மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை குரங்கொன்று வெளிப்படுத்தியுள்ளது.
தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.
குறித்த குரங்கிற்கு, உயிரிழந்தவர் தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த குரங்கு அதனை அவதானித்துள்ளது.
தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது. எனினும் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.
இன்றைய உலகில் மனிதர்களே மனிதர்களை மதிக்காத நிலையில், ஐந்தறிவு கொண்ட குரங்கு இவ்வாறு செயற்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியினரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினன உடன் நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று (19.10.2022) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து, அரசே மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடாத்து,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் – நில – வீட்டு உரிமையை உறுதி செய், வானத்தில் வட்டமிடும் விலைவாசியை – மக்களுக்கு கிட்டவாக கொண்டு வா, கிழக்கு வடக்கில் மத இனவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
30 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத
அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும்
அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லத்தின்
சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் ஆசிரியர்தின நிகழ்வுகள்
கடந்த12.10.2022(புதன்கிழமை) எல்லப்பர்மருதங்குளத்தில்
அமைந்துள்ள சிவன் முதியோர் இல்ல மண்டபத்தில்
திரு.ஆ.நவரத்தினராசா (செயலாளர்,அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்)தலைமையில் இடம் பெற்றது.மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.பி.ஏ.சரத்சந்திர(அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், வவுனியா
மற்றும் திரு.தி.திரேஸ்குமார் மேலதிக அரசாங்க அதிபர்.மாவட்ட
செயலகம், வவுனியா)திரு.சந்தன அழககோன் (வன்னி பிராந்திய பீரதி
பொலிஸ்மா அதிபர்) திரு.நா.கமலதாசன் (பிரதேச செயலாளர்,
வவுனியா) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் திரு. Dr.
சு.செந்துாரன் (சிரேஷ்ட வைத்திய அதிகாரி வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலை), திரு.க.தயாபரன் (சிரேஷ்ட சட்டத்தரணி,வவுனியா)
திரு.சி.கிஷோர் திடீர் மரண விசாரனை அதிகாரி)
திரு.T.தியாகலிங்கம் (சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்-வவுனியா) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் திரு.தி.காருணியநாதன்
சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்),திரு.நா.இராஜமனோகரன் மாவட்டசமூகசேவை உத்தியோகத்தர்)திரு.ஜெ.கெனடி (சிறுவர் உரிமை
மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்டச்செயலகம்),திரு.செ.நந்தசீலன் மாவட்ட உளசமூகஉத்தியோகத்தர்),திரு.இ.கோகுலதாஸ் (நன்னடத்தை
உத்தியோகத்தர்),திருமதி. பா.தனுசியா (முதியோர் மேம்பாட்டு
உத்தியோகத்தர், மாவட்ட செயலகம்),திரு.க.இராஜசேகர் (சமூகசேவை
உத்தியோகக்தர் மாவட்டசெயலகம்) ஆகியோர் விசேட
விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வின் போது சிறுவர் முதியோர் மற்றும் ஆசிரியர்கள்
தினத்தை முன்னிட்டு நடாத்தபட்டு போட்டிகளில்
வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் அருளக
சிறுவர் இல்லத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான
மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஆசிரியர்களுக்கான
கௌரவிப்பு நிகழ்வும் என்பவற்றுடன் இல்லங்களின் மேலாளர்கள்
பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வின் போது இலங்கை வங்கி வவுனியா கிளையினரால் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று (18.10.2022) இரவு இடம்பெற்ற து.ப்பாக்கிச் சூ.ட்டு ச.ம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் ம.ரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது து.ப்பாக்கி சூ.டு ந.டத்தப்பட்டுள்ளது. குறித்த து.ப்பாக்கி சூ.ட்டில் கா.யமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே ம.ரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே ம.ரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்தவராவார் குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விருந்துக்கு சென்ற புதுமண தம்பதியினர் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மை கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 30).
கோவையில் மருந்துகள் விற்கும் பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் காவியா (வயது 22) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். புதுமண தம்பதியினரான இவர்கள் அவ்வப்போது விருந்து, சுற்றுலா என வெளியூர் சென்று வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடியில் உள்ள மாப்பிள்ளை அழகர் ராஜாவின் அக்கா வீட்டுக்கு புதுமண தம்பதியினர் விருந்துக்கு சென்றனர். அப்போது அங்கே 4 நாட்களுக்கு முன்பு அழகரின் அக்கா மகன் சஞ்சய் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனவே அழகர், சஞ்சய், காவியா ஆகிய மூவரும் வெளியே செல்ல விரும்பினர்.
