காதலனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கூகுளில் காதலி தேடிய விடயம் : விசாரணையில் அம்பலமாகிய உண்மை!!

கேரளாவில்..

கேரளாவில் வசதியாக வரன் அமைந்ததால் உயிருக்கு உயிராக காதலித்த காதலனை காதலி விஷம் வைத்து கொலை செய்துள்ள நிலையில், பொலிசில் சிக்காமல் இருப்பது எப்படி என்ற கூகுளில் தேடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். இந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

மேலும் தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இவர் கல்லூரி படிப்பினை முடித்து வேலைக்கு சென்ற நிலையில் காதலன் மட்டும் படிப்பினை மேற்கொண்டு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கிரீஷ்மாவிற்கு வசதியான இடத்திலிருந்து வரன் வந்ததால், அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால் ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று காணப்பட்டதால், தான் காதலித்த ஷாரோனை தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.

பின்பு இவரைக் கொலை செய்துவிட்டால் இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று காதலி நினைத்து, தனது வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு குளிர்பானத்தில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தை குடித்ததும் வாந்தி எடுத்த ஷாரோனை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் தேதி சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.

பின்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தியிருப்பதாக தெரியவந்த நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கிரிஷ்மாவே இந்த கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளதோடு, போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என கூகுளில் தேடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அவ்வாறு வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்த பின்னரே இவ்வாறான கொலையை செய்துள்ளார். மேலும் கிரிஷ்மாவிற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாய்மாமன் இவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவில் கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்றி, தாயாகவும் மாறியுள்ளார் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது கணவர் ஆதில் மற்றும் மாமியார் தனது குழந்தையை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். பிறந்து 12 நாட்களே ஆன, தனது குழந்தையை மீட்டுத் தரும்படி ஆஷிகா கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையில், குழந்தையை மீட்க பெண் காவலர் ரம்யா உள்ளிட்ட அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, சுல்தான் பத்தேரியில் ஆஷிகாவின் கணவர் ஆதில் இருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அங்கே விரைந்து சென்ற போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். அப்போது குழந்தை மிகவும் சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ந்த காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்ந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதற்காக சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நேரத்தில் பசியால் குழந்தை அழத் துவங்கியிருக்கிறது. அப்போது அங்கு இருந்த ரம்யா மருத்துவர்களிடத்தில் தனக்கு ஒரு வயதில் குழந்தை இருப்பதாகவும் தான் இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? எனவும் கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கவே, தாய்ப்பால் அளித்து குழந்தையின் பசியை போக்கியுள்ளார் ரம்யா. இதனையடுத்து குழந்தை பத்திரமாக ஆஷிகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ரம்யாவின் செயலை நேரில் அழைத்து பாராட்டிய கேரள டிஜிபி அனில்காந்த் பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளார். மேலும், ரம்யா காவல்துறையின் முகமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன்,”பசியால் வாடிய சிசுவின் உயிரை காப்பாற்றிய பணி பாராட்டுதலுக்கு உரியது” எனத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல், பல்வேறு அதிகாரிகளும் ரம்யாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

லாட்டரியில் வென்ற 248 கோடியை குடும்பத்தாரிடம் இருந்த மறைத்த நபர்.. வெளிவந்த விநோத காரணம்!!

சீனாவில்..

லாட்டரியில் ரூ.248 கோடி ரூபாயை பரிசாக வென்ற நபர் அது குறித்த தகவலை தனது குடும்பத்தாரிடம் இருந்து மறைந்துள்ள சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர்.

அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். ஆனால் அதேபோல லாட்டரி வாங்கும் பலர் தங்கள் பணத்தை இழந்து வருவதும் நடந்து வருகிறது.

