தம்பதிக்கு இலவச பீட்சாவை அறிவித்த பீட்சா ஹட்.. எதற்காக தெரியுமா?

அஸ்ஸாமில்..

மாதம் ஒருமுறை பீட்சா வேண்டும் என்று திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண் ஒருவர் போட்டுள்ள ஒப்பந்தத்திற்கு பீட்சா ஹட் நிறுவனம் மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா அளிப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பார்த்திபன்-வடிவேலு படத்தில் வரும் ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ என்ற காமெடியை போல முதலில் நல்ல பெண் கிடைக்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து இறுதியில் பெண் கிடைத்தால் போதும் என்று 90ஸ் கிட்ஸ் நிலைமை இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக திருமணம் ஒன்று அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண் போட்ட பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த பெண்ணை ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு என்பவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த நிலையில், மணமகனும், மணமகளும் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்த தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை தம்பதிகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஒப்பந்தம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே இருவரும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்கள் என்றும், திருமணத்துக்கு பின்னர் இதை பின்பற்றவேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை முன்னரே செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்ற ஒப்பந்தங்கள் இருந்தது.

ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்துள்ளது.

இந்த நிலையில் திருமணத்தின்போது மாதாமாதம் பீட்சா வாங்கி தர வேண்டும் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக தம்பதிக்கு பீட்சா ஹட் உணவகம் மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா அளிப்பதாக பீட்சா ஹட் உறுதியளித்துள்ளது. இதனை தம்பதி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர் : கதறும் இளைஞர்கள்!!

70 வயது முதியவர்..

70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையம் என்பது பல வீடியோக்கள் நிறைந்த உலகம்.

சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம் வினோத வீடியோக்கள் பார்ப்பதுண்டு. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

இங்கு திருமண மண்டபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 20 வயது பெண் அருகே மாலையுடன் உட்கார்ந்து இருக்கிறார். மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அந்த 70 வயது மணமகன் அமைதியாக இருக்கிறார்.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் இந்த மணமக்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த காட்சியை அவதானித்த இளைஞர்களும் கதறி வருகின்றனர்.

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு! மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதாக பா லியல் நோ ய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் முடிவடைந்த காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி கூறியுள்ளார்.

இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 25 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த ஆண்டு 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிள்ளைகள் இணையத்தளம் வழியாக கல்வி கற்பதால், இணையத்ளத்தில் பல்வேறு பா லியல் சம்பந்தமான கணொளிகளை பார்த்து, அதனால், ஏற்படும் து ண்டு தலே இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. பரவ காரணம் என நாங்கள் நினைக்கின்றோம்.

ஆண் பிள்ளைகளே இதில் அதிகம். 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 30 இளம் ஆண் பிள்ளைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை

இம்மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையில் மாதாந்தம் 25ஆம் திகதியாகும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி பணம் வைப்பிலிடப்படுவது வழமையாகும் என தெரியவருகிறது.

எனினும், எதிர்வரும் 24ஆம் திகதி அதாவது திங்கட்கிழமை தீபாவளி காரணமாக அன்றைய தினம் அரச விடுமுறையாக உள்ளது.எனவே, வார இறுதியில் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அமைந்துள்ளது. அப்படியாயின் இன்றைய தினம் வேதனத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், திறைசேரியிடமிருந்து குறித்த பணம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலைமைக்கு மத்தியில், நிதி அமைச்சின் ஒதுக்கீடு கிடைத்த பின், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை, எதிர்வரும் 25ஆம் திகதி வங்கியில் வைப்பிலிட மாகாண செயலக காரியாலயம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம்

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் நான்காம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்துவதற்கான விண்ணப்பங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2785231, 011 2785216, என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாகவும், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியும் அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

நாடாளுமன்ற விவாதங்களை பார்ப்பதற்கு

நாடாளுமன்ற விவாதங்களை பார்ப்பதற்கு பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக்கூட்டங்கள் நடக்கும் தினங்களில் நாடாளுமன்றத்தை பார்வையிடவும் விவாதங்களை பார்வையிடவும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய நாடாளுமன்ற அவையில் பொது பார்வையார்கள் அரங்கில் அமர்ந்து நாடாளுமன்ற விவாதங்களை நேரில் பார்க்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

கோவிட் தொற்று நோய் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பார்வையிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்களுக்கு நாடாளுமன்ற விவாதங்களை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

தீபாவளி தின மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

மின்வெட்டு தொடர்பில்

தீபாவளி தினத்தன்று மின்தடையை நடைமுறைப்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளை இதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்தார்.

