வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவின் இளம்கலைஞர் தெரிவில் புறக்கணிக்கப்பட்ட வவுனியா மாவட்டம்!!

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா..

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவில் இளம்கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு விருது வழங்கல் நிகழ்வில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கலைஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது நேற்று முன்தினம் (29.10) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இளம் கலைஞர் ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.

அதில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய், நல்லூர், சாவகச்சேரி, யாழ் நகரம் உள்ளடங்களாக 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என 12 பேருக்கு இளம்கலைஞர் ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டது.

வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மடாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இளம் கலைஞர் ஊக்குவிப்பு விருது வழங்கப்படவில்லை.

குறிப்பாக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோதகத்தர்களும் மாவட்ட செயலக அதிகாரிகளும் சரியான முறையில் மாவட்டத்தில் உள்ள இளம் கலைஞர்களது விபரங்களை அனுப்பி வைக்காமையே வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டமைக்கு காரணம் என கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் கலைஞர்களுடன் தொடர்பற்றவர்களாகவும், தமக்கு என குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு செயற்படுவதானாலும்,

மாவட்ட மற்றும் மாகாண மட்டத் தககல்களை கலைஞர்களுக்கு உரிய காலத்தில் வழங்காமையாலும் இளம் கலைஞர் விருதில் இருந்து வவுனியா மாவட்டம் விடுபட்டுள்ளதாக கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கலாசார பண்பாட்டு விழா பாரம்பரிய கலாசார பண்பாடுகளையும், கலைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக வீதி ஊர்வலத்துடன் இடம்பெற்ற போதும்,

வவுனியா மாவட்ட கலாசார பண்பாட்டு விழா மாவட்ட செயலக வளாகத்திற்குள் முடங்கிய நிலையில் கலைஞர்களுக்கு முறையான அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம்… திடீரென மண்டபத்துக்கு வந்த கர்ப்பிணிப் பெண் செய்த செயல்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள ஒத்தப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றது.

இதில், பாலமுருகனின் மூத்த மகளான நாகப்ரியா (வயது 30) பிசிஏ படித்து விட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நாகப்ரியாவும் திருமங்கலம் பாண்டியன்நகர் என்னும் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்திலும் சாஃப்ட்வேர் என்ஜினீயராக சின்னசாமி பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகப்ரியா மற்றும் சின்னசாமி ஆகியோர் காதலித்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில் பல இடங்களிலும் அவர்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நாகப்ரியா கர்ப்பம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதற்கு மத்தியில், சின்னசாமிக்கும் விருதுநகர் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திலும் சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தனது காதலருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பதை அறிந்த நாகப்ரியா, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனையடுத்து, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சின்னசாமிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு நேராக சென்றுள்ளார்.

பின்னர், சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதையும் நாகப்ரியா கூறி உள்ளார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பும் நிலவி உள்ளது.

இதுபற்றி தகவலறிந்ததும் மண்டபத்திற்கு போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நாகப்ரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் போலீசார் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாகப்ரியாவை திருமணம் செய்யவும் சின்னசாமி ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலுனுக்கு நடக்க இருந்த திருமணத்தை கர்ப்பிணி பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட்டது!!

பேக்கரி உற்பத்தி பொருட்கள்..

450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துட்டன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

மிஸிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இலங்கைப் பெண்!!

மிஸிஸ் யுனிவர்ஸ்..

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார்.

இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல ஜூரிகள் குழுவின் ஒப்புதலுடன், Mrs. Universe New Zealand அமைப்பான National Directness Anna Marie Parrant அவர்களால் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது வெற்றியைத் தொடர்ந்து, நிஷி ரணதுங்க, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச மேடையான ‘Woman of the Universe 2023’ இல் Mrs. Woman of the Universe நியூசிலாந்தின் பெயரைப் பெறுவார்.

இந்நிலையில், தம்மை ஊக்குவித்து, வழிநடத்தி, சந்தர்ப்பம் வழங்கியதற்காகவும், நிகழ்வின் அனைத்து நடுவர்கள் மற்றும் அனுசரணை வழங்குபவர்களுக்கும் மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து அமைப்பான நேஷனல் டைரக்ட்னஸ் அன்னா மேரி பரன்ட் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக நிஷி தெரிவித்துள்ளார்.

“பல ஆண்டுகளாக எனது போட்டிப் பயணத்தில் தனக்கு உதவிய மற்றும் ஆதரவளித்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆதரவாளர்களுக்கு மிக்க நன்றி,” என்று அவர் மேலும் கூறினார்.

