வவுனியா ஓமந்தையில் பயிற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்ட நிலத்தில் வனவளத் திணைக்களத்தால் மீள் மரநடுகை!!

ஓமந்தைப் பகுதியில்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் பயிற்செய்கை மேற்கொள்ள தயார் படுத்தப்பட்ட மேட்டு நிலத்தில் வனவளத் திணைக்களால் காடாக்குவதற்காக மீள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளத்தின் பின்பகுதியாகவுள்ள விளாத்திக்குளம் பகுதியில் 1972 ஆம் ஆண்டு முதல் தோட்டப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலங்களும், நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களும் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டு பராமரிப்பின்றி காணப்பட்டது.

இதனால் அப்பகுதி பற்றைகள் மற்றும் முட் புதர்களால் மூடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேறி மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வரும் மக்கள் தற்போதைய,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய பயன்படுத்தப்படாத தமது நெல் மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கை நிலங்களை அதிக பணத்தை செலவு செய்து மீள துப்பரவு செய்து தற்போது கால போக செய்கைக்கு தயார்படுத்தியுள்ள நிலையில்,

அப் பகுதிக்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் குறித்த நிலங்களை மீள காடாக்குவதற்கான மீள் மர நடுகை வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அப் பகுதியில் பரம்பரையாக மேட்டு நிலப் பயிற் செய்கை செய்து வந்த காணியின் ஒரு பகுதியில் மீள் மர நடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் மரநடுகையை மேற்கொள்வதற்காக அப் பகுதியில் மரக்கன்றுகளையும் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த காணிகளில் பெரும்போகத்தில் பயிற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் அனைவரையும் விவசாயம் மேற்கொள்ளுமாறு கூறியுள்ள நிலையில், தமது செய்கை நிலங்களை பயிற் செய்கைக்காக துப்பரவாக்கியுள்ளனர்.

ஆனால் வனவளத் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கை அம் மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப் பொருள் பாவனை!!

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் நேற்று முன்தினம் (24.10) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் நகரையண்டிய சில பாடசாலைகளில் சில மாணவர்கள் மற்றும் சில மாணவிகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுவதாக எமக்கு தனிப்பட்ட ரீதியிலும், பொலிசார் ஊடாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு ஏற்ப அவர்களை அதில் இருந்து விடுபடச் செய்வதற்கான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பல பாடசாலைகளில் மாணவர்கள் போதைப் பொருட்களை கொண்டு வருவதாகவும், அதனை தமது சக மாணவ, மாணவிகளிடம் கைமாற்றுவதாகவும் தகவல் கிடைத்துள்ள போதும் சில பாடசாலைகள் தமது பாடசாலையின் பெயரைக் கருத்தில் கொண்டு அதனை வெளிக் கொண்டுவர தயக்கம் காட்டுகின்றனர்.

மாலை வேளைகளில் வவுனியா வைரவபுளிங்குளம், பூங்கா வீதி, குடியிருப்பு, குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வெளிப் பகுதிகளைச் சேர்ந்த இளம் சமூகத்தினர் போதைப் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பிலும் அவர்களது நடத்தைகள், அவர்களது நண்பர்கள், அவர்கள் சென்று வரும் இடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் மாணவ சமூகத்தின் மீது அக்கறையுடன் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் பாடசாலைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கில் யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விபரித விளைவுகள் குறித்து நாம் தினமும் அறிந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.

இதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் மருத்துவ நிலையம் ஊடாக மாதாந்தம் 400 பெட்டி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா ஓமந்தையில் கனரக வாகனம் விபத்து : இருவர் காயம் : ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு!!

விபத்து..

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏ9 வீதி ஊடான போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

வெட்டப்பட்ட மரங்களை ஏற்றிக் கொண்டு ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி சென்ற கனரக வாகனம் இன்று (26.10) மாலை ஓமந்தை, பன்றிக்கொய்தகுளம் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்ததுடன், சுமார் ஒரு மணிநேரம் ஏ9 வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.

