருண் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவுக்கு ஏற்பட்ட அரியவகை நோய் : தொகுப்பாளினி டிடி-யையும் விட்டுவைக்கவில்லை!!

நடிகை..

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார்.

சமுகவலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி வரும் காரணம் என்ன என்ற கேள்வி சமந்தாவிடம் எழுந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தார். இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கு தொகுப்பாளினி டிடி, நாம் எல்லாம் ஆட்டோ இம்யூன் வாரியர்கள் தான். நம்மால் இதை வெல்ல முடியும். கம்மான் ஃபைட்டர், ஆட்டோ இன்யூன் பிரச்சனையுடன் போராடும் எங்களுக்கு நீங்கள் தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கவும் என்ற கருத்தினை போட்டுள்ளார்.

இதனை பார்த்த டிடி ரசிகர்கள், அக்கா உங்களுக்கும் ஆர்த்டைடிஸ் என்ற நோய் இருக்கு தானே, உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா என்று கேள்வி கேட்டுள்ளனர். சமந்தாவை போல் நீங்களும் இதை வெல்ல வாழ்த்துக்கள் என்று கூறி வருகிறார்கள்.