வவுனியாவில் பெண்ணை பின்தொடர்ந்து தாலியை அறுத்துச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இளைஞர்கள் கைது..

வவுனியா பொலிசாரின் துரித நடவடிக்கையால் குற்றச் செயல் தொடர்பில் இரு இளைஞர்கள் நேற்று (23.10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வைத்தியசாலைக்கு சென்ற பெண் ஒருவர் சிகிச்சை முடிந்தபின் நேற்று முன்தினம் (22.10) பிற்பகல் 2 மணியளவில் வீடு நோக்கி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர்கள் வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த பெண் மஞ்சள் நூலில் அணிந்திருந்த ஒரு பவுண் தாலியினை அறுத்துச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில்,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461),

உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையை இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

அறுத்துச் செல்லப்பட்ட தாலி அடைவுக் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

படுக்கையறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவின் கண்ணூர் அருகே பானூர் வல்லையில் வீட்டில் இளம்பெண் வெ.ட்.டி.க்.கொ.லை செ.ய்.யப்பட்டார். கண்ணச்சங்கண்டி வினோத் என்பவரின் மகள் விஷ்ணுபிரியா (23) கொடூரமான முறையில் ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டார். இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.

விஷ்ணுபிரியா பானூரில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். வீட்டின் படுக்கையறையில் இவர் கொ.டூ.ர.மா.ன மு.றையில் கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார். க.ழு.த்.தை அ.று.த்.து.ம், கை, உ.ட.ல்.க.ளி.லு.ம் வெ.ட்.டு.க்.கா.ய.ம் உ.ள்ளது கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், கொ.லை.யா.ளி யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவத்தின் போது, ​​விஷ்ணு பிரியாவின் வீட்டின் முன் தொப்பி அணிந்து பையுடன் ஒருவர் நடந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர்.

அந்த ம.ர்.ம நபர் பற்றி போலீசார் தீ.விர வி.சாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து இ.ளம்பெண் க.ழு.த்.தறு.த்.து ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேச மறுத்த காதலியின் வீட்டுக்கு முன்பு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

விருதுநகரில்..

விருதுநகர் அருகே காதலி பேச மறுத்ததால் காதலி வீட்டு முன்பு இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24). துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார்.

தேவகுமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த தேவகுமார் தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த தேவகுமார் காதலியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து, தன்னுடன் பேசுவதை கைவிடுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் தேவகுமார் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று காதலி பேச மறுத்ததால் விரக்தியடைந்த தேவகுமார் காதலியின் வீட்டின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தந்தை கோவில் பிச்சை அளித்த புகாரின் அடிப்படையில் வாச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவிகளிடம் அனுதாபத்தை பெற கணவர் போட்ட அதிரடி திட்டம் : தட்டி தூக்கிய போலிஸ்!!

மும்பையில் ..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கெய்க்வாட். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி குடும்பம் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது இரண்டாவது மனைவி சுனிதா என்பவர், கடந்த அக்டோபர் 14-ம் தேதி தனது கணவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, சம்பவம் நடந்த நாளன்று இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ ரிக்ஷாவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சந்தீப்பை அடித்து கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியை ஆராய்ந்தனர். அதனடிப்படையில் அந்த ஆட்டோ ரிக்ஷாவை கண்டறிந்து விசாரித்தனர்.

பின்னர் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தனது வாகனத்தை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சந்தீப்பை கடத்தி சென்ற மூவரும் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் என்று கண்டறியப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, நாங்கள் சந்தீப்பை அடித்து, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும், பின்னர் அவர், அங்கிருந்து வேறு ஒருவரின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஸ்கூட்டி யாருடையது என்பதை கண்டறிந்து கடந்த 18-ம் தேதி ஜாவேத் என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் இது ஒரு போலி கடத்தல் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் தன்னை கடத்தியதாக தனது மாமியார் மீது பழிபோட சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சந்தீப் இருக்கும் இடத்தை அறிந்து அங்கே சென்று அவரை கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.

அப்போது அவரிடம் விசாரித்ததில், தன்னை கடத்தியதாக கூறினால், தனது இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் வரும் என்றும், என்னை இருவருமே சரிவர பார்த்துக்கொள்ளவில்லை என்பதால் இப்படி செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயது 11 மாதம் தான்… ஆனால் செய்த சாதனைகள் எல்லாம் வேற லெவல்… உலக அளவில் கவனம் பெற்ற தமிழ் சிறுவன்!!

கன்னியாகுமரியில்..

பொதுவாக குழந்தைகள் அத்தனை சீக்கிரத்தில் எதையும் மறப்பதில்லை. தங்களது வாழ்வில் பார்க்கும் புதிய நபர்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வெகு விரைவில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவை.

