தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!!

தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 606,118 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது. மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கணவனும் மனைவியும் சேர்ந்து இளைஞனுக்கு செய்த கொடூரம்!!

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற அருண்(31). பட்டதாரி இளைஞரான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. சத்தியசீலனின் நண்பர் அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(29).

நெருங்கிய நண்பர்களான இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலைக்கு சேர்ந்து செல்வது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்தியசீலனின் மனைவி நந்தினிக்கும், பிரகாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், 2 மாதத்திற்கு முன்பு பிரகாசும், நந்தினியும் கண்டியூரில் இருந்து வெளியேறி சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.

பிரகாஷின் செயலால் மனம் நொந்து போன நந்தினி தனது கணவர் சத்தியசீலனுக்கு போன் செய்து, தன்னை சேர்த்துகொள்ளுமாறும், என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் இருக்கும் இடத்தையும் சத்தியசீலனிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், கண்டியூர் வந்த சத்தியசீலன் தனக்கு துரோகம் செய்த பிரகாசை கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்தார். இதற்கு துணையாக அவரது மனைவி நந்தினியும் இருந்துள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலன் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் தனியாக சென்ற இரு பெண்களுக்கு நடந்த விபரீதம்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி. இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தைல மரக் காட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

அவர்கள் இருவரும் காளான் பறிக்க சென்றபோது கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கழுவன்தொண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே பொலிஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ்,

கடந்த 22ஆம் திகதி தனியாக இரண்டு பெண்கள் தைல மரக்காட்டுக்குள் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் காளான் பறித்துக் கொண்டிருந்த சமயத்தில் பால்ராஜ் தான் வைத்திருந்த சுளுக்கியால் குத்தியும்,

இன்னும் வேட்டை ஆயுதங்களை பயன்படுத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை யும், செல்போன்களையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலெழுந்து வந்த சடலம் : அலறியடித்து ஓடிய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது.

இந்த நிலையில் , பாசூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மேலெழுந்து வந்தது. இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த மக்கள் பயந்துபோய் அலறியடித்து ஓடினர். அடித்து வரப்பட்ட சடலம் துர்நாற்றம் வீசியதால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில், பாசூர் அருகே செங்கோடையம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) என்பவரது சடலம் தான் அது என தெரிய வந்தது.

அவரது உறவினர்கள் முறைப்படி உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, துரைசாமியின் சடலம் மேலே வந்துவிட்டது.

மேலும் அடித்து செல்லப்பட்ட சடலம் முட்புதரில் சிக்கியுள்ளது. தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. தற்போது தண்ணீர் வடிந்ததும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து துரைசாமியின் மகன் உதயகுமாரிடம் பொலிஸார் அவரது தந்தையின் சடலத்தை ஒப்படைத்தனர். இரண்டாவது முறையாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபல நடிகை போல மாற முயற்சி செய்து ஜோம்பி போன்று மாறிய பெண் : தெரிய வந்த பெண்ணின் உண்மை!!

ஈரானில்..

எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தபார் பகிர்ந்துள்ளார். தன் மீதான சர்ச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திற்கு திரும்பவில்லை என தபார் தெரிவித்துள்ளார்.

முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தோற்றம் வேண்டும் என பலமுறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறினார்.

மேலும் 50 முறை அறுவை சிகிச்சை செய்ததால் ஜோம்பி போல தனது உருவம் மாறியதாக அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் ஜோம்பி ஏஞ்சலினா ஜோலி என்று அழைக்கப்பட்ட அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் 2019ஆம் ஆண்டு தபார் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தவறான வழிகாட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டினால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரானில் மாஷா அமினி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் தபார் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தோன்றிய தபார், சாதாரண பெண்ணைப் போல் தோற்றமளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒப்பனை மற்றும் கணினி மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் என அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். மேலும் புகழ்பெறவே இந்த வழியை கையாண்டதாகவும் அவர் கூறினார்.

காதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : சிக்கிய நபர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

கேரளாவில்..

5 வருட பழக்கம். காதலிக்க மறுத்ததால், வெறித்தனமாக சுமார் 18 இடங்களில் கத்திக் குத்து. சாவகாசமாக குத்தி கொலைச் செய்து விட்டு, வீட்டுக்குச் சென்று குளித்து விட்டு, பின் ஹோட்டலுக்கு வழக்கம் போல வேலைக்குச் சென்றிருக்கிறார் ஷ்யாம்ஜித்.

காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவையும் தாண்டி அதிர செய்துள்ளது.

இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை வெறித்தனமாய் கொலைச் செய்துள்ளார். கொலைச் செய்த இளைஞர் அடுத்த 3 மணி நேரத்துக்குள் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியரின் மகள் விஷ்ணு பிரியா(23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் இளம் பெண் விஷ்ணு பிரியாவும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நட்பாக பழகிய ஷியாம்ஜித்துக்கு நாளடைவில் விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவர் விஷ்ணுபிரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல முறை தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியும் விஷ்ணு பிரியா, காதலை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், விஷ்ணு பிரியா, நேற்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொண்ட சியாம்ஜித், விஷ்ணு பிரியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிலும், விஷ்ணுபிரியாவின் தனது காதலை ஏற்றுக் கொள்ள சொல்லி கேட்டுள்ளார்.

விஷ்ணு பிரியா, மறுத்து விட்டு, கோபமாக வீட்டை விட்டு வெளியே போக கூறியதால், ஆத்திரமடைந்த சியாம்ஜித் சுத்தியலால் விஷ்ணு பிரியாவின் தலையில் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.

எதிர்பாராத இந்த தாக்குதலினால், விஷ்ணு பிரியா மயங்கி கீழே விழுந்ததும், தன் கையில் வைத்திருந்த கத்தியால் விஷ்ணு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சியாம்ஜித்.

அதே இடத்தில் சரிந்து ரத்த வெள்ளத்தில் விஷ்ணு பிரியா, உயிரை விட்டுக் கொண்டிருந்த நிலையிலும் சியாம்ஜித், வெறி அடங்காமல், விஷ்ணு பிரியாவின் கால்கள் இரண்டையும் கத்தியால் வெட்டி உள்ளார். அதன் பின்னர் விஷ்ணு பிரியாவின் மூச்சு கடைசியாக அடங்குவதைப் பார்த்து, உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகளை கண்ட தாயார் அதிர்ச்சியில் அலறியுள்ளார். தாயாரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இளம்பெண்னின் செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது கொலை நடப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு கடைசியாக அவர் ஒருவருக்கு போன் செய்து இருப்பது தெரிய வந்தது.

அந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது, அந்த நபர், விஷ்ணு பிரியா தன்னை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சியாம்ஜித் வந்துள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடைபெற்ற 3 மணி நேரத்தில் கொலை செய்த இளைஞன் ஷியாம்ஜித் தானாகவே முன் வந்து போலீசில் சரணடைந்தார்.

தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்.. காரணம் இது தான்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா நிக்கோல். ஃபிட்னஸ் பயிற்சியாளரான சாரா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், ரியான் – சாரா தம்பதியினருக்கு குழந்தைகளும் உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடந்த 2020 ஆம் ஆண்டு சாராவின் வாழ்வில் அவரது முன்னாள் காதலர் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதாவது தனது காதலரான ரோனி என்பவருடன் இணைந்து வாழ முடிவு எடுத்துள்ளார் சாரா. ரியான் மற்றும் சாரா ஆகிய இரண்டு பேரும் மற்றவர்களுடன் ஊர் சுற்றுவதை விரும்பி வந்தார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ரியானை திருமணம் செய்வதற்கு முன்பாக தான் காதலித்து வந்த ரோனி, திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் சாராவின் வாழ்க்கைக்குள் வந்ததாக தெரிகிறது.

இது பற்றி, சாராவின் கணவரான ரியானுக்கும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தனது மனைவி சாரா அவரின் காதலருடன் இணைந்து வாழவும் சம்மதம் தெரிவித்துள்ளார் ரியான்.

அது மட்டுமில்லாமல், மூன்று பேரும் ஒன்றாக இணைந்திருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்படி சமீப காலமாக அவர்கள் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில், ஒருவருக்கு ஒருவர் மிகவும் ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் ரியான், சாரா மற்றும் ரோனி ஆகிய மூவரும் நன்கு புரிந்து கொண்டும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதே போல, தனது கணவர் மற்றும் காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட விஷயங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் சாரா.

சிறுமியை ‘ITEM’ என அழைத்த இளைஞருக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

மும்பையில்..