சம்பவ இடத்திறகு வருகை தந்த ஓமந்தைப் பொலிசார் போக்குவரத்தை சீர் செய்ததுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்… தோழியுடன் மாயமான பள்ளி மாணவி : தீபாவளியில் சோகம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் செல்வஹர்ஷனா (17) இவரும், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் மகள் ஞானதர்ஷினி (17) ஆகிய இருவர்களும் தோழிகளாக பழகி வந்தனர்.

இவர்கள் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்களை காணவில்லை.

டீயூசனுக்கும் போகவில்லை. இருவரும் தீபாவளிக்கு எடுத்த புது துணியை மட்டும் எடுத்து பேக்கில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் மாணவி செல்வஹர்ஷனா வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னை தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த மாணவியின் தாயார் முத்துலட்சுமி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வருகின்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி இரண்டு மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஒரே நேரத்தில் காணாமல் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு செல்லப்பிராணிக்கு பதாகை வைத்து அஞ்சலி : நெகிழ்ச்சி சம்பவம்!!

திருப்பூரில்..

வீட்டில் 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் இறந்ததை தாங்க முடியாமல், வீட்டின் உரிமையாளரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஞ்சலி பதாகை வைத்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் இறந்ததை தாங்க முடியாமல், வீட்டின் உரிமையாளரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஞ்சலி பதாகை வைத்துள்ள நிகழ்வு உடுமலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது வீட்டில் கடந்த 15 வருடங்களாக ஜாக்கி என்ற நாட்டு நாய் வளர்ந்து வந்துள்ளது.

இந்த நாயை கல்யாணராமன் தங்களது வீட்டில் உள்ள ஒரு நபராக கருதி வந்துள்ளார். இந்த நாயானது இவர்களுக்கு மட்டுமின்றி, அதன் சுற்றி இருக்கும் பகுதிக்கும் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளது. இதை அவர்கள் செல்லமாக ஜாக் என்றே அழைப்பர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஜாக்கி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது. ஜாக்கியின் பிரிவை தாங்க முடியாத அதன் உரிமையாளர்கள் அதற்கு முறைப்படி இறுதிச்சடங்கு நடாத்தியுள்ளனர். மேலும் கல்யாணராமனின் மகன் கணேஷ் ராம் தனது செல்லப்பிராணி மறைவுக்கு அஞ்சலி பதாகை வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாக்கியின் மறைவுக்கு அஞ்சலி பதாகை வைத்துள்ளார். அந்த அஞ்சலி பதாகையில், “எங்களுடன் 15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு ஜீவனின் அரசனே..

ஆறறிவு ஜீவனின் செல்லமே.. நீ இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், என்றும் எங்கள் மனதை விட்டு பிரியாமல் இருக்கும் உனது நினைவுகள் கோடி கோடி..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் இறந்ததால், சோகம் தாங்க முடியாமல் அதற்கு பதாகை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ள குடும்பத்தின் செயல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு இளைஞன் செய்த கொடூரம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ள பானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா (வயது 23). இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை வேறொரு பகுதியை சேர்ந்த ஷியாம்ஜித் (வயது 25) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஷ்ணுபிரியாவின் தந்தை வினோத்தின் நண்பர் ஒருவர் இறந்துவிட்டதால், பிரியாவின் தாயும் தந்தையும், இவரை வீட்டில் தனியே விட்டு அங்கே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட ஷ்யாம்ஜித், பிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே அவரிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரியாவிடம் காதலை கூறி, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கே வந்து கூறியுள்ளார். அப்போதும் பிரியா அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு காதலை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தனது காதலி விஷ்ணுபிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். கழுத்தறுபட்ட பிரியா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க இறந்தார்.

பின்னர் வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்க்கையில், பிரியா கழுத்தறுபட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு அனுப்பினர்.

மேலும் பிரியாவின் மொபைல் எண்ணை சோதனை செய்தபோது, அதில் ஷியாம்ஜித்தின் நம்பர் இருந்துள்ளது பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திமிர் பிடித்தவள் என தமிழ்ப்பெண்ணை எண்ணிய இந்திய கிரிக்கெட் வீரர் : அவரே மனைவியான சுவாரசியம்!!