கேரளத்தில் லாட்டரி விற்பனை சிறப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல உலகளவில் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் சீனாவின், குவாங்சி ஜுவாங் (Guangxi Zhuang) எனும் பகுதியைச் சேர்ந்த லீ என்பவருக்கு 219 மில்லியன் யுவான், (இந்திய மதிப்பில் ரூ.248 கோடி) பரிசு விழுந்துள்ளது.

இது குறித்த அறிந்த அவர் இந்த செய்தியை குடும்பத்தாரிடம் இருந்து மறைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக செய்தித்தாள்களில் புகைப்படம் வந்தால் தன் வீட்டுக்கு இது தெரிந்தவிடும் என்பதால் கார்ட்டூன் உடையில் லாட்டரி பரிசை வாங்கியுள்ளார். வாங்கியவர் அதில் 5 மில்லியன் யுவானை நன்கொடையாக அளித்து வரிபோக மீதம் உள்ள 171 மில்லியன் யுவானை சொந்தமாகியுள்ளார்.

பின்னர் இது குறித்து பேசிய அவர், நான் லாட்டரி வென்றதைப் பற்றி, நான் என் மனைவியிடமோ, குழந்தையிடமோ சொல்லவில்லை. ஏனெனில், எதிர்காலத்தில் குழந்தைகள் படிக்காமலோ, கடுமையாக உழைக்காமலோ போகலாம் என்று கவலைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் அவர் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர். அதேபோல பலரும் அவரின் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இருவருடன் காதல்… ஒருவருடன் திருமணம்.. கர்ப்பிணிப் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல் வயப்பட்டு அதில் ஒருவரை மணந்த கர்ப்பிணி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி – பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார்.

இந்த நேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் (21) என்பவர் அடிக்கடி வந்து உள்ளார்.

இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. ஒரே நேரத்தில் பிருந்தா கார்த்தி, அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்து உள்ளார்.

இதில் கார்த்தி முந்திக்கொண்டு பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தெரிய வந்ததும் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், கணவர் கார்த்தி வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த காதலன் அரவிந்த், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிருந்தாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சென்னை தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் தலைமறைவாக இருந்த அரவிந்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வவுனியாவில் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை!!

வலி நிவாரணி மாத்திரைகள்..

வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும் சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் மாத்திரைகள் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்து மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஆகிய இருவரும் பெருந்தொகையாக வலி நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்திருந்தமை தொடர்பில் வவுனியா சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்து.

இவ்வாறான நிலையில் சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது அவை போதையை தரக்கூடியவை என்பதனால் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதுமாகும்.

அதேவேளை அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2023ல் இருளில் மூழ்கும் உலகம் : ஆசியா கண்டத்தை மூடும் நச்சு மேகங்கள் : பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!!

பாபா வங்கா..

2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

அந்த வகையில், 2023க்கான பாபா வங்காவின் கணிப்புகளின் படி, ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் என கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், ரஷ்யா – உக்ரைன் போர் முழு உலகிற்கும் உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பல முறை அச்சுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும். 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்.
வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும்.

இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும். 2023-க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.

மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023ல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் கண்பார்வையற்ற பாபா வங்கா கணித்துள்ளார்.

பாபா வங்கா உலக அழிவைப் பற்றியும் கணித்துள்ளார். உலகம் 5079 ஆம் ஆண்டில் அழியும்.

வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கக்கூடும். இது தவிர, பஞ்சம் போன்ற பேரிடர் பிரச்சினையையும் நாடு சந்திக்க நேரிடலாம்.

பூமியின் சுற்றுப்பாதை 2023 ஆம் ஆண்டு மாறும். அதே நேரத்தில், விண்வெளி வீரர்கள் 2028 ஆம் ஆண்டில் சுக்ரன் கிரகத்தை அடைவார்கள்.

2046-ம் ஆண்டில், மனிதர்கள் 100 வயது வரை வாழத் தொடங்குவார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு, மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல். அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார்.

2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும். ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும்.