சிறுமியை பாலியல் ரீதியாக (iteam) இழிவான செல்லால் அழைத்த 25 வயது இளைஞருக்கு 18 மாதம் சிறை வழங்கி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பிரச்னைகள் தொடர்பாக தொடர்ப்படும் வழக்குகளில் நீதிமன்றம் தனிகவனம் செலுத்த வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சாசனம் சரத்து 15(3) பிரிவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, சிறப்பு ஏற்பாடு செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே அவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும் என தெரிவித்திருகின்றனர்.

அந்தவகையில் மும்பை நீதிமன்றம் சிறுமியை ஆபாசமாக பேசிய இளைஞருக்கு ஓராண்டு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளதற்கு பெண்கள் அமைப்பினர் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை பகுதியில் கடந்த 2015ம் ஆண்டும் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடித்துவிட்டு வீடு திருப்புள்ளார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுமியைக் கிண்டல் செய்துள்ளார். அதோடு தலை முடியை பிடித்து இழுத்து கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு மும்பை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி எஸ்.லே அன்சாரி விசாரித்து வந்தார். இந்நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி தனது இறுதி தீர்ப்பை வழங்கினார்.

இதனால் சிறுமிக்கு இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிறுமியை அந்த இளைஞர் இழிவான ஒரு சொல்லாக கருத்தப்பட்டும் சொல்லை பயன்படுத்தி சிறுமியை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட நபரால் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை காலம் தாழ்த்தாமல் தண்டனை வழங்குவது அவசியமான ஒன்று.

அதன்படி சிறுமியை பாலியல் ரீதியாக (iteam) இழிவான செல்லால் அழைத்த 25 வயது இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் பெண்களை இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது, இது பெரும் வேதனைக்குரிய விசயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

காதலை நிராகரித்த பெண்ணுக்கு திருமணம்.. இளைஞர் செய்த மோசமான செயல்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் இளைஞர் ஒருவர் திருமண மண்டபத்தில் நுழைந்து சிலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிராங்கிபுரம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் வீட்டார் திருமண வேளைகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் பேராம் எடுகொண்டலு என்ற இளைஞர் குறித்த பெண்ணை காதலித்துள்ளார்.

ஆனால் அவரது காதலை அப்பெண் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அறிந்த பேராம் கோபமடைந்துள்ளார். அதன் பின்னர் கையில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் சென்ற அவர், குறித்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மணப்பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பேராம் எடுகொண்டலுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது மகன் தினேஷ் (8). இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆக்கூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் நடராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை,

கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி அன்று சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிக்கன் சமைக்காததால் கணவன் மனைவி இடையே வந்த தகராறு.. விலக்கிவிட போன பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட சோகம்!!

மத்திய பிரதேத்தில்..

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற அண்டை வீட்டார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் உள்ளது சவாணி பாதர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது மனைவியிடம் சிக்கன் சமைக்க சொல்லியிருக்கிறார்.

அப்போது, அந்த பெண்மணி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எழுந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கின்றனர்.

அப்போது, பப்பு தனது மனைவியை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பப்புவின் அண்டை வீட்டில் வசித்துவந்த பப்லூ அஹிர்வார் என்பவர் ஓடிச்சென்று பப்புவை விலக்கி இருக்கிறார்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற, பப்பு சிறிது நேரத்தில் தனது உறவினர் ஒருவருடன் பப்லூ அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவருடன் வாக்குவாதத்தில் பப்பு ஈடுபட்டதாக தெரிகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறி சென்றிருக்கிறது. அப்போது பப்லூவை, பப்பு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த பப்லூ, அருகில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே, பப்பு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பப்புவை பிடிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பப்புவை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரிடத்தில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய போபால் தேஹாத் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) கிரண் லதா கர்கேடா,” செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் சிக்கன் சமைப்பது குறித்து மனைவியிடம் சண்டையிட்டிருக்கிறார் பப்பு. அப்போது, பப்லூ இருவரையும் விலக்க முயன்றிருக்கிறார்.

அதனால் பப்லூவை தாக்கியுள்ளார் பப்பு. இதனிடையே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்லூ மரணமடைந்திருக்கிறார். தலைமறைவாக இருந்த பப்பு தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

வவுனியாவில் போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!

நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

வவுனியா மாவட்டத்தில் போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா விற்பனை முகவருக்கு எதிராக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தமையுடன்,

உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பியிருந்தமையுடன் வவுனியா ஊடக அமையத்தால் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஊடக அமையத்தின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகனை முன்னெடுத்த வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் குறித்த கோதுமை மா முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளனர்.