இதன் காரணமாகவே குழந்தைகளால் எளிதில் ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். குழந்தைகளை சரியான முறையில் ஊக்குவிக்கும் போது அவர்களுடைய ஞாபகத் திறனும் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அதற்கு சாட்சியாக இருக்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த அற்றி ஹெர்மன் எனும் சிறுவன்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது தேனாம்பாறை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெர்மன். இவருடைய மனைவி பியான்ஷா. இந்த தம்பதிக்கு அற்றி ஹெர்மன் எனும் மகன் இருக்கிறார்.

தற்போது அற்றி ஹெர்மனுக்கு வயது 11 மாதம் தான். ஆனாலும் அந்த சிறுவனிடம் அபரிமிதமான நினைவாற்றல் இருக்கிறது. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை கூறினாலே அதனை இனம் கண்டு கொள்கிறான் இந்த குட்டி சிறுவன்.

இதுவரை வீட்டில் பயன்படுத்தும் 233 விதமான பொருட்களின் பெயரை கூறினால் அதனை சரியாக கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறான் ஹெர்மன். வேர்ல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட்ஸ், மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனைப் புத்தகங்களில் இக்குழந்தையின் பெயர் இடம் பிடித்துள்ளது.

இதனால் உள்ளூர் மக்களிடையே ஹெர்மன் பிரபலமாகியுள்ளான். 11 மாதத்தில் வீட்டில் உள்ள பல பொருட்களை ஹெர்மன் அடையாளம் காண்பதை கண்டு உள்ளூர் மக்களே திகைப்பில் ஆழந்துள்ளனர். இதனிடையே சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.

வவுனியாவில் விசேட விலைக்கழிவுகளுடன் வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பிட அண்ணா விரைவுப்பொதிகள் சேவை

அண்ணா விரைவுப்பொதிகள் சேவை – 0779235823 , 0763035011 , 0242220033

8வருடங்களாக மக்களின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பினை பெற்ற அண்ணா விரைவுப்பொதிகள் சேவையினரின் வவுனியா கிளையினால் வாடிக்கையாளர்களுக்கு 70வீதம் வரையில் சிறப்பு கட்டணக்கழிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 15க்கு மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ள அண்ணா விரைவுப்பொதிகள் சேவையினர் விரைவுசேவையினை 5 தொடக்கம் 7 நாட்களுக்குள்ளும் சாதாரணசேவையினை 10 தொடக்கம் 14 நாட்களுக்குள்ளும் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

விரைவு சேவைகள் 11KGவிற்கு மேல் கட்டணங்களாக CANADA – 3780ரூபாய் , NORWAY – 3780ரூபாய் , SWISSLAND – 3420ரூபாய் , USA – 3780ரூபாய் , AUSTRALIA- 2900 ரூபாய் ஆகவும் சாதாரண சேவையில் 11KGவிற்கு மேல் கட்டணங்களாக UK – 1650ரூபாய் , GERMANY – 2050ரூபாய் , FRANCE – 2220ரூபாய் , NETHERLAND – 2300ரூபாய் , ITALY – 2480ரூபாய் ஆக குறைந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் உறவுகளுக்கு பொதிகளை அனுப்பி சந்தோசத்தினை பகிர்ந்திட இதோ விசேட கட்டணக்கழிவினை பெற்றுக்கொள்ளுங்கள் . தொடர்புகளுக்கு – 0779235823 , 0763035011 , 0242220033 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு இன்றே அழைப்பினை ஏற்படுத்துங்கள் – உங்கள் வீடுகளுக்கு வந்தும் பொதிகள் பெற்றுக்கொள்ளப்படும்

அண்ணா விரைவுப்பொதிகள் சேவையின் ஏனைய கிளைகள் – யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – கைதடி – ஆவரங்கால் – நெல்லியடி – பளை – கிளிநொச்சி – புதுக்குடியிருப்பு – மல்லாவி – மன்னார் – வத்தளை – கொழும்பு – திருகோணமலை – மட்டக்களப்பு

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே

டொலர்கள் வேண்டுமாயின்…

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.

ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் அதிபர் ரணிலிடம் கோரினேன் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

க ஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் டயனா கமகே மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் முடிவிடுவது சரியாக இருக்காது.

ஜனாதிபதியின் உத்தரவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு!

இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களால் த ண்டிக் கப்பட்ட பின்னர் இவர்கள் பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக க டுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்துக்களால் நாளை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது, விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று கைதிகளின் விடுதலையில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்து சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள். என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலரை சோகத்தில் ஆ ழ்த்திய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தி டீர் ம ரணம்!தந்தை வெளியிட்ட தகவல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவரொருவர் நேற்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென உ யிரிழ ந்துள்ள சம்பவம் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த போது ம ர்ம மான முறையில் உயிரிழ ந்த மாணவனின் ச டலம் பரகஸ்தோட்டை,பல்பொல ஆசாரிகொட வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றிய பண்டாரகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவரே இவ்வாறு உ யிரி ழந்துள்ளார்.