அதன்படி நேற்று மூன்று பெரும் பெரியாற்று கோம்பை ஆற்றிற்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் கணவர் அழகர்ராஜா சூழலில் சிக்கிக் கொண்டார். அழகர் ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு மனைவி கவியாவும், சஞ்சயும் அவரை மீட்க முயன்றனர்.
ஆனால் நீர்வரத்து வேகமாக இருந்ததால் அழகரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி மற்றும் சஞ்சய் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மூவரும் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து அவர்களின் சடலத்தை மீட்ட அதிகாரிகள், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருந்துக்கு சென்ற புதுமண தம்பதியினர் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தந்தையை இழந்த இரு குழந்தைகள் தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு குழந்தைகளின் தந்தையை கடந்த 28ஆம் திகதி முதலை பிடித்து இழுத்து சென்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்குரஸ்ஸ பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் யு.ஜி. சம்பத் அந்த துர்ப்பாக்கிய சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
”நில்வலா ஆற்றில் முதலை ஒன்று இரு பிள்ளைகளின் தந்தையின் உயிரை பறித்துள்ளது. அருகில் உள்ளவர்கள் எவ்வளவு முயன்றும் முதலையின் பிடியிலிருந்து தந்தையை காப்பாற்ற முடியவில்லை.
நில்வலா ஆற்றில் காலை நேரங்களில் முதலைகள் அடிக்கடி சுற்றித் திரிவதாகவும், முதலைகள் சுமார் 12-15 அடி நீளமுள்ளதாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் . தந்தையின் உடல் எச்சங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன” என்றார் .
நில்வலா ஆற்றில் முதலையால் கொல்லப்பட்ட தந்தை பழனி ஆறுமுகம் (வயது 37). அவரது குழந்தைகளான ஆறுமுகம் தினிதி மதுவந்தி மற்றும் ஆறுமுகம் இமேஷா ராணி ஆகிய இரு மகள்கள் இன்று நிர்க்கதியாக நிற்கின்றனர் .
வாழும் போது, இந்த தந்தை குழந்தைகளை தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக இருந்து பார்த்துக் கொண்டார் .அத்தகைய தந்தையின் மரணத்தைத் தாங்குவது பிள்ளைகளுக்கு மிகக் கடினமாக இருந்தது.
தாயும் தந்தையும் இல்லாவிட்டாலும் இச்சிறுமிகளை சமூகம் கைவிடவில்லை இச்சிறுவர்களுக்கான எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அக்குரஸ்ஸ பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் அமைப்பின் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
சிறுமிகளின் பாட்டி தன்னால் முடிந்ததை தேடி சமைத்து அவர்களுக்கு உணவளிக்கிறார். பாடசாலைக்கும் அனுப்புகிறார். இந்த குழந்தைகள் பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் நாளை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பெற்றோர் இருவரும் இல்லை.
இந்தக் குழந்தைகளுக்கு உணவு இல்லாமல் இருக்கும் போது, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உணவு கொடுக்கிறார்கள் என்கின்றனர் அப்பிரதேசவாசிகள் .
‘இறந்த நபருடன் 10 வார்த்தைகள் பேசினால், அதில் எட்டு வார்த்தைகள் இந்தக் குழந்தைகளைப் பற்றியதாக இருக்கும். இப்போது அந்தக் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை.
அவர்கள் பாடசாலைக்கு சென்றார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. குறித்த தந்தை தம் குழந்தைகளைப் பற்றி எப்போதும் என்னிடம் பேசுவார்.. என அப்பகுதிவாசியொருவர் நினைவு கூருகிறார்.
குறித்த தந்தை மீது உங்களுக்கு அன்பு இருந்தால், அவருடைய குழந்தைகளுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என்று அவர் இறுதியாகக் கேட்டுக் கொண்டார்.
இக்குழந்தைகளுக்கு அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் திருமதி. கே.ஜி.டி. அனோஜா உதவிகளை வழங்குவதுடன் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாப்பு தற்போது சிறுமிகளின் சித்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த குழந்தைகளுக்கு உதவ பலர் உறுதியளித்துள்ளனர் . இதற்காக அக்குரஸ்ஸ ஹுலந்தாவ தேவாலயத் தந்தை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நன்னடத்தை உத்தியோகத்தர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இணைந்து செயற்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை விட்டுச் சென்றாலும், தந்தை அவர்களுக்கு பாசத்தைக் கொடுத்தார். அந்த அன்பும் இப்போது இழக்கப்பட்டு அக்குழந்தைகள் தவிக்கும் நிலை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் சுனில், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது 11 வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அஸ்வின் செப்டம்பர் மாதம் 24-ஆம் திகதி பிற்பகல் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவா், குளிா்பானம் ஒன்றை கொடுத்துள்ளாா். அஸ்வின் அதை வாங்கி சிறிதளவு குடித்துள்ளாா்.