ஜஸ்பிரித் பும்ரா..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற நிலையில் சஞ்சனா விளையாட்டு வர்ணனையாளர் ஆவார். இதன்மூலம் இவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.

ஏனெனில் பும்ராவை பார்த்த போது சஞ்சனாவுக்கு திமிர் பிடித்தவர் என தோன்றிய நிலையில் அதே போல தான் பும்ராவுக்கும் சஞ்சனாவை பார்க்கும் போதும் தோன்றியிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 2019 ஐசிசி உலகக்கோப்பையின் போது பிரித்தானியாவில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேச தொடங்கினர். அப்போது தான் இருவருமே நல்ல அன்பாக பழகக்கூடிய குணாதிசயம் கொண்டவர்கள் என உணர்ந்தனர்.

இந்த பேச்சு நட்பாகி காதலாக மாறியது. இதையடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் பும்ரா – சஞ்சனா திருமணம் நடைபெற்றது. மெஹந்தி நிகழ்ச்சியின் போது சஞ்சனா தனது கையில் போட்டிருந்த மெஹந்தி மிகப்பெரிய அளவில் வைரலானது.

ஏனெனில் அந்த மெஹந்தியில் சஞ்சனா 2019 உலகக் கோப்பை லோகோவை கையில் போட்டிருந்தார். அதாவது இவர்கள் காதலும் அப்போது தான் மலர்ந்திருக்கும் என்பதை குறிக்கவே சஞ்சனா அவ்வாறு போட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்..’ சாப்பாட்டுக்காக 8 லட்சத்தை இழந்த பெண் : பேஸ்புக் விளம்பரத்தால் பரிதாபம்!!

பேஸ்புக் விளம்பரத்தால்..

முகநூல் பக்கத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பிய பெண் ஒருவர், சாப்பாட்டை ஆர்டர் செய்தபோது, அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு 8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் பக்கத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பிய பெண் ஒருவர், சாப்பாட்டை ஆர்டர் செய்தபோது, அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு 8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பாந்த்ரா என்ற பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் முகநூல் பக்கத்தில் உலாவி வந்துள்ளார். அப்படி ஒருமுறை அவர் முகநூல் பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கையில் உணவு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்ததுள்ளது.

அதில் ‘மகாராஜா போக் தாலி’ என்று சொல்லப்படும் உணவு ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்றும், அதன் விலை ரூ.200 என்றும் வந்துள்ளது. இதனை கண்ட அந்த பெண், தனது ஆசையை கட்டுப்படுத்தாமல் உடனே ஆர்டர் கொடுத்துள்ளார்.

அப்போது ஆன்லைன் மூலம் ரூ.200 செலுத்த முற்பட்டு, அவரது வங்கி விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே ஒரு எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், புதிதாக ஒரு லிங்க் அனுப்பியுள்ளதாகவும், அதனை உடனே கிளிக் செய்யும்படியும் கூறியுள்ளார்.

மோசடி விழிப்புணர்வு இல்லாத இந்த பெண்ணும், அவர்கள் சொன்ன லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த 8.46 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ந்த அந்த பெண், உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த பெண் முகநூல் மூலம் ஒளிபரப்பான உணவு விளம்பரத்தை நம்பிய இந்த பெண், அவர்கள் கூறியவற்றையெல்லாம் செய்துள்ளார்.

அப்போது லிங்கை கிளிக் செய்ய சொல்லி அதன் மூலம் தனது போனில் ரிமோட் அக்சஸ் செயலியை தரவிறக்கம் செய்துள்ளார். இதன் மூலம் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை கண்ட்ரோலில் எடுத்த மோசடி நபர், 27 பரிவர்த்தனைகள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளனர்” என்று கூறினார்.

