டிக்டாக் வீடியோ போடாதே என எச்சரித்த கணவன்… சினிமா துணை நடிகைக்கு நேர்ந்த விபரீதம்!!

திருப்பூரில்..

திருப்பூரில் உள்ள செல்லம் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு வயது 38. இவரது மனைவி சித்ரா. இவருக்கு வயது 35 ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் சித்ரா கூலி வேலை செய்து வந்தார். அதன் பிறகு டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார். இதற்கு கணவர் அமிர்தலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் மூலம் அறிமுகமானவர்களுடன் சினிமாவில் நடிக்க சென்னை சென்றதாக தெரிகிறது. இதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையும் மீறி சித்ரா சென்னை சென்று சில மாதங்கள் தங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பியுள்ளார் சித்ரா.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

அக்கம் பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரும் சமாதானம் அடைந்துள்ளனர். இதையடுத்து சித்ராவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ​​சித்ரா கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமிர்த லிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரா கழுத்தில் காயம் இருந்ததால், துப்பட்டா அல்லது சேலையால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலையில் மாட்டிய சமையல் பாத்திரம்… குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

மதுரையில்..

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட அலுமினிய பாத்திரத்தை குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில் உள்ள மணிநகரம் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு 2 வயதில் அஸ்வினி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த குழந்தை நேற்று வீட்டில் பாத்திரத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அதில் ஒரு அலுமினிய பாத்திரத்தை குழந்தை தனது தலையில் மாட்டிக்கொண்டது. பிறகு அதை குழந்தை எடுக்க முயற்சித்தும் வெளியே வரவில்லை.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சிறுமியை கண்ட பெற்றோர் பதற்றமானர். மேலும் அவர்களும் சிறுமியின் தலையில் இருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர். அப்போதும் அதை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்து எடுக்க முயன்றனர். அப்போதும் அது தோல்வியை சந்தித்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிறுமியின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

அப்போதும் அது உடனடியாக எடுக்க முடியவில்லை. இறுதியாக தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி, சிறுமிக்கு எந்த வித பாதிப்பும் இன்றி வெளியே எடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் தீவிர முயற்சிக்கு பிறகு சிறுமியின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுத்தனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோருக்கு சிறுவர்கள் முன்பு இதுபோன்ற பாத்திரங்கள் வைக்க கூடாது என்றும், அவர்கள் கையில் விளையாட்டு பொருள் போல் இதனை கொடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

வீதியில் சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : கதறியழுத உறவினர்கள்!!

ராமநாதபுரத்தில்..

மகள் கர்ப்பமானது கேட்டு குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது. அந்த சந்தோஷம் சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. திடீரென சாலையில் குறுக்கே மாடு ஓடி வந்ததால், கர்ப்பிணி பெண் கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து மரணமடைந்தது உறவினர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம், பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் – மனைவி இருவரும் கடந்த 3ம் தேதி இரவு மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்திலிருந்து அவர்களுடைய வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கீழ்ப்பெருங்கரை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால், மோட்டார் பைக் பிரபாகரனின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில், கர்ப்பிணியான பிரியதர்ஷினி தண்ணீருக்குள் விழுந்தார். அவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததால் மீண்டு எழ முடியாமல் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபாகரன் காயம் அடைந்து மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்துள்ளார். மனைவியையும் மோட்டார் பைக்கையும் காணவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். உடனே அனைவரும் கால்வாய்க்குள் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சூரிய பிரியதர்ஷினியை சடலமாக மீட்டனர்.

பிரபாகரன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரியதர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் – சூரிய பிரியதர்ஷினி மோட்டார் பைக் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் பைக் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதிகளுக்கு சென்ற இளம் ஜோடிகள் கைது!!

குளியாப்பிட்டிய..

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நடத்திய தேடுதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேர் மற்றும் மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதற்காக வீடுகளில் இருந்து வரும் இளம் இளைஞர்,யுவதிகள் தங்கும் விடுதிகளுக்குள் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குளியாப்பிட்டிய நீதவானிடம் பெற்றுக்கொண்ட தேடுதல் அனுமதியுடன் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய நகரில் பிரதான பாடசாலைகளுக்கு அருகில் தங்கும் விடுதி நடத்தும் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாகும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

பகுதி நேர வகுப்பு வந்து தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்ட மூன்று இளம் ஜோடிகளை அவர்களின் பெற்றோரை அழைத்து பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை விடுதி உரிமையாளர்களுக்கு பொலிஸார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

300 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து தாலி கட்டிய மாப்பிள்ளை : காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்!!