அன்று இரவே அவருக்கு காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பதறிப்போன தாயார் ஷோபியா, தனது மகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னா் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுவன் குடித்த குளிா்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினா். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக களியக்காவிளை பொலிஸில் புகாா் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சிறுவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் அதிர்ச்சியளிக்கும் விதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இளைஞரின் இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
3 மாத குழந்தையுடன் விபத்தில் சிக்கிய தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்து காப்பாற்றிவிட்டு இறுதியில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் தம்பதிகள் இருவரும் குழுந்தையுடன் தூக்கி வீசப்பட்டனர்.
சந்திரலேகா தனது கையால் குழந்தையை கீழே விழாமல் மார்போடு அணைத்துக்கொண்டு எந்த வித காயமின்றி காப்பாற்றினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆஞ்சிநேயன், சந்திரலேகாவை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சந்திரலேகாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சந்திரலேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,793 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது. மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
பொதுவாக, காதலுக்கு கண்ணில்லை என ஒரு கூற்று உள்ளது. அதாவது காதலுக்கு வயது, மதம், மொழி, நாடு உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் இல்லாமல் தடைகள் தாண்டி இரு மனதுக்கு இடையே உருவாகும் அன்பின் வெளிப்பாடாகும்.
அப்படி கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ள காதல் தொடர்பான செய்தி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே கல்லூரியில் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜான் என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்களின் காதல் பற்றி வீட்டில் தெரிவிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, அவர்களும் காதலை சொல்ல இருவரது வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானில் இருந்து ராஜேந்திரன், சியாங் ஷியா உள்ளிட்டோர் காவேரிபட்டணம் வந்துள்ளனர். மேலும் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து ராஜேந்திரன் – சியாங் திருமணம் நடந்துள்ளது. இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அனைவரும் தங்களின் வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசும் மணப்பெண் சியாங் ஷியா, நாங்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்றும், தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞருக்கும், தைவான் பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புதுமண தம்பதியை நெட்டிசன்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.
இதனை அறிந்த அவரது மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன் படி, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதன்படி தங்களது வீட்டிலிருந்து இடுக்கி மாவட்ட கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலம் சென்ற அவர்கள், அங்கிருந்து மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு தனது தாயாரை தோளில் சுமந்து சென்றுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் அரிய வகை மலரான நீலக்குறிஞ்சியை கண்டு களித்தார் முதாட்டி. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் இருக்கும் பதனாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சா முண்டா. இவரது மனைவி பதி முண்டா. பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. மேலும் இந்த தம்பதியினர் பல ஆண்டுகளாக கிராமத்தினருடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் தனியே வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஞ்சா முண்டாவிற்கு காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு போதிய மருந்துக்கள் இல்லாத நிலையில், வேறொரு மருத்துவமனைக்கு அவரை மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல கூட பணமில்லாமல் அவர் மனைவி பதி முண்டா தவித்து வந்துள்ளார். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் ரூபாய் 1,500 கடன் வாங்கி கணவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவந்துள்ளார்.
பின்னர் கணவர் உடலை புதைக்க உதவும்படி கிராமக்களிடம் அவர் கேட்ட நிலையில் அவர்கள் உதவ மறுத்துள்ளனர். கூலி ஆட்களை வைத்து வேலை செய்யசொல்ல பணம் இல்லாத நிலையில் கணவர் உடலை தானே புதைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி கணவர் உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்ற அவர், தனது கணவருக்காக தானே குழிதோண்டி அதில் கணவர் உடலை புதைத்துவைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியான நிலையில், பலரும் அந்த கிராமத்தினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், ஒடிசா அரசு இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறது. ஆனால் பழங்குடி மக்களுக்கு போதிய படிப்பறிவு இல்லாமல் இருப்பதால் அவர்கள் இந்த உதவியை பெறுவதில்லை என கூறியுள்ளார்.
கையடக்க தொலைபேசி ஒன்றில் வேறு ஒருவருடன் உரையாடிக்கொண்டு தொடருந்து பாதையில் நடந்துச் சென்ற யுவதி தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த யுவதி தொடருந்து பாதையில் தொலைபேசியில் பேசியபடி மாகல்லேயில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி சென்ற ருஹூணு குமாரி தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம், பாதெனிய – தலதாகம வீதியில் ரிதிபதியெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய மூவரும் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையிலே சிறுவனும் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.