37 வயது வித்தியாசம்.. 56 வயதான பெண்ணுக்கு 19 வயது இளைஞருடன் மலர்ந்த காதல்!!

தாய்லாந்தில்..

காதல் என்பதற்கு கண்ணில்லை என கூறுவார்கள். இதற்கு காரணம் வயது, மொழி, இனம் , மதம், அந்தஸ்து உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் பொருட்படுத்தாமல் இரு மனதிற்கு இடையே இருக்கும் உன்னதமான உணர்வு வெளிப்படுவதால் தான்.

இந்த நிலையில், 37 வயது இடைவெளியில் இருவருக்கு இடையே காதல் முளைத்துள்ளது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Janla Namuangrak. இந்த பெண்ணுக்கு தற்போது 56 வயதாகிறது. தனது கணவரை சில ஆண்டுகளுக்கு முன் ஜன்லா விவாகரத்து செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவருக்கு சுமார் 30 வயதை நெருங்கும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த இளைஞரான Wuthichai Chantaraj என்பவரை காதலித்து வந்துள்ளார் ஜன்லா.

தனது வீட்டை சுத்தம் செய்ய அருகாமையில் இருக்கும் Chantaraj உதவியை ஜன்லா நாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜனலாவின் வீட்டை சுத்தம் செய்து அவருக்கு பக்கபலமாகவும் Chantaraj இருந்து வந்துள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இருவருக்கும் இடையே காதல் உருவானதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், சமீபத்தில் Chantaraj மற்றும் ஜன்லா ஆகியோர் நிச்சயம் செய்து கொண்டுள்ள நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த உறவு பற்றி பேசும் அவர்கள், தங்களுக்கு இடையே 37 வயது இடைவெளியை பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை என்றும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றி திரிவதிலும் வெட்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேசும் ஜன்லா, “Chantaraj தன்னை இளமையாக உணர வைக்கிறார். ஆரம்பத்தில் எங்களின் உறவை ரகசியமாக வைத்திருந்தோம். ஆனால், அது பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். விரைவில் திருமணமும் செய்து கொள்ள உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அந்தரங்க காட்சியை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞன் : தாயை காதலனிடம் இருந்து காப்பாற்ற மகள் செய்த விபரீத செயல்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பிரபல டிக்டாக் நட்சத்திரம் ஒருவர், தமது தாயாரின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்து வந்த அவரது காதலரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ளார்.

பிரித்தானியாவில் டிக்டாக் நட்சத்திரமாக வலம் வருபவர் 23 வயதான மெஹக் புகாரி. இவரே தமது 45 வயது தாயார் அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துவந்த 21 வயது இளைஞர் சாகிப் உசேன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் சிக்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 11ம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில், சாகிப் மற்றும் அவரது நண்பர் முகமது ஹாஷிம் ஆகிய இருவரும் சென்ற கார் விபத்தில் சிக்கி, நெருப்பு கோளமாக மாறியது. இதில் இருவருமே சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர்.

தற்போது இந்த விபத்தின் பின்னணியில் மெஹாக் புகாரியின் சதி எனவும், அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை அவரது கணவர் மற்றும் மகனுக்கு அனுப்புவதாக சாகிப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய அந்தரங்க காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க அன்ஸ்ரீன் புகாரியிடம் 3,000 பவுண்டுகள் வரையில் கேட்டு சாகிப் மிரட்டல் விடுத்துள்ளார். சாகிப் உசைன் தொடர்புடைய காட்சிகளை வெளியிட நேர்ந்தால், தமது குடும்பம் மட்டுமின்றி, தமது சமூக ஊடக வாழ்க்கையும் சீர்கெடும் என மெஹாக் அஞ்சியுள்ளார்.

விபத்துக்கு முன்னர் மிகுந்த அச்சத்தின் நடுவே சாகிப் 999 இலக்கத்தை தொடர்பு கொண்டு, தமது வாகனத்தை சில பேர் இரண்டு வாகனங்களில் துரத்துவதாகவும், அவர்களிடம் இருந்து தப்பும் முயற்சியில் இருப்பதாகவும், அவர்கள் தம்மை கொல்ல வந்தவர்கள் என அஞ்சுவதாகவும், உதவ முன்வர வேண்டும் எனவும் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மெஹாக் மீது இரு பிரிவுகளில் கொலை வழக்கும் அவரது தாயார் அன்ஸ்ரீன் புகாரி மற்றும் தோழி நடாஷா அக்தர் ஆகிய 6 பேர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

45 வயதான அன்ஸ்ரீன் புகாரி 21 வயது இளைஞர் சாகிப் உசேன் என்பவருடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் அன்ஸ்ரீன் புகாரி உறவை முறித்துக் கொள்ள, இருவரும் தனிமையில் இருந்தபோது பதிவு செய்த அந்தரங்க காட்சிகளை வெளியிட இருப்பதாக சாகிப் மிரட்டியுள்ளார்.