பண்டாரகம தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் பல்கலைக்கழகத்தின் கபடி அணியின் தலைவராகவும்,சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.

குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி வீட்டில் இருந்து விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாகவும், பின்னர் வீட்டிற்கு தெலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வீட்டில் ஏற்பட்ட கணினி பிழை தொடர்பாக தனது சகோதரியுடன் நள்ளிரவு வரை தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிங்கராஜா விடுதியில் உள்ள அறையொன்றில் நண்பர்கள் சிலருடன் உறங்கச்சென்ற ஹர்ஷ தனஞ்சய, எழுந்திருக்காத காரணத்தினால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உ யிரிழ ந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவனுக்கு உடலில் வெளிப்புற காயங்களோ அல்லது வி ஷக்கடிகளோ இல்லை எனவும், ஆனால் ம ரணத்திற்கான காரணத்தை சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் இறுதிக்கிரியைகள் நாளை 23ஆம் திகதி பல்பொல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதுடன்,மாணவனின் இ றப்பி ற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளதாவது, தனது மகனுக்கு உடலில் இதுவரை எவ்வித நோயும் இல்லை,நித்திரைக்கு சென்ற மகன் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனது ஒரேயொரு மகனை நான் இழந்துவிட்டேன். மகன் சிறந்த விளையாட்டு வீரர் நரம்புகளில் எதுவும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை வைத்தியர்கள் அவதானிக்க வேண்டும்.எனது நிலைமை இன்னொரு தந்தைக்கு ஏற்படக்கூடாது.எனது மகனின் மரணம் தொடர்பில் விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! விசாரணையில் சிக்கிய பிரபல தனியார் வங்கிகள்

பிரபல தனியார் வங்கிகள்

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியால் பல கோடி ரூபாய் மோசடிக்கு வழிவகுத்த பல தனியார் வங்கி நிதி நிறுவனங்கள் மற்றும் அடமான நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிக்குகள் என பலரிடம் பல கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் என்பன அடமான நிறுவனங்கள் ஊடாக திலினி பிரியமாலிக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திலினி பிரியமாலிக்கு அந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் ஒரு குழுவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட 3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திலினி பிரியமாலி இந்த நிறுவனங்களின் ஊடாக மாற்றியுள்ளார்.

சந்தேகநபருக்கு இவ்வளவு பெரிய தொகை பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும், அவர் அதை வைப்பு செய்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் விசாரணை செய்யாதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் தனது திகோ குழும வர்த்தகத்தை நடத்தி வந்த உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள மூன்று தனியார் வங்கிகளுடன் நேரடியாக பாரிய பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரின் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அந்த வங்கிகளின் தலைவர்கள் பலர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிர்வரும் காலங்களில் அழைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதானமாக செயற்படுங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வானிலை குறித்து அறிவித்தல்

இன்றைய வானிலை குறித்து அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகளின் சமாதி அருகே அவரின் காதலனுக்கும் சமாதி கட்டிய தந்தை : நடந்த விபரீதம்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம், துவாரகா பகுதியை அடுத்த லெட்சுமிபுரம் என்னும் இடத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (வயது 24). இவரும், கொடுங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மரிது ஷியாமளா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஓரே இடத்தில் படித்ததால் பவன் கல்யாண் மற்றும் ஷியாமளா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பவன் கல்யாண் மற்றும் ஷியாமளா ஆகியோர், தங்களின் காதலை வீட்டில் சொல்லவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், இருவரது வீட்டிலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, காதலர்கள் இருவரும் மனமுடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், கல்லூரி படிப்பை தொடரவும் அவர்களின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனையடுத்து, காதல் கைகூடாத காரணத்தினால் விபரீத முடிவை எடுத்த இளம்பெண் ஷியாமளா, சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.

மகளின் மறைவால், ஷியாமளாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் துயரத்தில் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஷியாமளாவின் தந்தை நாகேஸ்வர ராவ் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மகளின் காதலரான பவன் கல்யாணை கொலை செய்யவும் நாகேஸ்வர ராவ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் நண்பர்களுடன் இருந்த பவன் கல்யாண் திடீரென காணாமலும் போயுள்ளார். அப்படி இருக்கையில், மகன் காணாமல் போனது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் பவன் கல்யாண் பெற்றோர்கள் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

பவன் கல்யாணை கொலை செய்த நாகேஸ்வர ராவ், அவரை மகள் ஷியாமளாவின் சமாதிக்கு அருகில் புதைத்து சமாதி கட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை வாக்குமூலமாவும் நாகேஸ்வர ராவ் கொடுத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், பவன் கல்யாண் உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகள் விபரீத முடிவை எடுத்ததால் மீளா துயரில் இருந்த தந்தை காதலனை பழி வாங்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய், தந்தை எடுத்த விபரீத முடிவு!!