மகாராஷ்டிராவில் ரொட்டி உள்பட பல்வேறு உணவுகள் அடங்கிய பிரபலமான ‘மகாராஜா போக் தாலி’ உணவு வழக்கமாக ரூ.1,500க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், ரூ.200-க்கு ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்’ என்ற விளம்பரத்தை நம்பி ரூ.8 லட்சத்தை இழந்த பெண்ணின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீயசக்தியை விரட்ட பில்லி, சூனியம் : மருமகளை ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்திய மாமியார்!!

கேரளாவில்..

கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்கள் வீட்டிற்கு மந்திரவாதிகள் வந்திருக்கின்றனர். வீட்டில் தீய சக்தி இருப்பதாக கூறி சூனியம், மாந்திரீகம் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இளம்பெண்ணின் கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் லைஷா (60) ஆகியோர் அவரின் உடைகளை களைந்து நிர்வாணமாக நிற்குமாறு கட்டாயப்படுத்தினர்.

இதன்பின்னர் அப்பெண் கணவருடன் சண்டை போட்டு கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். இது குறித்து அப்போதே பொலிசில் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பொலிசார் வழக்குப்பதிவு செய்து லைஷாவை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்யபாபு, அவரின் சகோதரி ஸ்ருதி, மந்திரவாதி அப்துல் ஜப்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இணையம் ஊடாக வாங்கிய கொடிய மருந்தால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் இணையம் ஊடாக வாங்கிய கொடிய மருந்தால் இளம் வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் துர் மரணங்களை விசாரணை செய்யும் அதிகாரி அமேசான் இணைய சேவைகள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சர்ரே பகுதியில் அமைந்துள்ள தங்குமிடத்தில் 23 வயதான நேஹா ராஜு என்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி பின்னணியை வெளிக்கொண்டுவந்தனர்.

அதாவது, தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இணைய குழுக்களில், பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில், நேஹா ராஜு அந்த கொடிய மருந்தை வாங்கியதாக கண்டறியப்பட்டது.

அமேசான் இணைய சேவைகள் நிறுவனம் ஊடாக நேஹா ராஜு தொடர்புடைய மருந்தை ஒரு கனேடிய நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். பொதுவாக உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அந்த மருந்தை பயன்படுத்தி வருவதுடன், தொடர்புடைய மருந்தானது சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது உயிரைப் பறிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் குறித்த கொடிய மருந்தை உட்கொண்டு 40 பேர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நேஹா ராஜுவும் தொடர்புடைய கொடிய மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் அமேசான் நிறுவனத்திற்கும், குறித்த கொடிய மருந்தை தயாரிக்கும் கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிரித்தானிய சுகாதாரத்துறை செயலர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வ சாதாரணமாக பொதுமக்கள் இணைய நிறுவனங்கள் ஊடாக வாங்க முடியும் என்பதால், இதனால் பாதிப்புகளும் அதிகம் என்கிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும், மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் குறித்த கொடிய மருந்துக்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் நிலையில், ஏன் பிரித்தானியாவில் அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோலி – ரோஹித்தை திட்டியதால் கொன்றேன் – இளைஞர் கொலையில் நண்பர் பகீர் வாக்குமூலம்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். ஐடிஐ படித்துள்ள விக்னேஷ் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில் தனது வெளிநாட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்கான டெஸ்டு எடுத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு விக்னேஷின் நண்பரான பிரபாகரன் போன் செய்து அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அதன்பின்னர் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஊருக்கு வெளியில் விக்னேஷ் தலையில் காயம்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இந்த தகவல் காட்டுத்தீப்போல பரவ அக்கம்பக்கத்து கிராமத்தினர் அங்கு குவிந்தனர். விக்னேஷின் பின் தலையில் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த கீழ்ப்பழுவூர் போலீஸார் அங்கு விரைந்தனர். உயிரிழந்த விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிரபாகரன், விக்னேஷ், இவர்களின் நண்பர்களான தர்மராஜ் மூவர் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளனர். 3 பேரும் மது அருந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தர்மராஜ் மீண்டும் விக்னேஷை அழைத்துக்கொண்டு மது அருந்த சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் தர்மராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தர்மராஜ் தந்தை லோன் ஆப்பில் வாங்கிய கடனை கட்டுவதற்காக ரூ.2500 கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற தர்மராஜ் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். பிரபாகரன் வீட்டுக்கு சென்ற நிலையில் தர்மராஜ் மற்றும் விக்னேஷ் மது அருந்தியுள்ளனர். தர்மராஜ் கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். சரளமாக பேச வராது.

