ஈரானில் உச்ச தலைவருக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த பள்ளி மாணவியை சிறப்பு பொலிசார் அடித்தே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை வாழ்த்தி ஆதரவாளர்களால் பாடப்படும் பாடலையே குறித்த மாணவி பாட மறுத்துள்ளார்.
வியாழன் அன்று ஷாஹித் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த சிறப்பு பொலிசார், அங்குள்ள மாணவர்களை தொடர்புடைய பாடலை பாட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால் 16 வயது Asra Panahi என்ற மாணவி உட்பட சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த மாணவிகளை கொடூரமாத தாக்கிய பொலிசார், அவர்களை பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், காயங்கள் காரணமாக Asra Panahi சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஏற்கனவே ஹிஜாப் முறையாக அணியாத விவகாரத்தில் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு 22 வயது Mahsa Amini மரணமடைந்த நிலையில், 5 வாரமாக ஈரானில் போராட்டங்கள் நீடித்து வருகிறது.
தற்போது பொலிசாரின் கொடூரத்திற்கு Asra Panahi என்ற மாணவியும் மரணமடைந்துள்ளது பொதுமக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஈரானிய அதிகாரிகள் Asra Panahi மரணத்திற்கு பொறுப்பேற்க மறுத்துள்ளதுடன், அவரது உறவினர்களை தூண்டிவிட்டு, Asra Panahi மாரடைப்பால் இறந்ததாக கூற வைத்துள்ளனர். ஈரானில் கடந்த 5 வாரங்களாக நீடித்துவரும் போராட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே பெருந்திரளாக பங்கேற்று வருகின்றனர்.
இவர்களே தங்கள் ஹிஜாப் உடைகளை தீயிட்டு ஈரானிய நிர்வாகத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இதனையடுத்தே, சிறப்பு பொலிசார் பாடசாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு, ஆட்சிக்கு ஆதரவான நிலையை உருவாக்க முயன்று வருகின்றனர்.
திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சவுமியா (வயது 32). இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியா (11), சிவியா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
பிரேம்குமார் பல்வேறு வியாபாரங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர்களுடன் சவுமியா அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் பி.பிளாக்கில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சவுமியா மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இதை கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், சவுமியா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அதன்பிறகே அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர் துணிகளை காய வைத்தபோது நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரசவம் ஆகும் 48 மணி நேரத்திற்கு முன்பு பெண் ஒருவருக்கு தெரிய வந்த உண்மை குறித்த செய்தி, பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் Nebraska என்னும் பகுதியை சேர்ந்தவர் பெய்டன் ஸ்டோவர் (Peyton Stover).
இளம்பெண்ணான இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், பெய்டனுக்கு சமீப காலமாகவே அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனது பணியின் காரணத்தினால் அப்படி நிகழ்ந்திருக்கும் என்றும் பெய்டன் ஆரம்பத்தில் கருதி உள்ளார். இதனைத் தொடர்ந்து பெய்டனின் காலும் வீங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இதனால், உடல் சோர்வு மற்றும் கால் வீக்கம் காரணமாக மருத்துவரை அணுகவும் பெய்டன் மற்றும் அவரது பார்ட்னரான ட்ராவிஸ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அங்கு கொஞ்சம் கூட நம்ப முடியாத தகவல் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதாவது, பெய்டன் கருவுற்றிக்கிறார் என்பது தான் அது.
ஆரம்பத்தில் இதனை அறிந்து மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போதும் பெய்டன் கர்ப்பமாக தான் இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
இதனை அறிந்து கொண்ட ட்ராவிஸ் – பெய்டன் ஜோடி, ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறைந்தாலும் மறுபக்கம் இத்தனை நாட்கள் இது தெரியாமல் போனதை எண்ணி விரக்தியும் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, இதற்கு மேலும் அவரது உடல்நிலை குழந்தையை தாக்குவதற்கு ஏற்றதாக இருக்காது என்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் பின்னர், அறுவை சிகிச்சை செய்து பத்திரமாக குழந்தையை வெளியேவும் மருத்துவர்கள் எடுத்தனர். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு 10 வாரங்கள் முன்பே குழந்தையை பெய்டன் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், Pre Eclampsia என்ற பிரசவத்துக்கு முந்தைய பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சையும் பெய்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாங்கள் ஒரு நாள் குழந்தை வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அதற்குள் குழந்தை கிடைத்தது என்றும் மகிழ்ச்சியுடன் பெய்டன் – ட்ராவிஸ் தம்பதியினர் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் ச்கப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.