இதுவே, கொலையில் முடிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 2021 ஆகஸ்டு மாதம் 10ம் திகதி முதல் 2022 பிப்ரவரி 9ம் திகதி வரையில் அன்ஸ்ரீன் புகாரியை 1,702 முறை சாகிப் தொடர்பு கொண்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆனால், இந்த காலகட்டத்தில் அன்ஸ்ரீன் புகாரி 214 முறை மட்டுமே சாகிபை தொடர்பு கொண்டுள்ளார். இதில் இருந்தே இருவரும் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாகவும், அவர்களின் உரையாடல்களில் இருவரும் உடல் ரீதியான உறவிலும் இருந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சிலர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது செல்போனில் பேசிக் கொண்டே கடப்பதால் கவன குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தபால் தெருவில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய 22 வயது மகள் சந்தியா. சென்னையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சந்தியா 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சந்தியா கும்மிடிப்பூண்டி – சென்னை சென்டிரல் ரயில் மார்க்கத்தில் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சந்தியா மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சந்தியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜீ தலைமையிலான கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சந்தியா ரயில் மோதி உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர் பள்ளி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்திலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நம்பவைத்து ஏமாற்றிய பெற்றோர் : 12ம் வகுப்பு மாணவி காதலனுடன் எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகான வாழ்க்கை சூன்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையே பொறுமையும், எதிர்த்து போராடும் குணமும் குறைந்து விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது.

தனது காதலனுடன் திருமணத்திற்கு சம்மதிக்காமல், ஏமாற்றியதற்காக 12ம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது பெற்றோரை அதிர செய்துள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி, கோபி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது காதலியைப் பெண் கேட்டு காதலியின் வீட்டிற்கு சென்ற கோபியிடம், மாணவியின் பெற்றோர், அவள் இப்போது தான் பள்ளிக்கு செல்கிறாள். பிறகு பார்க்கலாம் என்று நல்ல விதமாக சொல்லி விட்டு, அதன் பிறகு அவளை பள்ளிக்கும் அனுப்பாமல், அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளைத் தேட துவங்கியிருக்கிறார்கள்.

காதலர்களின் திருமணத்திற்கு சம்மதிக்காமல், பள்ளிக்கும் அனுப்பாததால், காதல் ஜோடி பாஸ்பேட் மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கோபியும், 12ம் வகுப்பு மாணவியும் காதலித்தப்படியே பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கோபி, பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மாணவியின் பெற்றோர், அவள் சிறுமி. அவளுக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர், மாணவியை, பள்ளிக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று அஞ்சி, மாணவியும், கோபியும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இருவரையும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இருவரும் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாற்றுத் திறனாளி இளைஞனின் வியக்க வைக்கும் செயல் : மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!!

கிரிக்கட்டில்..

சமீப காலமாக நம்மை வியக்க வைக்கக் கூடிய வகையில் வீடியோக்கள் இணையத்தில் பகிர்வது அதிகமாகி வருகிறது. மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திறமைக்கு குறைகள் ஒன்றும் தடையில்லையென இன்றைய சமூகத்தினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் குறித்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களும் மெய்சிலிர்த்து அவதானித்து வருகின்றனர்.

மனநல வைத்தியசாலையில் உருவான காதல் : சிகிச்சைக்குப் பின் காதலித்து திருமணம் செய்த தம்பதி!!

சென்னையில்..

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து காதலித்த இருவர் திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பாரம்பரிய முறைபடி மகேந்திரன் தாலிகட்டி தீபாவை மணந்தார். தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியம் தலைமையில் தான் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. ஆம் புதுமை தான்! கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இருவரும் சிகிச்சை பெற்று குணமாகி அங்கேயே பணி செய்த நிலையில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது.

மகேந்திரன் கூறுகையில், என்னோட சொந்த ஊர் சென்னை. நான் பி.காம் எம்பிஇ, எம்பில், பிஜிடிசிஏ முடிச்சிருக்கேன். அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமா கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இரண்டாண்டுகள் சிகிச்சை எடுத்துக்கிட்டேன்.

சிகிச்சைக்கு பின்னர் குணமாகிட்டு இங்கேயே டேகேரில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் டே கேரில் இருந்தப்ப சிகிச்சைக்காக தீபா வந்தாங்க.