மதுபோதையில் விக்னேஷ் உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டு

தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டு..

பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறைமையின் கீழ் நடத்துநர் அல்லது வாகன உதவியாளர் இன்றி பயணிகளிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய பயணச்சீட்டு இயந்திரங்கள் பேருந்துகளில் பொறுத்தப்படும். நடத்துனர் இன்றி அல்லது நடத்துனருடன் பேருந்துகள் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

எனினும் நடத்துனர்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். குறித்த இயந்திரங்களில் கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.

இதனை விரைவில் அறிமுகப்படுத்துவதற்காக முழுமையான தரவுகள் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் வீதி உணவகங்களின் கருத்து கணிப்பில் இலங்கை உணவுக்கு கிடைத்த முதலிடம்

ஆசியாவின் வீதி உணவகங்களின்…

ஆசியாவின் வீதி உணவுகள் சம்பந்தமாக சீ.என்.என் செய்தி சேவை நடத்திய கருத்து கணிப்பில் இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆசியாவில் வீதி உணவுகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 50 வீதமான உணவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இலங்கையின் இனிப்புச் சுவை, புளிப்புச் சுவை, மிளகாய் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படட் காய்கறி மற்றும் பழ அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய மசாலாக்கள், மிளகாய், மஞ்சள், சீனி,உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் வெரள்ளிக்காய், அன்னாசி, விளாம்பழம், அம்பரகங்காய், மாங்காய், கத்தரிக்காய் ஆகிய அச்சாறு உணவுகள் இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த கருத்து கணிப்பில் இலங்கையின் அப்பத்திற்கும் முதலிடம் கிடைத்துள்ளது.இந்த கருத்து கணிப்பில் மலேசியாவில் மீன் மற்றும் புளி ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகையான அசாம் வக்சாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

வியட்நாமின் பான்மி, தாய்லாந்தின் தேனீர், பாகிஸ்தான் கேபாப் பனிஸ், சிங்கப்பூரின் மிளாகாய் அடங்கிய கோழி இறைச்சி உணவு என்பன ஆசியாவில் ஏனைய சுவையான உணவுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் – அடுத்த மாதம் முதல் 4 புதிய வரிகள் அறிமுகம்

4 புதிய வரிகள் அறிமுகம்

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் ஆண்டு நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2056 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன. அந்தப் பரிந்துரைகளுக்கமைய, புதிய வரிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய பகுதியை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்தவர்கள் கைது

இலங்கையின் முக்கிய பகுதியை…

விக்டோரியா அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிகம மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.

சனிக்கிழமை (22) காலை அணைக்கட்டில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து தெல்தெனிய காவல்துறையிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி சுற்றுப்புறப் பகுதியில் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை எடுக்க வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், அவர்கள் அந்த உத்தரவுகளை புறக்கணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி நடந்து கொண்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன், தெல்தெனிய காவல்துறையினர் அவர்கள் பயணித்த வான் ,கமரா, ஆளில்லா விமானம் மற்றும் ரிமோட் கொண்ட்ரோலர் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் வெ ட்டியதில் தவறு – மனைவியை கத்தியால் கு த்திய கணவன்..! யாழில் சம்பவம்

மனைவியை கத்தியால் குத்திய…

யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெ ட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சந்தைக்கு சென்று மீனுடன் வந்த கணவன் அதனை வெ ட்டுமாறு மனைவியிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மீனினை மனைவி வெ ட்டிக் கொண்டிருந்த போது வெ ட்டியது தவறு எனக் கூறி மீன் வெ ட்டிய கத்தியை பறித்து மனைவி மீது வெ ட்டியுள்ளார்.

இந்நிலையில், அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு கா யங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டனர்.