இதன்பின் பீனாவை பிரிந்து விட்டு 56 வயதான பப்லு 23 வயதான் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துள்ளாராம்.
தொழில் துவங்க உதவிய அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பப்ளுவின் புது மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடன் ஜிம்மில் ரீல்ஸ் செய்த வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் பப்லு.
நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு,
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது நெருங்கிய தோழிக்காக பெண் ஒருவர் செய்த காரியம் தொடர்பான செய்தி, பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. லண்டனை சேர்ந்தவர் கேஸ்ஸி புஷ் (Cassie Bush). கடந்த 2016 ஆம் ஆண்டின் போது, இவரது உடலில் திடீரென ரத்த போக்கு உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால் கேஸ்ஸி புஷ் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், தனது பார்ட்னர் ஜாக்கிடம் இது பற்றி அவர் தெரிவித்துள்ளார். அவரும் மருத்துவரை அணுகலாம் என தெரிவித்து, மருத்துவமனைக்கும் கேஸ்ஸியை அழைத்து சென்றுள்ளார்.
அங்கே அவரை பரிசோதித்த போது கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. கேஸ்ஸிக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்ததையடுத்து, மற்றொரு திடுக்கிடும் தகவலும் உறுதியாகி உள்ளது.
கேஸ்ஸியின் கர்ப்பப்பை வரை புற்றுநோய் பரவி இருந்த காரணத்தினால், இனிமேல் அவரால் குழந்தையை பெற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இளம் வயதிலேயே ஒரு சோதனை அவருக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, கேஸ்ஸி – ஜேக் தம்பதி கடுமையான துயரில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். மறுபக்கம், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏங்கி வந்துள்ளார் கேஸ்ஸி புஷ்.
அதே வேளையில், தனது கருமுட்டையையும் கடந்த 2017 ஆம் ஆண்டு கேஸ்ஸி பதப்படுத்தி வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், கேஸ்ஸியின் நெருங்கிய தோழியும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான பெக்கி சிடல் என்ற பெண், தனது தோழிக்காக வாடகைத் தாயாகவும் மாற முடிவு செய்துள்ளார்.
இதற்கு பெக்கியின் கணவரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருவுற்றிருக்கிறார் பெக்கி. தொடர்ந்து, கடந்த சில மாதங்கள் முன்பு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் பெக்கி.
இது பற்றி பேசும் கேஸ்ஸி – ஜாக் தம்பதி, தாங்கள் எப்போதுமே பெக்கிக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம் என்றும் எங்கெளுக்கென குழந்தை கிடைத்திருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தற்போது குழந்தையின் பெற்றோர்கள் தாங்கள் தான் என்பதை பதிவு செய்யும் வேலைகளிலும் ஜாக் மற்றும் கேஸ்ஸி ஆகியோர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குழந்தை பெற முடியாமல் ஏங்கி வெந்த பெண்ணுக்கு அவரது தோழி செய்த உதவி தொடர்பான செய்தி, பலரையும் உருக வைத்துள்ளது.
குடிபோதையில் மனைவியின் விரல்களை வெட்டி வீசிய கணவன்
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காணகாரி பகுதியை சார்ந்தவர் பிரதீப். இவருடைய மனைவி மஞ்சு இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பிரதீப் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர் என்று கூறப்படுகிறது.குடித்துவிட்டு வீட்டில் வரும் பிரதீப் தனது மனைவி மஞ்சுவரிடம் தினசரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமாக நடைபெறும் சண்டை என்பதால் அப்பகுதி மக்கள் யாரும் குடும்ப சண்டையில் தலையிட வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரதீப், மஞ்சுவிடம் காலை முதல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு ஒரு கட்டத்தை தாண்டி முற்றவே வீட்டில் இருந்த அரிவாள் ஒன்றை எடுத்தது தனது மனைவியின் இரு கைகளின் விரல்களையும் வெட்டியுள்ளார்.
அதில் ஒரு கையின் முழு விரல்களும் துண்டிக்கப்பட்டன். மற்றொரு கையின் விரல்கள் முறிந்து விழும் நிலையில் இருந்தன.இதை தடுக்க சென்ற தனது இரு மகன்களையும் தாக்கியுள்ளார் அவர்.