அவரை பார்த்ததுமே எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. ஏனெனில், தீபா ஆசிரியை. என் அம்மாவும் பிரின்சிபலாக இருந்தவங்கதான்! அதனால அப்பவே அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தது என்றார்.

தீபா பேசுகையில்,நான் எம்ஏ, பிஎட் முடிச்சிட்டு டீச்சராக ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். என் அப்பா இறந்த செய்தி கேட்டு மன அழுத்தத்துக்குள்ளே போயிட்டேன். அப்புறமா இங்க ரெண்டு வருஷம் சிகிச்சை எடுத்து குணமாகி இங்கேயே cafe r’vive-ல் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.

குணமாகி வீட்டுக்குப் போனேன். ஆனா, அங்க இருக்க முடியல. வேலை காரணமா மறுபடியும் இங்கேயே வந்துட்டேன். இவரை முதன்முறை சந்திச்சப்பவே இவர் என்கிட்ட லவ் யூன்னுலாம் சொல்லலை.

நேரடியா, `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா!’ன்னு தான் கேட்டார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சில பர்சனல் காரணங்களால் என்னால உடனே ஓகே சொல்ல முடியல. ஒரு ஆறு மாசம் கழிச்சு அவருக்கு ஓகே சொன்னேன் என கூறினார்.

நாங்களும் எல்லார் மாதிரியுமான ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். எங்களுடைய கோபத்தை விடவும் எங்கள் காதலுக்கு வீரியம் அதிகம் என நிரூபித்துக் காட்டுவோம் என தம்பதி மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.

கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு வான் சாரதியுடன் மாயமான பெண் : கிளிநொச்சியில் சம்பவம்!!

கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை.

அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பமொன்று கனடாவில் வசித்து வந்தது.

சில வருடங்களின் முன்னர் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்திருந்தார்.

வெள்ளாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 24 வயதான யுவதியொருவரே மணமகள். திருமணம் முடிந்து, நுவரெலியாவிற்கு தேனிலவும் சென்றிருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மணமகன் மீண்டும் கனடா திரும்பினார். மணமகனின் பிரதேசத்தை சேர்ந்த ஹைஏஸ் வாகனமொன்றையே, இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியின் தேவைகளிற்கு அழைத்திருந்தனர்.

அந்த வாகனத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சென்றிருந்தனர். கனடா மணமகன், மணமகள், மணமகனின் ஒன்றுவிட்ட தம்பிகள் இருவர் அந்த வாகனத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தனர்.

நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் ஒருநாள் தங்கியிருந்து விட்டு, மறுநாள் கனடா மாப்பிள்ளையை வழியனுப்பி விட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.

இரவு உணவுக்காக சிலாபம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வாகனத்தை நிறுத்திய போது, மணமகனின் இரண்டு தம்பிகளையும் சாப்பிட்டு விட்டு, தனக்கு இரண்டு பரோட்டா பார்சல் செய்து வாங்கி வருமாறு கூறிவிட்டு, மணப்பெண் வாகனத்திற்குள்ளேயே இருந்து விட்டார்.

வீதியோரமாக சற்று தள்ளி இயற்கை உபாதை கழித்து விட்டு வருகிறேன், நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள் என இரண்டு இளைஞர்களையும் வாகன சாரதியும் அனுப்பி வைத்துள்ளார்.

உணவகத்திற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், சாரதி வராததால் அவரது தொலைபேசியில் அழைப்பேற்படுத்தினர். தொலைபேசி இயங்கவில்லை.

சகோதரனின் மனைவியை அழைத்த போது பதிலிருக்கவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் அவர் அழைப்பையேற்று, இரண்டு இளைஞர்களையும் பேருந்தில் வீடு வருமாறு கூறியுள்ளார்.

தமது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது, சிலர் வந்து மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அவர்கள் கொள்ளையிட வந்தவர்களை போல தோன்றியதால் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக அவர்களிடம் கூறினார்.

மறுநாள் காலையில் இரண்டு இளைஞர்களும் வீடு திரும்பிய போது, மணமகள் வீட்டிலிருக்கவில்லை. மணமகளின் வீட்டிற்கும் செல்லவில்லை.

வாகன ஓட்டியும் தனது வீட்டுக்கு செல்லவில்லை. அன்று மதியம், கனடாவிலுள்ள தனது கணவனிற்கு அந்த யுவதி பேஸ்புக் ஊடாக தகவல் அனுப்பிய பின்னரே நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தன்னை மன்னித்து விடும்படியும், வாகன சாரதியும் தானும் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாகவும், தம்மை தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினமே தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விடயத்தை யுவதி கூறியுள்ளார்.