கோவையில்..

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் சிறுவாணி அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். இந்தநிலையில் தங்களது ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் சங்கர் ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நந்தினி, சங்சீவ் சங்கர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனை ஏவி கணவனை கொலை செய்து வீடியோ அழைப்பில் ரசித்த மனைவி : அம்பலமான நாடகம்!!

தமிழகத்தில்..

என் கணவரை எந்த படுபாவியோ கொலை செய்துவிட்டான் என்று கதறி அழுததை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். கணவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை மனைவி விஜயசாந்தி வீடியோ காலில் ரசித்தது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலனை ஏவி கணவனை கொலை செய்ய வைத்து அதனை வீடியோ காலில் பார்த்து ரசித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேடசந்தூர் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த விஜயசாந்தியும், சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 6 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விஜயசாந்தி கணவருடன் கோபித்துக் கொண்டு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள சாலையூர்- நால்ரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்றார்.

இந்த நிலையில், கடந்த 2 வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த நவீன்குமார், கோடாங்கிப்பட்டி பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக கிராம மக்கள் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வேடசந்தூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த நவீன் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த நவீன் குமாரின் மனைவி விஜயசாந்தி, என் கணவரை எந்த படுபாவியோ கழுத்தறுத்து கொலை செய்துவிட்டான் என்று கதறி அழுது கொண்டு ஓடி வந்தார்.

அவர் அழுததை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து துருவித் துருவி விசாரித்தனர். விஜயசாந்தியிடம் நடத்திய விசாரணையில் நவீன் குமார் கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த விஜயசாந்தி, கணவருடனான காதல் கசந்ததால் உருவான குடும்பப் பிரச்சனையை போக்குவதற்கு குறி சொல்லும் சாமியார் சிவாவிடம் சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பிரிந்து வாழ்ந்த மனைவி விஜயசாந்தியை பார்க்க வந்த போதெல்லாம் கணவர் நவீன்குமார் சண்டையிட்டு செல்வதை வாடிக்கையாக்கியதால் கணவர் மீது தீராத கோபம் கொண்டு அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு ‘குரிச்சொல்லி’ சிவாவை ஏவியுள்ளார்.

அதன் படி சிவா லோடு மேன் போல வேடமிட்டு, நவீன் குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி மது அருந்த அழைத்துச் சென்று போதை தலைக்கேறிய நிலையில் கத்தியை எடுத்து நவீன்குமாரின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்பு தனது காதலி விஜயசாந்திக்கு போன் செய்து இத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறியதாகவும், ஆனால் அதை நம்பாத காதலி விஜயசாந்தியிடம் வீடியோ கால் மூலம், நவீன்குமார் கழுத்தருக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை காண்பிக்க அதனை பார்த்து விஜயசாந்தி ரசித்தது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விஜயசாந்தியையும், ஒட்டன்சத்திரத்தில் பதுங்கி இருந்த சிவாவையும் பொலிஸார் கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

40 நாட்கள் வாழ்ந்துவிட்டு மாயமான காதல் மனைவி : அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!!

சென்னையில்..

சென்னை தாம்பரத்தின் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி அபிநயா, நடராஜனை விட மூன்று வயது மூத்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், இருவரும் வேலைக்கு சென்றுவந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவதினத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார், வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். நடராஜனும் சிறிய வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, அபிநயாவை காணவில்லை.

வீட்டில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்துள்ளது, அதில் நடராஜனின் தாயார் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து அபிநயாவின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தாம்பரம் போலீசாரிடம் புகார் அளிக்க, அவர்கள் விசாரித்து பார்த்ததில், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும், அபிநயாவை பெற்றோரை பிரிந்துவிட்டு தனியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

திருமணத்தன்று அபிநயாவின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது, அபிநயா திட்டமிட்டு இப்படி செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த கொடூரம்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் வேறு சமூகத்தவரை மணந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் தாக்கியதில் பெண்ணொருவருக்கு கர்ப்பம் கலைந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த பழைய வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஹரி. இவர் லீலாவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் கோபப்பட்ட இருவரது பெற்றோரும், பின்னர் சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த லீலாவதி, தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்துள்ளார். அவரும் லீலாவதியின் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு திடீரென கிராம மக்கள் பலர் லீலாவதியின் வீட்டை முற்றுகையிட்டனர். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்தால் லீலாவை கண்டித்த கிராம மக்கள், தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகவும், அதனால் அவரது குடும்பம் 50 ஆயிரம் அபராதத்தினை இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால், வறுமையில் வாடும் தங்கள் குடும்பத்தால் அந்த தொகையை செலுத்த இயலாது என லீலாவின் குடும்பம் கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களை வசைபாடத் தொடங்கியுள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளான லீலாவின் கர்ப்பம் கலைந்துள்ளது. அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.