கோவையில்..

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக சைக்கிளில் கேரளா சென்று பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லிய காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா. 28 வயதான இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அண்மையில் இவருக்கும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அஞ்சனா அகமதாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வெர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமான நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து கேரள மாநிலம் குருவாயூரில் இருவரது திருமணத்தையும் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர்.

இந்த திருமணத்திற்கு தனது வீட்டில் இருந்து சைக்கிளிலேயே கேரளா சென்றிருக்கிறார் சிவசூர்யா. தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பிய இவர் மாலையில் திருமணம் நடைபெறும் குருவாயூர் சென்றடைந்திருக்கிறார்.

அதுமட்டும் அல்லாமல் திருமணம் முடிந்தும், மணப்பெண் அஞ்சனா மற்றும் குடும்பத்தினர் காரில் வர சிவசூர்யா தனது நண்பர்களுடன் சைக்கிளிலேயே கோவை திரும்பியிருக்கிறார். இது பலரையும் வியப்படைய செய்தாலும், இதற்கு அவர் சொல்லிய காரணம் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

சைக்கிள் பிரியரான சிவசூர்யா பசுமையான இந்தியா என்பதை வலியுறுத்தும் விதமாக தனது திருமணத்திற்கே சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றிருக்கிறார் சிவசூர்யா.

தனது வீட்டில் இருந்து கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்ற சிவசூர்யா, திருமணம் முடிந்த பிறகு சைக்கிளிலேயே வீடு திரும்பி இருக்கிறார்.

முன்னதாக குஜராத் மாநிலத்தின் சபர்மதியில் இருந்து கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரையிலான 1902 கிலோமீட்டர் தூரத்தை 10 நாட்களில் சைக்கிளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார் சிவசூர்யா. இந்நிலையில், தன்னுடைய திருமணத்திற்கு கோவையில் இருந்து கேரளாவுக்கு சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இந்த சைக்கிள் பிரியர்.

தமிழ் பாடசாலையில் ஏற்பட்ட மோதல் : பரிதாபமாக உயிரிழந்த 13 வயது மாணவன்!!

அம்பாறை..

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை தாக்குதலுக்குள்ளான மாணவன் திருப்பி தாக்கியதில் அவன் இரு மேசைக்களுக்கிடையே வீழ்ந்து வாயால் நுரை தள்ள கிடந்துள்ளார்.

இந்நிலையிலேயே மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சக மாணவனை தாக்கிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை அந்தபகுதி மக்கள் வைத்தியசாலையில் திரண்டுள்ளதுடன், பெரும் சோகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலித்து கைவிட்ட காதலன் : கல்லூரி மாணவி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.

இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார்.

மேலும், நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை மாணவி காதிலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி காலை மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மகளை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மூன்று நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து 4ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் மனைவி!!

ஹக்மன..

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.

சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முடி கொட்டியதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

கோழிக்கோட்டில்..

முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். முடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரில் எழுதப்பட்ட தற்கொலைக் கடிதம் கிடைத்தும் போலீசார் விசாரணையை தாமதப்படுத்துவதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இளைஞன் உயிரிழந்தது குறித்து உறவினர்கள் அதோலி போலீசில் புகார் அளித்தனர். ஆனால், தற்கொலைக் குறிப்பில் மருத்துவர் பெயர் இருந்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் 2014 முதல் முடி உதிர்தலுக்கு சிகிச்சை பெற்றார். அந்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்துவிடும், பிறகு நல்ல முடி கிடைக்கும் என்று பிரசாந்திடம் மருத்துவர் கூறினார்.

மருந்து சாப்பிட ஆரம்பித்தவுடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல், கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலைக் கடிதத்தில் இவை அனைத்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பிரசாந்த் எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பில், கை, புருவங்களில் முடி உதிர்வதைக் கண்டு சகிக்க முடியாமல் வெளியே சென்று மக்களை எதிர்கொள்ள சிரமப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரசாந்த் மரணம் தொடர்பாக மருத்துவர் மீது குடும்பத்தினர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதோலி போலீசிடம் முதலில் புகார் அளித்தனர்.