இதன்படி, இன்று மற்றும் நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியாவில் போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா விற்பனை : பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு!!

போலியான முகவரியுடன்..

போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா விற்பனை இடம்பெறுவதாக வவுனியா ஊடக அமையத்தால் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நலன் கருதி கோதுமை மாவின் விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்ட போதும், வவுனியா மாவட்டத்தில் கோதுமை மாவின் விலையானது 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த கோதுமை மாவினை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களை கேட்ட போது, தமக்கு வழமையாக கோதுமை மாவினை விநியோகம் செய்யும் விநியோகத்தர்களே குறித்த கோதுமை மா பொதிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களால் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, வவுனியா ஊடக அமையம் குறித்த விடயத்தை வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபை மற்றும் உதவி அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் மக்களின நலன்கருதி பாவனையாளர் அதிகார சபையும், மாவட்ட அரச அதிபரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

 

குப்பை பொறுக்கிய மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : இளைஞனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

மூதாட்டி..

குப்பை அள்ளி அதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்த 75 வயது மூதாட்டியின் வாழ்வை, ஒரே நாளில் தலைகீழாக மாற்றிய வாலிபரின் செயல் இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் 75 வயதாகும் மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்குகளிலிருக்கும் துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனை பார்த்த சிலர் தள்ளாடும் வயதில் இருக்கும் மூதாட்டியின் நிலையைக் கண்டு சில உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தருண் மிஸ்ரா எனும் வாலிபர் மூதாட்டின் நிலையை பார்த்து, அவருக்கு தேவையான பொருட்கள், சேலைகள் வாங்கிக் கொடுத்ததோடு, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறார். வாலிபரின் இந்த செயலுக்கு இணையத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீ வேலைக்குப் போனா எனக்கு அவமானம் : மனைவியை கொடூரமா தாக்கி செலஃபி எடுத்த கணவன்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப். இவர் ஆதிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான திலிப் வேலைக்கு எதுவும் செல்லாததால் குடும்பத்தைக் கவனிப்பதில் சிரமம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி ஆதிரா வேலைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

பிறகு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கணவர் திலீப் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் தன் குழந்தைகளுக்காக ஆதிரா வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த திலீப் மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். மேலும் அவரை கொடூரமா முகத்தில் தாக்கியுள்ளார். இதில் அவரது முகத்தில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த காயத்துடன் இருந்த மனைவியுடன் சேர்ந்து தீலிப் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார்.

மேலும் மனைவியை மோசமாக திலீப் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கடனை அடைக்க நான் வேலைக்குச் செல்ல வேண்டும்.

இல்லை என்றால் என் குழந்தைகள் பட்டினி கிடக்கும் என ரத்தம் வழியும் முகத்துடன் அவர் பேசும் காட்சி காண்போரை பதறவைத்துள்ளது. பின்னர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீலிபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் வைத்து தாக்கிய கிராம மக்கள் : நடந்த விபரீதம்!!

ஆந்திராவில்..

வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரப்பட்ட பெண்ணின் கிராமத்தினர், கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் வைத்து தாக்கியதில் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் என்றார் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ ஹரி. இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை இரகசியாகவே வைத்திருந்தனர்.

ஆனால் ஒருநாள் இவர்களது காதல் விவகாரம், இவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து தனது மாமியார் வீட்டில் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், லீலாவதிகர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் அவர்களது வீட்டில் லீலாவை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொண்டனர்.

சம்பவத்தன்று தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல விரும்பிய லீலா, இது குறித்து கணவரிடம் கூறியுள்ளார். பின்னர், கணவரும், லீலாவும் சேர்ந்து லீலாவின் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே லீலா வந்ததை அறிந்த கிராமத்தினர், அவரது வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட லீலாவை கண்டித்தனர்.

அதோடு, மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை லீலா திருமணம் செய்துகொண்டதால், தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகவும், அதனால் லீலாவின் குடும்பம் கிராமத்திற்கு அபராதம் செலுத்தும்படியும் அந்த கிராமத்தினர் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதனை 2 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால் லீலாவின் குடும்பம் வறுமையானது என்பதால், அவர்களால் அந்த தொகையை செலுத்த முடியாது. எனவே, இது குறித்து கிராமத்தினரிடம் முறையிட்டனர்.