இந்த சம்பவம் அரங்கேறியதும் பிரதீப் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார். மஞ்சுவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சுவை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதீபை கோட்டயம் போலீசார் தேடி வருகின்றனர்.
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு (18) இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் சிவா நகர் பகுதியில் வசிக்கும் சிதம்பரப்பிள்ளை துரைராஜசிங்கம் பிருந்தாமலர் என்ற 21 வயது யுவதியே இவ்வாறு கட்டுத்துவக்கால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவ தினம் இரவு தனது வீட்டின் பின்புறமாகவுள்ள கதவைத் திறந்து வெளியில் வரும்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தபால் ஊழியரான 74 வயது தந்தையுடன் வீட்டில் தனியே வாழும் யுவதி தாயை இழந்துள்ளதாகவும் சகோதரர்கள் வேறு பகுதியில் வசிப்பதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி விஜேகோன் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குடும்ப பகை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படும் நிலையில் யுவதி உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சோஷியல் மீடியாவில் அதிக நேரம் உலவிடும் நம்மில் பலரும் நாளுக்கு நாள் வைரல் ஆவது தொடர்பாக ஏராளமான விஷயங்களை பார்த்திருப்போம். அது மட்டுமில்லாமல், இப்படி வைரல் ஆகும் விஷயங்கள், அதிர்ச்சிகரமாகவும், வினோதமாகவும், மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலும் என வித விதமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அப்படி சில வீடியோக்கள், மனதுக்கு மிகவும் நெருக்கமான வகையிலும் இருக்கக் கூடிய பட்சத்தில் ஒருவித தாக்கத்தை கூட நம்மில் ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு வீடியோ தான் சமீப தினங்களாக இணையத்தில் பலரது இதயத்தையும் வென்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், பெரு நகரங்களில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், நபர் ஒருவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைக்கு சேர, அதை அவரது மகள் கொண்டாடும் விதம் தான், இணைவாசிகள் பலரையும் கலங்கவும் கொண்டாடவும் வைத்துள்ளது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சிறுமி ஒருவர் பள்ளிச் சீருடையில் கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறார்.
அவர் கண்ணைத் திறக்கும் போது, முன்பு அவரின் தந்தை ஸ்விகி டெலிவரி உணவு நிறுவனத்தின் சீருடையை கையில் வைத்துக் கொண்டு நிற்க, அவருக்கு வேலை கிடைத்ததை எண்ணி கட்டித் தழுவி துள்ளிக் குதிக்கிறார் மகள். தந்தைக்கு வேலை கிடைத்ததால் அதனை இப்படி உற்சாகமாக கொண்டாடும் மகளின் வீடியோ, பலரது இதயத்தையும் வென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்த வீடியோ இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனமும் இந்த வீடியோவில் கமெண்ட் ஒன்றை செய்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவது குறித்து பல வித கருத்துக்களை பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில், மகளின் இந்த சந்தோசத்திற்கு முன் அனைத்தும் சுக்கு நூறாகி போய் விட்டது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபரை காதலி தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஏழுமலை – செல்வராணி தம்பதியினருக்கு, 2 மகன் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாம்ராஜ் (21) சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் – அஞ்சலை தம்பதியினருக்கு 2 மகள் 1மகன் உள்ளனர். தம்பதியினரின் மூத்த மகள் ஈஸ்வரி (17), களம்பூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோர் காதலித்து வருகின்றனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததால் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஈஸ்வரியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யபட்டு வந்தனர். இதனால் ஈஸ்வரி சாம்ராஜின் உறவை துண்டித்து பேச்சு வார்த்தை அடியோடு நிறுத்திவிட்டார்.
நேற்று காலையில் சாம்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் முருகேஷ், சந்தோஷ் ஆகிய 2 நண்பர்களுடன் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஈஸ்வரி ‘உன்னிடம் பேச விரும்பவில்லை.
எனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக’ சாம்ராஜிடம் தெரிவித்ததன் பேரில், சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதில்ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன் சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தை சாம்ராஜ் தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தாய் செல்வராணி சாம்ராஜ் தூக்கிட்டு தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சாம்ராஜை மீட்டு, சிகிச்சைக்காக ஆரணி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் ஏற்கனவே சாம்ராஜ் இறந்துவிட்டதாகமருத்துவர்கள் தெரித்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சாம்ராஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யகோரி சாம்ராஜ் உறவினர்கள் களம்பூர் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டுபின்னர். ஆரணி. திருவண்ணாமலை சாலையில் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்த வந்த ஆரணி காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் களம்பூர் போலீசார் வெங்கடேசனை கைது செய்ய உறுதியளித்தன் பேரில் சாம்ராஜ் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
மேலும் தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி அருகே காதலி பெண் கேட்டு சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மா மீதே காவல்துறையில் புகார் அளிக்க சென்ற வீடிய சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள காவல் நிலையத்திற்கு இன்று ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார்.