அந்த ஜோடி தற்போது வவுனியாவில் தங்கியிருப்பதை அறிந்ததாகவும், எனினும், அவர்களை தொடர்பு கொள்வதை தவிர்த்து விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமணத்தில் தாலி கட்டி முடித்த அடுத்த நிமிடம் அனைவரின் புருவங்களை உயரவைத்த மாப்பிள்ளை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டியவுடன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த புதுமாப்பிள்ளையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் டிப்ளமோ படித்து முடித்தவுடன் வேலை தேடி கோவை சென்றுள்ளார்.

அங்கு மாத சம்பளத்திற்கு வேலை செய்து சேமித்த பணத்தில் சில ஆண்டுகளில் தனியாக சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ராஜேஷுக்கும் அணவயல் பெரியசாமி மகள் உமாமகேஸ்வரிக்கும் (டிப்ளமோ நர்சிங்) சேந்தங்குடி மணமகன் இல்லத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் மணமகன் ராஜேஷ் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். எனது உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து எனது மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன்.

செவிலியர் என்பதால் உயிர் பிழைக்க உடல் உறுப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்ததால் ஒத்துக்கொண்டார். விபத்துகளில் பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறோம்.

அது போல நடக்கக் கூடாது. எல்லோரும் உயிருடன் இருக்கும் வரை ரத்த தானம் இறக்கும் நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்றார். திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவுகள் ராஜேஷின் இந்த செயலைப் பார்த்து நெகிழ்ச்சியோடு பாராட்டினார்கள்.

வெளிநாடு ஒன்றில் நடந்த பெரும் அனர்த்தம் : இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!

தென் கொரியாவில்..

தென் கொரியாவில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதான முஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர் என தெரியவந்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓடும் பேருந்தில் மாரடைப்பு : பயணிகளை காப்பாற்றி தன் உயிரைவிட்ட ஓட்டுனர்!!

பொள்ளாச்சியில்..

அரசு பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுனர் மருதாச்சலத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சமாளித்தப்படியே பயணிகளைக் காப்பாற்ற நினைத்த ஓட்டுநர், பேருந்தை வேகம் குறைத்து, அருகிலிருந்த சுவற்றின் மீது மோதி நிறுத்தி விட்டு, பேருந்து ஸ்டேரிங்கின் மீது சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7ஏ என்ற அரசு பேருந்தை சிங்காநல்லூருக்கு மருதாச்சலம் என்ற ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். இவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர். அப்போது பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த போது ஓட்டுனர் மருதாச்சலத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் நிலைமையை புரிந்து கொண்ட மருதாச்சலம் பேருந்தை அருகில் இருந்த சுவற்றின் மீது மோதி நிறுத்தி விட்டு ஸ்டேரிங் மீது சரிந்து விழுந்த படியே உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று மருதாச்சலத்தை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கினர்.

தகவல் அறிந்த விரைந்து சென்ற போலீசார், மருதாச்சலத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுனரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி கண்ணீர் விட்டனர்.

மாரடைப்பால் பணியின் போது உயிரிழந்த மருதாச்சலம் அடுத்த 4 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சொல்லி, பேருந்தின் நடத்துனர் கண்ணீர் விட்டு அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம்..

வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமானது இன்று 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் ஐயாத்துறை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபையும் தெரிவு செய்யப்படவுள்ளது. அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் புதிய யாப்பு வரைபும் சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறப்பு!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிட தொகுதி நேற்று  27.10.2022  வியாழக்கிழமை திறந்து வைக்கபட்டது.பாடசாலையின் அதிபர் திரு.செ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா வடக்கு வலயக்  கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் அவர்களால் புதிய வகுப்பறை கட்டிடதொகுதி வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் வகுப்பறை செயற்பாடுகளுக்காக கையளிக்கபட்டது.

2021 ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில்(PSDG) அமைக்கப்பட்ட (100×25 ) வகுப்பறை கட்டிடத் தொகுதியே திறந்து  இவ்வாறு வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் திரு.இ.பிரதாபன்(பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு) திரு. து.ரவிச்சந்திரன்(ஆசிரிய ஆலோசகர்- வவுனியா வடக்கு வலயகல்வி அலுவலகம்) திரு.ஞா.அகிலன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதி பிரதம செயலாளர் அலுவலகம் திட்டமிடல்) பாடசாலையின் முன்னைநாள் ஒய்வு பெற்ற அதிபர் திரு.க.சிவராசா  மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.