பாபா வங்கா 2022 ஆம் ஆண்டு குறித்த சில கணிப்புகளில், இதுவரை இரண்டு கணிப்புகள் உண்மையாகி உள்ளது.

இதில் முதலாவதாக அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவை உண்மையாகியுள்ளது.

கனடா லொட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம் : கைக்கு வந்த பல கோடிகள்!!

லொட்டரியில்..

கனடா லொட்டரியில் 10 பேர் கொண்ட குழுவினருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் அதில் ஒரு அதிர்ஷ்டசாலி தமிழர் என தெரியவந்துள்ளது. ஒன்றாறியோவை சேர்ந்தவர் அவாடிஸ் ஜம்ஜியான்.

இவர் தலைமையிலான 10 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் லொட்டரி விளையாட்டில் சேர்ந்து ஈடுபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மேக்ஸ் மில்லியன்ஸ் லொட்டரி பரிசாக $500,000 (இலங்கை மதிப்பில் ரூ. 13,54,02,969.50) விழுந்துள்ளது. இந்த பத்து பேர் கொண்ட குழுவில் Mississauga-வை சேர்ந்த சந்திரௌதயன் செல்லத்துரை (Chandrauthayan Sellathurai) என் தமிழரும் இடம்பிடித்துள்ளார்.

இதன்மூலம் பெரிய தொகை அவருக்கும் கிடைத்துள்ளது. பரிசு பணத்தை வைத்து குடும்பத்தாருடன் கியூபாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவாடிஸ் கூறியுள்ள நிலையில் மற்றவர்கள் தங்கள் வெற்றிகளின் பங்கில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஆசை ஆசையாய் கட்டிய வீடு… அனுபவிக்க முடியாமல் கொலை செய்யப்பட்ட தம்பதி!!

கோவில்பட்டியில்..

கோவில்பட்டியில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடந்த ஒரே மாதத்தில் கணவன் – மனைவி க.ழு.த்.த.று.க்.கப்.ப.ட்.ட நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர்.

கொத்தனாராக வேலை பார்த்து வந்த ராஜபாண்டிக்கு தானும் புதிதாக பெரிய வீடு கட்ட வேண்டும் என்கிற லட்சியம் இருந்து வந்திருக்கிறது. இரவு பகலாக கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்த ராஜபாண்டி, பெருமாள் நகரில் 3 சென்ட் அளவில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார்.

இதில் தனக்கென தனியாக வீடு கட்ட வேண்டும் என நினைத்தவர், வங்கிகளில் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கட்டிட வேலைகளைத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கை மீறி செலவு செய்தவர் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு புதிதாக வீட்டைக் கட்டி கடந்த ஜூலை மாதம் கிரகப்பிரவேசம் செய்தார்.

வாழ்க்கையில் சந்தோஷம் பெருகி வந்தாலும், சில காலமாக கடன் பிரச்சினையும் இ.வர்களின் க.ழு.த்தை இ.றுக்கி வந்துள்ளது. படிக்கும் வயதில் பிள்ளைகள் இருப்பதால் முழு கடன் சுமையும், குடும்பத் தலைவர் ராஜபாண்டியின் மீது வி.ழுந்திருந்தது.

ஒரு கட்டத்தின் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ராஜபாண்டிக்கு நெ.ருக்கடி கொடுத்ததையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். மேலும் கடன் பிரச்சினையால் ராஜபாண்டிக்கும், மனைவி பரணி செல்விக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் ஞாயிறு இரவு மகன் மனோஜ்குமார் அவரது பெட்டிக் கடையைக் கவனிக்கச் சென்று விட்டார். மகள் உமாவும் வெளியே சென்ற நிலையில் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே பி.ரச்சினை வெடித்துள்ளது.

அதிக கடன் சுமையால் ஏற்கெனவே ம.னம் உ.டைந்து போன ராஜபாண்டி, கட்டிய மனைவியென்றும் பாராமல் பரணிசெல்வின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கி.ழி.த்.தா.ர். கண் முன்பே மனைவி சரிந்து வி.ழுந்து இ.றந்ததைப் பார்த்தவர், தன்னைத்தானும் கு.த்.தி.க் கொண்டு இ.ற.ந்.து போனார்.