3 வயதான அந்த சிறுவன் தனது அம்மாவை பற்றி புகார் அளிக்க வந்திருப்பதாக சொல்ல காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர். அந்த சிறுவனின் தந்தை அதிகாரிகளிடம் பேசுகையில்,”வீட்டில் அவனது அம்மா அவனை குளிப்பாட்டி கண்ணிற்கு மை இட்டுக்கொண்டிருந்த போது, சாக்லேட் கேட்டு அவரை தொந்தரவு செய்தான்.
இதனால் அவனது கன்னத்தில் செல்லமாக எனது மனைவி தட்டினாள். உடனே கோபப்பட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டும் என என்னை அழைத்தான். நானும் வேறுவழியின்றி அழைத்துவந்தேன்” என சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து அந்த காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவர் சிறுவனிடம் புகாரை பெறுவதாக கூறி என்ன நடந்தது என கேட்டிருக்கிறார். அப்போது மழலை மொழியில் பேசிய சிறுவன்,”என்னுடைய சாக்லேட்களை எல்லாம் எனது அம்மா எடுத்துக்கொள்கிறார். அவரை ஜெயில்ல போடுங்க” என கூற, இதைக்கேட்டு மொத்த ஸ்டேஷனும் சிரித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாய் பேரை அதிகாரிகள் கேட்க, யோசித்தபடியே அந்த சிறுவன் சொல்லியிருக்கிறான். மேலும், புகாரில் கையெழுத்து போடவேண்டும் என அதிகாரி சொல்லவே, விளையாட்டுத்தனமாய் பேப்பரில் எதையோ எழுத அதை பார்த்த அனைவர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. இதனையடுத்து அந்த காவல்நிலையத்தின் அதிகாரி அந்த சிறுவனிடம் ஆலோசனை கூறியுள்ளார்.
அப்போது, நல்ல எண்ணத்திற்காகவே அம்மா சில நேரங்களில் அவ்வாறு செய்வார் எனவும், அப்போது சினம் கொள்ளாமல் அம்மாவின் சொல்படி நடக்கவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.
அதனை சமர்த்து பிள்ளையாக கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறான் அந்த சிறுவன்.இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த கியூட் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் லண்டனில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சஞ்சயின் தாய் மாமனான தேனி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த காவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதம் முன்பாக திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ராஜாவின் திருமணம் நடந்த சமயத்தில், சஞ்சய் லண்டனில் இருந்ததால் அவரால் கல்யாணத்திற்கு வர முடியாத சூழல் இருந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது ஊருக்கு வந்திருந்த சஞ்சய், போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக ராஜா மற்றும் காவ்யா ஆகியோரை அழைத்துள்ளார்.
தொடர்ந்து, போடி அருகே அமைந்துள்ள ஆற்றில் புதுமண தம்பதியை குளிப்பதற்காகவும் சஞ்சய் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் குளிக்க சென்ற பகுதி சற்று ஆழமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், பாறையில் வழுக்கியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ராஜா, காவ்யா மற்றும் சஞ்சய் ஆகிய மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சஞ்சய் உள்ளிட்ட மூவரின் உடல்களையும் மீட்டனர்.
திருமணமான ஒரே மாதத்தில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுமண தம்பதி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களின் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ – காசிப்பூர் மாவட்டத்தை இணைக்கும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில், கடந்த 15ஆம் திகதி நான்கு பேர் சொகுசு காரில் பயணித்துள்ளனர்.அப்போது தங்கள் பயணத்தை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளனர். காரை ஓட்டிய ஆனந்த் பிரகாஷ் (35) வேகத்தை கூட்டிக் கொண்டே செல்கிறார்.