இருப்பினும் அவர்களது பேச்சை கேட்காத கிராமத்தினர், லீலாவின் குடும்பத்தினரை வசைப்பாடியுள்ளனர். இதனால் அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், லீலா மற்றும் அவரது கணவரை அந்த ஊர் மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் கர்ப்பிணி என்றும் பாராமல் நடுத்தெருவில் இழுத்து வந்து லீலாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே லீலாவின் கர்ப்பம் கலைந்துள்ளது.

இதையடுத்து லீலாவை மீட்ட அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரப்பட்ட பெண்ணின் கிராமத்தினர், கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் வைத்து தாக்கியதில் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுக்கையில் மாயமான மனைவி… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சென்னையில்..

தாம்பரம் அருகே திருமணம் செய்த சில மாதங்களில் கணவன் வீட்டில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பிய இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் நகை பணத்துடன் தப்பி ஓடிய புது மனப்பெண்ணை போலீசார் ஆதார் கார்டை கைப்பற்றி அதில் இருக்கும் முகவரிக்கு விரைந்துள்ளனர்.

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (30). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்,

இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அபிநயா பெற்றோரை தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு நடராஜன் கூறியுள்ளார். ஆனால், தனக்கு யாரும் இல்லை என்று கூறியதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று அருகில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடிரென காணமல் போனதை கண்டு நடராஜன் அதிர்ச்சியடைந்தார். பின்பு அறையில் இருந்த பீரோ திறந்து இருந்ததால் அதை பார்த்த போது அதில் வைக்கபட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரொக்க பணத்துடன் அபிநயா மாயமானது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைபற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு போலீசார் விரைந்துள்ளனர். விரைவில் அபிநயா கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காரனால் ஏமார்ந்து கதறும் நடிகை பார்வதி நாயர்!!

பார்வதி..

நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்ற வேலைக்காரர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வதி நாயர் பிரபலமான மாடல் மற்றும் நடிகையுமாவார். மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த இவர் அபுதாபியில் பிறந்தவர்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரியான பார்வதி நாயர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். மாடல் துறையில் பிரபலமாகி பின்னர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பார்வதி நாயர் முதன்முதலில் 2017 இல் மலையாளத்தில் வெளியான பாபின்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் இவர் சென்னை நுங்கம்பாக்கம், ஸிடெர்லிங் சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினார். அப்போது, அவர் வீட்டில் வேலை பார்க்கும் சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர் மாயமாகி இருந்தார்.

செல்போனில் அவரை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் குழப்பத்தில் இருந்த பார்வதி நாயர் வீட்டுக்குள் அலசியபோது வீட்டின் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பார்வதி நாயர் வீட்டின் அறையை சோதனை செய்தார்.

அப்போது, வைரம் பதிக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் , மடிக்கணினி, மொபைல்போன் ஆகியவை திருடுப்போயிருந்தது தெரிய வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகமடைந்த பவித்ரா நாயர் , நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் வாரம் இரு நாட்கள் மட்டும் தான் நடிகை வீட்டில் வேலை செய்வாராம். மற்ற நாட்களில், தயாரிப்பாளர் ஒருவரிடம் வேலைக்கு செல்வாராம். தற்போது அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே கொக்குப்பாறை ஓடையில், டூ வீலரில் தாயுடன் சென்ற மாணவி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பேரிடர் மீட்புப்படையினர் 13 மணி நேரம் போராடி, அவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில், பல இடங்களில் ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எருமப்பட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், இவருடைய மனைவி கவிதா.

இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (18), இவர் நாமக்கல்லில் உள்ள, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை கல்லூரி முடித்து விட்டு பஸ்சில் வந்த, ஜீவிதா, சிங்களங் கோம்பையில் இருந்து தாய் கவிதாவுடன் வீட்டிற்கு டூ வீலரில் சென்றார்.

அப்போது கொக்குப் பாறை ஓடையை கடந்து சென்ற போது, ஓடையில் திடீரென்று தண்ணீர் அதிகளவில் வந்தது. அதற்கு மேல், டூ வீலரில் செல்ல முடியாமல், அதை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடை வழியாக இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது ஓடையில் வந்த வெள்ளம் இரண்டு பேரையும் இழுத்துச்சென்றது.

