இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றன.
நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் இவர்கள் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை உட்கொள்கின்றனர். இதனால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக மாநில உதய தினத்தை முன்னிட்டு பகத்சிங் நாடக ஒத்திகையில் ஏழாம் வகுப்பு மாணவன் எதிர்பாராத விதமாக தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் கௌடா. நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் உதயமான தினத்தை” கன்னட ராஜ்ய உற்சவ” நாளாக கடைபிடிக்கப்பட்டு வருவது வழக்கம்.
வழக்கமாக பெரும்பாலான பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் இது போன்ற மாநில உதய தினம் போன்ற விழா கொண்டாட்டங்களில் மாணவர்கள் வரலாற்று நாடகங்கள் நடித்துக் காட்டுவது வழக்கம். அதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் சித்ரதுர்கா மாவட்டம் தனியார் பள்ளியில் கடந்த ஒரு வார காலமாக பள்ளியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள கன்னட உதய தின கொண்டாட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் குறித்த நாடகத்தில், பகத்சிங்காக வேடமிட்டு நடிப்பதற்காக ஒத்திகையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய் கௌடா ஈடுபட்டு வந்தான்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இவர்களது வீட்டில் பெற்றோர் வெளியே சென்று இருந்த பொழுது பகத்சிங் குறித்த நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருந்த பொழுது, குறிப்பாக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சியை ஒத்திகை செய்த பொழுது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிற்றில் தொங்கியவாறு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதை அறிந்த அவர்களது பெற்றோர் பதறி அடித்து மாணவனின் உடலை மீட்டு கதறி அழுத நிலையில், இது குறித்த தகவல் போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவன் தவறுதலாக எதிர்பாராத விதமாக இது போன்ற ஒத்திகையில் ஈடுபடும் பொழுது உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் படி நாடக ஒத்திகையில் தூக்கிலிடம் சம்பவம் குறித்த ஒத்திகை எப்பொழுதும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் மாணவன் தத்ரூபமாக இருக்க வேண்டி கட்டுரையில் உள்ளது போல இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
இது மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. எனவே இனி நாடகங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு குறித்த நாடக ஒத்திகையில் பள்ளி மாணவன் எதிர்பாராத தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து, காதலனையே கொலைச் செய்த காதலி கிரீஷ்மா, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தார். அப்போது களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில், இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜை அவரது காதலி போனில் அழைத்து, பெற்றோர் வெளியே சென்று விட்டதால் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய நண்பருடன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் ஷாரோன்ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாகவும், தனது காதலி குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் ஷாரோன் ராஜ் பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஜான்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
இந்தநிலையில் ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று காலை 9 மணிக்கு ஆஜராகினர். அதன்படி போலீசார் காதலியிடம் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீஷ்மா, ஷாரோன் ராஜியை காதலித்து வந்தநிலையில் அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த அதிர்ச்சியடைந்த காதலன் ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே என கதறி அழுதுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டதாக கிரீஷ்மா, ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது. அதன்படி காதலி அவரை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அதை தொடர்ந்து போலீசார் கிரீஷ்மாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது பெற்றோருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து மாணவரை அவரது காதலியே தீர்த்துக் கட்டிய சம்பவம் குமரி மற்றும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சாலையில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்த இலங்கைத் தமிழ்ப்பெண் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்ததற்காக காவல் துறையால் பாராட்டப்பட்டுள்ளார்.
ஈரோடு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலையில் சிக்கிய ரூ.40,000 பணத்தை, இலங்கைத் தமிழ்ப் பெண், வியாழக்கிழமை, அருகிலுள்ள காவல் நிலையத்தில் திருப்பி அளித்தார்.
இதுகுறித்து பொலிஸார் கூறியதாவது: ஈரோடு பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள ராஜேஸ்வரி (55) என்பவர் பேருந்தில் சத்தியமங்கலம் சென்றார்.
சத்தியமங்கலம் வந்து பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது சாலையில் ஒரு பார்சல் கிடைத்தது. பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.500 ரூபாய் நோட்டுகளில் 40,000 ரூபாய் இருந்தது.
சாலையில் சந்தித்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (21) என்பவரின் உதவியுடன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்தவர் காவல் நிலையம் வரலாம் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.
அதையடுத்து, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கடைக்காரர் குணசிங்கம் பொலிஸாரை தொடர்பு கொண்டு, அந்தப் பணம் அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வரும் தனது நண்பர் ஜோஷ்வா (61) என்பவருக்குச் சொந்தமானது என்று கூறினார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோஷ்வா மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், மருத்துவச் செலவுக்காக இவரிடம் கடன் வாங்கியுள்ளார்.
விசாரணைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை ஸ்டேஷனில் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி கூறினார். இதையடுத்து, ராஜேஸ்வரி மற்றும் கோகுல் இருவரையும் அவர்களின் நேர்மைக்காக பொலிஸார் பாராட்டினார்.
ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்த இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் வெளியெ சென்றதை அறிந்து கடந்த 14ம் தேதி ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். இதனை சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உடனே அவர் பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இளம்பெண் கொடுத்த ஜூஸ் குடித்ததால் தனது மகன் உயிரிழந்ததாக தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காதலி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்திய போது ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்வதற்காக ஜூஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷாரோனை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யக்கலமுல்ல, மகேதர பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 19ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு வயது குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இதன்போது துப்பாக்கிச் சூட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ரி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி நேற்று உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத் கல்யாணின் மனைவி பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார்.
அவர் முன்னர் முன்னதாக ப்ரியா பேலியோ டயட்டை கடைப்பிடித்திருக்கின்றார். இதனால் தான் அவருக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதுக்காக அவர் மருத்துவ மனைவியில் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
சக்கரை வியாதி ஒரு உயிர் கொல்லி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு முறை உருவரை தாக்கி விட்டால் வாழ் நாள் வரை மருத்துவரை நாட வேண்டியிருக்கும்.
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ப்ரியாவின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு இறந்துவிட்டார். இந்த தகவல் அனைவருக்குமே பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழில் இருந்து நேற்று (31.10) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது,
புகையிரதப் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடனடியாக புகையிரதத் திணைக்களத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட ஆண் புகையிரதத்துடன் மோதி வித்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு புகையிரதப் பாதையில் போடப்பட்டுள்ளரா என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலம் மேற்சட்டை இன்றி கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு காணப்படுவதுடன், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பூபதிராஜா. வீட்டருகே உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார் பூபதிராஜா.
கடந்த 22-ஆம் தேதி இரவுநேர பணிக்கு சென்று விட்டு மறுநாள் 23-ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்தவர், அருகிலுள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பூபதிராஜாவின் செல்போனுக்கு பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை எடுக்காததால் பெற்றோர் அவரை தேட தொடங்கியுள்ளனர்.
அப்போது அதே கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சென்று பார்த்தபோது, அங்கு பூபதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார்.
போலீசார் பூபதிராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் “ஆன்லைன் ரம்மி செயலி” இருந்ததும், அடிக்கடி அதில் பூபதிராஜா விளையாடியதும் தெரியவந்தது. பூபதி ராஜா அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும்… நாங்கள் எவ்வளவு கூறியும் சூதாட்டத்தை நிறுத்தவில்லை” என்றும் பூபதிராஜாவின் பெற்றோரும், சகோதரரும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பூபதி ராஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை உருக்கமாக பேசி அனுப்பி உள்ளார். என்ன மன்னிச்சிடுமா… நான் ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன்.
உன் செயின் ஒன்றையும் 40 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வச்சுட்டேன், ஒன்றரை லட்சம் லோன் வாங்கி விட்டேன், லோன் மாத தவணை தொகையையும், சம்பளத் தொகையையும் ரம்மியில் இழந்து விட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
பூபதிராஜா போல யாரும் ஆன்லைன் ரம்மியால் உயிர் இழக்கக்கூடாது. அதற்கு அரசு உடனடியாக இந்த ஆனலைன் ரம்மியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க பூபதி ராஜாவின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தை என்ற நிலையில் விமர்சனங்களுக்கு அப்பெண் தந்த பதில். அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
Tennessee-வை சேர்ந்தவர் Phi. இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது தான் விசித்திரம். இதையடுத்து பலரும் Phi-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பதிலடி தரும் வகையில் வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். Phi கூறுகையில், 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, இது எனக்கு நன்மை தான்.
எப்படியென்று தானே கேட்கிறீர்கள்,அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் பூஜ்ஜியம் மட்டுமே இருக்கும். ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது.
இன்னும் புரியவில்லையா? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.
ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் ஐந்து பேர் இருப்பார்கள் என கூறியுள்ளார். அவரின் இந்த விளக்கத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனிடையில் மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது Phi-ன் விருப்பமாம்..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு சென்மார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான மணி . விவசாயியான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
35 வயதான மகன் வனராஜாவுக்கு மட்டும் திருமணம் ஆக வில்லை. இவர் விராலிமாயன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை தொட்டி குடிநீர் ஆபரேட்டராக இருந்து வருகிறார்.
இவரது தங்கை நித்யா அதே பகுதியில் தனது 3 குழந்தைகளுடன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நித்யாவின் கணவர் ராஜேஷ் உசிலம்பட்டியில் கறிக்கடை வைத்துள்ளார். வனராஜா தனது தந்தைக்கு சொந்தமான 34 செண்ட் நிலத்தை வைத்து பராமரித்து வந்துள்ளார். அந்த நிலத்தில் தனக்கு பங்கு வேண்டும் என நித்யா கேட்டுள்ளார்.