பெட்டிக்கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற மனோஜ்குமார், உள்பக்கமாக வீடு பூட்டியிருந்ததைக் கண்டு அ.திர்ந்து போனார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியால் உள்ளே சென்று பார்த்தபோது, தாய் – தந்தை இருவருமே க.ழு.த்.த.று.பட்.டு உ.யி.ரிழந்ததைக் கண்டு க.தறித்துடித்தார்.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால் சமாளிக்க முடியாத தம்பதி, புதிய வீடு கட்டிய சில மாதத்திலேயே அவர்கள் முடிவை அவர்களாகவே தேடிக் கொண்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி : கூகுளில் தேடிய பெண்!!

கேரளாவில்..

ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.

இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த விவகாரத்தை அறிந்த காதலன் ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். இதனை சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உடனே அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காதலனை காததலி கிரீஷ்மாவே விஷம் வைத்து கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக கிரீஷ்மா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது.

வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்துள்ளார். மேலும் ஷாரோன் விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் தாயார் அழித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மாவின் தாய், தாய் மாமன் உள்ளிட்ட 3 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு : சிறுமியின் உயிரைப் பறித்த சோகம்!!

மும்பையில்..

மும்பையின் மன்குர்த் என்ற பகுதியில் லிப்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரேஷ்மா கரவி என்ற அந்த சிறுமி தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டின் ஒரு பகுதியாக அருகில் மறைந்திருந்த தனது தோழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்,

லிப்டில் இருந்த ஜன்னல் போன்ற திறப்புக்குள் தலையை விட்டு பார்த்தபோது லிப்ட் கீழே இறங்க, மாணவியின் தலையில் மோதி உயிரிழந்துள்ளார்.

ஹவுசிங் சொசைட்டியை அதிகாரிகள் அலட்சியமாக நடத்துவதாக இறந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறுகையில், இது மாதிரியான அவலங்களைத் தவிர்க்க வீட்டுவசதி சங்கம் இதுபோன்ற திறப்பை அலட்சியப்படுத்தாமல் கண்ணாடியால் மூடியிருக்க வேண்டும் என்றார்.

ரேஷ்மாவின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகி புகார் கொடுத்ததில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மன்குர்த் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் மகாதேவ் காம்ப்ளே கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக வீட்டு வசதி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளோம் என்றார்.

ரேஷ்மாவின் குடும்பம் அப்பகுதியின் அருகிலுள்ள சாத்தே நகரில் வசித்து வருகிறது. அவரது பாட்டி மன்குர்டில் உள்ள ஹவுசிங் சொசைட்டியின் ஐந்தாவது தளத்தில் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக தனது பாட்டியை பார்க்கச் சென்றபோது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தின் பின்னர் முதல் முறையாக குறைவடைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,282 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது.

மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் டொலரின் மதிப்பில் அதிக உயர்வு ஏற்பட்டதற்கு பிறகு தங்கத்தின் விலையில் முதன்முறையாக ஏற்பட்ட வீழ்ச்சி இதுவென்று கூறப்படுகின்றது.

அதேசமயம், ஏப்ரல் 2022 இல், 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 175,000 என்ற அளவிலும் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 190,000 ரூபாவையும் தாண்டியது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

வவுனியாவில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு!!

எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

மாவட்டத்தின் பெரும்பாலான எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், மக்கள் அதனை பெற முடியாது திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் விற்பனை செய்ய மறுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு வினவிய போது, எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை உறுதியாக கூற முடியாது.

இதன் காரணமாக விற்பனை நிலையத்தினர் குறைந்தளவில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையினால் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர்.

நண்பனின் படுக்கையறைக்கு மனைவியை அனுப்பிய கணவனின் முகம் சுழிக்கும் செயல்!!