காரின் வேகம் 230-ஐ எட்டும்போது நபர் ஒருவர் 300 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லுமாறு கூறுகிறார். மேலும் ஒருவர் நாம் 4 பேரும் சாகப்போகிறோம் என கூச்சலிடுகிறார்.அதன் பின்னர் சாலையில் எதிரே வந்த லொறி ஒன்றின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
அதிவேகத்தில் கார் மோதியதால் அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர்.இறப்பதற்கு முன் அவர்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கா.தலிப்பதை க.ண்டித்ததால் பெற்றோர் மீது கோ.பமடைந்த சிறுமி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட பின், சிறுமியின் காதலனை வி.ஷ.ம் வை.த்து கொ.லை செ.ய்த சி.றுமியின் தந்தையின் செயல் கர்நாடகாவில் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புர பகுதியை அடுத்துள்ள கோசனகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. 21 வயதாகும் இவரும், கல்கவடா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த குரப்பா என்பரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். குரப்பாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சிறுமியின் பெற்றோர் க.ண்டித்துள்ளனர். மேலும் காதலனுடன் இனி பேச கூடாது, பழக கூடாது என்று சிறுமியை க.ண்டித்துள்ளனர். அதையும் மீறி பேசி, பழகுவதை பார்த்தல் இருவரையும் கொ.ன்.று வி.டு.வதாக மி.ரட்டியும் உள்ளனர்.
இதனால் சிறுமியும் ப.யந்து போ.யுள்ளார். ஆனால் தனது காதலனை காணாமல், பேசாமல் இருக்க முடியாத சிறுமி, அவரை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இப்படி இவர்களது ரகசிய சந்திப்பை கண்ட, சிறுமியின் தந்தை சி.றுமியை அ.டித்ததாக கூ.றப்படுகிறது.
இதனால் ம.னமுடைந்த சி.றுமி வீட்டிலிருந்த வி.ஷத்தை அ.ரு.ந்தி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டார். இதனை கண்ட பெற்றோர் க.தறி அ.ழுதனர். மேலும் தனது மகள் உ.யிரிழப்புக்கு காரணம் மகளின் காதலன் தான் என்று, சி.றுமியின் த.ந்தை கோ.பம் கொண்டார்.
இதனால் ஆ.த்திரமடைந்த சி.றுமியின் தந்தை குரப்பா, தனது மகளின் காதலனை அ.டி.த்.து இ.ழுத்துவந்து க.டு.மை.யா.க தா.க்.கி.யு.ள்.ளா.ர். பின்னர் தனது மகள் உன்னால் தான், உனக்காக தான் வி.ஷ.ம் கு.டித்து இ.றந்தாள். எனவே நீயும் அப்படியே உ.யிரை வி.டு என்று கூறி அவரது க.ட்டாயப்படுத்தி வி.ஷத்தை ஊ.ற்றியுள்ளார்.
பின்னர் இந்த கொ.லை.யை ம.றைப்பதற்காக அங்கிருக்கும் கிருஷ்ணா நதியில், கா.தலன் உ.டலை ஒரு சா.க்கு மூ.ட்டையில் கட்டி போட்டுள்ளார். இதையடுத்து எதோ பொருள் மிதந்து வருவதை கண்ட பொதுமக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவம் அறிந்து வந்த அவர்கள், சாக்குமூட்டையை பிரித்து பார்த்ததில் இருவரின் உ.டலும் அதில் இருந்துள்ளது. பின்னர் அந்த உ.டல்களை மீ.ட்.டு உ.டற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இதனிடையே தனது மகளை காணொம் என்று காவல்துறையில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இதையடுத்து கை.ப்பற்றப்பட்ட உ.டலை வைத்து வி.சாரணை மேற்கொண்டபோது, அது காணாமல் போன மல்லிகார்ஜுன என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் பெற்றோர்களிடம் வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது மகனின் காதல் விவகாரத்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது பதிலில் சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் கி.டுகுக்குப்பிடி வி.சாரணை மேற்கொண்டனர். பிறகு தாங்கள் ஆ.ண.வ கொ.லை செ.ய்ததை சிறுமியின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் சி.றுமியின் மாமாவையும் காவல்துறையினர் கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வீட்டில் மொத்த குடும்பமும் சடலமாக கிடந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.
சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு நாகராஜூ தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் தரையிலும் சடலமாக கிடந்தனர்.விசாரணையில் மூவரையும் நாகராஜூ கத்திரிக்கோலால் குத்தி கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து டைலரிங் பணிக்காக சுஜாதா வைத்திருந்த கத்திரிக்கோல்களை பொலிசார் கைப்பற்றினர். குடும்பத்தில் பண பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் சுஜாதாவுக்கு முன்னர் வேறு நபருடன் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இந்த தகவலை பொலிசார் முழுமையாக உறுதி செய்யாத நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.