ஆனால் தான் அந்த இடத்தில் பால்பண்ணை வைக்கப்போவதாகவும் அதனால் இடத்தை தர முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் குடிபோதையில் அடிக்கடி தனது தங்கை நித்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நித்யா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் அவரையும் அரிவாளால் வெட்ட முயன்றார். இது குறித்து தனது கணவரிடம் நித்யா கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் நள்ளிரவில் வனராஜா வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டு இருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வனராஜா தப்பி ஓட முயன்ற போது அவர் மீது நித்யா பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.
இதில் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டதோடு வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தது. பலத்த காயங்களுடன் வனராஜா வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நித்யா மற்றும் ராஜேசை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் கறி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்.
கணவன், மனைவி இருவரும் உடையார்பாளையத்தில் வசித்து வந்த நிலையில், ஜெயங்கொண்டத்தில் வேலை செய்து கொண்டு ஜாபர் அன்றாடம் உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்று வந்தார்.
எனவே ஜெயங்கொண்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கே மனைவியை அழைத்துச் சென்று சில நாட்கள் தங்கி இருக்கிறார். ஆனால், மனைவி ரியாஸ் அங்கிருந்து மீண்டும் உடையார்பாளையம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தனது மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என பலமுறை வந்து ஜெயங்கொண்டத்திற்கு ஜாபர் அழைத்துள்ளார்.
ஆனால் ஜெயங்கொண்டம் வீட்டில் குளியலறை மற்றும் கழிவறை இல்லை. எனவே, அதற்கு ஏற்பாடு செய்தால் உன்னுடன் வந்து வசிக்கிறேன். அதை முதலில் செய்து முடித்துவிட்டு, என்னை வந்து கூப்பிடு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ம.து போ.தை.யி.ல் வந்த ஜாஃபர் மீண்டும் மனைவியை வந்து அழைத்துள்ளார். அப்போது மனைவி மறுத்ததும் அவரை க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.லை செ.ய்துள்ளார்.
மனைவி இ.றந்து போனதை அறிந்து ஜாபர் அவருக்கு அருகில் படுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தார். போலீசார் வரும் வரை அழுது கொண்டே இருந்த ஜாபர் போலீசார் வந்தவுடன் கை.து செய்யப்பட்டார்.
தமிழகத்தில் திருமணமான சில மாதத்தில் மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை கணவர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஷ்மா (26). சாப்ட்வேர் என்ஜினீயர். டெல்லியை சேர்ந்தவர் ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடுவதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர்.
தலை தீபாவளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்றுவதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார்.
அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை.
ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தென்கொரியாவில் ஹெலோவீன் திருவிழாவின் போது இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஹெலோவீன் கொண்டாடத்தின் சன நெரிசலில் சிக்குண்டு, 19 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 153 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 33 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாராசாலாவைச்சேர்ந்த ஷரோன் என்ற இளைஞரும், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக ஷரோனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி வாந்தி எடுத்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தியதன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், விஷம் அருந்தியதால் உடல் உறுப்புகள் செயலிழந்து, கடந்த 25ஆம் தேதி ஷரோன் உயிரிழந்துவிட்டார்.
ஷரோனுக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஷரோனை காதலித்த கிரீஷ்மா தான் விஷம் கொடுத்துள்ளார் என்றும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். தங்களது மகன் கிரீஷ்மாவை சந்தித்துவிட்டு வரும்போதுதான் வாந்தி எடுத்ததாகவும், உடல் நலனுக்காக காதலி கஷாயம் கொடுத்ததாக தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் கிரீஷ்மாவை அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் எட்டு மணி நேரம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
போலீசாரின் தகவல்படி, ஷரோனை காதலித்து வந்த கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை மாப்பிள்ளை பார்த்ததாகவும், அவருடன் ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதற்கு முன்பாக காதலனை மணம் முடித்தாலும், அவர் இறந்துவிடுவார் என ஜோதிடர் கூறியதாகத்தெரிகிறது.
இதையடுத்து, கிரீஷ்மாவை வைத்தே ஷரோனை கொலை செய்ய கிரீஷ்மாவின் குடும்பத்தினர் முடிவு செய்ததாகத் தெரிகிறது. அதன்படி, கடந்த மாதம் 14ஆம் தேதி காதலியைச் சந்திக்க சென்ற ஷரோனிடம், ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் காப்பர் சல்பேட் கலந்த ஜூஸை கொடுத்துள்ளார், கிரீஷ்மா.
ஒவ்வொரு முறை தன்னைச் சந்திக்க வந்தபோதும் விஷம் கலந்து ஜூஸை கஷாயம் எனக்கூறி கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே ஷரோன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, இருவரது வாட்ஸ்அப் சாட்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவின் பத்தினம்தீட்டா மாவட்டத்தில் நடந்த நரபலி சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காதலியே திட்டமிட்டு விஷம் வைத்துக்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் இரு தடவைகள் விலை மாற்றம்
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே எரிபொருள் விலையில் இன்று அல்லது நாளை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.