த.ன்னுடைய ம.னைவியை..

த.ன்னுடைய ம.னைவியை ம.ற்றுமொருவருக்கு ப.கிர்ந்து, அ.தனை வீ.டியோ எ.டுத்த க.ணவனை பொ.லிஸார் நே.ற்று (31.10.2022) கை.து செ.ய்துள்ளனர். த.ன்னுடன் ச.ட்டரீதியாக தி.ருமணமான க.ணவன்,

அ.வருடைய ந.ண்பரான 23 வ.யதான இ.ளைஞனுடன் இ.ரவு வே.ளையில் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு, ந.ண்பருடன் க.ணவன், ம.னைவியாக இ.ருக்குமாறு அ.ச்.சு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

அத்துடன் மனையியை க.டு.மை.யா.க தா.க்.கி.ய.து.ட.ன் ந.ண்பருடன் வ.ற்புறுத்து அனுப்பி ப.டு.க்.கையறை கா.ட்சிகளை தன்னுடைய அலைபேசியில் வீ.டியோவாக எ.டுத்துள்ளார்.

பா.திக்கப்பட்ட அந்தப் பெ.ண், பெந்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாட்டுக்கு அமைய, இளைஞனும் கணவனும் கை.து செய்யப்பட்டுள்ளார்.

பெந்தோட்ட நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்திச் செல்லும் 50 வயதான நபரும் 42 வயதான பெண்ணும் சட்டரீதியில் திருமணமானவர்கள். அத்துடன் அவ்விருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

பிள்ளைகள் இருவரும் கொழும்பில் தங்கியிருந்து கல்விக்கற்கின்றனர். தன்னுடைய விருப்பமின்றி இவ்வாறு ப.டுக்கை அ.றையை பகிர்ந்துகொண்டதாக தெரிவித்த அந்தப் பெண், அலைபேசியில் இருந்த காணொளியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது அதனை பி.டுங்கி த.ரையில் அ.டி.த்.து நொ.று.க்.கிவிட்டதாகவும் மு.றைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதேபோல, இதற்கு முன்னர் கதிர்காமத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போதும், மற்றுமொரு இளைஞனுடன் ப.டுக்கையை ப.கிர்ந்துகொள்ளுமாறு தன்னுடைய கணவன் வ.ற்.பு.றுத்தியதாகவும் எனினும், அதிலிருந்து த.ப்.பிவிட்டதாகவும் மு.றைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பா.திக்கப்பட்ட பெ.ண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கை.து செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

52 வயது குடும்பஸ்தரை திட்டமிட்டு ஏமாற்றிய 29 வயதுப் பெண்!!

நெல்லையில்..

52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின்
நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், தனிமையில் சந்தித்து பழக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நள்ளிரவில் திடீரென விழித்து கொண்ட ஆல்பர்ட் தன்னுடன் வந்த சவுண்ட் சத்யா காணாமல் போனதையும், தன்னுடைய 9 சவரன் நகைகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த பெண்ணின் செல்போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்ட போது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

32 வயது வித்தியாசம்.. திருமணம் நடந்தால் அவருடன்தான்… ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் 32 வருட வித்தியாசத்தில் காதலித்து திருமணம் செய்திருக்கிறது ஒரு தம்பதி. இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக காதலுக்கு வயது இல்லை என பலரும் சொல்வதை கேட்டிருப்போம்.

அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தன்னுடைய ஆசிரியரையே காதலித்து திருமணம் செய்திருக்கிறார். 20 வயதான சோயா நூர் பிகாம் படித்து வருகிறார். இவருடைய ஆசிரியர் சஜித் அலி. 52 வயதான சஜித்திடம் காதல் கொண்ட சோயா, ஒருமுறை தனது காதலை அவரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இருவருக்கும் இடையேயான வயதை காரணம் காட்டி சோயாவின் காதலை ஏற்க மறுத்துவிட்டார் சஜித். இருந்தாலும் தன்னுடைய முடிவில் இருந்து மாறாத சோயா, தொடர்ந்து அவரை காதலித்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சஜித்திற்கும் சோயா மீது காதல் வரவே, இருவரும் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

முதலில் இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் தங்களது காதல் குறித்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால், இருவீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இருப்பினும் தங்களது முடிவில் இருந்து மாறாமல் இருந்ததாகவும் இந்த தம்பதி தெரிவித்திருக்கின்றனர்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று இந்த தம்பதியை பேட்டி எடுக்கவே, இவர்களது காதல் கதை வெளியுலகத்திற்கு தெரியவந்திருக்கிறது. அதில், சோயா பேசும்போது, தான் சஜித் பாடம் நடத்தும் விதத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும் அதுவே அவர்மேது காதல் மலர காரணமாகவும் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தனது மனைவி பற்றி பேசிய சஜித்,”அவர் (சோயா) சமைக்கும் உணவுகள் மற்றும் தேநீருக்கு மிகப்பெரிய ரசிகன் நான்” என்றார். தற்போது ஆன்லைன் கோச்சிங் கொடுத்துவரும் சோயா, தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் அதிக வயது வித்தியாசம் கொண்ட நபர்கள் திருமணம் செய்துகொள்வது இது முதல்முறை அல்ல. சமீபத்தில் முஸ்கான் என்ற 18 வயது இளம்பெண் ஃபரூக் முகமது என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அகமதுவிற்கு 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

“என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது”.. புது வீட்டில் மனைவிக்கு சிலை வைத்த கணவன் : நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்!!

சேலத்தில்..

சமூக வலைத்தளத்தில் அதிக நேரத்தை நாம் செலவிடும் போது நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் நடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதில் அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலான வீடியோக்கள் அல்லது செய்திகள் நமது கவனத்தை பெறும்.

அப்படி பல விதமான விஷயங்கள், கண்ணில் படும் போது ஒருவித தாக்கத்தை கூட நம் மனதில் ஏற்படுத்தும். அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ தான் மக்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இருசன் – நீலா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மற்ற இரண்டு பேரும் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அடிப்படை வசதி இல்லாத வீடு ஒன்றில் இருசன் தங்கி வந்துள்ளார்.

அப்போது அவரது மனைவி நீலாவை இரவு நேரத்தில் பாம்பு ஒன்று கடித்து அதன் மூலம் அவர் உயிரிழந்தும் போயுள்ளார். மனைவியின் பிரிவால் அதிக மன உளைச்சலிலும் இருசன் இருந்து வந்துள்ளார்.

இதன் பின்னர், தனது மனைவிக்கு நேர்ந்த துயரம் குடும்பத்தில் இனி யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த இருசன், உரிய அடிப்படை வசதி உள்ள வீட்டை கட்டவும் முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தான் நினைத்தது போல வீடு ஒன்றையும் இருசன் கட்டி முடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், இந்த வீட்டின் வரவேற்பு அறையில் தனது அன்பான மனைவிக்கு சிலை ஒன்றையும் வைத்துள்ளார் இருசன்.

இதுகுறித்து பேசும் இருசன், சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் உயிரிழந்த நபர்களுக்கு குடும்பத்தினர் சிலை வைப்பது குறித்து செய்தியை அடிக்கடி கேட்டு வந்ததாகவும், தான் கஷ்டப்படும் காலத்தில் உடன் இருந்த மனைவிக்கு புதிய வீட்டில் சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக சென்னையை சேர்ந்த சிலை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மனைவியின் உருவ சிலையையும் இருசன் உருவாக்கி உள்ளார். மேலும் தனது மனைவியின் நகையை அந்த சிலைக்கு இருசன் அணிந்துள்ளதாகவும் தெரிகிறது. மனைவிக்காக கணவர் செய்த விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் உருக வைத்துள்ளது.