நடவடிக்கை எடுக்காததால், கோழிக்கோடு ரூரல் எஸ்பியிடம் புகார் அளித்தனர். எனினும், முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் தவறிழைத்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : வெளியான சிசிடிவி காணொளி!!

பெங்களூருவில்..

சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கிரேன் ஒன்று இடித்ததில் மாணவி உடல் நசுங்கி உயிரிந்துள்ளது தொடர்பான சிசிடிவி கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கிரேன் ஒன்று இடித்ததில் மாணவி உடல் நசுங்கி உயிரிந்துள்ளது தொடர்பான சிசிடிவி கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நூர் பிஜா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவர், அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி, இந்த மாணவி பெங்களூரு நகரில் உள்ள ஒயிட் பீல்டு என்ற பகுதியில் கல்லூரி முடித்து தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் இவரை பின்தொடர்ந்த கிரேன் வாகனம் ஒன்று இவரது பின்னே சென்றுகொண்டிருந்தது. இருப்பினும் மாணவி சாலையின் ஓரமாகவே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த கிரேன் வாகனம் மாணவி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டதும் அந்த ஓட்டுநர் தலைதெறிக்க ஓட, அந்த பகுதி மக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி இறப்புக்கு ஞாயம் கேட்டு, அவரது குடும்பத்தார், அப்பகுதி மக்கள் ஒயிட் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து நடந்த பகுதியில் உள்ள சாலையில் அங்குள்ள தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனால் தொடர்ந்து அந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்துள்ளதாகவும்.

அதோடு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையும் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளததாகவும், இதுவே விபத்துகளுக்கு கூடுதல் காரணமாக உள்ளதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக விபத்தை ஏற்படுத்திய கிரேன் வாகனம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வெங்கலச்செட்டிக்குளம்..

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு முக்கிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

2023ம் ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளமையினால் தங்கள் கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் குழுவினூடாக தலைவர் வெங்கலச்செட்டிக்குளம் , மன்னார் மதவாச்சி வீதி , செட்டிக்குளம் எனும் அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாகவோ சமர்பிக்கவும்.

குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான சமர்ப்பிப்புகளை எதிர்வரும் 15.11.2022ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வவுனியா நகர சபையின் ஊடான விசேட செயலமர்வு!!

விசேட செயலமர்வு..

வவுனியா நகரசபையின் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிகழ்வுகளின் வரிசையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “சிறந்த பெற்றோர் ஆதல்” எனும் தலைப்பில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஆதரவோடு 05.11.2022 அன்று வவுனியா பொது நூலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக வவுனியா தெற்குக் கல்வி வலய முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் வீ.பரஞ்சோதி, வவுனியா நகரசபையின் உறுப்பினர்களான சுந்தரலிங்கம் காண்டீபன், நிருபா மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜெயக்கெனடி,

பிரதேச சிறுவர் நல உத்தியோகத்தர் சசிதரன், உளவள உத்தியோகத்தர் கார்த்திகா, பிரதம நூலகர் பாமினி, நூலகர் ரஞ்சிதமலர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களென அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

ராம்கி தான் என்னை காப்பாற்றினார் : மனதை பறிகொடுத்தேன்.. இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல்!!

ராம்கி- நிரோஷா..

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஒரு சமயத்தில் வலம் வந்தவர் நிரோஷா. இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரின் கணவர் நடிகர் ராம்கி. பல பி.ரச்சினைகளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள்.

இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன். சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய ச.ண்.டை நடக்கும்.

அவர் என்னைத் தண்ணீரில் இருந்து தூக்கும் காட்சியில், கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கைவைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கைவைக்கிறீங்க என அவரைத் தி.ட்டிட்டேன்.

ஒருமுறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சி.க்.கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் ந.சுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் கா.ப்பாத்தினார். பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

அப்போது தான், என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன். பிறகு ச.ண்.டை.க.ள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம். எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. சினிமா நபரைக் கல்யாணம் செய்ய கூடாது என வீட்டில் உறுதியாக சொல்லி விட்டனர்.

அவருடன் நான் பழகுறதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமாக பேசுவேன். இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு. என்னைக் க.ட்டாயப்படுத்தி பிறந்த ஊரான இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.

ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு, எப்படியோ த.ப்.பி.ச்.சு சென்னை வந்துட்டேன். பிறகு என் வீட்டார் சமாதானமாகி திருமணத்துக்கு ஒப்பு கொண்டனர் என கூறினார். நடிகை நிரோஷாவும், நடிகர் ராம்கியும் கடந்த 1995ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயது ஆசிய இளைஞரை மணக்க விமானத்தில் பறந்து வந்த 83 வயது பெண் : பாரம்பரிய முறையில் நடந்த திருமணம்!!

பாகிஸ்தானில்..

போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயது பெண் விமானத்தில் பறந்து வந்த ஆசிய இளைஞரை கரம் பிடித்துள்ளார். Hafiz Muhammad Nadeem (28) என்ற இளைஞர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்.

இவருக்கும் Broma (83) என்ற பெண்ணிற்கும் சமூகவலைதளம் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலானது. இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர்.

இந்த நிலையில் Hafiz – Broma இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி Broma விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த நிகழ்வின் போது Broma தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார்.

Hafiz தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு Broma-வை மணந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு.

நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டிருந்தோம். நான் ஆட்டோ மெக்கானிக்காக உள்ளேன் என கூறியுள்ளார்.

கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டத்தில் கன்று ஈனாமலேயே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் கறப்பதை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50).

இவரது மனைவி மயில் (வயது 46) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவர் கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்திருக்கிறார்.

குறிப்பிடத்தகுந்த அளவு அந்த கன்றுக்குட்டி வளர்ந்த உடன் பால் கறக்க துவங்கியிருக்கிறது. கன்றும் ஈனாமலும் சினை ஊசியும் போடாமலும் தனது பசுமாடு பால்கறப்பதை அதிசயத்துடன் பார்த்திருக்கிறார் பெருமாள்.

தொடர்ந்து அவ்வப்போது மாட்டையும் பரிசோதிக்க 24 மணி நேரமும் அந்த பசு மாடு பால் கறப்பதை கண்டு அதிசயப்பட்டிருக்கிறார் அவர். சில நாட்களிலேயே இந்த செய்தி அந்த வட்டாரம் முழுவதும் பரவி இருக்கிறது.

இதனையடுத்து 24 மணி நேரமும் பால் கறக்கும் இந்த பசு மாட்டை காண பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். மாட்டின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பொதுமக்கள், இந்த மாடு தெய்வீக சக்தி வாய்ந்தது என்றும் நம்புகிறார்கள்.

இந்த மாட்டை தினந்தோறும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமத்தோடு அலங்கரிக்கும் பெருமாள். இதன் பாலை ஊர் மக்களுக்கும் அளித்துவருகிறார். இதுபற்றி பேசிய பெருமாள்,”நான் கூலிவேலை செய்துவந்தேன். முன்னர் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன்.

இந்த பசு வந்தபிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. தற்போது ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு உள்ளேன். இந்த பசுவை காண தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்தும் வருகின்றனர். இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் ஏதேனும் கஷ்டம் என்றால் இந்த பசு மாட்டிற்கு கீரைக்கட்டு, புல் மற்றும் தீவனங்களை அளித்து அதன் காலில் விழுந்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும் எனவும் நம்புகிறார்கள். இந்த அதிசய பசுவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் பெருமாளின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.

திருமணம் செய்ய மறுத்த காதலி : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

திருமணம் செய்ய மறுத்த காதலி..

காதலி தனது திருமண கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிவித்து, மனமுடைந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ருஹுனு குமாரி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மஸ்கெலியா- ரதர்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கட்டுபெத்த சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் கடையில் பணிபுரிந்த ​இளைஞர், தனது காதலியைத் தேடிச் சென்று, திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதனை விளையாட்டாக எடுத்துள்ள அவரது காதலி அதனை நிராகரித்ததையடுத்து, உடனடியாக காதலி முன்பாகவே சில மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் இரண்டு மணி ​நேரத்துக்கு பின்னர் தனது காதலியைத் தேடி அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் சென்ற இளைஞன், அந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் அனுமதிப் பெற்று மலசலகூடத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து தனது உடலில் தீயைப் பற்றவைத்தவாறு வந்த அவர், காதலியை அணைத்துக்கொள்ள முற்பட்ட போது, வர்த்தக நிலைய உரிமையாளரால் ​அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே ஓடியுள்ள இளைஞன், மறுநாள் ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் யுவதி தீக்காங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.