அவர்கள் இருவரும் வெள்ள நீரில் தத்தளித்தபோது கூச்சலிட்டனர். அதைக்கேட்டு அங்கு வந்தவர்கள் கவிதாவை மீட்டு ஓடையை விட்டு வெளியேற்றினார்கள். ஆழமான பகுதியில் தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி ஜீவிதாவை அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், எருமப்பட்டி போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர், ஓடையில் இழுத்துச்செல்லப்பட ஜீவிதாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வி நேரில் வந்து மீட்புப்பணியை பார்வையிட்டார்.

இந்தநிலையில் சுமார் 12 மணி நேரம் தேடியும் கல்லூரி மாணவி கிடைக்கவில்லை. இதையொட்டி மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று காலை கொக்கு பாறை ஓடை பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஓடைப்பகுதியில் தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 1 மணி நேரம் தேடலுக்குப் பிறகு கல்லூரி மாணவி ஜீவிதா ஓடை தண்ணீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

ஜீவிதாவின் உடலைக்கைப்பற்றிய எருமப்பட்டி போலீசார், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எருமப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தடவை தொட்டா திரும்ப தொடுவதில்லை… கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மனைவியின் ஆச்சரிய மறுபக்கம்!!

நீட்டா அம்பானி..

முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டாவிடம் உள்ள அசாதாரணமான மற்றும் ஆச்சரியம் தரக்கூடிய பழக்கவழக்கங்கள் குறித்து தெரியவந்துள்ளது, சாதாரண குடும்பத்தை சேர்ந்த நீட்டா முகேஷ் அம்பானியை மணந்தவுடன் கோடீஸ்வர பெண்ணானார்.

குழந்தைகள் பெற்ற பிறகு நீட்டாவின் உடல் எடை அதிகரிக்க தொடங்கியது. இதன் பின்னர் டயட்டில் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்படி தனது நாளை உலர் பழங்களுடன் தொடங்குகிறார், பின்னர் காலை உணவாக முட்டை வெள்ளை ஆம்லெட்டை சாப்பிடுகிறார்.

மதிய உணவில் சூப்புடன் பச்சைக் காய்கறிகள் உள்ளன, இரவு உணவிற்கு முளைகள் மற்றும் சூப்களுடன் அதிக பச்சைக் காய்கறிகளை சாப்பிடுகிறாள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதும் நீட்டாவுக்கு பிடிக்கும்.

நீட்டா அம்பானி Padro, Jimmy Choo and Marlin போன்ற புகழ்பெற்ற காலணி வகைகளை தான் அணிவார். ஒரு முறை அணிந்த காலணிகளை மீண்டும் தொட்டு பார்க்கும் பழக்கம் கிடையாது, அதாவது மீண்டும் அதே காலணிகளை அணிய மாட்டார். அவர் தனக்குப் பிடித்த காலணிகளின் பெரிய தொகுப்பை வீட்டிலேயே வைத்துள்ளார்.

Dhirubhai Ambani International School-ஐ நடத்தி வரும் நீட்டா, மாணவர்கள் சேர்க்கை நேரங்களில் விண்ணப்பங்களில் எதை ஏற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதால் அப்போதெல்லாம் வெளியே செல்லாமல் பணியில் தொடர்ந்து இருப்பார்.

பிஸியான பெண் என்ற போதிலும் நீட்டா ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குகிறார். அவரது விருப்பமான உடற்பயிற்சி வடிவங்கள் யோகா, நீச்சல் மற்றும் கிளாசிக்கல் நடனம் ஆகும்.

போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே பார் வைத்திருக்கும் சீரியல் நடிகை!!

சீரியல்களில்..

நடிகர் நடிகைகள் எல்லாம் போதைக்கு அடிமையாக இருப்பதெல்லாம் காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசுவதும் உண்டு.

ஆனால் பல நடிகர் நடிகைகள் அவர்களது வீட்டிலேயே பார் வைத்திருக்கும் அளவுக்கு போதையில் மிதக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமான தகவலாக தான் இருக்கும்.

கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் தற்போது அவரது வீட்டில் சொந்தமாக பார் செட்டப் வைத்திருப்பாதாக ஹோம் டூர் வீடியோவில் காட்டி இருக்கிறார்.

அவரது கணவர் பிரின்ஸ் மட்டுமின்றி அவருக்கும் அது ரொம்ப பிடிக்குமாம். அவரே இந்த வீடியோவில் 12வது நிமிடத்தில் சொல்கிறார் பாருங்க.