50 வருடங்களாக குளிக்காத உலகின் DIRTY மனிதர் : முதல் முறையாக குளித்த சில மாதங்களில் நடந்த சோகம்!!

ஈரானில்..

ஒவ்வொரு நாளிலும் அனைவருக்கும் அடிப்படையான சில கடமைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக குளிப்பதும் பார்க்கப்படுகிறது. நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல விஷயங்களை சீராக வைத்துக் கொள்ளவும் குளிப்பது என்றும் அவசியமான ஒன்றாகும்.

அதே வேளையில், குளிக்காமல் சில நாட்கள் இருந்தால் கூட உடலில் ஏதாவது நோய்கள் உருவாகும் என்றும் பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல் இருந்து வந்த நபர் குறித்த துயர செய்தி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் பார்சில் என்னும் பகுதி அருகே தேஜ்கா என்ற சிறிய கிராமம் ஒன்று அமைந்துள்ளது. அங்கே வசித்து வந்தவர் அமாவு ஹாஜி. யாருடனும் சேராமல் தனியாக ஹாஜி வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார் அமாவு ஹாஜி.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் குளிக்காமல் இருந்ததால் “உலகின் அழுக்கு மனிதர்” அழைக்கப்பட்ட மனிதராக வலம் வந்தார். இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு, அமாவு ஹாஜி குறித்த ஆவண படம் ஒன்று வெளியாகி இருந்தது.

இத்தனை ஆண்டுகள் அமாவு ஹாஜி குளிக்காமல் இருந்து வருவதற்கான காரணம், அப்படி அவர் குளித்தால் உடல்நிலை சரியில்லாமல் நோய் வாய்ப்பட்டு விடுவார் என்ற் பயத்தில் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு மத்தியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமாவு ஹாஜியை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சேர்ந்து குளிப்பாட்டி இருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 94 வயதில் அமாவு ஹாஜி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளது.

உலகின் அழுக்கு மனிதர் என அழைக்கப்பட்ட மனிதர், தற்போது உயிரிழ்ந்துள்ள தகவல் இணையத்தில் அதிகம் வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக பலரும் அவருக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர் தப்பியோட்டம் : பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்!!

குருமன்காடு பகுதியில்..

வவுனியா குருமன்காடு பகுதியில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கில் தப்பிச்சென்றுள்ளது.

படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071-8591343 , 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து பொலிஸாரிக்கு தகவலை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை தீபாவளி கொண்டாடிய காதல் திருமணம் செய்த ஜோடி.. சித்தப்பா செய்த விபரீத செயல்!!

மதுரையில்..

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் திருப்பூர் கல்லுாரியில் படிக்கும் பவித்ராவுக்கும், ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் சென்றுவிட்டனர்.

பாலாஜிக்கு பவித்ராவை மறக்க முடியாததால், கடந்த வாரம் மதுரை பசும்பொன்நகர் நீலகண்டன் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று பவித்ரா – பாலாஜி தம்பதியினர் தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் முன்பாக பவித்ரா பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்தி (40) என்பவர் திடீரென பவித்ராவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.

அப்போது பட்டாசில் இருந்து வெளியேறிய தீப்பொறி பற்றி பவித்ராவின் முகம் மற்றும் தோளில் தீகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற கார்த்தியை பவித்ராவின் கணவரான பாலாஜியின் நண்பர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்எஸ்.காலனி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பவித்ரா காதலித்து திருமணம் செய்தது அவரது சித்தப்பாவிற்கு பிடிக்காத நிலையில் மதுபோதையில் பெட்ரோல் ஊற்றியது தெரியவந்துள்ளது.

தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த தனது உடன் பிறந்த அண்ணன் மகள் மீது சித்தப்பாவே பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை!!

வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவிலும் போதை மாத்திரைகள் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பெயரில் அரச வைத்தியர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (25.10) ஊடகவியலாளர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எமக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. குறித்த தகவல் வெளியாகியதை அடுத்து விடுமுறை நாட்களாக இருந்தமையால், தற்போது உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் இணைந்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வைத்தியசாலை, வைத்தியர் மற்றும் அவரிடம் இருந்து குறித்த போதை மாத்திரைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதை மாத்திரை கொள்வனவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமையால் வடமாகாண சுகாதா சேவைகள் திணைக்களம் இரண்டு மாவட்டங்களையும் உள்ளக்கி விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்த பின் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.